Sunday, January 27, 2013

கமலஹாசன் மதவாதியா? அல்லது மதநல்லிக்கணவாதியா?

கமலஹாசன் மதவாதியா? அல்லது மதநல்லிக்கணவாதியா?

ரஹ்மான் :: நம் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக,  கமலஹாசன் என்ற சர்ச்சை நாயகனின், பெரும்பாலன படங்களை சர்ச்சை கிளப்புவது வாடிக்கையான ஒன்று.. தற்பொழுது, இஸ்லாமியர்களுக்கு எதிராக தவறாக சித்திரத்து வெளியிட்ட இருக்கும் விஸ்வருபம் படம், மிகப் பெரிய பிரச்சனை சந்தித்துள்ளது...
தற்பொழுது பல இஸ்லாமிய சகோதரர்கள் கமலஹாசனை இஸ்லாமியர்களுக்கு எதிரியாக நினைக்கின்றன, அவரை பற்றியும், அவரின் குடும்பத்தை, பற்றியும் கடுமையாகவும், கேவலமாகவும், முகநாலில் விமர்சிக்கின்றன..

முதலில் கமலஹாசன் மதவாதியா? அல்லது மதநல்லிக்கணவாதியா? என்று பார்ப்போம்...
கமலஹாசன் மட்டும் அல்ல, கமலஹாசன் குடும்பமே இஸ்லாமிய பெயர் தாங்கி உடையவர்கள்.
அங்கிலேயர் காலத்தில் கமலின் தந்தை, சிறையில் இருந்த காலத்தில், அவருக்கு ஹாசன் என்ற இஸ்லாமியரின் நட்பு கிடைத்தது, அந்த அன்பின் மிகுதியில் தனது முன்று மகன்களுக்கு, சாந்திரஹாசன், சாருஹாசன், கமலஹாசன், என்று பெயர் சூட்டினார்..

இந்த பெயர் அவர்களின் அடுத்த தலைமுறை வரை தொடர்ந்தது, சுஹாசனி, அனுஹாசன், ஸ்ருதிஹாசன், என்று தொடர,.
இஸ்லாமியர்களின் எதிரியாக கருதபடும் கமல், தன் மகள்களுக்கு ஹாசன் என்று பெயர் தான் சூட்டினார்...

கமலஹாசன் வரலாற்று ஆசிரியராக நடித்த "நம்மவர்" படத்தில் ஒரு வசனம் வைத்து இருந்தார், "முகலாயர்கள் நம் நாட்டை ஆண்டூ, நம் நாட்டை வளப்படுத்தினர்கள்.. மன்னின் மைந்தனாக வாழ்ந்தார்கள்,
ஆனால் ஆங்கிலேயர்களோ, நம் நாட்டை வளத்தை கொள்ளையடித்து, அவர்கள் நாட்டுக்கு கொண்டு சென்றார்கள்". என்ற உண்மையை கூறியிருந்தர் ஆனால் சென்ஸர் அதிகரிகள் அதை நீக்கிவிட்டர்கள், கமல் உண்மையை எடுத்து கூறியும் அனுமதிக்கவில்லை.
முகலாயர்கள் பற்றி அறிந்துகொள்ள இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்...

முகலாயர்கள் நல்லவரா? கெட்டவரா?http://rahmanfayed.blogspot.in/2012/09/blog-post_21.html

92ல் பாபர் மசூதி இடிக்கபட்ட பிறகு, முஸ்லிமகள் மீது நடந்த மிகப்பெரிய கலவரத்தில், பல முஸ்லிமகள், உயிரை இழந்து, உடமை இழந்தனர், கலைதுறையை சோர்ந்த கமல் தான், இஸ்லாமியர்கள் அறுதல் கூறீயது மட்டும் அல்லாமல், அன்றைய பிரதமர் நரசிம்மவராவை நேரில் சந்தித்து தன் கண்டனத்தை தெரிவத்து முஸ்லிமகளுக்கு அறுதலாக இருந்தார்..

மதநல்லிக்கனத்துக்கு எடுகாட்டாக இருந்த கமல், அவர் ஹேராம் படத்தில், தனது முஸ்லிம் நண்பரை பார்த்து, இப்படி ஒரு வசனத்தை கூறு இருப்பார்,
"உங்களால் தான் பிரச்சனை, நீங்கள் எல்லாம் பாக்கிஸ்தான்க்கு போங்கடா,"
இந்த வசனத்தை பார்த்தால், எல்லாம் முஸ்ஸிலமகளுக்கு கோபமாக தான் வரும்,
ஆனால் அழந்து சிந்தித்தால்,
அந்த படத்தின் நாயகனான கமல், ஒரு மதவாதி, என் நமது தேச தந்தை காந்தியை, தேச துரேகியா நினைப்பவன். கோட்சையை, நல்லவனாக நினைப்பவன். அப்படி பட்ட இளைஞனின், வன்மமான வார்த்தைகள் தான் அது...

அதே படத்தில், அந்த இஸ்லாமிய நண்பராக நடித்த சாருக்கான், பதில் இதோ
"பாக்கிஸ்தான் அதிபர் மகளோ, பிறந்த இந்தியா தேசத்தை விட்டு செல்லமாட்டேன், என்று கூறிவிட்டர் நானே, காந்தியின் மகன், என்று கூறி இருப்பார்கள்...
ஆனால், இந்த படம் வேறமாதரி தாக்கத்தை ஏற்படுத்தியது, முஸ்லிமகள் எல்லாம் பாக்கிஸ்தான் காரங்க என்ற மாதிரி...

கமலின் கனவு படமான மருநாயகத்தின் டிரலிரில்,

islam alies  peace ,.இஸ்லாம என்றாலே சமாத்துவம் என்று வரும்.

மருதநாயகம் ஒரு முழு வரலாறு


தசவதாரம் படத்தில், நாகேஸ், கே.அர்.விஜயா, இஸ்லாமிய தம்பதிகளாக காட்டி இருப்பார்கள், அவர்கள் குடும்பத்தை விசாரிக்க, சிபிஜ அதிகரியாக வரும் கமல், "நீ தலிபானா, அல்கொய்தாவா," என்று நக்கலாக கூறுவர்,
தற்பொழுது உள்ள பல மக்கள், இஸ்லாமியர்கள
திவரவாதியாக, நினைக்கிறார்கள், என்பதை மறைமுகமாக காட்டி இருப்பார்,

அதே படத்தில், அந்த முஸ்லிம் குடும்பத்தை நல்லவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவுபவர்களாக, இப்படி தான் நேர்மையான முஸ்லிம் சமுகத்தை சந்தேகமாக பார்பதை, மறைமுகமாக விளக்கி இருப்பார்...
உன்னை போல ஒருவன் படத்தில்,
குஜராத் கலவரத்தில் காவிகளால், தன் மனைவியை கற்பழித்து கொலை செய்பட்டடை, வேதனையீடன் கூறுவார், ஆனால் காவல் துறை அதிகாரியே நக்கலாக அதான் நிக்க, நாலு பொன்டாடியை கட்டிக்கொள்ளலாமே, என்று கூறுவார்1
அதே படத்தில் நேர்மையாக முஸ்லிம் காவல் அதிகாரி மீது, சந்தேககண்னில் பார்க்கும் உயர் அதிகாரியாக காட்டி இருப்பார்,
சமுதாயத்தில் நடக்கும் உண்மையை அப்படமாக காட்டி இருப்பார்கள், முஸ்லிமகள் வேதனைபடுவது, வருத்தபடும் நிகழ்ச்சி அல்ல, அவர்களை நேர்மையான காவல் துறை அதிகாரியாக இருந்தாலும், சந்தேக கண்ணில் பார்பபது தான் தற்பொழுது நடக்கிறது, என்று அவரின் படத்தில் விளக்கி இருப்பார்....

முஸ்லிம் சமுகம், மீது நடக்கும் இன்னல்களை, மறைமுகமாக சாடிஇருப்பார், இது எனது பார்வையில்,
சரி விஸ்வருபத்திற்கு வருவோம்,
உலக தீவரவாதத்தை பற்றி எடுக்கிறேன், என்று கூறி தலிபான்களை பற்றி ஆராயமல், அமெரிக்கவின் கருத்தையே படமாக எடுத்துஇருக்கிறார்...
தலிபான்களின் தலைவராக இருந்த ஒசமா பின்லெடன் 89 கால பகுதியில், அமெரிக்கவின் பார்வையில், "ஒசமா நல்ல போராளி, அவர் நாட்டிற்காக போராடுபவர், எங்கள் நண்பர்"
இன்று அமெரிக்கர்களிடம் கேட்டால் "உலக பயங்கரவா தீவரவாதி என்றால், அது ஒசமா தான்"

எப்படி இந்த மாற்றம் என்றால் 90 கால பகுதியில் சோவியத் ரஷ்யா அப்கான் நில பரப்பை ஆங்கிரமித்த பொழுது அதற்கு ஏதிராக போராடிய ஒசமாவிற்கு உதவியது அமெரிக்கா தான் அன்றைய ஜனாதிபதி வில்லியம் புஜ் [ஜார்ஸ் புஜ் தந்தை] நண்பர்

அமெரிக்கா உதவுவதற்கு முக்கிய காரணம், வளங்கள், ஆனால் அதற்கு பணியாத ஒசாமாவை, வெறுத்த புஜ், தன் மகன் முலம் அப்கானை அக்கிரமிக்க அரம்பித்தனர்,

காரணமாக உலக வார்த்தக மையத்தை தகர்ப்பை கூறினார்கள்,
1/7 PART OF AMERICAN PEOPLE NOT ACCEPT WTC DEMOLISH AFGHAN,
இதேபோல தான் ஈராக் அணுஆயிதம் இருக்கு, என்று போர் புரிந்து, பெட்ரேல் வளத்தை கைபற்றினர், ஆனால் அங்கு அணு ஆயிதமே இல்லை, என்பது வேற விஷயம்..
http://rahmanfayed.blogspot.in/2012/07/blog-post_7433.html

அமெரிக்க இரட்டை கோபுரத்தை இடித்தது பற்றி பல தகவல்தலிபான்கள் மீது, அமெரிக்கா ஊடகங்கள பல பொய் செய்திகள், பரப்புவதாக முல்லா உமர் கூறீ இருக்க..
இது உண்மையா பொயா என்று இறைவன் தான் அறிவான்
இப்பதிவுக்கு வருவோம்..
இஸ்லாமியர்கள் எதிர்க்க முக்கிய காரணம் அந்த திரைபடத்தில் தலிபான் தலைவர் முல்லா உமரை, பேட்டி காண கமல் செல்வதுபோல ஒரு காட்சி, அதில் முல்லா உமர் கூறிய சில வார்த்தைகள் தான், ரொம்ம அதிர்ச்சியை ஏற்படுத்தியது, அமெரிக்கா தேடும் முல்லா உமர், தமிழகத்தில், கோவை, மதுரையில், சில காலம் வாழ்வது போலவும், தமிழ் நாட்டை சோர்ந்த தீவரவாதிகளை, விரும்பவதுபோலவும், காட்சி படுத்தி இருப்பார்,
ஊடகம் சக்தி எவ்வளவு பெரியது, இப்படி ஒரு காட்சியை பார்க்கும் ரசிகர்கள் என்ன தோன்றும், மதுரை, கோவையில், வசிக்கும் முஸ்லிமகள், தீவரவாதிகளாக தானே நினைக்க தோன்றும்.. மேலும், அந்த படத்தில் ஒரு தீவரவாதி தொழதுவிட்டு, பாம் வைக்க செல்லுவது போல ஒரு காட்சி, இன்னோறு காட்சியில், குரான் வசனங்கள், கூறிவிட்டு கொலை செய்வதுபோல ஒரு காட்சி, இப்படி காட்சி படுத்தி இருந்தால், மக்களுக்கு என்ன தோன்றும், இஸ்லாம் ஒரு வன்முறையை வளர்க்கும் மதமாக தானே தோன்றும்,
 
தொடக்கம் முதல் கடைசி வரை அமெரிக்காவின் ஜால்ராவாகவே இருக்கும் திரைக்கதை,
சிறு இஸ்லாமிய குழந்தைகளின் விளையாட்டே வாயில் துப்பாக்கி
சத்தத்துடன் வெறும் கையால் ஒருவரை ஒருவர் குறிபார்த்து சுட்டு கொல்வது,

இந்த படத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளை தாக்கும் அமெரிக்காவும்,
அமெரிக்கர்களை தாக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுமே இரண்டு கட்சிகள். அப்படி
இருக்க முழுக்க முழுக்க அமெரிக்காவின் தாக்குதல்களை மட்டுமே

அதற்காக தலிபான்கள் செய்வது சரி என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களின்
வாதத்தையும் ஓரளவேனும் விளக்குவது தான் ஒரு நியாயமான கலைஞனின் கடமை
(அல்லது இந்த வியாபாரியின் தொழில்தர்மம்). கிட்டத்தட்ட படத்தில் வரும்
அத்தனை இஸ்லாமிய கதாபாத்திரங்களையுமே கொடூரர்களாக, கொலைகாரர்களாக, முட்டாள்களாக காட்டியிருப்பது,

ஒரு மத மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்த படம் கலை அல்ல களை..

சில நடுநலைவாதிகள் கேட்கலாம்? படங்களில் முஸ்லிமகளை தீவரவாதிகளாக காட்டினால், நாங்கள் நம்பிவிடுவோமா?? என்று கூறினார்கள்,

"ஒரு பொய்யை திரும்ப, திரும்ப, கூறினால், அந்த பொய், சில காலத்துக்கு பிறகு, அந்த பொய் செய்தி, உண்மையான செய்தியாகவே மனதில் பதியும்.".
அது போல தான 20 வருடங்களுக்கு மேலாக ஊடகங்கள் வாயிலாக முஸ்லிமகளை தீவரவாதிகளாக சித்திரத்து வந்தனர் அந்த தாக்கம் தான் முஸ்லிம் சகோதர்களை தீவரவாதிகளாக மாற்று மத சகோதர்கள் பார்ப்பதும்
அவர்களிடம் நக்கலாக "பாய் அடுத்து எங்க பாம் வைக்க போறிங்க" என்ற கேள்வி கேட்க்கும் பொழுது அவன் மனம் எவ்வளவு வேதனைபடும் என்று அறியாமல் இருங்கிங்க
நான்கு தலைமுறையாக நெல்லை பேட்டை மாற்ற மத சகோதர்கள் மத்தியில் வசிக்கும் நான் அங்கு உள்ள பல மாறப்பட்ட மக்களான பிள்ளைமார் ஆசாரி பிராமனர்கள கவுன்டர் என பல பேர் இருந்தாலும் எங்களிடம் ஒரு குடும்ப உறவுகளாக வாழ்ந்து வருகிறோம் அப்படி பட்ட ஊரை விட்டு வேலைக்கா சென்னை வரும் பொழுது தான் நானும் அனுபவத்தேன் அந்த தாக்கத்தை என்னையும் சில மாற்று மத சகோதர்கள் நக்கலாக கேட்ட அந்த கேள்விகள்
பல வருடங்களாக எதிர்காமல் இப்ப மட்டும் என் எதிர்க்க என்ன காரணம் என்று அன்றைய சூழ்நிலை இஸ்லாமியர்களிடம் ஊடகம் இல்லை, அது இன்று வரை தொடர்கிறது ஆனால் பேஸ்புக் முகநூல் மூலமாக எளிதில் பல பேர்களிடம் செய்திகள் செல்லும் வகையில்எளிதில் பல சகோதரர்கள் இனையும் வகையீல் தொலை தொடர்பு முன்னேறியது முதல் காரணம் இரண்டாவது காரணம் பல வருடங்களாக எங்கு குண்டு வெடித்தால் அது இஸ்லாமிய தீவரவாதிகள் என்று நினைத்து இருந்தோம் ஆனால் தற்பொழுது கடந்த சில வருடங்களாக நடந்த குண்டு வெடிப்புக்கு இஸ்லாமியர்கள் காரணம் இல்லை இந்துவாதிகள் தான் காரணத்தை கண்டுபிடித்த பல நேர்மையான காவல் அதிகாரிகளால் தான் கூறிப்பாக ஹேமந் கார்கரே வை கூறலாம்..

மாவீரர் ஹேமந்த் கார்கரே IPS..


http://rahmanfayed.blogspot.in/2012/12/ips.htmlமாலோகான் குண்டு வெடிப்பில் அரம்பித்து பல செய்தது இந்துவாதிகள் என்று உள்துறை அமைச்சர் கூறியருப்பது கூறிப்படக்கது
இதன் தாக்கங்கள் தான் உண்மை தெரிந்த பின்பும் இஸ்ஸலாமியர்கள் மீது மட்டும் தீவரவாதிகளாக காட்டுகிறார்கள்

என்ற ஒரு சிறுபான்மை சமுகத்தின், கோபம்தான் விஸ்வருப படத்தின் எதிர்ப்பு..
இஸ்ஸலாம் என்றாலே சகோதரத்துவம், சமுத்துவமானவர்கள், ஆனால், தற்பொழுது பல இஸ்லாமிய இளைஞர்கள், நடவடிக்கையோ அருவறுக்க தக்கதாக இருக்கிறது,
பிறர் மனம் புண்படாமல் பேசும் இஸ்லாமியர்கள். தவறுகளை மட்டும் சுட்டிகாட்டிம், இஸ்லாமியர்கள், இன்றைய நிலை வெகுவாக மாறிவிட்டது.. இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை...
கமலின் விஸ்வருப படத்திற்கு எதிர்ப்பு காட்டுவது சரி, ஆனால் அவரை பற்றியும், அவரது வாழ்கையை பற்றி விமர்சிப்பது அழகல்ல,
சிலர் அவரை ஒ..., நாயகன் என்றும், கா..., கொடுடன் என்றும். விமர்சிக்கின்றன,
சிலர் அவரையும், அவளது மகளையும், தவறாக இனைத்து கொச்சை படுத்திவிட்டனர்...
இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்த விஸ்வருபத்தை எதிர்க்கலாம், ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை எதிர்ப்பது, கண்டனத்துக் கூறியது...
இஸ்லாமியர்களிக்கு எதிரியாக இருந்தால் எதற்கு, இஸ்லாமிய அமைப்பிற்கு படம் வரும் முன்பாகவே திரையிட்டு காட்ட வேண்டும், அவர் இஸ்லாமியர்கள் தவறான புரிதலில் வெளியிட்டு விட்டர்,.
இனி வரும் காலங்களில் இஸ்லாமியர்களை பற்றி தவறாக சித்தரித்து, திரைபடங்கள் வருவது குறையும் என்று நம்புகிறேன்...

பிரபல இஸ்லாமிய பதிவர், சகோதர் சுவனப்பிரியன பதிவரின் வேண்டுகொளை பதிவு செய்கிறேன்...

முஸ்லிம் ஆயுதம் தூக்குகிறான் என்று சொன்னால் எதற்காக அவன் தூக்க வேண்டும்? அதன் சூத்திதாரி யார்? என்று தேடி அந்த நாட்டின் உண்மை முகத்தையல்லவா கமல் தோலுரிக்க வேண்டும். மாற்றாக தனது படத்தில் அமெரிக்கர்களை நலன் விரும்பிகள் போலவும் ஆப்கானிய முஸ்லிம்கள் குர்ஆனோடு ஜிஹாதுக்கு கிளம்புவதாகவும் காட்டுவது நேர் எதிர் கருத்துக்கள அல்லவா? மனுஷ்ய புத்திரன் ஒரு பேட்டியில் அமெரிக்கா தனது ஆளுமைகளை நியாயப்படுத்த பல தயாரிப்பாளர்களுக்கு பண உதவி செய்வதாக சொல்லியிருந்தார். தனது ஹாலிவுட் படங்களுக்கு பணத்தை திரட்ட இது போன்ற யுக்திகளை கையாண்டால் பணம் கொட்டும் என்று நினைத்தாரோ என்னவோ!

நாங்கள் முன்பு விரும்பிய கமலாக திரும்ப வர வேண்டும். இந்த தீவிரவாதங்களுக்கெல்லாம் மூல காரணியான அமெரிக்க தீவிரவாதத்தையும் அதன் உண்மையான காரணங்களையும் விசுவரூபம் பார்ட் 2 வில் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் மட்டுமே இழந்த தனது பெயரை கமல் திரும்ப சம்பாதிக்க முடியும். மனித நேயத்தை கமல் உண்மையாகவே விரும்புபவராக இருந்தால் இதனை செய்து முடிக்கட்டும்.

மற்றபடி நாளை படத்தை பார்த்து நீதிபதிகள் திரையிட அனுமதி வழங்கி விட்டால் இதற்கு மேலும் இந்த பிரச்னையை வளர்க்காமல் அதன் போக்கில் விட்டு விடுவதே நல்லது. தியேட்டரில் சென்று பிரச்னை பண்ணுவது சில விஷமிகள் தங்களின் காரியத்தை சாதித்துக் கொள்ள சாதகமாக்கி விடும். பெண்கள் குழந்தைகளோடு தியேட்டருக்கு படம் பார்க்க பலரும் வருவர். நாம் நமது எதிர்ப்பை காட்டி விட்டோம். பலரும் உண்மையை புரிந்து கொண்டனர். எனவே தீர்ப்பு கமலுக்கு சாதகமாக வந்தால் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் சட்டத்துக்கு கட்டுப்படுவதே நமது கடமை. அண்ணன் தம்பிகளாகவும் மாமன் மச்சான்களாகவும் சகோதர பாசத்தோடு பழகி வரும் பெரும்பாலான மாற்று மத சகோதரர்கள் நம் மீது வைத்திருக்கும் நல்லெண்ணம் பாழ்பட்டு விடக் கூடாது. முஸ்லிம்கள் தங்களின பொறுப்புணர்ந்து செயல்படுவார்களாக! 

ஒரு மத மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்த படம் கலை அல்ல களை..

இது தான் எனது வேண்டுகோள்,.,.,

உங்கள் சகோதரன்
ரஹ்மான்./...

Friday, January 25, 2013

நாம் மறந்த இந்திய விடுதலைக்கா பாடுபட்ட போராளிகள் பற்றிய தகவல்!!!

நாம் மறந்த இந்திய விடுதலைக்கா பாடுபட்ட போராளிகள் பற்றிய தகவல்!!!

 

rahmanfayed : "ஆங்கிலயர்களிடம் இருந்து இந்தியாவிற்கு விடுதலை யார் வாங்கிதந்தார்கள்?" என்று நம் மக்களிடம் கேட்டால், உடனே கூறுவார்கள், "மகாத்மா காந்தி" என்று....

ஆம்!. அவர் தான், விடுதலை போரில், கடைசி காலத்தில் ஆங்கிலயர்கள் எதிராக அகிம்சை வழியில் தலைமை தாக்கி போர் செய்து வெற்றி வாகை சூடினர்...


மகாத்மா காந்தியை அறிந்த நாம், இந்திய விடுதலைக்கா பாடுபட்ட பலரை, நாம் அறியாமல் இருக்கிறோம், எனது தளத்தில், பல விடுதலை போராளிகளை வரலாற்றை வெளியிட்டு இருந்தேன். அதை தொகுத்து ஒரு முழு பதிவாக, இந்த பதிவை பதிவு செய்கிறேன்...


"வங்கம் தந்த சிங்கம்" சிராஜ்-உத்-தௌலாவின்வங்கம் தந்த சிங்கம்

சிராஜ்-உத்-தௌலா

இன்று முதல் சுதந்திர போராட்டம் 1857 என் கூறுகின்றனர் ஆனால் உண்மையில் 1757 லில் வங்கத்தில் ஆங்கிலேயர் களுக்கு எதிராக நடைபெற்ற போரே முதல் சுதந்திர போர் ஆகும் ஆம் வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தத்தின் மீதுதான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் தன் முதல் கால் கோளை இந்திய மண்ணில் ஊன்றியது. ஆமாம் இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது. 
சிராஜ்-உத்-தௌலாபற்றி அறிந்துகொள்ள இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்..


அதே காலகட்டத்தில் தான், தென் இந்தியாவில் ஆங்கிலயர்கள் உள்ள நுழைய ஆரம்பித்தனர், அதை எதிர்தவர்களில் தமிழர்கள் பங்கு மகத்தானது...


மாவீரன் புலிதேவன்

புலிதேவன்..

இயற்கை வளம் மிகுந்த நெல்லை சீமையை ஆண்டு வந்த புலிதேவன் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினான் புலிதேவன்
அவனின் வீர வரலாற்றை அறிந்து கொள்ள இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்..
சாதி, மதம், இனம், என்ற பாகுபாடு பார்காத புலிதேவன். தனது படையில் தாழ்ந்த சாதியை சோர்ந்த ஒருவனை, தளபதியாக நியாமித்தார், யார் தெரியுமா??
அவர் தான் ஒண்டி வீரன்..

ஓண்டி வீரன்

புலிதேவனின் தளபதிகளின் ஒருவனாக இருந்த ஒன்டி வீரன் தன் திறமைகளை நீருபித்து தன் திறமைகளால் புலிதேவனை மட்டும் அல்ல ஆங்கிலேயர்களை அதிர வைத்தார் அவரை பற்றி அறிய இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்.
ஒண்டி வீரன்..

புலிதேவன் எளிதில் ஆங்கிலேயர்களால் வீழத்த முடியவில்லை அவரை வீழத்தியது ஒருவன் அவன் வேற யாரும் இல்லை வேளாளர் இனத்தை சோர்ந்த மாவீரன் மருதநாயகம்..

மருதநாயகம்

கமலஹாசன் கனவு படமான, "மருதநாயகம்" படத்தை அனைவரும் அறிந்து இருப்பிர்கள்..
ஆங்கிலேயர்களின் கை கூலியாக இருந்து, தமிழகத்தின் பல பகுதிகளை, ஆங்கிலேயர்களுக்கா கைபற்றிய, மருதநாயகம் என்ற முகம்மது யூசுப்கான் சாகிப் தான்... ஆங்கிலேயர்களின் மதுரை மாகணத்தின், முதல் தமிழர் கவர்னராக நியாமிக்பட்டர், பின்னர் ஆங்கிலேயர்கள், மற்றும் நவாப்பின், சுயரூபம் தெரிந்து பின்னர். ஆங்கிலேயர் அதிர வைத்தார், தக்க பதில் அடி கொடுத்தர்,

ஏன் மருதநாயகம் இறந்தபின்பும், மருதநாயகத்தை கண்டு அலறினர், என் என்பதை அறிய இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்...

மருதநாயகம் ஒரு முழு வரலாறு.

 ஆங்கிலேயரிடம் இருந்து, இந்தியா விடுதலைக்கா போராடிய பொழுது மருதநாயகத்திற்கு, ஒரு மாமன்னர் உதவினர், யார் தெரியுமா??
மைசூர் சிங்கம் ஹைதர் அலி தான் அவர்...

மைசூர் சிங்கம் ஹைதர் அலி

அன்றைய லண்டன் பத்திரிக்கை, மைசூர் ஆரசாங்கத்தை வைத்த பெயர் "ஆங்கிலேயர்களின் குலை நடுக்கம"
ஆங்கிலேய அரசாங்கத்தை ஆதிர வைத்தது இரண்டு இந்தியர்கள் ஒருவர், அகிம்சை வழியில் மிரள வைத்த மகாத்மா காந்தீ, இன்னேறுவர் மாமன்னர் ஹைதர் அலி..
ஆங்கிலேயர்களை விட பல நவின ஆயதங்களை பயன்படுத்தி, வெள்ளையர்களை, கடைசி போர் வரை வெற்றிவாகை சூடினர் இந்த மைசூர் சிங்கம்..
ஹைதர் அலி...
 

இவரது ஆட்சியில் தளபதிகள் இருந்து குடியவன் வரை, அன்றைய காலத்தில் நவின ஆயுதமான, தூப்பாக்கியை பயன்படுத்தும் முறையை அறிந்து இருந்தனர்...
அவரின் வரலாற்றை அறிய இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்
இவரது காலகட்டத்தில் பல தமிழ் போரளிகளுக்கு பயிற்சி அளித்தது மட்டும் அல்லாமல், பல தமிழ் அரசர்கள், மட்டும் அரசிகளுக்கு, உதவினர். அவர்களில் ஒருவர் வேலூ நாச்சியார்...இராமநாதபுரத்தின் வீர மங்கை வேலு நாச்சியார்

 
இந்தியா விடுதலைக்கா போராடிய, பெண் என்றால் ஜான்சி ராணியை தான் கூறுவோம், அவருக்கு முந்தைய நூற்றாண்டில் பிறந்து, ஆங்கிலேயர்களை ஆச்ச வைத்த பெண் தான், வீரமங்கை வேலூ நாச்சியார்,
கணவனையும் நாட்டையும் இழந்து காட்டில் தஞ்சம் அடைந்த போது, அவருக்கு பக்கபலமாக இருந்தது, இரு தளபதிகள் மருதுபாண்டியர்கள் அவருக்கு அடைகலம் அளித்து அதிரவு கொடுத்த ஹைதர் அலி, அயுதங்கள், படை அளிக்க ஆங்கிலேயர்களை மீண்டும் வென்ற காளையர் கோயில் கைபற்றி, சிவகங்கை ராணியாக முடிசூட்டி கொண்டவர் தான், வேலு நாச்சியார், அவரது வரலாற்றை அறிய இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்..
வேலு நாச்சியாருக்கு பிறகு சிவகங்கையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து தற்காத்தது யார் தெரியுமா??
மருது சகோதரர்கள்..மருதுபாண்டியர் பற்றிய வரலாற்று தகவல் !!!

மருதுபாண்டியர்

 
சிவகங்கையில் நல்லாட்சி அமைத்து மதநல்லிக்கணத்து எடுகாட்டாக விளங்கிய இந்த சகோதரர்களை படை எடுத்து விழ்த்திய ஆங்கிலேயர்கள் கடைசியில் தூக்கிலிட்டு கொன்றனர் சின்ன மருதுவின் கடைசி மகனையும் அவர்களின் படை தளபதி சேக் உசனேனையும் நாடு கடத்தி அவர்கள் நேர்ந்த கொடுமை பற்றி அறிய இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்..

நாசா விண்வேளி ஆராய்சி கூடத்தில் வரவேற்ப்பு அறையில் ஒரு இந்தியரின் படம் இருக்கும் யார் தெரியுமா??
அவர் தான் திப்பு சுல்தான்.. திப்பு சுல்தான்..


 மைசூர் சிங்கம் ஹைதர் அலியீன் ஒரே மகன் திப்பு தான் உலேக ராக்கெட்களின் தந்தை நவின அயுதங்களை கையாண்டு ஆங்கிலேயர்களை மிரள வைத்த மைசூர் புலியை பற்றி அறிய இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்


திப்பு சுல்தான்-ஒரு முழு வரலாறு..

 

தீரன் சின்னமலை

ஆங்கிலெயர்களிடன் ஏதிரான போர் களத்ததிரல் திப்புக்கு உதவுதற்காக நொப்பொலியன் தூது செல்ல சென்றவர் தான் தீரன் சின்னமலை திப்புவிக்கு பிறகு தன்னால் முடிந்த வரை ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த இந்த மாவீரன் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்...


பிரிட்டீஷாரின் அதிகாரம் இந்தியா முழுவதும் பரவியிருந்த காலகட்டம். தங்களது ஆட்சி விரிவாக்கத்திற்காகராஜாக்கள நவாப்கள் மட்டுமல்லாமல் டில்லி முகலாய மன்னர்களின் ஆட்சியிலும் தலையிட்டனர். மன்னர்களுக்குபிறந்த நாள் பரிசளிக்கும் வழக்கத்தை நிறுத்தினர்.

இந்தச் சூழலில் தான் 1837 –இல் பகதுர்ஷா ஜஃபர் டில்லி அரியணையில் யார் தெரியுமா ஏரினார்தெரியுமா
பகதுர்ஷா ஜஃபர் ,

"பகதூர்ஷா ஜாஃபர்"

"பகதூர்ஷா ஜாஃபர்" முதல் இந்திய சுதந்திரப் போரின் தலைவர், முகலாயப் பேரரசின் கடைசி மன்னன் பகதூர் ஷா என்று படித்ததைத் தவிர வேறு எதுவும் நினைவில்இல்லை. ஆனால் பகதூர் ஷா ஒரு கவித்துவ உள்ளம் கொண்ட கவிஞனாகவும் மதசார்பற்றவனாகவும் சூஃபி ஞானியாகவும் ஆட்சி புரிவதற்குத் தகுதியற்றவனாகவும் தன் நம்பிக்கைகளைப் பேரரசன் என்ற அதிகாரத்தின் முலம்செயல்படுத்த முடியாதவனாகவும். ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியைக் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருத்தவனாகவும்...

இந்துக்களைக் காப்பாற்றுபவனாகவும், தீவிரவாத இஸ்லாமியர்களின் கோரிக்கைகளுக்கும் உணர்வுளுக்கும் பலியாக விரும்பாமல் அவர்களிடம் மத்தியஸ்தனாகவே தன்னுடைய பங்கு அமையவேண்டும் என்று பிரக்ஞைபூர்வமாகவே ஜாபர் கருதினார்.

 

"பகதூர்ஷா ஜாஃபர்" பற்றி அறிய இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்

1858 மார்ச் 6 � ஆம் தேதி 30 ஆயிரம் துருப்புகளுடன் வந்த மேஜர் காலின் படையோடு ஐந்துநாட்கள் தொடர்யுத்தம் நடத்தினார். இப்போரில் மாமன்னர் இளவல்களின் தலைகளைக் கொய்த மேஜர் ஹட்ஸன், வீரமங்கையர் பேகம் ஹஜ்ரத் மஹல் வீரர்களால் கொல்லப்பட்டான்.  

 

வீரமங்கையர் பேகம் ஹஜ்ரத் மஹல்

 1857 - இல் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைந்த போது, அதில் அரசாண்ட இரண்டு வீரமங்கையர் இருந்தனர். ஒருவர் ஜான்சிராணி லக்குமிபாய், மற்றொருவர் உத்திரப்பிரதேசத்தில் ஒளத் (Outh) என்ற குறுநிலப்பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.

பேகம் ஒளத் (Begum of Outh / Oudh / Awadh) என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு சில வரிகளில் எழுதிச் செல்லும் ஹஜ்ரத் மஹலின் வீரம் - தேசாபிமானம் - தியாக அர்ப்பணிப்பு ஆகியன ஒரு வீர வரலாற்றுக்கும் விரிவாகப் பேசப்பட வேண்டிய வரலாற்றுக்கும் உரியதாகும்.
 அவரை பற்றி அறிந்துகொள்ள இங்கே <<கிளிக்>>
செய்யுங்கள்

 பகதுர்ஷா சமாதியில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து தமக்கு மக்கள் அன்புடன் அளித்த தங்க வாளின் பிடியில் அடைத்து, அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக,

“நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், இம்மஹானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்!” - என்று சபதமேற்றார்.

யார் தெரியும்மா??

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

 

இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வங்காளத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த ஜானகி நாத்போஸ் பிரபாவதி தேவி தம்பதிகளின் 9வது குழந்தையாக 23/1/1897 ல் பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். (நேருவைவிட எட்டு வயது இளையவர்). 

 

அவரை பற்றி அறிந்துகொள்ள இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்

தியாகி சுப்ரமணிய சிவா..

 செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாருக்கும், மகாகவி பாரதியாருக்கும் நெருங்கிய தோழனாக விளங்கிய சுப்பிரமணிய சிவாவின் சொந்த ஊர்,

தியாகி சந்திரசேகர ஆசாத்

ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட மாவீரர் தான் சுதந்திரத்துக்காக தன்னை தானே அழித்து கொண்ட சுதந்திர போராட்ட தியாகி சந்திரசேகர ஆசாத் !!!

 அவரை பற்றி அறிந்துகொள்ள இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்


தியாகி கான் அப்துல் கப்பார் கான் (பாரத ரத்னா) 

கான் அப்துல் கப்பார் கான் (Khan Abdul Ghaffar Khan, 1890 - 20 ஜனவரி 1988)பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை அகிம்சை முறையில் எதிர்த்தவர். மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர்.
மறைக்க பட்ட வரலாற்றின் வரிசையில் சுதந்திர போராட்ட தியாகி கான் அப்துல் கப்பார் கான் (பாரத ரத்னா) பற்றி தெரிந்து கொள்வோம் !!!

 அவரை பற்றி அறிந்துகொள்ள இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்

 

இன்னும் பல விடுதலை போராட்ட வீரர்களின் பதிவை இந்த rahmanfayed தளத்தில் வெளியிடப்படும்,
நாம் பெற்ற சுதந்திரத்தை நினைவு கூறுவோம், நாட்டை வளப்படுத்தவோம்..


உங்கள் சகோதரன் 
ரஹ்மான்./....