Monday, September 24, 2012

பெர்முடா முக்கோணம் - II


பெர்முடா முக்கோணம்  - II

பெர்முடா முக்கோணம்.




இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...



நாட்டுப்புற கதைகளில் கூறப்படும் காரணங்கள்


1000 ஆண்டுகளுக்கு முன்பு போனீசிய,கார்தகீனியர் ஆகியோர் சார்கோ கடலைக் கடந்து செல்ல முடிந்த காலத்திலேயே அந்தக் கடலைப் பற்றியும்,பெர்முடா முக்கோணம் பற்றிய கதைகளும் தொடங்கிவிட்டன.
பழங் கதைகளின் படி அப் பிரதேசத்தில் வாழ்ந்த ஆதி வாசிகள் சிறந்த ஆற்றல் வாய்ந்தவர்களாக காணப்பட்டனர்.அவர்களது இயந்திரங்கள் கடலில் மறைந்துள்ளன.அவற்றின் சக்திகளால் அவர்கள் கப்பல்களையும் விமானங்களையும் கடலுக்கடியில் கொண்டுசெல்கின்றனர் என்கின்றனர்.இது வெறும் கற்பனையே.
இதனை ஒத்த கருத்து ஒன்றினை ஆய்வாளர் "Edgarcaye " கூறுகின்றார்.இன்னும் சிலர் கடலில் வாழ்கின்ற கொடிய விலங்குகளின் செயல் தான் இத்தகைய சம்பவங்களுக்கு காரணம் என்று கூறுகின்றனர்.
மேலும் வானிலிருந்து பூமியை நோக்கியை விழும் நெருப்பு கோளங்கள் வெடிப்பதால் கப்பல்கள் தாக்கப்படுகின்றது என்றும்,பெரிய கயிறு ஒன்றின் மூலமாக் கப்பல்கள் விமானகள் ஆகியவை வேறு ஒரு கடல் பரப்பிற்கு கொண்டுசெல்லப்படுகின்றது என இன்னொரு காரணமும் நாட்டுப்புறங்களில் கூறப்படுகிறது.


வேற்றுலகவாசிகளின் செயல்


பல ஆய்வாளர்கள் இத்தகைய விபத்துகள் சம்பவங்கள் வேற்றுக்கிரகவாசிகளின் செயலாக இருக்கலாம் என்கின்றனர்.அதாவது எம்மைவிட அறிவியலில் சிறந்த உயிரினங்கள் மனிதனை அறிவியலையும் அதனால் தனக்கு ஏற்படும் பாதிப்புக்களையும் அறிந்து கொள்ள இத்தகைய செயல்களை மேட்கொள்ளலாம் என்கின்றனர்.
ஐவான் சாண்டர்சன்,மேன்சன் வாலண்டின் போன்றோரின் கருத்தானது "அறிவில் சிறந்த உயிரினங்களின் செயலாக இது இருக்கலாம்" என்கின்றனர்.
பெர்முடா முக்கோணத்தை பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் அனைவரும் UFO (Unidentifiend Flying Object ) "அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் பற்றியும் ஆராய்ந்து வருகின்றனர்."இது பற்றி ஆய்வாளர்கள் பலர் இக் காரணங்களை தவறானது என்று முன் வைக்கின்றனர்.
தெற்கு புளோரிடா தொடக்கம் பஹாமா தீவுகள் உள்ள பகுதிகள் வரை UFO க்களின் நடமாட்டம் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது. இவ் வலயம் பெர்முடா முக்கோணத்தில் விமானங்கள்,கப்பல்கள் காணாமல் போகும் பிரதான இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீரோட்டங்களின் செல்வாக்கு

கடலின் ஆழத்தில் ஓடுகின்ற வெப்ப,குளிர் நீரோட்டங்களின் செல்வாக்கின் காரணமாக இத்தகைய நிகவுகள் இடம்பெறலாம் என கூறப்படுகின்றது. அதாவது உலகின் கிழக்கு கண்டப் பகுதிகளின் கடற்பரப்பில் வெப்ப நீரோட்டங்கள் தென்திசையிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கின்றன.அதே போல் குளிர் நீரோட்டங்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணிக்கின்றன.இவ்விருவகை நீரோட்டங்களும் எதிர் எதிர் திசையில் சந்திக்கும் போது வெப்ப நிலை மாறல்,ஆழம் அதிகரிப்பு அமுக்க வேறுபாடுகள் என்பன ஏற்படுகின்றன.இத்தகைய ஒரு நிலையில் திசைகள் மாறுபாடும் ஏற்படுகின்றது.இவ் விளைவுகளின் காரணமாக காந்தபுலம் ஏற்படும்.இதனால் செய்தித் தொடர்பு பாதிக்கப்பட்டு அங்கு காந்த விசை பரவி அந்த பகுதியில் செல்லும் விமானங்களும் கப்பல்களும் பாதிப்படைகின்றன.


மீதேன் ஹைட்ரேட்டுக்களின்(Methane Hydrates ) தாக்கம்


ஆஸ்திரி கடல் ஆய்வுகளின் படி மீதேன் ஹைட்ரேட்டுக்கள் நீரின் அடர்த்தியை குறைப்பதினால் அவற்றினால் கப்பல்களை மூழ்கச் செய்ய முடியும் என்கின்றனர். கடலில் திடீரென ஏற்படும் திடீர் மீதேன் வெடிப்பு கப்பல் மிதக்கத் தேவையான மிதவைத் தன்மைகளை வழங்க முடியாது.ஆனால் அமெரிக்காவில் நிலவியல் துறை ஆய்வியல் படி முக்கோணப் பகுதியில் 15000 வருடங்களில் எரிவாயு ஹைட்ரேட்டுக்களின் வெளிடுகள் எதுவும் காணப்படவில்லை எனக் குறிப்பிடுகின்றனர். இதனால் இக் கருத்தும் ஏற்புடையது அல்ல.

கடலில் ஏற்படும் திடீர் காலநிலை மாற்றங்கள்


சிலர் கடலில் ஏற்படுகின்ற திடீர் வெப்ப அதிகரிப்பு,அமுக்கம் ,உயர அதிகரிப்பு என்பவற்றின் காரணமாக இவ் விபத்துக்கள் ஏற்படலாம் என்கின்றனர். ஆனால் வானிலை நிலைமைகள் சாதகமாக இருந்த போதும் கூட சில கப்பல்கள், விமானங்கள் காணாமல் போயுள்ளன.

கடற் கொள்ளை


பெர்முடா முக்கோணம் பற்றிய ஆரம்ப காலங்களில் முன்வைக்கப் பட்ட கருத்தே கடற் கொள்ளையர்களின் செயலாக இருக்கலாம் என்கின்றனர்.குறிப்பாக கரிபியன் கடற்பரப்பில் கடற் கொள்ளையர்களின் செயற்பாடு அதிகமாக காணப்பட்டது.1560 - 1760 வரை அது மிகவும் உச்ச நிலையில் காணப்பட்டது.எனினும் கப்பல்கள் கொள்ளை அடிக்கப்பட்டாலும் அவற்றின் எச்சங்களாவது கிடைக்கக்கூடியதாக இருக்கும்.ஆனால் அவ்வாறான எத்தகைய தடையங்களும் இதுவரை கிடைத்த ஆய்வுகளில் வெளிவரவில்லை.

கப்பல் மர்மமான முறையில் மூழ்குவது காரணம்...

கப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண பகுதியில் வரும் போது மர்மமான முறையில் மூழ்குவது பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது, பல வருட ஆராய்ச்சிக்கு பின் கடலுக்கடியில் இருக்கும் எரிமலையின் வெடிப்பின் காரணமாக ஏற்படும் பூகம்பமே அதற்கு காரணம் என அறியப்பட்டது, பூமி அதிர்வால் கடலில் ஏற்படும் அலைகள் சுனாமியை போன்று ராட்சசதனமாக இருக்கும், கவனிக்க இது கரை தொடவேண்டும் என்ற அவசியமில்லை, நடுகடலிலேயே அமைதியாகி விடலாம், அதனை
“ரோக் வேவ்ஸ்” என்று அழைக்கிறார்கள், 
“ரோக் வேவ்ஸ்..rko..
ஒரு சிறிய அலைக்கு பின் வரும் பெரிய அலை அதனுடன் சேர்ந்து ராட்சசஅலையாக உருவாகி பெரிய கப்பலை கூட கவிழ்ந்துவிடும்!,... கப்பலிலிருந்து தளத்திற்கு எந்த செய்தியும் வராதது அவர்களுக்கு இன்னொரு ஆச்சர்யம்!


பெர்முடாமுக்கோணம் (சைத்தானின்முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது) வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில் உள்ள ஒரு பகுதி.அங்கு நிறைய வானூர்திகளும், கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மறைதல்களுக்கு அமானுட ஆற்றல் அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட உயிர்களின் செயல்திறன் காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.
இந்த முக்கோணத்தின் எல்லைகளில், புளோரிடா நீரிணைப்பு, பஹாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகள் பகுதி மற்றும் அட்லாண்டிக் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை அடங்கும்; இன்னும் சிலர்  அதனுடன் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கின்றனர். புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரப் பகுதியில் ஒர் இடம்; சான் ஜுவான், பூர்டோ ரிகோ; மற்றும் பெர்முடாவின் மத்திய-அட்லாண்டிக் தீவு ஆகியவை தான் பல பிரபலமான எழுத்துப் படைப்புகளில் முக்கோண எல்லைகளாக குறிப்பிடப்படுகின்றன. விபத்துகளில் அநேகமானவை பஹாமாஸ் மற்றும் புளோரிடா நீர்ச்சந்தியைச் சுற்றிய தெற்கு எல்லைப்பகுதியில் தான் குவியம் கொண்டுள்ளது.
இந்தப் பகுதி உலகின் மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து பகுதியாக இருக்கிறது. இதன் வழியாக அமெரிக்கா,ஐரோப்பா, மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள துறைமுகங்களுக்கு தினந்தோறும் கப்பல்கள் கடந்து செல்கின்றன. சொகுசுக் கப்பல்கள் நிறைய உள்ளன. பொழுதுபொக்கு வானூர்திகள் எப்போதும் புளோரிடாவுக்கும் தீவுகளுக்கும் இடையில் போகவும் வரவுமாய் உள்ளன. வடக்கிலிருக்கும் இடங்களில் இருந்து, புளோரிடா, கரீபியன், மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு நிறைய வர்த்தக மற்றும் தனியார் வானூர்திகள் செல்கின்றன.

நிறைய நிகழ்வுகள் துல்லியமற்ற விளக்கங்களாக இருந்திருக்கின்றன அல்லது பின்வந்த ஆசிரியரால் சேர்த்துக்கட்டி எழுதப்பட்டனவாக இருக்கின்றன என்பதற்குக் குறிப்பிடத்தக்க ஆவணச் சான்றுகள் உள்ளன. அத்துடன் இந்தக் காணாமல் போன நிகழ்வுகளின் எண்ணிக்கையும் இயல்பும் கடலின் வேறு எந்தப் பகுதிக்கும் ஒத்ததாகவே இருக்கிறது.குறிப்பிடத்தக்க அளவில் புலனாய்வு செய்தும் விளக்க முடியாதிருக்கும் பின்வரும் நிகழ்வுகள் இருக்கவே செய்கின்றன என்பதை நிறைய அதிகாரப்பூர்வ தகவல்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன‌..
http://en.wikipedia.org/wiki/Bermuda_Triangle



3 comments:

  1. MIHAVUM BAYANULLA KATTURAI ITHU..NANTRI SAHADHARA..JASAKALLA KHYREN...

    ReplyDelete
  2. சைத்தான் தினமும் தன்னுடைய சகாக்களை கடலின் மேல் ஒன்றுகூட்டுவான் அப்போது யார் யார் என்ன என்ன செய்தார்கள் என்று விசாரிப்பான் அப்போது ஒவ்வொரு சைத்தானும் அது அது செய்த கெட்ட செயல்களை சொல்லும் அதில் கணவன் மனைவியிடம் பிரிவினையை ஏற்படுத்திய சைத்தான்தான் பாராட்டபடுவான் என்று ஹதீஸ் மூலம் கேள்வி பட்டு இருக்கேன். இந்த இடம் ஏன் அந்த இடமாக இருக்க கூடாது?

    ReplyDelete

welcome ur comment,