Wednesday, January 9, 2013

வினோதினி :: 'டாடி.. என்னை எப்படியாச்சும் காப்பாத்திருங்க!!


வினோதினி :: 'டாடி.. என்னை எப்படியாச்சும் காப்பாத்திருங்க!! 


வினோதினி... டெல்லி மாணவி உண்டாக்கிய சூறாவளியில் நாம் கவனம்கொள்ள மறந்த தமிழச்சி. 
http://rahmanfayed.blogspot.in
 23 வயது... மனம் முழுக்க உற்சாகம்... எதிர்காலம் குறித்த கனவு... அனைத்தையும் சிதைத்து உருக்குலைத்துவிட்டது வினோதினியை ஒருதலையாகக் காதலித்த சுரேஷ் வீசிய அரை லிட்டர் ஆசிட். டெல்லி மாணவியின் மரணத்துக்காக நாடே உணர்ச்சிக் கொந்தளிப்பில் தகிக்கையில், வினோதினியின் உயிரைக் காக்கப் பணம் இல்லாமல் போராடி வருகிறது அவரது குடும்பம்.







ஆனந்த விகடனில் இருந்து..
சென்னையில் இருக்கும் அந்தத் தனியார் மருத்துவமனையின் உயிர் காக்கும் அவசர சிகிச்சைப் பிரிவில் நுழைந்தபோது எங்கும் நிசப்தம். எந்த அசைவும் இல்லாமல் உடல் முழுவதும் கட்டுகளோடு கிடந்தார் வினோதினி. ''வலி தாங்காம அனத்திட்டே இருந்தா... இப்பதான் கண் அசந்தா தம்பி''-மெதுவாகப் பேசுகிறார் அப்பா ஜெயபாலன்.
 வினோதினி... டெல்லி மாணவி உண்டாக்கிய சூறாவளியில் நாம் கவனம்கொள்ள மறந்த தமிழச்சி. 23 வயது... மனம் முழுக்க உற்சாகம்... எதிர்காலம் குறித்த கனவு... அனைத்தையும் சிதைத்து உருக்குலைத்துவிட்டது வினோதினியை ஒருதலையாகக் காதலித்த சுரேஷ் வீசிய அரை லிட்டர் ஆசிட். டெல்லி மாணவியின் மரணத்துக்காக நாடே உணர்ச்சிக் கொந்தளிப்பில் தகிக்கையில், வினோதினியின் உயிரைக் காக்கப் பணம் இல்லாமல் போராடி வருகிறது அவரது குடும்பம்.
ஜெயபாலன் தவமிருந்து பெற்ற ஒரே மகள் வினோதினி. தன் வாட்ச்மேன் உத்தியோகத்தின் சொற்ப வருவாயில் தன் மகளின் எதிர்காலத்தை உருவாக்க எப்படி எல்லாம் அவர் உழைத்திருப்பார்... காலங்காலமாகப் பட்டிக்காட்டில் உழன்ற தனது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி யாக வினோதினி பட்டம் பெற்றபோது அவர் கண்களில் பூத்த ஆனந்தக் கண்ணீர், இப்போது முடிவில்லாத கண்ணீராக மாறி விட்டது.
மெள்ள அசைகிறார் வினோதினி. 'டாடி... டாடி...’ என்று மெல்லிய குரல். ''நான் உன் பக்கத்துலயேதான் இருக்கேம்மா. டாக்டர் சொன்னாரும்மா... சீக்கிரமா காயம் ஆறிடுமாம். பார்வைகூடப் பிரச்னை இல்லையாம். நீ கவலைப்படாதே. நிம்மதியா தூங்கும்மா!'' மகளுக்கான ஆறுதல் வார்த்தைகளை உச்சரிக்கும்போதே கரகரவெனக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது அவரிடம். ஆனால், வினோதினி ஒன்றும் சிறுபிள்ளை இல்லையே?
''டாடி, பொய் சொல்லாதீங்க... எனக்கு பார்வை எல்லாம் கிடைக்க சான்ஸே இல்லை. ஆசிட் இன்ஜுரிஸ் அவ்வளவு சாதாரணம் இல்லை. நான் படிச்சிருக்கேன். இது செப்டிகீமியா. ரத்தம் கொஞ்சம் கொஞ்சமா விஷம் ஆகிட்டே வரும். என்னதான் ட்ரீட்மென்ட் கொடுத்தாலும், பாக்டீரியாஸ் பெருகிட்டே இருக்கும்... எனக்குத் தெரியும் டாடி..'' ஐ.டி. படித்த பெண் மருத்துவம் பேசும் புத்திசாலித்தனத்தை மெச்சும் தருணம் இல்லை இது.
''இப்பிடித்தாங்க... நாள் முழுக்க அனத் திட்டே இருக்கா. தூக்கத்துல பேசுறா. திடீர்னு வலி தாங்காம கத்திக் கதறி அழுறா. ஒவ்வொரு நேரம் ஒவ்வொண்ணு சொல்றா. ஒரு சமயம் நான் சாகறேன். இருந்து என்ன பிரயோஜனம்கிறா. இன்னொரு சமயம் எப்படியாச்சும் என்னைக் காப்பாத்திடுங்கங்கிறா. என் கையில நாலஞ்சு சொட்டு ஆசிட் பட்டதுக்கே என்னால வலி தாங்க முடியலை. என் குழந்தையோட உடம்பெல்லாம் ஆசிட் அரிச்சிருச்சேய்யா. அவளுக்கு எவ்வளவு வலிக்கும்? அவ தொடையில இருந்து சதையை வெட்டி எடுத்து கண்ணை மூடி இருக்காங்க. ஒரு காது பூராவும் போச்சு. பொத்திப் பொத்தி வளர்த்த என் குழந்தைக்கு இடுப்பு, கை, காலுல ஒண்ணுமே இல்லையேய்யா... ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் நிறைய ஆசிட்... அம்புட்டு ஆசிட்டுக்குத் தாங்குமாய்யா இந்தப் பச்சைப்பிள்ளை உடம்பு.
நான் ரத்தம் சிந்தி உழைச்ச உழைப்புய்யா எம் புள்ளை. கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படிக்க வினோதினி ஆசைப்பட்டப்ப, என் கையில இருந்தது வெறும் 400 ரூபா. கிராமத்துல எங்களுக்கு இருந்த பூர்வீக விவசாய நிலத்தை வித்து காலேஜ்ல சேர்த்தேன். நல்லாப் படிச்சா. ஸ்கூல்ல இருந்தே நல்லா ஓவியம் வரைவா. நிறையக் கவிதை எழுதிப் பரிசு எல்லாம் வாங்கியிருக்கா.
சென்னைக்கு வேலைக்குப் போனதும், 'டாடி... இனிமே நமக்குப் பிரச்னை இல்லை. நீங்க வேலைக்குப் போக வேணாம். இங்கேயே வீடு பார்த்துடறேன். வந்துருங்க’னு சொன்னா. நானும் என் குடும்பமும் தலைநிமிந்துருச்சுனு நெனைச்சேன். பாவிப்பய இப்பிடிப் பண்ணிட்டானே!''- தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார் ஜெயபாலன்.
சத்தம் கேட்டுச் சலனமுறும் வினோதினி, ''டாடி... அழாதீங்க. என்னை எப்படியாச்சும் காப்பாத்திருங்க. என் உடம்புல உயிர் மட்டும் இருந்தாக்கூடப் போதும். ஏதாச்சும் வேலை பார்த்து, உங்களை நான் பார்த்துக்கிறேன். என்னைக் காப்பாத்திருங்க டாடி... ப்ளீஸ்!'' என மயக்க நிலையில் புலம்புகிறார்.
வினோதினியைக் காப்பாற்ற வேண்டியது அந்த ஏழைத் தந்தையின் பொறுப்பு மட்டும் அல்ல; நம் அனைவருக்கும் உண்டு. முக்கியமாக அரசாங்கத்துக்கு!


''எங்க பொண்ணைக் காப்பாத்தக் கை கொடுங்க!''
தற்போது தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவரும் வினோதினி யின் மருத்துவச் செலவை அவரது குடும் பத்தினரால் சமாளிக்க முடியவில்லை. சமூகசேவகர்கள் சிலர் சமூக வலைதளங் கள் மூலம் நிதி திரட்டிவருகிறார்கள். அப்படியான உதவிகளை ஒருங்கிணைத்து வரும் வினோதினியின் தாய் மாமன் ரமேஷிடம் பேசினேன். ''ஒவ் வொரு நிமிஷமும் உயிரோட அணு அணுவா வினோதினி சிதைக்கப்படுறதைப் பார்க்கச் சகிக்கலைங்க. ஒவ்வொரு நிமிஷமும் நரக வேதனையில் இருக்கா. தமிழக முதல்வர் ஜெயலலிதா, அரசாங்கம் சார்பா உதவி செய்யணும்னு எதிர்பார்க்கிறோம். இப்ப எங்களோட முதல் தேவை, வினோதினி உயிர் பிழைக்கணும். மத்த சிகிச்சை மாதிரி இது கிடையாது. சருமத்தில் மேல்புண் ஆற ஆற... திரும்பவும் உள்ளே இருந்து கொப்பளிக்கும்; அதனால, முழுமையா குணம் அடைய நிறைய காலம் பிடிக் கும்; செலவும் நிறைய ஆகும்னு சொல் றாங்க. எங்ககிட்ட இருந்த சொற்ப நகை களையும் வித்து செலவு செஞ்சிட்டோம். வர்ற உதவிகளைத் தாண்டியும் செலவு அதிகரிக்கிறதால, கடன் வாங்கித்தான் சமாளிக்கிறோம்.
வினோதினி தன்னம்பிக்கையான பொண்ணு. சமூக அக்கறையும் மத்தவங்களுக்கு உதவுற குணமும் அவளுக்கு அதிகம். எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருப்பா. எங்க பொண்ணுக்குக் கண் பார்வை மட்டும்இல்லை... ஒட்டுமொத்த உடம்புமே உருக்குலைஞ்சுபோச்சு. இந்த நிதி உதவிகளைத் தாண்டி, அவளுக்குக் காலமெல்லாம் இந்தச் சமூகத்தின் அனுதாபம் இல்லாத உண்மையான அக்கறையும் ஆதரவும் தேவை. அதுமட்டும்தான் அவளோட இருப்புக்கு அர்த்தம் சேர்க்கும்!'' என்று கண் கலங்குகிறார் ரமேஷ்.
டி.எல்.சஞ்சீவிகுமார்
படம் : சொ.பாலசுப்பிரமணியன், ஓவியம் : ஸ்யாம்

2 comments:

  1. சகோதரி விநோதனிக்கு உதவி செய்ய விரும்பினால்...
    JAYAPALAN,
    603899558,
    INDIAN BANK,
    KILPAK BRANCH,
    IFCS CODE : IDIB000k037,

    ramesh : 9944161416.

    ReplyDelete
  2. i pray to god that sure she will get cure soon. god bless u

    ReplyDelete

welcome ur comment,