Monday, September 24, 2012

ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப் பற்றி சில தகவல் - II

ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப் பற்றி சில தகவல் - II.

ஒளரங்கஜேப்..
இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...

'சதி'யை நிறுத்தியவர் ஒளரங்கஜேப்!
ஆதரவற்ற துர்பாக்கியவதியான ஒரு பெண்ணை 'சதி' (உடன்கட்டை ஏறுதல்) உயிருடன் எரிக்க முயன்றனர். ஆடசித் தலைமை வகித்த ஒளரங்கஜேப் இதை அறிந்து அந்த கொடுமையை தடுத்து நிறுத்தினார். அதோடு எந்த ஓர் இந்துப் பெண்ணையும் உயிருடன் எரிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்கக் கூடாதென்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அறிந்த உயர் ஜாதி இந்துக்கள் தங்கள் மத விஷயத்தில் ஒளரங்கஜேப் தலையிடுவதாக புகார் கூறினர். 'உயிருள்ள ஒரு பெண்ணை எரிப்பது அவர்களுடைய மத நம்பிக்கை என்றால் அத்தகைய மோசமானச் செயலை செய்திட அனுமதி அளிக்காமலிருப்பதே தன்னுடைய நம்பிக்கை என்று ஒளரங்கஜேப் உறுதியாக நின்றார். உயர் பிரிவைச் சேர்ந்தவர்கள் பலரது எதிர்ப்பை மீறிதாம் இட்ட கட்டளையை நிறைவேற்றிடவும் பணித்தார். பலவந்தமாக உடன் கட்டை ஏற்றப்படும் பெண்களின் நகை, ஆபரணங்களைப் பெற்று அனுபவித்து வந்தவர்கள் பாதிப்பிற்குள்ளாயினர்.

விளைவு, மதத் தலைவர்கள் ரகசிய இடத்தில் ஒன்று கூடினர். ஒளரங்கஜேப் அரசைக் கவிழ்க்க சதி செய்தனர். அவரைக் குறித்து ஹிந்து மத விரோதி என பொய்களைப் புனைந்துரைத்தனர்.

ஜோசப் இடமருகு, பிராமண மதம், (மலையாளம்) தமிழில் த.அமலா, சென்னை 1995, Page 227
Premnath Bazaz, The Role Of Bhagavadgita in Indian History, New delhi 1975, Page 339



அரசியல் வேறு மதம் வேறு!ஒளரங்கஜேப்பிடம் அவரது முஸ்லிம் நண்பர்கள் அவரது அரசாங்கத்திலுள்ள இரண்டு முஸ்லிம் அல்லாதவரை அவர்கள் சார்ந்திருந்த மதத்தின் காரணமாக பதவியில் வைத்துக்கொள்ளக் கூடாதென்று கூறியபோது அதனை ஏற்க மறுத்தவர் ஒளரங்கஜேப். 'அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை. அரசியல் விவகாரங்களில் மதம் என்பது கிடையாது. அவரவர்கள் அவரவரது மத்தைப் பின்பற்றட்டும்.' என்று சொன்னவர் ஒளரங்கஜேப்.

டி.என.ராமச்சந்திரன், நமது சரித்திர பாரம்பரியம், நாகப்பட்டினம்
1950, Page 80

இது போன்று தன் நாட்டு மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட ஒளரங்கஜேப் இந்துக்களைக் கொடுமை படுத்தினார் என்று எழுதுவது நேர்மையான வாதம் தானா என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.



எனது தேசத்து ஏழைகளுக்கு......ஒரு சமயம் புனித மக்கா நகரத்தின் ஷெரீப் பொருள் உதவி வேண்டி தனது தூதரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பியபோது அவரக்கு பொருளுதவி செய்ய மறுத்ததோடு 'எனது தேசமான இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அந்தப் பணத்தை வினியோகிக்க்க் கூடாதா? என்று கேட்டு விட்டு 'இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான்' என்றும் அந்தத் தூதரிடம் பதில் தந்தவர் ஒளரங்கஜேப்'

டி.என். ராமச்சந்திரன், நமது சரித்திர பாரம்பரியம், நாகப்பட்டினம்.
Page 80, 81.

நம்நாட்டை எந்த அளவு நேசித்திருந்தால் இத்தகைய வார்த்தை ஒளரங்கஜேப்பின் வாயிலிருந்து வந்திருக்கும்? இவரைப் பற்றிய மேலதிக விபரங்களை நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது பதிக்கிறேன் இறைவன் நாட்டம் இருப்பின்.
 
ஒளரங்கசீப். மக்களின் வரிப் பணத்தில் தனது மனைவிக்கு தாஜ்மஹால் கட்டியதை எதிர்த்துதான் தனது தந்தையையே சிறையில் அடைத்தார் ஒளரங்கசீப்.  

வாரணாசி விசுவநாதர் ஆலயம்!


வங்காளத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்த ஒளரங்கஜேப் வாரணாசி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது ஆட்சியின் கீழிருந்த ஹிந்து ராஜாக்கள் ஒளரங்கஜேப்பிடம் 'பயணத்தை ஒரு நாள் நிறுத்தித் தங்கிச் சென்றால் அந்த நாளில் எங்களது ராணிகள் கங்கையில் குளித்து விட்டு விசுவநாதரை தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்'என்று கோரிக்கை வைத்தனர்.

ஹிந்து அரசர்களும் ராணியரும் கங்கைக் கரையில் தங்கி விசுவநாதர் ஆலயத்தில் வழிபட்டுச் செல்ல வேண்டுமென்ற கோரிக்கையை தயக்கமின்றி ஏற்றுக் கொண்டவர் ஒளரங்கஜேப்.

அதனைத் தொடர்ந்து ஒளரங்கஜேப்பின் அன்றைய வழிப்பயணம் நிறுத்தப் பட்டது. வாரணாசிக்கு இடையேயான ஐந்து மைல்தூரம் முழுவதும் முகலாயப் பெரரசின் இராணுவத்தினர் நிறுத்தப் பட்டார்கள்.

இந்து ராணிகள் பல்லக்குகளில் சென்று புனித கங்கையில் நீராடினர். காசி விசுவநாதர் ஆலயத்தில் வழிபட்டார்கள். (ஒளரங்கஜேப் ஆட்சியில் அவரவர் விருப்பப்படி வணங்கிட அனுமதிக்கப் பட்டனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்)

பூஜைகள் முடிந்தபின் ஹிந்து ராணிகள் திரும்பினர். ஆனால் கட்ச் சமஸ்தானத்தின் ராணி மட்டும் திரும்பவே இல்லை. உடனே அந்த ராணியைத் தேடிக் கண்டு பிடிக்க முழு அளவிளான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனாலும் ராணியைப் பற்றிய தகவல் எதுவும் தெரியாததால் ஒளரங்கஜேப் ஆத்திரமடைந்தார். ராணியைத் தேடிக் கண்டு பிடித்திட தனது மூத்த அதிகாரிகளை அனுப்பி வைத்தார்.

அதிகாரிகள் தீவிரமாகத் தேடுகையில் விசுவநாதர் ஆலயத்தில் உள்ள ஒரு சிலை மட்டும் அசைந்தது. அந்தச் சிலையை அசைத்த போது பாதாளச் சுரங்கம் ஒன்றிற்குச் செல்லும் படிக் கட்டுகள் காணப்பட்டன. உள்ளே இறங்கிப் பார்த்தபோது அங்கே காணாமல் போன ராணி அவமானப் பட்ட நிலையில் அழுது கொண்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. 
this is painting pic, sema comdya variapatu, just look back side seaaa.

விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து ஹிந்து ராஜாக்கள் தங்களது எதிர்ப்பை உரத்த குரலில் வெளியிட்டார்கள். இந்த அக்கிரமத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று ஒளரங்கஜேப்பிடம் கோரினார்கள்.

அந்த இடத்தின் புனிதத் தன்மை மாசு படுத்தப்பட்டு விட்டதை உணர்ந்ததால் ஒளரங்கஜேப் விசுவநாதர் விக்கிரகத்தை வேறு இடத்திற்கு மாற்றிட உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்தக் கோவில் தரைமட்டமாக்கப் பட்டது. அந்தக் கோவிலின் மடாதிபதி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

ஆதாரம்: பிஷம்பர்நாத் பாண்டே, 'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'
Page : 70,71

இதனை தஸ்தாவேஜூகளின் சான்றுகளுடன் டாக்டர் பட்டாபி சீதாராமையா 'ஃபெதர்ஸ் அண்ட் ஸ்டோன்ஸ்' (The Feathers and the Stones)என்ற தனது நூலிலும் பாடனா அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பி.எல்.குப்தாவும் இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளனர். மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். 

P.N.Pande

“Aurangzeb came to Know of it. He was very much enraged. He sent his senior officers to search for the Rani. Ultimately they found that the statue of Ganesh: which was fixed in the wall was a movable one. When the statue was moved. They saw a flight of stairs that led to the basement. To their horror, they found the missing Rani dishonoured and crying. The basement was just beneath Lord Vishwanaths seat. The Rajas expressed their vociferous protests. As the crime was heinous the Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred precinets has despoiled. Lord Viswanath may be moved to some other place. The temple be razed to the ground and the Mahant be arrested and punished.”

P.N.Pande, Islam And Indian Culture, Page 55 

உண்மை இவ்வாறு இருக்க நம் நாட்டு பாட நூல்களில் ஒளரங்கஜேப் 'இந்து கோவில்களை மத வெறியினால் இடித்தார்' என்று பொய்களைப் புனைந்திருக்கிறார்கள். பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கிறோம் என்பதை சமூக ஆர்வலர்கள் உணர்ந்து பொய்யாக புனைந்த வரலாறுகளை திருத்த முன் வர வேண்டும்.  

முஸ்லிமாக மதம் மாறுகிறேன் என்ற அரசர்!

விஜய நகர அரச சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ஸ்ரீரங்க ராயலு பிஜப்பூர் காரர்கள் கர்நாடகத்தை வென்று தெற்கிலிருந்து முன்னேறி வருவதையும் கோல்கொண்டா தளபதிகள் வடக்கிலிருந்து முன்னேறி வருவதையும் கண்டு தன்னுடைய ராஜ்ஜியம் தனது கரங்களிலிருந்து நழவிக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். எனவே தக்காண சுல்தான்களிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு அளிக்கும் படி வேண்டி ராமராவ் என்ற பிரதிநிதியை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். ஆனால் இதில் தலையிட ஒளரங்கஜேப் விரும்பவில்லை.

ரங்கராயலுக்கு போர் நெருக்கடிகள் இன்னும் அதிகமானபோது ஸ்ரீனிவாஸ் என்ற பிராமணத் தூதுவரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். 'இரண்டரை கோடி ரூபாயும், இருநூறு யானைகளும், தன்னிடமுள்ள ஆபரணங்களையும் தருவதுடன் வருடாந்திர வரியைத் தொடர்ந்து கட்டிடவும் தனது ராஜ்ஜியத்தை முகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைத்து விட்டு பின் தனது பகுதியை ஒரு ஜாகீராகத் தனக்குத் திரும்பக் கொடுப்பதற்கும் சம்மதம்' என்று ஸ்ரீரங்க ராயலு தெரிவித்தார்.

மேலும் 'தானும் தனது உற்றார் உறவினர்களும் குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாகவும்' சொல்லி அனுப்பியவர் ஸ்ரீரங்கராயலு. 

“….the Raja promised tp turn Muslim with all his relatives and dependents!……”

உளள்த்தில் மாற்றம் ஏற்படாமல் ஆட்சி போகிறதே என்ற பயத்தினால் இஸ்லாமாவதை தாம் விரும்பவில்லை என்று கூறிய ஒளரங்கஜேப் அந்த அரசரின் கோரிக்கையை நிராகரித்தார்.

Sir Jadunath Sarkar, History Of Aurangzib, Calcutta, 1912 vol. 1, Page 248, 249

இந்த சம்பவத்தைப் பற்றி சொல்லும் போது 'இந்தக் கோரிக்கையின் பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இந்தியாவில் முகலாயர்கால ஆட்சியின் பண்பைப்பற்றி நல்ல விளக்கத்தைத் தருகிறது.'என்கிறார் ஜாதுநாத் சர்க்கார்.


ஜிஸ்யா வரியும் மன்னர் ஒளரங்கஜேப்பும்!

நம்முடைய வரலாற்றுப் பாட நூல்களில் எத்தனையோ பொய்களை அரங்கேற்றி இன்றுவரை மாணவர்களுக்கு போதித்து வருகிறார்கள்இயற்கையாகவே ஒரு சில இந்துக்கள் எந்தகாரணமும் இன்றி முஸ்லிம்கள் மேல் வெறுப்பை உமிழ காரணம் இளம் வயதில் படித்தஇத்தகைய வரலாற்று பாட நூல்களேஅவற்றுள் ஒரு பொய் ஒளரங்கஜேப் முஸ்லிமஅல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்ற வரியைப் புகுத்தி கொடுமை படுத்தினார் என்பதுஇதைநாமும் நம்பி விடுகிறோம். 

இஸ்லாமிய ஆட்சியில் வரி எவ்வாறு வசூலிக்கப் படுகிறது?

முஸ்லிம்கள் மீது ஜகாத் எனும் வரியை இஸ்லாம் கடமையாக்கியுள்ளதுமுஸ்லிம்கள்தங்களிடமுள்ள் தங்கம்வெள்ளிபணம்வியாபாரப் பொருட்கள்ஆடுமாடுஒட்டகம்ஆகிய அனைத்திலிருந்தும் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைபட்டுள்ளனர்.

தங்கம்வெள்ளிமற்றும் பணத்தில் இரண்டரை சதவீதமும்நீர் பாய்ச்சி விளைவிக்கப் படும்பொருட்களில் அய்ந்து சதவீதமும்இயற்கையாக விளையும் பொருட்களில் பத்துசதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும்இது எவ்வளவுகணிசமான வரி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்ஒவ்வொருமுஸ்லிம்களிடத்திலும் இந்த தொகையை கட்டாயமாக வசூலிக்க இஸ்லாமிய அரசுக்குகுர்ஆன் கட்டளை இடுகிறது.

இப்படி வசூலிக்கும் தொகையை யாருக்கு கொடுக்க வேண்டும்?

ஏழைகள்பரம ஏழைகள்கடன் பட்டிருப்பவர்கன்போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டராணுவ வீரர்கள்மற்றும் நாடோடிகள் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவுசெய்யும்ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்தஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப் பட்டன.




மொத்த அரசாங்கமும்முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்துவரும் போதுஅந்த நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் எந்த வரியும்செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாதுமுஸ்லிம் அல்லாதவர்கள் மீதும்ஜகாத் வரியை கடமையாக்கினால் இஸ்லாமிய சட்டத்தை இந்துக்கள் மீது திணிப்பதாகஆகும்எனவே தான் இது போன்ற நிலையில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்றவரியை (ஜகாத் என்ற வரிக்கு பகரமாகவிதிக்க குர்ஆன் கட்டளையிடுகிறதுஇதைத்தான்ஒளரங்கஜேப்பும் செய்தார்இதைத்தான் நமது வரலாற்று ஆசிரியர்கள் குறை கண்டு எழுதிவைத்திருக்கிறார்கள்.
 
அடுத்து ஒளரங்கஜேப் மத வெறி உடையவரஇந்துக்களை கொடுமைப் படுத்தினார் என்றகருத்தும் வரலாறுகளில் காணப்படும்ஒளரங்கஜேப் எப்படிப் பட்டவர் என்று தெரிந்துகொண்டால் இதற்கும் விடை கிடைக்கும்.

 

ஒளரங்கஜேப்பின்் உயில்மௌலவி ஹமீதுத்தீன் என்பவரால் பாரசீக மொழியில்எழுதப்பட்ட சக்கரவர்த்தி ஒளரங்கஜேப்பின்் வாழ்க்கை பற்றிய நூலின் 8வது அத்தியாயத்தில்அவரது உயிலில் சொல்லப்பட்ட விஷயங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனஅதிலிருந்து:

1. நான் இந்தியாவின் சக்கரவர்த்தியாக இருந்து இந்த நாட்டை ஆண்டேன் என்பதுசத்தியமானதுஆனால் நான் என் வாழ்நாளில் ஒரு நல்ல காரியம்கூடச் செய்ததில்லைஎன்பதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்ஆனால் இப்போது வருந்துவதனால் எந்தப்பயனுமில்லைஎன் இறுதிச் சடங்குகளை என் அருமை மகன் ஆஸம்தான் செய்யவேண்டும்என்பது என் விருப்பம்வேறுயாரும் என்னுடலைத் தொடக்கூடாது.

2. என் பணியாள் ஆயா பேக்கிடம் என் பணப்பை உள்ளதுஅதில் கவனமாகச் சேமித்துவைத்த 04 ரூபாயும் 02 அனாக்களும் இருக்கின்றனஎனக்கு ஓய்வான நேரத்தில் நான் குர்ஆன்பிரதிகளை கையால் எழுதிக்கொடுத்தேன்தொப்பிகள் தைத்தேன்அந்த தொப்பிகளைவிற்றுத்தான் நான் நேர்மையாக சம்பாதித்த பணம்தான் அதுஅந்த பணத்தில்தான் (என்உடல்மூடும்·பன் துணி வாங்கப்பட வேண்டும்இந்த பாவியின் உடலை மூட வேறு எந்தப்பணமும் செலவிடப்படக் கூடாதுஇது எனது இறுதி விருப்பம்.
(என் கையால் எழுதப்பட்டகுர்ஆனின் பிரதிகளை விற்று நான் 305 ருபாய்கள் பெற்றேன்.அந்தப் பணமும் ஆயாபேக்கிடம்தான் உள்ளதுஇந்த பணத்தில் வாங்கப்படும் இனிப்பு சோறுஏழை முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.

3. என்னுடைய சாமான்கள் அனைத்தும் -- துணிமணிகள்மைக்கூடுகள்எழுதுகோல்கள்மற்றும் புத்தகங்கள் அனைத்தையும் என் மகன் ஆஸமிடம் கொடுத்துவிட வேண்டும்என்சவக்குழி வெட்டுவதற்கான கூலியை இளவரசர் ஆஸம் கொடுப்பார்.

4. ஒரு அடர்ந்த காட்டில் எனக்கான குழி தோண்டப்பட வேண்டும்என்னைப் புதைத்த பிறகு,என்னுடைய முகத்தைத் திறந்து வைக்க வேண்டும்என் முகத்தை மண்ணுக்குள்புதைத்துவிட வேண்டாம்திறந்த முகத்தோடு நான் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறேன்.அவனுடைய உச்ச நீதிமன்றத்துக்கு திறந்த முகத்தோடு போகின்றவர்களின் பாவங்கள்மன்னிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

5. எனது ·பன் துணி தடித்த கதர்த்துணியால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.எனது உடலின்மீது விலையுயர்ந்த கம்பளம் எதையும் போர்த்த வேண்டாம்எனது சவஊர்வலம் செல்லும்வழியில் மலர்களைத் தூவவேண்டாம்என் உடல்மீதும் மலர்களை வைக்க யாரையும்அனுமதிக்கக் கூடாதுஎந்த இசையும் இசைக்கவோ பாடவோ கூடாது.

6. எனக்காக கல்லறை எதுவும் கட்டக்கூடாதுவேண்டுமானால் ஒரு மேடைஅமைத்துக்கொள்ளலாம்.

7. பல மாதங்களுக்கு என்னால் என் ராணுவ வீரர்களுக்கும் என் தனிப்பட்டவேலைக்காரர்களுக்கும் என்னால் சம்பளம் கொடுக்க முடியவில்லைநான் இறந்தபிறகு,என்னுடைய தனிப்பட்ட வேலைக்காரர்களுக்காவது அவர்களுக்கான முழு சம்பளங்களும்கொடுக்கப்பட வேண்டும்ஏனெனில் கஜானா காலியாக இருக்கிறதுநிஅமத் அலீ எனக்குமிகவும் நம்பிக்கையான ஊழியன்என் உடலை அவன்தான் சுத்தப்படுத்துவான்என் படுக்கைதூசியாக இருக்க அவன் அனுமதித்ததேயிலை.

8. என் நினைவாக எந்த கட்டிடமும் எழுப்பக் கூடாதுஎனது கல்லறையில் என் பெயர்பொறிக்கப்பட்ட எந்தக் கல்லும் வைக்கக் கூடாதுகல்லறையில் அருகில் மரங்களைநடக்கூடாதுஎன்னைப் போன்ற ஒரு பாவிக்கு நிழல் தரும் மரங்களின் பாதுகாப்பைப்பெறுவதற்குத் தகுதியில்லை.

9. எனது மகன் ஆஸம் டெல்லியிலிருந்து ஆட்சி செய்வதற்கான அதிகாரம்பெற்றவனாகிறான்பிஜாபூர்கோல்கொண்டா ஆகிய மாகாணங்களை நிர்வகிக்கும் பொறுப்புகம்பக்ஷிடம் விடப்பட வேண்டும்.

10. அல்லாஹ் யாரையும் சக்கரவர்த்தியாக்கக் கூடாதுசக்கரவர்த்தியாக இருப்பவன்தான்இந்த உலகிலேயே துரதிருஷ்டம் மிக்கவன்எந்த சமூக கூட்டங்களிலும் எனது பாவங்களைகுறிப்பிடக்கூடாதுஎனது வாழ்க்கையின் கதையை யாரிடமும் சொல்லக் கூடாது.

கி.பி. 1658-லிருந்து 1707-வரை இந்தியாவை ஏறத்தாழ அரை நூற்றாண்டு ஆண்ட ஆறாவதுமுகலாய மகா சக்கரவர்த்தியின் மரண விருப்பங்கள் இவைஅவருடைய விருப்பப்படியேசாதாரண செங்கற்களால் கட்டப்பட்ட அவரது கல்லறையை இன்றும் ஔரங்காபாத்-தில்காணலாம்.
மேற்கண்ட உயிலின் வாசகங்கள்நவம்பர் மாதம் 7-ம் தேதி, 1976-ம் ஆண்டு தேதியிடப்பட்டபதஹ்என்ற வார இதழில்எஸ்அஜ்மீர் சிங் என்பவரால் பிரசுரிக்கப்பட்ட ஒரு வரலாற்றுக்கட்டுரையிலிருந்து மொழிபெயர்த்துப் போடப்பட்டது.

தன் முகத்தை மண்ணுக்குள் புதைக்க வேண்டாம் என்றும் திறந்த முகத்தோடு இறைவனைசந்திப்பவர்களின் பாவங்கள் மன்னிக்கப் படுவதாகவும் ஒளரங்கஜேப் கூறியிருப்பதுஅவருடைய சொந்தக் கருத்தேமனிதர்களை புதைக்கும் போது உடல் முழுவதுமமண்ணுக்குள் சென்று விட வேண்டும் என்று தான் முகமது நபியின் வாக்கு உள்ளது.ஒளரங்கஜேப்புக்கு தவறான தகவலை இது விஷயத்தில் யாரும் தந்திருக்கலாம்இறைவனேமிக அறிந்தவன்.

தமிழகம் வரை தமது ஆட்சியை ஒளரங்கஜேப்்விரிவு படுத்தியிருந்தார்இவ்வளவுஎளிமையாகவும் குர்ஆனின் போதனைப் படியும் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் இந்து மக்களை கொடுமைப் படுத்தியிருப்பாராஅப்படியே கொடுமைபடுத்தியிருந்தாலும் அவை வரலாறுகளில் பதியப் பட்டிருக்குமேமேலோட்டமாகசொல்லாமல் ஆதாரத்தோடு அதை வரலாற்றாசிரியர்கள் விளக்கி இருக்க வேண்டுமே!மேலும் மொகலாயர்களின் ஆட்சிக்கு முன் இந்தியாவை ஆண்டவர்களின் ஆட்சியை விடமுஸ்லிம்களின் ஆட்சி நிம்மதியாக இருந்ததால்தான் 800 வருடம் இந்தியாவைஅவர்களால்ஆள முடிந்தது.

ஒளரங்கஜேப் ஒரு விளக்கம்!

 
ஒளரங்க என்ற சொல்லிற்கு 'அரசு சிம்மாசனம்என்று பொருள் வரும். 'ஜேப்என்றசொல்லுக்கு அழகு என்றும் பொருள்இவ்விரு பார்சிய சொல்லுக்கும் 'அழகிய அரசுசிம்மாசனம்எனறு பொருள் வரும்ஆனால் 'ஒளரங்கஜேப்என்று அழைப்பதற்கு பதிலாக'ஒளரங்கசீப்என்றே பலரும் கூறி வருகின்றனர் நமது நாட்டு பாடநூல்களிலும் ஒளரங்கசீப்என்றே இவர் பெயரை குறிப்பிடுகிறார்கள்ஒளரங்கஜேப்பின் பெயரையே மாற்றிஅமைத்தவர்கள் அவரது வரலாற்றில் எந்த அளவு பொய்களை கலந்திருக்கிறார்கள் என்பதைஆதாரத்தோடு திரு செதிவான் எழுதிய Aurangazeb In The Light Of History எனும் நூலைபார்வையிடலாம்.

-தந்தையை சிறையில் தள்ளியவர்
-சகோதரர்களை கொன்று விட்டு சக்ரவர்த்தியானவர்
-இந்துக்களை வேலை நீக்கம் செய்தவர்
-சிவாஜியை அழிக்க முயன்றவர்
-இராஜபுத்திரர்களின் விரோதி
-சீக்கியர்களின் விரோதி
-மத வெறியர்

போன்ற பல குற்றச்சாட்டுகளும் கடைந்தெடுத்த பொய் என்பதை வரலாற்று நூல்களைஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்டள்ளது.

History Of Aurangzeb, Page 249.




rahmanfayed:: நான் அறிந்த தகவல் 

ஒரு முறை ஔராங்கஜேப் மாறுவேடத்தில் நகர் வலம் தனியாக வரும் பொழுது, அன்று மழை காலம், ஒரு குடிமகன் தன் விட்டை கூரையை பழுது பார்க்க ஆள் தேடி கொண்டு இருக்க, மழை காரணமாக யாரும் வர வில்லை. அந்த நேரத்தில், ஔராங்கஜேப் மாறுவேடத்தில் வர, அவரை அனுகி வேலைக்கு வர அழைத்தான், அந்த இரவுநேரத்தில் அந்த குடிமகன்விட்டை சரி செய்யை உதவினர். அதற்காக அந்த குடிமகன் கொடுத்த சிறு தொகையை வாங்கிகொண்டார்....
அதன் பின் ஒரு முறை மார்க்க கல்வி கற்று கொடுத்த ஏழை ஆசிரியர், ஔராங்கஜேப் பார்க்க வந்தார், அவர்கள் திரும்பிசெல்லும் பொழுது அந்த ஏழை குடிமகன் கொடுத்த சிறு தொகையை கொடுத்தர். சில வருடங்களிக்கு பின் ஜகாத் கொடுப்பவர்கள் பட்டியலை பார்க்கும் பொழுது தனக்கு கல்வி கற்றி கொடுத்த ஏழை அறிஞர், அந்த பட்டியலில் இருப்பதை பார்த்து வியந்து அதன் பின் அவரிடம் கேட்க்கும் பொழுது நீ கொடுத்த அந்த சிறு தொகை முலம் கிடைத்த பாரக்கத்தால், என் செல்வம் பொருகியது. எப்படி உனக்கு அந்த தொகை கிடைத்தது என்று கேட்க ஔராங்கஜேப் முன் நடந்த சம்பவத்தை கூறினர். 


thanks to
swanapriyan anna, i take more detial on this person blogs,
do u need visit this person website.
click this link.

ur brother
rahmanfayed./.. 

மேலும் ஓளரங்கஜேப் பற்றி சில கட்டுரைகளின் லிங்க கீழே..

ஒளரங்கசீப்... மறைக்கபடும் வரலாற்று உண்மைகள்... http://rahmanfayed.blogspot.in/2013/06/blog-post.html

ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப் பற்றி சில தகவல் - I.http://www.rahmanfayed.blogspot.in/2012/07/blog-post.html

 ஜிஸ்யா வரியும் மன்னர் ஔரங்கஜேப்பும்..

முகலாயர்கள் நல்லவரா? கெட்டவரா?  http://www.rahmanfayed.blogspot.in/2012/09/blog-post_21.html


முகலாயர்கள் நல்லவரா? கெட்டவரா?- IIhttp://www.rahmanfayed.blogspot.in/2012/09/ii_24.html

No comments:

Post a Comment

welcome ur comment,