பேசும் படம் !!!
முதல் இந்திய பேசும் படம் ஆலம் ஆரா
மார்ச் 14 , நாளில் தான் முதல் இந்திய பேசும் படம் ஆலம் ஆரா
மும்பையில் உள்ள மெஜஸ்டிக் திரையரங்கில் 80 வருடங்களுக்கு முன் திரை இடப்பட்டது.
இந்தப் படம் தான் இந்திய திரை இசையின் முன்னோடி எனக் கூறலாம். ஆலம் ஆரா அர்தேசர்
இராணி என்பவரால் இயக்கப்பட்டது, இது ஜோசப் டேவிட் என்பவர் எழுதிய ஒரு பார்சி
நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். 2 மணி நேரமும் 4 நிமிடங்களும் ஓடக் கூடிய
இந்த படத்தில் வித்தல், ஜுபைதா, L .V . பிரசாத் மற்றும் பிரித்திவி
ராஜ் கபூர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்ப்பை பெற்றது, மேலும் வாசிர்
முஹம்மது கான் பாடிய தே தே குதா கே நாம் பர் என்ற பாடல் இந்தியாவின் முதல் சூப்பர்
ஹிட் பாடல் என்ற அந்தஸ்தையும் பெற்றது. ஒலிப்பதிவில் இரைச்சலை
தவிர்ப்பதற்காக இந்தப் படம் பெரும்பாலும் இரவிலேயே படமாக்கப்பட்டது,
மைக்ரோ போன்களை காமெரா கோணத்தில் அமையாதபடி வைத்து ஒலிப்பதிவு செய்தனர்.
இந்தப் படத்தின் பிரதி இப்போது இல்லை. கடைசி பிரதி 2003 புனேயின் திரைப்பட
ஆவணக் காப்பகத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்தின் போது அழிந்துவிட்டது. மூன்று
வருடங்களுக்கு முன் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் ஆலம் ஆரா
படத்தின் எந்தப் பிரதியும் தேசிய ஆவணக் காப்பகத்தில் இல்லை என்பதை தெரிவித்தது.
இந்தியா முழுவதும் தேடும் பனி தொடங்கியது இருப்பினும் இதுவரை இந்தியாவின் முதல்
பேசும் படத்தின் ஒரு பிரதியும் கிடைக்கப் பெறவில்லை.
இந்தியாவின் முதல் பேசும் படம் ஆலம் ஆரா இந்திய வரலாற்றில் பேசாமல் தன்
இருத்தலை நமக்கு உணர்த்துகிறது…
பேசும் படம் சில இங்கே...
city occupy forest, nature go to end. |
அடுத்தவர்களின் பசியே உணருவோம் பசித்தவர்களுக்கு உணவு அளிப்போம்.
கொசுவை விரட்ட பயன்படுத்தப்படும் கொசுவர்த்திகள் வெளியிடும் புகை 100 சிகரெட்கள் வெளியிடும் புகைக்கு சமமான பாதிப்பை ஏற்படுத்துகின்றனவாம்....
தண்ணிர் என்பது மனித வாழ்கைக்கு மிக முக்கியமானது. அப்படிபட்ட நீரை நாம் வீணவிரயம் செய்கிறோம், கோடை காலங்களில் தான் தண்ணிர் அருமை தெரியும்..
நாம்மால் முடிந்த அளவு நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம், மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்து, நிலத்தடி நீரை அதிகபடுத்துவோம்...
விவேகானந்தர்தான் சொன்னார்::::
பசு பாதுகாப்பு பிராச்சாரகர் ஒருவரிடம், “மனிதர்கள் பசியாலும், பட்டினியாலும் செத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களின் உயிரைக் காப்பாற்ற ஒரு பிடி சோறுகூடத் தராமல் விலங்குகளையும், பறவைகளையும் காப்பாற்றுவதற்காக உணவை வாரி வாரித் தரும் சங்கங்களிடம் எனக்கு சிறிதுகூட அனுதாபம் கிடையாது. மனிதன் பட்டினியால் சாவதற்கு அவனது கருமங்கள் காரணம் என்று கரும நியதிக்கு நீ

ங்கள் வக்காலத்து வாங்குவதாக இருந்தால்
இந்த உலகத்தில் எதற்காகவும் முயற்சி செய்வதோ, போராடுவதோ பயனற்ற வேலை.
பசுக்களைக் காப்பாற்றும் உங்கள் வேலையும் அப்படிப்பட்டதுதான்” என்றார்
விவேகானந்தர்.
இதைக் கேட்ட பசு பாதுகாப்பு பிராச்சாரகர் கொஞ்சம் வெட்கம் அடைந்தவராகத் தடுமாறினார். பிறகு சமாளித்துக் கொண்டு “நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், பசு நமது தாய் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவே” என்றார். சுவாமிஜி லேசாகச் சிரித்தபடி “ஆமாம். பசு நம் தாய்தான். எனக்குப் புரிகிறது. வேறு யாருதான் நம்மைப் போன்ற இவ்வளவு புத்திசாலிகளான பிள்ளைகளைப் பெற முடியும்” என்றார்.

thanks to
களர்நிலம் [முதல் இந்திய பேசும் படம் ஆலம் ஆரா தகவல்]
இன்று ஒரு தகவல் மற்றும்,
சுவனப்ரியன் அண்ணா..
No comments:
Post a Comment
welcome ur comment,