Thursday, May 12, 2016

நெல்லை மட்டன் தக்கடி சமைத்து அசத்தலாம்

நெல்லை மட்டன் தக்கடி

தேவையான பொருட்கள் ;

வறுத்த அரிசிமாவு (புட்டு மாவு) - 400 கிராம்

மட்டன் - அரை கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்

கரம் மசாலா (ஏலம்,பட்டை,கிராம்புத்தூள்)-அரைஸ்பூன்

கறி மசாலாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

சின்ன வெங்காயம் - கால் கிலோ

தேங்காய்த்துருவல் - பாதி தேங்காய்

பச்சை மிளகாய் -3

மல்லி கருவேப்பிலை புதினா - சிறிது

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

உப்பு- தேவைக்கு


மாவுடன் பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் , மல்லி,கருவேப்பிலை,பச்சை மிளகாய் சேர்த்து கலந்து வைக்கவும்.


குக்கரில் எண்ணெய் விட்டு சிறிது வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு,கரம்மசாலா,சிறிது மல்லி,புதினா,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பின்பு சுத்தம் செய்து கழுவிய மட்டனை சேர்த்து ,கறிமசாலா ,உப்பு சேர்த்து கறி மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மூடி 3 விசில் வைத்து அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும்.இப்ப தக்கடிக்குண்டான மட்டன் கிரேவி ரெடி.

ரெடி செய்து வைத்த மாவில் அந்த கிரேவியை மட்டும் மாவு கொள்ளும் அளவு விட்டு கலந்து விடவும்.

இப்ப தக்கடிக்கான மாவு ரெடி.

மட்டனை தனியாக எடுத்து விட்டு மாவிற்கு மூன்று மடங்கு தண்ணீர் வைத்து கொதிக்க வைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.


ரெடி செய்த தக்கடி மாவை கொழுக்கட்டைகளாக பிடிக்கவும்.இருபது கொழுக்கட்டை மீடியம் சைசில் வரும்.

2 கொழுகட்டைக்கான மாவை மீதி வைக்கவும்.


தண்ணீர் நன்கு கொதி வரவும் நெருப்பை கூட்டி வைத்து கொழுக்கட்டையை ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.கொழுக்கட்டை வெந்து வரும் வரை அகப்பை போடக்கூடாது.கொழுக்கட்டி வெந்து மேலே வந்தவுடன்,தனியாக எடுத்து வைத்த 2 கொழுக்கட்டை அளவு மாவை தூவி விடவும். மூடி போட்டு சிம்மில் 10 நிமிடம் வைக்கவும், அந்த மாவு கூட்டு போல் ஆகிவிடும்.
பாத்திரத்தின் மூடியை திறந்து வேகவைத்து எடுத்து வைத்த மட்டனை போடவும்.கொழுகட்டை உடையாமல் மிக்ஸ் செய்யவும். மட்டனை எடுக்காமல் கொத்திக்க வைத்தால் மட்டன் பாத்திரத்தில் அடியில் இருக்கும் எடுப்பது சிரமம்.இப்படி மேலே போடும் பொழுது கலந்து எடுக்க வசதியாக இருக்கும்.

சுவையான நெல்லை மட்டன் தக்கடி ரெடி.

சூடாக ப்லேட்டில் கொழுகட்டை மட்டன் கிரேவியுடன் பரிமாறவும்.

THANKS TO
--ஆசியா உமர்.


குறிப்பு : தலைக்கறியில் தக்கடி போட்டால் சூப்பராக இருக்கும். நாங்க இதற்கு எங்க ஊர் கறி மசாலாவை உபயோகிப்போம்.மசாலா குறிப்பில் உள்ளது.

SOURCE
http://asiyaomar.blogspot.in/2010/06/blog-post_24.html