Wednesday, July 16, 2014

வீட்டில் கொசு தொல்லையா.? கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி..!


வீட்டில் கொசு தொல்லையா.? கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி..!


மழைக்காலம் பிறந்தாலே, கொசுவுக்குக் கொண்டாட்டம் தான். மனிதர்களின் ரத்த வேட்டையைத் துவங்கி விடும். கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி..



கொசுபர்த்தி தேவையில்லை, ஹிட் தேவையில்லை, காயில்கள் தேவையில்லை. தீங்கு விளைவிக்கும் கொசு மருந்துகளை தூக்கி எறியுங்கள்..!

உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த இயற்கை வழி..!

ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டவும். பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்கப்பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும். ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை, கிராம்பு வாசனைக்கு வராது, இதை உங்கள் வீட்டில் இதை செய்து பாருங்கள்...!
இந்த பதிவை உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்..! தீங்கு தரும் கொசு மருந்துகளை தூக்கி எறியுங்கள்.


* பாத்திரங்களில் நீரைத் தேக்கி வைக்கக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள், தொங்கிக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் ஷீட்களை அவ்வப்போது நிமிர்த்திக் கட்ட வேண்டும்.
* "ஏசி' மற்றும் கூலர்களிலுள்ள டிரேக்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அவற்றில் உப்பு தூவி வைத்தால், கொசுக்கள் அண்டாது.
* பூந்தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
* திறந்த கிணறுகள், தொட்டிகளில் கொசுக்கள் புகா வண்ணம் வலை அடிக்க வேண்டும்.
* அலங்கார மீன்களான, கபூசியா, போசிலி (கப்பி வகைகள்) ஆகியவை, கொசு முட்டைகளை உணவாக உட்கொள்ளும் பழக்கம் கொண்டவை. நகராட்சி அலுவலகங்கள், மலேரியா கட்டுப்பாட்டுத் திட்ட அலுவலர்கள் மற்றும் சில கடைகளில் இந்த மீன்கள் கிடைக்கும். இவற்றை பொதுக் கிணறுகள், நீர் நிலைகளில் வளர்த்தால், கொசு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
* வீட்டு ஜன்னல்கள், கதவுகளில், கொசு வலை அடித்து வைக்கலாம்.
* இரவு நேரங்களில் அறையில் கொசு வலை கட்டித் தூங்கினால், கொசுக் கடியிலிருந்து தப்பிக்கலாம்.
* முழுக்கை சட்டை, கால் மறையும் வகையில் பேன்ட் ஆகியவை அணிந்து படுத்தால் கொசு கடிக்காது.
* கொசு கடியிலிருந்து தப்பிக்க, உடலில் பூசும் வகையிலான களிம்புகள் உள்ளன. ஆனால், அவற்றை நேரடியாக உடலில் பூசுவதை விட, ஆடைகளில் பூசிக் கொள்வது நல்லது. குழந்தைகள், கர்ப்பிணிகள் இந்தக் களிம்புகளைப் பயன்படுத்தக் கூடாது.
* கொசு வத்திகள், சுருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இவை, மூச்சுக் குழலில் ஒவ்வாமை ஏற்படுத்தும். ஆஸ்துமா, அடுக்குத் தும்மல் ஆகியவற்றை உருவாக்கி விடும்.

* பூச்சிக்கொல்லி மருந்துக் கெல்லாம் இப்போதைய கொசுக்கள் கட்டுப்படுவதில்லை. இந்தப் பூச்சிக் கொல்லிகளை, "ஸ்பிரே' செய்தால், இந்த மருந்தை எதிர்க்கும் சக்தியைக் கொசுக்கள் பெற்று விடும்; மனிதர்களுக்கு, மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படும்.
RELATED ARTICLES

No comments:

Post a Comment

welcome ur comment,