'ஈஸ்டர் தீவு' (Easter Island)
தென்னமெரிக்காவைச் சேர்ந்த பெரு (Peru) நாட்டில் கீழே இருக்கும் நாடுதான் 'சிலி' (Chile). 'சிலி' நாடு, நீண்டதொரு நேர் கோடு போல, மேலிருந்து கீழ்நோக்கிப் பரவியிருக்கும் ஒரு நாடு. இந்த நாட்டுக்குச் சொந்தமாக, மேற்குப் பகுதிக் கடலில் அமைந்திருக்கும் ஒரு சிறிய தீவின் பெயர் 'ஈஸ்டர் தீவு' (Easter Island) என்பதாகும்.
ஈஸ்டர் தீவு, சிலி நாட்டுக்குச் சொந்தமான தீவுதான் என்றாலும், கடல் நடுவே சிலியிலிருந்து வெகு தூரத்தில் மிகத் தனியாக இருக்கிறது. முக்கோண வடிவத்தில் இருக்கும்அந்தத் தீவில், உலகத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் அதிசயம் ஒன்றுஇருக்கிறது. அது என்ன என்று இப்போது பார்க்கலாம்.
மனிதர்களே வாழமுடியாத அளவு தூரத்தில், கடலின் நடுவே இருக்கும் இந்தத்தீவைக் கண்டவர்கள் பிரமித்துப் போனார்கள். அத்தீவைச் சுற்றி, வரிசையாக மிகப் பெரிய மனிதர்கள் கடலைப் பார்த்தபடி நின்றதுதான் பிரமிப்பிற்குக் காரணம். ஒவ்வொரு மனிதரும் இராட்சதர்கள் போல, இரண்டு மீற்றர்கள் உயரத்தில் இருந்து, பத்து மீற்றர்கள் உயரம் வரை இருந்தார்கள். என்ன பயந்துவிட்டீர்களா….? உண்மையில் அவர்கள் மனிதர்கள் அல்ல. யாரோ செய்த மனிதச் சிலைகள். அந்தத் தீவைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த இந்தச் சிலைகள் ஒவ்வொன்றும் பல தொன்கள் எடையுள்ளவையாக இருந்தன. சில சிலைகள் 80தொன்கள் வரை எடையுள்ளதாகவும் இருக்கின்றன. யார் செய்தார்கள் இந்தச் சிலைகளை? ஏன் செய்தார்கள்? யாருக்கும் தெரியவில்லை.
இந்தச் சிலைகள் 'மோவாய்' (Moai) என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. கி.பி.300 ஆண்டுகளில் இவை செய்யப் பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியில் கணித்திருந்தாலும், சரியான கணக்குத் தெரியவில்லை.
இந்தச் சிலைகளை ஏன் அந்தத் தீவில் வாழ்ந்த மக்கள் உருவாக்கினார்கள்? எதற்காகத் தீவைச் சுற்றி அவற்றை அடுக்கி வைத்திருக்கின்றார்கள்? என்ற கேள்விகளுக்கு இன்றுவரை எவரிடமும் பதில் இல்லை. இதற்கும் வேற்றுக்கிரகவாசிகளான ஏலியன்களுக்கும் சம்பந்தம் உண்டா என்றும் தெரியவில்லை.
இந்தச் சிலைகளை எப்படிச் செதுக்கினார்கள்? செதுக்கிய இந்தச் சிலைகளைஎப்படித் தீவின் மையப் பகுதியில் இருந்து, பதினாறு கி.மீ. தூரத்தில் இருக்கும் கரைக்கு நகர்த்தி வந்தார்கள்? அப்படி நகர்த்தி வந்ததை எப்படி நிமிர்த்தினார்கள்? என்பவை எல்லாமே ஆச்சரியங்களாகவும், கேள்விகளாகவும் எம்முன்னே நிற்கின்றன. அந்தத் தீவிலுள்ள மரங்களை வெட்டியே இவற்றை க் கடற்கரை வரை நகர்த்தியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஆனாலும் எந்தக் கருவிகளும் இல்லாமல்இப்படி நகர்த்தி நிமிர்த்தியதும், அவற்றைச் செய்ததும் மனிதனால் முடியாத ஒரு அசாத்தியச் செயல் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
அந்தத் தீவில், வெட்டப்பட்டுப் பாதியில் விடப்பட்ட சிலை ஒன்றைக்கண்டால் அசந்து விடுவீர்கள். 200 தொன் நிறைக்கு அதிகமாகவும், மிக நீளமாகவும் இருக்கிறது அந்தச் சிலை. ஒரு வேளை அந்தச் சிலை செய்யப்பட்டிருந்தால், அதை எப்படி உயரத் தூக்கியிருப்பார்கள்? எப்படி நகர்த்தியிருப்பார்கள்? எதற்கும் விடையில்லை. எல்லாமே……! எல்லாமே….!ஆச்சரியங்களும் மர்மங்களுமாய் அமைந்து இருக்கின்றன.
'மோவாய்' (Moai) என்று சொல்லப்படும் இந்தச் சிலைகள், தீவைச் சுற்றி நிறுத்தப் பட்டிருப்பதோடு மட்டுமில்லாமல், தீவு முழுக்க நூற்றுக்கணக்கில் பாகங்களாய் சிதறியது போலப் போடப் பட்டிருக்கின்றன. தலைகள்,உடல்கள் என எங்கும் மோவாய்கள்தான். அதிகம் ஏன், கடலுக்குள்ளும் மோவாய்கள் கிடக்கின்றன.
இந்தச் சிலைகள் யாருக்கு, என்ன செய்திகளைச் சொல்கின்றன? இதை மனிதர்கள் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இவ்வளவு சிரமப்பட்டு இவற்றைச் செய்ய வேண்டிய காரணம் என்ன? அவசியம் என்ன? மொத்தத்தில் சிந்தித்துப் பார்த்தால், 2012 இல் உலகம் அழிகிறதோ இல்லையோ, எமக்குப் பைத்தியம் மட்டும் பிடிக்காமல் இருந்தால் போதும் என்னும் அளவிற்கு இந்தத் தீவின் மர்மங்கள் இருக்கின்றன......
இது போன்ற வரலாற்றுத் தலங்கள் சில காண்போம்...
திகைக்க வைக்கும் திவனாகு ஒரு வரலாற்று சின்னம் !!
'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-1,
நாஸ்கா கோடுகள்..

பார்த்தவுடனே பிரமிப்பை ஏற்படுத்தும் "மச்சு பிச்சு"!!
நாஸ்கா கோடுகள்..
நன்றி
ஆசிரியர் ச. செந்தில்வேலன்.
No comments:
Post a Comment
welcome ur comment,