Friday, September 28, 2012

சீனாவில் உலகின் மிக நீளமான தொங்கு பாலம் திறப்பு!

சீனாவில் உலகின் மிக நீளமான தொங்கு பாலம் திறப்பு!

 


உலகிலேயே மிக நீளமான, உயரமான தொங்கு பாலம் ஒன்று சீனாவில் திறக்கப்பட்டுள்ளது.சீனாவின் ஹூனான் மாகாணத்தில் அன்ஹியாட் நகரில் மிகவும் உயரமான மலைத்தொடர்கள் உள்ளன. இங்குள்ள இரு மலைத்தொடர்களையும் இணைக்கும் வகையில் தொங்கு பாலம் கட்ட கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கின.


மொத்தம் 1,102 அடி நீளம் உள்ள இந்த தொங்கு பாலம், 3,858 அடி உயரமும் கொண்ட இரு மலைத்தொடர்களுக்கிடையே பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.பணிகள் முற்றிலும் முடிவடைந்து விட்டதால், போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. இப்பாலம் தான் உலகி‌லேயே மிகவும் நீளமானதும், உயரமானதும் ஆகும்.78 அடி அகலம் கொண்ட இப்பாலத்தில் நான்கு வழிச்சாலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனம், கார், கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் செல்வதற்கென தனிப்பாதைகள் மற்றும் பாதசாரிகள் நடக்க தனிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.மணிக்கு 50 கி.மீ வேகத்தில் தான் இப்பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சீனாவில் உலகின் மிக நீளமான தொங்கு பாலம் திறப்பு! videothanks to

Thursday, September 27, 2012

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி?

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி?

மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. 
இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.

சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக ரெண்டு உதறு உதறி விட்டு உடனே ஆன் செய்து விடுவார்கள்.இதை மட்டும் நீங்கள் செய்யவே கூடாது.
உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும்.
பின்னர் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு வெளி பாகங்களை துடைக்கவும். 
உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode இல் வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.
Vacuum cleaner இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி விடவும். இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும். ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ).

அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம். Hairdryer போன்றவற்றை முயற்சி செய்யலாம்.
போன் நன்றாக காய்ந்த பின் அதில் நீர் இல்லை என்று உறுதி செய்து கொண்ட பின் அதை ஆன் செய்ய முயற்சிக்கவும். பெரும்பாலும் ஆன் ஆகிவிடும், இல்லை என்றால் வேறு பேட்டரி இருந்தால் அதை போட்டு முயற்சி செய்யவும். அப்போதும் ஆன் ஆனால் போன் ஓகே, பேட்டரி பிரச்சினை, அப்போதும் இல்லை என்றால் கடைக்காரரிடம் கொண்டு போய் கொடுக்கவும்.


- பிரபு கிருஷ்ணா 

mobile information..
 
********************************************

மொபைல் போன் வரலாறு ....
 
********************************************

MOBILE தொலைந்து விட்டதா POLICE STATION செல்ல தேவையில்லை


 
********************************************

மொபைலுக்கு ரீ சார்ஜ் செய்ய* போகிறீர்களா?


 
********************************************

மிரட்டும் மொபைல் போன்கள் ******************************************** ********************************************

Tuesday, September 25, 2012

தீரன் சின்னமலை !!

தீரன் சின்னமலை !!


ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் மேலப்பாளையம் என்னும் ஊரில் 17.4.1756 அன்று பிறந்தவர் சின்னமலை. பெற்றோர் இரத்தினச் சர்க்கரை பெரியாத்தா தம்பதியினர். அவர்களின் ஐந்து ஆண்மக்களில் இரண்டாவது குழந்தை சின்னமலை.

இளம்பருவத்தில் தம்பாக்கவுண்டர் என்று அழைக்கப்பட்டார். பள்ளிப் பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு. அவர்கள் பரம்பரையில் அனைவர

ுக்கும் ‘சர்க்கரை’ என்பது பொதுப்பெயர். ‘புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும
் கவிக்கும்’ இனிமை செய்ததால் அப்பெயர் பெற்றார்களாம்.

இளவயதிலேயே தம்பியர் பெரியதம்பி, கிலேதார் ஆகியவர்களோடு மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் சின்னமலை கற்றுத் தேர்ந்தார்.
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQGUYNNu2ItvBDCiOQQVRqNdT3MkKRyehZTHDBl10JsEVYde0gE
மதுரை நாயக்கர் வசமிருந்த கொங்கு நாட்டுப் பகுதியை மைசூரார் கைப்பற்றியதால் கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது.

ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு வினியோகித்தார். வரி தண்டல்காரரிடம் ‘சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்’ என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் ‘சின்னமலை’ என்ற பெயர் வழங்கலாயிற்று.


கிழக்கிந்தியக் கம்பெனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். மலையாளத்திலும் சேலம் பகுதியிலும் காலூன்றிய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.


7.12.1782 இல் ஹைதர் அலி பற்றி அறிய   << இங்கே>> சுட்டவும்...   மறைவிற்குப் பின் திப்புசுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து ‘வெள்ளைத்தொப்பியரை’ எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். 

 
சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் ‘கொங்குப்படை’ சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது.

நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளன் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காம் மைசூர்ப் போரில் 4.5.1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்புசுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின்.

திப்பு சுல்தான் பற்றி அறிய  

இங்கே <<திப்பு சுல்தான்-ஒரு முழு வரலாறு>>சுட்டவும்... 


 சின்னமலை கொங்குநாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார்.

ஏற்கெனவே 18.4.1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன.

தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்.

போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாட்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து 3.6.1800 அன்று கோவைக் கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. மக்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.


இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன.


சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் வேளாளர், நாயக்கர், வேட்டுவர் பாளையக்காரர்கள் பலர் இருந்தனர். ஓமலூர் சேமலைப் படையாச்சி, கருப்பசேர்வை, ஃபத்தே முகம்மது உசேன், முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன் சென்னிமலை நாடார் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர்.


சில பாளையக்காரர்களும், சிற்றரசர்களும் ஆங்கில ஆட்சி வேரூன்றுவதை எதிர்த்ததற்குத் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவே என்ற கருத்தும் சிலரிடம் உண்டு. ஆனால் சின்னமலை தன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அல்ல, உண்மையான நாட்டுப்பற்றுடன் போரிட்டார்.


எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர். 1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் நடைபெற்ற போர்களில் சின்னமலையே பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் கொய்து மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது. சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.


போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம் (??!), சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி 31.7.1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.

சின்னமலை நினைத்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூலில் பத்தில் மூன்று பங்கு பெற்றுத் தொடர்ந்து ஆட்சி செலுத்தி சுதேச சமஸ்தானம்போல 1947 வரை விளங்கியிருக்கலாம். ஆங்கிலேயரும் அவ்வாறே வேண்டிக்கொண்டனர். ஆனால் சின்னமலை அதை மறுத்து வீரமரணம் அடைந்தார்.


சின்னமலை ஆங்கில வெள்ளத்தைத் தடுக்கும் பெருமலையாக விளங்கினார். முன்பு அவர் நினைவாகப் போக்குவரத்துக் கழகமும், தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்தது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உருவாகி வருகிறது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர்.
தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை..rko 


இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31.7.2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிடுகிறது

Monday, September 24, 2012

முகலாயர்கள் நல்லவரா? கெட்டவரா?- IIமுகலாயர்கள் நல்லவரா? கெட்டவரா?- II

 

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...
ஷெர்ஷா:

குறுகிய கால _ அய்ந்து ஆண்டுகள் மட்டுமே - ஆட்சிதான். அரச வம்சம்கூட இல்லை.

ஆனால் ஆட்சிமுறை, நிர்வாகம், நீதி வழங்கல், வரிவசூல் முதலியனவும் இவற்றிலான சீர்திருத்தங்கள் இவற்றை எல்லாம் நோக்க பல வரலாற்று அறிஞர்கள் வானளாவப் போற்றுகின்றனர்.

மக்கள் நலனை முன்னிறுத்தி ஆட்சி செய்தவர் என்கின்றனர்.

இவருக்கு உவமையாக பிரான்சை ஆண்ட 14அம் லூயி, இரசியாவை ஆண்ட மகா பீட்டர், பிரசியாவை ஆண்ட மகா பிரடரிக் முதலியவர்களைக் கூறுகின்றனர்.

நான்கு நெடுந்தொலைவு சாலைகளை அமைத்தவர் இவரே.

1. வங்காள சோர்கானிலிருந்து மேற்கே சிந்து நதி வரை 1500 மைல் நீளம்.

2. ஆக்ராவிலிருந்து பிரகான்பூர் வரை மட்டுமல்ல.

சாலைகள் அத்தனையிலும் 1700 சத்திரங்களைக் கட்டி இந்து முஸ்லீம்களுக்குத் தனித்தனி தங்கும் விடுதிகளும் சத்திரத்தின் வாயிலில் குடிநீர் பானைகளும் இந்துக்களுக்கு உணவளிக்க பார்ப்பன சமையற்காரர்களையும் ஏற்பாடு செய்திருந்தார். (

எஸ்.ஆர். சர்மா தரும் தகவல்) (345)

நீதி வழங்குவதில் கண்டிப்பானவர்.

அதிகார வர்க்கத்தையும் பெருஞ் செல்வர்களையும் (இந்திய அரசு போல் அல்லாது) குற்றத்திலிருந்து தப்பிச் செல்லவிட மாட்டார்.

ஏழைகளுக்கு நீதி எளிதில் கிடைக்கச் செய்தார்.

உறவினர், உயர்ந்தோர் என்பதற்காக நீதியைச் சாய்க்காமல் அவர்களைத்தான் அதிகம் தண்டிப்பார்.

ஏழை வேளாளனுக்கு மேலான நீதி கிடைத்தது.

தப்காதி அக்பரி (Tabagat-i-Akbari) என்னும் நூலில் நைசாமுதீன் அகமது என்பவர்

ஷெர்ஷாவின் ஆட்சியில் வணிகர்கள் தங்கள் பொருட்களை யாரும் கொள்ளையடித்து விடுவார்களோ என்ற பயமின்றி எங்கும் பயணம் செய்யலாம்.

பாலைவனத்திலும் தூங்கலாம்.

ஷெர்ஷாவின் தண்டனைக்குப் பயந்தும், நீதியைக் காக்க வேண்டுமென்ற பற்றுக்கொண்டும் திருடர்களே வணிகர்களின் பொருட்களுக்குக் காவலிருப்பார்கள் என்கிறார்.

(இன்றைய இந்திய ஊழல் ஆட்சியை எண்ணிப் பாருங்கள். யாருக்கும் வெட்கமில்லை!) _

இந்திய வரலாறு 3ஆம் தொகுதி _ பேரா.கோ.தங்கவேலு எழுதியது.
பழனியப்பா பிரதர்ஸ் வெளியிடு _ 2002 பதிப்பு.

ஷெர்ஷாவின் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை வரலாற்றாளர் எர்ஸ்கின் விவரிக்கிறார். (344, 345)

ஷெர்ஷாவின் மூத்த மகன் அதல்கான் ஒரு நாள் யானை மீதேறி ஆக்ரா வீதிகளில் போய்க் கொண்டிருந்தபோது

ஒரு கடைக்காரர் வீடு - சிதிலமடை மடை நிலை _ உரிய மறைப்புகள் இல்லாது கடைக்காரன் மனைவி ஆடையின்றி குளித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்த இளவரசன் அவள் அழகில் மயங்கி சிறிது நேரம் நின்று பார்த்ததோடு அவள்மீது ஒரு பீடாவை எறிந்துவிட்டுப் போய் விட்டான்.

அதிர்ந்து போன அப்பெண் கணவன் வந்ததும் தகவலைக் கூறித் தனக்கு மானபங்கம் ஏற்பட்டு விட்டதாகவும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் கூறி அழுது ஆர்ப்பரித்தாள்.

கணவன் நேரே ஷெர்ஷாவிடம் சென்று புகார் கூறினான். ஷெர்ஷா என்ன செய்தான்?

இஸ்லாம் சட்டவிதிகளின்படி தன் மகனுக்குத் தண்டனை தர வேண்டும் என்றான்.

அதாவது பதிலுக்கு பதில் (கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது போல்) இளவரசனின் மனைவி ஆடையின்றி குளிக்க அதை அந்தக் கடைக்காரன் யானை மீதிருந்து பார்த்து அவள் மீது பீடாவை வீச வேண்டும் என்றான்.

(மனு நீதி கொன்ற சோழன் கதைபோல)

இதைக்கேட்டு அனைவரும் திடுக்கிட்டனர்.

பல பிரபுக்கள் சொல்லிப் பார்த்தும் ஷெர்ஷா இந்த முடிவிலிருந்து மாற மறுத்துவிட்டார்.

மன்னரின் நேர்மையைக் கண்டு அசந்துபோன கடைக்காரரே இறுதியில் புகாரைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

இவ்வாறு நீதி வழங்குவதிலும் வரி வசூல் முறையில் செய்த சீர்திருத்தங்களையும் ஆங்கிலேயர் ஆட்சியிலும் கடைப்பிடித்தனர்.

எனவேதான் வின்சண்ட் ஸ்மித் என்ற வரலாற்று அறிஞர்.

“No government not even the British government has shown so wisdom as this great pathan” 

என்று எழுதியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மேலும் தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக ஜிகாத் (புனிதப் போர்) தொடுத்ததில்லை. (346)

எத்தனை உயர்ந்த உள்ளம்.

மண்ணின் மைந்தர்களை அடியோடு அழிக்கப் போர் செய்த வந்தேறிகளுக்குத் துணைபோன _ இன்னும் ஆதரவுக் கரம் நீட்டும் இந்திய அரசை எண்ணிப் பாருங்கள்.

எத்தனை கொடுமை இது.

எளிய ஷெர்ஷாவின் உயர்வும் முனைவர்களின் இழிவும் புரியும்.

மக்களுக்காக இலக்கியம் படைத்த கபீர்
சமஸ்கிருதம் கிணற்று நீர் என்றால்
மக்களின் மொழி ஓடு நதி என்றார்(197)

அமர்தாசு சீக்கிய மதப் பிரச்சாரத்தை மக்கள் பேசும் மொழியில் செய்தார்.

அதைக் கேட்ட பார்ப்பனர்கள் இவர் ஏன் சமஸ்கிருதத்தைக் கைவிட்டார்? என்று கேட்டனர்.

அதற்கு பதிலுரையாக அமர்தாசு கூறினார்.

கிணற்று நீரைப் பக்கத்து நிலத்திற்குத்தான் பாய்ச்ச முடியும்.

ஆனால் மழைநீர் கொண்டு உலகம் முழுவதிலும் விவசாயம் செய்யலாம் என்றார் (484)

கபீர் கூறியவை:

நீங்கள் உங்கள் இதயத்தைச் சிரைக்கவில்லை
உங்களது முடியை ஏன் சிரைக்கிறீர்கள்?

மனிதனின் பாவங்கள் அவனது இதயத்தின் வேலை
தலையைச் சிரைத்து என்ன பயன்?

புத்தகங்கள் ஒரு சிறை
அதன் கதவுகளில் இப்படி எழுதப்பட்டுள்ளது
கற்கள் உலகை மூழ்கடித்து விட்டன
பண்டிதர்கள் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் (192)

கற்களைக் கும்பிடுவதன் மூலம்
கடவுளைக் காணமுடியும் என்றால்
நான் மலையைக் கும்பிடுவேன் (196)

பெற்றோர்கள் உயிரோடு இருந்தபோது
அவர்கள் பேச்சைக் கேட்கவில்லை

இறந்ததும் அவர்களுக்கு விருந்து படைக்கிறார்கள்

எலிகளும் நாய்களும் சாப்பிடுவது எப்படி அந்தப்
பரிதாபமான பெற்றோர்களுக்குப் போய்ச் சேரும். (186)

ஆதாரம் :- காலந்தோறும் பிராமணியம் பாகங்கள் 1 மற்றும் 2 : அருணன் எழுதிய நூலிலிருந்து.

- ம.கிருஃச்ணமூர்த்திமன்னர் அக்பர்{பிராமணர் விரும்பி }:

நமது வரலாற்று பாடங்களில் அக்பரைப் பற்றி மிக சாந்த சொரூபி. மத சார்பற்று நடந்து கொண்டார். அவரைப் போன்ற ஒரு முஸ்லிம் அரசரை நாம் எங்கேயும் பார்க்க முடியாது என்ற கருத்துக்களையே நாம் படித்து வந்திருப்போம்.

பிராமணர் விரும்பி.

 
அக்பர் தன்னை இறைத் தன்மை பொருந்தியவராகக் காட்டிக் கொண்ட போது பிராமணர்கள் அவரை 'இராமன், கிருட்டினன் மற்றும் இன்னும் பல இந்து அவதாரங்களைப் போன்ற ஒரு அதிசய பிறவி என்று புகழ்ந்தனர். உலகை ஆள வந்தவர் என்றும் இவ்வையகத்து மாந்தர்க்கு வழி காட்ட வந்த அவதார புருஷர் எனவும் போற்றி புகழ்ந்தனர்.

 மக்களுக்கு தரிசனம் அளிக்க அவர் காட்சி மண்டபத்துக்கு வருகையில் அவர் நெற்றியில் ஹிந்துவைப் போன்று திலகமிட்டிருந்தார். 
பிராமணர்களால் ஆசீர்வதித்து அணிவிக்கப்பட்டிருந்த பொன்னாபரணங்கள் அவரது மணிக் கட்டுகளில் காணப்பட்டன. அத்துடன் அவரை விடவிலலை. 
பீர்பால் அக்பருக்கு பிராமணர்களின் பூமாலை அணிவிக்க முயலும் அளவுக்கு அவர்களின் செல்வாக்கு அக்பரின் மேலிருந்தது.

 இஸ்லாமியரின் எதிரி

* இஸ்லாம் பன்றியையும் நாயையும் அசுத்தமான பிராணிகளாகக் கருதுவதற்கு மாற்றமாக அவர் அவற்றை அந்தப் புரத்திலும் கோட்டையிலும் வைத்திருந்தார்.
* ஐந்து நேரத் தொழுகை, நோன்பிருத்தல் மற்றும் முகமது நபிகளுடன் தொடர்புடைய அனைத்து நம்பிக்கைகளும் மூடத்தனங்கள் என்று வர்ணிக்கப்பட்டன. மனிதனின் அறிவே மதத்தின் அடிப்படை ஆதாரமாகக் கருதப்பட வேண்டுமே யொழிய நபியவர்களின் வழிமுறைகளல்ல என எடுத்துரைக்கப்பட்டது.
* அக்பர் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பல மாறுதல்களை புகுத்தினார். அரசருக்குரிய மரியாதையுடன் அவரைப் பார்ப்பது சமயக் கட்டளையாகவே கருதப்பட்டது. அவர் தனது முகத்தை 'காஃப இ முரத்தத்' (விருப்பங்களின் மூலம்) 'கிப்லா இ ஹாஜத்' (தேவைகளின் இலக்கு) என்றும் வர்ணித்தார்.
* அஹமத், முஹம்மத், முஸ்தஃபா போன்ற பெயர்கள் குற்றத்திற்குரியனவாகக் கருதப்பட்டன. இதன் மூலம் அந்தப்புரத்தில் உள்ள அரசிகளையும் அரண்மனைக்கு வெளியிலுள்ள இறை மறுப்பாளர்களையும் அரசர் திருப்தி படுத்த முயன்றார்.
* அரபு மொழி வாசிப்பதும் பயில்வதும் குற்றமாகப் பார்க்கப்பட்டது. இஸ்லாமிய சட்டங்களும் திருக்குர்ஆன் விரிவுரைகளும் முகமது நபி அவர்களின் நடைமுறைகளும் தவறானவைகளாக போதிக்கப்படடன.
* கடவுள் வணக்கத்தின் போது தங்க ஆபரணங்கள் ஆண்கள் அணிவதும் பட்டாடை உடுத்திக் கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டது.
* ஹிஜ்ரா ஆண்டு கைவிடப்பட்டு அக்பர் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டை (ஹிஜ்ரி 963) துவக்கமாகக் கொண்டு புதிய ஆணடுக் கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 
* அரபு மொழி வாசிப்பதும் பயில்வதும் குற்றமாகப் பார்க்கப்பட்டது. இஸ்லாமிய சட்டங்களும் திருக்குர்ஆன் விரிவுரைகளும் முகமது நபி அவர்களின் நடைமுறைகளும் தவறானவைகளாக போதிக்கப்படடன. 
* இரவு நேரங்களில் நடைபெற்ற சமூகக் கூட்டங்களின் போது முகமது நபி அவர்களின் தோழர்களைப் பற்றி பேசப்படும் தகாத வார்த்தைகளை என்னால் இங்கு விவரிக்க இயலாது.

இவ்வாறு அக்பர் முழுக்க முழுக்க இஸ்லாத்தின் பகைவராக மாறியதற்குக் காரணம் அவர் தன்னை இறைத் தன்மை பொருந்தியவராகக் காட்டிக் கொண்ட போது பிராமணர்கள் அவரை 'இராமன், கிருட்டினன் மற்றும் இன்னும் பல இந்து அவதாரங்களைப் போன்ற ஒரு அதிசய பிறவி என்று புகழ்ந்தனர். உலகை ஆள வந்தவர் என்றும் இவ்வையகத்து மாந்தர்க்கு வழி காட்ட வந்த அவதார புருஷர் எனவும் போற்றி புகழ்ந்தனர்.

‘தீனே இலாஹி’

‘தீனே இலாஹி’ என்ற மதத்தை உருவாக்கி, இஸ்லாத்தை அவமதித்தார். ‘தீன் இலாஹி’யில் புதிதாக இணைந்தவர்கள், பிரதி ஞாயிறு தோறும் வணக்கம்; புரிவார்கள். இவர்கள் தம் வணக்கச் சடங்கின் போது, கைகளில் தலைப்பாகை ஏந்தியவர்களாக அரசனின் காலில் விழ வேண்டும். அரசன் அவர்களிடம் தன்னுடைய உருவப்படத்தைக் கொடுப்பார். அக்பர் தன் காலில் விழுந்து வணங்குவதையும், தன் புதிய மதச் சடங்காகவே ஆக்கினார்.

பல விதிகளையும் சடங்குகளையும் இவருடைய ‘தீன் இலாஹி’யில் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. அவை:
அரசன் காலில் விழுந்து வணங்க வேண்டும்.
பிறந்த நாளில் விருந்தளிக்க வேண்டும.;
பிறந்த மாதத்தில் இறைச்சி உண்ணக்கூடாது.
இறந்தவரின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ செய்யலாம்.
எரிக்கும்போதோ, புதைக்கும் போதோ தலை கிழக்கு நோக்கி இருக்கவேண்டும்.

இறைச்சிக் கடைக்காரர், மீனவர், பறவைகளைப் பிடிப்போர் ஆகியோரின் பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது. (வர்ணாசிரம கோட்பாடு எவ்வாறு புகுத்தப்படுகிறது பாருங்கள்)
இவ்வாறு, பல கோட்பாடுகளை உள்ளடக்கியதாக ‘தீனே இலாஹி’ காணப்பட்டது.
அக்பர் பிராமணர்கள் பக்கமே சாயட்டும். இந்து மதத்துக்கே செல்லட்டும். இதனால் இஸ்லாத்துக்கு எந்த வகையிலும் குறைவு வந்து விடாது. ஆனால் தனக்கு கீழ் உள்ள மற்ற மக்களும் இவர் கொள்கைபடி இஸ்லாத்தை விட வேண்டும். இஸ்லாமிய நம்பிக்கைகளை புறம் தள்ள வேண்டும் என்று சொல்ல இவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. நாட்டை ஆளுவதற்குத்தான் அரசனே தவிர அந்த மக்களின் சமய செயல்பாடுகளில் குறிக்கிடுவதை யாரும் விரும்ப மாட்டார். ஆனால் நமது வரலாற்று பாடநூல்களோ இந்த செய்திகள் எதையும் பதியாமல் இவரை பத்தரை மாற்று தங்கம் போல் காட்டுவதுதான் உச்ச கட்ட காமெடி. அதே நேரம் இந்திய நாட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட, அகண்ட பாரதத்தை உண்டாக்கிய ஒளரங்கசீப்பை மதவெறியராகவும் இந்து மதத்தின் எதிரியாகவும் காட்டி அன்று முதல் இன்று வரை வெறுப்பு விதைத்து வருகிறார்கள்.

முகலாயர்களும் பாரத நாட்டு ரத்தங்களே!


இன்று இந்தியாவில் முஸ்லிம்களின் மேல் வைக்கப் படும் குற்றச் சாட்டுகளில் ஒன்று 'முஸ்லிம்கள் அனைவரும் அன்னிய நாட்டவர்'. இதில் ஐந்து சதம் கூட உண்மையில்லை என்று சொன்னாலும் குறிப்பிட்ட சிலரும், சில பத்திரிக்கைகளும் இந்த பொய்யை திரும்ப திரும்ப சொல்லி வருகின்றனர். இப்படி கூப்பாடு போடுபவர்களின் வரலாறை நாம் புரட்டினால் அந்த மக்களே வரலாற்று ரீதியாக இந்நாட்டுக்கு அன்னியராகிறார்கள். சரி தலைப்புக்கு வருவோம்.

அன்றைய முகலாயர்கள் இந்தியாவை சுமார் எண்ணூறு வருடங்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் இந்தியாவிலேயே தங்கி இந்நாட்டு மக்களை திருமணம் செய்து கொண்டு இந்நாட்டோடு இரண்டற கலந்து விட்டனர். இருந்தும் இஸ்லாமியர் அன்னிய தேசத்தவர் என்ற குரல் எப்போதாவது ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கும்.

முகலாயர்களையும், கேரளக் கரையோரம் வந்த ஒரு சில அரபுகளையும் தவிர்த்து மற்ற முஸ்லிம்கள் அனைவரும் முன்னால் இந்துக்களே! இஸ்லாத்தின் கொள்கைகளால் கவரப் பட்டும் தீண்டாமையிலிருந்து விடுபடவும் இஸ்லாத்தை தழுவிக் கொண்ட இந்துக்களே இன்றைய இந்திய முஸ்லிம்கள். இந்த முகலாயர்களில் கூட ஒரு சில அரசர்கள் இந்நாட்டு பெண்களை மணமுடித்து பாரத நாட்டு பிரஜைகளான வரலாறை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. நான் படித்த அந்த ஒரு சில விபரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...
********************************** 


ஒளரங்கஜேப் பற்றி சில தகவல்.


# 'சதி'யை நிறுத்தியவர் ஒளரங்கஜேப்!
எனது தேசத்து ஏழைகளுக்கு......
# வாரணாசி விசுவநாதர் ஆலயம்!
# ஜிஸ்யா வரியும் மன்னர் ஒளரங்கஜேப்பும்
ஒளரங்கஜேப்பின் உயிலில் சொல்லப்பட்ட விஷயங்கள்
#   ஒளரங்கஜேப் ஒரு விளக்கம்!தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...

**********************************
********************************** 
********************************** 
********************************** 
********************************** 

"பகதூர்ஷா ஜாஃபர்"."பகதூர்ஷா ஜாஃபர்" முதல் இந்திய சுதந்திரப் போரின் தலைவர்.

முகலாயப் பேரரசின் கடைசி அரசரான பகதூர்ஷாவின் மதச்சார்பின்மை பற்றி தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது.
ன்றுபட்ட ஜான்ஸிராணி லடசுமிபாய், நானா சாஹிப், தாந்தியா தோப், ஒளத் பேரரசி பேகம் ஹஜ்ரத் மஹல், பீஹாரின் சிங்கம் குவர்சிங், மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், ஹரியானா - ராஜஸ்தான் - மகாராஷ்டிராமன்னர்கள் மே 31-ஆம் தேதிக்காக - ஒன்று பட்டு ஆங்கிலேயரை ஒழித்துக்கட்டும் அந்நாளுக்காக காத்திருந்தனர்.
1857ல் நாடு தழுவிய புரட்சி ஆங்கி லேயர்களுக்கு எதிராகக் கிளம்பியது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருங்கி ணைந்து வீரப்போரை தொடங்கினர். ஜான்ஸி ராணி லெட்சுமிபாய் போன்ற குறுநில மன்னர்களெல்லாம் ''எங்கள் இந்தியாவின் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாதான்'' என பிரகடனம் செய்து புரட்சியில் குதித்தனர். இதுதான் ''சிப்பாய் கலகம்'' என ஆங்கிலேயர்களாலும், ''முதல் இந்திய சுதந்திரப் போர்'' என இந்தியர்களாலும் போற்றப்படுகிறது. இதில் டெல்லியில் மட்டும் 27 ஆயிரம் முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் துறந்தனர்.

இத்தகைய ஒரு பின்னணியில் தான் கிழக்கிந்தியக் கம்பெனியின்பெரும்பாலான மேல்ஜாதி இந்துச் சிப்பாய்கள் முகலாயப் பேரரசரான பகதூர் ஷாவின் தலைமையை வேண்டி டெல்லி நோக்கிக் கிளம்பினார்கள். (நிலப்பிரபுத்துவ சுயமோகத்தில் உள்ள இந்துத்துவ சக்திகளால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளமுடியாது.)

டெல்லியை அடைந்த இந்தியச் சிப்பாய்களும் டெல்லியில் இருந்த இஸ்லாமியச் சிப்பாய்களும் இந்த எழுச்சிக்கு ஜாபர் தலைமை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

அந்நிய ஆட்சி வீழ்க! பேரரசர் பகதுர்ஷா வாழ்க! என்ற கோசங்களுடன் மீரட்டில் திரண்ட 2000 ஆயுதம் தரித்த குதிரை வீரர்கள், டில்லி சலோ ! என்ற ஓங்காரக் குரலுடனும் ஓங்கிய வாலுடனும் ரிஸால்தார் ஹுஸைன் அலி தலைமையில் டில்லி நோக்கிப் புறப்பட்டனர்.


பகதூர்ஷாவின் வழியில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் :

 

மாமன்னர் பகதூர்ஷா அவர்கள் வெள்ளையர்களின் நயவஞ்சகத் தனத்தால் ஒடுக்கப்பட்டப்பின் அவருக்கடுத்து அதே வழியில் சுதந்திரப் போராட்டப் பயணத்தை;த் தொடங்கினர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள்.

பகதுர்ஷாவின் சமாதி..நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேச விடுதலைக்காக ஜப்பானியர் உதவி வேண்டி, பர்மாவைத் தளமாகக் கொண்டு படை திரட்டிக் கொண்டிருந்த காலத்தில் ரங்கூன் யார்க் சாலையில் உள்ள பகதுர்ஷாவின் சமாதியை பல லட்சரூபாய் செலவில் புதுப்பித்தார்.பகதுர்ஷா சமாதியில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து தமக்கு மக்கள் அன்புடன் அளித்த 
தங்க வாளின் பிடியில் அடைத்து, அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக,

“நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், இம்மஹானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்!” - என்று சபதமேற்றார்.

இந்திய சுதந்திர வரலாற்றில் கம்பீரமிக்கப் போராளியான நேதாஜிக்கே...ஒரு தூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர்.
(அமீர்ஹம்ஷா, நேதாஜியின் மாலைக்கு ரூபாய் 5 லட்சம், தினமணி சுதந்திர பொன்விழா மலர், பக்கம். 69.)


தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...
இந்த பதிவில் உள்ள பல தகவலை வெளியிட்ட வரலாற்று அசிரியர்கள் மாற்று  மத சகோதர்கள்.
அவர்களின் வெளியிட்ட தகவலை சேகரிக்க உதவிய
சகோதரர் முகம்மது ஆஷிக்.{
ராமர் கோவிலை பாபர் இடித்தாரா..?}

சகோதரர் UNMAIKAL {முகலாய மன்னர்களின் நீதி}
சகோதரர் சுவனப்பரியன்க்கு {பல தகவல் } நன்றி.

rahmanfayed : இனி என் கேள்வி?  முகலாயர்கள் நல்லவரா? கெட்டவரா?...

  சொல்லுங்க .......