Thursday, November 29, 2018

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு சென்றவர்கள் திரும்பியதி்ல்லை

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு :  திகிலூட்டும் உண்மைகண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும் அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள் இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற துர்கானா ஏரி கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால் ஒரு பகுதி ஆவியாகிறது.

மீதமுள்ள நீர் அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக் கடல் திகழ்கிறது. குட்டி குட்டி தீவுகளும்இ பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அட்ராக்ஷனோடு நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளன.

இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்று என்வைட்டினெட். இங்கு வாழும் பழங்குடியின மக்கள் பேசும் மொழி சொல். இதன் அர்த்தம் Ôதிரும்ப வராதுÕ என்பதாகும். என்வைட்டினெட் தீவுக்குள் செல்பவர்கள் யாரும் திரும்பி வருவது கிடையாதாம். அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் இந்த தீவு உள்ளது.

முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்துக்கு தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். வியாபாரத்துக்காக பக்கத்து தீவுகளுக்கு வருவார்களாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர்ம தீவாக மாறியது என்வைட்டினெட்.

கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ் பில் டேசன் ஆகியோரை அனுப்பி வைத்தார் விவியன். நாட்கள்தான் போனதே தவிர விஞ்ஞானிகள் திரும்பியபாடில்லை.

 இதனால் அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை செய்தனர். ஹெலிகாப்டரில் பறந்தபடியே வேவு பார்த்தனர். எந்த தடயமும் கிடைக்கவில்லை. பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை.

இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம் தகவல்கள் சேகரித்தார். ‘அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள் என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர்.

பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி வருகிறது அது மனிதர்களை எரித்து விடுகிறதா அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியனுக்கு விடை கிடைக்கவில்லை.

இந்த தீவுக்கும் வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்துள்ளது. இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும் கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும் மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மர்ம முடிச்சுகள் எதுவும் இன்னும் அவிழவில்லை. 

குங்ஃக்பூ என்றால் ப்ரூஸ்லீ

குங்ஃக்பூ டிராகன் என்றால் ப்ரூஸ்லீ 


ப்ரூஸ்லீ என்றாலே நினைவிற்கு வருவது குங்ஃக்பூ, டிராகன் மற்றும் அவரது தற்காப்பு கலை. இன்றும் குங்ஃக்பூ மற்றும் கராத்தேவிற்கு வித்தியாசம் தெரியாதவர்களுக்கு கூட, தனது வித்தியாசமான கத்தும் சப்தத்துடன் ப்ரூஸ்லீ எதிராளியை உதைத்து வீழ்த்தும் முறை நன்கு தெரியும். அந்த கத்தல் ப்ரூஸ்லீயின் இலட்சினை என்றே கூறலாம்.
எப்போதெல்லாம் தோன்றுகிறது, அப்போதெல்லாம் தேடி பார்த்து குதுகலிக்க இன்று யூடியூப் இருக்கிறது. ஆனால், பத்து, இருபது வருடங்களுக்கு முன்னர் அப்படி இல்லை. கேசட், வி.சி.டி வாங்கி பார்க்க வேண்டும். இல்லையேல், கேபிள் லைன் கொடுக்கும் அண்ணனிடம் ப்ரூஸ்லீ படம் போடுங்க என அடம்பிடிக்க வேண்டும்.

பிறகு, சில தமிழ் மொழி சேனல்களில் ஆங்கில மற்றும் வேறு மொழிப் படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பியது எல்லாம் சொர்க்கமான காலம் என குறிப்பிடலாம். இந்த வாரம் ப்ரூஸ்லீ வாரம் என்றால் சிலரை கையிலேயே பிடிக்க முடியாது.





உச்ச நாயகன்!

மிக குறைந்த காலத்தில் உச்சம் தொட்ட நாயகன். மிக குறைந்த வயதிலேயே மரணம் அடைந்து தனது உலக ரசிகர்களை அதிர்ச்சிக்குள் ஆக்கினார். இவரது திடீர் மரணத்தை சுற்றி பல மர்மங்கள் இருந்தன. இவரது மரணத்திற்கான உண்மை காரணம் என்ன என்பது இன்று வரை தெளிவுப் படாமல் இருந்தது. அதற்கான விடை இப்போது கிடைத்துள்ளது.

வேகம்!


வேகம்!

ப்ரூஸ்லீயின் வேகத்திற்கு ஈடிணையாக இன்று வரை யாரும் பிறக்கவில்லை என்று தான் கூறவேண்டும். தற்காப்பு கலை பயின்றவராக இருப்பினும், அந்த கலையின் அடிப்படையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தி அதன் மூலமாகவே பல திகைப்பூட்டும் செயல்கள் நிகழ்த்தினார் ப்ரூஸ்லீ.

இயற்பெயர்!


இயற்பெயர்!

ப்ரூஸ்லீயின் நீண்ட நாள் ரசிகர்ளுக்கு கூட அவரது உண்மையான பெயர் என்னவென்று தெரியாது. ப்ரூஸ்லீயின் இயற்பெயர் லீ ஜுன்-ஃபேன் என்பதாகும். ப்ரூஸ்லீ தற்காப்பு கலைகளில் மட்டும் கைதேர்ந்தவர் அல்ல. இவர் ஒரு சிறந்த கவிஞரும் கூட. மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே இவர் எத்தனை புலமை வாய்ந்த கவிஞர் என்பது தெரியும்.

ஒன்-இன்ச்-பன்ச்!

 

ஒன்-இன்ச்-பன்ச்!

ப்ரூஸ்லீயின் பல அடிகள் விசித்திரமாக இருக்கும். அதில் மிகவும் பிரபலாமான ஒன்று ஒன்-இன்ச்-பன்ச். வெறும் ஒரு அங்குல இடைவேளையில் தனது எதிராளியை அடித்து வீழ்த்தும் வித்தையை கற்றிருந்தார் ப்ரூஸ்லீ. இதை முதன் முதலாக 1968ல் கலிபோர்னியாவின் லாங் பீச்சில் நடந்த சர்வதேச கராத்தே டோர்னமென்ட்டில் நிகழ்த்தி பார்வையாளர்களை, போட்டியாளர்களை அசத்தினார் ப்ரூஸ்லீ. இதன் மூலம் மிக குறுகிய காலத்தில் மிகவும் பிரபலாமானார் ப்ரூஸ்லீ.

எதிர்பாராதது...


எதிர்பாராதது...

ப்ரூஸ்லீயால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதற்கு அவரது நுன்ஜாக் கலையே சான்று. தனது இந்த திறமையின் மூலம் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளார் ப்ரூஸ்லீ.
ஆனால், ஓர் மாலை திடீரென ப்ரூஸ்லீ இறந்துவிட்டார் என வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என சந்தேகித்தனர்.
வளர்ச்சி!

மர்மம்!


மர்மம்!

ப்ரூஸ்லீயின் காதலியே அவருக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டார் என்றும். சீனாவை சேர்ந்த ஒரு இரகசிய ஏஜென்சி தான் ப்ரூஸ்லீயை கொன்றது என்றும், ப்ரூஸ்லீயின் வளர்ச்சியை விரும்பாத ஹாலிவுட் வட்டாரத்தில் இருந்து சிலர் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன் விளைவே ப்ரூஸ்லீயின் மரணம் என்றும், பல மர்மங்களும், புரளிகளும் பல காலம் நீடித்திருந்தது.

உண்மை காரணம்!


உண்மை காரணம்!

ஆனால், ப்ரூஸ்லீயின் மரணத்திற்கு உண்மையான காரணமாக அறியப்படுவது அவரது பெருமூளை வீக்கம் (Cerebral Edema). ஆம்! பலமுறை ப்ரூஸ்லீ திரைப்படப் படப்பிடிப்பு தளங்களில் மயங்கி விழுந்துள்ளார். ப்ரூஸ்லீக்கு பெருமூளை வீக்கம் என்ற பிரச்சனை இருந்துள்ளது. அடிக்கடி ப்ரூஸ்லீக்கு தலைவலி ஏற்பட்டு வந்துள்ளது.


விளைவுகள்!


விளைவுகள்!

இந்த பெருமூளை வீக்கம் இருக்கும் நபர்களுக்கு அவ்வப்போது மூச்சுத் திணறல் ஏற்படும். திடீரென அவர்களிடம் அசௌகரியமான மாற்றங்கள் தென்படும். கட்டுக்கடங்காத தலைவலி ஏற்படும். சில நேரங்களில் நீடிக்கும் தலைவலி, அந்த நபரை மயக்கம் அடையவும் செய்யலாம்.

அன்றைய நாள்...


ன்றைய நாள்...

ப்ரூஸ்லீ மரணம் அடைந்த அந்த நாளில்... ரேமான்ட் சோ எனும் ஹாங்காங்கை சேர்ந்த தயாரிப்பாளரை சந்தித்தார். அவருடன் தனது அடுத்த படமான கேம் ஆப் டெத் என்ற படத்தைப் பற்றி விவாதம் நடத்திவிட்டு மாலை 4 மணியளவில் வீடு திரும்பினார் ப்ரூஸ்லீ.

தலைவலி!


தலைவலி!

வீடு திரும்பியதும் ப்ரூஸ்லீக்கு மீண்டும் தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டது. வலி குறையவே இல்லை. அப்போது ப்ரூஸ்லீயுடன் தங்கியிருந்த நடிகை பெட்டி டிங் பீ அவருக்கு ஆஸ்பிரின் மற்றும் மெப்ரோபாமாட் கலப்பு கொண்ட ஒரு வலிநிவாரணி மருந்தினை கொடுத்தார்.

எழுந்திருக்கவில்லை...


எழுந்திருக்கவில்லை...

அன்றைய தினம் இரவு ஜேம்ஸ்பாண்ட் புகழ் ஆங்கிலேயே நடிகர் ஜார்ஜ் லஸென்ஸ்பிஉடன் இரவு உணவு அருந்த திட்டமிட்டிருந்தார் ப்ரூஸ்லீ. ப்ரூஸ்லீயும், இவரும் ஆங்கிலத்தில் ஒரு படம் எடுக்க விவாதம் நடத்தவும் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அன்று மாலை மருந்தை உட்கொண்டு படுத்த ப்ரூஸ்லீ எழுந்திருக்கவே இல்லை.

பரிசோதனை!


பரிசோதனை!

ப்ரூஸ்லீயை உடனே குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கே ப்ரூஸ்லீயை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மரணம் அடைந்துவிட்டார் என கூறினார்கள். பிரேத பரிசோதனை அறிக்கையில் ப்ரூஸ்லீக்கு மூளை வீக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் உட்கொண்ட மருந்தின் அலர்ஜியின் காரணத்தால் மூளை 13% வீக்கம் அடைந்து அவரது மரணத்திற்கு காரணமாகியுள்ளது என கூறினார்கள்.
லெஜண்ட்!


லெஜண்ட்!

ப்ரூஸ்லீ இறந்து ஏறத்தாழ 45 ஆண்டுகள் ஆகிறது. இன்றும் சினிமா ரசிகர்ளுக்கு டிராகன் என்றால் ப்ரூஸ்லீ என்ற பெயரே நினைவிற்கு வரும். இவ்வுலகில் தலைசிறந்த திறமைசாலிகள் யாரும் நீண்ட வருடம் வாழ்ந்ததில்லை. அதற்கு ப்ரூஸ்லீயும் ஒரு எடுத்துக்காட்டு.

Monday, November 19, 2018

பிரிட்டிஷாரை ஓடவிட்ட இளைஞன்.. கொரில்லா படையை வைத்து செய்த சூர சாகசம்.. யார் இந்த பிர்ஸா முண்டா!

சென்னை: தமிழகம் முழுக்க தற்போது பிர்ஸா முண்டா பெரிய அளவில் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளார். இவரின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்க கூடிய ஒன்று.
இயக்குனர் பா.ரஞ்சித், பிர்ஸா முண்டாவின் வாழ்க்கையை படமாக எடுக்க போகிறார் என்று செய்தி வந்ததும் யார் இவர், யார் இவர் என்று எல்லோரும் தேட தொடங்கிவிட்டார்கள். அப்படி இணையத்தில் தேடிய பலருக்கு நிறைய கதைகள், நிறைய விவரங்கள் கிடைத்து இருக்கும்.
இந்த ஆதிவாசி புரட்சியாளனுக்கு பின் நிறைய சாகச வரலாறும், சோக கதையும் இருக்கிறது. 24 வயதில் இறந்து போன இவரின் மரணம் கூட இப்போது வரை சர்ச்சையாகத்தான் இருக்கிறது.
எங்கு பிறந்தார்

எங்கு பிறந்தார்

நவம்பர் 15ம் தேதிதான் பா. ரஞ்சித் இந்த படத்தை இயக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதே நாளில்தான் பிர்ஸா முண்டா 1875ல் பிறந்தார். குந்தி மாவட்டத்தில், தற்போது இருக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அருகில் உலிஹாட்டு என்று கிராமத்தில் பிறந்தார் இவர். முண்டா என்ற ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர். அதே பகுதியில் நிறைய வேறு ஆதிவாசி குழுக்களும் இருந்தது.
மாற்றம்

மாற்றம்

ஆதிவாசி குழுவில் பிறந்த இவருக்கு தொடக்கத்தில் இருந்தே பெரிய அளவில் படிக்க வேண்டும் என்று ஆசை. இவர்களின் இனக்குழு பல்வேறு அரசியல் காரணங்களால் தொடர்ந்து இடம் மாறி இடம் மாறி கடைசியாக அதே மாநிலத்தில் உள்ள சால்கட் என்று காட்டுப்பகுதியில் குடியேறியது. அங்குதான் அவர் அதிக வருடம் வசித்தது.
கிறிஸ்துவம் எப்படி?

கிறிஸ்துவம் எப்படி?

இவரின் ஆசிரியர் ஜெய்பால் நாக்கின் அறிவுரையின் பேரில் இவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். பிர்ஸா முண்டா ஆசைப்பட்டபடி அப்போதுதான் படிக்க முடியும் என்று இவர் மதம் மாறினார். அதன்பின் ஜெர்மன் மிஷன் பள்ளியில் சேர்ந்து படிக்கவும் தொடங்கினார். ஆனால் இந்த மத மாற்ற விஷயம் இவருக்கு பெரிய உறுத்தலாகவே இருந்தது.
மதங்களை உணர்ந்தார்

மதங்களை உணர்ந்தார்

இவர் அந்த ஜெர்மன் பள்ளியில் படிக்க படிக்க, ஆங்கிலேயர்கள் மக்களை எப்படி எல்லாம் அடிமை படுத்துகிறார்கள் என்று தெரிந்து கொண்டார். இதில் மத மாற்றமும், நில உரிமையும் எப்படி எல்லாம் பெரிய பிரச்சனை செய்கிறது என்று தெரிந்து கொண்டார். இதனால் அந்த பள்ளியைவிட்டு வெளியேறினார். அதோடு கிறிஸ்துவ மதத்தை விட்டு வெளியேறுவதாகவும் அறிவித்தார்.
தனி இனக்குழு

தனி இனக்குழு

இதையடுத்து ஆதிவாசி மக்களை உள்ளடக்கிய பிர்சாய்த் என்ற இனக்குழுவை உருவாக்கினார். இதில் பல ஆதிவாசி மக்கள் வந்து இணைந்தனர். கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பலர், அந்த மதத்தைவிட்டுவிட்டு இதற்கு மாறினார்கள். இதுதான் முதல் முதலாக ஆங்கிலேயர்களுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை அளித்தது. பிர்ஸா முண்டா அப்போதுதான் குறிவைக்கப்பட்டார்.
சர்தார் படை

சர்தார் படை

ஆனால் மதம் மட்டுமே இவரின் போராட்டம் கிடையாது. தன்னை சுற்றி நடக்கும் அரசியல் மாற்றங்களை கவனித்து வந்த பிர்ஸா முண்டா, 1885களில் நடந்த சர்தார் மக்களின் போராட்டம் குறித்தும் தெரிந்து கொண்டார். அந்த மக்கள் ஆங்கிலேயே அரசுக்கு எதிராக போராடியது இவருக்கு உத்வேகத்தை கொடுத்தது. இதன் பின்தான் இவர் தன் ஆதிவாசி மக்களுக்காக போராட வேண்டும் என்று முடிவெடுத்தார்.
ஜமீன்தாருக்கு எதிரான போராட்டம்

ஜமீன்தாருக்கு எதிரான போராட்டம்

ஆனால் ஆதிவாசி மக்கள் ஆங்கிலேயர்களால் மட்டும் அடிமைப்பட்டு கிடக்கவில்லை. அங்கிருந்த 50 ஜமீன்தார்கள் ஆயிரத்திற்கும் அதிகமான ஆதிவாசி கிராமங்களை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர். போராட வேண்டும் என்றால் இவர்கள் எல்லோருக்கும் எதிராகத்தான் போராட வேண்டும் என்று முடிவெடுத்தார். ஆங்கிலேயர்கள், உயர் சாதியினர், ஜமீன்தார்கள் என்று பெரிய படைகளை எதிர்த்து எழுந்தார் அந்த சிறிய இளைஞன் பிர்ஸா முண்டா.
நிலமே அவரின் உரிமை

நிலமே அவரின் உரிமை

நிலமே எங்கள் உரிமை என்று காலாவில் வரும் பாடல் வரிதான் இவரின் அரசியல் கொள்கையும். ஆதிவாசி மக்கள் தங்கள் பூர்வீக நிலங்களை மீட்டு எடுக்க வேண்டும் என்றுதான் இவர் போராட தொடங்கினார். நிலப்பிரபுத்துவம், மக்கள் அடிமையாக இருப்பது என பல விஷயங்களுக்கு எதிராக தன் மக்களை திரட்டினார்.
வீர படை

வீர படை

எந்த அளவிற்கு திரட்டினார் என்றால், இவர் உருவாக்கிய கொரில்லா படையில் 1000க்கும் அதிகமான இளைஞர்கள் இருந்தனர். பாரம்பரிய ஆயுதங்களை தாங்கி இவர்கள் போராட தயாரானார்கள். இந்த படைக்கு ''உல்குலான்'' படை என்று பெயர். இதை பெரும் கலகம் விளைவிக்கும் படை என்று கூறலாம். கொரில்லா தாக்குதல் முறையை இவர்கள் கடைபிடித்தனர்.
கொரில்லா தாக்குதல்

கொரில்லா தாக்குதல்

இவர்கள் தாக்காத அரசு அலுவலகங்கள் கிடையாது. ஆணவத்தில் எழும்பி நின்ற பல ஜமீன்தார் கோட்டைகளை இவர்கள் படை தகர்த்து இருக்கிறது. பல ஆங்கிலேயே போலீஸ் படைகளின் உயிர்களையும் பலி கேட்டு இருக்கிறது இந்த இளம் இளைஞர் படை.
போராட்டம் செய்தார்

போராட்டம் செய்தார்

இவர்கள் தாக்குதல் நடத்திய அதே சமயத்தில் அரசுக்கும் ஜமீன்தாருக்கும் எதிராக போராட்டமும் செய்தனர். 1894ல் தொடங்கி பல வருடம் இவர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். ஓரான், முண்டாசு, காரியாஸ் என்று பல இனக்குழுக்களை இணைத்து போராட்டம் நடத்தினார் பிர்ஸா முண்டா.
மிகப்பெரிய தாக்குதல்

மிகப்பெரிய தாக்குதல்

1987 ஆகஸ்ட் மாதம் இவரின் படை குந்தி பகுதியில் பெரிய தாக்குதல் நடத்தியது. 400 பேர் கொண்ட படை அங்கு நுழைந்த ஜமீன்தார் வீடுகளிலும், போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியது, இது பெரிய போர் போல நடந்தது. இதில் அங்கிருந்து பிரிட்டிஷ் படைகளை வீழ்த்தி பிர்ஸா முண்டா ஓடவிட்டார். அதன்பின் அந்த வருடம் முழுவதும் இப்படி நடத்திய தாக்குதலில் எல்லாம் பிரிட்டிஷ் படை பின்வாங்கியது. இதன் பின் கைது செய்யப்பட்ட இவர் 2 வருடம் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.,
மதம் பற்றி

மதம் பற்றி

இவர் எந்த அளவிற்கு நில சீர்திருத்தம், விடுதலை மீது நம்பிக்கை கொண்டாரோ, அதேபோல் மத சீர்திருத்தம் பற்றியும் பேசினார். இவர் கிறிஸ்துவத்தை எதிர்த்தாலும் இந்து மதத்தை எங்கும் ஆதரிக்கவில்லை. இவர் தாய்மதத்திற்கு திரும்ப வேண்டும், இந்து, கிறிஸ்துவம் இல்லாமல் இயற்கையை வழிபடும் ஒற்றை இயற்கை கடவுள் கொண்ட ஆதிவாசி மதத்திற்கு திரும்ப வேண்டும் என்றார். மூட நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். மது குடிப்பதை, விலங்குகளை கடவுளுக்கு காணிக்கை அளிப்பதை எதிர்த்தார். மக்கள் மத்தியில் தலைவனாக மாறினார்.
மரணம் அடைந்தார்

மரணம் அடைந்தார்

இவர் செய்த புரட்சிகளை பொறுத்துக் கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள் இவரை 1900 மார்ச் மாதம் கைது செய்தனர். ராஞ்சி ஜெயிலில் இவர் அடைக்கப்பட்டார். அதன்பின் இவர் 1900 ஜூன் 9ம் தேதி மரணம் அடைந்தார். இவர் மரணத்தில் இப்போதும் மர்மம் நிலவுகிறது. ஆங்கிலேயே அரசு இவர் காலரா வந்து இறந்தார் என்றது, ஆனால் அவரின் படையினர் இவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்கிறது. இதன் மர்மம் இன்னும் முடிவிற்கு வரவே இல்லை. இறந்த போது இவருக்கு 24 வயதுதான்.
கதைகள்

கதைகள்

இவர் அம்மாநில நாட்டுப்புற கவிதைகளில்,கதைகளில், பாடல்களில் இன்னும் ஹீரோவாக வழிபட படுகிறார். இவருக்காக கோவில்களும் கூட உள்ளது. இவரே தன்னை கடவுளின் தூதுவன் என்று ஒருமுறை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிவாசி மக்களுக்கு இப்போது இவர்தான் தெய்வம்.
 அரசு மரியாதை

அரசு மரியாதை

இவரை அம்மாநில அரசு தூக்கி வைத்து கொண்டாடுகிறது. பிர்ஸா முண்டா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னலாஜி, பிர்ஸா முண்டா விவசாய பல்கலைக்கழகம், பிர்ஸா முண்டா ஸ்டேடியம், பிர்ஸா முண்டா விமான நிலையம், பிர்ஸா முண்டா ஜெயில் என்று நிறைய அரசு கட்டிடங்கள் இவர் பெயரில் திறக்கப்பட்டு இருக்கிறது. இத்தனை புகழ்கள் கொண்ட இவரின் வாழ்கை வரலாற்றைத்தான் பா.ரஞ்சித் படமாக எடுக்கிறார்.