Showing posts with label மாயன் இன மக்கள். Show all posts
Showing posts with label மாயன் இன மக்கள். Show all posts

Tuesday, January 12, 2016

ஓரியன் விண்தொகுப்பும் மாயன்களும் .

ஓரியன் விண்தொகுப்பும் மாயன்களும் .


ரேடியோ மற்றும் ரேடார் வானியல் குறித்தெல்லாம் கி. பி. 1945 க்குப் பிறகுதான் விஞ்ஞான உலகம் தெரிந்துகொண்டது. அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், மாயர்கள் எப்படிப் பால்வழி விண்கூட்டம் பற்றித் தெரிந்து வைத்திருந்தார்கள்?  விடை தெரியாத ஆச்சரியம் இது!

ஓரியன் விண்தொகுப்பு (Orion Constellation) என்பது மிகப் பிரகாசமான நட்சத்திர மண்டலங்களுள் ஒன்று. தமிழில் ஓரியனைப் பிரஜாபதி என்று சொல்கிறார்கள். இது வேடன் வடிவம் கொண்டதாக வர்ணிக்கப்படுகிறது. அவன் கையில்  வாள்போல் ஒரு பகுதி தெரியும். இந்தப் பகுதியின் பெயர் ஓரியன் நெபுலா.


பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான், ஓரியன் நெபுலா வானியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் புகைப்படமே 1880ல் தான் முதன் முதலாக எடுக்கப்பட்டது.

ஆனால், மாய நாகரிகப் பழங்கதைகளில் ஓரியன் விண்தொகுப்பு, நெபுலா ஆகியவற்றின் வர்ணனைகள் காணப்படுகின்றன. இவை புகைப்படம் காட்டும் தோற்றங்களோடு ஒத்தும் போகின்றன. விடை இல்லாத இன்னொரு ஆச்சரியம்!


மாயர்கள் நாகரிக வரளாற்றின் மைல்கற்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் நிகழ்ச்சிகள் இவைதாம்:

*    கி. மு. 11000
மாயப் பகுதிகளில் மக்கள் முதன் முதலாகக் குடியேறத் தொடங்கினார்கள். இவர்கள் அக்கம் பக்க நாடுகளிலிருந்து வந்திருக்கலாம். இவர்கள் தங்கள் உணவுகளான காய்கறிகள், பழங்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை வேட்டையாடி, அவற்றைச் சமைக்காமல், பச்சையாகச் சாப்பிட்டு  வாழ்ந்தார்கள்.
*    கி. மு. 2000
மாய நாகரிகம் தொடங்குகிறது. மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல், விவசாயத்தில் ஈடுபடத் தொடங்குகிறார்கள்.
*    கி. மு. 700
மாயர்களின் எழுத்துக்கள் தொடங்குகின்றன. இவை சித்திர எழுத்து வகையைச் சேர்ந்தவை. அதாவது வாசிக்கும் முறையில் இல்லாமல், பட அமைப்புடைய எழுதுதல் முறை.
*    கி. மு. 400
கி. மு. 400- ன் கல்வெட்டுகளில் மாயர்கள் கண்டுபிடித்த நாள்காட்டிகள் பற்றிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்தக் காலகட்டத்திலோ அல்லது இதற்கு முன்பாகவோ, காலண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம்.
* கி. மு. 300
மன்னர்கள், பிரபுக்கள், பூசாரிகள் என ஆட்சிமுறை சீராக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதவிகளுக்குமான பொறுப்புகள், அதிகாரங்கள் ஆகியவை வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
*    கி. மு. 100
டேயோட்டிவாக்கான் (Teotihuacan) என்ற நகரம் மாயர்களால் உருவாக்கப்படுகிறது.
இந்த நகரம் இன்றும் இருக்கிறது. கலை, மதம், வாணிபம் ஆகிய செயல்பாடுகள் இங்கே செழித்து வளர்ந்தன. பிரமிட்டுகள், கோயில்கள், அரண்மனைகள், பொதுச் சதுக்கங்கள் பிரம்மாண்டமாக இருந்த ஊர் இது.
*    கி. மு. 50
ஸெர்ரோஸ் (Cerros) என்ற நகரம் உருவாகிறது. கோயில்கள், மண்டபங்கள் ஆகியவை நிறைந்த நகரம் இது.
* கி. பி. 100
பல உள் நாட்டுக் கலவரங்கள் தொடங்குகின்றன. மாய நாகரிகம் சரிவுப் பாதையில் அடியெடுத்து வைக்கிறது.
*    கி. பி. 900
மேற்குப் பகுதிகளில் நகரங்கள் மெள்ள மெள்ள மறைகின்றன. அழிவின் ஆரம்பம்!
* கி. பி. 1511
கோன்ஸலோ குரேரோ (Gonzalo Guerrero) என்ற ஸ்பெயின் நாட்டுக்காரரின் கப்பல் புயலில் சிக்கி மாயர் பகுதியில் கரை தட்டுகிறது. அவர் அங்கு வாழும் உள்ளூர்ப் பெண்ணைத்  திருமணம் செய்துகொள்கிறார்.
*    கி. பி. 1517
ஸ்பெயின் நாடு மாயர்கள்மேல் போர் தொடுக்கிறது. 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மாயர்கள் ஸ்பெயின் வீரர்களால் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல,  மாயர்களின் கலாசாரமும் மறைகிறது.
கி. மு. 11000 தொடங்கி, கி. பி. 1517- இல் மறைந்த இந்த வரலாற்றில்
கி. மு. 2600 – கி. பி. 900 வரையான காலம் மாயன் நாகரிக காலம் என்று வரையறைக்கப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் இந்தக் காலகட்டங்களை எப்படி முடிவு செய்தார்கள்? அவர்கள் முடிவுகள் எடுக்க எந்த ஆதாரங்கள் உதவின? எங்கிருந்து இவற்றைக் கண்டு பிடித்தார்கள்?
மாய நாகரிகத்தின் பெருமைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் கண்டறியப்பட்டன.   கண்டுபிடித்த பெருமை ஃப்ரெடெரிக் காதெர்வுட் (Frederick Catherwood), ஜான் லாய்ட் ஸ்டீஃபென்ஸ் (John Lloyd Stephens) என்ற இருவருக்குமே உரியது.
காதெர்வுட்  இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஓவியர், கட்டடக் கலைஞர். பழங்கால  நாகரிகங்களை ஓவியங்களாக வரைவதில் அவருக்கு ஆர்வம் அதிகம். எகிப்து, கிரீஸ், துருக்கி ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்து தான் பார்த்த காட்சிகளை, சிதிலமான கட்டடங்களை, பிரமிட்களை வரைந்து தள்ளினார். இவை புத்தகங்களாக வெளியாகின.
ஸ்டீஃபென்ஸ் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். தொழிலால் வழக்கறிஞர். அவருக்கு உடல் நலத்தில் பிரச்னை ஏற்பட்டது. அவருடைய வேலைப் பளுவைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் ஆலோசனை சொன்னார்கள்.
“ஒய்வு வேண்டாம், உலகின் பல பாகங்களுக்கு சுற்றுப் பயணம் போய் வரலாம்” என அவர் முடிவெடுத்தார். இத்தாலி, கிரேக்கம், துருக்கி, ரஷ்யா, போலந்து, பிரான்ஸ் ஆகிய பல நாடுகளுக்கு இந்த உலகம் சுற்றும் வாலிபர் போனார். தன் அனுபவங்களைப் புத்தகமாக எழுதினார்.
இங்கிலாந்தில் ஸ்டீஃபென்ஸ், காதெர்வுட் இருவரும் தற்செயலாகச் சந்தித்தார்கள். தம் சுற்றுப் பயண அனுபவங்களை இருவரும் பகிர்ந்து கொண்டார்கள். எழுத்துத் திறமை கொண்ட ஸ்டீஃபென்ஸும், ஓவியக் கலைஞர் காதெர்வுட்டும் தகுந்த வாய்ப்பு வரும்போது தங்கள் திறமைகளை ஒருங்கிணைத்து பணியாற்ற முடிவு செய்தார்கள்.
அந்த வாய்ப்பு விரைவில் வந்தது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஸ்டீஃபென்ஸை மத்திய அமெரிக்க நாடுகளுக்குத் தூதுவராக நியமித்தார். ஸ்டீஃபென்ஸ் அந்த நாட்டின் பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்தார். மாய நாகரிகம் பற்றி அப்போது உலகம் அதிகமாக அறிந்திருக்கவில்லை. அப்படி ஒரு நாகரிகம் இருந்தது என்று தெரியுமே தவிர ஆதாரங்களோ, சிதிலமான கட்டங்களோ யார் கண்களிலும் படவில்லை. ஆதாரங்களைத் தேடி அலைந்தார் ஸ்டீஃபென்ஸ்.
மாயன்கள் பல புத்தகங்கள் எழுதினார்கள் என்று அவர் கண்டுபிடித்தார். ஆழமான மத நம்பிக்கை கொண்ட மாயன்களின் புத்தகங்கள் அவர்களுடைய நூற்றுக்கணக்கான கடவுள்களை மையமாக வைத்து எழுதப்பட்டவை என்பது சில குறிப்புகளிலிருந்து அவருக்குத் தெரிந்தது. அந்தப் புத்தகங்கள் கிடைத்தால் தன் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று உணர்ந்தார்.
முயற்சியைத் தொடர்ந்த அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் மாயப் பகுதிகளை ஸ்பெயின் நாடு ஆக்கிரமித்தது. அவர்களுடைய கிறிஸ்தவ மத நம்பிக்கைகளோடு மாய மதக் கதைகள் ஒத்துப் போகவில்லை. சில ஸ்பெயின் மத வெறியர்கள் மாயர்களின் புத்தகங்களைத் தீயிட்டு எரித்தார்கள். எரிந்தவை புத்தகங்கள் மட்டுமில்லை, அளவிட முடியாத மதிப்புக் கொண்ட நாகரிக வரலாற்று ஆதாரங்களும்தான்.
அடுக்கடுக்காகத் தோல்விகளை சந்தித்தபோதும், மனம் தளராமல் ஸ்டீஃபென்ஸ் ஆதாரங்களைத் தேடினார். இந்த உழைப்பும் நம்பிக்கையும் பலன் கொடுத்தன.  போப்பல் வூ (Popol Vuh) என்ற பழங்காலக் கதைகளின் தொகுப்புப் புத்தகம் ஸ்டீஃபென்ஸ் கையில் கிடைத்தது.
மாய நாகரிகத்தின் மாஜிக் அவரை மயக்கத் தொடங்கியது. தான் போகும் இடங்களில் எல்லாம் பழங்கால மாய நாகரிக அடையாளைங்களை அவர் தேடத் தொடங்கினார்.
பழைய நாகரிகங்கள் பற்றிய விவரங்கள் கண்டுபிடிக்க அகழ்வு ஆராய்ச்சி பயன்படுகிறது. எந்த இடங்களைத் தோண்டினால்,. பழங்கால நாகரிகம் பற்றிய “புதையல்கள்” கிடைக்கலாம் என்று முதலில் அனுமானம் செய்யவேண்டும். அங்கே ஆழமாக, ஆழமாகத் தோண்ட வேண்டும்.
இது லாட்டரி மாதிரி. பல இடங்களில் தேட வேண்டும், தேடிக் கொண்டேயிருக்க வேண்டும். பழங்காலச் சான்றுகள் கிடைத்தால் உங்கள் முயற்சி வெற்றி. பணம், புகழ், தேடி வரும். சான்றுகள் கிடைக்காவிட்டால் உங்கள் வாழ்க்கையும் செலவிடும் பணமும்   வீண்.
எங்கே “புதையல்” கிடைக்கும் என்று அனுமானிப்பதுதான் முயற்சியின் முதல் படி.
எப்படி அனுமானிப்பார்கள்? புத்தகங்கள். ஓவியங்கள் ஆகியவை வழி காட்டும். இவற்றைவிட முக்கியமானவை சிதிலமான கட்டடங்கள், ஓவியங்கள் சிற்பங்கள் ஆகியவை.
இந்தச் சிதிலங்கள் பெரும்பாலான நாகரிகங்களில் தரைக்கு மேல் இருக்கும். அல்லது  சிதிலங்களின் அடையாளங்கள் தரைக்கு மேல் தெரியும். மாய நாகரிகத்தின் அகழ்வாராய்ச்சியில் புதிய பிரச்னை வந்தது. மாய நாகரிகம் நிலவிய இடம் மழை அதிகமாகப் பெய்யும் இடம், அடர்த்தியான காடுகள் நிறைந்த இடம். ஸ்பெயின் நாட்டவரின் ஆதிக்கத்தால், மாயன்கள் தங்கள் உறைவிடங்களை விட்டுப் புதிய பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த பழைய இடங்களில்தானே நாகரிக அடையாளங்கள் கிடைக்கும்? ஆட்கள் வாழாத அந்த இடங்களை, கட்டடங்களை மரங்கள், காடுகள் மூடின.
மரங்கள் மூடிய இந்தப் புதையல் உலகத்துக்குத் தெரியாமலே போயிருக்கும்.  காடுகளுக்குள் போகும்போது, சில அடையாளங்களைப் பார்க்கும்போது, இங்கே ஒரு வரலாறு ஒளிந்திருக்கிறது என்று ஸ்டீஃபென்ஸூக்குப் பொறி தட்டியது. தன் கையில் கிடைத்த புத்தகங்களை எல்லாம் படித்தார். பொறி ஆர்வ நெருப்பானது.
ஸ்டீஃபென்ஸின் ஆரம்ப ஆராய்ச்சிகள் நாகரிகப் புதையல் கிடக்கும் சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாக ஆரூடம் கூறின. தானும் ஓவியர் காதெர்வுட்டும் சேர்ந்து பணியாற்ற இது நல்ல வாய்ப்பு என்று ஸ்டீஃபென்ஸ் நினைத்தார். காதெர்வுட்டை இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு, தான் வாழும் மத்திய அமெரிக்கப் பகுதிக்கு வரச் சொன்னார்.
1839 – இல் இருவரும் சேர்ந்து தங்கள் அகழ்வாராய்ச்சிகளைத் தொடங்கினார்கள். தோண்டத் தோண்ட வியப்பான கட்டடங்கள், கோயில்கள், கல்லறைகள், பிரமிட்கள், ஓவியங்கள், சிற்பங்கள், புத்தகங்கள் ஆகியவை கிடைத்தன.
இருவர் திறமைக்கும் இவை அபாரத் தீனி போட்டன. 1841 ல் தங்கள் கண்டுபிடிப்புகளைப் புத்தகமாக இவர்கள் வெளியிட்டார்கள்.
“கணிதம், வானியல் போன்ற துறைகளில் மாயர்கள் இத்தனை சாதித்திருக்கிறார்களா?” என்று உலகம் வியந்தது.
இந்த வியப்பு உலகின் இன்னும் பல ஆராய்ச்சியாளர்களைத் தூண்டியது. இவர்கள் மத்திய அமெரிக்காவில் பல இடங்களைத் தோண்டினார்கள், விலை மதிப்பற்ற ஆதாரங்களைக்கண்டு பிடித்தார்கள்.
இவர்களுள் மிக முக்கியமானவர்கள் எரிக் தாம்ஸன் (Eric Thompson) ஸில்வானஸ் மோர்லி (Sylvanus Morley) என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். மாய விவசாயம், ஆட்சி முறை போன்ற துறைகள் பற்றிய இவர்களின் கண்டுபிடிப்புகள் மிக முக்கியமானவை.
மாயன் நாகரிகம் 2000 ஆண்டுகள் செழித்து ஓங்கியது. கி. பி. 1517 வரை, அதாவது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால் வரை இருந்த நாகரிகம். இன்றும் சுமார் அறுபது லட்சம் மாயன்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெரு நாட்டில் வசிக்கிறார்கள். மற்றவர்கள் மெக்ஸிகொ, கவுதமாலா, பெலிஸே ஆகிய நாடுகளிலும் வசிக்கிறார்கள். இந்த “ஒரிஜினல்” மாயர்கள் அனைவரும் பண்டைய விவசாய, கலை நுணுக்க வேலைப்பாடுகள் ஆகியவற்றை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள்.
இத்தனை சிறப்புகள் கொண்ட மாய நாகரிகம் ஏன் மறைந்தது?
ஆராய்ச்சியாளர்கள் பல காரணங்கள் சொல்கிறார்கள்.
மாயன்கள் தங்கள் இயற்கைச் சூழ்நிலையைக் காப்பாற்றுவதில் அதிக கவனம் காட்டவில்லை. காடுகள் நிறைந்த தங்கள் பகுதிகளின் மரங்களை வெட்டிச் சாய்த்தார்கள். மரங்கள் விழுந்தன, மழை குறைந்தது. பஞ்சம், பசி, பட்டினி, நோய்கள் பெருகின. மாய சமுதாயம் இவற்றுக்கு பலியானது.
இன்னொரு முக்கிய காரணம் ஸ்பெயின் நாடு. பதினைந்தாம் நூற்றாண்டில் படையெடுத்த ஸ்பெயின் சுமார் 90% மாயன் மக்களைக் கொன்று குவித்தது. மீதம் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பெரு போன்ற நாடுகளுக்கு ஓடிப் போனார்கள்.
இன்று ஏகதேசம் மறைந்து போனாலும், தங்கள் பொற்காலத்தில் மாயர்கள் செய்த சாதனைகள், தொட்ட சிகரங்கள் மிக மிக முக்கியமானவை. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்,

Tuesday, December 18, 2012

'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-7.

'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-7.




இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...






மாயன்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, பந்து விளையாட்டு ஒன்றை விளையாடி இருக்கின்றனர். அதனுடன் அவர்கள் உலக அழிவையும் தொடர்புபடுத்தியிருக்கின்றனர் என்று கடந்த பதிவில் சொல்லியிருந்தேன். இந்தப் பந்து விளையாட்டு மாயன்களின் மிக முக்கியமான ஒரு சடங்காக அப்போது இருந்திருக்கின்றது என்பதை அறிந்த ஆராய்ச்சியாளர்கள், அதை ஆராயப்போன சமயத்தில் ஒரு வித்தியாசமான அனுபவம் ஒன்று அவர்களுக்குக் கிடைத்தது. அதாவது, மாயன்களின் பிரதேசங்களில் மட்டும்தான் இந்த விளையாட்டு, விளையாடப்பட்டது என்று நினைத்து ஆராயச் சென்றவர்களுக்கு, அதையும் தாண்டி மத்திய அமெரிக்கா, தென்னமெரிக்கா எனப் பல நாடுகளில் இந்தப் பந்து விளையாட்டு விளையாடப்பட்டு வந்திருக்கிறது தெரிய வந்தது. மெக்சிக்கோ, குவாத்தமாலா, பெலிசே,ஹொண்டுராஸ், எல் சல்வடோர் மட்டுமில்லாமல், நிகுரகுவா, அரிஸோனா ஆகிய நாடுகளிலும் இது விளையாடப்பட்டு வந்திருக்கிறது. அதிகம் ஏன் கரீபியன் தீவுகளிலும் (Caribbean islands), கியூபாவிலும் கூட இந்தப் பந்து விளையாட்டு, விளையாடப் பட்டிருக்கிறது. அப்படி விளையாடியதற்கான மைதானங்கள் அந்த நாடுகளில் பரவலாகக் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன.

 அதைத் தொடர்ந்து, மேலும் ஆராய்ந்தபோது ஆச்சரியங்களும், மர்மங்களும் மாயன்கள் பிரதேசங்களில் மட்டுமல்லாமல், தென்னமெரிக்கப் பிரதேசங்கள் அனைத்திலும் பரவியிருந்தது தெரிய வந்தது. ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இடங்கள், ஒரு பொக்கிசப் புதையலாகவே அதற்கு அப்புறம் அமைந்து விட்டது என்று சொல்லும் அளவிற்கு இருந்தன அந்த நாடுகள். அந்த நாடுகளில் உள்ள மர்மங்கள் எவை என்று நான் இங்கே ஒவ்வொன்றாக உங்களுக்குச் சொல்லப்போனால், இத்தொடர் 2012 டிசம்பர் மாதத்திலும் முடிந்து விடாமல் போய்விடும் ஆபத்து உண்டு. எனவே எனக்குப் பிடித்த ஒன்றை மட்டும் உங்களுக்காகத் தருகிறேன். இதற்கும், இப்பொழுது நான் எழுதும் தொடருக்கும் சம்பந்தம் இல்லாவிடினும் கூட, தகவல் அடிப்படையில் இதை உங்களுக்குத் தர விரும்புகிறேன்.

 மாயன்கள், பல இனங்களாக வாழ்ந்திருந்தாலும், அவர்களின் 'இன்கா' இனம்தெற்கே பரவலாகப் பிரிந்தே வாழ்ந்திருக்கிறது. நாம் தென்னமெரிக்கா என்னும் பெரிய நிலத்தை, ஏனோ சரியாகக் கவனத்தில் எடுப்பதில்லை. அமெரிக்கா என்றாலே, எமக்குக் கண்ணுக்குத் தெரிவது 'யுஎஸ்ஏ' (U.S.A) என்றழைக்கப்படும் ஐக்கிய அமெரிக்க நாடுகளும், கனடாவும் மட்டுமே! இந்த இரு நாடுகளுமேஅமெரிக்கா என்னும் பதத்தில் எமக்குள் அடங்கி விடுகின்றன. ஆனால் இவைதாண்டி அதிக நாடுகளைக் கொண்டது தென்னமெரிக்கா.









இப்போ நான் சொல்லப் போவது, சாதாரண வரலாற்றுச் சம்பவம் அல்ல. பெரும் மர்மத்தை தன்னுள்ளடக்கிய சம்பவம் அது. மாயன்களின் பிரதேசத்துக்குச் சற்றுக் கீழே வாழ்ந்த, 'நாஸ்கா' என்னும் இனத்தவர் பற்றி முன்னரே உங்களுக்குச் சொல்லியிருந்தேன். அவர்களும் தென்னமெரிக்காவைச் சேர்ந்த பெரு (Peru) நாட்டில் வாழ்ந்தவர்கள்தான். அந்தப் பெரு நாட்டுக்குக் கீழே இருக்கும் நாடுதான் 'சிலி' (Chile). 'சிலி' நாடு, நீண்டதொரு நேர் கோடு போல, மேலிருந்து கீழ்நோக்கிப் பரவியிருக்கும் ஒரு நாடு. இந்த நாட்டுக்குச் சொந்தமாக, மேற்குப் பகுதிக் கடலில் அமைந்திருக்கும் ஒரு சிறிய தீவின் பெயர் 'ஈஸ்டர் தீவு' (Easter Island) என்பதாகும். ஈஸ்டர் தீவு, சிலி நாட்டுக்குச் சொந்தமான தீவுதான் என்றாலும், கடல் நடுவே சிலியிலிருந்து வெகு தூரத்தில் மிகத் தனியாக இருக்கிறது. முக்கோண வடிவத்தில் இருக்கும்அந்தத் தீவில், உலகத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் அதிசயம் ஒன்றுஇருக்கிறது. அது என்ன என்று இப்போது பார்க்கலாம்.
'ஈஸ்டர் தீவு' (Easter Island) பற்றி அறிந்துகொள்ள <இங்கே> கிளிக் செய்யுகள்.   

'ஈஸ்டர் தீவு' (Easter Island)





 இந்தச் சிலைகள் யாருக்கு, என்ன செய்திகளைச் சொல்கின்றன? இதை மனிதர்கள் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இவ்வளவு சிரமப்பட்டு இவற்றைச் செய்ய வேண்டிய காரணம் என்ன? அவசியம் என்ன? மொத்தத்தில் சிந்தித்துப் பார்த்தால், 2012 இல் உலகம் அழிகிறதோ இல்லையோ, எமக்குப் பைத்தியம் மட்டும் பிடிக்காமல் இருந்தால் போதும் என்னும் அளவிற்கு இந்தத் தீவின் மர்மங்கள் இருக்கின்றன.



 இது போலவே இன்னுமொரு ஆச்சரியமான இடம் ஒன்றும் தென்னமெரிக்காவில் உண்டு. அந்த இடத்தை ஏற்கனவே தமிழ்நாட்டில் எல்லோரும் அறிந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். 'மச்சு பிச்சு' (Machu Picchu) என்றழைக்கப்படும் மலை நகரம் அது. மிக ஆச்சரியமான நகரம். இந்த மச்சு பிச்சுவை நமக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? 'சூப்பர் ஸ்டார்' ரஜனிகாந்தும், ஐஸ்வர்யாராயும் ‘எந்திரன்’ திரைப் படத்தில் வரும் ஒரு பாடலை, இந்த இடத்தில்தான் பாடுவார்கள். இந்த மச்சு பிச்சுவும் தென்னமெரிக்காவின் ஆச்சரியங்களில் ஒன்று. ஆனால், இவை பற்றியெல்லாம் விளக்கமாக சொல்லிக் கொண்டு போவதற்கு எமக்குக் காலம் போதாது. நம்மை மாயாவும், டிசம்பர் மாதமும் வருந்தி அழைப்பதால் இவற்றை இங்கேயே விட்டுவிட்டு மாயாவின் பந்து விளையாட்டுக்குப் போகலாம்.

 பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே மாயன்கள் பந்து விளையாடியிருக்கிறார்கள். அதுவும் நாம் இப்போ விளையாடும் கால்பந்தாட்டத்தில் பாவனைக்கு வைத்திருக்கும் பந்து போலப் பெரிய பந்து. இந்தப் பந்தை வைத்து விளையாடும் விளையாட்டுத்தான், உலக அழிவை அடையாளப் படுத்துகிறது என்று சொல்லியிருந்தேன். "பந்து விளையாட்டுக்கும் உலகம் அழிவதற்கும் என்ன சம்பந்தம்?" என்றும் உங்களுக்கு கேள்வி இப்பொழுது எழலாம். ஆனால் மாயன்களைப் பொருத்தவரை இவை இரண்டுக்குமே நிறையச் சம்பந்தம் உண்டு. மாயன்கள் அவை இரண்டையுமே ஒன்றாகக் கலந்து தங்கள் உலக அழிவு பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

 இன்றைய உலகில் பல விளையாட்டுகளில் பந்து பயன்படுத்தப்படுகிறது. மிகப் பிரபலமாக இருக்கும் விளையாட்டுகள் அனைத்துமே, பந்து விளையாட்டுகளாகத்தான் இருக்கின்றன. குறிப்பாக பாஸ்கெட்பால், பேஸ்பால்,உதைபந்தாட்டம், கிரிக்கெட், டென்னிஸ் என அனைத்துமே பந்துகளால் விளையாடப்படும் விளையாட்டுகள்தான். ஆனால், உலகிலேயே மனித இனவரலாற்றிலேயே, விளையாடப்பட்ட முதல் பந்து விளையாட்டு என்றால், அதுமாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டுத்தான்.



 கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப் பந்து விளையாட்டை, மாயன்கள்விளையாடியதாகப் பதிவுகள் உண்டு. அதுவும், அவர்கள் விளையாடிய பந்து இரப்பரினால் (Rubber) செய்யப்பட்டிருந்தது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.மாயன்கள் அந்தக் காலங்களிலேயே ரப்பர் மரங்களில் பாலெடுத்து, பதப்படுத்தி,அதன் மூலமாக உருண்டையாக பந்தைத் தயார் செய்திருக்கின்றனர்.மாயன்கள் வாழ்ந்த இடங்களில் நூற்றுக்கணக்கான ரப்பர் பந்துகளைஅகழ்வாராச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இப்போதும் அவை விளையாடக் கூடிய தரத்தில் இருக்கின்றன. மாயன்களின் பந்து விளையாட்டு,இப்போது விளையாடப்படும் நவீன விளையாட்டுகள் போலச் சட்டதிட்டங்களும், விதிகளும் உள்ள ஒரு விளையாட்டாகவே விளையாடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அந்தப் பந்து விளையாட்டு,விளையாடப்படும் மைதானத்தின் அமைப்பும் எம்மை ஆச்சரியப் படுத்துகிறது.மிக நேர்த்தியாகவும், அளவு கணக்குகளோடும் அமைக்கப்பட்டிருந்தன விளையாட்டு மைதானங்கள். ஆங்கிலக் காப்பிட்டல் 'I' என்னும் எழுத்தைப்போல அமைந்த மைதானம், அண்ணளவாக 30 மீற்றர் நீளமும், இரண்டு பக்கம்நீளமான சுவர்களையும் கொண்டது.





மாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டு, தற்போது விளையாடப்படும் உதை பந்தாட்டத்தையும் (Soccer), பாஸ்கெட் பாலையும் (Basket Ball) கலந்தது போல ஒரு விளையாட்டு ஆகும் அல்லது இப்படியும் சொல்லலாம். நாம் விளையாடும் உதை பந்தாட்டமும், பாஸ்கெட் பாலும் மாயன்களிடமிருந்து நாம் பெற்றதாக இருக்கலாம்.







 பந்து விளையாடும் மைதானத்தின் நடுவே, இரண்டு பக்கச் சுவர்களிலும் இரண்டு வளையங்கள் வடிவிலான அமைப்பு உண்டு. விளையாட்டில் பாவிக்கப்படுவது, 25 செ.மீ .அளவுள்ள இரப்பர் பந்து. இந்தப் பந்தைத் தமக்கென இருக்கும் பக்கத்தில் அமைந்திருக்கும் வளையத்தினூடாக அடிப்பதே அந்தப்பந்து விளையாட்டின் வெற்றியைத் தீர்மானிக்கும் விதியாகும்.





 தலா ஒவ்வொரு பக்கமும் ஐந்து விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் பங்கேற்பார்கள். அவர்கள் பந்தை வளையத்தினூடாக அடிக்கும்போதோ அல்லது விளையாட்டின்போதோ, கால்களையோ கைகளையோ தலையையோ பந்தில் படும்படியாகப் பயன்படுத்த முடியாது. "அப்படி என்றால் எப்படிப் பந்தை அடிப்பது?" என்றுதானே கேட்கிறீர்கள்.

இடுப்பினாலும், முழங்கால்களினாலும் மட்டுமே பந்தை அடிக்க முடியும். இது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்குப் புரிகிறதா? ஆனாலும் மாயன்கள் அப்படித்தான் அந்தப் பந்து விளையாட்டை விளையாடி இருக்கின்றனர். தற்காலப் பந்து விளையாட்டின்போது பாவிக்கும் தலைக் கவசத்தைப் போல,விதவிதமான தலைக் கவசங்களையும் இந்த விளையாட்டின் போது,மாயன்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.





 மாயன்கள் விளையாடிய பந்து விளையாட்டை, 'பிட்ஷி' (Pitzi) என்று அழைக்கின்றனர். இந்த விளையாட்டின் போது, இரு பக்கமும் விளையாடும் ஐந்து விளையாட்டு வீரர்களுக்கு ஒருவர் அணியின் தலைவராக இருக்கின்றார். இப்போதுள்ள 'கப்டன்' (Captain) போல. எந்த அணி தோற்கின்றதோ, அந்தஅணியின் தலைவர் பூசை, புனஸ்காரங்களின் பின்னர் அலங்கரிக்கப்பட்டு மகிழ்ச்சியுடனும், ஆரவாரத்துடனும் தலை வெட்டப்படுகிறார்.

 "என்னடா இது? விளையாட்டிலும் கொலையா? விளையாட்டு என்பதே பொழுது போக்குவதற்கானதுதானே! இப்படி விளையாடுவதும் ஒரு விளையாட்டா?" என்று நினைப்பீர்கள். உண்மைதான். நீங்கள் நினைப்பது சரியானதுதான். ஆனால் மாயன்களுக்கு இந்தப் பந்து விளையாட்டு, ஒரு பொழுதுபோக்கான விளையாட்டு என்பதோடு நின்றுவிடவில்லை. அதையும் தாண்டிப் புனிதமானது இது. அந்தப் பந்து விளையாட்டுமொத்தமுமே ஒரு தத்துவத்தை வெளிப்படுத்துகிறது என்பதே அவர்கள் நிலைப்பாடு. "அட…! போங்கப்பா….! விளையாட்டில் தத்துவமா? தத்துவத்துடன் கொலையா….?" என்று நீங்கள் சலித்துக் கொள்லலாம். ஆனால் அந்தத் தத்துவமே, எங்கள் உலகம் அழியும் கோட்பாட்டை உள்ளடக்கியது என்று சொன்னால் வாயடைத்துத்தான் போவீர்கள். இதை நான் உங்களுக்குப் புரிய வைப்பதற்கு, மாயன்களின் வேதப் புத்தகமான, 'பொபோல் வூ' (Popol Vuh) சொல்லும் கதையைச் சொல்ல வேண்டும். 'பொபோல் வூ' என்னும் நூல் சொல்லும் கதையில் பூமி, சூரியன், சூரியக்குடும்பம், பால்வெளி மண்டலம் என்று அனைத்தைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது, அத்தோடு பால்வெளி மண்டலத்தில் இருக்கும் கருமையானஇடம் (Dark Rift) பற்றியும் சொல்லியிருக்கிறது. அந்தக் கருமை இடத்துக்கு அருகே சூரியன் சென்றால், சூரியனும், உலகமும் அழிந்து விடும் என்றும் சொல்லியிருக்கிறது. தாங்கள் விளையாடிய பந்து விளையாட்டுடன் இவற்றை எல்லாம் சம்பந்தப்படுத்தி இருந்தார்கள் மாயன்கள்.



அந்தப் பொபோல் வூ அப்படி என்ன கதை சொன்னது? அது பற்றிப்பார்ப்போமா......? இப்போது பொபோல் வூ சொல்லும் கதைக்கு வரலாம்.......!

 மாயன்களைப் பொறுத்தவரை பால்வெளி மண்டலத்தின் (Milky Way) வாசலாகஅமைந்த ஒரு இடம் உண்டு. அது ஒரு மிகப் பெரிய கருமையான இடம். குழிபோன்றது அது. அந்தக் கருங் குழியில்தான் மரணத்தின் கடவுள் (God of Death)இருக்கின்றார். மரணத்தின் கடவுள் வாழும் இடத்தின் பெயர் 'ஷிபால்பா' (Xibalba). ஷிபால்பாவைப் 'பாதாள உலகம்' (Under World) என்றும், 'பயங்கரத்தின் இருப்பிடம்' (Place of Fear) என்றும் மாயன்கள் சொல்கின்றனர்.




அது போல, மாயன்களுக்கு மூத்தவராக, 'ஆதி தந்தை' (First Father) என்னும் ஒருவரும் இருந்தார். அவருக்கு ஒரு இரட்டைச் சகோதரரும் இருந்தார். இவர்கள் இருவரும் மிகத் திறமையான பந்து விளையாட்டுக்காரர்கள். ஒருதரம் இவர்கள் இருவரும் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அந்தச் சத்தம் ஷிபால்பாவில் வாழும் மரணத்தின் கடவுளுக்குக் கேட்டது. அந்தச் சத்தம் அவரது அமைதியைக் குலைத்தது. எனவே ஆதி தந்தையையும்,அவரது இரட்டைச் சகோதரனையும் போட்டிக்குப் பந்து விளையாட ஷிபால்பாவுக்கு அழைத்தார் மரணத்தின் கடவுள். பந்து விளையாட்டுக்கு அழைக்கப்பட்டதால், அந்த அழைப்பை அவர்களால் மறுக்க முடியவில்லை.அதனால், அவர்கள் பந்து விளையாடுவதற்குப் பால்வெளி மண்டலத்தின் வாசலில் அமைந்திருக்கும் கரிய இடத்துக்குச் சென்றனர். ஆனால் அங்குஅவர்கள், பந்து விளையாடப் படாமலே ஏமாற்றப்பட்டு, தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.




இந்த ஆதி தந்தைக்கு, இரண்டு மகன்கள் இருந்தனர். அவர்களும் இரட்டையர்கள்தான். இவர்கள் இருவரும் தந்தையையும், தந்தையின் சகோதரரையும் போல பந்து விளையாட்டில் திறமைசாலிகளாக இருந்தனர். இவர்களின் இருவரின் பெயரும் 'ஹூன் அப்பு' (Hun Ahpu), 'இக்ஸ்பலங்கா' (Xbalanque) ஆகும். "இந்தப் பெயர்களில் என்ன இருக்கிறது?" என்றுதானே நினைக்கிறீர்கள். அதில்தான் எல்லா விசயங்களுமே அடங்கியிருக்கின்றன. அதற்குப் பின்னர் வரலாம்.........! ஆதி தந்தையின் மகன்கள் இருவரும் பந்துவிளையாட்டில் சிறந்து விளங்கியதால், அவர்கள் இருவரும் மரணத்தின் கடவுளால், பந்து விளையாட்டு விளையாட அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் தந்தை இப்படியே அழைக்கப்பட்டுப் பின்னர் சதியினால் கொலை செய்யப்பட்டதை அறிந்திருந்தார்கள் இரட்டையர்கள். அதனால் சில தந்திரங்களைக் கையாண்டு, பந்து விளையாடியே தீர வேண்டிய நிர்ப்பந்தத்தை மரணத்தின் கடவுளுக்கு ஏற்படுத்தினர்.

 அதன்படி விளையாடப்பட்ட பந்து விளையாட்டில் இரட்டையர்கள், மரணத்தின் கடவுளை வென்றனர். அதனால் அவர்கள் கொல்லப்படாமல் தடுக்கப்பட்டனர். ஆனாலும், பல வருடங்களின் பின்னர் மீண்டும் அவர்கள் பந்துவிளையாட்டுக்கு அழைக்கப்படுவார்கள். 'பொபொல் வூ' சொல்லும் கதை இதுதான். இவற்றைக் கதையாகப் பார்க்காமல் ஆராய்ந்து பார்த்ததில், இதில் அடங்கியிருக்கும் சம்பவங்கள் எம்மை ஆச்சரியப் படுத்துகின்றன. இனி நான்சொல்லப் போவதைச் சற்று நிதானமாகக் கவனியுங்கள்.

 கதையில் வரும் பெயர்களின் அர்த்தம் என்ன தெரியுமா……? 'ஹூன்' (Hun)என்றால் மாயன் மொழியில் 'முதல்' என்று அர்த்தம். 'அப்பு' (Ahpu) என்றால் 'சூரியன்'  என்று அர்த்தம். அதாவது ஹூன் அப்பு என்றால், முதல் சூரியன் என்று அர்த்தம். அதன் இரட்டைச் சகோதரர்தான் 'இக்ஸ்பலங்கா' எனப்படும் சந்திரன். கதையின்படி, ஒவ்வொரு 26000 வருசங்களும் இவர்கள் பந்து விளையாட பால்வெளி மண்டலத்தின் வாசலில் இருக்கும் ஒரு மிகப் பெரிய கருமையான இடத்துக்கு அழைக்கப்படுவார்கள். விளையாட்டில் சூரியன் வென்றால், சூரியனும், பூமியும் பிழைத்துக் கொள்ளும். சூரியன் தோற்றால் இரண்டுக்குமே அழிவுதான். நமது நவீன விஞ்ஞானத்தின் மூலம் இந்தக் கறுப்பு இடத்தை நாம்அவதானித்து இருக்கிறோம். ஒவ்வொரு 26000 வருடங்களுக்கும் நமது பூமியும்,சூரியனும், பால்வெளி மண்டலமும் ஒரே நேர் கோட்டில் வரும்போது, இந்தகருமையான இடத்திற்கு மிக அருகில் சூரியன் வந்து விடுகிறது என்பதும்கணிக்கப்பட்டிருக்கிறது.



ஒவ்வொரு 26000 வருசத்துக்கு ஒருதரம் மரணத்தின் கடவுள் பந்து விளையாட அழைப்பார். அதில் சில சமயங்களில் இரட்டைச் சகோதரர்கள் தப்பலாம். ஆனால் அடுத்த பந்து விளையாட்டுக்குப் பின்னர் அழைக்கப்படுவார்கள். அதற்கு 26,000 வருசங்கள் தேவை. ஒவ்வொன்றிலும் தப்ப வேண்டும். 2012டிசம்பர் 21ம் திகதி தப்பவே முடியாது என்பதுதான் மாயன்களின் கணிப்பு.

 இப்போது, மாயன்கள் எப்படித் தாங்கள் விளையாடும் பந்து விளையாட்டில் இந்தக் கதையைக் கொண்டு வந்து பொருத்துகின்றனர் என்று பாருங்கள். பந்து விளையாடும் மைதானம்தான் 'பால் வெளி மண்டலம்' (Milky Way). அதன் நடுவே உள்ள வளையங்கள்தான் 'கரும்பள்ளம்' (Dark Rift). விளையாடப்படு ம்பந்துதான் எங்கள் சூரியன். அந்தப் பந்தை யார் எந்த வளையத்தினுள் போடுகின்றனரோ, அதைப் பொறுத்து, போட்டவருக்கு வெற்றி என்று கருதப்பட்டு விளையாட்டு முடிவடைகிறது. அதாவது பால்வெளி மண்டலத்தில் இருக்கும் கரும்பள்ளத்தை நோக்கி நகரும் சூரியன், அதனால் அழிந்துவிடுகிறது. அத்துடன் எல்லாமே முடிவடைந்து விடுகிறது. அதன் அடையாளமாக விளையாட்டின் அணித் தலைவரின் தலை வெட்டப்படுகிறது. இந்தக் கதையையும், நான் இந்தத் தொடரில் முன்னர் விவரித்த 26000 வருடக்கணக்குகளினால் எப்படி பூமி அழியலாம் என்று சொன்னவற்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

 இவ்வளவு திட்டவட்டமாக மாயன்கள் உலகம் அழியும் என்கிறார்களே,உண்மையில் உலகம் அழியுமா? இல்லை இது வெறும் காரணமே இல்லாத தேவையற்ற பயம்தானா? ஒரு வேளை உலகம் அழிவதென்றால் எப்படிஅழியும்? இது போன்ற கேள்விகள் மட்டுமே இப்போது எம்மிடம் எஞ்சியிருப்பவை. அத்துடன் கூடக் கொஞ்ச பயமும்.



 உலகம் 2012 டிசம்பர் 21ம் நாளன்று அழியுமா? அழியாதா? என்ற மிகவும் பெறுமதி வாய்ந்த கேள்வியொன்றுடன் கடந்த பதிவில் விடைபெற்றிருந்தேன். 'உலகம் நிச்சயம் அழியும்' என்ற குரல் பலமாகவே இம்முறை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு அடிப்படையாய் அமைந்தவர்கள் என்னும் ரீதியில் மாயன்களையும், மாயன்கள் என்றாலே மாயமும், மர்மமும் என்பதால், உலகத்தில் உள்ள மர்மங்களையும் இதுவரை அலசி ஆராய்ந்து வந்தோம். ஆனால் இந்தத் தொடரின் வேர் என்பதே, 2012 டிசம்பர் 22 இல் உலகம் அழியுமா? இல்லையா? என்பதற்கான விடையறிதல்தான். எனவே, அதற்கான விடையை அலசும் கட்டத்திற்கு நாம் இப்பொழுது வந்துவிட்டோம். அப்பப்போ அழிவு பற்றி ஆங்காங்கே தொட்டுச் சென்றிருந்தாலும், அவற்றை எல்லாம் ஒன்று சேரத் தொகுத்து,இந்தத் தொடரில் மிகவும் விரிவாக நாம் பார்க்கலாம். அவற்றின் சாத்தியங்களையும் ஒன்று விடாமல் நாம் ஆராயலாம்.

 அதற்கு முன்னர் (27.2.2012) வெளிவந்த ஒரு அசத்தலான செய்தியைச் சொல்கிறேன். இது எந்த வகையான செய்தியென்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இது நடந்ததும் மாயன் பிரதேசத்தில்தான். உண்மையாகவே நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவம் நடந்தது24.07.2009 அன்றுதான். ஆனால் அது இப்போதுதான் மிகப் பெரிதாக வெளிவந்திருக்கிறது. இது உண்மையா? பொய்யா? என்பதற்கு என்னிடம் எந்தப் பதிலும் இல்லை. ஆனால் நீங்களும் இதை அறிந்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். 'என்ன நான் விசயத்தைச் சொல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறேன்' என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. சரி விசயத்துக்கு வருகிறேன்.

 விசயம் இதுதான்........! எல் சல்வடோரைச் சேர்ந்த ஹெக்டர் சிலிஎஸார் (Hector Siliezar) என்பவர், தனது மனைவியுடனும், இரண்டு மகள்களுடனும்,சிசேன் இட்ஷா (Chichen Itza) என்னும் மாயன்களின் பிரமிட்டைப் பார்ப்பதற்கு உல்லாசப் பிரயாணம் மேற்கொண்டிருந்தார். இந்தப் பிரமிட்டைப் பற்றி முன்னர் பல தடவைகள் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். அந்தப் பிரதேசத்தைக் கண்டுகளித்த சிலிஎஸார், தனது இரண்டு மகள்களையும் அந்தப் பிரமிட்டைப் பின்புலமாக வைத்துப் போட்டோக்கள் எடுத்தார். அந்த நேரத்தில் சிறிதாக மழை மேகங்கள் மேலே சூழ்ந்து, மெல்லிய இருட்டாக மாறத் தொடங்கி இருந்தது. அவர் மகள்களைப் போட்டோ எடுத்தது தனது 'ஐபோன்' மூலமாக. அவர் எடுத்த முதல் இரண்டு போட்டோக்களும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் மூன்றாவதாக எடுக்கப்பட்ட போட்டோவில் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ந்து போனார். சாதாரணக் கண்களுக்குத் தெரியாமல் இருந்த அது, படத்தில் மட்டும் மிகத் தெளிவாகத் தெரிந்தது. அப்படி என்னதான் அந்தப் போட்டோவில்  இருந்தது என்பதை நீங்களே பாருங்கள்.






 முதல் படத்தில் எதுவுமே இருக்கவில்லை. ஆனால் அதற்கு ஒரு சில செக்கண்டுகளின் பின்னர் எடுத்த படத்தில், அந்தப் பிரமிட்டின் உச்சியிலிருந்து மேல் நோக்கி மெல்லிய, 'ரோஸ்' நிற ஒளிவீச்சு காணப்படுகிறது. அடிப்படையில் இந்தப் படத்தைப் பார்க்கும்போது, யாரோ போட்டோஷாப்பில் (Photoshop) செய்த கிராபிக்ஸோ என்ற எண்ணமே தோன்றும். அப்படியொரு செயற்கைத்தனம்தான் அந்தப் படத்திலும் இருக்கிறது. ஆனால் இதை ஆராய்ந்த அனைவரும் இந்தப் படத்தில் கிராபிக்ஸ் வேலை செய்யப்படவில்லை என ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தை அக்கு வேறு, ஆணி வேறாக ஆராய்ந்த அனைத்துத் தொழில்நுட்ப வல்லுனர்களும் இந்தப் படத்தில் எந்தவித சாகசங்களும், மாற்றங்களும் செய்யப்படவில்லை என்று அடித்துச் சொல்கின்றனர். இந்தப் படத்தின் தாக்கத்தைக் கேள்விப்பட்ட நாஸா (NASA) விஞ்ஞானிகள் கூட படத்தைப் பரிசோதித்து, அதில் கிராபிக்ஸ் வேலை செய்யபடவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் எந்த ஒரு அறிவியலாளர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நிகழ்வு, எப்படி நிகழ்ந்திருக்கலாம் என்பதற்கு, நாஸா விஞ்ஞானிகள் இப்படிப் பதில் சொன்னார்கள். அதாவது, 'போட்டோ எடுக்கப்பட்ட ஐபோன் கேமராவில் உள்ள லென்ஸின், சென்சரின் (Sensor) ஏற்பட்ட தவறான கணிப்பினால் இப்படி ஏற்பட வாய்ப்பு உள்ளது'என்றார்கள்.

 கேமராக்களின் சென்சர்களில் ஏற்படும் தவறுகளால் இப்படிப்பட்ட படங்கள் உருவாவது என்னவோ உண்மைதான். அது மிகச் சரியாக இங்கும் நடந்திருக்குமா என்று யோசிப்பதற்குப் பலர் தயங்குகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், வெறும் 17 செக்கண்டுகளின் முன்னர் எடுத்த படத்தில் இல்லாமல், இந்தப் படத்தில் மட்டும் சென்சர் தவறு செய்யுமா?அத்துடன், படத்தில் வெளிவரும் ஒளிக் கீற்று மிகச் சரியாகப் பிரமிட்டின் உச்சியின் தளத்தில், மில்லி மீட்டர்கள் விலகாமல் ஆரம்பித்து மேலே செல்லுமா? அது மட்டுமல்லாமல் பிரமிட்டின் உச்சியின் சரி நடுவே அது எப்படித் தோன்ற முடியும்? எல்லாமே தற்செயலாக சென்சர் பழுதினால் ஏற்பட்டதா? இவைதான் அவர்களின் சந்தேகம். ஏற்கனவே நாஸா உண்மையைச் சொல்லாது என்னும் பெயர் அதற்கு இருக்கும் போது,இதைச் சொன்னாலும் அவர்கள் நம்பப் போவதில்லை.

 மழை பெய்யத் தயாராகும் தருணங்களில், கண்ணுக்குத் தெரியாத ஒரு மின்னல் தாக்கின் மூலமாக, சென்சரின் தவறில் இப்படிப்பட்ட படம் உருவாகியிருக்கலாம் என்று நாஸா விஞ்ஞானிகள் சொல்வதை நம்ப வேண்டும் என்றே எனது மனதும் நினைக்கிறது. இதுவரை, உலகின் மிஸ்டரிகளையும், ஆச்சரியங்களையும் உங்களுக்குப் படிப்படியாகச் சொல்லி வந்த எனக்கு, பலவற்றில் உடன்பாடு இருக்கவில்லை. நான் அவற்றையெல்லாம் சொல்வதால், அவற்றை நம்புகிறேன் என்றும் பலர் என்னைப் பற்றி நினைக்கலாம். நான் உங்களுக்கு இப்படி, இப்படியெல்லாம் மிஸ்டரிகள் இருக்கின்றன என்ற தகவல்களைத் தருவது என்பது வேறு,அதை நம்புவது என்பது வேறு. அதனால் மேற்படி செய்தியையும் நம்புவதற்கு என் மனமும் இடம் தரவில்லை. ஆனால் என்னைத் தடுமாற வைத்த இன்னுமொரு நிகழ்வை அடுத்து நான் கண்டபோது அசந்து போனேன். இதை எந்த வகையில் சேர்ப்பது என்றே என்னால் சொல்ல முடியவில்லை. அதை நீங்களும் பாருங்களேன்.

 போஸ்னியா (Bosnia) நாட்டில் விஸிகோ (Visiko) நகரில், தற்செயலாக ஆராய்ச்சியாளர்களால் ஐந்து பிரமிட்டுகள் (Pyramid) கண்டுபிடிக்கப்பட்டன. எகிப்தில் மட்டும்தான் பிரமிட்டுகள் இருக்கின்றன என நினைத்திருக்கும் நமக்கு, மாயன் பிரமிட்கள் தந்த அதிர்ச்சிகள் போதாதென்று, போஸ்னியாவிலும் பிரமிட்டுகள் இருப்பது பேரதிர்ச்சியாக இருக்கும். பிரமிட்டுகள் இங்கு மட்டுமல்ல, உலகின் பல இடங்களில் உண்டு. என்ன, நமக்குத்தான் அவற்றை அறிந்திருக்கும் வசதி இல்லாமல் போய்விட்டது. மெக்சிக்கோ, எல் சல்வடோர், குவாத்தமாலா அதிகம் ஏன், எமக்கு அருகில் இருக்கும் சீனா ஆகிய நாடுகளிலும் பிரமிட்டுகள் இருக்கின்றன. போஸ்னியாவில் இருக்கும் ஐந்து பிரமிட்டுகளும், சூரியன், சந்திரன், ட்ராகன் (Dragon), பூமி, அன்பு ஆகிய ஐந்துக்கும் அடையாளமாய் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரமிட்டுகளின் வயதைக் கேட்டால் தலை சுற்றி விழுந்து விடுவீர்கள். 12000 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டவை அவை. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பிரமிட்டுகளிலே மிகவும் பழமையானவை அவை.

                                                                           



ஆனால், நான் இப்போது சொல்ல வந்தது இந்தப் பிரமிட்டுகளைப் பற்றியல்ல. இவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், மீண்டும் இன்னுமொரு தொடர் ஆரம்பிக்க வேண்டும். எனவே பிரமிட்டின் தகவல்களைத் தருவதை விட்டுவிட்டு, சொல்ல வேண்டியதை மட்டும் சொல்கிறேன்.

 2010 களில் போஸ்னியாப் பிரமிட்டுகளை ஆராயச் சென்ற பௌதிகவியலாளர்கள், சூரியப் பிரமிட்டிலிருந்து ஒளிவீச்சு ஒன்று மேலே செல்வதைக் கண்டுபிடித்தனர். அந்த ஒளிக் கற்றை ஒன்பது மீட்டர்கள் அகலத்தில் மேல் நோக்கி வெளிவருகின்றது என்பதையும் கண்டுபிடித்தனர். அத்துடன் இந்த ஒளிக் கதிர்வீச்சின் சக்தியையும், அதாவது அதன் அலை நீளத்தையும் கண்டுபிடித்துள்ளனர். அது 28 கிலோ ஹேர்ட்ஸ் (kHz) அளவில் இருப்பதாகக் கணிக்கப்பட்டது. இது பௌதிகவியல் விஞ்ஞானிகளாலேயே கண்டு பிடிக்கப்பட்டதால், எவரும் மறுக்கவில்லை.


இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது பற்றி என்ன முடிவுக்கு வரலாம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இந்தப் பிரமிட்டில் இருந்து ஒளிவீச்சு வெளிவரும் என்றால், ஏன், மாயன்களின் பிரமிட்டிலிருந்தும் வெளிவரக் கூடாது? மாயன் பிரமிட்டின் ஒளிவீச்சை மறுப்பவர்கள் இதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை. அதிர்ச்சி அத்தோடு விட்டுவிடவில்லை. மெக்ஸிக்கோவில் இருக்கும், இதுவரை நாம் கேட்டேயிராத ஒரு பிரமிட்டின் மூலமாக வந்திறங்குகிறது இன்னுமொரு அதிர்ச்சி. மெக்ஸிக்கோவில் இருக்கும் சந்திர பிரமிட்டை, 2000 ஆண்டில் படம் எடுத்தார்கள். அந்தப் படத்தில் என்ன தெரிகிறது என்பதையும் பாருங்கள்.
                                                                             

 எல்லாமே போட்டோஷாப் வேலைகள்தானா? எல்லாமே கிராபிக்ஸ்தானா?இல்லை, இவை எடுத்த அனைத்துக் கேமராக்களின் சென்சர்களும் பழுதாகிவிட்டனவா?  இப்படி எல்லாம் தற்செயல்கள் இருக்க முடியுமா?இவை உண்மையென்றால், மாயனின் 'சிசேன் இட்ஷா' பிரமிட்டில் எடுத்தது மட்டும் ஏன் பொய்யாக இருக்க வேண்டும்? இந்த 'சிசேன் இட்ஷா'பிரமிட்டின் அதிசயங்களையும், அதன் கட்டட அமைப்புகளைப் பற்றியும் முன்னர் நான் சொல்லியிருக்கிறேன். அத்துடன், அது பற்றி இன்னுமொரு அதிசயமும் உண்டு, அதைப் பின்னர் சொல்கிறேன் என்றும் சொல்லியிருந்தேன். அதை நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால் நான் மறக்காமல் சொல்ல வேண்டுமல்லவா?

 சிசேன் இட்ஷா பிரமிட் மாயன்களால், 'குக்கிள்கான்' என்னும் அவர்களுடைய கடவுளுக்காகக் கட்டப்பட்டது. இந்தக் குக்ககிள்கான் என்னும் கடவுள்தான், மாயன்களின் அறிவுக்கே அடிப்படைக் காரணமானவர் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உண்மையில் இந்தக் குக்கிள்கான் ஒரு கடவுள் அல்ல, அவர் கிழக்குப் பக்கத்தில் இருந்து கப்பல் மூலம் மாயன்களிடம் வந்து சேர்ந்த ஒருவர் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அப்படிக் கிழக்கில் இருந்து வந்தார் என்றால், எங்கிருந்து வந்திருப்பார் என்று பார்த்ததில், அவர்களுக்கு இரண்டே இரண்டு விடைகளே கிடைத்தன. ஒன்று அவர் சுமேரியாவில் இருந்து வந்திருக்கலாம் அல்லது தமிழர்களின் பிரதேசத்தில் இருந்து வந்திருக்கலாம் என்பவையே அவை.



 இந்தக் குக்கிள்கான் என்பவரை பாம்புக் கடவுள் என்று மாயன்கள் வணங்கியிருக்கிறார்கள். பாம்பு என்பது மேற்குலகில் சாத்தானின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட நிலையில், பாம்பைக் கடவுள் அம்சமாகப் பார்க்கும் தன்மை இந்துக்களான நம்மிடம் அதிகம் இருந்ததும், குக்கிள்கான் தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து வந்திருக்கலாமோ என்னும் வாதத்துக்குப் பலமூட்டுகிறது. இந்தப் பாம்புக் கடவுளான குக்கிள்கானுக்காகவே கட்டப்பட்டது அந்தப் பிரமிட். உலக அதிசயங்களைத் தன்னுள் அடக்கிய ஒரு பிரமிட் அது. மாயன்களின் கணித அறிவையும், வானியல் அறிவையும், கட்டடக்கலை அறிவையும் இன்றும் பறைசாற்றிக் கொண்டு,நிமிர்ந்து நிற்கிறது இந்தப் பிரமிட். இதன் நான்கு பக்கமும், வருடத்தின் நான்கு காலங்களையும், அதில் உள்ள படிகளின் எண்ணிக்கைகள் 365நாட்களையும் குறிப்பது இந்தப் பிரமிட்டின் சிறப்பு. அத்துடன் இந்த நான்கு பக்கமும் உள்ள படிகள் மிகச் சரியாக 45 பாகை கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல், இந்தப் பிரமிட்டின் நான்கு மூலைகளையும் குறுக்காக இணைக்கும் இரண்டு கோடுகளும், மிகச் சரியாக வடக்குத் தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் அமைந்திருக்கின்றன். இவையெல்லாம் மாயன்களின் அறிவுக்கும் கட்டடக் கலைக்கும் முக்கிய சான்றுகளாகும்.

 இவற்றை விடவும் மிக ஆச்சரியமான ஒன்று அந்த பிரமிட்டில் உண்டு. இந்தப் பிரமிட்டின் நான்கு பக்கப் படிகளிலும், வடக்குப் பக்கத்தில் உள்ள படிகளில் ஒரு சிறப்பான அம்சம் அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்தப் படிகளின் அடிப்பக்கம் இரண்டு பக்கமும் இரண்டு பாம்புகள் வாயைத் திறந்து கொண்டிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கின்றன. வருடத்தில் இரண்டு முறைகள், மிகச் சரியாக மார்ச் 21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும் அந்தப் படிகளின் பக்கச் சுவர்களில், சூரியனின் நிழல் படுகின்றது. "அப்படி அந்தச் சூரியனின் நிழலில் என்ன விசேசம்" என்றா கேட்கிறீர்கள்?அதைப் படத்தில் பார்த்தால் உங்களுக்குப் புரியும் பாருங்கள்.



புரிகிறதா? பிரமிட்டின் மூலைகளில் படும் சூரிய ஒளி, அந்தப் பாம்பின் உடல் போல வளைந்து வளைந்து சரியாக அதன் தலையுடன் பொருந்தும். இதில் இன்னுமொரு விசேசம் என்னவென்றால், மாயன்கள் அந்தப் பக்கச் சுவரில் மட்டும் பாம்பின் தோல் போன்ற அமைப்பில் கற்களை வைத்துக் கட்டியிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு வருடமும் சரியாக மார்ச் 21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும் மாற்றமே இல்லாமல் இந்த நிழல்கள் தெரியும். "அப்படி என்ன விசேசம் இந்த மார்ச் 21ம் திகதிக்கும், செப்டம்பர்22ம் திகதிக்கும்" என்று யோசிக்கிறீர்களா? உலகில் எந்த ஒரு இடத்திலும், வருடத்தில் எப்போதும், இரவும் பகலும் ஒரே அளவு நேரமாக்க் கொண்டிருப்பது இல்லை. வருடத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டும்தான் இரவும், பகலும் ஒரே அளவாக இருக்கும். மாயன் பிரதேசத்தில் இந்த இரவும் பகலும் ஒன்றாக இருக்கும் நாட்கள்தான் மார்ச்21ம் திகதியும், செப்டம்பர் 22ம் திகதியும். தற்கால கட்டட நிபுணர்களே தடுமாறும் இந்த ஆச்சரியமான கட்டட அமைப்பைக் கொண்டு அமைந்த இந்தப் பிரமிட்டில், பல அதிசயங்கள் நடக்கின்றன என்று மக்கள் நம்பும்போது, அதை மறுப்பதற்கு நிமிடம் எதுவும் இல்லாமல் போகிறது.

 சரி, இப்பொழுது மீண்டும் நாம் உலக அழிவுக்கு வரலாமா....?

 முதலில், உலகம் அழிவது என்றால் என்னவென்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். உலகம் அழிய வேண்டும் என்றால், அது இரண்டு வழிகளில் நடைபெற வேண்டும்.
1. சூரியக் குடும்பத்தின் தலைமகனான சூரியன் அழிந்தால், அதனுடன் சேர்ந்து, பூமி உட்பட அனைத்துக் கோள்களும் அழிந்து போவது.
2. சூரியனுக்கு எதுவும் நடைபெறாமல், பூமி மட்டும் அழிவது.
 இங்கு, பூமி மட்டும் அழிவது என்று பார்த்தாலும், அதிலும் இரண்டு வகைகள் உண்டு.
1. நாம் வாழும் பூமியை ஏதோ ஒன்று மோதி அது சிதறியோ, வெடித்தோ அழிந்துவிடுவது.
2. பூமி அப்படியே இருக்க,பூமியில் உள்ள உயிரினங்கள் உட்பட அனைத்தும், நெருப்பினாலோ,நீரினாலோ, குளிரினாலோ, வெப்பத்தினாலோ அழிந்துவிடுவது.

 மேலே கூறியதில் ஒன்றிலிருந்து முதலில் நாம் தெளிவாக வெளிவந்துவிடலாம். அதாவது, சூரியன் அழியுமோ என்னும் சந்தேகம் மாயன்களின் கதைகளிலிருந்தே நமக்கு ஏற்பட்டிருந்தது. மாயன்களின் 'பொபோல் வூ' என்னும் புத்தகம் சொன்னபடி, சூரியன் கருமையான இடத்தை நோக்கி ஒவ்வொரு 26000 வருடங்களுக்கும் செல்வதால், அதனால் ஈர்க்கப்பட்டு அழியலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் நவீன விஞ்ஞானத்தின் மூலம் ஆராய்ந்ததில், மாயன்கள் சொல்லியபடி ஒரு கருப்பு இடத்தை நோக்கிச் சூரியன் நகர்வது உண்மைதான் என்றாலும்,அந்தக் கருப்பு இடம் ஒரு திடமான இடமல்ல. அதாவது ஒரு நட்சத்திரம் போலவோ, கோளைப் போலவோ திடமான இடமல்ல. மில்க்கிவேயில் கோள்கள், நட்சத்திரங்கள் என்னும் திடமானவை இருப்பது போல,தூசுக்களும், வாயுக்களும் ஒன்று சேர்ந்து கோடான கோடி கிலோ மீட்டர் பரவி, பல இடங்களில் இருட்டுப் போல இருக்கின்றன. பார்க்கும்போது மிகப்பெரிய இருண்ட பகுதி போல அவை தோன்றினாலும், அவை வெறும் வாயுக்களும் தூசுக்களும்தான். திடமான நட்சத்திரங்கள், கோள்களுக்கு அவற்றின் மையப் பகுதியில் ஈர்ப்புவிசை மிக அதிகமாக இருக்கும். ஆனால் இப்படிப் பரவி இருக்கும் இந்தக் கருமையான தூசுக்களுக்கும் ஈர்ப்பு விசை இருந்தாலும், அவை மையப் பகுதியைக் கொண்டிருக்காமல் இருப்பதால், பெரிய அளவில் ஈர்ப்பு விசைகளைக் கொண்டிருக்க முடியாது. இப்படி ஒரு கருமையான இடம் எமது சூரியன் பிரயாணம் செய்யும் இடத்துக்கு அருகிலும் உண்டு என்பது உண்மைதான். அதைத்தான் மாயன்கள் 'ஷிபால்பா' என்னும் மரணக் கடவுளின் இடம் என்று அழைத்தார்கள்.



 மாயன்கள் சொல்லியது போல, சூரியனுக்கு எந்தத் தீங்கும் வரமுடியாது. அதாவது சூரியனைக் கவர்ந்திழுத்து அழிக்கவல்ல ஈர்ப்பு சக்தி அந்த கருப்புப் பள்ளத்துக்குக் கிடையாது. இங்கு பிளாக் ஹோல் (Black hole)என்பதற்கும், இதற்கும் வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிளாக் ஹோல் என்பதுதான் பிரபஞ்சத்திலேயே ஈர்ப்பு விசை அதிகமான ஒன்று. ஆனால் இது அதுவல்ல. மில்க்கிவேயின் மையப் பகுதியில் ஒரு ப்ளாக் ஹோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது எமது பூமியிலிருந்து 50000 ஒளிவருடங்கள் தூரத்தில் இருக்கிறது. மிக மிக மிகத் தூரத்தில். எனவே சூரியன் அழியாது என்பதில் நாம் திடமாக இருக்கலாம். அத்துடன் சூரியன் அழியலாம் என்னும் விபரம் கூட, மாயன்களின் பிற்காலப் புத்தகமான பொபோல் வூவில்தான் இருக்கிறது. ஆரம்பகால மாயன் காலண்டர்களிலோ, புத்தகங்களிலோ இல்லை. நமது சூரியன்,என்றாவது ஒருநாள் தன் சக்திகள் அனைத்தும் முடிந்து அழிந்து போகும் நிலை வரும் என்றாலும், அதற்கு பில்லியன் பில்லியன் வருடங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை யாராவது பிழைத்திருதந்தீர்கள் என்றால்,அது பற்றி எமக்கு அறியத் தரவும்.

சூரியன் அழியாது என்றதும், எம்முன் எஞ்சி இருப்பது பூமியின் அழிவு மட்டும்தான். பூமியின் அழிவிலும் இரண்டு விதமான அழிவு உண்டு எனச் சொல்லியிருந்தேன். அதில் முதலாவது, பூமியுடன் ஏதாவது மோதுவதால் பூமி அழிவது என்பதாகும். இதைச் சற்றே நாம் பார்க்கலாம்.

இதுவரை நாம் பார்த்ததில், 'நிபிரு' அல்லது 'பிளானெட் எக்ஸ்' என்று அழைக்கப்படும் ஒரு கோள் பூமிக்கு அருகே வரலாம் என்பது முக்கியமானது. இந்த நிபிரு என்ற ஒன்று இருப்பதை நாஸா மறுக்கிறது. அப்படி ஒரு கோள் இருந்தால், அது இப்போதே விஞ்ஞானிகளின் கண்களுக்கு அகப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள். ஆனால் அந்த நிபிருவின் வேகம் மிக அதிகம் என்பதால், அது பூமியை அண்மிப்பதற்கு மிகச் சிறிய காலம்தான் தேவை எனவும், தற்போது அது எமது கண்ணுக்குத் தென்படாத தூரத்தில் இருப்பதாகவும் நாஸாவை எதிர்ப்பவர்கள் சொல்கிறார்கள். அத்தோடு அது ஒரு கருமையான கோள் என்றும், பிரபஞ்சத்தில் ஒளிபடாத, கருமையான எதுவுமே தெரிவதற்கு சாத்தியம் குறைவு என்றும் சொல்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும், இந்த நிபிரு என்ற ஒன்று இருப்பதற்கு 50க்கு 50 என்ற சாத்தியங்கள்தான் இருப்பதாக நாம் எடுக்க வேண்டும். அப்படி அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு அப்புறம் அது நிச்சயம் நமக்குத் தெரியத் தொடங்க வேண்டும். எனவே ஆகஸ்ட் மாதம் வரை நாம் காத்திருக்கலாம். அப்போதும் எமக்கு நிபிரு தெரியாத பட்சத்தில் அந்தப் பயத்திலிருந்தும் நாம் விலகிக் கொள்ளலாம். தெரிந்தால், மூட்டையைக் கட்டலாம்.

இதற்கு அடுத்ததாக சொல்லப்படும் பூமியை நோக்கிய மோதல் என்றால் விண்கற்கள்தான். உண்மையில் இது மிகப் பெரிய ஆபத்தான ஒரு விசயமும் கூட. பூமி, விண்கல் தாக்குதலுக்கு உள்ளாகி அழிவதற்கு நூறு விகிதம் சாத்தியங்கள் உண்டு. ஆனால் அது எப்போது என்பதுதான் கேள்வி. பூமியை நோக்கி வந்து தாக்கக் கூடிய விண்கற்கள் எமது சூரியக் குடும்பத்திலேயே, பல்லாயிரக்கணக்காக இருக்கின்றன. அவற்றில் இதுவரை கணித்ததன்படி ஆயிரம் விண்கற்கள் பூமியை ஒட்டுமொத்தமாக அழிக்கும் அளவு பெரியவை. இவை போல ஒன்று தாக்கித்தான் முன்னர் இருந்த டைனசார்கள் எல்லாம் அழிந்தன. அந்த நேரத்திலும் பூமி முழுமையாக அழிந்தது. இப்படிப் பூமியை ஒட்டு மொத்தமாக அழிக்கக் கூடிய ஆயிரம் விண்கற்கள் விண்வெளியில் வலம் வருகின்றன. நூறு மீட்டர் பருமனுள்ள ண்கல் ஒன்றே போதுமானது பூமியை அழிக்க. ஆனால் இவற்றில் பல ஒரு உதை பந்தாட்ட மைதானதை விடப் பெரியன.



 உலகத்தில் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும்,ஒரு அட்டவணை போட்டு, இந்த ஆயிரம் விண்கற்களில் ஒவ்வொரு கற்களையும் தனித்தனியே, தினமும் அவதானித்து வருகின்றனர். ஏதாவது ஒரு விண்கல்லின் திசையாவது பூமியை நோக்கித் திரும்பும் பட்சத்தில் அவர்கள் உடன் அறிவிக்கத் தயாராக இருக்கின்றனர். ஆனால் டிசம்பர் 22ம் திகதி அளவில் பூமியை வந்து தாக்கக் கூடியதாக எந்த விண்கல்லும் இல்லை என்றே விஞ்ஞானிகள் சொல்கின்றனர். இதையும் தாண்டி கண்ணுக்குத் தெரியாத ஒரு விண்கல் தாக்கும் என்பதற்குச் சாத்தியம் மிகக் குறைவு. இதில் ஒன்றை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.2012 டிசம்பர் 22 ம் திகதி விண்கல் தாக்காது என்றுதான் வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்களே ஒழிய, விண்கல் என்றுமே தாக்காது என்று சொல்லவில்லை. அவர்களே சொல்லும் ஒன்று எம்மை நடுங்க வைக்கிறது. அதாவது பூமி நிச்சயம் ஒரு விண்கல் தாக்கி எப்போதாவது அழியும் என்பதுதான் அது.

 எனவே, நிபிரு என்ற ஒன்றினால் ஆபத்து வருமென்றால் நமக்கு ஆகஸ்டில் புரிந்து போய்விடும், விண்கல் பயம் என்பது டிசம்பர் 22 வரை தேவையில்லாதது. என்னைக் கேட்டால் இந்த இரண்டைப் பற்றியும் கவலைப்படத் தேவையே இல்லை என்றே சொல்வேன்.

 இப்போது நம்மிடையே எஞ்சியிருக்கும் பூமியின் அழிவு என்பது பின்வரும் நான்கு வகையில்தான் அனேகமாக இருக்கலாம்.
1. சுனாமி,பூகம்பம் போன்ற தொடர்ச்சியான் இயற்கை அழிவுகள்
2. பூமிக்குள் குமுறிக் கொண்டிருக்கும் 'சசூப்பர் வோல்கான்' (Supervolcan) எனப்படும் பாரிய எரிமலைகளின் வெடிப்பு.
3. பூமியின் வட தென் துருவங்கள் இடம் மாற்றம் (Pole shift)
4. சூரிய வெப்பக் கதிரின் தாக்குதலும், அதன் மூலம் ஏற்படும் மின்காந்த விளைவுகளும்.

 இவை எல்லாவற்றையும் நாம் சரியாக கவனித்துப் பார்த்தால், இவை எல்லாமே ஒரு வகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட விளைவுகளையே கொடுப்பவை. உதாரணமாக, பூமியின் வட-தென் துருவங்கள் இடம் மாறுவதை நாம் கருத்தில் கொள்வோம். துருவமாகத் தற்போது இருக்கும் இடம் வெப்பப் பிரதேசமாகவும், வெப்பப் பிரதேசம் துருவமாகவும் மாறினால், தற்சமயம் துருவத்தில் இருக்கும் பனிக்கட்டிகள் அனைத்தும் கரைந்து போகும். அவை மட்டும் கரைந்தால் போதும். பூமியின் அத்தனை நிலப்பகுதிகளும் பல நூறு மீற்றர்களுக்கு நீரினால் மூழ்கிவிடும். அதன் ஆரம்பக் கட்டமாக ஏற்படுவது பாரிய சுனாமிகளும்,பூகம்பங்களுமாகத்தான் இருக்கும். மாயன்களிடமிருந்து எமக்குக் கிடைத்த நான்கு புத்தகங்களில், 'ட்ரெட்னர் கோடெக்ஸ்'  (Dredner Codex) என்பதில்தான் 2012 உலக அழிவு பற்றி விளக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. அதன்படி பூமியானது நீரினாலும், நெருப்பினாலும் சூழப்பட்டு அழிவதாகத்தான் உள்ளது.

 பூமியின் துருவங்கள் இடம் மாறுவதற்கும், பூமியில் தனித்தனியாக சுனாமிகளும், பூகம்பங்களும் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதற்கும் சாத்தியங்கள் தற்சமயம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. சுனாமிகளும், பூகம்பங்களும் தனித்தனியே  ஆங்காங்கே ஏற்பட்டாலும்,அவை ஒட்டுமொத்த உலகை அழிவை ஏற்படுத்திவிடாது. அதுவும் டிசம்பர்22க்குள் ஏற்படவே முடியாது. இதனடிப்படையில் கடைசியாக, எம்மிடையே எஞ்சியிருப்பன இரண்டே இரண்டு வியசங்கள் மட்டும்தான். அவை
1.சூரியனின் வெப்பக் கதிர் வீச்சு,
2. சசூப்பர் வோல்கான்.
இந்த இரண்டினாலும் ஏற்படப் போகும் அழிவை, எந்த ஒரு விஞ்ஞானியும் மறுக்கவில்லை. இவை இரண்டிற்கும் 2012 டிசம்பர் அழிவுக்கும் சம்பந்தம் இருக்கலாமா என்று கேட்டால், உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் இல்லை என்று பதில் சொல்வதே இல்லை. இவற்றிற்கு சாத்தியங்கள் இருக்கலாம் என்று சந்தேகத்துடன் ஒரு சாரார் சொல்ல, இருக்கிறது என்று ஒரு சாரார் அடித்துச் சொல்ல, எஞ்சியவர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்களே ஒழிய, இல்லை என்று மறுக்கவில்லை.

 "இது என்னப்பா புதுக் கதை? சூப்பர் வோல்கான் என்று ஒரு புதுச் சரடு விடுகிறாரே இவர்" என்று வழமை போல நீங்கள் நினைக்கலாம். ஆனால் பூமியை அழிவை நோக்கி நகர்த்தும் வண்ணம் அமைந்திருக்கின்றன இந்த சூப்பர் வோல்கான்கள் என்று சொன்னால் அதில் பொய் ஏதுமில்லை. நீங்கள் இதுவரை பார்த்திருக்கும் எரிமலை போன்றவை அல்ல இவை. இவை எல்லாமே மலைகள் போல அல்லாமல், சாதாரணமாக நிலத்தின் கீழ் அடங்கியிருப்பவை. மொத்தமாகப் பூமியில் எட்டு சூப்பர் வோல்கான்கள் இருக்கின்றன. அதில் முக்கியமாக 2012 டிசம்பர் உலக அழிவுக்குக் காரணமாக அமையும் என்று நம்பப்படும் சூப்பர் வோல்கான்,அமெரிக்காவில் உள்ள 'யெல்லோ ஸ்டோன்' (Yellowstone) என்பதுதான்.



 அமெரிக்காவின் Wyoming மாநிலத்தில் அமைந்திருக்கிறது இந்த யெல்லோ ஸ்டோன். 102 கிலோமீட்டர் நீளம், 82 கிலோ மீட்டர் அகலம் கொண்ட பாரிய நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது இந்த எரிமலை. 60 கிலோ மீட்டர் நீளமும், 40 கிலோ மீட்டர் அகலமும், 10 கிலோ மீட்டர் பூமியின் கீழே ஆழமுமாக அமைந்த மிகப்பெரிய எரியும் கூண்டு போல இது இருக்கிறது. உண்மையில் இது எரியும் கூண்டு அல்ல. ஆயிரம் ஆயிரம் அணுகுண்டுகளின் வெடிப்பு சக்தியை உள்ளடக்கிய பாரிய வெடிகுண்டு. இந்த யெல்லோ ஸ்டோன் பிரதேசங்களில் 10000 க்கும் அதிகமான வெந்நீர் ஊற்றுகள் நிலத்தில் இருந்து சீறியபடி இருக்கின்றன. இவற்றைப் பார்ப்பதற்கென்றே சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிகின்றனர்.                                                                            



 கிட்டத்தட்ட ஒரு மிகப் பெரிய நகரம் ஒன்றே பூமிக்குக் கீழே எரிந்தபடி இருக்கின்றது என்று சொல்லக் கூடியதாக உள்ளது. அது எப்போது வெடித்து வெளிவருமோ என்று தெரியாத நிலையில், அதனால் ஏற்படும் சுடு நீர் ஊற்றுகளைப் பார்க்க மக்கள் அங்கே கூடுகிறார்கள். இந்த யெல்லோ ஸ்டோன் மட்டும் வெடிக்குமானால், ஒட்டுமொத்த அமெரிக்காவே சில நிமிடங்களில் காலியாகிவிடும். அது கடற்பகுதியில் ஏற்படுத்தும்  தாக்கத்தால் உலகம் எங்குமே, சுனாமி மற்றும் பூகம்ப அழிவு எற்படும். அதுமட்டு மல்லாமல் இந்த வோல்கான் வெடிப்பதனால், அதன் பாதிப்பின் தொடர்ச்சியாக, உலகின் மற்றைய ஏழு சூப்பர் வோல்கான்களும் வெடிக்கும் சாத்தியங்களும் உண்டு. இதனால் ஏற்படுவது ஒட்டுமொத்த உலக அழிவுதான். இதற்குச் சாத்தியம் எப்போது உண்டு என்று கேட்டால்,இப்போதே உண்டு என்றுதான் பதில் வருகிறது. அநேகமாக இந்த யெல்லோ ஸ்டோன், டிசம்பர் 22 இல் வெடிக்கலாம் என்ற நம்பிக்கை பலரிடம் உண்டு. அதற்கான சீற்றங்களும் அங்கே காணப்படுகிறது என்பதும் உண்மைதான். இந்த யெல்லோ ஸ்டோன் வெடிப்பின் அழிவைத்தான் மாயன்கள் குறிப்பிட்டார்களோ என்று பலர் இப்போது சந்தேகப்படுகிறார்கள். காரணம், இதனால் ஏற்படும் அழிவுகள் நெருப்பினாலும், நீரினாலும் ஏற்படுவதாகவே இருக்கிறது.
 நாம் இப்போது கடைசியாக எம்மிடையே எஞ்சியிருக்கும் சூரியனின் வெப்பக் கதிர்த் தாக்குதலுக்கு வரலாம். மேலே சொன்ன அழிவுகளை சிலர் மறுத்துப் பேசினாலும், அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு ஆபத்து உண்டு என்றால், அது இந்தச் சூரியனின் வெப்பக் கதிர்த் தாக்குதல்கள்தான். இதற்குச் சாட்சியாக சமீபகாலங்களாக சூரியன் தனது வெப்பக் கதிர்வீச்சுகளை மிகவும் அதிகமாக்கியிருக்கிறது.



 சூரியனின் இந்த கதிர்வீச்சுத் தாக்குதல் ஒரு புயல் போல பூமியைத் தாக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படித் தாக்கும்போது அதனுடன் சேர்ந்து உருவாகும் மின்காந்த அலைகளின் தாக்குதல்கள் பூமியின்,இரண்டு துருவங்களுக்கு ஊடாக பூமியின் உள்நுழைந்து, பூமியில் இருக்கும் அனைத்துவிதமான மின்னியல் சாதனங்களையும் தொழிற்பட முடியாமல் செய்துவிடும். அத்துடன் பூமி நினைக்க முடியாத அளவு வெப்பமாகி எல்லாமே அழியும் நிலைக்கு வந்துவிடும். இதன் மூலம் நாம் எப்படி அழிவோம் என்ற கொடுமைகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிடலாம். ஆனால், இந்த சூரியக் கதிர்த் தாக்கத்தால் பூமி மொத்தமாக அழிவைச் சந்திக்கும். இந்த சூரியத் தாக்குதல் 2012 இல் நடப்பதற்கு நிறையச் சாத்தியங்கள் உண்டு என்பதே பலரின் அனுமானமாக இப்போது இருக்கிறது.

                                                                             



 நான் விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் இல்லாத எந்த ஒரு அழிவையும் நம்பப் போவதில்லை. அதையே நம்பிக்கையாகவும் உங்களுக்குத் தரப் போவதும் இல்லை. இந்தத் தொடரை நான் எழுதுவதால், 2012 இல் உலகம் அழியும் என்னும் மூட நம்பிகையைப் பலருக்கு நான் விதைப்பதாக சிலர் எண்ணியிருந்தார்கள். எனது நோக்கம் நிச்சயம் அதுவல்ல. மூடநம்பிக்கைக்கு முற்றிலும் எதிரானவன் நான். எந்த ஒரு விளைவுகளுக்கும் விஞ்ஞான ரீதியான விளக்கம் உண்டு என நம்புபவன் நான். அப்படி விளக்கம் கொடுக்க முடியாதவற்றை 'மிஸ்டரி' என்னும் ஒரு தொகுதிக்குள் அடைத்து வைத்து படிப்படியாக அதற்கான விடைகளை அறிய விரும்புபவன். அதனால்தான், அறிவியலுடன் சம்பந்தப்பட்ட மாயனின் இந்தத் தொடரை என் கைகளில் எடுத்தேன். என்னைப் பற்றி இங்கு நான் அதிகம் சொல்ல வேண்டியதன் அவசியமே, 'என்னை யாரும் ஒரு மூடநம்பிக்கையைப் பரப்புபவன்' என்னும் ஒரு வட்டத்தில் அடைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

 மொத்தத்தில் உலகம் அழிவதற்கான சாத்தியங்கள் உண்டா எனக் கேட்டால், ஆம், நூறு சதவீதம் உலகம் அழியக் கூடிய சாத்தியங்கள் உண்டு என்று சொல்லலாம். ஆனால் அது 2012 டிசம்பர் 22 இல் அழியுமா என்று கேட்டால், அதற்குரிய சாத்தியங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்றே சொல்லக்கூடியதாக இருக்கிறது.  தற்காலப் பூமியின் நடைமுறைகளும் அவற்றையே சாட்சிப்படுத்துகின்றன என்றும் சொல்லலாம்.

 ஆனால், "2012 டிசம்பர் 22 இல் உலகம் அழியுமா?" என என்னைத் தனிப்பட்ட முறையில் நீங்கள் கேட்பீர்களேயானால், நான், "2012 டிசம்பர் 23ம் திகதி உங்களுடன் தேனீர் அருந்தத் தயாராக இருக்கிறேன்" என்றுதான் சொல்வேன்.

 பிற்குறிப்பு: இதுவரை இந்தத் தொடரைத் தவறாமல் வாசித்து வந்த உங்களுக்கு, என் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது எழுத்து உங்களை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்திருந்தால், அதற்கு இந்தத் தொடரை நான் எழுதத் தூண்டிய, என் அண்ணன் மகள் அருளினிக்குத்தான் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். அத்துடன் முதல் முறையாக இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குக் களம் அமைத்துத் தந்த திரு.மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கும், திரு.மனோ வர்ஷா அவர்களுக்கும், மறைவாக நின்று உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

thanks to
writer ராஜ்சிவா..

RAHMANFAYED :: 2012ல் உலகம் அழியுமா, அழியாதா.?
just visit this articles..
http://rahmanfayed.blogspot.in/2012/12/rahmanfayed-2012.html.

'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6.

'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6.

mayans.+. dravidan.+.egptyian = rahman.

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...









இந்தத் தொடரை வாசித்து வரும் பலர், 'இப்படியும் இருக்குமா?' என்ற தங்கள் ஆச்சரியத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இறுதியாக வந்த தொடரை வாசித்த ஒரு நண்பர், "இது நிறையக் கண் திறப்பைத் தருகிறது" என்றார். அவர் இதை எந்த அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும், 'கண் திறப்பு' என்பதற்கும், இன்று நான் எழுதும் தொடரின் இந்தப் பகுதிக்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. கடைசித் தொடரில் நான் 'மாயன்களுக்கும், மேசனிக்ஸுக்கும் ஒரு விதத்தில் சம்பந்தம் வருகிறது என்று சொல்லி முடித்திருந்தேன். அந்தச் சம்பந்தமே ஒரு 'கண் திறப்பில்தான்' ஆரம்பமாகிறது என்றால், என் நண்பர் சொன்னது, என்னை ஆச்சரியப்பட வைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதற்கு மேலும் கண் திறப்பைப் பற்றிச் சொல்லாமல் போனால் சட்டென்று மூடிவிட்டு ஓடிவிடுவீர்கள். எனவே அதைச் சொல்கிறேன்.


மேசனிக்ஸின் மிக முக்கியமான அடையாளம் (Symbol) என்பது, ஒரு பிரமிட்டின் உச்சியில், விழித்திருக்கும் ஒற்றைக் கண்தான். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அதிகமாக வளர்ந்தது இந்த மேசனிக்ஸ் அமைப்பு. ஆனால் இந்த இரண்டு கண்டங்களுக்குமே சம்பந்தம் இல்லாதது பிரமிட். உலகில், பிரமிட் என்பது விசேசமாக உணரப்பட்டது இரண்டே இரண்டு இடங்களில்தான். ஒன்று எகிப்து மற்றது மாயன்களின் பிரதேசம். அதிலும் குறிப்பாக, நான் முன்னர் சொல்லியிருந்த 'ஷிசேன் இட்ஷா' (Chichen Itza) என்னும் மாயன்களின் பிரமிட்டில், 13 என்னும் இலக்கத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒன்பது அடுக்குகளாகக் கட்டப்பட்டிருக்கும் ஷிசேன் இட்ஷா, பூமியின் ஆரம்ப வரலாற்றை அப்படியே சொல்கிறது என்கிறார்கள். அதற்கமையவே அது கட்டப்பட்டும் இருக்கிறது என்கிறார்கள். அந்தப் பிரமிட்டில் உள்ள ஒன்பது அடுக்குகளையும், தனித் தனியாக 13 பிரிவாகப் பிரித்திருந்தார்கள் மாயன்கள். அவற்றை ஏழு பகல்கள், ஆறு இரவுகள் என மொத்தமாக 13 ஆகப் பிரித்திருக்கிறார்கள். அவற்றின் விபரத்தை இப்போது சொல்லப் போனால் நேர விரயம் அதிகமாகும் என்பதால் படம் தருகிறேன், அதன்மூலம் அது புரிகிறதா எனப் பாருங்கள். புரியாவிட்டாலும் ஒன்றும் பரவாயில்லை. எமக்குத் தேவை அந்த 13 ஆகப் பிரிக்கப்பட்டதன் முக்கியத்துவம் மட்டும்தான்.








இந்த 13 இலக்கம் எப்படி மாயன்களுக்கு முக்கியத்துவமாக இருந்ததோ, அது போல அமெரிக்க ஒரு டாலரிலும் (One Dollar) அந்த 13 இலக்கம் முக்கியமானதாக இருந்ததை நாம் கடந்த தொடரில் அவதானித்திருந்தோம். ஆனால் அதில் அமெரிக்கக் கழுகின் உடம்பில் வரையப்பட்டிருக்கும் கறுப்பு வெள்ளைக் கோடுகளைச் சரியாக நாம் கவனித்திருக்க மாட்டோம். அவையும் 13 கோடுகள் என்று நாம் கவனித்திருந்தாலும், அவை ஏழு வெள்ளைக் கோடுகளும், ஆறு கறுப்புக் கோடுகளுமாக இருக்கின்றன. இது மாயன்களின் பிரமிட்டில் உள்ளது போல, ஏழு பகல்களையும், ஆறு இரவுகளையும்  குறிப்பது போல இருக்கின்றன அல்லவா? இது எப்படி சாத்தியமாகியது? அத்துடன் நீங்கள் அந்த டாலரில் இன்னுமொன்றையும் கவனித்து வையுங்கள். அதன் விபரம் கீழே ஆராயப்பட்டாலும் இப்போதே அதைப் பார்த்து வைப்பது நல்லது. படத்தில் மொத்தமாக 13 நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் அவை எப்படிப்பட்ட உருவத்தினுள் இருக்கிறது?  ஆறுகோண வடிவில் அமைந்த ஒரு வடிவத்தின் உள்ளே அல்லவா காணப்படுகிறது. இந்த ஆறுகோண வடிவத்தின் விசேசத்தைப் பின்னர் ஆராயலாம்.




இப்போது கூட, 'இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்' என்னும் மிக எளிமையான பழமொழி மூலம், நான் சொல்லும் மாயன் தொடர்பை நீங்கள் மறுக்கலாம். ஆகவே, இப்போ தருவதைப் பாருங்கள். மாயன்களின் பிரதேசமான 'மெசோ அமெரிக்க' (Mesoamerica) பிரதேசத்துக்கு சற்றுக் கீழே இருக்கும் நாடுதான் 'எக்வாடோர்' (Ecuador). மாயன் இனம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயம் எஞ்சிய மாயன்கள் இந்தப் பிரதேசங்களில்தான், ஓடிச் சென்று வாழ்ந்தார்கள். அந்த எக்வாடோரில் 300 அடி ஆழத்துக்குக் கீழே ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த பிரமிட் போன்ற ஒரு கல், அவர்களைப் பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. அது உங்களையும் ஆச்சரியத்தின் உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என்பதில் எனக்கு ஆச்சரியமே இல்லை.







'அதே கண்கள்' என்று நாங்களும் அலறலாம் போல இருக்கிறது. ஆம்! அதே பிரமிட். அதன் உச்சியில் அதே கண்கள். அது மட்டுமல்ல, அந்தப் பிரமிட்டின் அடுக்குகளை எண்ணிப் பாருங்கள். அவை மொத்தமாக 13. இந்தப் பிரமிட் வடிவக் கல்லின் பெயர் 'லா மனே பிரமிட்' (La Mane Pyramid) என்பதாகும். இதற்கு மேலும், மாயனுக்கும், அமெரிக்க டாலருக்கும், மேசனுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நான் விவரிக்க வேண்டிய அவசியமே இல்லை என்றே நினைக்கிறேன். இருந்தாலும் அவநம்பிக்கை என்பது நமது பிறப்பிலேயே அமைந்த ஒரு சுபாவம். யார், எதை, எப்படிச் சொன்னாலும் நம்ப மறுக்கும் சுபாவம் நமக்கு என்றுமே இருந்து வருகிறது. அதில் ஒன்றும் தப்பு கிடையாது. நம்பும் வரை புரிய வைக்க வேண்டியது என் கடமை. மிருகங்கள் போல காட்டுவாசிகளாக வாழ்ந்த மாயன்களை, நாகரீகத்தின் உச்சத்தில் இருந்த அமெரிக்க அரசாவது கண்டுகொள்வதாவது என்று நீங்கள் நினைத்தால், அதற்கு இன்னும் ஒரு முக்கிய உதாரணத்தைத் தந்துவிட்டு நகர்கிறேன்.


அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்த 'காப்பிடல் பில்டிங்' (Capitol building in Washington D.C.) என்பது கி.பி. 1793 களில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இதைக் கட்டுவதற்கு மூலகர்த்தாவாக இருந்தவர் வேறு யாருமல்ல, ஒரு டாலரில் அமர்ந்திருக்கும் அதே அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் வாசிங்டன்தான். இவர் மேசனிக்ஸ் அமைப்பின் மிகமிக முக்கிய உறுப்பினர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும்.




அந்த காப்பிடல்  பில்டிங்கின் பிரதான மண்டபத்தில், சுவரில் அமைந்திருக்கும் ஒரு சிலை அமைப்புத்தான் இன்று நம்மை ஆச்சரியப்படுத்தப் போகும் ஒன்று. அதை நான் வார்த்தைகளால் சொன்னால் புரியாது. நீங்களே படத்தில் பாருங்கள்.





படத்தில் உள்ளவர்கள் சுட்டிக் காட்டுவதும், வணங்குவதும் எதைத் தெரியுமா? சரியாகப் பாருங்கள். இன்று உலகம் அழியப் போகின்றது என்று மாயன் சொல்லும் அதே காலண்டர்தான் அதில் இருக்கிறது. மாயன் காலண்டரை இவ்வளவு முக்கியமாக இவர்கள் இங்கு ஏன் அமைக்க வேண்டும்? நன்றாக யோசியுங்கள்? இதை விட வேறு என்ன ஆதாரங்கள் உங்களுக்கு வேண்டும்? அதே கட்டடத்தின் மேலே சுவரின் உச்சியில் வரையப்பட்டிருக்கும் இன்னுமொரு சித்திரத்தையும் பாருங்கள். அதில், ஆறுகோண வடிவில் சுற்றிவரப் படங்களும், நடுவே கண் போன்ற அமைப்பில் ஜோர்ஜ் வாசிங்டன் பெண்களுடன் அமர்ந்திருப்பது போலவும் இருக்கிறது.




கண் என்கிறோம், ஆறுகோண வடிவம் என்கிறோம் அப்படி என்னதான் இவை இரண்டிலும் முக்கியத்துவம் இருக்கிறது? இவற்றை மேசனிக்ஸ் ஏன் இவ்வளவு முக்கியத்துவப்படுத்துகின்றனர்? இந்தக் கேள்விகள் நம்மையறியாமலே நமக்கு ஏற்படுவதை, நாம் தவிர்க்க முடியாது. அதற்கு இந்த மேசனிக்ஸ் என்பவர்கள் யார், இவர்களின் New World Order என்னும் அமைப்பு என்ன என்பதை நாம் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும். சொல்வதற்கு முன்னர் இன்னுமொன்றையும் சொல்லி விடுகிறேன். இதில் எந்தக் கருத்தும் என் சொந்தக் கருத்தல்ல.


இதைச் சொல்வதற்கு நான் பைபிளின் (Bible) பழைய ஏற்பாட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். கடவுள் ஆதாமையும், ஏவாளையும் படைத்துவிட்டு அவர்களை ஏடன் (Eden) தோட்டத்தில் வசிப்பதற்கு விடுகிறார். அப்போது கடவுள் ஒரு குறிப்பிட்ட மரத்தைக் காட்டி, "அந்த மரத்தில் உள்ள கனியை மட்டும் உண்ண வேண்டாம். அதை உண்டால் சாகவே சாவீர்கள்" என்று சொல்லி விட்டுச் செல்கிறார். ஆதாமும், ஏவாளும் கடவுள் சொன்னபடியே வாழ்கிறார்கள். அப்போது அங்கு வந்த 'சாத்தான் (Satan), "நீங்கள் அந்த மரத்தின் கனிகளைச் சாப்பிடுங்கள். அந்த மரத்தின் கனிதான், அறிவைக் கொடுக்கும் கனி. அதைச் சாப்பிட்டால் நீங்கள் சாகவே மாட்டீர்கள்" என்கிறான். சாத்தானை நம்பிய ஆதாமும், ஏவாளும் அந்த மரத்தின் கனியை உண்கிறார்கள். அதை உண்டதால், அறிவையும் பெறுகிறார்கள். தாங்கள் இருவரும் அதுவரை நிர்வாணமாக இருப்பதைக் கூட, கனியை உண்டதால் பெற்ற அறிவின் மூலம்தான் உணர்கிறார்கள். அப்புறம் சாத்தானின் பேச்சைக் கேட்டு கனியை உண்டதால் ஏடன் தோட்டத்திலிருந்து கடவுளால், அவர்கள் விரட்டப்படுவது தனிக் கதை.





மேற்படி பைபிள் கதையைப் படிக்கும் கிருஸ்தவர்கள் அந்தக் கதையை எடுக்கும் விதம் வேறு. ஆனால் சிலர் எடுத்த விதமே வேறு. அதாவது ஆதாமும், ஏவாளும் அறிவைப் பெறுவது கடவுளுக்கு ஏனோ பிடிக்காமல் இருந்தது. ஆனால் சாத்தானுக்கு மனிதன் அறிவைப் பெறுவது பிடித்திருந்தது. சாத்தான் மனிதர்களுக்கு உதவி செய்தான். அவன் சொன்னது போல, ஆதாமும், ஏவாளும் அறிவைப் பெற்றார்கள். அத்துடன் அவர்கள் சாகவும் இல்லை. இன்று இந்த அளவுக்கு மனிதன் அறிவியல் வளர்ச்சியடைந்திருக்கிறான் என்றால் அது சாத்தானால்தான். இந்த இடத்தில் கடவுள் மனிதர்களுக்கு எதிராகவும், சாத்தான் ஆதரவாகவும் இருந்திருக்கிறான். அதாவது கடவுள் சாத்தான் போலவும், சாத்தான் கடவுள் போலவும் இருந்திருக்கிறார்கள். அமைதி.... அமைதி... இதை நான் சொல்லவில்லை. சிலர் சொல்கிறார்கள். அப்படிச் சொல்பவர்கள் யாரென்று தெரிய வேண்டுமல்லவா? சொல்கிறேன்!


சாத்தானை வழிபடுபவர்களை 'லூசிபேரியன்' (Luciferien) என்பார்கள். ஏன் தெரியுமா? நாம் சாத்தான் என்று சொல்பவன் உண்மையில் கடவுளுடன் இருந்த ஒரு ஏஞ்சல் (Angel). அவன் பெயர் லூசிபெர் (Lucifer). இவனை வெளிச்சத்தின் கடவுள் என்றும் சொல்வார்கள். அதாவது அவனும் ஒரு கடவுள்தான் என்கிறர்கள். அதனால் இந்த லூசிபெர் என்பவனைக் கடவுளாக வழிபடுகிறார்கள் அந்தச் சிலர். அவர்களைப் பொறுத்தவரை லூசிபெர் நன்மை செய்த ஒருவனே ஒழிய கெட்டவன் கிடையாது. நேர்மாறாக கடவுள்தான், மனிதர்களுக்கு, சாவீர்கள் என்ற பொய்யைச் சொல்லிப் பயமுறுத்தி அறிவு கிடைக்காமல் தீமை செய்தவர்.


இந்த லூசிபெரை வழிபடுபவர்கள்தான் உலகத்திலேயே மிக வலிமையாக இருக்கும் மேசனிக்ஸ். இவர்களின் தொடர்ச்சிதான் நியூ வேர்ல்ட் ஆர்டர் என்னும் அமைப்பு. இதை நம்புவது உங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். 'அமெரிக்க ஜனாதிபதிகளும், உலகின் மிகமிகச் சக்தி வாய்ந்தவர்களும் அங்கத்தவர்களாக இருக்கும் மேசனிக்ஸ், நாம் சாத்தான் என்று சொல்பவனையா கடவுளாக வணங்குகிறார்கள்?' என்னும் கேள்வி உங்களுக்கு எழுவதில் ஆச்சரியமே இல்லை. ஆனால் இதுதான் மிகவும் ஆச்சரியமான உண்மை. இவர்களே 'புதிய உலகம்' என்பதினூடாக அனைத்து உலக மக்களையும் ஒன்றிணைக்க விரும்புகிறார்கள். மதங்களாலும், மத உணர்வுகளாலும் ஊறிப் போன நமக்கு, இது வெறுப்பையே தரும். ஆனால் அவர்கள் சொல்வதோ வேறு. சரி, நம்ப முடியவில்லையா? இவர்களால் 'லூசிபெர் ட்ரஸ்ட்' (Lucifer Trust- Lucis Trust) என்ற ஒரு உதவும் ஸ்தாபனம் உருவாக்கப்பட்டு நடத்தப்படுகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? இந்த அமைப்பு ஐ.நா. சபையினாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வளவு பலம். உலகம் முழுவதும் தனது கிளைகளைப் பரப்பி இருக்கிறது இது. உலகின் முதல் பணக்காரராக இருந்த ரொக்கபெல்லர் (Rockefeller), ஹென்றி கிஸ்ஸிஞ்ஞர் (Henry Kissinger) ஆகியோர் கூட இந்த 'ட்ரஸ்ட்டில்' இருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


சனிக்கிரகத்தை (Saturn) லூசிபெரின் இடமாகக் கருதுகிறார்கள் இவர்கள். Satan-Saturn என்னும் பெயர் ஒற்றுமையையும் இங்கு நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம். உலகத்தில் எந்த மதமும், சனியை தீமைக்கான கிரகமாக எடுப்பது இதனால்தான். இந்தச் சனிக்கிரகத்தை ஆறுகோண நட்சத்திரத்தாலும், கண் ஒன்றின் வடிவத்தாலும் ஆதிகால மக்கள் குறித்து வந்திருக்கிறார்கள். அப்படி ஏன் குறித்து வந்தார்கள் என்பதற்கான காரணம் சரியாகப் புரியாவிட்டாலும், சனிக்கிரகம் அதனைச் சுற்றியிருக்கும் வளையத்தினால் கண் போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதால் அப்படிக் குறிப்பிட்டிருக்கலாம் என நம்பப்பட்டது.




சனிக்கிரகத்தின் அடையாளமாக இந்த ஆறுகோண நட்சத்திர அமைப்பையும், கண்ணையும் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சுமேரியர்களே அவதானித்துச் சொல்லியிருக்கிறார்கள். எப்படி இவர்கள் வெறும் கண்ணால் இதை அவதானித்தார்கள் என்ற ஆச்சரியம் எப்போதும் இருந்தது. ஆனால் இதற்கு மிகச் சமீபத்தில் விடை கிடைத்தது. நாஸாவினால் சனிக்கிரகத்தை ஆராய என அனுப்பப்பட்ட 'காஸ்ஸினி' (Cassini) என்னும் விண்கலம், சனிக்கிரகத்தைப் பலவிதங்களில், பல கோணங்களில் படங்களாக எடுத்து அனுப்பியது. அப்படி அது அனுப்பிய படங்களில், குறிப்பிட்ட இரண்டு படங்களைப் பார்த்து உலகமே பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு வந்தது. "ஐயோ! இப்படியும் இருக்குமா? இதை எப்படி எமது மூதாதையர்கள் அறிந்திருந்தார்கள்? " என்ற ஆச்சரியமும் வந்தது. நமது மூதாதையர்களின் அறிவைப் பற்றிய சந்தேகம் மேலும் அதனால் அதிகரிக்கவும் தொடங்கியது. சனிக்கிரகத்தின் வட துருவத்தையும், தென் துருவத்தையும் காஸ்ஸினி எடுத்த படங்களை நீங்களே பாருங்கள்.





கேத்திர கணிதத்தின் மூலம் மிகச் சரியாகக் கோடு போட்டு வரைந்தது போல, ஒரு ஆறுகோண வடிவம் சனிக்கிரகத்தின் வட துருவத்தில் காணப்பட்டது. நான்கு பூமிகளைத் தன்னுள் அடக்கும் அளவுக்கு மிகப் பிரமாண்டமாக இருக்கும் அந்த ஆறுகோண வடிவம், எல்லாப் பக்கங்களும் ஒரே அளவானதாக இருப்பது போல அமைந்திருக்கிறது. அதைவிட ஆச்சரியம், தென் துருவத்தில் கண் போன்ற வடிவமும் காணப்படுவதுதான். இது எந்த வகையான மர்மம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சனிக்கிரகத்தின் வட துருவமும், தென் துருவமும் இந்த அமைப்புகளில் இருக்கின்றன என்று எப்படி ஆதிகால மனிதர்கள் கண்டுகொண்டார்கள்? யார் இவர்களுக்கு இதைச் சொன்னார்கள்? நிச்சயமாக வெறும் கண்களால் இதைப் பார்க்கவே முடியாது. அதிகம் ஏன்? தற்போது உள்ள நவீன தொலைநோக்குக் கருவிகளால் கூட அதை அவதானிக்க முடியாது. காரணம், இவை இரண்டும் அமைந்திருப்பது, நமது காட்சிகளிலிருந்து விலகிய துருவப் பகுதிகளில்.


சனிக்கிரகத்தில் மட்டுமல்ல, மேசனிக்ஸ் என்னும் ஆதிக்க சக்தியினால் இந்தக் கண்ணும், ஆறு கோணமும், பிரமிட்டும் அடையாளங்களாகவும், சின்னங்களாகவும் உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. அவை எங்கே யார் யாரால் சின்னங்களாக பாவிக்கப்படுகின்றன என்பதை இங்கு நான் சொல்வது நன்றாக இருக்காது என்பதால், அவற்றை இணையம் மூலம் பார்க்கும் சந்தர்ப்பத்தை உங்களுக்கே அளிக்கிறேன். அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் பிரபல கம்பெனிகளில் பல இவற்றை அடையாளங்களாக வைத்திருக்கின்றன.


மாயன்களின் பிரமிட்டை அடையாளமாக வைத்து மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்த ஐரோப்பியர்கள், மாயன்களின் அறிவின் அடையாளங்கள் அழியவும் காரணமாக இருந்தார்கள் என்பதுதான் கசப்பான வரலாறு. மாயன்களின் அறிவுசார் சாட்சியங்கள் அனைத்துமே ஐரோப்பியர்களால் அழிக்கப்பட்டன. அப்படி அழிந்தவற்றில் எஞ்சியவை மிக மிகச் சொற்பமே! அந்தச் சொற்பத்திலேயே இவ்வளவு ஆச்சரியங்கள் மாயன்கள் மூலம் எமக்குக் கிடைத்திருக்கின்றன என்றால், அவை அழிக்கப்படாமல் முழுவதும் கிடைத்திருந்தால், என்ன என்ன அதிசயங்கள் எல்லாம் எமக்குக் கிடைத்திருக்குமோ....?


மாயன்களின் அறிவின் அடையாளமாக என்னதான் அழிந்தது? அவற்றை யார் அழித்தார்கள்? எஞ்சியவை என்ன? இந்தக் கேள்விகளின் விடைகளுடன் அடுத்த தொடரில் சந்திப்போம்.


அடுத்த தொடரில் சந்திக்கும் வரை, மேசனிக்ஸின், 'பிரமிட் கண்கள்' உலகெங்கும் உள்ள சமய வழிபாட்டுத் தலங்களில் ஊடுருவியிருப்பதைப் படங்கள்  மூலமாகப் பாருங்கள்.




Cao Dai Tempel- Vietnam




Kington Parish Church- Jamica


 







மாயாவின் அழிவுக்குக் காரணமாக யார் இருந்தார்கள் என்ற கடந்த பகுதியின் கேள்வியுடன், மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் மாயா! மாயா இனத்தவர் சொன்ன உலக அழிவைப் பற்றிப் பேசும் நாம், மாயாக்கள் பற்றிய சரித்திரத்தை சிறிதளவேனும் அறிந்திருக்க வேண்டும் அல்லவா. அறிவியல், கணிதம், கட்டடக் கலை, வானியல், விவசாயம், சித்திரம், சிற்பம் என்னும் பன்முகத் திறமை பெற்றிருந்த மாயன் இனத்தவருக்கு, இன்னுமொரு ஆச்சரியமான ஒரு முகமும் இருந்திருக்கிறது. அது யாருமே ரசிக்க முடியாத, சகிக்க முடியாத ஒரு முகமாகவும் இருந்திருக்கிறது. மாயன்களிடம் இதுவரை நாம் பார்த்த முகங்கள் எல்லாமே நல்ல முகங்கள். ஆனால் அந்த மற்ற முகமோ மிகக் கொடுமையானது, கொடூரமானது.



மாயன் இனத்தவர்கள் கடவுள் பக்தி மிகவும் அதிகம் உள்ளவர்கள். அவர்களின் அதிகப்படியான கடவுள் பக்தியே, அவர்களைக் காட்டுமிராண்டிகள் எனப் பார்க்கும்படி வைத்தது. உலகில் இருக்கும் அனைத்து மதங்களிலும் காணிக்கை செலுத்தும் பழக்கம் இருந்து வந்தது, இன்றும் இருந்து வருகிறது. ஆனால், மாயன்கள் கடவுளுக்குச் செலுத்திய காணிக்கை கொஞ்சம் வித்தியாசமானவை. அது என்ன தெரியுமா…? மனிதர்களின் தலைகளும், இருதயங்களும்தான்.

உயிருடன் இருக்கும் ஒரு மனிதனை, ஒரு பீடத்தில் படுக்க வைத்து, அவன் இருதயத்தை நோக்கிக் கத்தியைச் செலுத்தி, இருதயத்தை வெளியே எடுத்துக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதும், ஒரே வெட்டாகத் தலையைத் துண்டிப்பதும் மாயன்களின் வெகு சாதாரணமான ஒரு வழிபாட்டுமுறை. மாயன்கள், இந்து மதத்தைப் போலவே, பல கடவுள்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்கள். சிலை வணக்கமும் அவர்களிடம் இருந்தது. அவர்கள் வணங்கும் கடவுள்களில், முக்கியமான கடவுள்களுக்காகப் பல பிரமிடுகளையும் கட்டியிருந்தார்கள். அப்படிக் கட்டப்பட்ட பிரமிடுகளின் உச்சிகளில்தான் கடவுள் தொழுகை நடக்கும். அங்குதான் பலிகொடுக்கும் மனிதர்களைக் கொண்டு சென்று, அவர்களை உச்சியில் உள்ள பீடத்தில் படுக்க வைத்து……… கூரிய வாளால் கழுத்தில் ஒரே போடு...........! வெட்டப்பட்ட தலை பிரமிடின் உச்சியிலிருந்து படிகள் வழியே உருண்டபடி கீழே விழும்.




"இவ்வளவு நாளும் மிக நாகரீகம் உள்ளவர்களாக, அறிவாளிகள் போலப் பார்க்கப்பட்ட மாயாக்கள் இப்படி ஒரு காட்டுமிராண்டிகளா?" என நீங்கள் இப்போது முகம் சுழிப்பீர்கள். அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நாகரீகத்தில் வளர்ந்த நாம் அதைக் கற்பனைகூடப் பண்ண முடியாது என்பதால் முகஞ்சுழிக்கிறோம். ஆனால் இந்த நரபலி முறை அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது. எங்கள் இந்து மதத்திலும் இருந்திருக்கிறது. போருக்குச் செல்லும்போது ஒவ்வொரு அரசனும், தன் போர் வீரன் ஒருவனை நரபலியாக கொடுத்துவிட்டே சென்றிருக்கிறான் என்பது வரலாறு. சாக்தம், பைரவம் என்னும் இந்து மதப் பிரிவு மதங்களில், இந்த நரபலி அனுமதிக்கப்பட்டிருக்கிறது. 'கால பைரவன்' என்பவரே நரபலி கேட்பவர்தான். அதிகம் ஏன், இன்றும் கூட காசியில், கங்கை ஆற்றங்கரைக்கு அருகில் தவம் செய்யும் 'அகோரிகள்', எரியும் பிணத்தை உண்ணுவது உண்டு. சமீபத்தில் 'நான் கடவுள்' என்னும் படத்தில், நடிகர் ஆர்யா கூட ஒரு அகோரியாகத்தான் வருகிறார். இதைச் சொல்வதால் நரபலியை நான் நியாயப்படுத்துவதாக அர்த்தம் கிடையாது. ஆதிகாலத்தில் இது தப்பான ஒரு விசயமாக கருதப்படவில்லை என்பதையும், தெய்வீகமான ஒன்றாகத்தான் பார்க்கப்படது என்பதையுமே சொல்ல வருகிறேன். இதில் மாயன்களும் விதிவிலக்காக இருக்கவில்லை.




"அட..! அப்படியென்றால் இந்து மதமும், மாயாக்களும் மட்டுமே நரபலியைக் கொடுப்பவர்களா?" என்று நீங்கள் கேட்டால், "அப்படி இல்லை. இது அனைத்து மதங்களிலும் இருந்திருக்கிறது" என்றே பதில் சொல்ல வேண்டும். கிருஸ்தவ, யூத மதங்களுக்குச் சொந்தமான வேதங்களிலும் இந்த நரபலி இருந்திருக்கிறது. தீர்க்கதரிசியான ஆபிரகாம், அவரது மகனான ஈசாக்கை கடவுளுக்குப் பலி கொடுக்க மலையுச்சிக்கு அழைத்துப் போனதும், பலி கொடுக்கப் போகும் கடைசிக் கணத்தில் கடவுள் அதைத் தடுத்ததும் வேதத்தில் இருக்கிறது. யூத, கிருஸ்தவ, மதங்களின் வரலாறுகளிலும் நரபலியின் அடையாளங்கள் இருந்திருக்கின்றன.




ஆனாலும் மத ரீதியாக எங்கள் மூதாதையர்கள் நரபலி கொடுத்த போது, தெய்வீகமாகப் பார்க்கப்பட்டு அலட்சியம் செய்யப்பட்டது, மாயன்கள் செய்த போது கொடுமையாகப் பார்க்கப்பட்டது. அதுவே அவர்களின் வரலாறு அழிவதற்கும் காரணமாகியது. இந்தக் காரணம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. மாயனை, மாயன் கலாச்சாரத்தை, மாயன் மதங்களை என அனைத்தையும் அழிக்க, மேற்படி ஒரு மனநிலை திட்டமிட்டே விதைக்கப்பட்டது. மாயன் என்றாலே மிகவும் கொடூரமானவர்கள் என்னும் அபிப்பிராயம் ஆதிகாலத்தில் இருந்தே புகுத்தப்பட்டது. இப்படி ஏன் புகுத்த வேண்டும் என்று ஆராய்வதற்கு முன்னர், நாம் ஒரு ஹாலிவுட் ஆங்கிலத் திரைப்படம் பற்றிப் பார்க்க வேண்டும்.



2006ம் ஆண்டு 'மெல் கிப்சன்' (Mel Gibson) என்பவரால் 'அபோகலிப்டோ' (Apocalypto) என்னும் ஹாலிவுட் திரைப்படம் வெளியிடப்பட்டது. மிகவும் பரபரப்பாகவும், வெற்றிகரமாகவும் ஒடிய அந்தப் படம், மாயன் என்னும் இனத்தவர்கள் உலக மகாக் கொடியவர்கள் எனச் சொல்லியது. அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் எவரும் மாயன் இனத்தவர் மேல், அவர்கள் எவ்வளவுதான் புத்திசாலிகளாக இருந்திருந்தாலும், மதிப்புக் கொள்ள மாட்டார்கள். மாயன் இனம் அழிக்கப்பட வேண்டிய இனம்தான் என நினைப்பார்கள். அவ்வளவு மோசமாக ‘அபோகலிப்டோ’ படத்தில் மாயன்கள் சித்தரிக்கப்பட்டார்கள். அதாவது, மாயன்களின் கலாச்சார அழிவுக்கு யார் காரணமாக இருந்திருந்தாலும், அவர்கள் மேல் எமக்குச் சிறிதேனும் கோபம் வராது. இதுவே மெல் கிப்சனின் உள்மன நோக்கமாகவும் இருந்தது. "மெல் கிப்சன் அந்தப் படத்தில் அப்படி எதுவுமே செய்யவில்லையே? அவர் வெளியிட்டது ஒரு மிக நல்லதொரு படமாச்சே!" என நீங்கள் நினைக்கலாம்.






உண்மைதான்! ‘அபோகலிப்டோ’ என்னும் படம், சாதாரணமாகப் பார்க்கும் போது மிக நல்லதொரு படம்தான். ஆனால், அதில் உள்ள நுண்ணரசியலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி மேலும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், மெல் கிப்சன், 2004ம் ஆண்டில் வெளியிட்ட இன்னுமொரு படமான 'த பாசன் ஆஃப் த கிரைஸ்ட்' (The Passion of the Christ) படத்தையும் பார்த்திருக்க வேண்டும். ‘த பாசன் ஆஃப் த கிறைஸ்ட்’ படம் ஏன் மெல் கிப்சனால் எடுக்கப்பட்டது என்பதையும் நீங்கள் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.



யேசுநாதரின் சரித்திரத்தைச் சொல்கிறேன் பேர்வழி என்றே இந்தப் படத்தை எடுத்திருந்தார் மெல் கிப்சன். ஆனால் யூதர்கள், யேசுநாதரை எப்படி, எப்படி எல்லாம் சித்திரவதை செய்து கொன்றார்கள் என்பதே இப்படத்தில் மிக முக்கிய பகுதியாக அமைக்கப்பட்டது. படத்தின் காட்சி வடிவங்களை மிகவும் அதிர்ச்சிகரமாக உருவாக்கியிருந்தார். படத்தைப் பார்த்த அனைவரின் அடிவயிறே கலங்கும் வண்ணமாக காட்சிகள் அமைந்திருந்தன. இதனால், பலதரப்பினரிடமிருந்து கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது அந்தப் படம்.





முடிந்தால் 'த பாசன் ஆஃப்  த  கிரைஸ்ட்' படத்தைப் பாருங்கள். உங்களால் பல காட்சிகளைக் காண முடியாத அளவிற்கு கொடூரமாகக் காட்சிகள் இருக்கும். யேசுவின் சரித்திரம் இதுவரை இப்படிச் சொல்லப்பட்டதே இல்லை. படத்தைப் பார்க்கும் உங்களுக்கு, யேசுநாதரைச் சித்திரவதை செய்தவர்கள் மேல் இனந் தெரியாத வெறுப்பும், கோபமும் உருவாகும். மெல் கிப்சனுக்கு வேண்டியதும் அதுதானோ என்ற சந்தேம் பலருக்கு எழுந்தது. தனது படங்களின் மூலம், பார்ப்பவர்கள் ஒரு இனத்தில் மொத்தமாக வெறுப்படைய வேண்டும், கோபப்பட வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கமோ, என விமர்சகர்களை நினைக்க வைத்தது. அதில் உண்மையும் கூட இருக்கலாம்.


மெல் கிப்சன் அடிப்படையில், மிகத் தீவிரமான பழமைவாத கிருஸ்தவ மதவாதி. பழமைவாத கிருஸ்தவ மதத்தை நிலைநிறுத்த, எந்த விதமான படங்களை எடுக்கலாம் என்பதில் அவர் ஒரு 'டாக்டர்' பட்டமே பெற்றவர் போல சிந்திப்பார் என்கிறார்கள். இந்த மெல் கிப்சன் என்பவர் ஒரு ஹாலிவுட் நடிகர். ஆனால் அவர் வெளியிட்ட மேற்படி இரண்டு படங்களையும் தானே தயாரித்தும், இயக்கியும் வெளியிட்டிருந்தார். ஆனால் நடிக்கவில்லை.



தயவுசெய்து இனி நான் சொல்லும், சொல்லப் போகும் கருத்துகளை மதம், நம்பிக்கை என்னும் இடங்களிலிருந்து பார்க்காமல், எட்ட இருந்து பாருங்கள். அப்படிப் பார்த்தால், பல உண்மைகளைத் தொலைத்துவிடுவீர்கள். யேசுநாதரின் வரலாற்றைப் படமாக எடுத்த மெல் கிப்சன், ஏன் மாயனின் வரலாற்றை மையப்படுத்தி படம் எடுக்க வேண்டும்? ‘அபோகலிப்டோ’ என்னும் படத்தின் மூலம், மெல் கிப்சன் யாரைக் காப்பாற்ற நினைக்கிறார்? மாயன் இனத்திற்கும், மெல் கிப்சனுக்கும், கிருஸ்தவ மதத்துக்கும் என்ன சம்பந்தம்? இங்கு ஏன் தேவையில்லாமல் கிருஸ்தவ மதத்தை நான் இழுக்க வேண்டும்?’ என்ற கேள்விகளுக்குப் பதில்களை மாயன் கலாச்சாரம் அழிக்கப்பட்ட சரித்திரத்துடன் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.


எல்லாவறையும் விளக்கமாகச் சொல்கிறேன்.......!



மாயன் இனத்தின் வளர்ச்சிகள் ஆரம்பித்தது கி.மு.10000 ஆண்டு அளவுகளில்தான். படிப்படியாக வளர்ந்த மாயன் நாகரீகம், கி.மு. 3000 ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டது. பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை அதி உச்சத்தைத் தொட்டது. ஒரு இனத்தின் நாகரீகம் என்பது கலை, கலாச்சாரம், மதம் ஆகிய அடையாளங்களுடன் சேர்ந்தே பயணம் செய்வது அல்லவா. மாயன்களின் நாகரீக வளர்ச்சியிலும் அவர்கள் மதம் பாரிய பங்கெடுத்தது. சூரியன், மழை, காற்று, மரணம், மருத்துவம், சந்திரன் என பல கடவுள்கள் அவர்களுக்கு இருந்திருக்கிறது. அதிகம் ஏன், அவர்கள் விவசாயத்தில் வல்லவர்களாக அந்தக் காலத்திலேயே இருந்த காரணத்தால், சோளத்துக்கே (Maize-Corn) கடவுள் ஒன்றை வைத்திருந்தனர். அதுமட்டுமல்ல, பெண் கடவுள்களும் மாயன்களிடம் உண்டு.


மாயன்களின் கடவுள்களில் இருக்கும் இன்னும் ஒரு கடவுள் யாரென்று கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். "அடப் பாவிகளா!" என்று கூடச் சொல்லத் தோன்றும். ஆம்…! மாயன்கள் தற்கொலைக்கு என, 'இக்ஸ்டாப்' (Ixtab) என்னும் பெயருடைய ஒரு கடவுளையும் வைத்திருந்தனர். "என்ன..? தற்கொலைக்குக் கடவுளா....?" என்றுதானே கேட்கிறீர்கள். உண்மைதான் மாயன்களிடம் தற்கொலைக்குக் கூட கடவுள் உண்டு. தற்கொலை தப்பானதாகவே மாயன்களால் எடுத்துக் கொள்ளப்படவில்லை. தற்கொலை செய்பவர்கள் சொர்க்கத்தில் கடவுளின் அருகே இருப்பார்கள் என்பது மாயனின் நம்பிக்கை. மாயனின் அரசன் அமர்ந்திருக்கும் அரியணைக்கு கீழே, மாயனில் யாராவது ஒருவர், தானே கழுத்தில் கயிறு சுற்றி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது வெகு சாதாரணம் அவர்களுக்கு. அப்படித் தற்கொலை செய்பவர்கள் சொர்க்கத்தில் உள்ள செடியில் பூவாக இருப்பர் என்பது அவர்கள் நம்பிக்கை.  ஏனோ தற்கொலைக் கடவுள் பெண் கடவுளாக இருக்கிறார்.



தாங்கள் வணங்கிய கடவுள்களுக்காக, கோவில்களையும், பிரமிட்களையும் மாயன்கள் மிகப் பிரமாண்டமாகக் கட்டினார்கள். அதுவே அவர்கள் இன்றளவும் பேசப்படும் ஒரு இனமாக இருப்பதற்குக் காரணமாயும் அமைந்தது. ஆனால், அதுவே அவர்கள் அழிவுக்கும் காரணமாகவும் அமைந்தது. மாயன்கள் எப்போதும் ஒரு பேரரசுக்கு கீழே வாழ்ந்து வரவில்லை. பல அரசுகளை மாயன் இனத்தவர் தமக்காக ஏற்படுத்தி வாழ்ந்து வந்தனர். இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி பல போர்கள் நடந்து வந்தன. கி.பி.900 ஆண்டுகளில் இருந்து கி.பி.1100 ஆண்டளவுகளில் மாயன்களில் பலர் திடீரெனக் கூண்டோடு மாயமாய் மறைந்ததும் நடந்தது. இது பற்றித்தான் நான் ஆரம்பத்தில் எழுதியிருந்தேன். இவர்கள் எப்படி மறைந்தார்கள் என்னும் மர்மம் பற்றி இன்றுவரை சரியான விளக்கம் கிடைக்காவிட்டாலும், அவர்களுக்கிடையே நடந்த போர்களினால்தான் அழிந்தார்கள் என்று கருதுபவர்களும் உண்டு. அப்படி மறைந்தவர்கள் போக, மாயன்களில் பல இலட்சக்கணக்கானவர்கள் எஞ்சியும் இருந்தார்கள். அப்படி எஞ்சிய மாயன்கள், 'ஆட்ஸ்டெக்' (Aztek), 'இன்கா' (Inka) என இரண்டு பெரிய அரசுகளாகப் பிரிந்து, வடக்கிலும், தெற்கிலும் வாழ்ந்து வந்தனர். இவை தவிர்த்த மற்றவர்கள் சிதறிய நிலையில் ஆங்காங்கே பரந்து வாழ்ந்தும் வந்தனர்.


இந்தக் காலகட்டத்தில்தான் மாயன்களை நோக்கி அவர்களே எதிர்பார்த்திராத ஆபத்து, கழுகுகள் போல வந்தன. பறந்து அல்ல மிதந்து வந்தன. ஆம்....! விரிந்து, பரந்து இருந்தது அமெரிக்கப் பெருங்கண்டம். வடக்கு, மத்தி, தெற்கு எனப் பிரியாமல், ஒன்றாக இணைந்த பெருங் கண்டமாக இருந்தது அமெரிக்கா என்னும் நிலப்பரப்பு. பெரும் வளங்களையும், பூர்வீக மக்களையும் தன்னுள் அடக்கி அமைதியுடன் இருந்தது அது. அந்த அமைதியைக் குலைக்க மிதந்து வந்தன கழுகுகள்.........!

பெரிய வளங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அதைத் தன் மூக்கினால் முகர்ந்து கொள்ளும் ஆற்றலுடன், வெறி பிடித்து இருந்தன ஐரோப்பிய நாடுகள். தான் முகர்ந்து கொண்டதை, தன் வசமாக்கும் குள்ள நரித்தனம் இரத்தத்தில் ஊறிய நோய் போல அவர்களுக்கு அப்போது ஊறி இருந்தது. பெரும் நிலப்பரப்பாய் விரிந்திருந்த அமெரிக்காவை, 'அப்பத்தைத் துண்டு போடும் பூனைகள் போல' ஐரோப்பாவின் பல நாடுகள் துண்டுகளாக்கி தம் வசமாக்கின. அதில் மாயன் பிரதேசங்கள் பக்கம் தன் கழுகுக் கண்ணைத் திருப்பியது ஸ்பெயின் நாடு.





அப்புறம் என்ன........! கொலையும், கொள்ளையும், அபகரிப்பும்தான் அமோகமாக அரங்கேறியது. பீரங்கிகளையே பார்த்து அறியாத மாயன்களின் 'யுகடான்" (Yucatan) மாநிலம் ஸ்பானியர்கள் வசம் வீழ்ந்தது. நிலத்தைக் கைப்பற்றிய ஸ்பானியர்கள், கொள்ளையடிப்பதை மிக நேர்த்தியாகச் செய்தார்கள். ஆனால் அவர்கள் அத்துடன் நிறுத்தி விடவில்லை........! எந்த நாட்டைக் கைப்பற்றச் சென்றாலும் ஒரு கையில் பீரங்கியும், மறு கையில் பைபிளுமாக செல்வதே அவர்கள் வழக்கமாயிற்றே! இங்கும் அவர்கள் அதைக் கைவிடவில்லை. கத்தோலிக்க மதத்தில் தீவிரமாக இருக்கும் ஸ்பானியர்கள், அடுத்தவர் மதத்தை மதிக்கும் வழக்கமே இல்லாதவர்கள். தங்கள் மதத்தைப் பரப்புவதிலேயே குறிக்கோளுள்ளவர்கள். இதனால், மாயன்களின் பல கடவுள்கள் வழிபாட்டையும், வழிபாட்டு முறைகளையும் ஸ்பானியர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மாயன்கள் தங்கள் மதங்களைத் தூக்கியெறிந்துவிட்டு, கிருஸ்தவ மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்றால் ஆயுதத்தால் மட்டும் முடியாது என்பதை உணர்ந்தார்கள். இதற்காகவே, ஸ்பெயினிலிருந்து வந்திறங்கினார் ஒருவர். அவர் பெயர் 'டியாகோ டி லாண்டா' (Diego de Landa). இவர் ஒரு கிருஸ்தவ மதகுருவாவார்.


கி.பி.1549ம் ஆண்டில் கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்காக, மாயனின் பெரு மாநிலமான யுகாடானுக்கு வந்து சேர்ந்தார் லாண்டா. ஆரம்பத்தில் மாயா மக்களுடன் நல்லவர் போல உரையாடி, உறவாடி அவர்களுடன் சேர்ந்தே இருந்தார் லாண்டா. மாயாவுடன் கூட இருந்து, அவர்களை முழுவதுமாக அறிந்து கொண்ட லாண்டா, இறுதியில் செய்த ஒரு விசயம்தான், இப்போதும் அறிஞர்களால் மிகவும் கண்டிக்கப்படுகிறது. அதுவே மாயன்களை முழுமையாக நாம் அறியாமல் செய்த கொடுமையாகவும் அமைந்தது. அப்போதே, "லாண்டா செய்தது சரியானதுதான்" என்று கிருஸ்தவ ஆதரவாளர்கள் சிலர் அவரை ஆதரிக்க, "அட..! இப்படிச் செய்து விட்டாரே!" என அதே கிருஸ்தவர்களில் பலர்  கோபத்துடன் கொதித்தார்கள். அப்படி லாண்டா என்னதான் செய்தார்?

இராணுவ அடக்கு முறையுடன் மாயனை நசுக்கிய ஸ்பானியர்களின் மத்தியில், சாந்தமான முகத்துடன் அன்பைப் பொழியும் அகிம்சை வடிவமான 'லாண்டா' வித்தியாசமானவராக மாயன்களுக்குத் தெரிந்தார். "அட! இப்படியும் ஒரு நல்ல ஸ்பானியரா?" என்று அவருடன் உறவாட ஆரம்பித்தனர். மாயா மக்களுடன், மக்களாகச் சேர்ந்து வாழ்ந்தார் லாண்டா. அவர் புத்திசாலித்தனமாக, முதலில் மாயா மக்களின் மொழியைக் கற்றுக் கொண்டார். அப்படிக் கற்றுக் கொண்டவர் ஒரு நல்ல விசயத்தையும் அப்போது செய்தார். அதாவது மாயன்களின் எழுத்து முறையை அவர்களிடமே கேட்டு தனக்கென பதிவு செய்தும் வைத்திருந்தார்.


மாயன்களுடன் பழகிய லாண்டா, படிப்படியாகத் தனது மத போதனையை ஆரம்பிக்கத் தொடங்கினார். கிருஸ்தவ மத போதனைகளை ஆரம்பித்தவர், மாயாக்களின் கடவுள் வழிபாட்டை விட்டு விடும்படி அவர்களை வற்புறுத்த ஆரம்பித்தார். ஸ்பானியர்களிடம் இருந்த பயத்தில் இவரது மதத்தை ஆதரிப்பது போல இருந்த மாயாக்கள், தங்கள் தெய்வங்களை இரகசியமாக வணங்கி வரத் தொடங்கினர். இரவுகளில் சில மணி நேரங்கள் காணாமல் போனார்கள் மாயாக்கள். 'இவர்கள் இரவில் எங்கே போகின்றார்கள்?' என்று ஒளிந்திருந்து பார்த்த போதுதான் லாண்டாவுக்கு அந்த உண்மை தெரிய ஆரம்பித்தது.



ஆம்..! மாயாக்கள் லாண்டாவுக்குத் தெரியாமல் இரவில் தங்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோவிலுக்குச் சென்று, தங்கள் கடவுள்களை வழிபட்டு வந்தனர். மாயன்களே அறியாமல் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று, அந்தக் கோவிலைக் கண்ட லாண்டா மிருகம் போல ஆனார். அப்படி மிருகமான லாண்டா, செய்த மிருகத்தனமான செயலைத்தான் இப்போது உலகமே கண்டிக்கிறது. வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர் மாயாக்கள். அவர்கள் எழுதி வைத்திருந்த ஆயிரக்கணக்கான நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா.


'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'. வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. இதை மாயாக்களுக்கு உதவி செய்யும் இரட்சகர் போல வந்து சேர்ந்த லாண்டாவும் செய்தார்.
இந்தச் செயலை உலகில் உள்ள எவருமே ஆதரிக்கவில்லை. அனைவருமே கடுமையாகக் கண்டித்தார்கள். இவரால் அழிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும், பொன் போலக் கிடைக்கவே முடியாத பொக்கிசங்கள். அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் இப்போதுள்ள பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் வெகு சுலபமாக விடை கிடைத்திருக்கும்.



அதிகம் ஏன், '2012ம் ஆண்டு உலகம் அழியுமா? இல்லையா?' என்பதை நாம் இந்த அளவுக்கு ஆராயத் தேவையே இல்லாமல் விடை சுலபமாகக் கிடைத்திருக்கும். லாண்டாவினால் அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நூல்களில், அவர் கண்ணில் படாமல் தப்பியது நான்கே நான்கு நூல்கள் மட்டும்தான். The Madrid Codex, The Dresden Codex, The Paris Codex, Grolier Codex என்பவையே எஞ்சிய நான்கு புத்தகங்களுமாகும். அவையும் பின்னாட்களில் ஐரோப்பியத் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, ஸ்பெயினில் ஒன்றும், ஜெர்மனியில் ஒன்றும், பிரான்ஸில் ஒன்றும், மெக்சிககோவில் ஒன்றுமாக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. மான் தோலைப் பாடமாக்கி, விசிறி போன்று மடிக்கப்பட்டு புத்தகங்களாக உருவாக்கப்பட்டிருக்கின்றன அவை.




ஆயிரக்கணக்கான புத்தகங்களை எரித்த இந்தக் கொடுமையை மாயன் மக்களுக்குச் செய்வதாக நினைத்து, ஒட்டு மொத்த உலகிற்கே செய்தார் லாண்டா. அவர் நினைத்தது என்னவோ, 'ஒரு காட்டுமிராண்டிகளின் கலாச்சாரத்தையும், மத நம்பிக்கையையும் நான் அழிக்கிறேன். உண்மையான மதம் என்பது எனது மதம் மட்டும்தான்' என்பதே! ஆனால் அவர் அறியாமல் போனது 'இவர்கள் காட்டுமிராண்டிகள் அல்ல, பிற்காலத்தில் உலகமே வியக்கப் போகும்  அறிவாளிகள்' என்பதை.



ஆனால், உண்மை அவ்வளவு சுலபமாக அழிந்து விடுவது இல்லை அல்லவா…….? லாண்டா அறியாத ஒன்றும் அப்போது நடந்தது. 'நான் எல்லா நூல்களையும் அழித்து விட்டேன்' என்ற மமதையுடன் திரும்பிய லாண்டா, எப்படி அதைத் தவற விட்டார் என்பதுதான் இன்றும் உலகம் வியக்கும் ஒன்று. ஆம்…….! தங்கள் நூல்களில் உள்ள அனைத்து விசயங்களையும் முழுமையாக இல்லாவிட்டாலும், ஒரு பகுதிகளையாவது தாங்கள் வாழ்ந்த அனைத்து இடங்களிலும், கட்டடங்களிலும், கோவில்களிலும், நிலங்களிலும், 'ஹைரோ கிளிஃப்ஸ்' (Hieroglyphs) என்று சொல்லப்படும் சித்திர எழுத்துகளில் வடித்து வைத்திருந்தார்கள் மாயன்கள். கொஞ்சம் யோசித்தால் , இப்படி எல்லாம் நடக்குமோ என்று மாயன்களுக்கு முன்னரே தெரிந்திருக்குமோ என்ற ஆச்சரியமே எமக்கு மிஞ்சுகிறது. மாயன்கள் எழுதி வைத்த சித்திர எழுத்துகளைப் பார்த்தால் அசந்தே போய்விடுவீர்கள். அவ்வளவு அதிக எண்ணிக்கையான சித்திர எழுத்துக்கள். இலட்சக்கணகான எழுத்துக்களை எல்லாச் சுவர்களிலும் தீட்டி வைத்திருந்தார்கள். புத்தகங்கள் போல இல்லாவிட்டாலும், இதுவாவது கிடைத்ததே என்னும் மன நிம்மதியைத் தரும் அளவிற்கு இருந்தன அவை.



லாண்டா என்னும் கிருஸ்தவப் பாதிரியார் ஒருவர் இப்படிச் செய்தது அக்காலங்களிலேயே கிருஸ்தவர்கள் பலராலேயே கண்டிக்கப்படத் தொடங்கிவிட்டது. படிப்படியாக இந்தக் கண்டனம் அதிகரித்து, இது ஒரு கிருஸ்தவ சர்வாதிகாரத்தனம் என்னும் ஒரு எண்ணமும் தோன்றியது. அதனால், லாண்டா செய்தது சரிதான் என்று உலகத்தை நம்ப வைக்க வேண்டிய கட்டாயம் சிலருக்கு உருவாகியது. எதைச் சொன்னால் லாண்டா செய்தது நியாயமாகும் என யோசித்தார்கள்? அதற்கு அவர்கள் ஒரு 'துருப்புச் சீட்டைக்' கையில் எடுத்தார்கள். அந்த துருப்புச் சீட்டுத்தான், 'மாயன்கள் நரபலி கொடுக்கும் மிருகங்களுக்கு ஒப்பானவர்கள். இவர்கள் மனிதர்களே இல்லை. மிகவும் கொடூரமான பயங்கரவாதிகள்' என்னும் சிந்தனையை விதைப்பது. கொடூரமான மிருகங்களின் நூல்களும் கொடூரமானதாகத்தானே இருக்கும். அதை அழித்தால் தவறில்லை அல்லவா? இந்த நினைப்பை உலகிற்கு நிலை நாட்டத் திட்டமிட்டார்கள். இதன் இன்றைய ஒரு வடிவம்தான் 'மெல் கிப்சன்' எடுத்து வெளியிட்ட 'அபோகலிப்டோ' என்னும் மாயன்கள் பற்றிய கொடூரமான சித்தரிப்புப் படம் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மாயன்களின் மதங்களையும், அவர்களின் நிலைப்பாடுகளையும் சில கோணங்களில் அவதானிக்கும்போது, இந்துக்களின் சாயல் அவர்களுக்கு இருக்கிறதோ என்னும் எண்ணம் பலருக்குத் தோன்றாமல் இல்லை. மாயாக்களுக்கும் இந்துக்களுக்கும் சம்பந்தம் உண்டா என்ற ஆராய்ச்சியும் சிலரால் மேற்கொள்ளவும் பட்டது. அப்போது அவர்களுக்குக் கிடைத்த சில பதில்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. இந்துக்கள் என்ன இந்துக்கள், மாயன்களுக்கும் தமிழர்களுக்குமே சம்பந்தம் உண்டு என்று நான் சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?


"என்னடா இது? இதுவரை நன்றாகத்தானே எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது, என்ன ஆச்சு இவருக்கு?" என்றுதானே நினைக்கிறீர்கள்? "குமரிக் கண்டம், லெமூரியாக் கண்டம் என்று இவரும் ஆரம்பிக்கப் போகிறாரோ?" என்றும் யோசிக்கிறீர்கள். இல்லையா?


'இல்லை, நிச்சயமாக இல்லை' நீங்கள் இதுவரை நினைக்க முடியாத, கேள்விப்பட்டிராத கோணத்தில் இந்தத் தொடர்பு இருக்கிறது என்பதற்கு சாத்தியங்கள் சில உண்டு. இதை நான் சொன்னால், நீங்கள் நம்பவே தேவையில்லை. வேறொருவர் சொன்னால்?  அதுவும் அவர் ஒரு அமெரிக்க வரலாற்று ஆய்வாளர் என்றால் நம்புவீர்களா?


அந்த அமெரிக்க ஆய்வாளர் என்ன சொன்னார் தெரியுமா? சொல்கிறேன்....!



பிற்குறிப்பு: கிருஸ்தவ மதவாதிகள் என்று இங்கு நான் குறிப்பிடுவது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அடிப்படைப் பழமைவாதிகளைத்தான். இன்று இருக்கும் யாரையும் அல்ல. யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை-ராஜ்சிவா.










"மாயன் இனத்துக்கும், நம் தமிழ் இனத்துக்கும் தொடர்பு இருந்திருக்கலாமா……? அதற்குச் சாத்தியங்கள் உண்டா.........?"  என்ற கேள்வியைக் கடந்த பதிவில் கேட்டு முடித்திருந்தேன். நமது இனம், தமிழ் இனம் என்பதால் தமிழுக்கு மதிப்பையும், மரியாதையையும் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணம் நமக்கு எப்போதும் இருந்து வருகிறது. இதனால் தமிழின் பெருமைகளைச் சந்தர்ப்பம் கிடைக்கும்போது சொல்லும் தந்திரமாகச் சிலர் இதைப் பார்க்கலாம். ஆனால் தமிழின் பெருமைகளை நாம் அறிந்திருப்பதை விட, வெளிநாட்டவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இந்தத் தொடரை நான் எழுதுவதற்குப் படித்தவைகளும், காணொளிகளாகப் பார்த்தவைகளும் ஏராளம். பல வரலாற்று அறிஞர்களின், அறிவியலாளர்களின் படைப்புகளையும், மேற்கோள்களையும் படித்திருக்கிறேன். அதில் விசேசம் என்னவென்றால், அவர்கள் அனைவரும் மனித வரலாற்றின் புராதன ஆச்சரியங்களைப் பற்றிச் சொல்லும்போது, ஏதாவது ஒரு இடத்தில் இந்து மதத்தைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் குறிப்பிடாமல் இருந்ததில்லை. இந்து மதம், சமஸ்கிருதம் என்று அவர்கள் கூறிவிட்டு, அவர்கள்  மேற்கோள் காட்டுவதில் பெரும்பான்மையானவை தமிழ்நாட்டுப் புராதன அடையாளங்களாகத்தான் இருக்கின்றன.


மாயன் இனம் கொண்டிருந்த அறிவியல் வளர்ச்சியே, நாம் அவர்கள் பற்றி இன்றும் விரிவாகப் பேசுவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. மாயன்களின் சரித்திரத்தில், குறிப்பாக நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விசயமே, அவர்களின் 'மாயா' என்னும் பெயரைத்தான். 'மாயா' என்னும் இனமாக இருப்பதால், அவர்களை நாம் 'மாயன்கள்' என்று சொல்கிறோம். ஆனால் இதில் நாம் அவதானிக்க வேண்டிய இன்னுமொரு விசயம், உலகில் 'மாயா' என்னும் சொல், மாயா இனத்தவர்கள் தவிர்ந்து, வேறு ஒரே ஒரு பெரு நிலத்தில் மட்டும்தான் பாவனைக்கு இருந்திருக்கிறது. இன்றும் இருக்கிறது. அது எங்கு என்று உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதே இல்லை. இலங்கை, இந்தியா சார்ந்த இடங்களில் மட்டுமே இந்த 'மாயா' என்னும் சொல் பரவலாகப் பாவிக்கப்படுகிறது.


'2012ம் ஆண்டு உலகம் அழியும்' என்று மாயன்களின் நாட்காட்டியில் சொல்லப்பட்டிருக்கிறது என்று அறியப்பட்டது முதல், மாயன் பற்றிப் பேசாதவர்கள் உலகத்திலேயே இல்லை என்றே சொல்லலாம். இதனால் ஆராய்ச்சியாளர்கள் கூட்டம் மத்திய அமெரிக்காவில் உள்ள மாயன் நிலங்களை நோக்கிப் படையெடுத்தபடியே இருக்கிறது. ஆனால் இதை இன்று வரை யார் கவனித்திருக்க வேண்டுமோ, அவர்கள் அதாவது இந்தியா மற்றும் இலங்கையில் வாழும் யாரும் கவனத்தில் எடுக்கவில்லை. இந்த மன நிலை ஏன் நமக்கு இருக்கிறது என்று கேட்டால், வேதனைக்குரிய பதிலே நமக்குக் கிடைக்கும். அதனால் அதை அப்படியே விட்டு விடலாம். ஆனால் நாம் இதைக் கவனிக்கத் தவறினாலும், மேற்கத்தைய ஆராய்ச்சியாளர்கள் இதைக் கவனித்து, இது பற்றி விரிவாகவே ஆராய்ந்திருக்கிறார்கள். அதில் குறிப்பாக உங்களுக்கு நான் சுட்டிக் காட்ட விரும்புபவது, அமெரிக்காவில் பிறந்த எழுத்தாளரும், சரித்திர ஆய்வாளருமான 'மாட்லாக்' (Gene D.Matlock) என்பவரைத்தான். மாட்லாக் என்பவர் தமிழனுக்கும், இந்துக்களுக்கும், மாயன்களுக்கும் சம்பந்தம் உண்டு என்று உறுதியாகச் சொன்னார். இவர் இது பற்றி நிறையப் புத்தகங்கள் எழுதி வெளியிட்டும் இருக்கிறார். இனி நான் எழுதப் போகும் பல விடயங்கள் அவர் சொன்னதை முன்வைத்துச் சொல்வதாகவே இருக்கும். இந்தக் கருத்துகளில் முரண்பாடு இருப்பவர்கள் முதலில் மாட்லாக்கைத்தான் குற்றம் சாட்ட வேண்டும்.





மாயா என்ற சொல் நம்மிடையே எங்கெல்லாம் பயன்பட்டிருக்கிறது என்பதை முதலில் பார்ப்போம்……..!
'மாயா' என்னும் தெய்வம் நம்மிடையே உண்டு. 'மாயா' என்பது ஒரு தத்துவமாகவும் நம்மிடம் உண்டு. 'மாயா' பற்றிப் பகவத் கீதையில் நிறையவே சொல்லப் பட்டிருக்கின்றது. 'மாயாலோகம்' என்று ஒரு உலகம் உண்டு என்ற நம்பிக்கையும் நம்மிடையே உண்டு. 'மாயா தேவி' என்பவர் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, கௌதம புத்தரின் தாயாராக இருந்திருக்கிறார். அத்தோடு, 'மாயை' என்னும் சொல், பெயர்ச் சொல்லாகவும், வினைச் சொல்லாகவும் நம் மொழியில் பாவிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதிகம் ஏன், இலங்காபுரியை அழகுற அமைத்தனர் 'மயன்' என்று சொல்லப்படுபவர்  பற்றி  நமது புராணங்களிலேயே இருக்கிறது. கட்டடக் கலையில் வல்லவர் மயனா? மாயனா? நீங்களே சிந்தியுங்கள்.





"இங்கு 'நமக்கு' என்று நான் சொல்வது யாரை?" என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழலாம் அல்லவா? இந்தியா, புத்தர், இந்துமதம், தமிழர் என்று கலந்து கட்டிச் சொல்லியிருக்கிறேன். இதில் எப்படி மாயன்களையும், தமிழர்களையும் மட்டும் தொடர்புபடுத்திக் குறிப்பிட்டு நான் சொல்ல முடியும்?


சொல்கிறேன்......!

உண்மையில் 'மாயை' என்னும் சொல் பழந்தமிழிலிருந்தே இந்திய அனைத்து மொழிகளுக்குள்ளும் நுழைந்திருக்க வேண்டும். 'மயக்கம்' என்னும் சொல்லின் அடியாகப் பிறந்ததே இந்த 'மாயை' என்னும் சொல். இதுவே பிற்காலத்தில் வேறு மொழிகளுள் புகுந்திருக்கிறது. இதற்கு ஆதாரமாகத் தமிழனின் ஆதிகாலச் சிறு தெய்வங்களில் ஒன்று, 'மாயாண்டி' என்று அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், தமிழர்கள் பலர் தங்களுக்கு மாயாண்டி எனப் பெயர்களை இப்போதும் கொண்டிருக்கின்றனர். தமிழர்களின் பழம் பெரும் நூல்கள் அனைத்திலும் மாயை என்னும் சொல் இருக்கிறது. தமிழர்களின் மதமான, சைவசமயத்தின் சைவசிந்தாந்தத்தில் குறிப்பிடப்படும் மும்மலங்களில், ஆணவம், கன்மத்துடன் மாயையும் ஒரு மலமாக வருகிறது. அத்தோடு திருமந்திரம், திருவருட்பயன் என்னும் நூல்களில் மாயை என்னும் சொல் பயன்பாட்டில் இருக்கிறது. உண்மையில் மாயை என்பது தமிழர்கள் பாவித்த ஒரு சொல்லாகவே பார்க்கின்றனர் மேற்குலக ஆராய்ச்சியாளர்கள். அப்படி இல்லாமல் போனாலும் பரவாயில்லை.

நாம் பேசிக் கொண்டு வரும் மாயன் சரித்திரங்கள் எல்லாமே, இன்றிலிருந்து ஆயிரம் வருடங்களிலிருந்து பத்தாயிரம் வருடங்கள் வரைக்கும் முற்பட்ட காலத்திற்கு உரியவை. இந்தக் கால இடைவெளிகளில், உலகில் பல நாகரீகங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. ஆனால் மிக மிக ஆரம்ப கால நாகரீகங்கள் எனப் பார்க்கும் போது, அதில் சிந்து வெளி நாகரீகமும் ஒன்றாக அடங்குகிறது. இது 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நாகரீகம். சிந்து வெளி நாகரீகம் தமிழர்களின் நாகரீகமாகும். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் தேசத்தில் உயிர்ப்புடன் இருந்த ஒரே மொழி தமிழ் மொழி மட்டும்தான். மாயன் இனத்தின் பெயருக்கும் நம்மிடையே வழங்கி வந்த இந்த மாயா என்னும் பெயருக்கும் உள்ள தொடர்பு தற்செயலானதாக இருக்கலாம் எனத் தோன்றவில்லை. உலகில் வேறு எங்குமே இல்லாத மாயா எப்படி நம்மிடத்தில் மட்டும் வந்தது? அதுவும் இவ்வளவு பரவலாக.....!


"அட! இது ஒன்றை வைத்து எப்படி இவ்வளவு சாதாரணமாக, அந்த மாயனும், இந்த மாயனும் ஒன்று என்று இவர் சொல்லலாம்" என்று நீங்கள் யோசிப்பதற்குப் பதில் வேறு வடிவில் இருக்கிறது. மாயன் இனத்துக்கும், நமக்கும் இந்தப் பெயர் ஒற்றுமை என்பதில் மட்டும்தான் தொடர்பா என்று பார்த்தால்………! ஆச்சரியமான வேறு சில தொடர்புகளும் தெரிகிறது. அவை என்ன தெரியுமா? நீங்களே பாருங்கள்………..!


தமிழர்கள் முற்காலத்தில், கப்பலில் மேற்கு நோக்கிக் கடற் பயணத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகள் நிறையக் கிடைத்திருக்கின்றன. அப்படி அவர்கள் பயணம் செய்தபோது பாவித்த வரைபடங்களாகக் கீழே கொடுக்கப்பட்ட இவை இரண்டும் எமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்த இரண்டு வரைபடங்ககளையும்  சரியாகக் கவனியுங்கள். ஆங்கிலத்தில் குறிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் எமது விளக்கத்திற்காகக் கொடுத்திருக்கின்றனர்.





முதலாவதாக இருக்கும் வரைபடத்தின்படி, Kethumal (Chethumal) என்னும் மாயன் இடம் வரை மேற்கே தமிழர்கள் சென்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது. கீழே உள்ள தற்கால வரைபடத்தின் மூலம் அந்த Chethumal எங்கிருக்கிறது என்பதை நீங்கள் சரி பார்த்து அறிந்து கொள்ளலாம். அத்துடன் தமிழர்கள் பிரயாணம் செய்த கப்பல், படத்தில் இருப்பதாகவும் இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.








இது பற்றி மாட்லாக் என்ன சொல்கிறார் என்பதைப் பாருங்கள். அவரது மொழியிலேயே அதை நேரடியாக உங்களுக்குத் தருகிறேன்......!


THE MAYANS WERE TAMILS.

I am now ready to return to the hypothetical voyage of Tamils to America. They probably used two types of maps. The map below-left shows Mt. Meru with petals pointing in four directions. The left petal points toward a distant land called Ketumal or Chetumal. In order to reach that land, they had to go eastward in order to avoid sailing around the tip of Africa. They knew where they were going, for they had been there before! The map below-right was their own map of the world.

The Mayans said that the land of their forefathers lay 150 days westward.

 When the Tamils arrived in North America, they crossed over to what is now the Caribbean Sea, through the Isthmus of Panama (The Great Crossing). After coming out the other side, they docked in the safe harbor of Chetumal. It still bears the same name. Chetumal harbor is in Belize. Belize derives from Belisha (God Shiva).

'இந்த ஆதாரங்கள் மட்டும் போதாது' என்று நீங்கள் நினைத்தால். தமிழரசனான, பல்லவ அரசனின் மாமல்லபுரக் கட்டடங்களையும், மாயனது கட்டடங்களையும் சற்றே ஒப்பிட்டுப் பாருங்கள்.


இவை மாமல்லபுரக் கட்டடங்கள்...........!







இவை மாயன் கட்டடங்கள்...........!






குறிப்பாக மாயனின் முக்கிய கட்டடம் ஒன்றும், மாமல்லபுரக் கட்டடம்  ஒன்றும் அச்சு அசலாக ஒன்று போலக் காணப்படுகிறது.  இது தற்செயலாக இருக்க முடியுமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். இந்த ஆதாரமும் போதாது என்று நீங்கள் அடம் பிடித்தால், ஆதிகாலத்தில் நமது மூதாதையர்கள் விளையாடிய விளையாட்டான 'சொக்கட்டான்' அல்லது 'தாயம்' என்று அழைக்கப்படும் விளையாட்டு ஓலைச் சுவடியில் வரையப்பட்டிருப்பதைப் பாருங்கள். அதே விளையாட்டு, மாயன்களும் அதே வரைபடம் கொண்டு வரைந்து விளையாடியிருக்கிறார்கள் என்றால் என்ன சொல்வீர்கள்? இதுவும் தற்செயலா.....?







சரி, இவையெல்லாவற்றையும் விட்டுவிடலாம்………..! மாயன்களுக்கும், நமக்கும் உள்ள சில பெயர்களின் ஒற்றுமைகளை இப்போது பார்க்கலாமா? இலங்கை என்னும் பெயர் நீங்கள் அறிந்ததே! தமிழில் இலங்கம், இலங்கா என்பது மருவி இலங்கை என்றாகியது. ஆனால் மாயனின் பல இடங்களின் பெயர்கள் 'லங்கா' என்பதில் முடிகிறது. குறிப்பாகச் 'சிலங்கா' என்ற ஓசையுடன் உள்ள Xilanca என்னும் மாயன் இடமும், 'இக்ஸ்பலங்கா' என ஓசை வரும் Xbalanca என்பதும், 'பலங்க' என்று ஓசை வரும் Palenque என்னும் இடமும் எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. அத்துடன் சேரன் (Ceran) என்னும் மாயனின் அரசன் பெயரும் வியப்பளிக்கிறது.



"முடியாது! முடியவே முடியாது! இதை எல்லாம் ஒத்துக்கவே முடியாது" என்று நீங்கள் இன்னும் நம்ப மறுத்துப் பிடிவாதம் பிடித்தால், அடுத்து நான் சொல்லப் போவதை அவதானமாக கவனியுங்கள். உலகமே மாயன்களையும், எகிப்தியரையும் அவர்களின் கட்டடக் கலைக்காக மிகவும் வியக்கிறது. அதிலும் குறிப்பாக அவர்கள் கட்டிய பிரமிட்டை வியப்புடன் பார்க்கிறது. 'பிரமிட்' என்றால் எகிப்தியரைப் பொறுத்தவரை இறந்தவர்களை அடக்கம் செய்த இடமாகிறது. ஆனால் மாயனைப் பொறுத்தவரை அவர்களின் பிரமிட்டுகள் கடவுளுக்காகக் கட்டப்பட்ட கோவில்கள். புனிதமான இடங்கள். ஆனால் இங்கு நாம் கவனிக்கத் தவறிய மிகப் பெரிய விசயம் ஒன்று உண்டு. பிரமிட் என்றால் அதன் வடிவம் என்ன? நான்கு பக்கங்களும்  தட்டையான தளங்களையுடைய, கூம்பு போன்ற ஒரு அமைப்புத்தானே! அப்படிப் பார்த்தால், நமது கோவில்களின் கோபுரங்கள் அனைத்துமே பிரமிட் வடிவங்களில்தானே கட்டப்பட்டிருக்கின்றன. இதை நாம் எப்படிக் கவனிக்காமல் விட்டோம்? நமது கட்டட வடிவத்தை அவர்கள் கவர்ந்து கொண்டார்களா? இல்லை, அவர்களது கட்டட வடிவத்தை நாம் பெற்றுக் கொண்டோமா..? இதற்குப் பதில் மாயன்களின் சரித்தி ரலேயே உண்டு. 'மாயன்களுக்குக் கிழக்கிலிருந்து வந்தவர்கள்தான் சகல அறிவையும் கற்றுத் தந்தார்கள்' என்று இருக்கிறது. அப்படிக் கிழக்கில் இருந்து வந்தவர்கள் ஒன்று சுமேரியராக இருந்திருக்க வேண்டும் இல்லை தமிழர்களாக இருந்திருக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால், சுமேரியர்கள் கூடத் தமிழர்களின் தொடர்புள்ளவர்களாக இருக்கச் சாத்தியம் உண்டு. இவையெல்லாவற்றுக்கும் சாட்சியங்களும் உண்டு. இப்போது மாயன்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதற்கு சாத்தியங்கள் உண்டு என்பதை நீங்களே பார்த்தீர்கள். அத்துடன் இன்னுமொரு முக்கியமான இந்தக் கோவில்களின் அமைப்பையும் பாருங்கள். ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள். உதாரணத்திற்கு மாயனின் கோவில் ஒன்றையும், அதாவது பிரமிட் ஒன்றையும், நமது கோவில் கோபுரம் ஒன்றையும் படமாகத் தருகிறேன் பாருங்கள்.




இதற்கு மேலும் நான் ஆதாரங்களைத் தேடித் தர வேண்டியது இல்லை என்றே நம்புகிறேன். ஆனாலும், கோவில்களின் கோபுரங்களுடன் நமது அடுத்த ஒரு பிரமிக்கத் தக்க ஆய்வொன்றைச் செய்து விட்டு மேலே செல்லலாம். நீங்கள் இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களை நிச்சயம் மறந்திருக்க மாட்டீர்கள். அதில் நான் மாயன்களுக்கும், ஏலியன்களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனப் பல சாட்சியங்களைத் தந்திருந்தேன். மாயன்களுக்கு இவ்வளவு பிரமிக்கத்தக்க அறிவை யாரோ கொடுத்திருக்க வேண்டும். அவர்கள் ஏலியன்களாகவும் இருக்கச் சாத்தியம் உண்டு எனப் பல அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறேன். ஒருவேளை அப்படி இருந்திருந்தால், அந்த ஏலியன்கள், பறக்கும் விமானத்தின் மூலமாகத்தான் மாயன்களை வந்தடைந்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி என்றால் விமானம் என்பதும் இங்கு முக்கியமாகின்றது அல்லவா?


இப்போது  மிகவும் ஆச்சரியப்படக் கூடிய ஒரு செய்தியைக் கவனியுங்கள். நாங்கள், நமது கோவில்களின் கோபுரங்களை எப்படி அழைப்போம் தெரியுமா? 'விமானம்' என்றுதான் அழைக்கிறோம். அதேநேரம், எமது பண்டைய காவியங்களில் பறந்து வரும் ஒவ்வொரு உபகரணமும் விமானம் என்றுதான் அழைக்கப்பட்டிருக்கிறது. இது உங்களை ஆச்சரியப் படுத்தவில்லையா? கட்டடமும், பறக்கும் சாதனமும் ஒரே பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ஒற்றுமை உலகில் வேறு எந்த மொழிகளிலுமோ, இனங்களிலுமோ கிடையாது. இது எப்படிச் சாத்தியமாயிற்று.


சிவபுராணத்தில் வரும் மிக முக்கியமான ஒரு கதையையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும். 'தாரகாசுரன்' என்னும் அசுரன், முருகனால் அழிக்கப்பட, அவனது மூன்று மகன்களான  வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகியோர் கடுந்தவம் செய்து, சிவனிடமிருந்து மூன்று பறக்கும் கோட்டைகளைத் தவமாகப் பெறுகின்றனர். பொன், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று உலோகங்களாலானவை அந்தக் கோட்டைகள். அந்தக் கோட்டைகளின் மீதேறிப் பறந்தபடி தேவர்களை அவர்கள் மூவரும் துன்புறுத்தினார்கள் என்பது புராணம். இப்போது நமது கேள்வி என்னவென்றால், கோட்டைகள் பறக்குமாயின், கோவில் கோபுரங்களும் அதை அடையாளப்படுத்தும் ஒரு கட்டட வடிவமா?  அதனால்தான் அவற்றிற்கு விமானம் என்று பெயர் வந்திருக்கலாமா?  அதாவது எம்மூதாதையரிடமிருந்த கோபுரங்கள் எல்லாம் பறக்கும்  தன்மை உள்ளவையாக இருந்திருக்கலாமா? இதில் மிகப்பெரிய இன்னுமொரு ஆச்சரியம் என்ன தெரியுமா? மேற்சொன்ன மூன்று பறக்கும் கோட்டைகளையும் வடிவமைத்துக் கட்டியவர் வேறு யாருமல்ல. சாட்சாத் 'மயன்' (மாயன்) என்பவர்தான். என்ன பெயர்ப் பொருத்தம் பிரமிப்பாக இல்லையா? நம்மிடம் இன்னுமொரு கதையும் உண்டு. இராவணனின் மனைவி மண்டோதரியின் தகப்பனான மயன், 'மாயா இராட்சியம்' அதாவது 'மாயா ராஷ்ட்ரா' என்னும் இராச்சியத்தைக் கட்டினான். அதுதான் 'மகாராஷ்ட்ரா'வா தெரியவில்லை. எங்கும் மாயா, எதிலும் மாயா என்று பார்க்கும் போது ஆச்சரியமாக இல்லையா?


நம்மிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. எந்த ஒரு  அமானுஷ்ய சக்திக்கும் உடனடியாக, ஒரு தெய்வீகத் தன்மையைக் கொடுத்து விடுகிறோம். சாதாரண வாழ்க்கையில் இருப்பதை விட, அசாதாரணமாக எது இருந்தாலும், அதைக் கடவுள் தன்மையுடன் இணைத்து விடுகிறோம். இது சரியா? தப்பா? என்ற விவாதத்திற்கு நாம் இப்போது போகத் தேவையில்லை. ஆனால், இப்படி எல்லாவற்றுக்கும் தெய்வீகத் தன்மை கொடுத்து விடுவதால், அவை பற்றி ஆராய எம்மால் முடியாமல் போகிறது. மிகப்பெரிய தடங்கலாக நாம் கொடுக்கும் அந்தத் தெய்வீகத் தன்மை அமைந்து விடுகிறது. நம்பிக்கைக்குரிய விசயங்களை ஆராய்வது மிகப்பெரிய தவறாக ஆகிவிடுகிறது. ஆனால், மேலை நாடுகளில் இவற்றையெல்லாம் ஆராய்ச்சிக்குரிய, ஆச்சரியங்களாகவே பார்க்கின்றனர். அதனால் அவை பற்றிய ஒரு சரியான, விழிப்புணர்வான முடிவுக்கு அவர்களால் வரமுடிகிறது.


மாயா, எகிப்து போன்ற இடங்களில் இருப்பதை விட விண்வெளி சம்பந்தமான ஆச்சரியங்கள் இந்துக்களிடத்தில்தான் மிக அதிகமாகக் காணப்படுகிறது. மாயாக்களும், எகிப்தியரும் தங்கள் மர்மங்களை ஆராய்ச்சி மூலமாக வெளிக்கொண்டு வர முயற்சி செய்யும் நேரத்தில், இந்துக்கள் தங்கள் ஆச்சரியங்களை கடவுளர்க்குள் திணித்துவிட்டு ஆராயப் பயப்படுகிறார்கள். இராவணன், சீதையைக் கவர்வதற்குப் 'புஷ்பக விமானம்' பயன்படுத்தியது. இந்திரன் வானுலகத்தில் இருந்து தனது பறக்கும் தேரில் பூமிக்கு வந்தது. மணிமேகலை 'மயில் பொறி' என்னும் இயந்திரத்தின் மூலமாக, இலங்கைக்குப் பறந்து சென்றது. கருடன், மயில், அன்னம் போன்ற பறவைகளை வாகனமாக்கி, வானில் கடவுள்கள் பறந்தது. இப்படிப்பட்ட பலவித இந்து மதக் கதைகளை நாம் நிறையவே படித்திருக்கிறோம். இவற்றை ஒரேயடியாகப் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்று அப்படியே ஒதுக்கித் தள்ள முடியாது. இவற்றிற்கு கடவுள் தன்மை கொடுக்கப்பட்டதால் மூடநம்பிக்கை என்னும் ஒரு நோக்கால், பகுத்தறிவுவாதிகளால் இது எதிர்க்கப்படுகிறது. ஆனால் இவற்றை விண்வெளி சார்ந்த 'மிஸ்டரி' வகை மர்மங்களாகப் பார்த்தால், ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்திப் பார்த்தால் எமக்குக் கிடைக்கும் உண்மைகள் வேறாக இருக்கும்.





உதாரணமாக, மேலே இருக்கும் இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அதில் மேலே இருப்பது ஒரு நவீன விண்வெளிப் பயணி. கீழே இருப்பது விநாயகர். இரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பாருங்கள். "இப்படியும் இருக்கலாமோ?" என்று எம்மை யோசிக்க வைக்கிறது அல்லவா? இங்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்குப் புரியலாம். மேற்கிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் பகுத்தறிவு என்னும் பெயரால், யானைத் தலையுடன் எப்படிக் கடவுள் இருக்க முடியும் எனக் கேலி செய்யாமல், அதை ஆராய்ச்சி மனப்பான்மையுடன் பார்த்ததால் அவர்களுக்கு இப்படி ஒரு பார்வை தோன்றியுள்ளது. அதாவது, விநாயகர் என்னும் கடவுள் விண்வெளியில் இருந்து வந்து இறங்கிய ஒருவராக இருக்கலாமோ என்று யோசிக்கின்றனர். ஆனால் இதை இங்கு நமது நாட்டில் ஆராய்ந்தால், எவ்வளவு எதிர்ப்புகள் எந்த எந்தப் பக்கத்தில் இருந்து கிளம்பும் என்று சிந்தித்துப் பாருங்கள்.


இப்படியான மதக் கதைகள் பகுத்தறிவுக்கு ஒத்துவராமல் இருந்தாலும், இக்கதைகள் ஏன் உருவாக வேண்டும் என யோசிக்க வேண்டி இருப்பது என்னவோ உண்மைதான். கடவுள் என்னும் ஒரு கருத்துக்குள் இதை அடக்கி விடாமல் அறிவியலாக நோக்கினால், ஆதிகாலத்து பாரத மக்கள் எதையாவது கண்டு இருக்கலாமோ என்றே எண்ண வைக்கிறது. அப்படித்தான் மேலைத்தேச ஆராய்ச்சியாளர்கள் சிந்திக்கிறார்கள். இங்கு மூன்று முக்கிய கேள்விகள் எழுகின்றன. 1. கடவுள் என்பவர் பூமிக்கு வெளியே, வானத்தில் இருந்து வந்தவர் என்ற கருத்து ஏன் வந்தது? 2. கடவுள்கள் தலைகளில் கிரீடம் போன்ற ஒன்றை அணிந்தபடியே ஏன் காட்சியளிக்க வேண்டும். 3. கடவுள்கள் விமானங்கள், பறக்கும் தேர்கள் அல்லது அது போன்ற ஏதோ ஒன்றைப் பாவித்து ஏன் பறக்க வேண்டும்? இந்த மூன்று விசயங்களையும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்........!


இவை ஏன் இப்படியும் இருந்திருக்க முடியாது. மாயன் இனத்தவர்கள் கண்டார்கள் எனச் சொல்லப்படுவது போல, நமது முன்னோர்களும் தலையில் கவசம் அணிந்து, விண்வெளியில் இருந்து பறக்கும் ஒரு சாதனத்துடன் வந்த எவரையாவது கண்டிருக்கலாமல்லவா....? இவ்வளவு ஆழமாக இதை ஏன் சொல்ல வேண்டி உள்ளது என்று நான் உங்களுக்கு விளக்க வேண்டும். இந்து மதக் கதைகள் பற்றி நான் சொல்லும்போது, "இது எல்லாம் எங்களுக்குத் தெரிந்தவைதானே" என்று உங்களுக்கு ஆர்வம் குறைவாகவே இருக்கும். ஆனால் உங்களுக்குத் தெரியாத பல விசயங்களும் நம்மிடையே உண்டு என்பதுதான் யதார்த்தம். இப்போது நான் சொல்லப் போவதும் அப்படிப்பட்ட ஒன்றைப் பற்றித்தான். அதுவும் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே உங்களைக் கூட்டிச் செல்லும்.


நமது வேதங்களிலும் புராணங்களிலும், பழைய நூல்களிலும் உள்ள குறிப்புகளை வைத்து, பரத்வாஜ முனிவரால் எழுதப்பட்டது என்று கருதப்படும் நூல் ஒன்று, 'சுப்பராயா சாஸ்திரி' (Subbaraya Sastry) என்பவரால் தொகுக்கப்பட்டது. அந்த நூலின் பெயர் 'வைமானிக சாஸ்திரம்' (Vymaanika Shaastra - விமான சாத்திரம்). சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட அந்த நூல், 1918 ம் ஆண்டளவில் தொகுக்கப்பட்டது. பின்னர் அதை ஆங்கிலத்தில் ஜோஸ்யர் (Josyer) என்பவர் மொழிபெயர்த்தார்.




பண்டைய காலங்களிலேயே இந்துக்கள் விமானங்களைப் பற்றியும், அவற்றைச் செய்யும் முறைகளைப் பற்றியும் கூறியது, அதில் விளக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது. மொத்தமாக நான்கு வகை விமானங்களை இந்துக்கள் பாவித்தார்கள் என்றும் அதில் சொல்லப் பட்டிருக்கின்றது. 1.சகுன விமானம் (Shakuna Vimana), 2. சுந்தர விமானம் (Sundara Vimana), 3. ருக்ம விமானம் (Rukma Vimana), 4. திரிபுரா விமானம் (Tripura Vimana) என்னும் நான்கு வகை விமானங்கள்தான் அவை. அவற்றைப் பற்றி நான் சொற்களால் புரியவைப்பதை விடப் படங்களைப் பார்க்கும்போது நீங்கள் அதிகம் புரிந்து கொள்வீர்கள். அவற்றையும் அவை சம்பந்தப்பட்ட படங்களையும் இப்பொழுது தருகிறேன் பாருங்கள்.


இதுதான் சகுன விமானம்













இதுதான் சுந்தர விமானம்










இதுதான் ருக்ம விமானம்









இதுதான் திரிபுரா விமானம்











என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா...? நம்மிடம் இப்படி ஒரு அறிவியல் இருந்திருக்கிறதா என்ற வியப்பு வருகிறது அல்லவா? அந்தக் காலத்தில் இது எப்படிச் சாத்தியம்? இப்போது எங்கள் கடவுளர்கள் உலாவரும் தேரின் வடிவத்தையும் மனதில் எடுத்துப் பாருங்கள். மேலே கொடுக்கப்பட்டிருக்கும்  விமானங்களில் சில, தேர்களின் வடிவில் இருக்கிறது எம்மை ஆச்சரியப்படுத்துகிறது. தேர்களும், கோவில் கோபுரங்களும் உண்மையில் விமானங்களாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறதாகத் தெரிகிறது அல்லவா? இவற்றை ஒட்டித்தான் நாம் அதை ஒரு வழிபாட்டு முறையாக மாற்றிவிட்டோமா?

மேலே சொன்னவையெல்லாம் வைமானிக சாஸ்திரம் என்பதில் சொல்லப்பட்டு, அதன்பின் 1918 இல் சுப்பராயா சாஸ்திரிகளின் நூலின்படி வடிவம் கொடுக்கப்பட்ட விமான வரைவுகள். இது மட்டுமல்ல, இந்த விமானங்களை எப்படி எப்படி இயக்க வேண்டும், இயக்குபவர்கள் எப்படி உடை அணிய வேண்டும், எத்தனை பேர் அமர்ந்து இந்த விமானங்களில் செல்ல வெண்டும் என்பது எல்லாமே அட்சர சுத்தமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சில வகை விமானங்கள் போருக்கும் பயன்படுத்தப்படுமாம். அத்துடன் இந்த விமானங்களைப் பாதரசத்தைத் திரவ நிலைக்கு உள்ளாக்கி, அதனை அதி வேகமாகச் சுற்ற வைப்பதனால் பெறப்படும் ஒருவித சக்தியினால் இயக்கலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. நமக்குத்தான் இவை பற்றிக் கவலை இல்லையே! அதிகபட்சமாக இவற்றைத் தெரிந்து கொண்டால், கடவுளைப் போற்றிவிட்டு நமது வேலையைப் பார்க்கச் சென்று விடுவோம். ஆனால் மேலைத் தேச அறிஞர்கள் இந்த வைமானிக சாஸ்திரத்தைப் புகழோ புகழென்று புகழ்கின்றனர். புராதன அறிவியல் பற்றிப் பேசும் ஒவ்வொரு இடங்களிலும் இதை முன்வைத்து சிலாகிக்கின்றனர். எமக்குத் தெரியாதது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இதில் ஒருபடி மேலே போய், இரண்டாம் உலகப் போரின் சமயங்களில், ஹிட்லரின் விஞ்ஞானிகள் மேற்படி வைமானிக சாஸ்திரத்தை மையமாக வைத்து பறக்கும் தட்டு ஒன்றைத் தயாரித்துப் பறக்கவிட்ட செய்தியும் உண்டு. பறக்கும் தட்டை ஜெர்மன் தயாரித்தது வதந்தி அல்ல. மிக நிச்சயமான உண்மை.

இவ்வளவு ஆச்சரியங்களுக்குக் காரணமான மாயன்களுக்கும், மாயன்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படும் நமது முன்னோர்களுக்கும் இடையே இருப்பவை எம்மைத் தலை சுற்ற வைப்பவை. அதைவிட ஆச்சரியம், நாம் தற்சமயம் உலகெங்கும் விளையாடும் கால்பந்தாட்டத்துக்கும், 'சிபால்பா' என்னும் அழிக்கும் கடவுள் இருக்கும் இடத்துக்கும், 2012 இல் உலகம் அழிவதற்கும் உள்ள  சம்பந்தம். நமது அழிக்கும் கடவுளின் பெயர் 'சிவா' என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


"என்ன? மாயன்கள் கால்பந்து விளையாடினார்களா? கால்பந்துக்கும் உலக அழிவுக்கும் சம்பந்தமா?" என்றுதானே கேட்கிறீர்கள்? அது இன்னுமொரு அசத்தலான மாயனின் ஆச்சரியம். அது என்ன ஆச்சரியம் என்பதை அடுத்த தொடரில் விளக்குகிறேன்.   


தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்..





'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-7.