Showing posts with label எகிப்து. Show all posts
Showing posts with label எகிப்து. Show all posts

Saturday, September 12, 2020

'டூம்ப் ஆப் வாஹ்டி' கல்லறையில் நூற்றுக்கணக்கான மம்மிகள் எகிப்தில் கண்டுபிடிப்பு! எதிர்பாராத விதமாக அவிழும் மர்ம முடிச்சு!

'டூம்ப் ஆப் வாஹ்டி' கல்லறையில் நூற்றுக்கணக்கான மம்மிகள் எகிப்தில் கண்டுபிடிப்பு! எதிர்பாராத விதமாக அவிழும் மர்ம முடிச்சு!  

எகிப்து அதன் மிகப்பெரிய தொல்பொருள் கண்டுபிடிப்பை சமீபத்திய நினைவகத்தில் அறிவிக்கத் தயாராகி வருகிறது, 4,400 ஆண்டுகள் பழமையான மரத்தினால் ஆனா மற்றும் தங்கத்தினால் ஆனா பல சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பல விலங்குகளின் மம்மிகளும், பதப்படுத்தப்பட்ட பறவைகளின் மம்மிகளும் பாதுகாப்பாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் சில சுவாரசியமான கண்டுபிடிப்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  
மிகப் பெரிய தொல்பொருள் தேக்கம் கண்டுபிடிப்பு

மிகப் பெரிய தொல்பொருள் தேக்கம் கண்டுபிடிப்பு

எகிப்திய சுற்றுலா மற்றும் தொல்பொருள் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் உச்சக்கட்ட பழங்கால கவுன்சில் ஒன்று சக்காரா தொல்பொருள் பகுதியில் இதுவரை கண்டிடாத மிகப் பெரிய தொல்பொருள் தேக்கத்தைக் கண்டுபிடித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொல்பொருள் தேக்கத்தில் 50க்கும் மேற்பட்ட மனித மம்மிகள் மற்றும் எகிப்திய கடவுளின் விசித்திரமான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மம்மிகள் மற்றும் கடவுள் சிலைகள்

மம்மிகள் மற்றும் கடவுள் சிலைகள்

சக்காராவின் இந்த கண்டுபிடிப்பில் பல மனித மற்றும் விலங்குகளின் அடக்கங்கள், பல ஷப்தி(shabti) சிலைகள், ஐசிஸ்(Isis) கடவுள் சிலைகள், நெப்திஸ் மற்றும் ஹோரஸ்(Nephthys and Horus) கடவுள்களின் சிலைகள், முகமூடிகள் மற்றும் பிற்பகுதியில் பயன்படுத்தப்பட்ட சங்ககால கனோபிக் பாத்திரங்கள் ஆகியவை இந்த பகுதியில் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தால் ஆனா சவப்பெட்டிகள்

தங்கத்தால் ஆனா சவப்பெட்டிகள்

இதுவரை 50 சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் வலைத்தள தகவல் தெரிவிக்கிறது. முதற்கட்டமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த 50 சவப்பெட்டிகளில் சில சவப்பெட்டிகள் மட்டும் தங்கத்தால் செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட அகழ்வாராய்ச்சியின் போது இந்த எண்ணிக்கை அப்படியே இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மம்மிகளை அடையாளம் காணும் பணி

மம்மிகளை அடையாளம் காணும் பணி

சவப்பெட்டிகளில் எதுவுமே முக்கியமான வரலாற்று நபர்களைச் சேர்ந்தவை என்று கருதப்படவில்லை, சவப்பெட்டிகளில் யார் புதைக்கப்பட்டார்கள் என்பதை அடையாளம் காணும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த கண்டுபிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று எகிப்திய வட்டங்கள் தெரிவித்துள்ளது.
'டூம்ப் ஆப் வாஹ்டி' கல்லறை

'டூம்ப் ஆப் வாஹ்டி' கல்லறை

சமீபத்திய ஆண்டுகளில் பல தொல்பொருள் கண்டுபிடிப்புகளுக்கு சக்காராவின் தொல்பொருள் பகுதி ஒரு சாட்சியாக உள்ளது. இவற்றில் மிக முக்கியமானது டூம்ப் ஆப் வாஹ்டி (Tomb of Wahty) கல்லறை, இங்கு தான் எதிர்பார்த்திடாத ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகளின் மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கல்லறை பகுதியில் கிணறு

கல்லறை பகுதியில் கிணறு

ஏப்ரல் 2018 இல் தொடங்கிய விலங்கு கல்லறையின் ஆராய்ச்சி, 2020 ஏப்ரல் வரை தொடர்ந்தது என்று உள்ளூர் செய்தித்தாளான அல்-வட்டாவின் ஆதாரங்கள் தெரிவிக்கிறது. இந்த ஆண்டின் ஏப்ரல் 18, உலக பாரம்பரிய தினத்தன்று சுமார் 120 x 90 செ.மீ அளவைக் கொண்ட கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிணறு சுமார் 11 மீட்டர் ஆழம் கொண்டது என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.
4,400 ஆண்டுகள் பழமையான மம்மிகள்

4,400 ஆண்டுகள் பழமையான மம்மிகள்

அதேபோல், 2019 ஆம் ஆண்டின் இறுதியில், இப்பகுதியில் பணிபுரியும் எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பல விலங்குகள் மற்றும் புனித பறவைகளின் மம்மிகளின் தேக்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இவை அனைத்தும் சுமார் 4,400 ஆண்டுகள் பழமையான மம்மிகள் என்பது தெரியவந்துள்ளது.
வண்டு மம்மி முதல் முதலை மம்மி வரை

வண்டு மம்மி முதல் முதலை மம்மி வரை

இந்த பகுதியில் இதுவரை மனிதர்களை விட அதிகப்படியான எண்ணிக்கையில் விலங்குகள் மற்றும் பறவைகளின் மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிங்கம், புலி, பூனை, கழுகு, முதலை, சக்காரா வண்டு போன்ற பல உயிர்களின் பதப்படுத்தப்பட்ட மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முதலை மம்மியை எளிதில் அடையாளம் காணும் வகையில் அதன் உருவம் பொறிக்கப்பட்ட மரப்பலகையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறிய வகை சிங்கங்களா?

சிறிய வகை சிங்கங்களா?

இதில் ஐந்து மம்மிகள் பெரிய பூனை வகையைச் சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப ஆய்வுகளில் இவை சிறிய வகை சிங்கங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சர்வதேச செய்தி நிறுவனங்கள் இந்த கண்டுபிடிப்பை ஸ்பின்க்ஸ் விலங்குடன் ஒத்திருப்பதாகக் கூறியுள்ளது

Tuesday, September 24, 2019

மெடிட்டேரியன் கடல்கொள்ளப் பட்ட புராதன எகிப்திய நகரம்


மெடிட்டேரியன் கடல்கொள்ளப் பட்ட புராதன எகிப்திய நகரின் இடிபாடுகள் அகழ்வாறாய்ச்சியாளர்களால் கிளரப்பட்டன.  மண்மூடி போயிருந்த ஹெரசெலியன் (Heracleion) புராதன எகிப்திய துறைமுகப் பகுதியில் சிலைகளும், தங்க 
தகடுகளும் கண்டுபிடிக்கபபட்டன.

பிரெஞ்சு கடலடி ஆராய்சியாளரான டாக்டர். ப்ரெங் கோடியோ(Dr.Franck Goddio, European Institute) மற்றும் அவரது குழுவினர் 2000 ல்  நடத்திய ஆய்வில்  கடலின் அடி மட்டத்தின் கீழாக 30 அடியில் அபெளகிர் குடா (அலெக்ஸாண்டிரியா) பகுதியில் சிலைகள் புதைந்திருப்பது கண்டறியப் பட்டது.

அதை தொடர்ந்து கடந்த 13 ஆண்டுகளாக நடத்தப் பட்ட ஆய்வின் பின் கிடைத்த தகவல்கள், இந்த இடமானது (Thonis-Heracleion)  உலக அளவிய துறைமுகம் மட்டுமல்ல, மத சம்பந்தமான முக்கிய பகுதியாகவும் 
இது இருந்திருக்க வேண்டும் என்பது உறுதி படுத்தப் பட்டது.
                                                              tks to Huffworldpost
கண்டெடுக்கப் பட்ட பொருட்கள் : 
64 உடைந்த  கப்பல் களின் பகுதிகள், 700 நங்கூரங்கள், தங்க காசுகள், பிரம்மாண்ட கல்வெட்டுகள்(எகிப்திய மற்றும் கிரேக்க) இவை  உலக வணிக மையம் என்பதற்கான ஆதாரங்கள்.

இவை தவிர 16 அடி உயர சிலைகள் கோவில் இருந்திருக்கும் என கருதப் படும் பகுதியில் இருந்து, சுண்ணாம்பு படிமமாக மாறிப் போன பதப்படுத்தப் பட்ட (மம்மிகளை  போல) விலங்குகள் .
அலாவுதினுடைய அற்புத விளக்கோ ?



எழுத்துக்கள் பொறிப்பட்ட தங்க தகடு



இதேபோல தமிழக கரைப் பகுதிகளிலும் கடல் கொள்ளப்பட்ட சங்ககால நகரமும் சிலைகளும் ,பொற்காசுகளும், இந்திய கடல் ஆராய்சியாளர்களால் கைப் பற்றப் படும் என நம்புகிறேன் (ஹையோ..சே.. பகல் கனவு !)


Monday, January 14, 2019

எகிப்து நாகரிகம் – மம்மியின் சாபம்

எகிப்து நாகரிகம் – மம்மியின் சாபம்

எகிப்தின் நாகரிகம் பற்றிய அறிவுத் தேடல் எகிப்தியல் (Egyptology) என்று அழைக்கப்படுகிறது. இதைத் தொடங்கிவைத்தவர் ஹொவார்டு கார்ட்டர் (Howard Carter) என்கிற பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர். சிறு வயது முதலே, எகிப்துக்குப் போக வேண்டும் என்று அவருக்கு வெறித்தனமான ஆசை.

Egyptology
பதினேழாம் வயதில், தன் கனவு தேசத்துக்குப் புறப்பட்டார். பதினான்கு ஆண்டுகள் பழங்கால நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கும் அரசாங்க வேலையில் ஈடுபட்டார். பிரெஞ்சு நாட்டிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளோடு சின்னச் சண்டை ஏற்பட்டு வேலை பறிபோனது. அடுத்த நான்கு வருடங்கள் ஓவியம், பழங்கால சாமான்களை விற்பது என வயிற்றை நிறைத்து, மனத்தை நிறைக்காத பல வேலைகள் செய்தார்.

Howard-Carter
ஒரு கட்டத்தில் கார்ட்டருக்கு நல்ல காலம் பிறந்தது. கார்னர்வான் பிரபு (Lord Carnarvon) கார்ட்டரின் அகழ்வாராய்ச்சிக்கு முழுப் பண உதவி செய்ய முன் வந்தார். கார்ட்டர் தன் முயற்சியை 1909ல் தொடங்கினார். எகிப்து நாட்டின் பல பாகங்களில், பல ஆண்டுகள் அகழ்வாராய்ச்சி நடத்தினார். தோண்டிய இடங்களில் எல்லாம் ஒன்றுமே கிடைக்கவில்லை. தோல்வி, தோல்வி, தோல்வி. ஆனாலும், கார்ட்டர் அயராமல் தன் முயற்சிகளைத் தொடர்ந்தார்.

பன்னிரெண்டு ஆண்டுகள் ஓடின. கார்னர்வான் பிரபுவின் பொறுமை எல்லையை எட்டியது. ஒரு நாள் கார்ட்டரைக் கூப்பிட்டு கெடு கொடுத்தார். அடுத்த சில மாதங்களுக்கு மட்டுமே இந்த ஆராய்ச்சிக்குப் பணம் தருவதாக இருக்கிறேன். அதற்குள் ஆராயச்சிக்குப் பலன் கிடைக்கவேண்டும்.


கார்ட்டர் பயந்து நடுங்கினார். அவருக்குத் திருமணம் ஆகவில்லை. வீட்டின் தனிமை இந்த பயத்தை அதிகமாக்கியது. கார்ட்டர் ஒரு நாள் கடைக்குப் போனார். வழியில் ஒருவன் கானரி என்ற ஒரு வகைப் பறவையை விற்றுக் கொண்டிருந்தான். அந்தப் பறவை கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது. கானரிப் பறவைகள் நம் ஊர்க் குயில்கள் மாதிரி. இனிமையாகப் பாடும். ஆனால், குயில் மாதிரிக் கறுப்பு நிறமல்ல. மஞ்சள் நிறமாக அழகாக இருக்கும்.

கானரிப் பறவை
வேலையின் பயத்திலிருந்து விடுபட, தன் தனிமையில் துணை தர கானரியின் பாட்டு உதவும் எனக் கார்ட்டர் நினைத்தார். கூண்டோடு கானரியை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

அவருடைய வேலைக்காரன் எஜமானரின் கையில் இருந்த கானரியைப் பார்த்தான்.

அவன் சொன்னான், “கானரி அதிர்ஷ்டம் தரும் பறவை, தங்கப் பறவை. கடவுள் அருளால், நீங்கள் இந்த வருடம் தங்கம் கொட்டும் ஒரு கல்லறையைக் கண்டுபிடிப்பீர்கள்.”


அவன் வாக்கு பலிக்க வேண்டும் என்று கார்ட்டர் பிரார்த்தித்தார். வீட்டில் இருக்கும்போதெல்லாம் கார்ட்டர் கானரியைக் கொஞ்சிக் கொண்டிருப்பார், அதன் இனிமையான குரலைக் கேட்டு ரசித்துக் கொண்டிருப்பார். மற்ற வேளைகளில் அவருக்கு ஒரே கவலைதான். முப்பது வருடங்கள் கழிந்துவிட்டன. எப்படியாவது ஜெயிக்க வேண்டுமே!


தனக்குத் தெரிந்த கடவுள்கள், தேவதைகள், குட்டி தேவதைகள், எல்லோரிடமும் வேண்டினார். அவருடைய வேண்டுதல் பலித்தது. நவம்பர் 4, 1922. கி .மு. 1333 முதல் கி.மு. 1324 வரை ஆண்ட அரசர். துட்டன் காமுன் (Tutankhamun) என்ற மன்னனின் கல்லறையைக் கார்ட்டர் தோண்டினார். ஒரு படிக்கட்டு தெரிந்தது. கார்ட்டர் கீழே இறங்கினார்.


கார்ட்டர் சொல்கிறார், “படிக்கட்டில் இறங்கும்போது ஒரே இருட்டு. என் கையில் இருந்த மெழுகுவர்த்தி மட்டுமே வெளிச்சம், அதன் சுடர் காற்றில் ஆடியது. திடீரென, அறை முழுவதும் வெளிச்சம், அங்கே கொட்டிக் கிடந்த தங்க சாமான்களில் இருந்து வந்த வெளிச்சம்!”

Tutankhamun Tomb
வேலைக்காரனின் வார்த்தை பலித்துவிட்டது, அவருடைய கானரிப் பறவை வந்த நேரம், தங்கம் கொட்டும் கல்லறையைக் கார்ட்டர் கண்டுபிடித்துவிட்டார். மரத்தால் செய்யப்பட்ட கோவில். அதன்மேல் முழுக்கத் தங்கத் தகடுகள். கூரையில் பிரதானமாய் இரண்டு பாம்புச் சிற்பங்கள். துட்டன் காமுனின் தங்க சிம்மாசனம் பளபளத்தது. தன் கைப் பிடிகளில் இரண்டு நல்ல பாம்புகள் செதுக்கப்படிருந்தன. ஃபாரோ மன்னர்களைப் பாதுகாக்க அவர்கள் அருகே விஷப் பாம்புகள் இருக்கும் என்பது புராணக் கதை. அதன் அடிப்படையில் இருந்தன இந்தப் பாம்புகள்.


துட்டன் காமுனின் மம்மி (பதம் செய்யப்பட்ட உடல்) கிடைத்தது. தங்கத்தால் செய்யப்பட்ட முக, உடல் கவசங்கள் மம்மியைப் பாதுகாத்தன. தங்க நகைகள், அற்புதக் கலை நயம் கொண்ட சிலைகள், மன்னரின் லினன் ஆடைகள், முகம் பார்க்கும் கண்ணாடி, மதுக் கோப்பைகள், எழுதுகோல், என ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள்!


கார்ட்டருக்கு எக்கச்சக்க சந்தோஷம், பதின்மூன்று வருட உழைப்புக்குப் பலன் கிடைத்துவிட்டது. உலக அகழ்வு ஆராய்ச்சியில் கார்ட்டரின் இந்தக் கண்டுபிடிப்பை மிஞ்ச, இதற்கு முன்னும் பின்னும் யாருமே இல்லை.

எகிப்தில் கார்ட்டருக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஏனென்றால், எகிப்திய மத நம்பிக்கைகளின்படி, ஆராய்ச்சி என்ற பெயரில் மம்மிகளைத் தோண்டுதல், மிகப் பெரிய பாவ காரியம். அப்படிப் பாவம் செய்தவர்களைக் கடவுள் தண்டிப்பார் என்று அவர்கள் நம்பினார்கள். இந்தத் தண்டனைக்கு அவர்கள் வைத்த பெயர் மம்மியின் சாபம்.


பல ஆராய்ச்சியாளர்கள், மம்மியின் சாபம் தங்கள் மேல் விழுந்துவிடக் கூடாது என்று பயந்தார்கள். மம்மிகளைத் தொடுவது தவிரப் பிற ஆராய்ச்சிகள் செய்தார்கள். கார்ட்டருக்கு இந்த மூட நம்பிக்கை கிடையாது. தைரியமாக, துட்டன் காமுனின் மம்மியைப் பரிசோதித்தார்.

அன்று மாலை கார்ட்டர் வீடு திரும்பினார். வேலைக்காரர் அவசரமாக அவரிடம் ஓடிவந்தார். அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் கார்ட்டரின் அன்புக்குரிய கானரிப் பறவை சிதறிக் கிடந்தது.

“ஐயா, ஒரு நல்ல பாம்பு எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. திடீரென அதைக் கானரியின் கூண்டுப் பக்கத்தில் பார்த்தேன். கூண்டுக்குல் நுழைந்தது. கானரியை ரண களமாக்கிவிட்டுத் தோட்டப் பக்கமாகக் காணாமல் போய்விட்டது.”


பாம்பா? கல்லறையில், துட்டன் காமுனின் சிம்மாசனத்தில், பார்த்த பாம்பா? மம்மியின் சாபம் பொய்யல்ல, நிஜம் என்று எனக்கு எச்சரிக்கப் பாம்பு வந்ததா? இனிமேல் மம்மிகளைச் சீண்டாதே. சீண்டினால் உனக்கும் கானரி கதைதான் என்று சொல்ல வந்ததா?

கார்ட்டருக்குப் புரியவில்லை. இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்த சில மாதங்களில், ஆராய்ச்சிக்குப் பண உதவி செய்த கார்னர்வான் பிரபு மரணம் அடைந்தார். மம்மியின் சாபம் அவரைக் கொன்றது என்றார்கள் மத நம்பிக்கைவாதிகள்.

சீல் செய்யப்பட்ட  கல்லறை
இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு கார்ட்டர் ஆராய்சிகளில் இருந்து ஓய்வு எடுத்தார். இங்கிலாந்துக்குத் திரும்பினார். பழங்காலப் பொருட்களை சேமிக்கத் தொடங்கினார். பதினேழு ஆண்டுகள், தம் 65ம் வயதுவரை வாழ்ந்தார். மம்மியின் சாபம் உண்மையானது என்றால், கார்ட்டர் உடல் நலமாக வாழ்ந்தது எப்படி என்று கேட்கிறார்கள் பகுத்தறிவாளர்கள்.

மம்மியின் சாபம் உண்மையா, பொய்யா? மர்மங்கள் நிறைந்த எகிப்து நாகரிகத்தில் விடை காண முடியாத புதிர்!

கார்ட்டர் ஒய்வு பெற்றபோதும் அவருடைய கண்டுபிடிப்பு, நூற்றுக்கணக்கான அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு மாபெரும் உந்து சக்தியானது.


பிற நாகரிகங்களோடு ஒப்பிடும்போது எகிப்தியல் எளிதானது. பிற நாகரிகங்களில் எங்கே தோண்ட வேண்டும் என்று நிர்ணயிப்பதே மிகக் கடினமான வேலை. பொக்கிஷங்கள் நாட்டில் எங்கேயும் புதைந்து கிடக்கலாம். எகிப்தில் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் பிரமிட்கள் ஆராய்ச்சியாளர்களின் கலங்கரை விளக்கங்களாக இருந்தன. அப்புறம், பண்டைய தலைநகரங்கள் எல்லாமே நைல் நதிக்கரை ஓரமாக வரிசையாக இருந்தன. எனவே தேடுதல் கொஞ்சம் சுலபம்.

எகிப்தின் பண்டைய தலைநகரான தீப்ஸ் அருகே நடந்த அகழ்வுகள் நிஜப் புதையல்கள். அந்த ஏரியா முழுக்க, தோண்ட தோண்ட, அற்புதமான பழங்காலப் பொருட்கள் கிடைத்தன. அரச குடும்பத்தைச் சேர்ந்த அறுபத்தி இரண்டு பேரின் கல்லறைகள் இங்கே கண்டெடுக்கப்பட்டன. அதனால், இந்த இந்தச் சுற்றுப்புறத்துக்கே “சக்கரவர்த்திகளின் சமவெளி” என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெயர் வைத்து விட்டார்கள்.


கல்லறைகளுக்குள் இத்தனை நகைகள், வைடூர்யங்கள் எனச் செல்வங்களைப் புதைத்து விட்டு செக்யூரிட்டியா போட முடியும்? கி. மு. 1200 – ல் இருந்து கி. மு. 20 வரையிலான கால கட்டத்தில் பல கொள்ளைக்காரர்கள் இவற்றைச் சூறையாடி இருக்கிறார்கள். இவர்களின் கொள்ளைகளுக்குப் பிறகு மிஞ்சிய தடயங்களே எகிப்தின் நாகரிக அடையாளங்கள்.

இந்த அடையாளங்கள் காட்டும் நாகரிகம், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், இப்படி ஒரு சமுதாயம் வாழ்ந்திருக்க முடியுமா? வாழ்க்கை முறை, அரசாட்சி, நிர்வாகம், கட்டடக் கலை, கணிதம், மருத்துவம், விவசாயம் ஆகிய பல்வேறு துறைகளில் இத்தனை சாதனைகளா?


எகிப்திய மன்னன் துட்டன்காமன் கல்லறையில் மம்மியுடன் கண்டுப்பிடிக்கப்பட்ட கத்தி விண்கல்லில் செய்யப்பட்டது என்று ஆய்வாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர். இந்த கத்தியை பற்றிய விரிவான தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

ஆய்வாளர்களை திகைக்க வைத்த துட்டன்காமன் கத்தி: விண்கல்லால் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு.

ஆய்வாளர்களை திகைக்க வைத்த துட்டன்காமன் கத்தி: விண்கல்லால் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு.

  எகிப்திய மன்னன் துட்டன்காமன் கல்லறையில் மம்மியுடன் கண்டுப்பிடிக்கப்பட்ட கத்தி விண்கல்லில் செய்யப்பட்டது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பண்டைய எகிப்தின் பதினெட்டாவது வம்ச மன்னன் துட்டன்காமன். 9-வது வயதில் பட்டத்திற்கு வந்த இவன் கி.மு. 1333 முதல் கி.மு. 1324 வரை புதிய இராஜ்ஜியம் என்ற பெயரில் அமைந்த எகிப்தை ஆண்டான். பதவியேற்று சுமார் 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான்.

இந்நிலையில், 1922-ம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி ஹவார்ட் கார்ட்டர் என்னும் தொல்லியலாளர், பொக்கிஷங்கள் அடங்கிய துட்டன்காமன் மம்மியுடன் கூடிய கல்லறையை கண்டுபிடித்தார். இது உலகம் முழுவதும் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து துட்டன்காமன் கல்லறையில் உள்ள பொக்கிஷங்கள் ஆராயப்பட்டு வருகிறது.


அந்த வகையில் துட்டன்காமன் உடல் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் சிறந்த வேலைப்பாடுகளை கொண்ட சிறிய கத்தி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கத்தியை தொல்லியல் ஆய்வாளர்களும், அறிவியல் ஆய்வாளர்களும் ஆய்வு செய்தனர். சமீபத்தில் இந்த கத்தியை ஆய்வாளர்கள் எக்ஸ்-ரே பரிசோதனை செய்து பார்த்தபோது, நம்ப முடியாத முடிவுகள் கிடைத்துள்ளன.

அந்த கத்தியானது விண்கல் ஒன்றின் இரும்பில் இருந்து செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது நிக்கல் மற்றும் கோபால்ட் ஆகிய தனிமங்களை கொண்டிருந்ததும் தெரியவந்தது.


கத்தியின் வேதியியல் கூறுகள், 2000-ஆண்டில் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விண்கல்லோடு ஒத்துப்போவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், விண்கல்லின் ஒன்றில் இருந்து அழகிய வேலைப்பாடுகளை கொண்டு கத்தி செய்யப்பட்டுள்ளது ஆய்வாளர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

நன்றி
தகவல்
மாலைமலர்

உலகின் தீரா மர்மங்கள்... உலகில் பல இடங்களில் உள்ள பிரமிட் பற்றிய அறிய தகவல்கள்....

உலகின் தீரா மர்மங்கள்... உலகில் பல இடங்களில் உள்ள பிரமிட் பற்றிய அறிய தகவல்கள்....

மர்மங்கள் என்று எடுத்துக்கொண்டால் இவ்வுலகம் முழுவதும் விதவிதமாக கொட்டிக்கிடக்கும். பல மர்மங்களில் ஒரு சில காலப்போக்கில் விடை காணப்பட்டிருக்கின்றன.

எகிப்தும் பிரமிடுகளும் எகிப்தின் பிரமிடுகளைப்பற்றி நம்மில் சிலபேர் முன்னரும் பலபேர் மம்மி பார்ட்-1 மற்றும் பார்ட்-2 திரைப்படங்கள் பார்த்த பின்னரும் அறிந்திருப்போம். பிரமிடுகள் என்றாலே இன்றளவும் ஒரு மலைப்பும் ஆச்சர்யமும் உண்டாவது நிச்சயமாய் அவற்றின் தனிச்சிறப்பே.


’பிரமிடு’ என்றால் பலரும் சொல்வது, ”அது எகிப்தில் இருக்கும் ஒரு கட்டிடம். அதில் அக்காலத்தில் இறந்த மன்னர் போன்றவவர்களின் சடலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். ‘மம்மி’ என்றழைக்கப்படும் அவற்றின் உடல்கள் இன்னமும் கெடாமல் இருக்கின்றன. அது தவிர பல்வேறு புதையல்களும் அங்கே இருக்கக்கூடும்” என்பதுதான். ஆனால் இவை மட்டும் தான் பிரமிடா? இன்று உலகில் பல நாடுகளில் பிரமிட்கள் உள்ளன. அந்த பிரமிட்களை பற்றியும் பார்க்கலாம்.


எகிப்து நாட்டில் காணப்படும் பிரமிடுகள் கற்களால் கட்டப்பட்ட
பிரம்மாண்டங்கள். 2008ம் ஆண்டு வரையிலும் கிட்டத்தட்ட 138 பிரமிடுகள்
கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பிரமிடுகளுக்குப் பின்னாலான மர்மங்கள் கணக்கிலடங்காதவை. பிரமிட்கள் சாதாரண மக்களை மட்டுமல்ல, பொறியியல் வல்லுநர்களையும் வியக்க வைக்கும் அமைப்புகள். ஒரிஜினல் ஏழு உலக அதிசயங்களில், இன்று நாம் காணக் கிடைக்கும் ஒரே அதிசயம் பிரமிட்கள்தாம். கிங் குஃபு வின் பிரமிடு என்றும் இது அழைக்கப்படுகிறது.


இதுவரை கண்டறியப்பட்ட எகிப்து பிரமிடுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவிலானது. இதன் உயரம் 146 மீட்டர் (கிட்டத்தட்ட 500அடி). கிட்டத்தட்ட 4600 வருடங்களுக்கு முன்னர் இது கட்டப்பட்டதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் முதன் முதலில் கட்டப்பட்டது கிரேட் பிரமிடு அல்ல. கிங் குஃபு வின் தந்தை கிங் ஸ்நெஃப்ருவினால் கட்டப்பட்ட ஸ்டெப் பிரமிடுதான் முதன் முதலில் கட்டப்பட்ட பிரமிடாகும். கிரேட் பிரமிடு 2.3 மில்லியன் எண்ணிக்கையிலான கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த எடை 5.9 மில்லியன் டன்கள்.

Giza
கிஸா (Giza) நகரில் இருக்கும் பெரிய பிரமிட் சுமார் 476 அடி உயரமானது, 13.6 ஏக்கர் நிலப் பரப்பு கொண்டது 5,90,712 கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கம்ப்யூட்டர் கணக்கீடுகள் சொல்கின்றன. கற்களின் எடை ஒவ்வொன்றும் இரண்டில் இருந்து முப்பது டன் வரை. இதில் முக்கியமான விஷயம்
என்னவென்றால் இந்தப் பிரமிடுகளைச் சுற்றி எந்தவிதமான மலைகளோ, பாறைகளோ, கற்குன்றுகளோ கிடையாது. நகரத்தின் அருகில் மட்டுமல்ல,
தொலைவிலும் கூட இல்லை. ஒரு புறம் பாலைவனமும், மறுபுறம் கடலும் தான் இந்நகரைச் சுற்றி உள்ளது. அப்படியானால் இந்தப் பிரமிடை எப்படி உருவாக்கியிருப்பார்கள், இத்தனை லட்சம் கற்களை எங்கிருந்து கொண்டு வந்திருப்பார்கள், இவ்வளவு பெரிய உயரத்திற்கு அவற்றை எப்படி எழுப்பியிருப்பார்கள் என்றுதான் வரலாற்றாய்வாளர்களும், விஞ்ஞானிகளும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த அளவுக்கு அருகில்
பூமியில் எங்காவது கற்களைத் தோண்டி எடுத்து இவற்றைக் கட்டியிருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அவ்வாறு தோண்டி எடுத்த இடங்களில் மிகப் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் பலமைல் சுற்றளவிற்கு அப்படி எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை. ஆகவே எப்படி இவற்றை உருவாக்கியிருப்பார்கள் என்று இன்னமும் விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டுதான் உள்ளனர். உச்சியை எட்டும்போது கற்களை 400 அடிகளுக்கு மேல் தூக்கிக் கொண்டு போயிருக்க வேண்டுமே? அவர்களிடம் கிரேன் மாதிரி எந்திரம் இருந்ததா? ஒரு லட்சம் தொழிலாளிகள் இருபது வருடம் பணியாற்றியிருந்தால் மட்டுமே பெரிய பிரமிட் உருவாகியிருக்கும் என்பது கட்டடக் கலை வல்லுநர்கள் கணிப்பு. மிஸிரினஸ் பிரமிடில் உபயோகித்திருக்கும் ஒரேயொரு கல்லின் எடை மட்டும் 285 டன் என்பதும், இவ்வளவு எடையுள்ள கல்லை எப்படி கையாண்டிருப்பார்கள் என்பதும் ஆராயமுடியாத மர்மமாகவே நீடிக்கிறது.


பிரான்ஸ் நாட்டின் மாவீரராக இருந்த நெப்போலியன் இந்தப் பிரமிடுகளில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் கொண்டார். தனி ஆளாக ஓரிரவு முழுக்க இந்தப் பிரமிடில் தங்கினார். மறுநாள் காலை வெளிவந்த அவர், பிரமிப்பின் உச்சியில் இருந்தார். பிரமிடின் பல்வேறு ரகசியங்களைத் தெரிந்து கொண்டிருந்த அவர், அவற்றை முழுமையாக வெளியிடவில்லை. ”நான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்” என்ற கருத்தை மட்டும்
தெரிவித்தார்.


பிரமிட் என்றால் கூம்பு வடிவம். அடிப்பகுதி நீண்ட சதுரமாக இருக்கும். நான்கு சரிவான முக்கோணப் பகுதிகள் உச்சியில் ஒன்றாக இணையும். இந்தப் பிரமிட்களுக்குள் ராஜா ராணிகள், விஐபிகள் ஆகியோரின் உடல்கள் அவர்கள் மறைவுக்குப்பின் மம்மிகளாக, உடல் கெடாதவாறு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த உடல்கள் கெட்டுப் போகாமல் இருக்கின்றன. பிரமிட்களின் கூம்பு வடிவம் இதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.


பிரமிட்கள் எல்லாமே ஏன் கூம்பு வடிவில் மட்டுமே கட்டப்பட்டுள்ளன? வீடுகளை சாதாரணமாக, சதுர, செவ்வக வடிவங்களில் கட்டியவர்கள், பிரமிட்களை மட்டும் கூம்பு வடிவம் ஆக்கியது ஏன்?


ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டுகள் செய்த பரிசோதனைகளின் அடிப்படையில் தரும் விளக்கங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
பிரமிட் வடிவ அறைக்குள் காய்கறிகள், பழங்களை வைத்தால், மற்ற அறைகளில் வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்களைவிட அதிக நாட்கள் கெடாமல் இருகின்றன.

பிரமிட் வடிவக் கட்டங்களில் தூங்குபவர்களுக்கு, சாதாரண அறைகளில் தூங்குபவர்களைவிட, அதிகம் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் இறந்த ஒரு பூனையின் உடலை, மரத்தால் செய்த பிரமிட் வடிவப் பெட்டிக்குள் வைத்தார்கள். பல நாட்கள் ஆன பின்னும் இந்த உடல் கெட்டுப் போகவில்லை.

பிரமிட் வடிவ அறைக்குள் இருக்கும் இரும்புப் பொருட்கள் எளிதாகத் துருப் பிடிப்பதில்லை.

இப்படி ஆச்சரியமான கண்டுபிடிப்புகள்!


கூம்பு வடிவ அமைப்பு, சுற்றுப்புறத்திலிருந்து ஒரு வித மின்காந்த ஆற்றலை உள் வாங்குகிறது. பிரமிடின் உச்சிப்பகுதி, அந்த ஆற்றலை, பிரமிடின் உள்பகுதியில் ஒரே சீராகப் பரவ வைக்கிறது. இதுதான் ரகசியம் என்கிறார்கள்.

இது முழுமையான விளக்கமா? சரி என்று ஒத்துக்கொண்டாலும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், எகிப்தியர்களுக்கு இந்த விஞ்ஞான உண்மை எப்படித் தெரிந்தது, புரிந்தது?


பிரமிடு போலவே இன்னுமொரு தீராத மர்மம் அதன் முன்னால் இருக்கும் ஸ்பிங்க்ஸ் சிற்பம். மிகப்பிரமாண்டமான அளவில் கட்டப்பட்டிருக்கும் இந்த சிற்பம் கிரேட் பிரமிடை பாதுகாக்கத்தான் கட்டப்பட்டிருக்கிறது என்ற வாதங்களையும் தாண்டி காலச்சிதைவுகளுடன் அமர்ந்திருக்கிறது.

ஸ்பிங்க்ஸ் பிரமிடைப் போன்ற ஓர் பிரமிடு உருவச்சிலை செவ்வாய்க்
கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாகக் கூறியிருக்கின்றனர். அவர்கள், செவ்வாய்க் கிரகத்தில் சைடோனிக் எனக் குறிக்கப்படும்
ஒரு பகுதியில் காணப்படும் பிரமிடு போன்ற அமைப்புகளுக்கும், எகிப்தின்
பிரமிடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கக் கூடும் என்றும் கருதுகின்றனர்.


சில ஆராய்ச்சியாளர்கள் கிரேட் பிரமிடு நாலு லட்சம் மனிதர்களை கொண்டு சுமார் 20 ஆண்டுகள் கட்டப்பட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். (சிலர் பிரமிடுகளை கட்டியது மனித சக்தியே அல்ல… நிச்சயமாய் ஏதோவொரு சூப்பர் பவரோ... இல்லை... வேற்றுக்கிரகவாசிகளோதான் கட்டியிருக்கவேண்டும் என்றும் வாதிக்கின்றனர். ஏனென்றால் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட மனிதர்களால் கிரேட் பிரமிடு போன்ற ஒன்றை உருவாக்குவது சாத்தியமில்லாதபோது 5000 வருடங்களுக்கு முன் இது எப்படி மனித சக்தியால் கட்டப்பட்டிருக்கும் என்ற கேள்வியும் வாதத்திற்கு வலு சேர்ப்பதாய்த்தான் இருக்கிறது)


உலகில் கட்டப்பட்ட பிரமிடுக்களில், அடிப்படையில் மிகப் பெரியது
மெக்சிக்கோவில் உள்ள சோலுலாவின் பெரிய பிரமிடு ஆகும். இப் பிரமிடு இன்னும் தொல்பொருள் ஆராய்ச்சியில் அகழப்பட்டு வருகின்றது.
பிரமிடு வடிவிலான கட்டிடங்கள் எகிப்தியர், மாயன், சுமேரியர் உள்ளிட்ட பல பழமையான நாகரிக மக்களால் அமைக்கப்பட்டன.
பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியகம் முன்பாகக் கண்ணாடியாலான பிரமிடு அமைக்கப்பட்டுள்ளது.

largest pyramid in mexico
மெசபடோமியா

மெசபடோமியர்கள், சிக்குரத்கள் எனப்பட்ட பழமையான நாகரிக மக்கள் துவக்க கால பிரமிடுகளை முதன்முதலாகக் கட்டினர். இவை சூரிய வெப்பத்தில் உலர்ந்த செங்கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டமையால் அனைத்தும் அழிந்துபோயின. இத்தகைய சிக்குரத்களை சுமேரியர்கள், பாபேலியர்கள், ஈலாமியர்கள், அக்காடியர்கள், மற்றும் அசிரியர்கள் அவரவர் பகுதிகளில் பல பிரமிடுகளை கட்டினர்.


சூடான்
பிரமிடுகள் எகிப்துடனேயே அடையாளப்படுத்தப் பட்டாலும் உலகின் மிகக்
கூடுதலான பிரமிடுகளை கொண்ட நாடாகச் சூடான் விளங்குகிறது. இங்கு 220 பிரமிடுகள் இன்றும் உள்ளன. நுபியர்கள் சூடானின் மூன்றிடங்களில் இந்த 220 பிரமிடுகளை அமைத்துள்ளனர். நாப்பட்டா மற்றும் மெரோ
அரசர்/அரசிகளின் கல்லறைக் கட்டிடங்களாக இவற்றைக் கட்டினர். இவை எகிப்திய பிரமிடுகளிலிருந்து மாறுபட்டுள்ளன. அவற்றைவிட நுபியப் பிரமிட்கள் செங்குத்தான கோணங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
சூடானில் கிமு 300 வரை பிரமிடுகள் கட்டப்பட்டு வந்தன.

நுபியப் பிரமிட்கள்
நைஜீரியா

அபுஜாவில் சுடெ பிரமிடுகளை அங்கு வாழ்ந்த குபோ நாகரிகத்தின் கூறாகக்
காணலாம். களிமண்ணால் கட்டப்பட்ட பத்து பிரமிடுகள் இங்குள்ளன. முதல் கட்ட அடிப்பகுதி 60 அடி சுற்றளவையும் 3 அடி உயரத்தையும் கொண்டுள்ளது.
அடுத்தப்படியில் 45 அடி சுற்றளவில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறான அடுக்குகள் வட்டவடிவ ஒன்றன்மேல் ஒன்றாக மேல்வரை கட்டப்பட்டுள்ளன. இவை கடவுளரின் இருப்பிடமாகவும் சிகரத்தில் அவர்கள் வசிப்பதாகவும் நம்பப்பட்டது. இதன் அடையாளமாக ஒரு கம்பு அங்கு நடப்பட்டிருந்தது. இவை ஐந்து குழுக்களாக ஒன்றுக்கொன்று இணையாகக் கட்டப்பட்டன.
இவை களிமண்ணால் கட்டப்பட்டமையால் அவ்வப்போது மீளுருவாக்கம் செய்ய வேண்டியிருந்தது.

சுடெ பிரமிடு
கிரீஸ்

கிமு இரண்டாம் நூற்றாண்டின் புவியியலாளர் பவுசானியாசு பிரமிடுகளை ஒத்த இரு கட்டிடங்களைக் குறிப்பிடுகிறார்; இவற்றில் ஒன்று ஹெலனிக்கோன் நகரிலிருந்து 19 கிமீ தொலைவில் தென்மேற்கே
இருந்ததாகவும் அர்கோசு ஆட்சிக்காகப் போராடிய போர்வீரர்களின் நினைவாக இவை கட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவை இரண்டுமே பிரமிடுகளை ஒத்து இருந்ததற்கான எந்தவொரு சான்றும் இதுவரை
கிடைக்கப்பெறவில்லை.

பவுசானியாசு பிரமிடு
இந்தியா

சோழர்கள் காலத்தில் தென்னிந்தியாவில் கருங்கற்களால் கட்டப்பட்ட பிரமிடு வடிவ கோபுரங்களுடன் கூடிய பல பெரும் கோவில்கள் இன்றும் சமயப் பயன்பாட்டில் உள்ளன. தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கம் வட்டத்திலுள்ள அரங்கநாதசுவாமி கோயில் ஆகியன இவற்றில் சிலவாம். 11ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீசுவரர் கோவில் யுனெசுகோவால் உலகப் பாரம்பரியக் களமாக 1987இல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கமாக 2004ஆம் ஆண்டு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலும் தாராசுரம் கோயிலும் இணைக்கப்பட்டன.

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்
இந்தோனேசியா

இந்தோனேசியாவின் ஆஸ்த்ரேலேசிய பாறைக் கட்டமைப்பு பண்பாட்டில் குத்துக்கல், கல் மேடைகள், கற்சிலைகளுக்கு அடுத்ததாகப்
புந்தென் பெருந்தக் எனப்பட்ட மண்,கற்களாலான அடுக்கு பிரமிடு
கட்டமைப்புகள் இருந்தன. இவை மேற்கு சாவாவின் குனுங் படாங் பகுதியிலும் சிசுலோக் பங்குயங்கன் பகுதிகளிலும் காண்டறியப்பட்டன. மலைகளிலும் உயர்ந்த இடங்களிலும் மூதாதையரின் ஆவி வாழ்வதாக
உள்ளூர் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இக்கற்கட்டிடங்கள் கட்டப்பட்டன. மத்திய சாவாவில் உள்ள போரோபுதூரில்
8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சமய பிரமிடு ஒன்று உள்ளது. பிந்தையக் கால சாவா கட்டமைப்புக்கள் இந்திய கட்டிடக்கலையின் தாக்கத்துடன் கட்டப்பட்டன.

குனுங் படாங்
பெரிய பிரமிட் பிரம்மாண்டம் என்று நினைக்கிறீர்களா? இதோ வருகிறது நிஜ பிரமாண்டம். கார்நாக் (Karnak) எகிப்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் கிராமம். ஆலயங்கள் நிறைந்த இடம். சிதிலமாகிவிட்ட பல கோவில்கள் நெஞ்சில் துயரம் பொங்க வைக்கின்றன. இங்கே இருக்கும் ஆமுன் ரே (Amun Re) கோவில் எகிப்தின் மற்ற எல்லாக் கோவில்களையும் விட மிகப் பெரியது. ஆமுன் ரே எகிப்தியரின் முழுமுதற் கடவுள். நாட்டையும், மன்னர்களையும், மக்களையும், எல்லாத் துன்பங்களிலிருந்தும், எப்போதும் காப்பாற்றுபவர் என்பது பொது நம்பிக்கை.

Amun Re
ஆமுன் ரே கோவிலில் இருக்கும், கி.மு. 14 – ம் நூற்றாண்டில், இரண்டாம் ராம்சேஸ் மன்னரால் கட்டப்பட்ட அரங்கம் முக்கிய அம்சம். ஹைப்போ என்னும் வித்தியாசமான கட்டடக் கலைப் பாணியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. தாங்கும் வளைவுகள் இல்லாமல், வரிசையாகத் தூண்களை நிறுவி, அவற்றின்மேல் தட்டையான கூரை அமைக்கும் முறை இது. அரங்கம் எத்தனை பெரியது தெரியுமா? பரப்பளவு 52,000 சதுர அடி. 16 வரிசைகளில், 134 தூண்கள் அரங்கத்தைத் தாங்கி நிற்கின்றன. இவை ஒவ்வொன்றின் சுற்றளவு 10 அடி. 122 தூண்களின் உயரம் 33 அடி: எஞ்சிய 12 தூண்களின் உயரம் 70 அடி. பிரமிடுகள் கட்டப்பட்ட விதமும் கட்டப்பட்டதற்கான காரணங்களும் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளுடன் தொடர்ந்து கொண்டேயிருக்கும் மர்மங்கள்.

karnak temple
இறந்து போன மன்னர், மகாராணி ஆகியோரின் சடலங்கள்
பதப்படுத்தப்பட்டு அவர்கள் உபயோகிக்கும் பொருட்களுடன் பிரமிடுக்குள்
அமைக்கப்பட்டிருப்பது இறப்பிற்கு பின்னாலான வாழ்க்கை குறித்த இன்று வரை மர்மமாகவே ஆராயப்படுகிறது.

மர்மங்கள் வெறும் பிரமிடுகளுடன் முடிந்து விடுவதல்ல. மம்மிகள்
எனப்படும் பதப்படுத்தப்பட்ட உடல்கள், பிரமிடுக்குள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே ஃபிளையிங் மெஷின் மற்றும் பல்பு போல செதுக்கப்பட்டிருக்கும் உருவங்கள், மனித உடலும் விலங்கு தலையுமான உருவங்கள் என நீளும் விஷயங்கள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் தீர்க்க முடியாத எகிப்தின் மர்மங்களே!!!