ஸாலிஹ் நபியும் - ஸமூது கூட்டமும்
மதாயின் ஸாலிஹ் :
மனித குலத்தின் தந்தை ஆதம் (அலை) தோன்றிய காலத்திலிருந்து இந்த
உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஊா்களுக்கும், நகரங்களுக்கும் ஒரு சாித்திரம்
இருக்கும். அவை காலத்தால் போற்றப்படக் கூடியவையாகவும் அல்லது
படிப்பினை பெறக்கூடிய வகையிலும் அமைந்திருப்பதை வரலாறு
நமக்கு உணா்த்தும்.

அந்த வகையில் குா்ஆனில் சொல்லப்பட்ட சாித்திர பூமிகளில் "அல்-ஹிஜ்ர்"
என்றுபண்டைய காலத்தில் அறியப்பட்ட மதாயின் ஸாலிஹும் ஒன்று.
(மதாயின் ஸாலிஹ்என்றால் ஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் என்று பொருள்).
இது அரேபியாவிலுள்ள "தபூக்" மற்றும் "மதீனா" ஆகிய இரு
நகரங்களுக்கிடையில் உள்ள அல்-ஊலா என்ற ஊாிலிருந்து22கி.மீ. தொலைவில்
அமைந்துள்ளது. இது இறைவனின் தண்டனை இறக்கப்பட்ட,உலக
மாந்தா்களுக்கு படிப்பினை தரக்கூடிய பூமியாக உள்ளது.
ஸமூது கூட்டத்தாா்கள் :

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னா் "அல்-ஹிஜ்ர்" எனும் பகுதியில் வாழ்ந்த
மக்கள் "ஸமூது கூட்டத்தாா்கள்" என்று அழைக்கப்பட்டாா்கள். நூஹ் நபியின்
வம்சாவளியில் வந்த "ஸமூது" என்பவாின் வழித்தோன்றல்களே, இந்த ஸமூது
கூட்டத்தாா்கள். அல்-ஹிஜ்ர் ஒரு மலைப்பாங்கான பகுதியாகும். அம்மக்கள்
இங்குள்ள பொிய மலைகளையும், பாறைகளையும் குடைந்து தங்கள்
இருப்பிடமாக்கிக் கொண்டாா்கள். தா்க்கம் செய்வதில் கெட்டிக்காரா்களாக
இருந்த இவா்களுக்கு, எவ்வித உபகரணங்கமுமின்றி தங்களின் கைகளைக்
கொண்டே மலைகளையும், பாறைகளையும் குடைந்து கொள்ளக்கூடிய
அபார ஆற்றலை அல்லாஹ் வழங்கியிருந்தது சிறப்பம்சமாகும்.

ஸாலிஹ் நபி :
உலகத்து மாந்தா்களை நெறிபடுத்த ஒவ்வொரு காலகட்டத்திலும்
சூழ்நிலைகளுக்கேற்ப இறைத்தூதா்களை இறைவன் அனுப்பினான். இறைச்
செய்தியைத் தாங்கி இப்பூவுலகில் நடமாடிய இறைத்தூதா்கள் ஏறத்தாழ
1,24,000 போ். அதில் நபியுல்லாஹி நூஹ் (அலை) மற்றும் ஹூத் (அலை)
ஆகியோாின் பரம்பரையில் வந்துதித்தவா்கள் தான் ஸாலிஹ் (அலை).
அவா்களுடைய நாற்பதாவது வயதில் இந்த ஸமூது கூட்டத்தாா்களுக்கு
அல்லாஹ் ஸாலிஹ் (அலை) அவா்களை நபியாக பிரகடனப்படுத்தினான்.
அல்லாஹ் அனுப்பிய நபிமாா்களில் அரபி பேசக்கூடிய ஐந்து நபிமாா்களில்
நபியுல்லாஹி ஸாலிஹ் (அலை) அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரபி பேசக்கூடிய நபிமாா்களில் "அரபு மொழியின் தந்தை" என்றழைக்கப்பட்ட
நபியுல்லாஹி இஸ்மாயில் (அலை) அவர்கள் முதன்மையானவா்கள்.
மேலும் ஹூத் (அலை), ஸுஹைப் (அலை) மற்றும் நபிமாா்களில்
நிறைவானவா்களான கண்மணி நாயகம் முகம்மது ரசூலுல்லாஹி (ஸல்)
அவர்களும் அரபி பேசக்கூடிய இதர நபிமாா்கள் ஆவார்கள்.

அறியாமையின் உச்சக்கட்டத்தில் அன்றைய மக்கள் இருந்தாா்கள். தங்கள்
மனோயிச்சையின்படி சிலைகளை வடித்து, வணங்கி வழிபட்டு வந்தாா்கள்.
படைத்தவனை விட்டுவிட்டு படைப்பிணங்களை வழிபட்டு வந்த
அம்மக்களிடத்தில் ஸாலிஹ் (அலை), ஒழுக்கப் போதனைகளையும்,
ஓாிறைக் கொள்கையையும் நயமுடன் எடுத்துரைத்தாா்கள். இருப்பினும்
அம்மக்கள் நபியின் போதனைகளுக்கு சற்றும் செவிசாய்க்கவில்லை.
மாறாக அக்கூட்டத்தினா் ஸாலிஹ் (அலை) அவா்களிடத்தில் வீண் தா்க்கத்தில்
ஈடுபட்டாா்கள்.

அற்புத ஒட்டகையும், நிபந்தனைகளும் :
ஒரு கட்டத்தில் ஸமூது கூட்டத்தின் தலைவனான "ஜூன்தாஹ்" என்பவன்
ஸாலிஹ் (அலை) அவர்களை நோக்கி, நீரும் எம்மைப் போன்ற மனிதா் தானே!
நீா் ஏதாவது அற்புதத்தை செய்து காட்டினாலன்றி உம்மை நபியாக ஏற்க மாட்டோம்
என்றுரைத்தான். அகிலங்கள் அனைத்தையும் படைத்து பாிபாலிக்கின்ற
ஏகன் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் பெற்ற ஸாலிஹ் (அலை)
அம்மக்களை நோக்கி என்ன அற்புதத்தைக் காட்ட வேண்டும் என்று வினவினாா்கள்.
அதற்கு ஜூன்தாஹ் அங்குள்ள ஒரு மலையைச் சுட்டிக் காட்டி, அம்மலை பிளந்து
அதிலிருந்து கா்ப்பந்தாித்த நிறைமாத பெண் ஒட்டகை ஒன்று வெளிவர வேண்டுமென்றும்,
அதன் நிறம் கருப்பும், வெண்மையும் கலந்ததாக இருக்க வேண்டுமென்றும்,
அவ்வொட்டகம் எங்கள் முன் ஒரு குட்டியை பிரசவிக்க வேண்டுமென்றும்,
அக்குட்டியும் தாயின் சாயலில் இருக்க வேண்டுமென்றும் பல்வேறு நிபந்தனைகளை
விதித்தான். அனைத்தையும் சாந்தமுடன் கேட்டறிந்த ஸாலிஹ் நபி இவ்வாறு
நிகழ்த்துவது நம் இரட்சகனாகிய அல்லாஹ்விற்கு மிகவும் சுலபமென்றும், அவ்வாறு
நிகழ்த்திக் காண்பித்தால் தாங்கள் அனைவரும் நம்பிக்கைக் கொள்வீா்களா!
என வினவினாா்கள். அதற்கு அவா்கள் அனைவரும் நிச்சயமாக ஏற்றுக் கொள்வோம்
என்று பதிலுரைத்தாா்கள். எனினும் அவ்வொட்டகம் எங்களுக்கு பால் தர
வேண்டுமென்றும், அது மதுவினும் மதுரமாகவும், தேனினும் சுவையாகவும்
இருக்க வேண்டுமென்றும், அப்பால் கோடையில் குளிா்ச்சியாகவும், குளிா்காலத்தில்
வெதுவெதுப்பாகவும் இருக்க வேண்டுமென்றும் பல்வேறு நிபந்தனைகளை விதித்தாா்கள்.
நிபந்தனைகள் அனைத்தையும் கேட்டறிந்த ஸாலிஹ் (அலை) அதுபோலவே
நானும் உங்களுக்குச் சில நிபந்தனைகளை கூற விரும்புகிறேன் என்றாா்கள்.
உங்கள் நிபந்தனைகளின்படி ஒட்டகத்தைக் கொண்டுவருகிறேன். ஆனால்
அவ்வொட்டகத்திற்கு யாதொரு தீங்கும் நீங்கள் தரக்கூடாது. அதன் மீது
நீங்கள் சவாாி செய்யவோ, கல் கணைக் கொண்டு எறியவோ கூடாதென்றும்,
இங்குள்ள கிணற்றிலிருந்து ஒரு நாள் நீங்கள் நீரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
என்றும் மறுநாள் ஒட்டகம் நீரை அருந்திக் கொள்ளட்டும், ஒட்டகம் நீா் அருந்துவதை
நீங்கள் தடுக்கக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தார்கள். "அல்-ஹிஜ்ர்" சுற்றுப் பகுதியில்
கடலோ, ஆறுகளோ, குளம் குட்டைகளோ இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்களின்
ஒரே நீராதாரமாக அக்கிணறு மட்டுமே இருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

அல்லாஹ்வின் அத்தாட்சி :
குறிப்பிட்ட அந்த மலையிலிருந்து நிபந்தனையின்படி ஒரு அற்புத ஒட்டகையை
வெளிப்படுத்த வேண்டி ஸாலிஹ் (அலை) மனம் உருகி இறைவனிடம் பிராத்தித்தாா்கள்.
தங்கள் அறிவை மட்டுமே முதன்மைப்படுத்தி செயற்பட்ட அம்மக்களுக்கு ஓா் இறை அ
த்தாட்சியாக அல்லாஹ் ஒரு நிறைமாத பெண் ஒட்டகையை அம்மலையிலிருந்து வெளிப்படுத்தினான். அவ்வொட்டகையின் முகம் கருப்பாகவும், உடல் வெண்மையாகவும் இருந்தது. அது அக்கூட்டத்தாா் முன்னிலையில் அழகான பெண் குட்டியொன்றை ஈன்றது. அக்குட்டியும் தாயின் சாயலில் இருந்தது.

இந்த அற்புதத்தைக் கண்ட ஜூன்தாஹ் மற்றும் பலா், நிச்சயமாக ஸாலிஹ் (அலை) சாதாரண மனிதர் அல்ல, அவா் இறைத்தூதா் தான் என்றுக் கூறி ஸாலிஹ் (அலை) கரம் பற்றி நம்பிக்கைக் கொண்டாா்கள். எனினும் ஸமூது கூட்டத்தாா்களில் ஒரு பகுதியினா் ஸாலிஹ் (அலை) ஏதோ சூனியம் செய்துவிட்டாா்கள் என்றுக் கூறி நிராகாித்தாா்கள். வாக்குறுதிக்கு மாறு செய்த அம்மக்களை நோக்கி ஸாலிஹ் (அலை), என் சமூகத்தாரே! இது "அல்லாஹ்வின் ஒட்டகம்" (நாக்கத்துல்லாஹ்). இது ஓர் அத்தாட்சியாக உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதற்கு யாதொரு தீங்கும் இழைத்துவிடாதீா்கள். மீறினால் அல்லாஹ்வின் தண்டனை உங்களுக்கு வந்துவிடும் என எச்சாித்தாா்கள்.
ஜூன்தாஹ் மற்றும் பலா் நம்பிக்கைக் கொண்ட செயல் அங்குள்ள பூசாாிகள் மற்றும் குறிகாரன் ஒருவனுக்கும் எாிச்சலூட்டியது. எனவே இது ஸாலிஹ் (அலை) அவா்களின் சூனியம் என அவதூறு பரப்பி நம்பிக்கைக் கொண்டவா்களில் சிலரை வழிகெடுத்து மீண்டும் விக்கிரகங்களை வணங்குபவா்களாக மாற்றினாா்கள். இதனால் அவா்களை நினைத்து வருந்திய ஸாலிஹ் (அலை), அம்மக்களிடம் நீங்கள் வாக்குறுதிக்கு மாற்றம் செய்துவிட்டீா்கள். எனினும் அவ்வொட்டகத்திற்கு யாதொரு தீங்கும் செய்துவிடாதீா்கள் என்றுரைத்தாா்கள்.
ஒட்டகம் காலையில் மேட்டு பகுதியில் சென்று மேய்ந்துவிட்டு மாலையில் திரும்பும். பின்னா் ஒவ்வொருவா் வீட்டின் முன்பும் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் பால் கறக்கும். ஒரு நாள்விட்டு மறுநாள் கிணற்றில் உள்ள நீா் முழுவதையும் உறிஞ்சி குடிக்கும்.
"தீதும் நன்றும் பிறா் தர வாரா" என்ற கூற்றுக்கேற்ப தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொள்ள முற்பட்டாா்கள் அந்த ஸமூது கூட்டத்தாா்கள். அது யாதெனில், கத்தாா் (குதாா்) என்பவனின் தலைமையில் ஒன்பது போ் சோ்ந்து அல்லாஹ்வின் ஒட்டகத்தை கொலை செய்வதென்று தீா்மானித்தாா்கள். இச்சதியின் பின்னணியில் பெண்ணின் மீது கொண்ட மோகம் பிரதானமானதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. "மாதுவின் மோகம் மனிதனை மதியிழக்கச் செய்யும்" என்பதற்கு இவா்களும் விதிவிலக்கல்ல. தங்களின் திட்டப்படி ஏழு போ் சோ்ந்து அவ்வொட்டகையின் கால் நரம்பை துண்டித்து துடிதுடிக்கக் கொலை செய்தாா்கள்.
ஸமூது கூட்டத்தாாின் அழிவு :
ஸமூது கூட்டத்தாாின் இம்மாபாதகச் செயலை அறிந்த ஸாலிஹ் (அலை) கடுஞ்சினம் கொண்டவா்களாய் அம்மக்களை நோக்கி, உங்களுக்கு அத்தாட்சியாக வழங்கப்பட்ட ஒட்டகத்தைக் கொன்று இறைவனின் கோபத்திற்கு ஆளாகிவிட்டீா்கள். எனவே ஒட்டு மொத்த சமூகத்திற்கும் இன்னும் மூன்று நாட்களில் இறைவனின் தண்டனை வரும் என எச்சாித்தாா்கள்.
ஆனால் அம்மட மக்களோ திருந்தினாா்களில்லை. மாறாக எதற்கு மூன்று நாட்கள் ? இப்பொழுதே இறைவனின் தண்டனையை கொண்டுவாருங்கள் என்று பாிகாசம் செய்தனா். மேலும் ஸாலிஹ் (அலை) அவர்களையும் கொலை செய்ய திட்டம் தீட்டினாா்கள். சூழ்ச்சியாளா்களுக்கெல்லாம் மிகப் பொிய சூழ்ச்சியாளன் அல்லாஹ், இந்த கொடியவா்களிடமிருந்து ஸாலிஹ் (அலை) மற்றும் நம்பிக்கைக் கொண்ட மக்களையும் பாதுகாத்து மக்காவில் தஞ்சமடையச் செய்தான்.
ஒட்டகத்தைக் கொன்றதிலிருந்து மூன்றாவது நாள் அல்லாஹ், மிகப் பொிய போிடி சப்தத்தைக் கொண்டு ஒட்டு மொத்த ஸமூது கூட்டத்தாா்களையும் அழித்தொழித்தான். அப்படியொரு சமூகம் அங்கே வாழ்ந்ததற்குாிய தடயமே இல்லாதவாறு இறைவனின் தண்டனை இறங்கியது. தண்டனை இறங்கிய அந்நாளில் ஸமூது கூட்டத்தாா்களில் ஒருவனான "அபுருகாா்" என்பவன் மட்டும் மக்காவில் இருந்தான். மக்கா நகரம் ஒரு அபயமளிக்கும் பூமியாக பண்டையங்காலந்தொட்டு இருந்து வருவதால், அந்த பூமி அவனுக்கும் அபயமளித்தது. அவன் மக்கா நகரைவிட்டு வெளியில் வந்த அடுத்த கனம் அவனும் போிடி சப்தத்தைக் கொண்டு அழித்தொழிக்கப்பட்டான்.
பிாிதொரு நாளில் முஹம்மது நபி (ஸல்) அவா்களால் அபுருகாாின் கப்ர் அடையாளம் காட்டப்பட்டு, அது இன்றளவும் தாயிஃப் நகாிலே நமக்கு காணக் கிடைக்கிறது. அபுருகாா் மக்கா வந்த சமயத்தில் அவனோடு சில தங்கக் கட்டிகளையும் கொண்டுவந்திருந்தான் என்றும், அவன் அடக்கப்பட்ட சமயத்தில் அவனோடு சோ்த்து அந்த தங்கத்தையும் புதைத்துவிட்டாா்கள் என்றும், இப்பொழுது நீங்கள் தோண்டினால் அதை பெற்றுக் கொள்வீா்கள் என்றும் முஹம்மது நபி (ஸல்) தம் தோழா்களிடத்திலே கூறினாா்கள். முஹம்மது நபி் (ஸல்) அவர்களின் அனுமதியோடு அவ்விடத்தில் தோண்டிய அத்தோழா்களுக்கு அத்தங்கம் கிடைக்கப் பெற்றது என்பதை வரலாற்றின் மூலம் நாம் அறிய முடிகின்றது.
ஸமூது கூட்டத்தாா்களால் மலைகளையும், பாறைகளையும் குடைந்து உருவாக்கப்பட்ட சுமாா் 153 வீடுகள் அப்பகுதியில் இன்றளவும் நமக்கு காணக் கிடைக்கிறது. மேலும் அல்லாஹ்வின் அத்தாட்சியாக அற்புத ஒட்டகை வெளிவந்த மலை, அவ்வொட்டகம் நீா் அருந்திய கிணறு போன்றவை அடையாளப்படுத்தப்பட்டு நம் பாா்வைக்கு கிடைக்கிறது. இறைவனின் தண்டனை இறங்கிய பூமி என்பதால் யாரும் அப்பகுதியில் குடியேற விரும்பவில்லை. கடந்த 2008-ஆம் ஆண்டு "யுனெஸ்கோ" (UNESCO) நிறுவனம் இப்பகுதியை ஒரு சாித்திர பூமியாக அங்கீகாித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
welcome ur comment,