Thursday, April 25, 2013

வாங்க இயற்கை தந்த குற்றாலத்திற்கு செல்வோம்

வாங்க இயற்கை தந்த குற்றாலத்திற்கு  செல்வோம் 


குற்றாலம் என்றதும் நமது நினைவுக்கு வருவது அழகிய நீர்வீழ்ச்சி. பசுமையான மலைத்தொடரும், அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்க
...ளும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி குற்றாலம். தென்னாட்டின் மூலிகைக் குளியலறை அல்லது தென்னகத்து ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் இந்த குற்றாலம் ஏழைகளும் அனுபவிக்கும் இயற்கை சீதனம். குற்றாலத்தின் குளுமையை அனுபவிக்கவே ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்நகருக்கு வந்து செல்கின்றனர். தென் தமிழ்நாட்டில் உள்ள புகழ்மிக்க அருவி நகரான குற்றாலத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

குற்றால சீசன் காலம்

தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிவிட்டாலே தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இந்த மழை நீர் நதியாக உருவெடுத்து, மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் அருவியாக கொட்டுகிறது. இந்த அருவி நீர் உடலையும், மனதையும் ஒருங்கே குளிர்வித்துக் கொண்டிருக்கும் இயற்கை அதிசயம்.

தென்மேற்குப் பருவ மழை உச்சத்தில் இருக்கும் பொழுது ஓயாத சாரலுடனும், பெருத்த காற்றுடனும், மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக வெள்ளியை உருக்கி விட்ட அருவிகளாகக் கொட்டுகிறது. அந்த உச்ச கட்ட பருவ காலத்தில் குற்றாலத்தில் தங்கியிருந்து அந்த இதமான சாரலை அனுபவிப்பது பொன்னான அனுபவம். ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் வரை அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலமே "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.

இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும். குற்றாலத்தில் பேரூராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன. முக்கிய அருவி எனப்படும் பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்கள் மிகவும் குளிர்ந்து காணப்படுவதால் அதற்கேற்ற உடைகளை எடுத்துச் செல்வது நல்லது.

மூலிகைகளும், பழவகைகளும்

இந்த அருவி நீர் பல்வேறு மூலிகை குணங்கள் உடையனவாகவும், பல நோய்களுக்கு குணமளிப்பதாகவும் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன. பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை. இங்கு 2000 வகையான மலர்களும், செடிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற எண்ணற்ற பழ வகைகள் இந்த மலைகளில் காய்க்கின்றன. பல அறிய மூலிகைகள் மலையின் மேலும் பண்ணைகளிலும் வளருகின்றன.

குற்றாலம் அருவியில் குளிப்பது என்பது குதூகலமான ஒன்று என்பதையும் விட, இந்த அருவிக்கு மருத்துவ குணம் இருப்பதும், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது.

குற்றாலம் அருவி

குற்றாலம் அருவி
அமைவிடம் தென்காசி
ஆள்கூறு 8.9217° N 77.2786° E
மொத்த உயரம் 290 அடி

குற்றால அருவிகள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டகுற்றாலம் பேரூராட்சியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளவை. இது தென்னகத்தின் "ஸ்பா" என்றழைக்கப்படுகிறது.

இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமாகும்.பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

ஒன்பது அருவிகள்

குற்றால அருவிகள் என மொத்தம் ஒன்பது அருவிகள் காணப்படுகின்றன.

1. பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.

2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

3. செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

5. ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)- இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு.


7. புலி அருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த அருவிக்கு பாசுபத சாஸ்தா அருவி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

8. பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 4 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. சுமார் 100 அடி உயரத்திலிருந்து இந்த அருவியில் தண்ணீர் விழுகிறது.

9. பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது...

Monday, April 22, 2013

மலர்வழி :: தீவிரவாதிகள் யார்?rahmanfayed : தீவிரவாதிகள் யார்? என்று எழுதிய சகோதரி மலர்வழி எழுதிய "பாவப்பட்ட முஸ்லிம் பலி ஆடுகள்!!"  பதிவை உங்களிடம் சமர்பிக்கிறேன் ..

பாவப்பட்ட முஸ்லிம் பலி ஆடுகள்!!


சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு:


Feb 18 2007 - 68 பேர் பலி, அதிகமானோர் பாகிஸ்தானியர் என்று குற்றம் சுமத்தப்பட்டது - (லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் முகம்மத்)சி.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள் – ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள்

மாலேகான் குண்டுவெடிப்பு-1


Sep 8 2006 - 37 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - சல்மான் பார்சி, பாருக் இக்பால், ரயீஸ் அஹமத், நூருல் ஹுதா, ஷபீர்.ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் ஹிந்த்துத்துவ தீவிரவாதிகள்

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு:


May 18 2007 - 14 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - 25 முஸ்லிம்கள் குற்றவாளிகளாக. 80 முஸ்லிம்கள் சந்தேகத்தின் அடிப்படையில்.
சீ.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள்- ஹிந்துத்துவ தீவிரவாதிகளான சந்தீப்டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா, லோகேஷ்சர்மா

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு :


Oct 11 2007 - 3 முஸ்லிம்கள் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ் முஹம்மத்சி.பி.ஐ., ஏ.டி.எஸ். விசாரணைகளில் உண்மை குற்றவாளிகள் - ஹிந்துத்துவ தீவிரவாதிகளான தேவேந்திர குப்தா, சந்திரசேகர், பிரசாத், அனில் ஜோஷி.

மாலேகான் குண்டுவெடிப்பு-2


Sep 29 2008 - 7 பேர் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - இந்திய முஜாஹிதீன்கள்.
ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் - அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரிய ஜாக்ரன் மன்ச் ஆகிய ஹிந்துத்துவ தீவிரவாதிகள்.

தானே சினிமா குண்டுவெடிப்பு:

முஸ்லிம் சம்பந்தப்பட்ட ஹிந்திப் படத்தை எதிர்த்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு.

Jun 4 2008. ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களான ஹிந்து ஐங்காகிருதி சமீதி, சனாதன் சன்ஸ்தா. ‘ஜோதா அக்பர்’ என்ற முஸ்லிம் சம்பந்தப்பட்ட ஹிந்திப் படத்தை எதிர்த்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு.

கான்பூர்,நந்தித் குண்டுவெடிப்பு முயற்சிகள்:


Aug 2008இரு இடங்களிலும் குண்டு தயாரிக்கும் சமயத்தில் வெடித்து 4 ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் பலி.

கோவா குண்டுவெடிப்பு:
 


Oct 16 2009. குண்டு வைக்கும் முயற்சியில் சனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்துத்துவ தீவிரவாதிகள் 2 பேர் பலி

தமிழ்நாட்டில் தென்காசி குண்டுவெடிப்பு :

தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. தாடியும், தொப்பியும் தடயங்களாக விட்டு சென்று முஸ்லிம்களின் மேல் பழியைப் போட முயன்ற இந்து முன்னணி பயங்கரவாதிகளை வளைத்து பிடித்தது தமிழக காவல் துறை.
http://rahmanfayed.blogspot.in/2013/04/blog-post_22.html
மேலும் ராம சேனா என்ற அமைப்பின் ப்ரவீன் முத்தலீக் என்பவன் முஸ்லிம்களின் மேல் செயற்கையாக மதக்கலவரத்தை உருவாக்க விலை பேசி, குண்டு வைப்பது மட்டும் எங்கள் கலாச்சாரமல்ல; கலவரங்களை செயற்கையாக உருவாக்கி முஸ்லிம்களை கருவறுப்பதும் எங்களது கைவந்த கலை தான் என்பதை உலகத்திற்கு புரிய வைத்தான். கேமராவை மறைத்து வைத்து அவனிடம் ரகசியமாகவும் நைச்சியமாகவும் பேசிய போது கலவரம் நடத்த பேரம் பேசி விலை நிர்ணயம் செய்த அயோக்கியத்தனம் வெளியுலகிறகு கசிந்தது.

இன்னும், ஹைதராபாத்தில் மாட்டுக்கறியை கோவிலில் வீசி விட்டு அந்தப் பழியை முஸ்லிம்களின் மேல் போட்டு கலவரத்தை தூண்ட நினைத்த காவி தீவிரவாதி கைது செய்யப்பட்டதும்... (இதே யுக்தி மதுரையிலும் முன்னோட்டமிடப்பட்டது. ஆனால் கைது செய்தது முஸ்லிம்களை)
பாகிஸ்தான் கொடியை ஏற்றிய  காவி தீவிரவாதி கைது

கர்நாடாகாவில் அரசு அலுவலகத்தில் புது வருஷ தினத்தன்று பாகிஸ்தான் கொடியை ஏற்றி, முஸ்லிம்களின் மேல் பழியைப் போட இருந்த காவி தீவிரவாதி கைது செய்யப்பட்டு பல முஸ்லிம்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதும்..

இப்படியே போகும் காவி தீவிரவாதம் இல்லை சங்பரிவார் பயங்கரவாதம் நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைத்து, சமூக ஒற்றுமையை குலைத்து வரும் நிலையில் இத்தனை குண்டு வெடிப்புகளுக்கும் "பலிகடா" வாக்கியது முஸ்லிம்களைத் தான்.

முதலில் முஸ்லிம்களும் இத்தனை குண்டு வெடிப்புகளையும் செய்தவர்கள் முஸ்லிம்களே என்று நம்பி வந்தனர். அதற்கு காரணம் குண்டு வெடித்தவுடனே முஸ்லிம் அமைப்புகளை தொடர்புப்படுத்தி, முஸ்லிம்களையே குற்றவாளியாக்கி தீர்ப்பையும் எழுதி விடும் ஊடகத்தின் பாரபட்ச போக்கு. காவி தீவிரவாதிகளின் குண்டு வெடிப்புகளுக்கு தங்கள் உயிரையும் வாழ்க்கையையும் பலி கொடுத்து வந்த முஸ்லிம்களின் இந்த நிலைமை, சங்பர்வார்களுக்கு மிகவும் வசதியாக போனது. காவிகள் வைக்கும் குண்டுகளுக்கு அப்பாவிகள் தண்டனை பெற்றனர். இதனால் காவி தீவிரவாதம் மறைவாகவும் விரைவாகவும் வளர்ந்து வந்தது.


ஆனால், சமீபகாலமாக குண்டு வெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் எல்லோரும், 10 அல்லது 15 வருடங்கள் கழித்து நிரபராதிகள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் நிரபராதி என்றால்.. உண்மை குற்றவாளி யார்?

வழக்கை தோண்டினால் வண்டி வண்டியாக காவி பயங்கரவாதத்தின் சுயரூபம் பல்லிளிக்கிறது. அரசாங்கமே இலைமறை காயாக சங்பரிவாரங்களின் கொட்டங்களை கண்டும் காணாமல் இருந்து வந்தாலும், ஒரு கட்டத்தில் இந்தியாவின் இறையாண்மையைக் காக்கும் பொருட்டு, நாடாளுமன்றத்திலேயே தூக்கி போட்டு உடைத்தார்கள். காவி தீவிரவாதம் என்று ஒன்று இருப்பதாக அப்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஒத்துக்கொண்டார்.அதன் தொடர்ச்சியாக இப்போதைய அமைச்சர் ஷிண்டேவும், ஒரு படி மேலே போய், இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் பயங்கரவாத பயிற்சியைக் கொடுத்து வருகின்றன என்ற அப்பட்டமான நிஜத்திலும் நிஜமான உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார்.

இதே கருத்தை தான் நாம் தமிழர் சீமான், விடுதலை சிறுத்தை திருமாவளவன், திராவிட கழக கீ. வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய் போன்றோரும் கூறி வருகின்றனர்.முன்னர் காவி தீவிரவாதத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மாவீரன் கார்க்ரேயையும் திட்டம் மிட்டு கொலை செய்தார்கள்.
மாவீரர் ஹேமந்த் கார்கரே IPS..

இதுவரையிலும் அவருடைய மரணம் மர்மமாகவே உள்ளது. பொய்யால் பூசி மெழுகி வந்த உண்மை தடாலென்று உடைந்ததால் குய்யோ..முறையோ என்று குதிக்கிறார்கள். இதனால் நாடாளுமன்றத்தை நடத்தவிடமாட்டோம் என்று பா.ஜ.க.மிரட்டுகிறார்கள்.
 
மாவீரர் ஹேமந்த் கார்கரே IPSற்றி அறிந்து கொள்ள <<இங்கே>> கிளிக் செய்யுங்கள்..
இதே நிலை நீடித்தால் அப்பாவிகள் குற்றவாளிகலாக்கபடுவார்கள். உண்மை குற்றவாளிகள் சுதிந்திரமாக தப்பிக்க வழிவகையாக ஆகிவிடும்.

இங்கே உண்மையை உணர்ந்து கடமையை செய்யுமா காவல்துறை என்பது கேள்விகுறி தான்.எப்படியோ குண்டு வெடித்தால் கைது செய்ய முஸ்லிம் அடிமைகள் இருக்கிறார்கள் என்றே காவல் துறை கவலை இல்லாமல் இருக்கிறது.

நன்றி- மலர்விழி 

Wednesday, April 17, 2013

மர்ம தேசம்.(ரகசிய தொடர்).

மர்ம தேசம்.....

நம் வாழும் பூமியில், பல மர்மங்கள் நிறைந்த பகுதிகள் இருக்கின்றன, அதை பற்றி ஆராயும் பதிவு இது...

மர்ம(கடல்)தேசம்:


விமானத்தில் பறந்தாலும், அல்லது கப்பலில் சென்றாலும், மர்மமாக காணமல் போகும் பகுதி தான், இன்று வரை, புரியாத புதிராக இருக்கும் கடல் பகுதி பெர்முடா முக்கோணம்.
அதை பற்றி அறிந்து கொள்ள <<இங்கே>> கிளிக் செய்யுங்கள்..

மர்ம கோடு


கோடுகளில் என்ன மர்மம் இருக்கும் அதில் என்ன வியப்பு இருக்கும் என்று நினைப்பவர்கள் நாஸ்கா கோடுகள். பற்றி நீங்கள் அறிந்தால் வியப்பின் உச்சிக்கே செல்வீர்கள்..

 அதை பற்றி அறிந்து கொள்ள <<இங்கே>> கிளிக் செய்யுங்கள்..

மர்மம தீவு


கடல் நடுவே சிலியிலிருந்து வெகு தூரத்தில் மிகத் தனியாக இருக்கிறது. முக்கோண வடிவத்தில் இருக்கும்அந்தத் தீவில், உலகத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் அதிசயம் ஒன்றுஇருக்கிறது. 

அது என்ன என்று அறிந்து கொள்ள <<இங்கே>> கிளிக் செய்யுங்கள்..

மர்ம மதம்.

மதங்களில் என் மர்மம் என்று கேட்கிறீர்களா, ஆம் அப்படி ஒரு மர்மமான மதம் இருக்கிறது, அந்த மதத்தை பின்பற்றும் பிரபலங்கள் யார் தெரியுமா? புவி ஈர்ப்புவிசையை கண்டுபிடித்த நியூட்டான் முதல் இங்கிலேந்து மகாராணி எலிசபத் வரை. பின்பற்றும் அந்த மதம் கிருஷ்டவம் அல்ல.
அப்படி என்றால்.

கிருஷ்டவ மதத்தை குழி தோண்டி புதைக்கும், இலும்நாடிக் மதத்தை பற்றி அறிய இங்கே <கிளிக்> செய்யுங்கள்.

இரகசிய சமுதாயம்!


இறை தூதர் இயேசுவின் வாழ்க்கையை களக்கப்படுத்தி, அவரை விபச்சாரியுடன் தொடர்புபடுத்தி அதன் முலம் வந்த இயேசுவின் சந்ததியனரை பாதுகாக்கிறோம் என்ற போலி வாழ்க்கையை வாழும் இந்த மதத்தை பற்றி அறிந்துகொள்வோம்.
http://rahmanfayed.blogspot.in/2014/01/1.html


மர்ம கிணறு.

அரபு தேசம் ஒரு பாலைவண தேசம். நதிகள் இல்லாத அந்த தேசத்தில் எங்கு தோண்டினாலும் தண்ணீர்க்கு பதிலாக பெட்ரோல் வரும் அளவுக்கு தண்ணீர் பஞ்சம். அங்கு ஒரு கிணறு இருக்கிறது, ஒரு பெரிய கிணறு ஒரு வருடத்தில் தரும் தண்ணீரை இந்த கிணறு ஒரு மணி நேரத்தில் தரும் அந்த ஜம் ஜம் கிணற பற்றி அறிய இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்.

http://rahmanfayed.blogspot.in/2013/10/blog-post_24.html

மர்ம மலைத்தொடர்..

அமெரிக்காவில் ஒரு மர்ம தேசம்  பற்றி அறிய இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்.
http://rahmanfayed.blogspot.in/2014/08/blog-post_48.html

 மர்மம இனம் 
ஒரு நாட்டில் வாழ்ந்த, மிக மிக மிகச் சிறிய அளவினரை விட, மற்றஅனைத்து மக்களும், திடீரென அந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டார்கள். சரித்திரத்தில் எந்தஒரு அடையாளங்களையும், மறைந்ததற்குச் சாட்சிகளாக வைக்காமல் மறைந்து போனார்கள்.
ஏன் மறைந்தார்கள்? எப்படி மறைந்தார்கள்? என்னும் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை மட்டுமே மிச்சம்வைத்துவிட்டு, மாயமாய் மறைந்து போனார்கள். எங்கே போனார்கள்? எப்படிப் போனார்கள்? யாருக்கும்தெரியவில்லை. எதுவும் புரியவில்லை.
இந்த மறைவின் மர்மத்தை ஆராய, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்குகிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள். மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள்பிரமிப்பின் உச்சிக்கே போனார்கள்.

 
அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில், இவை உண்மையாக இருக்கவே முடியாது, என்னும்எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பல ஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. அவைஅவர்களை மீண்டும் மீண்டும் திக்குமுக்காடச் செய்தது.
இது சாத்தியமே இல்லாத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அறிஞர்கள் சிலர் பிரமிக்க, பலர்பின்வாங்கத் தொடங்கினார்கள்.
மாயா என்றாலே மர்மம்தானா? என நினைக்க வைத்தது அவர்கள் கண்டுபிடித்தவை.
'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-1 

 அதை பற்றி அறிந்து கொள்ள <<இங்கே>> கிளிக் செய்யுங்கள்..


இன்ஷா அல்லா மேலும் பல தகவலுடன் விரைவில்......

Thursday, April 11, 2013

நீங்கள் மொபைல் போன் பயன்படுத்துபவரா?

rahmanfayed :: நீங்கள் மொபைல் போன் பயன்படுத்துபவரா?

 மொபைல் போனை பற்றி பல பயன்ள்ள தகவலின் லிங்கை இப்பதிவில் இனைக்கபட்டுள்ளது உங்களுக்காக..

mobile information..
 
********************************************மொபைல் போன் வரலாறு ....
 
********************************************

MOBILE தொலைந்து விட்டதா POLICE STATION செல்ல தேவையில்லை


 
********************************************
  [IMEI] மூலம் மொபைல்-ன் தரத்தை அறியலாம், எப்படி??


********************************************

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி?********************************************

மொபைலுக்கு ரீ சார்ஜ் செய்ய* போகிறீர்களா?


 
********************************************

மிரட்டும் மொபைல் போன்கள்


 ******************************************** 

Thursday, April 4, 2013

பார்த்தவுடனே பிரமிப்பை ஏற்படுத்தும் "மச்சு பிச்சு"!!

பார்த்தவுடனே பிரமிப்பை ஏற்படுத்தும் "மச்சு பிச்சு"!! 


ரலாறு என்றவுடன் நமக்கு நினைவிற்கு வருவன எவை? முன்னோர்களின் வாழ்க்கை முறை, மன்னர்களின் ஆட்சிமுறை, பண்பாட்டுச் சின்னங்கள், உருவாக்கிய நகரங்கள், கோட்டைகள், மாளிகைகள் போன்றவற்றைக் கூறலாம். இவற்றுள் நமக்குப் "பார்த்தவுடனே" பிரமிப்பை ஏற்படுத்துவது வரலாற்றுத் தலங்களே!! 

தமிழகத்தை எடுத்துக் கொண்டால், தஞ்சைப் பெரிய கோவில், தாராசுரம் கோவில், மகாபலிபுரம் சிற்பங்கள் மற்றும் இன்னபிற தலங்கள் நம் முன்னோர்களின் சிறப்பைப் போற்றுகின்றன. இதே போல உலகெங்கும், வரலாற்றுத் தலங்கள் அந்தந்த நாட்டு முன்னோர்களின் சிறப்பைப் பறைசாற்றி நிற்கின்றன. தென்னமெரிக்க நாடான பெருவில் பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நகரம் தான் மச்சு பிச்சு!! செங்குத்தான ஆண்டிஸ் மலைத்தொடரில், கடல் மட்டத்திற்கு மேல் 2400 மீட்டர் உயரத்தில் கொண்ட   "இன்கா பேரரசால்" கட்டப்பட்டது. ( நம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஊர்கள் கிட்டத்தட்ட இந்த உயரம் தான்!!) பச்சாகுட்டி (Pachakuti) என்ற இன்கா மன்னரின் ஆட்சிக்காலத்தில் இந்த நகரம் கட்டப்பட்டிருக்கிறது. பழங்காலத்தில், மலைகளின் நடுவே மக்கள் வாழ்க்கை நடத்தியிருந்தாலும் "மச்சு பிச்சு" நகரத்திற்கு மட்டும் அப்படி என்ன தனிச்சிறப்பு?

செங்குத்தான மலைத்தொடரின் உச்சியில் 1000 பேர் வாழும்படியாக ஒரு நகரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் இப்பொழுது இருக்குமளவிற்கு தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத பொழுது எப்படி நிர்மானித்தார்கள்? மக்களின் உழைப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மலை உச்சியில் ஒரு நகரம் அமைப்பதென்பது அதிசயமானதே!!சீனப் பெருஞ்சுவரும் மலை உச்சியில் தான் கட்டப்பட்டதென்றாலும், அவை மங்கோலியப் படையெடுப்பைத் தடுப்பதற்காகவே பயன்பட்டது. ஆனால் மச்சு பிச்சு நகரமோ, அடர்ந்த காட்டுக்குள்ளே யாரும் எளிதில் அடைய முடியாத இடத்தில்!! இந்நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகள், கற்களால் ஆன வடிவங்கள் ஏதோ சூரிய அல்லது இறை வழிபாட்டிற்கான இடமாக இருந்திருக்கலாம் என்றும் கருதுகிறார்கள். 


தேயிலைத் தோட்டங்களில் படிப்படியாக பயிரைச் சாகுபடி செய்ய அமைக்கப்பட்டிருப்பதைப் போல மலைச்சரிவில் படிப்படியாக கட்டடங்களை கட்டியிருப்பது இன்கா மக்களின் கலாச்சாரத்தைப் போற்றுகிறது. மழைக்காலத்தில் வெள்ளத்தால் கட்டடங்கள் அடித்துச் செல்லாமல் இருக்கும் படியாக வடிகால்களையும், விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரங்களையும் உருவாக்கியிருப்பது வியப்பளிக்கிறது.இவ்வளவு சிறப்பாக ஒரு நகரை உருவாக்கிய இன்கா பேரரசு என்ன ஆனது?


பெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியதால் தப்பி ஓடிய இன்கா மக்கள் கஸ்கா என்ற தங்கள் நகரத்தை விட்டு அடர் காடுகள், பள்ளத்தாக்குகளில் தஞ்சம் புகுந்தனர். கஸ்கா ஸ்பானியர்களின் ஆக்கிரமிப்புக்குள் போனது. காட்டுக்குள் தங்கிய இன்கா மக்களை ஸ்பானிஷ் படை நெருங்க முடியாமல் விலகி விட்டது. ஆனால் கானகத்தில் நுழைந்த இன்கா மக்கள் தங்களுக்கென ஒரு பெரிய நகரை காட்டுக்குள்ளேயே நிர்மாணித்தனர். வில்கபாம்பா என அவர்கள் அந்த நகருக்குப் பெயரிட்டனர். நகரை நிர்மாணித்த இன்கா மக்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்த ஸ்பானியர்களுக்கு சண்டை, போர் என குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

ஸ்பானியர்களும் திரும்பித் தாக்கிக் கொண்டே இருந்தார்கள். சுமார் முப்பத்து ஆறு ஆண்டுகள் இந்த சண்டை விட்டு விட்டு நடந்தது. ஸ்பானியர்கள் கடைசியில் 1572ல் மாபெரும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினார்கள். இன்கா மக்களை வயது, பாலியல் வேறுபாடு ஏதுமின்றி கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள். போராளிகள் மட்டுமன்றி கண்ணில் பட்ட அனைவருமே படுகொலை செய்யப்பட்டனர். ஸ்பானிய படைகள் கடைசியில் வில்காபாமாவையும் தாக்கியது. இன்கா மக்களின் கடைசி மன்னன் துப்பாக் அமாரு சிறை பிடிக்கப்பட்டான். மன்னனைச் சிறைப்பிடித்த ஸ்பானியர்கள் அவரை கஸ்கோ நகருக்குக் கொண்டு பிளாசா டி ஆர்மாஸ் என்னுமிடத்தில் வந்து படுகொலை செய்தனர்.


ஸ்பானியர்களின் படையெடுப்பின் காரணமாக இன்கா பேரரசு முழுவதும் சிதைக்கப்பட்டு மக்கள் சிதரடிக்கப்பட்டனர். இப்படி ஐரோப்பியர்களின் படையெடுப்பின் காரணமாக உலகெங்கும் அழிந்த கலாச்சாரங்கள் எத்தனையோ?


இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து, இப்படி ஒரு நகரம் இருப்பது தெரியாததால் கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது "மச்சு பிச்சு".  பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. 1983 முதல் யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார சிறப்புமிக்க இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.மச்சு பிச்சு நகரிற்குச் செல்ல குஸ்கோ என்னும் நகரில் இருந்து ஒல்லாண்டயடம்போ என்னும் இடத்திற்கு ரயிலிலும், பிறகு மலைகளின் சரிவில் உள்ள பேருந்து பயணம் மூலம் இடத்தைச் சென்றடைய முடியும்!! 2007ல், புதிய 7 உலக அதிசயங்கள் பட்டியலை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த அமைப்பு தேர்ந்தெடுத்த பொழுது இந்த வரலாற்றுச் சின்னம் நமக்கு அறிமுகமானது. 
தென்னமெரிக்க நாடுகளில் நம்மவர்கள் பணியாற்றி வந்தால் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடத்தில் மச்சு பிச்சுவைச் சேர்த்தாக வேண்டும்!!
பல கஷ்டங்களுக்கிடையில், எங்கெங்கோ, யார் யாரையோ பிடித்து “எந்திரன்” படத்திற்காக ஒரு டூயட் பாடலை டைரக்டர் ஷங்கர் அவர்கள் படமாக்கி உள்ளார்...

இந்த இடம் தடைசெய்யப்பட பகுதி என்பதால், படப்பிடிப்புக்கு அவ்வளவு கெடுபிடி...

இந்தத் தலத்தைப் பற்றிய ஜியாகரபிக் சேனலின் காணொளி கீழே..


இது போன்ற வரலாற்றுத் தலங்கள்  சில காண்போம்...திகைக்க வைக்கும் திவனாகு ஒரு வரலாற்று சின்னம் !!'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-1,

'ஈஸ்டர் தீவு' (Easter Island)
நாஸ்கா கோடுகள்.. 


நன்றி 
ஆசிரியர் ச. செந்தில்வேலன்.

Wednesday, April 3, 2013

திகைக்க வைக்கும் திவனாகு ஒரு வரலாற்று சின்னம் !!

திவனாகு!!


திகைக்க வைக்கும் திவனாகு ஒரு வரலாற்று சின்னம் !!

உலகின் மிகப் பழைய நகரங்களுள் ஒன்று. நாலாயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் நகரம். வியக்கவைக்கும் கட்டடக்கலையைப் பிரதிபலிக்கும் நகரம் என சொல்லிக்கொண்டே போகலாம் "திவனாகு"வைப் பற்றி!!

திவனாகு!!

தென்னமெரிக்க நாடான பொலிவியாவில் அமைந்த ஒரு வரலாற்றுத் தலம் தான் திவனாகு. பொலிவியாவின் தலைநகரம் 'லா பாஸி'ற்கு அருகிலும், உலகிலேயே உயரமான இடத்திலமைந்த (ஏரியான) டிடிகாகா ஏரிக்கு அருகிலும் அமைந்திருக்கிறது இந்நகரம். திவனாகு மக்களைப் பற்றிய எழுத்துப்பூர்வமான சான்றுகள் எதுவும் கிடைக்கா விட்டாலும், அவர்கள் நிர்மானித்த நகரமும், சூரையாடலிற்குப் பிறகு எஞ்சி நிற்கும் கட்டடங்களும் அவர்களின் சிறப்பை உலகிற்கு உரைக்கிறது.

அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த மண்பாண்டங்கள், எழில்மிகு சிற்பங்கள், தூண்கள், சிதைந்த பிரமிட்கள் என எஞ்சி நிற்கிறது திவனாகு. சில தூண்கள் 100 டன்கள் எடை கொண்டதாகவும், ஒன்றோடு ஒன்றாக சேர்த்து திடமாக நிற்கும் படியாகக் (ஆங்கில எழுத்து H வடிவத்திலான) கற்களை செதுக்கி கட்டடங்களை வடித்துள்ளார்கள். 10 மைல் தொலைவில் எந்த விதமான கல்குவாரிகள் இல்லாத போதும் எப்படி மிகப்பெரிய கற்களைச் சேர்த்திருப்பார்கள் என்பது வியப்பாகவே உள்ளது.

எகிப்து, மெக்சிகோ போன்ற இடங்களில் இருப்பதைப் போல பிரமிட்களும் திவனாகு நகரத்தின் 'அகாபானா' என்ற இடத்தில் அமைத்திருக்கிறார்கள். ஆனால் அவை யாவும் காலத்தின் மாறுதல்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் சிதைந்த நிலையில் உள்ளது.

விரகோகா - திவனாகு மக்களின் கடவுளான விரகோகாவை வழிபடுவதற்காக, நகரின் பிரதானமாக ஒரு வாயிலை எழுப்பியுள்ளார்கள். படைக்கும் கடவுளாக சூரியன் சந்திரன் என அகில உலகத்தையும் உருவாக்கியவர் என்று திவனாகு மக்களால் கருதப்பட்டிருகிறார், விரகோகா. சூரியனைத் தலைக்கவசமாகவும் கையில் ஆயுதங்களை ஏந்தியபடியான சிலைகளைப் பார்க்கும் பொழுது உலகெங்கிலும் உள்ள மக்கள் எப்படி ஒரே மாதிரியான எண்ண ஓட்டங்களைக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

தொல்லியல் ஆய்வாளர்கள், திவனாகு மக்கள் கி.பி.1000 வரை இந்நகரத்தில் வாழ்ந்து வந்ததாகக் கருதுகின்றனர். டிடிகாகா ஏரிக்கரையில் விவசாயம் செய்தும், நல்ல விளைச்சலால் மற்ற நாடுகளுடன் வணிகம் செய்ததாகவும் கருதுகின்றனர். கி.பி. 600 முதல் கி.பி.700 வரை இவர்களின் தாக்கம் இன்றைய பெரு, பொலிவியா மற்றும் சிலி போன்ற நாடுகளிலும் இருந்திருக்கிறது.காலநிலை மாற்றத்தால் சரியான மழை பெய்யாததாலும் நீராதரங்கள் பொய்த்துப்போனதாலும் திவனாகு மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர்.

இந்நகரம், 15ம் நூற்றாண்டில் இன்கா மன்னர்கள் கண்டுபிடிக்கும் வரை தொடர்பில்லாமல் இருந்திருக்கிறது. இன்கா அரசின் அழிவிற்குப் பிறகு 19ம் நூற்றாண்டில் பிற்பகுதி வரை மீண்டும் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது.
புதையல் தேடுபவர்களாலும், புதிதாக வீடுகளைக் கட்டுபவர்களாலும், ஸ்பானிஸ் படையெடுப்புகளாலும் சிதைக்கப்பட்ட இந்நகர்ம் இன்று பொலிவியா அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. முன்னோர்களின் வரலாறு எதுவும் இல்லாத பொலிவியா நாட்டு மக்கள் திவனாகு நகரையும் அவர்கள் விட்டுச்சென்ற கால்தடத்தையும் தேட ஆரம்பித்துள்ளனர்.

இந்நாட்டு மக்களைப் பார்க்கும் பொழுதும் "நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்றவற்றை எப்படிப் பாதுக்காக்கிறோம்" என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. வெயிலில் இருப்பவர்களுத்தானே தெரியும் நிழலின் அருமை?


இந்த இடத்தைப் பற்றிய தகவல்கள் உள்ள தளங்கள் கீழே..

http://www.archaeology.org/interactive/tiwanaku/
http://www.crystalinks.com/tiahuanaco.html
http://en.wikipedia.org/wiki/Tiwanaku.


இது போன்ற வரலாற்றுத் தலங்கள்  சில காண்போம்...


பார்த்தவுடனே பிரமிப்பை ஏற்படுத்தும் "மச்சு பிச்சு"!!'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-1,

'ஈஸ்டர் தீவு' (Easter Island)
நாஸ்கா கோடுகள்.. நன்றி 
ஆசிரியர் ச. செந்தில்வேலன்.