Tuesday, March 31, 2015

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை தரும் சிம்பிளான யோகாக்கள் !!!

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் பலமுறை சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் மலச்சிக்கல். இநத் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகள் தான். கண்ட கண்ட உணவுகளின் மீது ஆசைப்பட்டு அவற்றை வாங்கி நன்கு வயிறு நிறைய சாப்பிட்டு, பின் அது வெளிவராமல் அவஸ்தைப்படுவோம். ஏனெனில் அந்த உணவுகள் செரிமான மண்டலத்தில் எளிதில் செரிமானமாகாதது மற்றும் செரிமானத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள தினமும் போதிய உடற்பயிற்சிகளை செய்து வராததே காரணம் ஆகும். 

ஆகவே உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமெனில், கண்ட கண்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து, தினமும் ஒருசில யோகாக்களை செய்து வாருங்கள். ஆனால் பலரும் யோகா என்ன செய்யும் என்று அதனை செய்வதில்லை. இருப்பினும் மற்ற செயல்களை விட, உடல் ஆரோக்கியமாக இருக்க யோகா பெரிதும் உதவியாக இருக்கும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்து, அதனை தவறாமல் செய்து வர வேண்டும். 

இங்கு மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்கவும், அந்த பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கவும் செய்ய வேண்டிய யோகா நிலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

பவனமுக்தாசனம்

பவனமுக்தாசனம் (Pawanmuktasana) பவனமுக்தாசனம் செய்வதற்கு முதலில் தரையில் படுத்துக் கொண்டு, முழங்கால்களை மடித்து, மார்பை தொடும் வண்ணம் தூக்கி, பின் இரு கைகளால் முழங்கால்களைப் பிடித்து,க் கொண்டு, தலையால் முழுங்காலைத் தொட முயற்சிக்க வேண்டும். இந்த ஆசனத்தின் போது மூச்சை சீராக விட வேண்டும். இந்த ஆசனம் செய்து வருவதன் மூலம், மலச்சிக்கல் நீங்கி, தொடைகளில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, சீரற்ற மாதவிடாய் சுழற்சி நீக்கி, இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஹலாசனம் (Halasana) 

இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் நேராக படுத்துக் கொண்டு, கால்கள் இரண்டையும் மேலே தூக்கி, கைகளால் உடலைப் பிடித்துக் கொண்டு, பின் மெதுவாக கால்களை தலைக்கு பின்புறம் உள்ள தரையை தொட வேண்டும். பின் கைகளை மெதுவாக தரையில் நீட்ட வேண்டும். இந்த நிலையில் 20 நொடிகள் இருக்க வேண்டும். இதேப்போன்று 3 முறை செய்து வர வேண்டும். இந்த ஆசனத்தின் மூலம் செரிமானம், பசி, இரத்த ஓட்டம் மற்றும் மன நிலை போன்றவை ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், உடனே நிவாரணம் கிடைக்கும்.

திரிகோணாசனம் (Trikonasana) 

முதலில் நேராக நின்று கொண்டு, வலது காலை சற்று பக்கவாட்டில் தள்ளி வைத்து, பின் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் நீட்டி, வலது கையால் வலது காலைத் தொட்டுக் கொண்டு, இடது கை மேல் நோக்கி நீட்டியிருக்க வேண்டும். இதேப்போன்று மற்றொரு காலிலும் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு பக்கமும் மூன்று முறை என ஆறு முறை செய்ய வேண்டும்.

பாலாசனம் (Balasana) 


பாலாசனம் என்பது தரையில் உட்கார்ந்து கொண்டு, கால்களை பின்புறம் மடக்கி, கால்களின் மேல் அமர்ந்து, கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு, நெற்றி தரையை தொடும் படி குனிய வேண்டும். இந்த ஆசனத்தின் மூலம் மலச்சிக்கல் மட்டுமின்றி, மன அழுத்தம், சோர்வு, நீங்கி, இடுப்பு, தொடை போன்றவை வலிமையடையும். முக்கியமாக இதனை தொடர்ந்து செய்து வந்தால், முதுகு வலி இருந்தாலும் குணமாகிவிடும்.

சாவாசனம் (Savasana) 

ஆசனங்களிலேயே மிகவும் சிம்பிளானது என்றால் அது சாவாசனம் தான். இதற்கு தரையில் படுத்துக் கொண்டு, கைகளை உடலை ஒட்டியோ அல்லது பக்கவாட்டிலோ வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். இந்த நிலையில் 15-20 நிமிடம் இருக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், மலச்சிக்கல் மட்டுமின்றி, வேறு சில நோய்களும் குணமாகும்.Sunday, March 29, 2015

‘வாய்னிச்’ கைப்பிரதி புத்தகத்தின் மர்மம் விலகுமா?

‘வாய்னிச்’ கைப்பிரதி புத்தகத்தின்  மர்மம் விலகுமா?


 ‘வாய்னிச்’ என்ற கைப்பிரதி புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இப்புத்தகம், இன்னும் யாராலும் விளக்கம் சொல்ல முடியாத வரி வடிவங்களாலும், படங்களாலும் கையால் எழுதப்பட்டுள்ளது. இது எப்போது எழுதப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கதிரியக்க கார்பன் தேதியாக்க முறை மூலமாக இது எழுதப்பட்ட காலம் 15-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அறியப்பட்டுள்ளது.

இது இத்தாலி மறுமலர்ச்சி காலத்தில் வடக்கு இத்தாலியில் எழுதப்பட்டது என்று அறியப்படுகிறது. புத்தகப் பதிப்புரிமையாளர் ஒருவரிடம் இருந்து 1912-ம் ஆண்டு வில்பிரடு வாய்னிச் என்பவர் இந்தக் கைப்பிரதி புத்தகத்தை வாங்கினார். இதில் காணாமல் போன அல்லது தவறிப் போன பக்கங்களைத் தவிர 240 பக்கங்கள் மீதம் இருக் கின்றன.

இதில் உள்ள எழுத்துக்கள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டு உள்ளன. பெரும்பான்மையான பக்கங்களில் ஏதாவது ஒன்றை விளக்கும் வகையில் உள்ளது அல்லது படங்கள் இருக்கின்றன. பெரும்பான்மையான மக்கள் இதனைப் பார்த்துவிட்டு, இதில் உள்ள புரியாத எழுத்துக்களும் படங்களும் முட்டாள் தனமானவை என்று கூறுகின்றார்கள்.

2013-ம் ஆண்டு மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சொற்பொருள் ஆய்வாளர்கள் இதை காகிதத்தில் பதிப்பித்து, இதில் கண்டுள்ள விஷயங்கள் சங்கேதக் குறியில் எழுதப்பட்டுள்ளன என்று கூறுகின்றனர்.
சில ஆராய்ச்சியாளர்கள் இது முழுக்க முழுக்க எந்த ஒரு விஷயத்தையோ செய்தியையோ வெளிப்படுத்துவதற்காக வெளியிடப்படவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் இது ஏதோ ஓர் அர்த்தத்துடன் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் குறிப்புகளாக இருக்கலாம் என்பது ஒருசாராரின் கருத்து.
ஆனால் எப்படியோ யாருக்கும் இது புரிந்த மாதிரி இல்லை. இந்தப் புத்தகம் கூறும் மர்மம் விலகுமா?

Wednesday, March 4, 2015

கடலில் ஒரு பெரிய நீர்வீழ்ச்சி போன்ற மாயை தோற்றம் தரும் மொரீஷியஸ் தீவு

கடலில் ஒரு பெரிய நீர்வீழ்ச்சி போன்ற மாயை தோற்றம் தரும் மொரீஷியஸ் தீவு


போர்ட் லூயிஸ்: மொரீஷியஸில் உள்ள கடற்பரப்பை படு வித்தியாசமாக புகைப்படம் எடுத்து புதிய கற்பனையைத் தூண்டி விட்டுள்ளார் ஒரு புகைப்படக்காரர். 

மேலிலிருந்து பார்க்கும்போது அந்தக் கடல் பரப்பானது ஒரு பெரிய நீர்வீழ்ச்சி போல தோற்றம் தந்து வியப்பில் விழிகளையும், இதயங்களையும் விரிய வைக்கிறது. 

இந்தியக் கடலில் அமைந்துள்ள தீவுதான் மொரீஷியஸ். அராபியர்கள்தான் இந்தத் தீவை கண்டறிந்தனர். கிபி 975ம் ஆண்டு இந்தத் தீவு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தத் தீவு போர்ச்சுகீசியர்கள் வசம் போனது. பிறகு படிப்படியாக பிரெஞ்சு, டச்சு, பிரிட்டிஷ் என கை மாறியது. 

1968ம் ஆண்டு சுதந்திரம் பெற்று, 1992ம் ஆண்டு குடியரசாக மாறிய நாடு மொரீஷியஸ். இந்தத் தீவு நாட்டின் தென் மேற்கு முனைப் பகுதியில்தான் இந்த பிரமாண்ட "நீர்வீழ்ச்சி" காணப்படுகிறது. மேலிருந்து இந்தப் பகுதியைப் பார்க்கும்போது இந்த இடம் பெரிய நீர்வீழ்ச்சி போல தோற்றம் தருகிறது. 

அதேபோல செயற்கைக் கோள் வழியாக இதைப் படம் எடுத்தபோதும் இதை விட அது பிரமிப்பைக் கூட்டுவதாக உள்ளது. உண்மையில் இங்கு நீர்வீழ்ச்சி ஏதும் இல்லை. மாறாக, கடலோரம் உள்ள மணல் திட்டுக்கள் காரணமாகவே இப்படி நீர்வீழ்ச்சி போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மொரீஷியஸ் தீவே கண்ணுக்கு விருந்தான ஒன்று.. அதில் இந்த கூடுதல் மாயை மேலும் பிரமிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது....!

Tuesday, March 3, 2015

முதன்முதலாக “ஏலியன் சுறா” புகைப்படம் வெளியிட்ட சிட்னி மியூசியம்.

முதன்முதலாக “ஏலியன் சுறா” புகைப்படம் வெளியிட்ட சிட்னி மியூசியம். 

சிட்னி: சிட்னி அருங்காட்சியகம் ஆழ்கடலின் ஆழத்தில் இருக்கின்ற அரியவகை சுறாவான கோப்ளின் சுறாவை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. 

பூமியில் 125 மில்லியன் வருடங்களாக வாழ்ந்து வரும் அரிய வகை உயிரினம் கோப்ளின் சுறா. "த டீப் ஏலியன்" 

அதாவது ஆழ் கடலின் ஏலியன் என்றழைக்கப்படும் இது ஆழ்கடலின் மிக ஆழத்திலேயே இருப்பதால் பலர் இதை பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.

புகைப்படம் வெளியீடு: 


இந்நிலையில், சிட்னியில் உள்ள அருங்காட்சியகம் கோப்ளின் சுறாவின் புகைப்படத்தை இன்று வெளியிட்டுள்ளது.

மிரட்டும் பற்கள்: 


புகைப்படத்தில் சிறிய கத்திகளை போன்ற தோற்றம் கொண்ட அதன் பற்கள் பார்ப்பவருக்கு மிரட்சியை உண்டாக்குகிறது.

தலையால் கவ்வி வேட்டை: 


கோப்ளின் சுறா அதன் இரையை கண்டறிந்ததும் தன் நெற்றியில் மண்வெட்டி வடிவத்தில் உள்ள சிறப்பு உடலமைப்பினால் அதன் சதைப்பிடிப்பான பகுதிகளை கவ்வி இழுத்து சில நொடிகளில் இரையை வேட்டையாடும்.

காட்சியகத்தில் ஒப்படைத்த மீனவர்: 

கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு கடற்கரைப்பகுதியான ஈடனில் 200 மீட்டர் ஆழத்தில் (656 அடி) இந்த அரிய வகை மீனை பிடித்த மீனவர் இதன் மதிப்பை உணர்ந்து உள்ளூர் மீன் பண்ணையில் கொடுத்தார்.

பொதுமக்கள் பார்வைக்கு: 


தற்போது இந்த கோப்ளின் சுறா சிட்னியில் உள்ள அருங்காட்சியகதில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Monday, March 2, 2015

டி வில்லியர்ஸ் ஒரு ஏலியன்ஸ்ஸா ஒரு சந்தேகம் ..???

டி வில்லியர்ஸ் ஒரு ஏலியன்ஸ்ஸா ஒரு சந்தேகம்  ..???

தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் பற்றிதான் இப்போது உலகமெங்கும் பேச்சு..ஏப்பா அவன் மனுசனே இல்லப்பா..அப்டிங்கற வார்த்தைய பரவலா கேட்க முடிகிறது. ஆனா உண்மையிலேயே தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் தன்னலமற்ற அற்புதமான கிரிக்கெட் வீரன்தான்...அதற்கான காரணங்களை அடுக்கினால் அசந்து போவீர்கள்...

கிரிக்கெட்டை பொறுத்த வரை பேட்ஸ்மேன்கள் லெக் சைட், அல்லது ஆஃப்சைடுகளில் ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்குவார்கள்.

சச்சின் போன்ற ஒரு சிலர்தான் இரண்டு பக்கங்களிலும் சிறந்து விளங்குவார்கள். சச்சினிடம் ரிவர்ஸ் ஸ்வீப் ஷார்ட்களை பார்ப்பது அரிது. ஆனால்  டி வில்லியர்ஸ் மைதானத்தின் அனைத்து பகுதிக்கும் பந்தை செலுத்தும் வல்லமை கொண்டவர்.படுத்து, புரண்டு, விழுந்து, உருண்டு எல்லாம் அடிப்பார்.

அந்த வகையில் டி வில்லியர்சுக்கு அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் செல்லப்பெயர் மிஸ்டர்.360.


விளையாட்டு  உலகை பொறுத்த வரை டி வில்லியர்ஸ் விளையாடாத விளையாட்டே கிடையாது.

தென்ஆப்ரிக்க கால்பந்து அணி, ஹாக்கி அணிகளுக்கு அவரது பெயர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நீச்சல் வீரரான டி வில்லியர்ஸ் 100 மீட்டர் நீச்சல் பந்தயத்தில் ஜுனியர் பிரிவில் தேசிய அளவில் சாதனை படைத்தவர். ஆறு முறை தென் ஆப்பிரிக்க பள்ளிக்கூட நீச்சல் போட்டியில் சாதனை படைத்திருக்கிறார்.டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் தென்ஆப்ரிக்க ஜுனியர் அணியில் இடம் பிடித்தவர்.

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் தென்ஆப்ரிக்க தேசிய சாம்பியன்.

அதேபோல தென் ஆப்பிரிக்க ஜூனியர் தடகளப் போட்டியில் 100 மீட்டர் டேஷ் போட்டியில் சாதனை படைத்துள்ளார். இன்னும் கூட அந்த சாதனை உடைக்கப்படாமல் உள்ளதாம்.

தென்ஆப்ரிக்க ஜுனியர் ரக்பி அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.
 
விளையாட்டு மட்டுமல்ல படிப்பிலும் டி வில்லியர்ஸ் கெட்டிக்காரர்தான். தேசிய அளவிலான சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புக்காக நெல்சன் மண்டேலாவிடம் விருதும் வாங்கியுள்ளார்..


பாப் இசையில்  அவர் நல்ல பாடகர் கூட...
ஒருநாள் போட்டிகளில் 52.93 சதவீதம் சாராசரி வைத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 98.35 ஆகும். ஒருநாள் போட்டி வரலாற்றில் 50 சதவீதத்திற்கு மேல் சராசரியும் ஸ்டிரைக்ரேட் 95க்கு மேலும் வைத்திருக்கும் ஒரே கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ்தான்.

ஏற்கனவே விரைவான அரைசதம், சதமடித்து சாதித்துள்ள டி வில்லியர்ஸ் கடந்த ஜனவரி மாதம்தான் மேற்கிந்திய தீவுகள் அணியை புரட்டி புரட்டி எடுத்து 44 பந்துகளில் 149 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஒரு மாதம் கூட ஆகவில்லை மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 66 பந்துகளில் 162 ரன்கள் விரட்டி எடுத்துள்ளார்.

இப்படி அதிரடியாக ஆடும் டி வில்லியர்ஸ் 220 பந்துகளில் 33 ரன்களை எடுத்த கதையும் உண்டு. எதற்காக தெரியுமா? தென்ஆப்ரிக்க அணியை தோல்வியில் இருந்து தப்புவிப்பதற்காகத்தான்.ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் நடந்த கதை இது. அந்த வகையில் அணிக்காக ஆடும் மனிதர் டி வில்லியர்ஸ்.
குறைந்த பந்தில் சதமடிப்பதுதான் நம்ம ஏலியன்ஸ்சின் தனி பாணி.அதாவது சதமடிக்கும் போது அவரது ஸ்டிரைக் ரேட் 100க்கு மேல்தான் இருக்கும்.ஒரே ஒரு முறை நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில்தான் 106 பந்தில் 106 ரன்கள் எடுத்துள்ளார். இதுதான் அவரது குறைந்த ஸ்டிரைக் ரேட்...அதாவது 100. இப்போ சொல்லுங்க...டி வில்லியர்ஸ் மனிதரா?அல்லது ஏலியன்சா?

இது  தொடர்பான சில கட்டுரைகள்..