Tuesday, January 22, 2013

தியாகி கான் அப்துல் கப்பார் கான் (பாரத ரத்னா)


RAHMANFAYED :: நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்திய விடுதலை போராட்ட வீரர்களை பற்றிய பதிவு  இது வழக்கம் போல இது எனது சொந்த பதிவு  இல்லை..


 







Ghaffar Khan walking with Jawaharlal Nehru after the Cabinet Mission, 1946.
மறைக்க பட்ட வரலாற்றின் வரிசையில் சுதந்திர போராட்ட தியாகி கான் அப்துல் கப்பார் கான் (பாரத ரத்னா) பற்றி தெரிந்து கொள்வோம் !!!

கான் அப்துல் கப்பார் கான் (Khan Abdul Ghaffar Khan, 1890 - 20 ஜனவரி 1988)பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை அகிம்சை முறையில் எதிர்த்தவர். மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர்.

இளம் வயதில் தனது குடும்பத்தால் பிரிட்டிஷ் போர்படையில் சேர ஆதரிக்கப்பட்டார். இவர் ஒருமுறை ஆங்கிலேயர் ஒருவர் ஒரு இந்தியன் மீது காட்டிய கொடுமையை கண்டு சலிப்படைந்தார். இங்கிலாந்தில் இவர் படிக்க வேண்டும் என்று தம் குடும்பம் முடிவு செய்ததை தனது தாய் தடுத்ததால் போகவில்லை.

குதை கித்மத்கர் (அதாவது "இறைவனின் தொண்டர்கள்") என்ற புரட்சி படையை அமைத்த இவர் பலமுறை ஆங்கிலேயர் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்திய பிரிவினையை கடுமையாக எதிர்த்த இவர், காங்கிரஸ் கட்சி பிரிவினை திட்டத்தை ஆதரித்தவுடன், "எங்களை ஓநாய்களிடம் எறிந்துவிட்டீரே" என்று காங்கிரஸ் தலைவர்களிடம் சொன்னார்.

இந்திய பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானில் வாழ்ந்த இவர் பலமுறை பாகிஸ்தான் ஆட்சியால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய உளவாளி என்று தூற்றப்பட்டார்.

1985-இல் நோபெல் அமைதி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட இவர் 1987-இல் பாரத ரத்னா பெற்ற முதல் அயல்நாட்டவர் என்ற பெருமை பெற்றவர்.

1988-இல் இவர் இயற்கை எய்தினார் அவரின் கடைசி ஆசைக்கேற்ப பிறந்த ஊரான ஜலாலாபாத் என்ற ஆப்கான் ஊரில் அடக்கம் செய்யப்பட்டார்.




No comments:

Post a Comment

welcome ur comment,