Friday, June 14, 2019

விளங்காத பிரிரெயிஸ் வரைபட ரகசியம்.

விளங்காத பிரிரெயிஸ் வரைபட ரகசியம்.

  1929 ல் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குழு அற்புதமான வரைபடம்
ஒன்றை கண்டுபிடித்தார்கள். இது மான் தோலில் வரையப்பட்டது (1513). இது பிரிரெய்ஸ் என்பவரால் பிரதி எடுக்கப்பட்ட வரைபடம். இவர் 16 ஆம்
நூற்றாண்டின் துவக்கத்தில் துருக்கி கடற்படையில் சக்திவாய்ந்த
அட்மிரல் பதவியில் இருந்தவர். வரைபட இயலில் பேரார்வம் உடையவர்
காண்ஸ்டான்டிநோபிலில் உள்ள இம்பீரியல் நூலகத்தில் சுதந்திரமான
அனுமதி இவருக்கு தரப்பட்டிருந்தது.


கிபி 4 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முந்திய காலகட்டத்தை சார்ந்ததாக கருதப்படும் வரைபடங்களில் இருந்து அச்சு அசல் நகல்களை படி எடுத்தார். பிரிரெய்ஸ் வரைபடத்தில் ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரைப்பகுதி,
தென்அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப்பகுதி, மற்றும் அண்டார்டிகாவின் வட கடற்கரைப்பகுதி தெளிவாக அடையாளம் காண முடிந்தது.
முக்கியமாக வடஅண்டார்டிகா கடற்கரைப்பகுதி தெளிவாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தெளிவாக இருந்தது. இந்த இடத்தில்
தான் பிரச்சினைக்குறிய பல குழப்ப முடிவுகள் ஆராய்ச்சி முடிவுகளுக்கு உட்பட்டது.


பிரிரெய்ஸ் “கிதாபி பாஃக்ரியே” [Kitabi Bahriye] எனும் பயணப்புத்தகம்
எழுதியிருக்கிறார் இதில் கடற்கரை அமைவுகள், குடாக்கள், துறைமுகங்கள், நீரோட்டங்கள், கணவாய்கள் குறித்த தகவல்கள் காணப்படுகின்றன.
கிடைத்த புவியியல் ஆதாரங்களில் இருந்து குயின் மெளவுட்லேன்ட்
[ Queen Maud Land ] எனும் பகுதியில் மூடியிருந்த பனி கட்டிகள் உருக தொடங்கியது கி.மு 4000 வருடங்களுக்கு முன். ஆதாரப்பூர்வமான
செய்தி என்னவென்றால் அண்டார்டிகா மற்றும் இந்த பனி முனையானது பல மில்லியன் ஆண்டுகள் பனியால் உறைந்து போயிருந்தது அதாவது முழுக்க
முழுக்க பனிகட்டி பாளங்களால் மூடியிருந்தது கொலம்பஸ் 1492 ல்
அமெரிக்காவை கண்டுபிடித்தார் எனும் போது அதற்கு முன்பே துல்லியமாக
தென் அமெரிக்க கரைகள் வரையப்பட்டுள்ளது ஆச்சர்யமானது.


1820 வரை அண்டார்டிகா அறியப்படவில்லை ஆனால் பனிமூடிய இதன் கரைகள் துள்ளியமாக இவரால் வரையப்பட்டுள்ளது எப்படி? பிரிரெய்ஸ் வரைபடத்தில் வடக்கு கண்டப் பகுதி பனிமூடியதற்கு முன் வரையப்பட்டது அப்படியானால் இது மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டதா ?
இப்படி ஒரு முடிவுக்கு வரமுடியாது அப்போது மனித இனமே இருக்க வாய்ப்பில்லை. இன்னும் தீர்க்கமான ஆய்வுகளின் படி, பனி உருகிய இறுதி காலம் 6000 வருடங்களுக்கு முன். [ஆனால் பனி உருகிய காலம்
பற்றி இன்னும் தீர்க்கப்படாத சந்தேகம் உள்ளது. பல ஆராய்சியாளர்களின்
கருத்துப்படி பனி உருகிய காலம் 13000 இருந்து 9000 B C. ]


அண்டார்டிக்கின் குயின் மெளவுட் நிலப்பகுதி [ Queen Maud Land ] வரைபடம் 6000 வருடங்களுக்கு முன்னால் வரைந்தது யார் ? அல்லது இனந்தெரியாத எந்த நாகரீகம் இதை வரைந்திருக்கலாம் எப்படிபட்ட வரைதல் தொழிற் நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ? இதுபோன்ற வியப்பான விடை தெரியா கேள்விகள் அல்லது ரகசியங்கள் தொக்கி நிற்கிறது. கி.மு 3000 ல் மத்திய கிழக்கில் முதல் கடல் வணிகத்தில் எந்த எந்த நாகரீகம் சம்பந்தப்பட்டிருக்கலாம் ? சிந்து சமவெளி நாகரீகத்தால் அல்லது சீன நாகரீகத்தால் அல்லது இன்னும் வேறேதேனும் நாகரீகமா ? தெரியவில்லை.
நவீன தொலிற் நுட்பத்தில் வரையப்பட்ட வரைபடங்களை போல் எப்படி கி.மு 4000 ஆவது ஆண்டில் தத்ரூபமாக வரையமுடிந்தது ? என்பது அறிய முடியாத ரகசியமாக இருக்கிறது.

Friday, June 7, 2019

விண்டோஸ் ஓ.எஸ். வளர்ந்த வரலாறு

விண்டோஸ் ஓ.எஸ். வளர்ந்த வரலாறு

1. விண்டோஸ் 1 - 1985, நவம்பர் 20. இன்டர்பேஸ் மேனேஜர் என முதலில், 1983லேயே பில்கேட்ஸ் அறிமுகப்படுத்திய இந்த சிஸ்டம், 1985ல் பயன்பாட்டிற்கு விண்டோஸ் என்ற பெயரில் அறிமுகமானது. அப்போதைய இதன் விலை 99 டாலர்.


2. விண்டோஸ் 2 — டிசம்பர் 9, 1987. இந்த சிஸ்டத்தில் தான் முதன் முதலாக கண்ட்ரோல் பேனல் அறிமுகமானது. ஹார்ட் டிஸ்க் இல்லாத கம்ப்யூட்டரிலும், இரண்டு பிளாப்பி ட்ரைவ்கள் வழியாக இது இயங்கியது. 


3. விண்டோஸ் 3 — மே 22, 1990. பயனாளர்களின் தேவைகளுக்கேற்ப இன்டர்பேஸ் அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சிஸ்டம் உருவானது. கண்ட்ரோல் பேனல் மேம்படுத்தப்பட்டு, முதல் முதலாக சாலிடெர் கேம் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டது.


4. விண்டோஸ் என்.டி. 3.1 — ஜூலை 27,1993. இதனுடைய குறியீடுகள் அமைப்பு இன்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவமைப்பில் இடம் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எம். நிறுவனத்துடன் கொண்டிருந்த ஒப்பந்தத்தினை முறித்துக் கொண்ட பின்னர், மைக்ரோசாப்ட் உருவாக்கிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் இது.


5. விண்டோஸ் 95 — ஆகஸ்ட் 24, 1995. நுகர்வோரை மனதில் வைத்து, எளிமையான ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இது வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. ஸ்டார்ட் பட்டன் கொண்ட முதல் ஓ.எஸ். இதுதான். இதற்காகவே Start Me Up - என்ற பாடல் வழங்கப்பட்டது. டாஸ்க் பார், சிஸ்டம் ட்ரே, நோட்டிபிகேஷன் ஏரியா, விண்டோ மேக்சிமைஸ் / மினிமைஸ் ஆகிய வசதிகள் இந்த சிஸ்டத்தில் முதல் முதலாகத் தரப்பட்டன.


6. விண்டோஸ் என்.டி. 4 — ஆகஸ்ட் 24, 1996. ஒர்க் ஸ்டேஷன் மற்றும் சர்வர்களில் இயங்கும் சிஸ்டமாக இது கிடைத்தது. 


7. விண்டோஸ் 98 — ஜூன் 25, 1998. விண்டோஸ் 95 சிஸ்டத்தைக் காட்டிலும், நுகர்வோருக்கான மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்ட சிஸ்டமாக இது வடிவமைக்கப்பட்டு கிடைத்தது. விண்டோஸ் 95 உடன் கிடைத்த யு.எஸ்.பி. சப்போர்ட், இதில் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு தரப்பட்டது. ஸ்கேனர், மவுஸ், கீ போர்ட் மற்றும் ஜாய் ஸ்டிக் ஆகியவற்றை யு.எஸ்.பி. போர்ட் மூலம் பயன்படுத்த முடிந்தது. ஆனால், மோடம் சாதன இயக்கம் தரப்படவில்லை.


8. விண்டோஸ் 2000 புரபஷனல் — பிப்ரவரி 17, 2000. விண்டோஸ் என்.டி. 4 மற்றும் விண்டோஸ் 98 ஆகியவற்றின் இடத்தில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.


9. விண்டோஸ் மி — செப்டம்பர் 14, 2000. மிக மோசமான விண்டோஸ் இயக்கம் என அனைவராலும் கருதப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம்.


10.விண்டோஸ் எக்ஸ்பி — அக்டோபர் 25, 2001. மைக்ரோசாப்ட் வெளியிட்ட விண்டோஸ் இயக்க முறைமைகளில், மிகவும் சிறப்பானதாகவும், பயன்படுத்த எளிதானதாகவும் கருதப்பட்டு, இறுதிவரை அதிகமான மக்களால் பிரியத்துடன் பயன்படுத்தப்பட்ட ஓ.எஸ். இதுவாகும். இன்னும் பலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். ஏப்ரல் 8, 2014 வரை, இதற்கான மேம்பாட்டு பைல்களை மைக்ரோசாப்ட் தந்து வந்தது.


11.விண்டோஸ் சர்வர் 2003 — ஏப்ரல் 24, 2003. விண்டோஸ் எக்ஸ்பியின் சர்வர் பதிப்பு இயக்கமாக இது வடிவமைக்கப்பட்டு தரப்பட்டது.


12.விண்டோஸ் விஸ்டா — ஜனவரி 30, 2007. ஏற்கனவே தரப்பட்ட பல வசதிகள் இதில் மேம்படுத்தப்பட்டாலும், நுகர்வோர்களின் ஆதரவைப் பெறத் தவறிய ஓ.எஸ். இதுவாகும்.


13.விண்டோஸ் சர்வர் 2008 — பிப்ரவரி 27, 2008. சர்வர்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இதற்கு தனி இடம் கிடைத்தது. பல வசதிகள் இதில் மேம்படுத்தப்பட்டுத் தரப்பட்டன.


14.விண்டோஸ் 7 — அக்டோபர் 22, 2009. விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா பயன்படுத்தி வந்தவர்களுக்கு, இந்த சிஸ்டம் எதிர்பார்த்த பல வசதிகளைத் தந்தது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு கிடைத்தன.


15.விண்டோஸ் சர்வர் 2012 — செப்டம்பர் 4, 2012. நான்கு வேறுபட்ட வகைகளில் இது வடிவமைக்கப்பட்டு தரப்பட்டது. நெட்வொர்க்கிங் பணியில் மிகச் சிறப்பான மேம்பாடுகளைக் கொண்டது.


16.விண்டோஸ் 8 — அக்டோபர் 25, 2012. மூன்று வகை இயக்கத்துடன் இது வெளியானது. குறிப்பாக, தொடு உணர் திரையில் விண்டோஸ் இயக்கத்தினைக் கொண்டு வர வேண்டும் என்ற இலக்குடன் வடிவமைக்கப்பட்டது. பல பழைய வசதிகள், ஸ்டார்ட் மெனு உட்பட, இதில் தரப்படவில்லை என்பதால், அதிரடியான மாற்றத்திற்கு மக்கள் தயாராகத் தயங்கினர். இதனால், விண்டோஸ் 7 தொடர்ந்து மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. 


17. விண்டோஸ் 8.1 — அக்டோபர் 17, 2013. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் கைவிடப்பட்ட ஸ்டார்ட் பட்டன் இதில் மீண்டும் தரப்பட்டது. ஸ்கை ட்ரைவ் மற்றும் விண்டோஸ் ஸ்டோர் ஆகியவை மேம்படுத்தப்பட்டு, இதனுடன் இணைக்கப்பட்டு கிடைத்தன.


18. விண்டோஸ் 10 — ஜூலை 29, 2015. இதற்கு முன் இல்லாத வகையில், பல லட்சக்கணக்கான பயனாளர்களால், ஆர்வத்துடன் சோதனை செய்யப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம். இனி விண்டோஸ் ஒரு சேவையாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் இதில் அதிகமான வசதிகளை எதிர்பார்த்துள்ளனர். பல முற்றிலும் புதிய வசதிகள் இதில் அறிமுகமாகியுள்ளன.


குறிப்பாக இதனுடன் இணைந்து தரப்படும் எட்ஜ் பிரவுசரைக் கூறலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை ஓரங்கட்டும் சிஸ்டமாக இது வந்துள்ளது.