Tuesday, October 30, 2012

மைசூர் சிங்கம் மன்னர் ஹைதர் அலி முழு வரலாறு - II.

மைசூர் சிங்கம் மன்னர் ஹைதர் அலி - II
ஹைதர் அலி... rko 
 

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...
ஹைதர் அலியை ஒடுக்குவது குறித்து பொம்மை மன்னர் கிருஷ்ணாராஜாவுடன் ஆலோசித்தனர்.
எதையும் குறிப்பால் உணர்ந்து, கண் இமைக்கும் நேரத்தில் நடவடிக்கை எடுப்பவனே மிகச்சிறந்த வீரனாக இருக்க முடியும். ஓரிரு நிகழ்வுகளின் மூலம் தனக்கு ஏற்படும் ஆபத்துகளை புரிந்துக் கொண்ட ஹைதர் அலி, விஷப்பூச்சிகளான அவ்விரு அமைச்சர்களையும் சிறைப்படுத்தி, பொம்மை மன்னராகவும் ஓரங்கட்டி 1762ல் மைசூர் அரசராக முடிசூட்டிக் கொண்டார்.
இதை மிகச்சரியான அரசியல் நடவடிக்கை என வரலாற்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆட்சியாளர்கள் பலவீனமானவர்களாக இருந்த நிலையில், நாட்டைக் காக்க, எல்லாத் தகுதிகளும் பொருந்திய, அதே ஆட்சியில் செல்வாக்குடன் திகழ்ந்த ஒருவர் சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவாக இது பாராட்டப்படுகிறது.
இனி.. சொல்லவா வேண்டும்..? ஆங்கிலேயர்கள் நிம்மதி குலைந்தனர். ராணுவ தளபதியாக இருக்கும்போதே நம்மை இன்னலுக்குள்ளாக்கியவர், ஆட்சியாளராக வந்துவிட்ட நிலையில் அவர்களால் எப்படி நிம்மதியாக இருந்திருக்க முடியும்.
தன் ராஜ தந்திரத்தால், ஆங்கிலேயர், ஹைதராபாத் நிஜாம், மராட்டியர் கூட்டணியை உடைத்து, மராட்டியரை தன் பக்கம் இழுத்துக் கொண்டார் ஹைதர்!

முன்பு ஹைதர் அலியும், மருதநாயகமும் திண்டுக்கல் அருகே போரிட்டதை குறிப்பிட்டிருந் தோம். இப்போது வரலாறு மாறியது. இருவரும் தாய் நாட்டுக்காக ஓரணியில் திரண்டனர். பழைய சம்பவங்களை மறந்த மருதநாயகம், ஹைதர் அலியிடம் ராணுவ உதவியை கோரினார்.
நானும், நீயும் வேறல்ல. நமது படையும், நாடும் வேறல்லஎன்று சகோதர உணர்வோடு ஹைதர் அலி கடிதம் எழுதி தனது ஆதரவை வழங்கினார். (நன்றி : C. Hayavadana Rao, History of Mysore)
ஹைதர் அலி 
பிப்ரவரி 1764ல் ஹைதர் அலி, சுலைமான் என்ற தளபதியின் கீழ் ஒரு பெரும்படையை மருதநாயகத்துக்காக அனுப்பி வைத்தார்
மருதநாயகத்துக்கு உதவி செய்தார்..
இந்திய வரலாற்றில் முதல் முறையாக 
ஆட்சிக்கு வந்ததும் முதலில் ராணுவத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்டார். ஐரோப்பிய ராணுவங்களை போன்று முறைப்படுத்தப்பட்ட, நவீன ராணுவத்தை இந்தியாவில் முதலில் உருவாக்கியவர் ஹைதர் அலிதான்! விவசாயிகளின் நண்பனாகவும் திகழ்ந்தார். ராணுவ வீரர்களுக்கு 40 நாட்களுக்கு ஒருமுறை மாத சம்பளத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவருடைய படையில் 1,80,000 வீரர்கள் இடம்பெற் றிருந்தனர். நவீனரக ஆயுதங்கள் தயாரிக்கவும், பயிற்சியளிக்கவும் இருநூறுக்கும் மேற்பட்ட ஐரோப்பியர்கள் பணியாற்றினர். அவரது ராணுவம் குறித்தும், படை நடத்தும் திறன் குறித்தும் நாடெங்கும் செய்தி பரவியது. இது எதிரிகளை குலை நடுக்கம் கொள்ளச் செய்தது.

 
நாவபை வீழ்த்த வேலு நாச்சியார்  ஹைதர் அலி அவர்களின் உதவியை
நாடினார் :

 
வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி அவர்கள்  உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு அவர்களுக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி அவர்கள் திண்டுக்கல்லிலிருந்தார். கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். ‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன், அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம்.

தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது.


A British illustration of Sayed Sahib leading Hyder Ali's forces during the Siege of Cuddalore.

ஹைதர் அலி அவர்கள் தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும். வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார். சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது.
வேலு நாச்சியார்பற்றிய வரலாற்று தகவல் !!!

முதல் மைசூர் போர்

ஜெனரல் ஜோசப் ஸ்மித் என்ற ஆங்கிலேயர் தளபதி தலைமையில் ஹைதர் அலிக்கு எதிராக 1767, ஏப்ரலில் யுத்தம் தொடங்கியது. போரை கண்டு அஞ்சிய மற்றொரு இந்திய மன்னரான ஹைதராபாத் நிஜாம், 23.2.1768ல் ஆங்கிலேயருடன் அமைதி ஒப்பந்தம் செய்துக் கொண்டார்.
ஆனால் ஹைதர் அலி அடங்க மறுத்து மோதினார். மேற்கே மராட்டியரை தோற்கடித்து மங்களூரை வென்றார். கிழக்கே ஆங்கிலேயர்களை தன்னந்தனியாக எதிர்த்தார்.
mysore war .,. rko
ஈரோட்டில் ஆங்கிலேயப் படைகளை தோற்கடித்தார். தளபதி நிக்ஸன் தோல்வியை ஒப்புக் கொண்டார். ஈராண்டு காலம் நடைபெற்ற இப்போர் முதல் மைசூர் போர் என வரலாற்றில் போற்றப்படுகிறது. இதனை முதல் காலனியாதிக்க எதிர்ப்பு போர்” என இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் புகழ்கிறார்கள்.
இதனிடையே ஆங்கிலேயர்கள் ஹைதருடன் ஓர் உடன்படிக்கை செய்துக் கொண்டனர். அவரவர் ஆக்கிரமித்த நிலங்களை திருப்பியளிப்பது என்றும், மைசூர் ஆட்சிக்கு ஆபத்து எனில் ஆங்கிலேயப் படை உதவிக்கு வரும் என்றும் ஒப்பந்தமிடப்பட்டது.
இரண்டாம் மைசூர் போர்
 
முதுகில் குத்துவது ஆங்கிலேயர்களுக்கு ‘கை வந்த கலை’ ஆயிற்றே அந்த நேர ஆபத்திலிருந்து தப்பிக்க அவர்கள் போட்ட சதிதான் அந்த ஒப்பந்தம்!
மராட்டியர்கள், மைசூர் ஆட்சியின் மீது போர் தொடுத்தனர் ஒப்பந்தப்படி, ஆங்கிலேயப் படைகள் ஹைதருக்கு உதவிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், வரவில்லை! இது ஹைதரை கோபப்படுத்தியது.
1780ல் இரண்டாம் கர்நாடகப் போர் தொடங்கியது. 100 பீரங்கிகள், 80 ஆயிரம் வீரர்களுடன் புயல் வேகத் தாக்குதலை நடத்தினார் ஹைதர்! ஆற்காடு, பரங்கிப்பேட்டை, வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் யுத்தம் தீவிரமாக நடந்தது.
போரில் மைசூர்  சிங்கம்  ஹைதர் அலி . rko 
பேரம்பாக்கம் என்ற இடத்தில் ஆங்கிலேயப் படைகளை வழிமறித்து குதறியது ஹைதரின் படை. தலைதெறிக்க சிதறி ஓடினர் எதிரிகள். அப்போரில் 2000 ஆங்கிலேயர்கள் உட்பட ஏழாயிரம் எதிரிப்படைகள் கொல்லப்பட்டனர். 2000 வெள்ளைய வீரர்கள் சிறைப்படுத்தப்பட்டனர்.
இரண்டாம் கர்நாடகப் போர் 1780ல் தொடங்கி 1784 வரை நான்காண்டுகள் நீடித்தது. ஹைதரை தொடர்ந்து, அவரது மகன் திப்புவும் இப்போரை வழி நடத்தினார்.
நீண்டப் போரில் ஹைதர் அலி சளைக்கவில்லை. தன் படையின் உற்சாகமும், குன்றாமல் பார்த்துக் கொண்டார். அதுதானே ஒரு மிகச்சிறந்த தலைவனின் தலைமைத்துவம்! அதை சரியாக செய்தார்!
தனது நீண்ட நெடிய போர் திட்டம் குறித்து தனது தளபதிகளுக்கு மத்தியில் அவர் ஆற்றிய உரை சரித்திரப் புகழ் பெற்றது.
“ஆங்கிலேயர்களை நாம் பலமுறை வென்றுவிட்டோம். ஆனால் ஒரு இடத்தில் தோற்கடிப்பதன் மூலம் அவர்களை நாம் வீழ்த்திவிட முடியாது. காந்தகார் (இன்றைய ஆப்கான்) மற்றும் பாரசீக(ஈரான் மன்னர்களை வங்காளத்தின் மீதும், மராட்டியர்களை பம்பாயின் மீதும் படையெடுக்க செய்ய வேண்டும். பிரெஞ்சுகாரர்களையும் இணைத்து கொண்டு நாம் அனைவரும் கூட்டாக ராணுவ நடவடிக்கை எடுத்து, எல்லா முனைகளிலும் ஆங்கிலேயர்களை தாக்க வேண்டும்.
- ஹைதர் தன் தளபதிகளிடம் ஆற்றிய வீர உரை (ஜனவரி 1782)
அவரது உரையில் உள்ள கருத்துகளை ஆராயும்போது அவரது போர் தந்திரங்களையும் அரசியல் அறிவையும், உலக நாடுகளின் மீதான புரிதல்களையும் நம்மால் உணர முடிகிறது.
ஹைதர் அலி அவர்கள் ஆளுமை பகுதி 
தேசப்பற்று இஸ்லாமிய சிந்தனையும், அனைத்து மத குடிமக்களையும் சமமாக மதிக்கும் மாண்புகளும் ஹைதரின் மக்கள் செல்வாக்கும் கூடுதல் பலம் சேர்த்தன. அவர் ஹைதராபாத் நிஜாமை முஸ்லிம் என்பதற்காக அரவணைக்கவில்லை. மராட்டியர்களை இந்துக்கள் என்பதற்காக எதிர்க்கவில்லை. அன்னியர்களுடன் அவர்களை இணைந்திருந்த காலகட்டங்களில், தேச நலனுக்காக அவர்களை எதிர்த்தார்.
அதே சமயம் இரண்டாம் கர்நாடக யுத்தம் நடந்தபோது மராட்டியர்களையும், ஹைதராபாத் நிஜாமையும் இணைத்து “ஐக்கிய கூட்டணி”யை அமைக்கவும் அவர் தவறவில்லை.

சிராஜ்-உத்-தௌலாவின் வீரம்
தென்னிந்தியாவில் ஹைதரைப் போல், கிழக்கிந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர் சிராஜ்.உத்-தௌலா<< click the link >> என்ற மாவீரர்! அவர் 1779ல் பிளாசி என்ற இடத்தில் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டு, கல்கத்தா துறைமுகத்தில் தூக்கிலிடப்பட்டார். இச்செய்தி ஹைதரை துன்பத்தில் ஆழ்த்தியது, தனது தேசத்தின் சக போராளி வீழ்ந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆங்கிலேயர்களிடம் இந்திய மன்னர்கள் தோற்கக்கூடாது என சிந்தித்தவர். மராத்தியர்கள் மற்றும் ஹைதராபாத் நிஜாம் மீதான எதிர்ப்புகளை கைகழுவினார் என்பது அவரது தேசப்பற்றிற்கு ஒரு உதாரணமாக கூற முடியும்.

மகனுக்கு கடிதம்

இரண்டாம் மைசூர் யுத்தம் ஹைதரின் கனவுப்போர் ஆகும். எப்படியும் ஆங்கிலேயர்களை வீழ்த்தி விடலாம் என உறுதிபூண்டு சீறிக்கொண்டிருந்தார்.
1782 டிசம்பர் மாதம் இன்றைய ஆந்திர மாநிலம் சித்தூரில் போர் செய்துக் கொண்டிருந்தார் அப்போது, கேரளாவின் மலபார் பகுதியில் அவரது மகன் திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருந்தார்.
ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான்..rko 
அப்போது போர் குறித்தும், இந்திய தேசத்தின் விடுதலை குறித்தும் இந்தியாவின் பெருமை குறித்தும் அவர் எழுதிய கடிதம், தேசப்பற்றாளர்களை கண்ணீரில் ஆழ்த்தும் உருக்கமான ஆவணமாகும்.
அதில் கூறுகிறார்….
அன்பு மகனே… அதிகாரம் மற்றும் நமது மைசூர் ஆட்சியின் பாதுகாப்பு குறித்தும் நான் கவலைப்படவில்லை. நமது முன்னோர் முகலாயர் ஆட்சியில், ஆசியா கண்டத்தில் நமது இந்திய தேசம் கௌரவமான இடத்தை வகித்தது. ஆனால் இன்று நமது தாய்நாடு சிதறிப்போய் கிடக்கிறதே… நமது இந்திய மக்களுக்கு தேசத்தின் மீதான நேசம் குறைந்துப் போய்விட்டதே.. என அக்கடிதத்தில் அங்கலாய்க்கிறார்.

டிசம்பர் 6 கறுப்பு நாள்

இன்றைய தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அவர் மகன் திப்பு வெற்றி கொள்கிறார். கடலூரும் கைப்பற்றப்படுகிறது. இரண்டாம் மைசூர் போரில் வெற்றி செய்திகள், வந்த வண்ணம் இருந்தபோது, ஹைதர் எதிர் பாராத வகையில் நோயுற்றார். அப்போது அவருக்கு வயது 60. தேசத்தின் மீது பற்று வைத்த ஹைதரின் முதுகு தண்டுவடத்தில் புற்று நோய் தாக்கியது.
r    k    o 

கண்களில் விடுதலை கனவுகளோடு திரிந்த, புரட்சியாளரின் உடல் இயங்க முடியாமல் முடங்கியது. 1782 டிசம்பர் 6 இந்தியாவின் மற்றொரு கறுப்பு தினம். ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே அவரது உயிர் பிரிந்தது. உயிரோடிருந்த இந்தியர்களை உயிரோடு வதைத்தது இத்துக்கச் செய்தி!
மகன் திப்புவின் வேண்டுகோளை ஏற்று அவரது உடல் ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு எடுத்து வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. அங்கே விடுதலையின் விதைகள் வீரியத்துடன் எழுந்தது. ஹைதரின் மகன் திப்பு சுல்தான் தலைமையில் எரிமலையாய் வெடித்தது என்பது அடுத்தக்கட்ட வரலாறாகும் திப்பு சுல்தான்-ஒரு முழு வரலாறு.



உங்கள் தோழன் 
ரஹ்மான்FAYED./...

Thursday, October 25, 2012

மனிதன் காலடித்தடம் பதிக்காக 10 இடங்கள்!! – புகைப்படங்கள்,

மனித தொழில்நுட்பம் உலகம் மற்றும் வான்வெளியில் உள்ள அனைத்தையும் ஊடுருவிச் செல்ல உதவினாலும். மனிதன் இன்னமும் தன் காலடித்தடம் பதிக்காத இடங்கள் இருக்கிறது! – (The Unexplored Area)
அதில் முக்கிய பத்து (10) இடங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
1. Northwest Siberia – வடமேற்கு சைபீரியா
,

2. Caves – குகைகள்
இன்றும் பல குகைகள் உலகில் கண்டறியப்படவில்லை, இதன் காரணம் அதில நிறைந்த பல மர்மங்கள், பல அச்சுறுத்தும் நிகழ்வுகள் நடக்கக்கூடும் என்பதால் மனிதன் இன்னும் தயங்குகிறான்.

3. Amazon Rain-forest – அமேசான் மழைக்காடுகள்!

4. Antarctica – அண்டார்டிகா

5. Mariana Trench & Deep Sea Ocean – மரியானா அகழி & ஆழ்கடல்கள்!

6. Deserts – பாலைவனங்கள்!

7. Gangkhar Puensum, Bhutan – கங்க்கார் பியுன்சும் – புட்டான்

8.Icecap; Greenland – உறைபனிக்கட்டி, கிரீன்லாந்து

9. Mountains of Northern Columbia – வட கொலம்பியாவின் மலைகள்

10. Central Range, New Guinea – புது குனியா மலைத்தொடர்கள்

Sunday, October 21, 2012

மருதநாயகம் ஒரு முழு வரலாறு - II .

மருதநாயகம் ஒரு முழு வரலாறு


இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...
 
மதுரைப் போர்!
முடியாது! முடியவே முடியாது! ஆற்காடு நவாபிடம் மட்டுமல்லஉனக்கும் கப்பம் கட்ட முடியாது என்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டார் மருதநாயகம். புயல் உருவானது! போர் மேகங்கள் சூழ்ந்தன!
1763 ஜனவரி 9 அன்று தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கி, அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டது! போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும் காட்ட வேண்டியதை உணர்ந்தார். கோட்டையில் அவரது கொடியான மஞ்சள் கொடியை ஏற்றியதோடு, பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும் சேர்த்து தன் கோட்டையில் பறக்கவிட்டார்! எதிரிக்கு எதிரி நண்பன்! பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டார். பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினார்.
தக்காணத்தை ஆட்சி செய்த தக்காண நிஜாம் அலி, தனது கவர்னராக மருதநாயகத்தை அங்கீகரித்தார். இது ஆங்கிலேயர்களையும் ஆற்காடு நவாபையும் திகைப்பில் ஆழ்த்தியது.

சிவகங்கை சிக்கல்
ஆங்கிலேயர்களுக்கும் , மருதநாயகத்திற்கும் இடையே பகை முற்றியது, இருதரப்பும் தங்கள் ஆதரவு பலத்தை பெருக்க திட்டங்களை வகுத்தார்கள். குறுநில மன்னர்களை வளைத்தார்கள். அப்போது மருதநாயகத்துக்கு சவால் சிவகங்கையிலிருந்து உருவானது. மருதநாயகத்திற்கு கட்டுப்பட சிவகங்கை சமஸ்தானம் மறுத்தது. சிவகங்கை, திருபுவனம், பார்த்திபனூர் ஆகியவை தனக்குட்பட்டவை என்ற மருதநாயகத்தின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது, சிவகங்கையின் மன்னராக முத்து வடுகையர் இருந்தாலும், அவரை இயக்கி மறைமுக நிர்வாகியாக இருந்தவன் தாண்டவராயன் என்பவன்! அவன், ஆற்காடு நவாபுக்கும், மருதநாயகத்திற்கும் இடையேயிருந்த பூசலை பயன்படுத்திக் கொண்டு, ஆற்காடு நவாபின் உதவியை பெற்றான்.
அவன் தந்திரத்தில் கெட்டிக்காரன். மருதநாயகத்தின் மனைவிக்கு பொன்னும் பொருளும் அனுப்புவதாக ஆசை வார்த்தை காட்டி, மருதநாயகத்தை சரிப்படுத்துமாறு தூதுவிட்டான். அரண்மனை வழியாக நுழைய முடியாதவன், அடுப்பங்கரை வழியாக நுழைய முயற்சித்தான். அதையும் மருதநாயகம் முறியடித்தார்.
சிவகங்கை மன்னர் முத்துவடுகையர், தனது தளபதியான தாண்டவராயனிடம், எதற்கப்பாவம்பு! பேசாமல் மருதநாயத்திடம் அவர் விரும்பும் பகுதிகளை கொடுத்து விடுவோம்! என்றார். காரணம், அவர் பயந்த சுபாவம் கொண்டவர்! ஆனால் தாண்டவராயன் திருபுவனத்தில் ஆட்சியாளராக இருந்த தாமோதரனையும் அழைத்துக் கொண்டு ஆற்காடு நவாபுடன் கூட்டணி சேர்ந்தார்.
கோபம் கொண்ட மருதநாயகம் திருபுவனத்தையும், பார்த்திபனூரையும் தாக்கினார். சிவகங்கை அரண்மனைக்கு தீவைத்தார். நிலைமை முற்றுவதை அறிந்த சிவகங்கை மன்னர் முத்துவடுகையர் குலை நடுங்கி போனார். தன் தளபதியின் தேவையற்ற வம்பால் தன் ஆட்சிக்கே ஆபத்து வந்து விட்டதே என நடுங்கினார்.
முத்துவடுகையர் ஆற்காடு நவாபிடம் உதவி கோரினார். ஆற்காடு நவாபின் வேண்டுகோளை ஏற்று, ஆங்கிலேயப்படை திருபுவனம் வந்தது. மருதநாயகத்தின் அதிரடி யுத்தத்திற்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாத அவர்கள் ஓடி ஒளிந்தனர். அடுத்தடுத்து இரண்டு போர்களிலும் மருதநாயகம் வென்று திகிலூட்டினார். நிமிர்ந்து உட்கார்ந்தனர் ஆங்கிலேய தளபதிகள்! விழிகள் மிரள யோசித்தனர்.
ஆங்கிலேயப் படைக்கு தலைமையேற்ற பிரஸ்ட்டன் திணறினார். அவரும், கான்சாஹிபும் முன்னாள் நண்பர்கள்! அதனால் பயம் அதிகரித்தது! காரணம் மருதநாயகத்தின் குணமும், சினமும் தெரியும்! அவர் பயந்தபடியே நடந்தது! மூலக்கரை கொத்தளம் அருகே நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வாள் முனையில் நூற்றுக்
கணக்கானோரை சீவித் தள்ளினார் மருதநாயகம்! உடைந்த வாள்களும் வீரம் பேசின! ரத்தம் கொட்டின! ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன் சுடப்பட்டு படுகாயமடைந்தார். பின்னர் உயிர் துறந்தார்.
பிரஸ்ட்டனை பெரிதாக நம்பியிருந்த ஆற்காடு நவாப் நிலை குலைந்தார். மருதநாயகம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடும் செய்தியும், அதன் வெற்றிகளும் மைசூர்
மன்னர் ஹைதர் அலிக்கு எட்டியது. அவர் பழைய பகையை மறந்தார். மண்ணுரிமை போரில், தனது நிலைக்கு மருதநாயகம் வந்ததை வரவேற்று வாழ்த்து செய்தி அனுப்பினார்.
தந்திரம்! வஞ்சகம்!
ஆற்காடு நவாபுக்கு அடுத்து என்ன செய்வது புரியவில்லை. பயம் வாட்டியது. சிவகங்கை சீமையின் விஷமியான தாண்டவராயன்நீங்க ஒன்றும் பயப்படாதீங்கஎன்று செயற்கையாக ஆற்காடு நவாபுக்கு தைரியமூட்டினான். இனி, மருதநாயகத்தை போரினால் வெல்ல முடியாது! இனி தந்திரம் தான் தீர்வு என்பதை உணர்ந்து செயல்பட்டான் தாண்டவராயன்! துரோகிகளை விலை பேசினான்!
இறுதியாக மதுரையில் மருதநாயகத்தின் கோட்டை முற்றுகையிடப்பட்டது. தீவிரமான முன்னேற்பாடுகளுடன், நிறைய ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான வீரர்கள், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவாசிய தேவைகளுடன் ஆங்கிலேயப்படைகள் திரண்டன. 1763 பிப்ரவரி மாதம் மருதநாயகம் ஆங்கிலேயர்களின் கொடியை தனது பீரங்கி வாயிலில் வைத்து வெடித்து சிதற செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார். தொடங்கியதுமதுரை போர்’!
மதுரை போர் உக்கிரமடைந்தது! நாட்கள் பல கடந்து, வாரங்களாக நீடித்தது முற்றுகை! மருதநாயகத்தின் கோட்டை, நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது, உணவு, ஆயுதங்கள், மருந்துகள் என காக்கா, குருவி கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது. மருதநாயகம் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று ஆங்கிலேயர்கள் தூது அனுப்பினர். மண்டியிட மாட்டேன் என்றார் மாவீரன் மருதநாயகம். அப்படி சிந்திப்பதே குற்றம் என கருதுபவராயிற்றே!
நாலாயிரம் வீரர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலேய அதிரடிப்படை, இரண்டாயிரம் குதிரைகள் என மருதநாயகத்துக்கு எதிராக முற்றுகை வலுத்தது. மருதநாயகத்தின் படையினர் பீரங்கிகளால் அதிர வைத்தனர். பின்வாங்கி ஓடிய ஆங்கிலேயர்கள் மதுரை தெப்பக்குளத்துக்கு அருகே பதுங்கினர். ஆங்கிலேயர்கள் அணியில் இருந்த இந்தியப்படையினர் போரில் ஈடுபடுவது குறித்து குழம்பிக் கொட்டிருந்தனர்.
அச்சமயத்தில், இந்திய வீரர்களின் குழப்பத்தை பயன்படுத்தி மருதநாயகம் நடத்திய தாக்குதலில் படு தோல்வியடைந்தது ஆங்கிலேயப்படை. வைகை நதி சிவந்தது! போர் தற்காலிகமாக நின்றது.
போரில் உறுதி
கோட்டையில் மருதநாயத்துக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகளும் தளபதிகளும் உறுதியோடு நின்றார்கள். அவர்களில் ஒருவர் மார்ச்சந்! அவருக்கும் மருதநாயகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. எனினும் அவரே சிறந்த தளபதி என்பதை உணர்ந்த மருதநாயகம் அவருக்கு முன்னுரிமை கொடுத்தார்.
ஒருவாரம் கழித்து 15.09.1763ல் மீண்டும் போரை தொடங்கினர் ஆங்கிலேயர். அப்போதும் தோல்வி. ஆங்கிலேயர்களின் தோல்வியில் கிடைத்த அமைதியில், தற்காலிக இடைவெளியை சரியாக பயன்படுத்தினார் மருதநாயகம்! கோட்டைக்குள் உணவு, ஆயுதங்கள், மருந்துகள் கொண்டு வரப்பட்டு அடுத்த போருக்கு தயாரானார்கள்.
இறுதி யுத்தம்
ஆங்கிலேயர்கள் தங்கள் படையை பலப்படுத்தி மீண்டும் மதுரைக்கு வந்தனர். 31.01.1764 ல் மும்பையிலிருந்து சிறப்பு ஆங்கிலேய அதிரடிப் படையும் மதுரைக்கு வரவழைக்கப்பட்டது. இவர்கள் தொண்டி துறைமுகத்தில் இறங்கினர். மதுரையை சுற்றியிருந்த குட்டி, குட்டி அரசுகளான பாளையக்காரர்களையெல்லாம் ஆங்கிலேயர்கள் வளைத்தனர்.
ஆங்கிலேயர்களையும், ஆற்காட் நவாபையும் ஆதரிப்பவர்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்வதற்கு சமம் என்றும், தனக்கு பாளையக் காரர்கள் அதாவது சிற்றரசர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதினார் மருதநாயகம்.
ஹைதர் அலியின் உதவி
முன்பு ஹைதர் அலியும், மருதநாயகமும் திண்டுக்கல் அருகே போரிட்டதை குறிப்பிட்டிருந் தோம். இப்போது வரலாறு மாறியது. இருவரும் தாய் நாட்டுக்காக ஓரணியில் திரண்டனர். பழைய சம்பவங்களை மறந்த மருதநாயகம், ஹைதர் அலியிடம் ராணுவ உதவியை கோரினார்.
நானும், நீயும் வேறல்ல. நமது படையும், நாடும் வேறல்லஎன்று சகோதர உணர்வோடு ஹைதர் அலி கடிதம் எழுதி தனது ஆதரவை வழங்கினார். (நன்றி : C. Hayavadana Rao, History of Mysore)
ஹைதர் அலி 
பிப்ரவரி 1764ல் ஹைதர் அலி, சுலைமான் என்ற தளபதியின் கீழ் ஒரு பெரும்படையை மருதநாயகத்துக்காக அனுப்பி வைத்தார். போதாக் குறைக்கு 19.02.1764ல் பிரெஞ்சுப் படைகளும் வந்து சேர்ந்தது.

மைசூர் சிங்கம் மன்னர் ஹைதர் அலி முழு வரலாறு 
சீறினார்மோதினார்!
உற்சாகத்தில் சிலிர்த்து எழுந்தார் மருதநாயகம். அவரது நிலப்பரப்பின் முக்கிய எல்லைகளில் படைகள் முன்னிறுத்தப்பட்டது. வடக்கே நத்தம், தெற்கே பாளையங்கோட்டை பகுதிகளில் ராணுவம் பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு அரண்கள், அகழிகள், மணல் மேடுகள் என தற்காப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
மீண்டும், மீண்டும் ஆங்கிலேயர்கள் சளைக்காமல் மதுரையை குறிவைத்து போரிட்டனர். நவீன ஆயுதங்களை இங்கிலாந்திலிருந்து வரவழைத்தனர். 1764 ஜூன் மாதம் தொடர்ந்து நடைபெற்ற போரில் ஆங்கிலப்படை தோல்வியை சந்தித்தது. ஆங்கிலேயர்கள் புறமுதுகிட்டு ஓடியதோடு, சமாதானக் கொடியையும் ஏற்றினர். செய்தி கேட்டு அலறினார் ஆற்காட் நவாப்!
அதே நேரம் மதுரை மற்ற பகுதிகளுடன் துண்டிக்கப்பட்டதாலும், போரினால் ஏற்பட்ட நிர்வாக சீர்குலைவினாலும் பெரும் இழப்பு ஏற்பட்டது. கோட்டையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், அது மருதநாயகத்திற்கு பெரும் இன்னலை ஏற்படுத்தியது. மருதநாயகம், சரண் அடைய விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்ததுடன் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை தாய் மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கர்ஜித்தார்.
தந்திரம்
போரினால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த எதிரிகள் தந்திரங்களையும், வஞ்சகங்களையும் கையாண்டனர். கான்சாஹிபின் அமைச்சர்களில் ஒருவரான சீனிவாசராவை வலையில் வீழ்த்தினர். இதற்கு பின்னணியில் சிவகங்கை மன்னரின் தளபதியான தாண்டவராயன் இருந்தான். பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்ட சீனிவாசராவ் மூலம் மெய்க்காவலர்களான பாபாசாஹிப், சேகுகான் உள்ளிட்டோரையும், பிரதான தளபதியும், பிரெஞ்சு அதிகாரியுமான மார்ச்சந்த்தையும் துரோக வலையில் இணைத்தனர்.
மருதநாயகம் தன் குடும்பத்தோடு தப்பி செல்ல விருப்பதாகவும், அதன் பிறகு உங்கள் கதி அதோ கதிதான் என்றும் இவர்களிடம் அவதூறு கூறப்பட்டது. அவர்கள் மருதநாயகத்தின் மீது சந்தேகம் கொண்டனர். இதைத்தான் ஆங்கிலப்படை எதிர்பார்த்தது. அது நடந்தது. கான்சாஹிப் மருதநாய கத்தை பிடித்துக் கொடுத்தால், பொதுமன்னிப்பும், சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும் என்று பேரம் நடந்தது. திட்டம் தயாரானது.
சூழ்ச்சி வென்றது
மருதநாயகத்தை யாராலும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது. அடக்க முடியாது. பிடிக்க முடியாது. போர் யானையை எப்படி முடக்க முடியும்? அவரை எப்போதும், கெடுபிடி இன்றி சந்திக்க கூடிய அந்த நால்வரும் இப்போது எதிரிகளின் கையில்! இதை அறியாதவராக மருதநாயகம் இருந்தார்!
அது ரமலான் மாதம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். 13.10.1764 அன்று கோட்டைக்குள் தனியறையில் அவர் தொழுதுக் கொண்டிருந்த போது துரோகிகள் நுழைந்திருக் கிறார்கள். தனது நம்பிக்கைக்குரியவர்கள் என்பதால் அவர் தயார் நிலையில் இல்லை. அவர்கள் பாய்ந்து மருதநாயகத்தை அமுக்கி பிடித்தனர். அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தொழுத நிலையில் இருந்த மருதநாயகத்தை சிறைபிடித்தனர்.
அந்த மாவீரன் அப்போது நம்பிக்கை துரோகிகளின் முகத்தை பார்த்துஎன்னை கொன்று விடுங்கள், எதிரிகளிடம் ஒப்படைத்து விடாதீர்கள்என்று கதறியுள்ளார். எதிரிகளிடம் அடிமைப்படுவதை, அவர் அப்போதும் விரும்பவில்லை. ஆம். மாவீரர்கள் மண்டியிடுவதில்லை! 700 வீரர்களின் பாதுகாப்புடன் கண்களை கட்டி, ஆற்காடு நவாபிடம் கொண்டு செல்லப்பட்டார். மருதநாயகம் கைதுக்கு பிறகு மூன்று நாட்கள் பட்டினி! அவரது மகனும், மனைவியும் திருச்சி சிறையில் பூட்டப்பட்டனர். அடுத்தநாள் மதுரை கோட்டையில் ஆற்காடு நவாபின் கொடி ஏற்றப்பட்டது.
விசாரணை
சிறைபிடிக்கப்பட்ட மருதநாயகத்தை சித்ரவதைப் படுத்தினார்கள். ஆற்காடு நவாபை பார்த்து தலை வணங்க சொன்னார்கள். முடியாது என மறுத்தார் மருதநாயகம்! உணவு தட்டுகளை எட்டி உதைத்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து பட்டினி! ஆனாலும் மானமும், வீரமும் அவருக்கு உரமேற்றின.
மருதநாயகத்துக்கு என்ன தண்டனை? என விவாதிக்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் தண்டனை எதுவுமில்லை என்றதும், ஆற்காடு நவாப் கோபமடைந்தார். அவரை தூக்கிலிடுங்கள் அல்லது என்னை கொல்லுங்கள் என அடிமை குரல் கொடுத்தார். ஆங்கிலெயர்களிடம் இருந்த நேர்மை, இரக்கம், கூட ஆற்காடு நவாபிடம் இல்லை. வேறு வழியின்றி ஆங்கிலேயர்கள் வரலாற்று பெருவீரனை தூக்கிலிட ஆணையிட்டனர்.
தூக்கு
15.10.1764 இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்! அன்று மதுரைக்கு மேற்கே உள்ள சம்மட்டிபுரத்தில் உள்ள ஒரு மாமரத்தில் தூக்கிலிட கொண்டுவரப்பட்டார், மருதநாயகம். அவர் அப்போதும் கலங்கவில்லை. அந்த காட்சிகளை வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கும்போது

மருதநாயத்தின் முகத்தில் பயம் இல்லை. விழிகளில் கலக்கமில்லை. தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்துறக்கிறோம் என்ற பெருமிதம் தெரிந்ததாக வரலாற்றுப் பக்கங்கள் பூரிக்கின்றன.
தூக்கிலிடப்பட்டதும் அவர் மரணிக்கவில்லை. மாறாக கயிறு அறுந்து விழுந்தது! அவர் உடலில் சதையும், எலும்புகளும், ரத்தமும் மட்டுமில்லை. தியாக குணமும், வீரத்தனமும் அல்லவா கலந்திருந் தது! எனவே, எடை தாங்கவில்லை!
புதிய கயிறு தயாரிக்கப்பட்டு மீண்டும் தூக்கிலிடப்பட்டார், அப்போதும் உயிர் பிரியவில்லை. “நான் யோகாசனம் பயின்றவன். கழுத்தை உப்ப வைத்து, பல மணிநேரம் மூச்சை அடக்கும் ஆற்றல் கொண்டவன்என்று தூக்கு கயிற்றில் சீறினார் மருதநாயகம். எதிரிகள் குலை நடுங்கினர்.
இறுதியாக, மூன்றாவது முறை நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் மாவீரனின் உயிர் பிரிந்தது. நாடு துயரில் மூழ்கியது! அன்று இரவு சில ஆங்கிலேய தளபதிகளின் கனவில் மருதநாயகம் வந்து மிரட்டியதாகவும் செய்தி பரவியது. அதன் பிறகு எங்கே; மீண்டும் உயிர் பெற்று எழுந்து விடுவாரோ என பயந்த ஆங்கிலேயர்கள் புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்தனர்.
தலை, கால், கை என பல பாகங்களாக வெட்டி யெடுக்கப்பட்ட அவர் உடல் பல்வேறு ஊர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டு அடக்கப்பட்டது. ஆம், செத்த பிறகும் மருதநாயகத்தின் உடலை கண்டு ஆங்கிலேயர்களும், துரோகி ஆற்காடு நவாப் முகம்மது அலியும் நடுங்கியுள்ளனர். வெட்டப்பட்ட உடல்களை பொதுமக்கள் பார்வைக்கும் வைத்துள்ளனர்!
அவரது உடலின் ஒரு பாகம் மதுரையருகே அவர் தூக்கிலிடப்பட்ட சம்மட்டி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இப்போதும் அவர் நினைவிடம் உள்ளது. அவரது தலை திருச்சியிலும், ஒரு கை தஞ்சாவூரிலும், இன்னொரு கை பெரியகுளத்திலும், ஒரு கால் திருவிதாங்கோட்டிலும், இன்னொரு கால் பாளையங்கோட்டையிலும், உடல் மதுரையிலும் அடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இரண்டாண்டுகள் ஆங்கிலேயர்களை தூங்கவிடாமல் செய்தவன், ஷஹீதாகி மீள முடியாத உறக்கத்தில் ஆழ்ந்தான்…! தாய் நாட்டிற்காக தன்னுயிர் தந்த, தலைவனின் உடல் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டதை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விழிகள் கலங்குகின்றன. இந்த தியாகத்தை யாராவது போற்றுகிறார்களா? நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறதே?
மதுரை விமான நிலையத்திற்கு மருதநாயகம் பெயர்!
மருதநாயகத்தின் வீரம் இந்திய வரலாற்றில் போற்றத்தக்கது மட்டு மின்றி நிகரற்றதுமாகும். இந்தியாவில் வேறு யாரையும் கண்டு இந்த அளவுக்கு ஆங்கிலேயர்கள் நடுங்கியதில்லை. திப்பு சுல்தானை மட்டுமே இவரோடு ஒப்பிட முடியும்.
இவரது வீர மரணத்திற்கு பிறகு, தமிழகம் முழுவதுமாக ஆங்கிலேயர் கட்டுப்பாட்டிற்கு வந்தது. பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர் களும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரை நிறுத்திக் கொண்டு, எஞ்சிய பகுதிகளை மட்டுமே, ஆள முடிவு செய்தனர். மருதநாயகத்தின் படை வீரர்களில் பெரும்பாலோர் சரணடைய மறுத்து மைசூர் சென்று ஹைதர் அலியுடன் சேர்ந்து கொண்டனர். 16 ஆண்டுகள் கழித்து அவரது மகன் சுல்தான் திண்டுக்கல்லில் இருந்தவாறு, படை திரட்டி போராட முயன்றதாக சில வரலாற்று குறிப்புகள் உள்ளன. (நன்றி : இந்திய விடுதலைப் போரில் வீரமிகு முஸ்லிம்கள் செ.திவான்)
ஹிஜ்ரி 1222, (கிபி 1808) ல் கான்சாஹிப் பெயரில் சம்மட்டிபுரத்தில் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டது. இது தமிழிலும், பார்ஸி மொழியிலும் அங்குள்ள கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
மதுரை ஏர்போர்ட் 
மதுரைஏர்போர்ட்  
அந்த மாவீரனை போற்றும் வகையில் தமிழக அரசு காவல்துறைக்கு வழங்கும் விருதுகளில் ஒன்றுக்கு மருதநாயகத்தின் பெயரை சூட்ட வேண்டும். மதுரையில் உருவாகி வரும் சர்வதேச விமான நிலையத்திற்கும் அவர் பெயரை சூட்டி அந்த வீரத்தமிழனை கண்ணியப்படுத்த வேண்டும்! முயற்சிப்பார்களா?

ur brother
ரஹ்மான் FAYED ./....