Friday, September 21, 2012

முகலாயர்கள் நல்லவரா? கெட்டவரா?



rahmanfayedஇந்தியாவில் எத்தனையோ சம்ராஜ்ங்கள் ஆண்டார்கள் அனால் கூறிப்பாக முகலாயர்களை மட்டும் பல பேர் விமர்சிக்கின்றன் அது தான் ஏன்?


அவர்கள் மீது பல விமர்சனம் அதில் கூறிப்பாக, 
  • பாபர் ராமர் கோயிலை இடித்தர்? 
  •  முகலாயர்கள் பல கோயிலை இடித்தர்? 
  • முகலாயர்கள் இந்தியர்கள் இல்லை? முகலாயர்கள் இந்திய மக்களை கொடுமை படுத்தினர்கள்? 
  • முகலாயர்கள் இந்துகளுக்கு ஜச்சியா வரி வித்தர்?   

போன்ற பல கேள்விகள் உண்மை யா என்பதை இப்பதிவி உங்களுக்கு பதில் அளிக்கும்.

இப்பதிவில் பல தகவல் சேகரிக்க, அண்னன் சுவனப்பரியன் வலைதளம் ,உதவியாக இருந்தது அவர்களுக்கு ஜசக்கல்லாஹா ஹைர்..

----------------------------------------- 

“நம்மவர் என்ற படத்தில் நான் வரலாற்று ஆசிரியராக நடித்தேன். வரலாற்றுக் குளறுபடிகளைப் பற்றி நான் செய்த விமர்சனத்தை என்ன காரணத்திற்காகவோ சென்சாரில் வெட்டி விட்டார்கள். அதைச் சேர்க்க வேண்டுமென்று நான் வாதாடிய போதும் அவர்கள் ஏற்கவில்லை. அந்தப்பகுதி இதுதான்.
 
முகலாயர் படையெடுப்பு என்றும், வெள்ளையர் வருகை என்றும் நாம் பாடம் சொல்லித்தருகிறோம். முகலாயர்கள் இங்கு வந்து இங்குள்ள பெண்களையே திருமணம் செய்து கொண்டு இங்கேயே அரண்மனையைக் கட்டி ஆட்சி செய்தார்கள். இந்த நாட்டை அவர்கள் வளப்படுத்தினார்களே தவிர, இங்கு சுரண்டி ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு போய் சேர்க்கவில்லை.


ஆனால் ஆங்கிலேயர்கள் இங்குள்ள வளங்களை சுரண்டி பிரிட்டனில் சேர்த்து வைத்தார்கள். அவர்கள் இந்த நாட்டை தம் நாடாக ஒருபோதும் கருதியதே இல்லை. ஆனால் முகலாய மன்னர் பகதூர்ஷா ''இந்த நாட்டில் என் உடலை புதைக்க ஆறுகெஜம் நிலம் கிடைக்கவில்லையே என்று கண்ணீர்க் கவிதையை பர்மா சிறையிலிருந்து எழுதினார்'' என்று கூறியிருகிறார். 

இந்த நாட்டை வளப்படுத்தியவர்களை படையெடுத்தவர்கள் என்றும், சுரண்டியவ்ர்களை வருகை தந்தவர்கள் என்றும் எப்படி சொல்லலாம் என்பது நான் வைத்த விவாதம்"

சிங்கப்பூர் ஐஃபா கலை விழாவில் கமலஹாசன்

-----------------------------------------..

********************************************

சுப்ரமணிய பாரதி!'முகமதியர்களுக்கு இது அன்னிய தேசமன்று. அவர்கள் இங்கே இன்றைக்கு நேற்றைக்கு வந்து குடியிருக்கும் ஜனங்களில்லை. இந்நாடு ஹிந்துக்களுக்கு எவ்வளவு சொந்தமோ அவ்வளவுக்கு முகமமதியர்களுக்கும் சொந்தம். இந்தியாவிலே முகமதியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் எந்த உபாயத்திலேனும் பகை மூட்டிவிட வேண்டுமென்று அன்னியர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். நம்மவர்கள் மூடத்தனத்தால் மேற்படி பிரயத்தனம் கைக் கூடும்படி விட்டு விடுவோமேயானால் அதுவே நமக்கு நாசகாலமாக முடியும்.'

6-10-1906 - 'இந்தியா' இதழில் 'முகமதியப் பிரதிநிதிக் கூட்டம்' எனும் தலையங்கத்தில் தேசியக் கவி சுப்ரமணிய பாரதியார் தெரிவித்திருக்கும் கருத்து.

********************************************

முகலாய மன்னர்களின் நீதி...

பாபர்..rko..

பாபர் தனது மகன் ஹுமாயூனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அது பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது.

போபால் அரசு நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஹிமாயூன்,.rko.

அவர் எழுதியதாவது:-

ஓ என் மகனே! இந்தியாவில் பல மதங்களைப் பின்பற்றுவோர் வாழ்கிறார்கள்.

இந்த நாட்டின் அரசாங்கம் உன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதற்கு ராசாக்களின் ராசாவாகிய கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

கீழ்வரும் கடமைகளை நீ நிறைவேற்ற வேண்டும்.

1. மத உணர்வுக்கு உரிய மதிப்புக் கொடு.

மத மாச்சரியங்களுக்கு உனது மனது ஆட்பட அனுமதிக்காதே. சார்பற்ற நீதி வழங்கு.

2. பசுக்களைக் கொல்வதைத் தவிர்த்துவிடு. இது இந்திய மக்களின் இதயங்களில் இடம் பிடிக்க உனக்கு உதவும். இதன் மூலம் நன்றிக் கடனாய் நீ இந்த மக்களுடன் பிணைக்கப்படுவாய்.

3. எந்த ஒரு சமூகத்தின் வழிபாட்டுத் தலத்தையும் நீ சிதைக்கக் கூடாது.

எப்போதுமே நீதியை நேசிப்பவனாக இரு.

அது ராசாவுக்கும் மக்களுக்கும் இடையே நல்லுறவைப் பராமரிக்கும்.
அதன்மூலம் பூமியில் அமைதியும் திருப்தியும் நிலவும்.

4. இஸ்லாமைப் பரப்பும் பணியை ஒடுக்குமுறை வாளால் செய்வதைவிட அன்பு வாளால் செய்வது நல்லது.

5. ஷியாக்களுக்கும் சன்னிகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைப் புறக்கணித்திடு. இல்லையெனில் அது இஸ்லாமிற்கு பலவீனத்தைத் தரும்.

6. உனது குடிமக்களிடம் உள்ள பல்வேறுபட்ட தனித்தன்மைகளை ஓராண்டில் வரும் பல்வேறு பருவங்களாகப் பார். அதுவே அரசு நிர்வாகத்தில் வியாதியைக் கொண்டு வராது.

இவ்வறிவுரை ஹுமாயூனுக்கு மட்டுமல்ல.

அவர் வழிவந்தவர்களும் அவுரங்கசீப்பின் ஆரம்ப நாட்கள் வரை கடைப்பிடிக்கப் பட்டிருப்பது வரலாறு.

இந்தக் காலங்களில் கோயில்கள் இடிக்கப்படவில்லை. பசுவதை தவிர்க்கப்பட்டுள்ளது.(338)..

பாபர்அவரது மகன் ஹிமாயூன்அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?

ராமர் கோவிலை பாபர் இடித்தாரா..?


பாபர் மசூதி 1528-ல் கட்டப்பட்டது. 'மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்!" என்ற RSS-சங்பரிவாரத்தினரின் வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.
ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்திருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.

ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப்பட்டயத்தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள்ளார். அந்தக்கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?

பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ளதைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத்தக்க வைத்துக் கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.
குருநானக்..rko.
பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்ற வற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.
கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.
பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.

பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராகவோ இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக்கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.
பாபருக்குப் பின் அவரது மகன் ஹுமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, 'தீனே இலாஹி' என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச்சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.
கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ”உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்த வரலாற்றுச்சம்பவமும் நடக்கவில்லையே.


மேலும், இன்னொரு அதிரடி திருப்பம் என்னவென்றால்... 1524-ல் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் அபோதையை மன்னரான இப்ராஹிம் லோடியாவார். அவர் அப்பணியை தொடரவில்லை. பின்னர், கிபி 1526-ல் முதலாம் பானிபட் போரில், இப்ராஹிம் லோடியைக்கொன்றுவிட்டு அப்பகுதியை கைப்பற்றிய பாபர் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் முதல் மன்னராகிரார. பின்னர், 1528-ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் மசூதியை கட்டி பூர்த்தியாக்கினார். எனவே 'ராமர் கோவிலை பாபர் இடித்தார்' என்று கூறுவது உலகமகா பெரும்பொய் என்பது இதன் மூலமும் தெள்ளத்தெளிவாகிறது.
அப்படியெனில், 'இப்ராஹீம் லோடி ராமர் கோயிலை இடித்தார்' என்றல்லவா பிரச்சினையை இந்த காவி கும்பல் கிளப்பி இருக்க வேண்டும்..?

"ஆஹா..! பாபர் பெயரில் மசூதி. எனவே அவர்தான் இடித்திருப்பார்." என்று புளுகு மூட்டையை அவசரப்பட்டு அவிழ்த்துவிட்டது பட்டவர்த்தனமாக இங்கே தெரிகிறது.

"அப்போது வரலாறு தெரியாம தப்பா உளறிட்டோம்... இப்போது சொல்றோம்... இப்ராஹீம் லோடிதார் இடித்தார்" என்று மீண்டும் இன்னொரு புளுகு மூட்டையை அவிழ்த்தார்களானால்..? ஹி...ஹி... இதற்கும் பதில் உள்ளது..!

ராமர் கோவில் இடிபட பாபரோ-லோடியோ அவசியமில்லையே..? ராமர் கோவில் என்ற ஒன்றுதானே மிக முக்கியம்..?
வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததை பற்றிக்கூறும்போது, 'அவர் திரேதா யுகத்தில் பிறந்தார்' என்று கூறப் பட்டுள்ளது.
இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு.
அவை.......................
கிருத யுகம் : 17,28,000 ஆண்டுகள் கொண்டது.
திரேதா யுகம் : 12,96,000 ஆண்டுகள் கொண்டது.
துவாபர யுகம் : 8,64,000 ஆண்டுகள் கொண்டது.
கலியுகம் : 4,32,000 ஆண்டுகள் கொண்டது.
....................................என்பனவாகும்.
அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி கலியுகம்.
இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். இக்கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப்பின் 2011 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5113 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.
கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.
இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட (8,64,000+5,110=8,69,110) சுமார் எட்டு லட்சத்து அறுபத்தொன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.

அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா..?


இந்த இராமர் கோவிலை விக்கிரமாதித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவாரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப்பெயராகும். சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.
அவர்களில் இராமர் கோவிலைக்கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக்கூறுகிறார்கள். கோவிலைக்கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.
குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதிகளை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படுகின்றனர்.
கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர் பி.பி.லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வறிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட்டிலும் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த கி.பி. 300 - 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்ததில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.
‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது எவரும் ஏற்றுக்கொள்ள இயலாத பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர்/லோடி எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்..!

ராமருக்கு கோவில்  என்ற ஒன்றை எப்போது கட்டுவார்கள்..? ராமர் என்ற ஒருவரை கடவுளாக அறிந்த பிறகுதானே..?

இராமர் கடவுளாகக்கருதப்பட்டது எப்போது..?
இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இன்று இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராக கருதப்படவில்லை.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் ‘அமர கோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக்களஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாக கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக்காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.
லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?
அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.
அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.
கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் எவராலும் நம்ப முடியுமா?
இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கிருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பார்ப்பனப்பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் சமஸ்கிருதம் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக்கருதப்படவில்லை.
மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.
துளசிதாசர் காலம் என்ன..?
எந்தக்காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக்கூறுகிறார்களோ, எந்தக்காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசிதாசரும் வாழ்கிறார். அதுவும் எங்கே..? அயோத்தியில்தான் வாழ்கிறார்..! கிபி.1500-களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.
இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை என்பதும், இந்து மக்கள் அவரைப்பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பதும் இதன் மூலம் உறுதியாகிறது.
இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


பதினாறாம் நூற்றாண்டில் ராமர் கோவில் இருந்ததா..?
இந்தியாவில் முதல் துணை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.
இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் "கி.பி. 1750-க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவிலும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே" எனத்திடமாக அறிவிக்கிறார்.
200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528-ல் இல்லாத இராமர்கோவிலை பாபரோ அல்லது வேறு எவருமோ எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக்கோருகிறோம்.
இன்னும் சொல்வதாக இருந்தால்...

அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.
அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை. இத்தனையில் இது ஒன்றுதான் என்பது ஏன்..?
1949ல் சங்பரிவாரம் இந்த புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.
எனவே மக்களின் வெறியைக்கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.

இந்து சமுதாய மக்களே..! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம்..! பொய்களை பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களை புறக்கணிப்போம்..!

முகலாயர்கள் நல்லவரா? கெட்டவரா?- II



[ஷெர்ஷா:

மன்னர் அக்பர்{பிராமணர் விரும்பி }:

முகலாயர்களும் பாரத நாட்டு ரத்தங்களே!

ஒளரங்கஜேப் பற்றி சில தகவல்.

ஜிஸ்யா வரியும் மன்னர் ஒளரங்கஜேப்பும்.

"பகதூர்ஷா ஜாஃபர்" முதல் இந்திய சுதந்திரப் போரின் தலைவர்.]

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...


இந்த பதிவில் உள்ள பல தகவலை வெளியிட்ட வரலாற்று அசிரியர்கள் மாற்று  மத சகோதர்கள்.
அவர்களின் வெளியிட்ட தகவலை சேகரிக்க உதவிய
சகோதரர் முகம்மது ஆஷிக்.{
ராமர் கோவிலை பாபர் இடித்தாரா..?}
சகோதரர் UNMAIKAL {முகலாய மன்னர்களின் நீதி}
சகோதரர் சுவனப்பரியன்க்கு {பல தகவல் } நன்றி.

rahmanfayed : இனி என் கேள்வி?  முகலாயர்கள் நல்லவரா? கெட்டவரா?...

  சொல்லுங்க 

6 comments:

  1. வரலாற்றை உண்மையான வரலாறாக எழுதி இருந்தால் இத்தகைய பதிவுகளுக்கு எந்த அவசியமும் இருந்திருக்காது. அதனால் நம் நாட்டில் எந்த மத பிரச்சினையும் இருந்திருக்காது . மேலும் மொகலயர்களை பெருமை படுத்த வேண்டிய எந்த அவசியமும் இங்குள்ள முஸ்லிம்களுக்கு கிடையாது. மேலும் நல்லதை கெட்டதாகவோ அல்லது கெட்டதை நல்லதாகவோ சித்தரிக்க எங்களுக்கு இஸ்லாம் கற்று தரவும் இல்லை. வரலாறுகளை திரித்து மாற்றி சுவனப்பிரியன் குறிப்பிட்ட 20 சதவிகிட இந்து மக்களை மூளை சலவை செய்து வைத்து அவர்களை இந்திய மண்ணின் மைந்தர்களம் முஸ்லிம்களை அன்னியர் போலவே பார்க்க வைத்திருக்கும் இந்துத்துவ சக்திகளின் சதியை முறியடிப்பதே இத்தகைய பதிவுகளின் நோக்கம்.
    இராஜகிரியார்

    ReplyDelete
  2. பொதுவாகவே நமது இந்திய நாட்டின் இந்து மக்களில் 80 சதவீதமான மக்கள் நல்ல எண்ணத்தோடும் சகோதர பாசத்தோடும் பழகக் கூடியவர்களே! 20 சதவீதமான மக்களே இஸ்லாமியர்களை எதிரிகளாக காட்டி தங்களின் தவறை மறைக்க முயற்ச்சித்து வருகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த 20 சதவீதத்தினர் இஸ்லாமியர் மேல் போட்ட அனைத்து அவதூறுகளையும் களைவதில் முன்னணியில் இருப்பது பாக்கி உள்ள 80 சதவீதமான இந்துக்களே! பெரியார், அண்ணாவிலிருந்து சமீபத்தில் இறந்த ஹேமந்த் கர்கரே வரை, மேலும் குஜராத் பெண் அமைச்சர் கம்பி எண்ணும் அளவுக்கு கொண்டு வந்த அந்த இரு பெண்கள் வரை அனைவரும் இந்து சமுதாய மக்களே! ..
    சுவனப் பிரியன்

    ReplyDelete
  3. Nalla kalam inthu mathame ingu illai endru solveerkalo endru ninaithen

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. wikipedia.org

    தொல்லியல் அகழ்வாராய்வு[தொகு]
    இந்தியத் தொல்லியல் துறையினர் பிரச்சினைக்குரிய, ராமர் பிறந்ததாக கூறப்படும் இடத்தையும், பாபர் மசூதி இருக்கும் நிலத்தையும் 1970, 1992 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் அகழ்ந்து பார்த்ததில், பாபர் மசூதிக்கு முந்தைய காலத்து தொன்மையான கட்டிடங்கள், பாபர் மசூதிக்கு கீழும் பக்கவாட்டிலும் இருந்ததற்கான ஆதாரங்களை கண்டெடுத்தனர்.[5].

    ReplyDelete
  6. பாபர் மசூதி[தொகு]
    பாபர் தான் கட்டிய பாபர் மசூதியின் மூலம் அதிகம் அறியப்படுகிறார். இம்மசூதியை இராமர் கோயிலை இடித்து அதற்கு மேல் கட்டியதாக கூறப்படுகிறது. இம்மசூதியில் உள்ள மூன்று கல்வெட்டுகள் பாபரின் தளபதியான மிர் பாகியால் கட்டப்பட்டதாக கூறுகின்றன. இப்பகுதியில் அகழாய்வு மேற்கொண்ட இந்திய தொல்லியல் அறிக்கைக் குழு இங்கு கோயில் ஏதும் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் இல்லை என்றும் ஆனால் சைவ சமயத்தை சேர்ந்த கட்டிட எச்சங்கள் காணப்படுகிறன என்றும் தன் ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளது.
    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D

    ReplyDelete

welcome ur comment,