Saturday, October 31, 2015

நாம் ஒன்றாவோம்; எல்லாம் மாறும்..!

நாம் ஒன்றாவோம்; எல்லாம் மாறும்..!

இந்து - முஸ்லிம் ( பாய் பாயோ ) என்று ஹிந்தியில் சொல்வதுபோல இரு தரப்பினர்களும் என்றும் அண்ணன் தம்பிகள்தான் மும்பை கொலாபா எனும் பகுதியில் கடந்த 24/09/2015 அன்று பெருநாள் தொழுகைக்கு இடம் போதாதால் கணபதி பந்தல் இடத்தில் தொழுதுக் கொள்ளும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் அனுமதித்துள்ளனர் வாழ்க மனிதநேயம்.


பீட்டர்ஸ் சர்ச் நிர்வாகஸ்த்தார் சார்பாகவும் பெருநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

அதே போன்று கடந்த வருடங்களில் ரமலான் மாதங்களில் அவர்கள் சார்பாக வாழ்த்தியதை இந்த வீடியோ மூலம் காணலாம்.

இங்க ரெண்டு படங்கள் இருக்கு...

முதலில் உள்ளது மன்னர் சுல்தான் சலாகுதீன் அய்யூபி அவர்கள் ஜெருசலத்தை கிருத்துவ மன்னர்கள் பிடியில் இருந்து மீட்ட பிறகு, முதன்முதலாக அங்கிருக்கும் பள்ளிவாசலின் வளாகத்துக்குள் அவர் நடக்கையில், அங்கு கிருத்துவர்களால் அந்த தரையில் பதிக்கப்பட்டு இருந்த சிலுவை பொரித்த கல்லை மிதிக்காமல் சற்று விலகி நடந்து சென்றார்கள்..!


இரண்டாவது அமெரிக்காவில் ஹாலிவூட், ஹால் ஆப் பேம் என்னும் இடத்தில் பிரபலமானவர்கள் பெயர்கள் தரையில் பதிக்கப்படும், அங்கு குத்துச்சண்டை வீரர் முகமது அலி அவர்கள் பெயரை மட்டும் தரையில் பொரிக்காமல் அந்த கல்லாய் மட்டும் சுவற்றில் பதித்துள்ளனர். ஏனெனில் அவரது பெயரில் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பெயர் வருவதால்..!


இரண்டும் வேறு வேறு காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள். ஆனால் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. அரபியும் வெள்ளைக்காரனும் இத்தனை சகிப்புத் தன்மையோடு வாழ்கையில், உலகத்துக்கே கலாசாரத்தை போதிக்கும் நம்மால் சகோதரத்துவத்துடன் வாழ முடியாதா என்ன..? பொய்யை பரப்பி நமக்குள் சண்டை மூட்டும் ஒவ்வொருவனையும் ஒதுக்கிவிட்டு...


...நாம் ஒன்றாவோம்; எல்லாம் மாறும்..!

நன்றி.

சுல்தான் சலாகுதீன்

Thursday, October 29, 2015

பேய்களை உணர முடிவது எப்படி..!? - அறிவியலாளர்கள் விளக்கும் 10 காரணகள்..!

பேய்களை உணர முடிவது எப்படி..!? - அறிவியலாளர்கள் விளக்கும் 10 காரணகள்..!


கரண்ட் போனால் போதும் பக்கதில் யாரோ நிற்பது போன்று தோன்றும், தூங்கலாம் என்று 'லைட் ஆஃப்' செய்துவிட்டு, ஜன்னல் வழியே பார்த்தால் தூரத்தில் யாரோ நின்று நம்மையே வெறிக்க பார்ப்பது போல தோன்றும், சில நேரம் நம் நிழலே நம்மை பயமுறுத்தும். இப்படியாக பேய்கள் மற்றும் ஆவிகள் பற்றிய அச்சம், சந்தேகம், நம்பிக்கை, பீதி - நம் எல்லோரிடத்திலும் பொதுவாகவே உண்டு..! 

அதிர்ச்சி : செவ்வாய் கிரகத்தில் 'நடமாடும்' பெண் உருவம்..! உங்கள் கண்களுக்கு மட்டும் பேய்களும், ஆவிகளும், விசித்திரமான நிழல்களும் தெரியக் காரணம் என்ன என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்..!

ஆராய்ச்சி : 
பேய்கள் சார்ந்த ஆராய்ச்சியில் அனுதினமும் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு கொண்டே தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது..!

தொழில்நுட்ப உதவி : 

ஆவிகள் பற்றி 1840 மற்றும் 1850-களில் கண்டுப்பிடிக்கப்படாத உண்மைகள் இப்போது கண்டுபிடிக்கப்பட காரணம் தொழில்நுட்ப உதவியால் தான் என்பதை யாரும் எளிதில் மறுத்துவிட இயலாது..!

பேய் மற்றும் ஆவி : 

அப்படியாக 45% மக்கள், பேய் மற்றும் ஆவிகளை நம்புகின்றனர் என்கிறது ஒரு கணக்கெடுப்பு..!

நிஜம் : 

ஆனால், பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் தான் என்பது தான் நிஜமாம்..!

அறிவியல் விளக்கங்கள் : 

பேய்களையும், ஆவிகளையும் நாம் பார்ப்பது, உணர்வது, எதிர் கொள்ளுவது ஆகியவைகளுக்கு நிஜமான காரணங்களாக சில அறிவியல் விளக்கங்களை தருகிறது ஒரு ஆய்வு..!

ஆய்வு : 
மேலும் அந்த ஆய்வு, பேய்கள் சார்ந்த விந்தைகளுக்கான தெளிவான 10 அறிவியல் காரணங்களையும் வழங்கியுள்ளது..!

காரணம் 01 : 

திடீரென்று நம் கண்களுக்கு தோன்றி மறையும் நிழல் உருவங்கள் போன்ற நிகழ்வுகள் நடக்க காரணம், நம் மூளையின் ஒரு வகையான மின்சார தூண்டல் தானாம் (Electric Stimulation Of The Brain)..!

காரணம் 02 : 

ஆவிகளுடன் நடத்தப்படும் உரையாடல்களின் போது நமக்கு கிடைக்கும் பதில்களுக்கு காரணம் பேய்களோ ஆவிகளோ இல்லை - இடியோமோட்டார் எஃபெக்ட் (Ideomotor Effect) தான் காரணம்..!

விளைவு தன்னை அறியாத நிலையில் ஏற்படும் உடல் அசைவுகள் சார்ந்த விளைவுகளை தான் இடியோமோட்டார் எஃபெக்ட் என்பர்..!

காரணம் : ஆவிகளுடன் தொடர்பு கொள்ள பெரிதளவில் பயன்படுத்தப்படும் ஓவ்ஜா போர்ட்டில் (Ouija board) நம் கைகள் தானாக நகர்வதற்கும் அசைவதற்கும் காரணம் இந்த விளைவு தானாம்..!

காரணம் 03 : 

தானாக ஒரு பொருள் அசைகிறது என்றால் அதற்கு காரணம் ஏதோ ஒரு ஆவியின் சக்தி என்று நினைத்து விடாதீர்கள், அதற்கு காரணம் - இன்ஃப்ரா சவுண்ட் (Infrasound)..!

சப்தம் : அதாவது மனித காதுகளால் 20,000 ஹெர்ட்ஸ் (Hertz) வரையிலான சப்தங்களை மட்டும் தான் கேட்க முடியும். அதற்கு கீழ் இருக்கும் ஒலிகளை நம்மால் கேட்க முடியாது.

அதிர்வு : அதாவது 20 ஹெர்ட்ஸ் ஒலியை நம்மால் கேட்க முடியாது, ஆனால் அதை அதிர்வுகளாய் உணர முடியும், அப்படியான அதிர்வுகளால் தான், சில பொருட்கள் தானாக அசைய காரணமாகும்..!

அதிகம் ஏற்படும் : பொதுவாக புயல் பலமான காற்று, வானிலை மாற்றம் போன்றவைகளால் இன்ஃப்ரா சவுண்ட் அதிர்வுகள் அதிகம் ஏற்படுமாம்..!

காரணம் 04 : 
உங்களுக்கு வரும் ஆவிகள், பேய்கள் சார்ந்த ஆழ்ந்த சிந்தனைகள் மற்றும் கனவுகளுக்கு காரணம் - ஆட்டோமட்டிஸம் (Automatism)..!

மறந்த நிலை : அதாவது அதீதமான தன்னை மறந்த நிலையில் கற்பனைகளும், எண்ணங்களும் வேறொரு வழியாக நம்மில் நுழையும் விளைவு தான் ஆட்டோமட்டிஸம் எனப்படும்..!

காரணம் 5 : 
குறிப்பிட்ட அறையின் இடம் மட்டும் குளிர்ச்சியாக இருக்க காரணம், அங்கு ஏதோ ஆத்மா இருக்கிறது, பேய் வல்லுநர்கள் சொல்லும் 'கோல்ட் ஸ்பாட்' (Cold spot) என்று நினைக்க வேண்டாம் அது - டிராஃப்ட் (Draft) ஆகும்..!

அறை : அதாவது, அடைத்தே கிடக்கும் அறைக்குள் இருக்கும் ஒவ்வொரு பொருள்களுக்கும் தனிப்பட்ட உஷ்ணநிலை இருக்கும். ஏதாவது சிறு வழியாக சில்லென்ற காற்று நுழையும் போது சக உஷ்ண நிலையோடு இணையாத குறிப்பிட்ட அந்த இடம் மட்டும் குளிர்ச்சியாய் தோன்றுமாம்.!

காரணம் 6 :

கேமிராக்குள் தூசி படிந்தால் எடுக்கும் புகைப்படங்களில் நிழல் உருவங்கள் அல்லது தெளிவற்ற உருவங்கள் தெரிவது சகஜம். அதை ஆவி, பேய் என்று நினைக்க கூடாது..!

காரணம் 7 : 
பாழ் அடைந்த பங்களாவிற்குள் சென்றவர் ஒருவேளை மரணம் அடைந்தால் அல்லது மாபெரும் குழப்பததிற்கு ஆள் ஆனால் அதற்கு காரணம் ஆவிகளோ அல்லது பேய்களோ இல்லை - கார்பான் மோனாக்சைட் பாய்சனிங் (Carbon Monoxide Poisoning)..!

மரணம் வரை : மிக காலமாய் அடைக்கப்பட்டு கிடக்கும் இடத்தில் கார்பான் மோனாக்சைட் உருவாவது சகஜம்தான். அது சுவாசக் காற்றுக்கு பதில் உள் சென்றால் மயக்கம், குழப்ப நிலை, அதிக பட்சமாக மரணம் வரை கொண்டு செல்லும்.

காரணம் 08 : 

நிஜமாகவே உங்கள் கண்ணுக்கு ஒன்றுமே தெரியாது, ஆனால் பல பேர் சேர்ந்து பேய், ஆவி, ஆத்மா என்று சொல்லும் போது உங்களால் அதை உணர முடியும். அது நிஜமான ஆவி இல்லை அந்த விளைவின் பெயர் - மாஸ் ஹிஸ்ட்டிரியா (Mass Hysteria)..!

காரணம் 09 : 

சில குறிப்பிட்ட இடங்களில் நாம் பலவீனாமாக உணர்வோம். அதற்கு காரணம் அங்கே ஆவிகளின் சக்தி அதிகம் என்று அர்த்தமில்லை - அதற்கு காரணம் ஐயன்ஸ் (Ions)

பலவீனம் : ஐயன்கள் இயற்கையாகவே வானிலை மாற்றங்கள் மூலம் உருவாகும் ஒன்றாகும். நெகடிவ் ஐயன்கள் (Negative Ions) நமக்கு அமைதியையும், ஓய்வையும் தரும், பாசிடிவ் ஐயன்கள் (Positive Ions) தலைவலி மற்றும் உடல் பலவீனத்தை தரும்..!

காரணம் 10 : 

நாம் இறந்து விட்டதை போலவும், நம் உயிரற்ற உடலை நாமே பார்ப்பது போன்றும் நமக்கு 'நிஜம் போன்ற' கற்பனை எண்ணங்கள் வர காரணம் பேய் உலகம் சார்ந்த விடயமல்ல - அது மூளைக்குள் ஏற்படும் க்வான்ட்டம் மெக்கானிக்ஸ் விளைவாகும் (Quantum Mechanics)


Friday, October 23, 2015

உலகை உலுக்கிய 'பறக்கும் தட்டு'மிகவும் நம்பகமான 10 சம்பவங்கள்..!

உலகை உலுக்கிய 'பறக்கும் தட்டு' நம்பகமான 10 சம்பவங்கள்..!உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களையும், மாபெரும் தொலைநோக்கிகளையும் பயன்படுத்தி அண்டம் முழுக்க வேற்றுகிரக வாசிகளை தேடுவது நேரத்தை வீணடிக்கும் தேவை இல்லாத ஒரு செயல் என்கிறது ஒரு கூட்டம். ஏனெனில், நாம் நினைப்பது போல வேற்றுகிரக வாசிகள் விண்வெளியில் அல்ல, நம் பூமியிலேயே தான் இருக்கிறார்கள் என்பது தான் அவர்களின் கருத்து..! 

அவர்களின் நம்பிக்கைப்படியே, உலகின் பல்வேறு பகுதிகளில் யூஎஃப்ஓ (UFO - unidentified flying object) எனப்படும் பறக்கும் தட்டுகளை பார்த்ததாக ஆயிரக்கணக்கான மக்களின் சாட்சியம் உண்டு. அவைகளில் பிரமைகள், கட்டுக்கதைகள், புரளிகள் என்பது போக இதுவரை உலகில் பதிவான பறக்கும் தட்டு சம்பவங்களிலேயே மிகவும் நம்பகமான 10 சம்பவங்களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.10. 1942 
பேட்டில் ஆஃப் லாஸ் ஏன்ஜலஸ் (Battle of Los Angeles) சம்பவம்.

வானில் தென்பட்ட இனம் புரியாத பறக்கும் தட்டை நோக்கி அமெரிக்க ராணுவமும் போர் விமானங்களும் துப்பாக்கி சூடு நடத்தியும், பிரமாண்டமான ஒளி விளக்கு எழுப்பியும் அது தெளிவாக என்ன என்று கண்டுப்பிடிக்கபட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

09. 1965 

 பென்னிஸ்லைவானியாவின் (Kecksburg, Pennsylvania) கெக்ஸ்பர்க் என்ற இடத்தில் உள்ள காட்டில் வானில் இருந்து வந்து விழுந்த தீப்பந்து..!


அந்த சம்பவம் நடந்த உடனேயே அரசாங்கம் அந்த இடத்தை சுற்றி வளைத்து இனம் புரியாத அந்த தீப்பந்தை கைப்பற்றினாலும், இன்று வரை அதுபற்றிய தகவல்களை ரகசியமாகவே வைத்துள்ளது நாசா.

08. 1977  பிரேஸில் நாட்டில் உள்ள கோலரேஸ் (Colares) என்ற தீவில் பல முறை யூஎஃப்ஓ சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இதை ஆபரேஷன் சாசர் (Operation Sauce) என்றும் கூறுவார்கள்.

அந்த சம்பவங்களை நேரில் கண்ட சாட்சியங்களில் (மொத்தம் 400 பேர்) பலர் தாங்கள் ரேடியேஷன் கதிர்கள் மூலம் தாக்கப்பட்டதாகவும், சிலர் தங்கள் ரத்தம் உறிஞ்சுக் கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது சார்பாக நடத்தப்பட்ட அரசு விசாரணையும் 1990-களிலேயே 'சீல்' வைத்து நிறுத்திக் கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

07. 1986 


பிரகாசமான இனம் புரியாத ஒரு பறக்கும் தட்டை, ஜப்பான் விமானம் ஒன்று பின் தொடர்ந்த சம்பவம்.

வைன் (wine) ஏற்றிக்கொண்டு பாரிஸில் இருந்து டோக்கியோ செல்லும் ஜப்பான் விமானத்தை (ஃப்ளைட் 1628) 29 வருட அனுபவமிக்க கேப்டன் ஆன கெஞ்சு டேரௌச்சி (Kenju Terauchi) அலாஸ்கா மீது இயக்கி கொண்டிருந்தார்.

அப்போது தங்கள் விமானத்தை விட 3 மடங்கு பெரிய அளவில் உள்ள பிரகாசமான பறக்கும் தட்டு ஒன்றை விமான குழுவினர் அனைவரும் பார்த்துள்ளனர்.

அது மட்டுமின்றி சுமார் 300 மைல், அதாவது 50 நிமிடங்கள் வரை அதை பின் தொடர்ந்தும் சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

06. 1997 : 

அரிஸோனா நகரில் நடந்த பீனிக்ஸ் லைட் (Phoenix Light) சம்பவம்..!

முதலில் வரிசையாக 6 லைட்கள் தெரிந்தது பின் அதை தொடர்ந்து 8 லைட்கள், பின் அதை தொடர்ந்து 9 என மொத்தம் 5 நகரங்களில் இது காணப் பட்டதாக சாட்சியங்கள் உண்டு.

1977-ஆம் ஆண்டு, மார்ச் 13-ஆம் தேதி இரவு சுமார் 10 மணிக்கு தொடங்கிய இந்த சம்பவம் நள்ளிரவு 2 மணி அளவில் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

05. 2010 : 


சிலி (Chile) நாட்டில் உள்ள சாண்டியாகோ (Santiago) நகரில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது பதிவான பறக்கும் தட்டு சம்பவம்..!

04. 2011 : 


ஜெருசெலத்தில் (Jerusalem) முதல் முறையாக பதிவான இனம் புரியாத பறக்கும் தட்டு சம்பவம்.

விண்ணை நோக்கி பறந்து செல்வதற்கு முன் ஜெருசலம் நகரை இனம் புரியாத பறக்கும் தட்டு ஒன்று சுற்றி திரிந்ததாக பல சாட்சியங்கள் உண்டு.


ஆனால், இஸ்ரேல் அரசாங்கம் அந்த சம்பவத்தை இன்று வரை புரளி என்று கூறி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

03. 2012 : 

2012-ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் ஆரம்ப விழாவின் வான வேடிக்கை நிகழ்ச்சியின் போது பதிவான பறக்கும் தட்டு சம்பவம்..!

02. 2012 / 2013 :
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப் பட்ட வீடியோ ஒன்றில் பதிவான பறக்கும் தட்டு..!

01. 2013 


மெல்போர்ன் நகரின் மேல் உலாவிய இனம் புரியாத பறக்கும் தட்டு ஒன்று மொபைல் கேமிரா மற்றும் இன்ஃப்ரா ரெட் கேமிரா மூலம் பதிவு செய்யப்பட்டது.
Monday, October 19, 2015

இன்னும் 100 வருடம் ஆனாலும் கண்டுப்பிடிக்க முடியாத 10 மர்மங்கள்..!

இன்னும் 100 வருடம் ஆனாலும் கண்டுப்பிடிக்க முடியாத 10 மர்மங்கள்..!


"எல்லாமே சாத்தியம் தான்.!" என்று மார்த்தட்டிக் பெருமையாக சொல்லிக் கொள்ளும் அதிநவீன தொழில் நுட்ப வளர்ச்சியானது, எல்லா விடயத்திலும் வென்று விடுவதில்லை. அதிநவீனத்தை மீறிய சில செயல்களும், எந்த விதமான தொழில்நுட்ப யுகத்திலும் கண்டுப்பிடிக்க முடியாத காரியங்களும் அவ்வப்போது நடப்பதுண்டு..!! 

அப்படியாக நடந்த சில அசாத்தியமான செயல்கள், காரியங்கள், தகவல்கள் எல்லாமே இன்றுவரை புரிந்து கொள்ளவே முடியாத புதிர்காளாய் தான் இருக்கின்றன. அவைகளை தெளிவாக மிக துல்லியமாக புரிந்து கொள்ள, இன்னும் 100 ஆண்டுகள் தேவைப்படும் என்பதுதான் நிதர்சனம்..!

1. பாக்தாத் பேட்டரி : 1752-ஆம் ஆண்டில்தான் மின்சாரம் என்ற ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது.

ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பாக்தாத் பேட்டரிகள் பயன்பாட்டில் இருந்துள்ளது என்பது தான் நிதர்சனம்..!
2. சைனீஸ் மொஸையிக் லைன்ஸ் (Chinese mosaic lines) : 

இந்த விசித்திரமான கோடுகள் சீனாவின் கன்சு ஸெங் (Gansu Sheng) தீவுகளில் கண்டு பிடிக்கப்பட்டது.

2004-ஆம் ஆண்டில் தான் இது உருவாகி உள்ளது என்று கண்டுபிடிக்கப் பட்டாலும் இதன் அர்த்தம் இன்று வரை மர்மம் தான்..!!

3. எஸ்ஓஎஸ் மெசேஜ் : 


இந்தோனேஷிய கடலில் மிதந்து கொண்டிருந்த இந்த எஸ்எஸ் ஒரங் மேடான் (SS Ourang Medan) கப்பலில் இருந்து "கேப்டன் உட்பட அனைவரும் இறந்து விட்டனர்..!" என்று ஒரு மெசேஜ் கிடைத்தது. பின் சிறிது நேரம் கழித்து "நானும் இறந்து விட்டேன்" என்று மெசேஜ் வந்தது..!

இதை பேய் கப்பல் என்று சிலர் நம்ப, மறுபக்கம் இப்படி ஒரு கப்பலே இல்லை என்றும் சிலர் கூறுகிறார்கள், எப்படி இருந்தாலும் கப்பலில் இருந்து கிடைத்த மேசேஜ் ஒரு புதிர் தான்..!

4. ஸ்டோன் காலண்டர் (Stone Calender) : 


எகிப்து நாட்டின் சஹாரா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இது தான் உலகின் முதல் கல் காலண்டர் ஆகும்.

சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த கல் காலண்டர் சார்ந்த புரிதலும், இன்று வரை ஒரு புரியாத புதிர் தான்.

5. வாவ் சிக்னல் (WOW Siganl) : 

1977-ஆம் ஆண்டு கிடைத்த இந்த வாவ் சிக்னல் தான் ஏலியன் தேடலில் இருக்கும் தலைசிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும்.

ஒருமுறை, 220 மில்லியன் ஒளி ஆண்டுகள் கடந்து பூமிக்கு ஒரு சிக்னல் கிடைத்தது, அதை 'வாவ் சிக்னல்' (WOW SIGNAL) என்று கூறுகிறார்கள்.இதை  பற்றி அறிய  <<இங்கே>> சுட்டவும்...

6. 300 மில்லியன் ஆண்டுகள் பழைமையான இரும்பு ஸ்க்ரூ : 

ரஷ்ய தலைநகரமான மாஸ்கோவில் 1998-ஆம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது இந்த 300 மில்லியன் ஆண்டுகள் பழைமையான ஸ்க்ரூ (Screw)..!

டைனோஸர்கள் கூட உருவாக அந்த காலகட்டத்தில், இது எப்படி உருவாகியது, இதை யார் உருவாக்கி இருப்பார்கள் என்பது விளங்காத புதிர்தான்..!

7. பண்டைய கால ராக்கெட் ஷிப் : 

ஜப்பானில் கண்டுப்பிடிக்கப்பட்ட பண்டைய கால, குகை ஓவியமான இதில் ராக்கெட் போன்ற உருவம் தெளிவாக தெரிகிறது.

இந்த ஓவியத்தின் காலகட்டம் 5000 கிபி ஆகும். இதுவும் ஏலியன்கள் சார்ந்த பலமான ஆதாரங்களில் ஒன்றாகும்..!

8. சறுக்கி செல்லும் பாறை : 


கலிபோர்னியாவில் உள்ள வரண்ட குளமான - ரேஸ்ட்ராக் ப்லாயாவின் (Racetrack Playa) நகரும் பாறைகள், ஏன் நகர்கிறது எப்படி நகர்கிறது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை.

இதை  பற்றி அறிய  <<இங்கே>> சுட்டவும்...

மரண பள்ளத்தாக்கில் தானாக நகரும் பாறைகள்.. ஆவிகளின் சேட்டையா, விஞ்ஞான புதிரா?


9. அன்டிகேதேரா மெக்கானிசம் (Antikythera Mechanism) : 

1900-ஆம் ஆண்டு, கிரீஸ் நாட்டின் அருகே நடந்த கப்பல் விபத்து ஒன்றில் இருந்து கிடைத்தது இந்த - அன்டிகேதேரா மெக்கானிசம்..!

இது ஒரு சிக்கலான அனலாக் கம்ப்யூட்டர் (Intricate analogue computer ) ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விடயங்களும் இன்று வரை கேள்விக்குறி தான்..!

10. ‘வாய்னிச்’ கைப்பிரதி

 ‘வாய்னிச்’ என்ற கைப்பிரதி புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இப்புத்தகம், இன்னும் யாராலும் விளக்கம் சொல்ல முடியாத வரி வடிவங்களாலும், படங்களாலும் கையால் எழுதப்பட்டுள்ளது. இது எப்போது எழுதப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கதிரியக்க கார்பன் தேதியாக்க முறை மூலமாக இது எழுதப்பட்ட காலம் 15-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அறியப்பட்டுள்ளது.
இதை  பற்றி அறிய  <<இங்கே>> சுட்டவும்...