Saturday, September 15, 2012

பிரிட்டனின் புகழ் பெற்ற இஸ்லாமிய அமைப்பான "IERA"

 

எதிர்க்குரல் : IERA (Islamic Education and Research Academy)..

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

rahmanfayed : இந்த பதிவில் உள்ள பல தகவல் சகோதர் அஷிக் அகமதுன் எதிர்க்குரல் வலை இருந்து சேகரித்து ஒரே பதிவாக பதிவாக செய்துள்ளேன்... IERA இஸ்லாமிய அழைப்பு பணியின் தகவை பதிவு செய்கிறேன்..

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். பெருமளவில் இஸ்லாமை தழுவும் பிரிட்டன் மக்கள்.

இது, கடந்த சில நாட்களுக்கு முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.   

ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.

கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது.


----------------------
"பிரிட்டனில் எத்தனை மக்கள் இஸ்லாமை தழுவி இருக்கின்றார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட மிக விரிவான மதிப்பீடு முயற்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறுகின்றது. 

இஸ்லாம் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் அதிகமிருந்தாலும், ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமை தழுவுகின்றார்கள். 
ஆனால், Faith Matters அமைப்பின் புதிய ஆய்வு, இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை இருக்கலாமென தெரிவிக்கின்றது. (அது மட்டுமல்லாமல்) ஒவ்வொரு வருடமும் சுமார் 5000 பிரிட்டன் மக்கள் இஸ்லாமை தழுவதாகவும் தெரிய வருகின்றது.  
ஒவ்வொரு வருடமும் எத்தனை மக்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை அறிய விரும்பிய ஆய்வாளர்கள், லண்டனில் உள்ள பள்ளிவாசல்களில் கணக்கெடுப்பு நடத்தினர்.  

அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், கடந்த பனிரெண்டு மாதங்களில் பிரிட்டனின் தலைநகரில் மட்டும் சுமார் 1,400 பேர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றனர். இந்த தொகையை நாடு முழுவதும் கணக்கிட்டு பார்த்தால் சுமார் 5,200 பேர் ஒவ்வொரு வருடமும் தங்களை இஸ்லாமிற்குள் ஐக்கியப்படுத்தி கொள்கின்றனர். இதனை ஜெர்மனி மற்றும் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுகளோடு ஒப்பிட்டோமானால், அங்கே சுமார் 4000 மக்கள் ஒவ்வொரு வருடமும் இஸ்லாத்தை தழுவுகின்றனர்.  
 
 இது குறித்து கருத்து தெரிவிக்கும் Muslims4uk தளத்தின் நிறுவனர் இனாயத் பங்லவாலா, "இந்த முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என்றால், 600 பிரிட்டன் மக்களில் ஒருவர் இஸ்லாத்தை தழுவுபவராக இருக்கின்றார். இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். நிறைய இஸ்லாமிய அமைப்புகள், குறிப்பாக பல்கலைகழக மாணவர் இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்களை களைய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன" என்று குறிப்பிடுகின்றார். 

இஸ்லாமை தழுவுவதென்பது எளிதான ஒன்று. டெக்னிகலாக, முஸ்லிமாவதற்கு ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் ஷஹாதா கூறுவது மட்டும்தான். அதாவது, "இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர்" என்று மனப்பூர்வமாக சொல்லுவது மட்டும் முஸ்லிமாவதற்கு போதுமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை இரண்டு சாட்சிகளுக்கு மத்தியில் சொல்லுவதையே விரும்புகின்றனர்." 

IERA (Islamic Education and Research Academy)


 
 குறிப்பாக ஒரு அமைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். IERA (Islamic Education and Research Academy) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மகத்தான இஸ்லாமிய அழைப்பு பணியை செய்து வருகின்றது. இவர்களுடைய செயல் திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,

  • Mission Dawah - அழைப்பு பணியில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஈடுபடும் முஸ்லிம்களை கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்குவது தான் இந்த பிரிவின் குறிக்கோள். 
  • Muslim Now - புதிதாய் இஸ்லாமை தழுவியவர்களுக்கு இஸ்லாமிய கல்வி மற்றும் இதர உதவிகளை செய்யும் பிரிவு. 
  • One Reason  - முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லாம் குறித்த தகவல்களை தயாரிக்கும் பிரிவு. 
  • The Big Debates - முஸ்லிமல்லாத மக்களிடம் ஆரோக்கியமான முறையில் உரையாடுவதே இந்த பிரிவின் குறிக்கோள். இதுவரை பல விவாதங்களை சந்தித்துள்ளது இந்த பிரிவு. இதில் பிரபல நாத்திகர்களும் அடக்கம். 

மேலே காணும் பிரிவுகளை உற்று நோக்கினால் IERAவின் செயல் திட்டம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

அழைப்பு பணியில் IERA போன்ற அமைப்புகள் எந்த அளவு தீவிரமாக செயல்படுகின்றனவோ அது போலவே பிரிட்டனின் இஸ்லாமிய இளைஞர் அமைப்புகளும் செயல்படுகின்றன.


நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர் --- குரான் 3:104 ....
*******

இந்த வீடியோவை கடைசிவரை பார்த்தேன், அதாவது அரங்கத்திற்கு வெளியே டாகின்ஸ் பேசியது வரை. 

இதுவரை இங்கு பின்னூட்டமிட்டவர்களின் கருத்துக்களில் இருந்து நான் வேறுபடுகின்றேன். தங்களுடைய வாத உத்திகளில் கைத்தேர்ந்தவர்களாகவும், சொல்ல வேண்டிய கருத்தை மிகத்தெளிவாக எடுத்துரைப்பவர்களாகவும் இருக்கின்றனர் இந்த முஸ்லிம்கள். நிச்சயமாக இவர்கள் மூடர்கள் இல்லை (மத மயக்கத்தில் இருப்பவர்களா..ஆம், ஆனால் மூடர்கள் கிடையாது). 

இவர்களை போன்றவர்களை வெற்றிகரமாக சமாளிக்க நீங்கள் பல துறைகளில் உங்களை பயிற்றுவித்து கொண்டும், அவர்களைப்போல தெளிவாக கருத்துக்களை வெளிப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் (அதிர்ஷ்டவசமாக, இந்த பொருளற்ற வீடியோவில் வாதித்த மயர்ஸ் மற்றும் ஏனையோர் அப்படி இருந்தனர்). 

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தங்களது முயற்சிகளால், என்னை வெகுவாக கவர்ந்து விட்டனர் இந்த முஸ்லிம்கள். நான் அறிந்த நன்கு படித்த முஸ்லிம்களை விடவும் இவர்கள் வேறுபட்டு நிற்கின்றனர் - (Extract from the original quote of) Comment No. 10"
------------------------------------------------------

இப்படி சொன்னவர் ஒரு பல்கலைகழக விரிவுரையாளர். 

இன்றைய நாத்திகர்களின் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்களது தளத்தில் இந்த விரிவுரையாளர் இட்ட பின்னூட்டத்தை தான் நீங்கள் மேலே பார்க்கின்றீர்கள். 

எதற்காக இப்படி சொன்னார்? அவர் குறிப்பிடும் வீடியோ எதைப்பற்றியது? அவர் குறிப்பிடும் அந்த முஸ்லிம்கள் யார்?

இந்த கேள்விகளுக்கு விடைக்காண கடந்த இரண்டாம் தேதிக்கு நாம் செல்ல வேண்டும். 

இந்த தேதியில், பிரிட்டனின் புகழ் பெற்ற இஸ்லாமிய அமைப்பான "IERA" (Islamic Education and Research Academy, இஸ்லாமிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம்) ஒரு சுவாரசியமான பத்திரிக்கை அறிவிப்பை தன்னுடைய தளத்தில் வெளியிட்டிருந்தது.
அதாவது, ஜூன் 3 - 5  காலக்கட்டத்தில், அயர்லாந்தின் டப்ளின் (Dublin) நகரில் நடைபெறும் சர்வதேச நாத்திகர் மாநாட்டில் (International Atheist Conference) தாங்கள் கலந்து கொள்ள போவதாகவும், அந்த மாநாடு நடைபெறும் அரங்கத்திற்கு வெளியே ஸ்டால் அமைத்து, பிரபல நாத்திகர்களுடன் தாங்கள் நடத்திய விவாத வீடியோக்களை விநியோகம் செய்யப்போவதாகவும் அறிவித்திருந்தது இந்த அமைப்பு. 

அதுமட்டுமல்லாமல், தாங்கள் இறைநம்பிக்கை கொள்வதற்கு என்ன காரணங்கள் என்பதை விளக்கும்படியாக, இந்த மாநாட்டிற்கென பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட சிறுநூல்களை (Booklets) விநியோகிக்க போவதாகவும், மேலும், கருத்தரங்கில் கலந்து கொள்ளவரும் டாகின்ஸ், மயர்ஸ் முதலானவர்களுடன் நாத்திகம் குறித்து கலந்துரையாட முயற்சி மேற்கொள்ள போவதாகவும் கூறியிருந்தது IERA. 

இந்த அறிக்கை, டாகின்ஸ்கின் தளம் தொடங்கி பல நாத்திகர்களது தளத்தில் சூடான விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த செய்தி உங்களில் சிலருக்கு ஆச்சர்யத்தை கொடுத்திருக்கலாம். ஆனால் IERAவை பொருத்தவரை, அவர்களது இம்மாத செயல்திட்டத்தில் இது ஒரு பகுதி, அவ்வளவே.

விவாதத்திற்கென தனி பிரிவையே கொண்டுள்ளது இந்த அமைப்பு. சமூகத்தில் நன்கு அடையாளம் காணப்பட்ட நாத்திகர்களுடன் இவர்கள் நடத்திய விவாதங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.

குறிப்பாக, சென்ற ஆண்டு, இதே காலகட்டத்தில், அமெரிக்க நாத்திகர்கள் சங்கத்தின் தலைவரான எட் பக்னர் (Dr.Ed Buckner) அவர்களுடன் "இஸ்லாமா? நாத்திகமா?" என்ற தலைப்பில் நடத்திய விவாதம் கவனிக்கத்தக்கது (இந்த விவாதத்தின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

ஆக, நாத்திகர்களுடனான உரையாடல் என்பது இயல்பாகவே இவர்களுக்கு உற்சாகத்தை தரக்கூடிய ஒன்று. அந்த உற்சாகம் தான் இந்த மாநாடு குறித்த அறிவிப்பிலும் பிரதிபலித்தது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஹம்ஸா அண்ட்ரியஸ் ஜார்ஜிஸ் (இவரைப் பற்றிய இத்தளத்தின் கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்) மற்றும் அட்னன் ரஷித் ஆகியோர் ஆவர்.


தெளிவான செயல்திட்டங்களுடன் மாநாட்டிற்குள் நுழைந்தனர்.

தங்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் சிறுநூல்களை, விவாத காணொளிகளை விநியோகித்தனர். மாநாட்டிற்கு வந்தவர்களுடன் நாத்திகம் மற்றும் இஸ்லாம் குறித்து உரையாடினர்.

அவர்கள் எதற்காக அங்கு சென்றார்களோ அந்த சந்தர்ப்பத்தை வெகு விரைவிலேயே இறைவன் ஏற்படுத்தி கொடுத்தான்.

ஆம், நாத்திகர்களால் பெரிதும் மதிக்கப்படும் பரிணாமவியலாளர்களான PZ மயர்ஸ் (PZ Myers) மற்றும் ரிச்சர்ட் டாகின்ஸ் ஆகியோருடன் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. இதில் டாக்கின்ஸ்சுடன் சில நிமிடங்களே பேச நேரிட்டாலும், யர்ஸ்சுடன் சுமார் 25 நிமிடங்கள் கலந்துரையாடக்கூடிய வாய்ப்பை பெற்றனர்.

இந்த மினி விவாதத்தை கண்ட விரிவுரையாளரின் பின்னூட்டத்தை தான் நீங்கள் மேலே படித்தீர்கள்.

ஆம்...முஸ்லிம்களின் அணுகுமுறை பல நாத்திகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

(இந்த வீடியோவின் முன்பகுதியை நாத்திகர்கள் தங்களது தளத்தில் முதலில் வெளியிடவில்லை. அதனை எடிட் செய்து பாரபட்சமாக நடந்து கொண்டனர் என்ற குற்றச்சாட்டை முஸ்லிம்கள் முன்வைத்திருந்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டு அறியாமையால் ஏற்பட்ட ஒன்று. காரணம், முஸ்லிம்கள் தான் இந்த விவாதத்தை முதலில் படமெடுக்க தொடங்கினர். சிறிது நேரம் சென்ற பிறகுதான் நாத்திகர்கள் கலந்து கொள்ள ஆரம்பித்தனர். ஆகையால், முதல் சில நிமிடங்களை அவர்கள் தவறவிட்டு விட்டனர். அவர்கள் எவற்றை எடுத்தார்களோ அதனை தங்கள் தளங்களில் முதலில் வெளியிட்டு விட்டனர். இது தான் நடந்தது. ஆகையால், நாத்திகர்கள் எடிட் செய்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட வேண்டியது.)

சரி, இப்போது அந்த விவாதத்திலிருந்து (மேலோட்டமாக) சில தகவல்கள்...

பொதுவான விசயங்களைப்பற்றி முதலில் கேள்விகளை கேட்டு, தன்னுடைய விளக்கத்தை கொடுத்து, பினனர் மயர்ஸ்சை குர்ஆனை நோக்கி மிக அழகாக கொண்டு வந்தார் ஹம்ஸா. குர்ஆன் கூறக்கூடிய விஷயங்கள் மனிதர்களின் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவை என்பதை விளக்கினார்.

ஆனால், யர்ஸ் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஹம்ஸா தொடர்ந்தார். குர்ஆன், மலைகளை பற்றி கூறும் விஷயங்கள் இன்றைய அறிவியலோடு எப்படி ஒத்துப்போகின்றது என்பதை பிரபல விஞ்ஞானிகளின் கூற்றோடு நிரூபிக்க முயன்றார்.

மயர்ஸ் இது பற்றி பேசாமல் குர்ஆன் கூறும் சிசு வளரியல் (Embryology) பற்றி பேச தொடங்கினார் (இந்த துறையை சார்ந்தவர் மயர்ஸ்)

இந்த நேரத்தில் அட்னன் ரஷீதும் வாதத்தில் இணைந்து கொண்டார். உலக பிரசித்தி பெற்ற சிசு வளரியல் நிபுணரான டாக்டர் கீத்மூர் அவர்கள், குரானின் சிசு வளரியல் குறித்த கருத்துக்களை ஆமோதித்திருக்கின்றார் என்ற வாதத்தை முஸ்லிம்கள் முன்வைக்க, அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார் யர்ஸ். மேலும் கீத்மூர் அவர்களின் கருத்தை ஏதோ ஒரு வார்த்தையில் யர்ஸ் விமர்சிக்க அந்த வார்த்தை எடிட் செய்யப்பட்டு பீப் ஒலி கொடுக்கப்பட்டது.

குர்ஆன் கூறும் சிசு வளரியல் குறித்த தகவல்கள் அன்றைய கால மனிதர்களால் யூகிக்கக்கூடிய ஒன்றுதான் என்றும், அரிஸ்டாட்டிலிடமிருந்து முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த தகவல்களை நகல் எடுத்து விட்டார் என்றும் குற்றம் சாட்டினார் யர்ஸ்.

அதற்கு ஹம்ஸா கேட்டார் "சிசு வளரியலுக்கு ஒத்துவராத பல விசயங்களை அரிஸ்டாட்டில் சொல்லியிருக்கின்றார். காப்பி அடித்திருந்தால் அனைத்தையும் தானே அடித்திருக்கவேண்டும்? அது எப்படி முஹம்மது (ஸல்) அவர்கள் சரியான ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்துவிட்டு, தவறானவற்றை விலக்கியிருக்கின்றார்?'

யர்ஸ் ஒப்புக்கொள்ளவில்லை. குர்ஆனில் கூறப்பட்டுள்ள சிசு வளரியல் குறித்த கருத்துக்கள், அன்றைய கால மனிதர்களால் யூகிக்க கூடிய ஒன்றுதான் என்பதில் உறுதியோடு இருந்தார். முஹம்மது (ஸல்) அவர்கள், அன்றைய கால அறிஞர்களுடன் கலந்துரையாடி இந்த தகவல்களை பெற்றிருக்கவேண்டும் என்று சொல்ல, அதற்கு ஹம்ஸா "அப்படி இருந்தால் அதற்கு ஆதாரம் காட்ட முடியுமா?" என்று கேட்க, யர்ஸ் சிறிது நேரம் யோசிக்க ஆரம்பித்தார்.

பின்னர், "இது ஒரு நியாயமான யூகம்" என்று தன்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டார் மயர்ஸ் .

மற்றொரு சுவாரசிய நிகழ்வும் நடந்தது.

"இதே போன்ற கருத்துக்களை தான் மத நம்பிக்கையாளர்கள் திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருக்கின்றீர்கள்" என்று யர்ஸ் கூற, திரும்ப அடித்தார் பாருங்கள் ஹம்ஸா.

"Professor Myers, உங்களுக்கு எப்படியிருக்கும்? நாத்திகர்கள் காலங்காலமாக இதே வாதங்களைதான் வைத்து கொண்டிருக்கின்றார்கள் என்று நான் சொன்னால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? இப்படிதான் நாத்திகர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள் என நானும் சொல்லலாமா?" என்று கேட்க, சற்று யோசனைக்கு பிறகு புன்முறுவலோடு யர்ஸ் சொன்னார் "Go Ahead".

சிறிது நேரம் சென்று அறோன்ரா (AronRA) என்ற நாத்திகர் யர்ஸ்சுடன் சேர்ந்து கொண்டார்.

அவர் சொன்னார், "உங்கள் குர்ஆன் பரிணாமத்தை ஏற்றுக்கொள்ளவில்லை"

அதற்கு ரஷீத் சொன்னார், "பரிணாமத்தை பற்றி குர்ஆன் பேசவில்லை"

மறுபடியும் அறோன்ரா  "உங்கள் குரான் மாபெரும் வெள்ளத்தை பற்றி பேசுகின்றது" (கிருத்துவம் சொல்லக்கூடிய நூஹ் (அலை) அவர்களது வரலாறு அப்படியே குர்ஆனில் இருக்கும் என்று நினைத்திருப்பார் போல. குரான் சொல்லக்கூடிய வெள்ளம் கிருத்துவத்தில் உள்ளது போல அல்ல)

அதற்கு ரஷீத், "இதுவும் குர்ஆனில் இல்லை"

மறுபடியும், மலைகளை பற்றியும், அதன் செயலாற்றங்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பினர் முஸ்லிம்கள். எப்படி ஒரு பழங்கால புத்தகம் இவ்வளவு துல்லியமாக இந்த விசயத்தை கூறியிருக்க முடியும் என்று கேள்வி கேட்க, அதற்கு அறோன்ரா "நீங்கள் சொல்வது சிறு பகுதி மட்டுமே. மலைகள் விசயத்தில் இன்னும் பல செய்திகள் உள்ளன" என்று கூறினார். மொத்தத்தில், குரானின் மலைகள் பற்றிய தகவல்களை அவர்கள் மறுக்கவில்லை.

பின்னர் பேசப்பட்டதெல்லாம் நாம் அடிக்கடி கேள்விப்படும் வாதம்தான். அதாவது உணர்வுப்பூர்வமான வாதங்கள்

கடவுளை மறுக்க, இவர்களைப் போன்றவர்கள் கூட, அறிவியல் ஆதாரங்களை கொடுக்காமல், உணர்வுப்பூர்வமான வாதங்களை தான் வைக்கின்றனர். ம்ம்ம்...

உணர்வுரீதியாக கடவுளை மறுப்பது பற்றி பேசும்போது குர்ஆனின் பின்வரும் வசனம் நினைவுக்கு வருகின்றது, 

இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி ரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னை துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன்" நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான். --- Qur'an 2:30

கடைசியாக யர்ஸ்சிடம், "உங்கள் போக்குவரத்துக்கான செலவை நாங்களே ஏற்றுக்கொண்டு, எங்களுடன் ஒரு முழுமையான இதுபோன்ற உரையாடலுக்கு வரச்சொல்லி அழைத்தால் தாங்கள் வருவீர்களா?" என்று ஹம்ஸா கேட்க, அதற்கு "பார்க்கலாம்" என்று கூறினார் யர்ஸ்.

அதேநேரம், தன்னுடைய நிகழ்ச்சிக்கு (The Magic Sandwich Show) முஸ்லிம்களை அழைப்பதாக கூறினார் அறோன்ரா.

"அங்கு எனக்கு sandwich கிடைக்குமா? அது ஹலால் உணவுதானே" என்று ஹம்ஸா கேட்க அனைவரும் சிரித்துக்கொண்டே விடைபெற்றனர்

பின்னர் டாகின்ஸ்சுடன் சிறிது நேரம் உரையாடினார் ஹம்ஸா. எடுத்த எடுப்பிலேயே டாகின்ஸ் கேட்ட முதல் கேள்வி "நீங்கள் பரிணாமத்தை நம்புகின்றீர்களா?"

அதற்கு ஹம்ஸா சொன்ன பதிலை நான் மிகவும் ரசித்தேன். மிக அழகாக கூறினார், "என்னை கேட்கின்றீர்களா? நான் அந்த முடிவை எடுப்பதற்கான போதிய ஆதாரங்கள் இன்னும் இல்லை"

Wowwwww....

இந்த பதிலை கேட்ட டாகின்ஸ், "இது ஒரு அறிவார்ந்த பதில். நான் உங்களுக்கு ஆதாரங்கள் குறித்து விளக்குகின்றேன்" என்று ஆரம்பிக்க, அதற்கு மேல் நடந்த டாகின்ஸ்-ஹம்ஸா ஆகியோரது உரையாடலையும், நான் மேலே சொன்ன யர்ஸ்-அறோன்ரா-ஹம்ஸா-ரஷீத் ஆகியோரது விவாதத்தையும் காண கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.




இந்த வீடியோ குறித்து பதிவெழுதியிருக்கின்றனர் டாகின்ஸ்சும், யர்சும். அதில் இஸ்லாம் குறித்த அவர்களது அறியாமை தெள்ளத்தெளிவாக பளிச்சிடுகின்றது.

இவர்களது அறியாமையை உலகறியச்செய்யும் விதமாக அதிரடியான ஒரு வீடியோவை மூன்று நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருக்கின்றது IERA. அந்த வீடியோவை கீழே பார்க்கலாம்.




சுப்ஹானல்லாஹ்...எவ்வளவு பொறுமையாக, தெளிவாக விளக்குகின்றார் அட்னன் ரஷீத்.

இந்த மாநாட்டின்போது பல்வேறு சங்கடங்களை சந்தித்தபோதும் (கண்ணியமற்ற வார்த்தையை ஹம்ஸாவை நோக்கி பயன்படுத்தி தன்னை யாரென்று காட்டிக்கொடுத்திருக்கின்றார் டாகின்ஸ்), அவற்றையெல்லாம் இறைவனுக்காக பொறுத்து கொண்டு, இஸ்லாமை கொண்டு செல்வதில் மட்டுமே தங்களின் கவனத்தை செலுத்திய இந்த அற்புத உள்ளங்களுக்கு, இவ்வுலகிலும் மறுமையிலும் மிகச்சிறந்த கூலியை இறைவன் வழங்குவானாக...ஆமீன்.
ஒலிம்பிக்ஸ் 2012:
இப்போது மற்றுமொரு செயல்திட்டத்துடன் அதிரடியாக இறங்கிவிட்டது இஸ்லாத்தை தழுவியவர்களால் துவக்கப்பட்ட இந்த அமைப்பு. 
மேட்டர் இதுதான். வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி, இதுவரை  பிரிட்டனில் இல்லாத அளவு, நூற்றுக்கணக்கான முஸ்லிம்களுடன் "வாழ்க்கை விளையாட்டு மட்டுமா? (Is life just a game?)" என்ற வாசகத்துடன்..
 
  ஒலிம்பிக் கிராமத்தில் அழைப்பு பணியை மேற்கொள்ளப்போகின்றது இந்த அமைப்பு. நீங்கள் இங்கிலாந்தில் வசிப்பவரா? ஒலிம்பிக் கிராமத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களில் சிலருக்காவது இஸ்லாமை எடுத்துக்கூற விரும்புகின்றீர்களா? நீங்களும் இந்த அழைப்பு பணியில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும். 
ஒலிம்பிக் கிராமத்திற்கு வெளியே அழைப்பு  பணியில் ஈடுபட்டுள்ள IERA குழுவினர் (மஞ்சள் டீ-ஷர்ட் அணிந்திருப்பவர்கள்)

நான்காம் தேதி நடப்பது நடக்கட்டும். அதுவரை ஏன் வெயிட் செய்யவேண்டுமென்ற நோக்கில் IERA-வின் சிலர் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கிய அன்றே களமிறங்கிவிட்டனர். மிக அருமையான இவர்களுடைய அழைப்பு பணி பொதுமக்கள், மீடியாக்கள் என்று சமூகத்தின் அனைத்து பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 
இலண்டன் மேயர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு பிரசுரம் அளிக்கப்பட்ட போது... 
IERA-வை பொருத்தவரை இந்த செயல்திட்டத்தில் பெண்களை அனுமதிக்கவில்லை. இது நிச்சயமாக ஆச்சர்யமான ஒன்று. மிக வீரியமான பெண்கள் அழைப்பு குழுவை கொண்டது இந்த அமைப்பு. கேம்பிரிஜ் பல்கலைகழக வளாகத்தில் செயல்படும் இவர்களின் பெண்கள் பிரிவை இதற்கு உதாரணம் கூறலாம். ஆயிரகணக்கானோர் கூடும் இடத்தில், பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக பெண்கள் பிரிவை இந்த குறிப்பிட்ட செயல்திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்று விளக்கம் கூறியிருக்கின்றது IERA. 
எது எப்படியோ, இவர்கள் அழைப்பு பணியை தொடங்கிய சில நாட்களிலேயே இறைவன் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளான். இதுவரை சுமார் 10-15 சகோதர சகோதரிகள் ஒலிம்பிக் கிராமத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ளனர். 
பாதுகாப்பு வீரர்களுக்கு இஸ்லாமை எடுத்து கூறுதல் 
"நான் முஸ்லிமாக முடியுமா?" என்று தாமாக முன்வந்து கேட்ட சகோதரியாகட்டும், கிருத்துவத்தை எடுத்து கூற வந்து முஸ்லிமான அந்த கிருத்துவ மிஷனரியாட்டும், விவாதத்திற்கு பின்னால் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட அந்த நாத்திகர்களாகட்டும் - என பல சுவாரசியமான நிகழ்வுகளுடன் அசத்தலாக சென்றுக்கொண்டிருக்கின்றது இந்த ஒலிம்பிக் அழைப்பு பணி. 
IERA குழுவினர் 
உலகளவில் இஸ்லாமை எடுத்துக்கூறும் பணிகள் சமீப காலங்களாக அதிகரித்து இருக்கின்றன. அதிக அளவிலான புதிய முஸ்லிம்களையும் இப்போதெல்லாம் நட்பு வட்டாரத்தில் பார்க்க முடிகின்றது. இந்த சூழ்நிலையில் IERA எடுத்துள்ள இந்த மகத்தான பணி வெற்றி பெற இறைவனை பிரார்த்திப்போம். 

News update:

இறைவனின் அளப்பெரும் கிருபையினால் IERA-வின் "ஒலிம்பிக் தாவாஹ் தினம்" கடந்த நான்காம் தேதி அழகான முறையில் நிறைவுற்றது. சுமார் 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அசத்தலான செயல்திட்டத்துடனும், அதிகபட்ச ஒழுக்கத்துடனும், நேர்த்தியான கட்டுக்கோப்புடனும் தங்கள் அழைப்பு பணியை மேற்கொண்டனர்.

ஒலிம்பிக் தாவாஹ் தினத்தில் கலந்துக்கொண்ட முஸ்லிம்களின் ஒரு பகுதியினர் 
இஸ்லாம் குறித்து மேலும் அறிய விரும்பியவர்களுக்கு குர்ஆன், குர்ஆன் அர்த்தங்களின் ஆங்கில மொழியாக்கம், குர்ஆனின் அறிவியல் உண்மைகள் குறித்த ஆய்வு புத்தகம் மற்றும் "வாழ்க்கை விளையாட்டு மட்டுமா?" என்ற தலைப்பிலான சிறுநூல் ஆகியவை அடங்கிய பை பரிசளிக்கப்பட்டது.

இஸ்லாம் குறித்து மேலும் அறிய விரும்பியவர்களுக்கு பரிசளிக்கப்பட்ட புத்தகங்கள்..

மேலும் தாவாஹ் தினத்தில் மட்டும் 17 சகோதர சகோதரிகள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். அல்லாஹு அக்பர். தொடர்ந்து IERA-அமைப்பினர் தங்கள் அழைப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

special thanks to

aashiq ahamed.

 

i invite u visit this website,

http://www.ethirkkural.com.

 

ur brother

rahmanfayed./...

No comments:

Post a Comment

welcome ur comment,