Showing posts with label எச்சரிக்கை. Show all posts
Showing posts with label எச்சரிக்கை. Show all posts

Thursday, July 3, 2014

எச்சரிக்கை மாமிசங்களில் கலப்படம்!!! (அதிர்ச்சி ரிப்போட்)

எச்சரிக்கை மாமிசங்களில் கலப்படம்!!! (அதிர்ச்சி ரிப்போட்)


காக்கா பிரியாணி துன்னா காக்கா குரல்வராம உன்னிக்கிருஷ்ணன் கொரலா வரும்? என்பது ரன் படத்தில் விவேக் நடிக்கும் ஒரு நகைச்சுவை காட்சி,

அதே போன்ற ஆனால் உண்மையான அதிர்ச்சியான தகவல்கள் தான் இது, நீங்கள் சாப்பிடுவது கெட்டுப்போன கோழியாக கூட இருக்கலாம்.

அடிக்கடி ஒரு செய்தி சென்னை பத்திரிக்கைகளில் வருகிறது, நாம் திரைப்பட பகுதி மற்றும் சோசியத்தை\ஆண்மீகத்தை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாத காரணத்தால் இந்த செய்தி நமது கண்களில் படுவதில்லை,
அது “கெட்டுப்போன மாமிசம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் கைப்பாற்றப்பட்டது, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை”,

 பிறகு மீண்டும் சில நாள் கழித்து மற்றோரு செய்தி வரும் இது தொடர்கதை, ரெயிலில் ஏற்றும் போது என்ன செய்தார்கள் பதில் இல்லை? கெட்டுப்போன மாமிசம் என்று தகவல் சொன்னவர்கள் யார் தகவல் இல்லை, ரெயில்வே நிர்வாகம் என்ன செய்கிறது தகவல் இல்லை, சுமார் 70 சதவீத மக்கள் உணவாக பயன்படுத்தும் மாமிசத்தின் மீதான அக்கரை இது கப்பம் சரியாக வராத நேரத்தில் பிலிம் காட்ட இது போன்ற ரெய்டுகள் அதாவது ஜஸ்ட் வார்னிங் அடுத்த முறை ஒழுங்கா கட்டிடு.
மாட்டு மாமிசம்

1- மாட்டு மாமிசம் சாப்பிட மாட்டேன் என்று நடிப்பவர்களும் தங்களை அறியாமலேயே மாட்டு மாமிசம் உண்கின்றனர். “முக்கியமாக பள்ளிக்கூட மற்றும் மருந்து கடைகளை விட அதிகம் இருக்கும் சாராய கடைகளின் முன்பு”,

2. கடைகாரர்கள் ஒரு கோழி என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று பார்த்தால் 5 ரூ முதல் 8 ரூ வரை தான் ஆம் கோழிப்பன்னைகளில் நெரிசலில் சிக்கி இறந்து போன கோழிகள், வண்டி வரும் வழியில் இறந்த கோழிகள், நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகள், நாய், இதர உயிரினம் (பாம்பை தவிர) கடித்து செத்துப்போன கோழிகள், மற்றும் சில வித்தியசமான நோய்கள் வந்து உடல் வீங்கி நிலையில் உள்ள கோழிகள் போன்றவைகளுக்கு தமிழ் நாட்டில் கிராக்கி அதிகம் ஆம் டாஸ்மார்க் என்னும் கடை வந்த காரணத்தால் எங்கும் அசைவ கடைகள் பெட்டிக்கடைகளை விட அதிகம் திறந்து விட்டன.
இறந்து போன கோழி

இந்த கடைகளை நடத்துபவர்கள் ஒருநாளைக்கு சிறப்பு கவனிப்பாக ரூ 500 முதல் 1000 வரை கொடுக்க வேண்டியுள்ளது, அதன் பிறகு பொருட்கள் வாங்க, வீட்டு செலவு தண்ணீர் :0 என பார்த்தால் 3000 சம்பாதித்தால் தான் அடுத்த நாள் கடை திறக்க முடியும் ஒரு கிலோ சிக்கன் அதிக பட்சம் 100 கொடுத்து வாங்கினால் அடுத்த வாரம் ஊருக்கு போய் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மண் சட்டி சுமக்கவேண்டியதுதான், இதை சமாளிக்க ஒரே வழி எதை எதை குறைந்த விலைக்கு வாங்க முடியுமோ அதை வாங்குவது,

அரிசி இலவச அரிசி வாங்கி குறைந்த விலைக்கு விற்பவர்களுக்கு பஞ்சமில்லை, காய்கறி கொயம்பேட்டில் கழிவுகழுக்கு பஞ்சமில்லை, அதைக்கூட கூறு போட்டு விற்பார்கள், அதை வாங்க நடைபாதை வியாபாரக்கூட்டம் பெருகும், அடுத்து முக்கிய லாபம் தரும் இறைச்சி(கோழி பொரித்தது)
அதாவது 4 துண்டு 70 ரூ 3 கோழி துண்டு 1 பெயர் தெரியாத விலங்கு கறிதுண்டு (சோடா போட்டு ஊறவைத்து சில கோழி எலும்புகளை முக்கியமாக இறகு போன்ற பாகங்களை வெட்டி எறியும் போது அதை பொறுக்கி அதில் உள்ள சின்ன எலும்புகள் சேகரித்து இந்த கறித்துண்டங்களில் சொறுகப்படும். குடிகாரர்களுக்கும் சரி மற்றவகளுக்கும் சரி கறி என்ன வென்று இருந்தாலும் பரவாயில்லை கோழி எலும்பு போன்று ஏதாவது இருக்கவேண்டும், சில மரக்குச்சிகள் கூட பயன்படுத்து கின்றன(இங்கு இருப்பதாக தெரியவில்லை ஆனால் டில்லி போன்ற நகரங்களில் உள்ள நடைபாதை உணவகங்களில் கரியின் ஊடாக ஒருவகை மரக்குச்சிகள் சொறுகி விடுகிறார்கள், எலும்பு போல இருக்கும் முக்கியமான பொறிக்கும் வகை கறிகளில் இவை இருக்கும் ஏனென்றால் மேலும் இறுகி உண்மையான எலும்பு போல் ஆகிவிடும்)(சென்னையில் இது இருப்பது போல் தெரியவில்லை)

அடுத்து கெட்டுப்போன கோழிகளின் உடல் கொழகொழப்பு தெரியாமல் இருக்க படிகார கரைசல் தெளிப்பு ஆமாம் எந்த அளவு கொழகொழப்பான மாமிசமாக இருந்தாலும் 5ரூ படிகார கட்டி வாங்கி தண்ணீரில் கரைத்து தெளித்து பாருங்கள் சில நிமிடங்களில் பிரஸ் சிக்கன் ரெடி, இவை வேகுவதிலும் அதிக நேரம் பிடிப்பதில்லை சாப்பிடும் போது பஞ்சுமிட்டாய் போல் கரைந்துவிடுகிறது, ஆகையால் கூட்டம் ஆடிக்கழிவு போல் கடைகளில் அடித்து பிடித்து சாப்பிடுவார்கள்.

இன்னும் பல எழுதமுடியும் மற்றொன்று முக்கிய செய்தி இது அனைவருக்கும் தெரியும், ஆனால் ஏன் வெளியெ சொல்வதில்லை அதுதான் தமிழரின் அற்புத குணங்களில் ஒன்று முகநூலிலும் இதர இணையத்திலும் தமிழனின் பெருமையை பார் என்று பொய்களை அள்ளி அள்ளி வீசுவான், அந்த பொய்யை இரசிக்க ஆயிரம் சேர்களும் லைக்குகளும், ஆனால் உண்மையை பகிரமாட்டான் ஏன் தெரியுமா. அடுத்தவன் எக்கேடு கெட்டுப்போகட்டும் நான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் (பேருந்தில் நிற்க முடியாத நிலையில் ஒரு முதியவர் இருக்கும் போது இரண்டு வயது குழந்தையை சீட்டில் உட்கார வைத்து இடம் கொடுக்க கூறினால் குழந்தைக்கு காய்ச்சலுங்க பெரியவர் என்ன அவசர வேலையாகவா போகிறார்) காலியாக வரும் பஸ்ஸில் ஏறவேன்டியது தானே என்று சொல்லும்............................

இதை(கெட்டுப்போன மாமிசம்) அரசு எந்த அளவிற்கு தடுக்க முடியும் என்றால் முடியாத காரியம் தான் ஊறிப்போன லஞ்ச பரிமாற்றம். அரசு திட்டமிட்டால் கீழே வர வர காணாமல் போகும். ஒரு நாள் நடவடிக்கை எடுத்தால் இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்து விடும் நாம் தான் இதை தடுத்து நிறுத்த முடியும் எப்படி உண்மையை எடுத்துக்கூறுங்கள் பலருக்கு தெரிவியுங்கள் கூட்டம் குறையும் போது தன்னாலேயே நல்ல பொருளை வாங்கி விற்க ஆரம்பிப்பார்கள், அப்போதுஅவர்களுக்கு துணிவு வரும் லஞ்சம் வாங்க வருபவர்களுக்கு பயப்பட தேவையில்லாமல் போகும் நல்ல மாற்றம் வரும்

இதை ஷேர் செய்யுங்கள் இன்னும் நிறைய பேரை சென்றடையட்டும்.


சில எச்சரிக்கை பதிவுகள் 

 


எச்சரிக்கை நீங்கள் பயன் படுத்தும் பொருள்களில் ஹரமான (பன்றி) கொழுப்பு இருக்கலாம்.

 

http://rahmanfayed.blogspot.in/2013/01/blog-post_2277.html

 

ஓர் எச்சரிக்கை பரோட்டா பிரியர்களுக்கு




எச்சரிக்கை நீங்கள் பின்பாக்கெட்டில் பர்ஸ் வைப்பவரா ??


உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?

Thursday, June 12, 2014

எச்சரிக்கை நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?


அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…

Tuesday, January 22, 2013

ஓர் எச்சரிக்கை பரோட்டா பிரியர்களுக்கு


ஓர் எச்சரிக்கை பரோட்டா பிரியர்களுக்கு



தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?


இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .                                                    

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம்  எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?


மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.



http://rahmanfayed.blogspot.in/


இப்போது பரோட்டாவின் மூலப்பொருளான மைதாவில் தான் பிரச்சினை தொடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .



மைதா எப்படி தயாரிக்கிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்கபெற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாக்குகிறார்கள்,அதுவே மைதா .


Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம் இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நீரழிவுக்கு காரணியாய் அமைகிறது .

 

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கப்படுகிறது மேலும்  Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto  போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .


இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணை புரிகிறது .

 
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சீரண சக்தியை குறைத்து விடும் .


இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்ப்பது நல்லது.

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கள் ,இருதய கோளாறு ,நீரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .


நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.



இப்போதாவது  நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.


நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்விறகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .

இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள் .

http://rahmanfayed.blogspot.in/



நன்றி 

எச்சரிக்கை நீங்கள் பயன் படுத்தும் பொருள்களில் ஹரமான (பன்றி) கொழுப்பு இருக்கலாம்



Tuesday, January 15, 2013

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?


Petrol- பெட்ரோல்


உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?

அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்...!!!

எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும்.


 இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.
அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், 


அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்..


பெட்ரோல் நிரப்பும்போது கோல்மால்களிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்! செய்தியை படிக்க  இங்கே <<கிளிக்>> செய்யவும்.

Wednesday, October 3, 2012

எச்சரிக்கை நீங்கள் பயன் படுத்தும் பொருள்களில் ஹரமான (பன்றி) கொழுப்பு இருக்கலாம்.

எச்சரிக்கை நீங்கள் பயன் படுத்தும் பொருள்களில் ஹரமான (பன்றி) கொழுப்பு இருக்கலாம்



பன்றிக் கொழுப்பும், முஸ்லிம்கள் கவனிக்க வேண்டியவையும்..!


எல்லா மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பாவிலும் முதலாம் வகை மாமிசமாக உணவுக்குத் தேர்ந்தெடுப்பது பன்றியே ஆகும். எனவேதான் பலவகை பன்றிகளை உற்பத்தி செய்யும் பன்றிப் பண்ணைகள் அதிகமாக அந்நாடுகளில் உள்ளன. பிரான்ஸில் மட்டும் இதுபோன்ற பன்றிப் பண்ணைகள் 42,000 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. ஏனைய விலங்கினங்களைக் காட்டிலும் பன்றியின் மாமிசத்தில் அதிகமான கொழுப்பு உள்ளது.

பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும், பயன்படுத்துவதாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் - வெட்கம் அகன்றுவிடுதல், தீய எண்ணங்களை உருவாகிவிடுதல், வன்முறை எண்ணங்களை வளர்த்துவிடல் போன்ற தன்மைகள் தங்களையறியாமலே மாற்றம் அடையச் செய்யக்கூடிய தன்மை பன்றிக் கொழுப்பு கொண்டுள்ளது என்பது மற்றுமொறு செய்தி


ஷேக் சாஹிப் என்னும் சகோதரர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிகால் (Pegal) என்ற நகரத்தில் உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றும் துறை தரத்தை நிர்ணயம் செய்யும் துறை (Quality Control) என்பதால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்து அதன் தரத்தை பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் தயாரிப்பை விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் போது உணவுப் பொருளாக இருந்தாலும், மருந்துப் பொருளாக இருந்தாலும் அதை சோதனைக்குட்படுத்திய பின்பே அறிமுகப்படுத்தும்.


அவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனையில் விற்பனைக்கு வரவிருக்கும் உணவு மற்றும் மருந்துகளின் கலவையை (ingredients) சோதனை செய்து அதை பிரான்ஸ் நாட்டின் உணவு தரக்கட்டுப்பாடு மையம் அங்கீகாரம் அளித்தபின் மட்டுமே விற்பனைக்காக வெளிவரும்.


உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தில் உணவுப்பொருட்களை பிரித்து அதன் கலவையை (ingredients) ஆய்வு செய்வார்கள். இந்த கலவைகள் சிலவற்றிற்கு அறிவியல் பெயர்களும் இருக்கும், சிலவற்றிற்கு குறியீட்டுப் பெயர்களும் இருக்கும். எடுத்துக்காட்டாக E-904, E-141 என்று.




இவ்வாறு சோதனை செய்து கொண்டிருந்த ஷேக் சாஹிப் சில கலவைகளைக் (ingredients) குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது "உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்யுங்கள், எந்தவித கேள்விகளும் கேட்கவேண்டாம்" என்ற பதில்தான் வந்தது. இவர்களின் இந்த பதில் ஷேக் சாஹிப்பின் சிந்தையில் மேலும் சந்தேகங்களை எழுப்பியது. அதற்கடுத்து அவர்களின் கோப்புகளை ஆய்ந்து பார்க்கும் போது உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை கிடைக்கப்பெற்றுத் திகைத்தார்.




சற்றேறக்குறைய எல்லா மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பாவிலும் முதலாம் வகை மாமிசமாக உணவுக்குத் தேர்ந்தெடுப்பது பன்றியே ஆகும். எனவேதான் பலவகை பன்றிகளை உற்பத்தி செய்யும் பன்றிப் பண்ணைகள் அதிகமாக அந்நாடுகளில் உள்ளன. பிரான்ஸில் மட்டும் இதுபோன்ற பன்றிப் பண்ணைகள் 42,000 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. ஏனைய விலங்கினங்களைக் காட்டிலும் பன்றியின் மாமிசத்தில் அதிகமான கொழுப்பு உள்ளது. ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் அதிகப்படியான கொழுப்பைத் தவிர்க்கவே முயற்சி செய்கின்றனர்.

pig fat..rko..


இந்நிலையில் பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்பு எங்கே செல்கிறது?




உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தின் மேற்பார்வையில்தான் எல்லாப் பன்றிகளும் அறுக்கும் கொட்டில்களில் அறுக்கப்படுகின்றன. அறுத்த பன்றிகளிலிருந்து நீக்கிய பெரும்பான்மையான கொழுப்பை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதுதான் இவர்களுக்குத் தலைவலி. ஆரம்ப காலத்தில் முறையாக இதை எரித்துவிடுவார்கள்.




இவர்கள் பன்றிக் கொழுப்பை எரிப்பதால் எவ்வித பயன்பாடும் இல்லை. எனவே இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என எண்ணத்தொடங்கினர். பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்புகளைக் கொண்டு முதல்கட்டச் சோதனையாக சோப்புகளைத் தயார் செய்து பார்த்தனர். இவர்களின் இந்த முயற்சி பலன் கொடுத்தது. அதற்கடுத்த கட்டமாக முழுவீச்சில் இந்த பன்றிக் கொழுப்பை பல வேதியியல் நொதிப்பொருட்களைக் கொண்டு அமிலங்களாக மாற்றி விற்பனைக்கு இறக்கி விட்டனர்.




பல்வேறு காரணங்களுக்காக உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் இதை வாங்கத் துவங்கினர். அவ்வேளையில் ஐரோப்பாவில் உணவுப் பொருட்களுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. எல்லா உற்பத்தி நிறுவனங்களும் அவை உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள், காஸ்மெடிக் பொருட்கள் (சோப்பு, ஷாம்பூ, முகக் கிரிம், ஹேர் கிரிம்..) மற்றும் மருந்துப் பொருட்களின் அட்டையில் அவற்றில் கலந்துள்ள கலவைகளை (ingredients) கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் என்று. 

face cream..rko..

இதனால் பன்றிக் கொழுப்பு கலந்துள்ள பொருட்களில் இதை பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்றே குறிப்பிட்டு வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.
shampoo.



இந்நிலையில் இஸ்லாமிய நாடுகளில் இதுபோன்ற பன்றிக் கொழுப்பு சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இத்தடையின் விளைவாக பன்றிக் கொழுப்பைச் சேர்த்துள்ள பொருட்களின் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டது.

arab countries,




பன்றிக் கொழுப்பு என்று எழுதியிருந்தாலும் ஐரோப்பியர்களால் அப்பொருட்கள் விரும்பி வாங்கப்பட்டே வந்தன. இஸ்லாமிய நாடுகளிலும், முஸ்லிம்களாலும் இவ்வாறான உற்பத்திப் பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால் பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்று எழுதுவதற்கு பதிலாக விலங்குகள் கொழுப்பு (Animals Fat) என்று எழுதினர். அப்போது மீண்டும் ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய நாடுகளில் விலங்குகளின் கொழுப்பு அடங்கிய பொருட்களை விற்பனை செய்ய அங்கீகாரம் கேட்டனர்.




விலங்குகளின் கொழுப்பு என்று ஐரோப்பிய நிறுவனங்கள் கூறிய போது எந்த வகையான விலங்குகள் என்பதற்கு ஆடுகள் மற்றும் மாடுகளின் கொழுப்பு என்று கூறினர். மீண்டும் ஒரு கேள்வி அப்போது எழுந்தது. ஆடு மற்றும் மாடுகளின் கொழுப்பு எனினும் அது முஸ்லிம்களுக்கு ஹராம்தான்.

european countries..rko.



ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் ஆடுகள் மற்றும் மாடுகள் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படாததால். 


இக்காரணத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நாடுகளின் தடையும், முஸ்லிம்களின் புறக்கணிப்பும் இப்பொருட்கள் மீது தொடர்ந்தது. கி.பி.1970-லிருந்து ஐரோப்பிய நாடுகளில் வசித்து வருபவர்களுக்கு இந்த உண்மை தெரியாமலிருக்காது.
arab worlds,



இஸ்லாமிய நாடுகளின் தடையால் ஐரோப்பிய பெரும் பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையின் மூலம் கிடைக்கும் 75% வருவாயை இழந்தனர். இந்த 75% என்பது பல பில்லியன்ஸ் டாலர்களுக்கும் அதிகமாகும்.



இதன் முடிவாக அவர்கள் விலங்குகளின் கொழுப்பு என்பதை எழுதுவதும் தவிர்த்து குறியீட்டு மொழியைப் (Coding Language) பயன்படுத்தத் துவங்கினர். குறியீட்டு முறையானது உணவு தரக்கட்டுப்பாடுத் துறையின் நிர்வாகத்தினருக்கு மட்டுமே தெரியும். அப்பொருட்களைப்பயன்படுத்தும் பொதுமக்களுக்கு குறியீட்டு கலவைகள் (E-INGREDIENTS) பற்றி சற்றும் அறிய வாய்ப்பில்லை.


E-INGREDIENTS என்ற கலவைகளை பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பற்பசை, ஷேவிங் கிரீம், சிவிங்கம், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள், பிஸ்கட்ஸ், கார்ன் பிளாக்ஸ் (Corn Flakes), டோஃபி (Toffees), டின் மற்றும் குப்பிகளில் நிரப்பப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் என்று எல்லா பொருட்களிலும் இந்த வகையான கலவைகளை கலக்கின்றனர். விட்டமின் மாத்திரைகள் மற்றும் பல மருந்துப் பொருட்களிலும் பன்றிக்கொழுப்பின் கலவைகளைக் கலந்து முஸ்லிம் நாடுகளில் விற்பனைக்காகப் பரவச்செய்துள்ளனர்.




பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும், பயன்படுத்துவதாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் - வெட்கம் அகன்றுவிடுதல், தீய எண்ணங்களை உருவாகிவிடுதல், வன்முறை எண்ணங்களை வளர்த்துவிடல் போன்ற தன்மைகள் தங்களையறியாமலே மாற்றம் அடையச் செய்யக்கூடிய தன்மை பன்றிக் கொழுப்பு கொண்டுள்ளது என்பது மற்றுமொறு செய்தி. முஸ்லிம்களை இதுபோன்ற தீய தன்மைக்கு ஆளாக்க முயற்சிசெய்யும் அவர்களின் யுக்திகளில் இதுவும் ஒன்று.




இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்கூடிய பொருட்களில் கீழ்கண்ட கலவைக் குறியீடுகள (E-INGREDIENTS) இருக்கின்றனவா என ஒப்பிட்டுப்பார்த்து அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் இவையனைத்தும் பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்டவையாகும்.




நிராகரிக்க வேண்டிய கலவைக் குறியீடுகள் (E-INGREDIENTS)




E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252,E270, E280, E325,

E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440,

E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493,
E494, E495, E542, E570, E572, E631, E635, E904. 



தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டவையாக) ஆக்கிருக்கிறான். ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.'' (அல்குர்ஆன்-2:173)
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரருக்கும் விரும்பாதவரை, (பரிபூரண) முஃமினாக ஆகமாட்டார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்'. (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)


இதுபோன்ற பன்றிக் கொழுப்பைக் கொண்டுள்ள பொருட்களை நாம் நிராகரிப்போம், மற்றவர்களுக்கும் இச்செய்தியை எடுத்துரைப்போம்!

சற்று காலத்தின் பின்சென்று சில நிகழ்வுகளை இதோடு தொடர்புபடுத்திப் பார்ப்போம். கி.பி 1857-ல் தெற்காசிய நாடுகளில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் கோலோச்சிய காலம், கிழக்கிந்தியக் கம்பெனியில் பல்வேறு இந்தியர்கள் சிப்பாய்களாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்பொழுது பாதுகாப்புக்குத் தேவையான குண்டுகளும், துப்பாக்கித் தோட்டாக்களும், வெடிபொருட்களும் ஐரோப்பாவில் தயாரித்து ஆசிய நாடுகளுக்கு கடல்வழி மூலம் கொண்டுவந்தனர்.




ஐரோப்பாவிலிருந்து ஆசிய நாடுகளுக்கு கடல் மூலம் பயணிக்க அப்போது ஒரு மாதத்திற்கும் மேலாகியது. கடற் பயணத்தின்போது வெடிமருந்துப் பொருட்களும், தோட்டாக்களும் ஒன்றோடு ஒன்று உராய்வதாலும் வேறுபட்ட வெட்பநிலையாலும் வெடித்துவிடுவதும் உண்டு, வீணடைந்துவிடுவதும் உண்டு. இத்தகைய நிலையைத் தவிர்க்க தோட்டாக்கள்மீதும், வெடிகுண்டுகள் மீதும் கொழுப்பு பூச்சை மேற்கொண்டனர். அதற்கு பயன்படுத்திய கொழுப்பு பன்றிகளின் கொழுப்பும் மற்றும் மாடுகளின் கொழுப்புமாகும்.




இக்கொழுப்புகள் பூசப்பட்ட குண்டுகள் அனைத்தும் அதன் மூடியைத் திறப்பதற்கு பற்களைப் பயன்படுத்துவது போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன. பன்றிக் கொழுப்பு மற்றும் மாடுகளின் கொழுப்பு பற்றிய செய்தி சிப்பாய்களிடையே பரவ ஆரம்பித்த்தது. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியில் இருந்த பெரும்பாலான முஸ்லிம் இராணுவ வீரர்கள் பன்றி இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பிராணி என்பதாலும், இந்துமதத்தில் பசுவை தெய்வமாக வணங்குவதாலும் அதைப் பயன்படுத்தத் தயங்கினர்.




மேலும் இத்தகைய செயலை எதிர்த்து இந்திய சிப்பாய்கள் டில்லிக்கு அருகேயுள்ள மீரத் என்ற இடத்தில் 1857, மே 10ம் தேதி பஹதுர் ஷா தலைமையில் போராடினர்
"பகதூர்ஷா ஜாஃபர்" முதல் இந்திய சுதந்திரப் போரின் தலைவர்... 
இப்போராட்டத்தில் 100 க்கும் மேலான ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டார்கள். இந்நிகழ்ச்சி "சிப்பாய்க் கலகம்" என்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளதை வரலாறு படித்தவர்கள் அறிவார்கள்.
 
சென்ற ஆண்டு நடந்த சில நிகழ்ச்சிகளையும் இதோடு சற்று தொடர்புபடுத்திப் பார்ப்போம். பாலஸ்தீனத்தில் முஸ்ஸிம்களைக் கொன்று குவித்தும் அராஜகம் புரிந்தும் வரும் யூதர்கள் தங்களைப் பாலஸ்தீனப் போராளிகளிடமிருந்து காத்துக்கொள்ள இத்தகைய செயலையே கையாண்டனர். அதாவது முஸ்லிம்கள் பன்றியைத் தொடவும் மாட்டார்கள், அது அவர்களுக்கு விலக்கப்பட்டதாகும் என்பதன் அடிப்படையில் யூத மத போதகரான எலிசர் பிசர் (Eliezer Fisher) பன்றிக் கொழுப்புகளை அடங்கிய பைகள் பேருந்துகளிலும், வியாபார வர்த்தகக் கட்டிடங்களிலும், அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளிலும் அதிகமாக கட்டித் தொங்கவிட ஆலோசனையளித்தார்.




தற்கொலைப் படைகள் தாக்குதல் நடத்தினால் அவர்கள் மேல் இந்த பன்றிக்கொழுப்பு படிந்து அசுத்தமான முறையில் இறந்துகிடப்பர். அதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள். எனவே தற்கொலைப் படைகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள இந்த அணுகுமுறையை இஸ்ரேலிய பாதுபாப்பு அமைச்சராகிய யாக்கூ எட்ரி (Yaacov Edri)யும் பரிந்துரை செய்தார். இச்செய்தியை பெரும்பாலான ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.




ஆரம்ப காலம் தொட்டே இஸ்லாத்தின் எதிரிகளான இதுபோன்றவர்கள் தங்களின் காழ்ப்புணர்ச்சிகளால் இவ்வாறான செயல்கள் புரிந்து வருவது புதிதல்ல. முஸ்லிம்களாகிய நாம் விழிப்புடன் இருப்போம் மேலும் அவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்.




நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள். நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள். "அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை" என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்-குர்ஆன் - 2:135)


நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்த அல்லாஹ் போதுமானவன்.
இக்கட்டுரையாசிரியருக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக'




'Jazaakallaahu khairan''


some related articles


எச்சரிக்கை நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?