முஸ்லிம் சமுகம், மீது நடக்கும் இன்னல்களை, மறைமுகமாக சாடிஇருப்பார், இது எனது பார்வையில்,
உலக தீவரவாதத்தை பற்றி எடுக்கிறேன், என்று கூறி தலிபான்களை பற்றி ஆராயமல், அமெரிக்கவின் கருத்தையே படமாக எடுத்துஇருக்கிறார்...
தலிபான்களின்
தலைவராக இருந்த ஒசமா பின்லெடன் 89 கால பகுதியில், அமெரிக்கவின்
பார்வையில், "ஒசமா நல்ல போராளி, அவர் நாட்டிற்காக போராடுபவர், எங்கள்
நண்பர்"
இன்று அமெரிக்கர்களிடம் கேட்டால் "உலக பயங்கரவா தீவரவாதி என்றால், அது ஒசமா தான்"
எப்படி
இந்த மாற்றம் என்றால் 90 கால பகுதியில் சோவியத் ரஷ்யா அப்கான் நில பரப்பை
ஆங்கிரமித்த பொழுது அதற்கு ஏதிராக போராடிய ஒசமாவிற்கு உதவியது அமெரிக்கா
தான் அன்றைய ஜனாதிபதி வில்லியம் புஜ் [ஜார்ஸ் புஜ் தந்தை] நண்பர்
அமெரிக்கா உதவுவதற்கு முக்கிய காரணம்,
வளங்கள், ஆனால் அதற்கு பணியாத ஒசாமாவை, வெறுத்த புஜ், தன் மகன் முலம்
அப்கானை அக்கிரமிக்க அரம்பித்தனர்,
காரணமாக உலக வார்த்தக மையத்தை தகர்ப்பை கூறினார்கள்,
1/7 PART OF AMERICAN PEOPLE NOT ACCEPT WTC DEMOLISH AFGHAN,
இதேபோல தான் ஈராக் அணுஆயிதம் இருக்கு, என்று போர் புரிந்து, பெட்ரேல்
வளத்தை கைபற்றினர், ஆனால் அங்கு அணு ஆயிதமே இல்லை, என்பது வேற விஷயம்..
 |
| http://rahmanfayed.blogspot.in/2012/07/blog-post_7433.html |
தலிபான்கள் மீது, அமெரிக்கா ஊடகங்கள பல பொய் செய்திகள், பரப்புவதாக முல்லா உமர் கூறீ இருக்க..
இது உண்மையா பொயா என்று இறைவன் தான் அறிவான்
இப்பதிவுக்கு வருவோம்..
இஸ்லாமியர்கள் எதிர்க்க முக்கிய காரணம் அந்த திரைபடத்தில் தலிபான் தலைவர் முல்லா உமரை, பேட்டி காண கமல் செல்வதுபோல ஒரு காட்சி,
அதில் முல்லா உமர் கூறிய சில வார்த்தைகள் தான், ரொம்ம அதிர்ச்சியை
ஏற்படுத்தியது, அமெரிக்கா தேடும் முல்லா உமர், தமிழகத்தில், கோவை,
மதுரையில், சில காலம் வாழ்வது போலவும், தமிழ் நாட்டை சோர்ந்த தீவரவாதிகளை,
விரும்பவதுபோலவும், காட்சி படுத்தி இருப்பார்,
ஊடகம் சக்தி எவ்வளவு
பெரியது, இப்படி ஒரு காட்சியை பார்க்கும் ரசிகர்கள் என்ன தோன்றும், மதுரை,
கோவையில், வசிக்கும் முஸ்லிமகள், தீவரவாதிகளாக தானே நினைக்க தோன்றும்..
மேலும், அந்த படத்தில் ஒரு தீவரவாதி தொழதுவிட்டு, பாம் வைக்க செல்லுவது போல
ஒரு காட்சி, இன்னோறு காட்சியில், குரான் வசனங்கள், கூறிவிட்டு கொலை
செய்வதுபோல ஒரு காட்சி, இப்படி காட்சி படுத்தி இருந்தால், மக்களுக்கு என்ன
தோன்றும், இஸ்லாம் ஒரு வன்முறையை வளர்க்கும் மதமாக தானே தோன்றும்,
தொடக்கம் முதல் கடைசி வரை அமெரிக்காவின் ஜால்ராவாகவே இருக்கும் திரைக்கதை,
சிறு இஸ்லாமிய குழந்தைகளின் விளையாட்டே வாயில் துப்பாக்கி
சத்தத்துடன் வெறும் கையால் ஒருவரை ஒருவர் குறிபார்த்து சுட்டு கொல்வது,
இந்த படத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளை தாக்கும் அமெரிக்காவும்,
அமெரிக்கர்களை தாக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுமே இரண்டு கட்சிகள். அப்படி
இருக்க முழுக்க முழுக்க அமெரிக்காவின் தாக்குதல்களை மட்டுமே
அதற்காக தலிபான்கள் செய்வது சரி என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களின்
வாதத்தையும் ஓரளவேனும் விளக்குவது தான் ஒரு நியாயமான கலைஞனின் கடமை
(அல்லது இந்த வியாபாரியின் தொழில்தர்மம்). கிட்டத்தட்ட படத்தில் வரும்
அத்தனை இஸ்லாமிய கதாபாத்திரங்களையுமே கொடூரர்களாக, கொலைகாரர்களாக, முட்டாள்களாக காட்டியிருப்பது,
ஒரு மத மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்த படம் கலை அல்ல களை..
சில நடுநலைவாதிகள் கேட்கலாம்? படங்களில் முஸ்லிமகளை தீவரவாதிகளாக காட்டினால், நாங்கள் நம்பிவிடுவோமா?? என்று கூறினார்கள்,
"ஒரு
பொய்யை திரும்ப, திரும்ப, கூறினால், அந்த பொய், சில காலத்துக்கு பிறகு,
அந்த பொய் செய்தி, உண்மையான செய்தியாகவே மனதில் பதியும்.".
அது போல தான
20 வருடங்களுக்கு மேலாக ஊடகங்கள் வாயிலாக முஸ்லிமகளை தீவரவாதிகளாக
சித்திரத்து வந்தனர் அந்த தாக்கம் தான் முஸ்லிம் சகோதர்களை தீவரவாதிகளாக
மாற்று மத சகோதர்கள் பார்ப்பதும்
அவர்களிடம் நக்கலாக "
பாய் அடுத்து எங்க
பாம் வைக்க போறிங்க" என்ற கேள்வி கேட்க்கும் பொழுது அவன் மனம் எவ்வளவு
வேதனைபடும் என்று அறியாமல் இருங்கிங்க
நான்கு தலைமுறையாக நெல்லை பேட்டை
மாற்ற மத சகோதர்கள் மத்தியில் வசிக்கும் நான் அங்கு உள்ள பல மாறப்பட்ட
மக்களான பிள்ளைமார் ஆசாரி பிராமனர்கள கவுன்டர் என பல பேர் இருந்தாலும்
எங்களிடம் ஒரு குடும்ப உறவுகளாக வாழ்ந்து வருகிறோம் அப்படி பட்ட ஊரை விட்டு
வேலைக்கா சென்னை வரும் பொழுது தான் நானும் அனுபவத்தேன் அந்த தாக்கத்தை
என்னையும் சில மாற்று மத சகோதர்கள் நக்கலாக கேட்ட அந்த கேள்விகள்
பல
வருடங்களாக எதிர்காமல் இப்ப மட்டும் என் எதிர்க்க என்ன காரணம் என்று அன்றைய
சூழ்நிலை இஸ்லாமியர்களிடம் ஊடகம் இல்லை, அது இன்று வரை தொடர்கிறது ஆனால்
பேஸ்புக் முகநூல் மூலமாக எளிதில் பல பேர்களிடம் செய்திகள் செல்லும்
வகையில்எளிதில் பல சகோதரர்கள் இனையும் வகையீல் தொலை தொடர்பு முன்னேறியது
முதல் காரணம் இரண்டாவது காரணம் பல வருடங்களாக எங்கு குண்டு வெடித்தால் அது
இஸ்லாமிய தீவரவாதிகள் என்று நினைத்து இருந்தோம் ஆனால் தற்பொழுது கடந்த சில
வருடங்களாக நடந்த குண்டு வெடிப்புக்கு இஸ்லாமியர்கள் காரணம் இல்லை
இந்துவாதிகள் தான் காரணத்தை கண்டுபிடித்த பல நேர்மையான காவல் அதிகாரிகளால்
தான் கூறிப்பாக ஹேமந் கார்கரே வை கூறலாம்..
 |
| http://rahmanfayed.blogspot.in/2012/12/ips.html |
மாலோகான் குண்டு வெடிப்பில் அரம்பித்து பல செய்தது இந்துவாதிகள் என்று உள்துறை அமைச்சர் கூறியருப்பது கூறிப்படக்கது
இதன் தாக்கங்கள் தான் உண்மை தெரிந்த பின்பும் இஸ்ஸலாமியர்கள் மீது மட்டும் தீவரவாதிகளாக காட்டுகிறார்கள்
என்ற ஒரு சிறுபான்மை சமுகத்தின், கோபம்தான் விஸ்வருப படத்தின் எதிர்ப்பு..
இஸ்ஸலாம்
என்றாலே சகோதரத்துவம், சமுத்துவமானவர்கள், ஆனால், தற்பொழுது பல இஸ்லாமிய
இளைஞர்கள், நடவடிக்கையோ அருவறுக்க தக்கதாக இருக்கிறது,
பிறர் மனம்
புண்படாமல் பேசும் இஸ்லாமியர்கள். தவறுகளை மட்டும் சுட்டிகாட்டிம்,
இஸ்லாமியர்கள், இன்றைய நிலை வெகுவாக மாறிவிட்டது.. இது எங்கு போய் முடியும்
என்று தெரியவில்லை...
கமலின் விஸ்வருப படத்திற்கு எதிர்ப்பு காட்டுவது சரி, ஆனால் அவரை பற்றியும், அவரது வாழ்கையை பற்றி விமர்சிப்பது அழகல்ல,
சிலர் அவரை ஒ..., நாயகன் என்றும், கா..., கொடுடன் என்றும். விமர்சிக்கின்றன,
சிலர் அவரையும், அவளது மகளையும், தவறாக இனைத்து கொச்சை படுத்திவிட்டனர்...
இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்த விஸ்வருபத்தை எதிர்க்கலாம், ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை எதிர்ப்பது, கண்டனத்துக் கூறியது...
இஸ்லாமியர்களிக்கு
எதிரியாக இருந்தால் எதற்கு, இஸ்லாமிய அமைப்பிற்கு படம் வரும் முன்பாகவே
திரையிட்டு காட்ட வேண்டும், அவர் இஸ்லாமியர்கள் தவறான புரிதலில் வெளியிட்டு
விட்டர்,.
இனி வரும் காலங்களில் இஸ்லாமியர்களை பற்றி தவறாக சித்தரித்து, திரைபடங்கள் வருவது குறையும் என்று நம்புகிறேன்...
பிரபல இஸ்லாமிய பதிவர், சகோதர்
சுவனப்பிரியன பதிவரின் வேண்டுகொளை பதிவு செய்கிறேன்...
முஸ்லிம் ஆயுதம் தூக்குகிறான் என்று சொன்னால் எதற்காக அவன் தூக்க வேண்டும்?
அதன் சூத்திதாரி யார்? என்று தேடி அந்த நாட்டின் உண்மை முகத்தையல்லவா கமல்
தோலுரிக்க வேண்டும். மாற்றாக தனது படத்தில் அமெரிக்கர்களை நலன்
விரும்பிகள் போலவும் ஆப்கானிய முஸ்லிம்கள் குர்ஆனோடு ஜிஹாதுக்கு
கிளம்புவதாகவும் காட்டுவது நேர் எதிர் கருத்துக்கள அல்லவா? மனுஷ்ய
புத்திரன் ஒரு பேட்டியில் அமெரிக்கா தனது ஆளுமைகளை நியாயப்படுத்த பல
தயாரிப்பாளர்களுக்கு பண உதவி செய்வதாக சொல்லியிருந்தார். தனது ஹாலிவுட்
படங்களுக்கு பணத்தை திரட்ட இது போன்ற யுக்திகளை கையாண்டால் பணம் கொட்டும்
என்று நினைத்தாரோ என்னவோ!
நாங்கள் முன்பு விரும்பிய கமலாக திரும்ப வர வேண்டும். இந்த
தீவிரவாதங்களுக்கெல்லாம் மூல காரணியான அமெரிக்க தீவிரவாதத்தையும் அதன்
உண்மையான காரணங்களையும் விசுவரூபம் பார்ட் 2 வில் கொண்டு வர வேண்டும். இதன்
மூலம் மட்டுமே இழந்த தனது பெயரை கமல் திரும்ப சம்பாதிக்க முடியும். மனித
நேயத்தை கமல் உண்மையாகவே விரும்புபவராக இருந்தால் இதனை செய்து
முடிக்கட்டும்.
மற்றபடி நாளை படத்தை பார்த்து நீதிபதிகள் திரையிட அனுமதி வழங்கி விட்டால்
இதற்கு மேலும் இந்த பிரச்னையை வளர்க்காமல் அதன் போக்கில் விட்டு விடுவதே
நல்லது. தியேட்டரில் சென்று பிரச்னை பண்ணுவது சில விஷமிகள் தங்களின்
காரியத்தை சாதித்துக் கொள்ள சாதகமாக்கி விடும். பெண்கள் குழந்தைகளோடு
தியேட்டருக்கு படம் பார்க்க பலரும் வருவர். நாம் நமது எதிர்ப்பை காட்டி
விட்டோம். பலரும் உண்மையை புரிந்து கொண்டனர். எனவே தீர்ப்பு கமலுக்கு
சாதகமாக வந்தால் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் சட்டத்துக்கு
கட்டுப்படுவதே நமது கடமை. அண்ணன் தம்பிகளாகவும் மாமன் மச்சான்களாகவும்
சகோதர பாசத்தோடு பழகி வரும் பெரும்பாலான மாற்று மத சகோதரர்கள் நம் மீது
வைத்திருக்கும் நல்லெண்ணம் பாழ்பட்டு விடக் கூடாது. முஸ்லிம்கள் தங்களின
பொறுப்புணர்ந்து செயல்படுவார்களாக!
ஒரு மத மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்த படம் கலை அல்ல களை..
இது தான் எனது வேண்டுகோள்,.,.,
உங்கள் சகோதரன்
ரஹ்மான்./...