Wednesday, January 9, 2013

பார்த்தவுடனே பிரமிப்பை ஏற்படுத்தும் "நாஸ்கா கோடுகள்"


நாஸ்கா கோடுகள்..

 
தென்னமெரிக்காவில் இருக்கும் பெரு (Peru) நாட்டில் உள்ள நாஸ்கா (Nazca)என்னுமிடத்தில் அமைந்த, பெருவெளிகளில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும்,கோடுகளும்தான் நாஸ்கா கோடுகள் என்று சொல்லப்படுகின்றன. 


கோடுகள்,சித்திரங்கள் என்றதும் ஏதோ சுவரில் எழுதப்பட்ட சித்திரம் என்று  நினைத்துவிடவேண்டாம். இவை எல்லாம் மிகவும் ஆச்சரியமான சித்திரங்கள். எல்லா மேமனிதர்கள் வாழாத இடமான, மிகப்பெரிய நிலப்பரப்பில் வரையப்பட்ட சித்திரங்கள். 500சதுர கி.மீ. பரப்பளவில் (நன்றாகக் கவனியுங்கள் சதுர மீட்டர்கள் அல்ல, சதுர கிலோ மீட்டர்) இந்தச் சித்திரங்களும் கோடுகளும் அமைந்திருக்கின்றன என்றால் நீங்களே  கற்பனை பண்ணிப் பாருங்கள்.




இந்தப் படத்தில் பார்க்கும் கோடுகள் எல்லாமே விமானத்தில் இருந்து எடுத்தாலும் தெளிவாகத் தெரியும் அளவிற்கு கீறப்பட்டிருக்கின்றன. அத்துடன் கீறப்பட்ட நேர்க்கோடுகள், நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு நேராக, நேர்த்தியாக வரையப்பட்டிருக்கின்றன. நேராக கோடு வரைவது என்பது ஆச்சரியமே கிடையாது.அவற்றின் பிரமாண்டமே எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. இங்கு கோடுகள் மட்டும் கீறப்பட்டிருக்கவில்லை. பலவிதமான வடிவங்களும், சித்திரங்களும் வரையப்பட்டிருக்கின்றன.


 

 இந்தச் சித்திரங்களை மூன்று விதமான வகைகளில் நாம் பிரிக்கலாம். 1.நேர் கோடுகள், 2.கேத்திர கணித (Goematery) முறையிலான வடிவங்கள், 3.மிருகங்கள்,பறவைகள் போன்ற உருவங்கள்.


 இதில் 800 க்கும் அதிகமான கோடுகள், கேத்திர கணித வரைவுகளும்,  நூற்றுக்கும் மேற்பட்ட மிருகங்கள், பறவைகளின் உருவங்களும் அடங்கும். இவற்றில் ஐம்பதுக்கும் மேலாக உள்ள உருவங்கள் மிக மிகப் பிரமாண்டமானவை. மிகப் பெரிய உருவங்கள்  285 மீற்றர் நீளத்துக்கும் வரையப் பட்டிருக்கிறது.  அதாவது கால் கிலோ மீற்றர் நீளம்.அத்துடன், நேர்கோடுகள் பல கி.மீ. நீளத்துக்கு வரையப்பட்டுள்ளன என்பதைப் பார்த்தால் ஆச்சரியத்தில் திகைத்து விடுவீர்கள். இவற்றையெல்லாம் எழுத்துக்களால் எழுதி விவரிப்பதை விடப் படங்கள் மூலமாக விவரிப்பதே இலகுவாக இருக்கும்.









எல்லாமே ஆச்சரியங்கள்! "எப்படி இதை வரைந்தார்கள்?" என்னும் கேள்வி எமக்கு எழுந்தாலும், "ஏன் இதை வரைந்தார்கள்?" என்னும் கேள்விதான் இங்கு எல்லோருமே வியக்கும் விசயமாகிறது. நிலத்தில் இருந்து பார்க்கும் போது, இந்தச் சித்திரங்களின்முழுமை எவருக்குமே தெரியாது. இவற்றைப் பார்க்க வேண்டும் என்றால் வானத்தில்உயரப் பறந்தால் மட்டுமே முடியும். அப்படி என்றால் இதை வரைந்த நாஸ்காவினர்,யார் பார்க்க வேண்டும் என்று இப்படி வரைந்தார்கள்?  2500 ஆண்டுகளுக்கு முன்னர் இவை வரையப் பட்டிருகின்றன என்பது இன்னும் யோசிக்க வைக்கிறது.


இந்த நாஸ்கா உருவங்களில் குரங்கு, நாய், சிலந்தி, பல்லி, திமிங்கலம், மீன், ஹம்மிங் பறவை என்று தெரிந்த பல உருவங்கள் இருந்தாலும், தெரியாத உருவங்களும் பலஇருக்கின்றன. இவற்றை வரைந்ததற்கு நிச்சயம் ஒரு அர்த்தம் இருந்தே தீரவேண்டும். அவை என்ன?





இந்த ஹம்மிங் பறவை (Humming bird) இரண்டு புட்பால் மைதானங்களின்அளவுடையது. அதாவது 285 மீற்றர்கள்.








கணினியில் அச்சுப் பதித்துத் தரும் 'ப்ளொட்டர்' (Plotter) என்னும் இயந்திரம் போல,தொடங்கிய புள்ளியும், முடிந்த புள்ளியும் எதுவெனத் தெரியாமல், ஒரே தொடர்ச்சியாய் அந்தச் சித்திரங்கள் ஒரே கோட்டில் கீறப்பட்டுள்ளன. ஆச்சரியகரமாக அந்தப் படங்களின் ஏதோ ஒரு இடம் நீட்டப்பட்டு முடிவடைந்திருக்கும். குறிப்பாக, அந்தக் குரங்கின் வாலைக் கவனித்தீர்களானால்,  அதனுடன் இன்னுமொரு தொடர்ச்சி இருக்கும். அவையெல்லாம் என்ன காரணங்களினால் அப்படி வரையப்பட்டிருக்கின்றன என்றே புரியவில்லை. தற்கால ஆராய்ச்சியாளர்கள் சிலர்,அவை போன்ற சித்திரங்கள் சிலதைப் பிரதி செய்து வரைந்து காட்டினாலும், அந்தக்காலத்தில் அது எப்படிச் சாத்தியமாக இருந்தது என்னும் கேள்விதான் இங்கு பிரமிக்கவைக்கிறது.


இவற்றுடன் இந்த வரைவுகள் முடிந்திருந்தால் பெரிதாக அலட்டியிருக்கத் தேவையில்லை. ஆனால் அவற்றில் இருந்த இரண்டு விசயங்கள் நிறையயோசிக்க வைத்தன. பலரின் கவனத்தைக் கவர்ந்து இழுத்ததும் அந்த இரண்டுசித்திரங்களும்தான். பல மீற்றர்கள் நீளமான விமானம் இறங்கும் 'ஓடு பாதை' போலஅமைந்த ஒரு அமைப்பு அங்கே காணப்பட்டது. இந்த அமைப்பு எதற்காக ஏற்பட்டது அல்லது இது விண்வெளியில் இருந்து வந்து இறங்கும் விமானத்தின் ஓடுபாதையேதானா?




இரண்டாவது, மலை ஒன்றில் வான் நோக்கிப் பார்த்துக் கொண்டு, ஒரு கையால் வானைச் சுட்டிக் காட்டியபடி இருக்கும் ஒரு மிகப் பெரிய மனிதனி ன்சித்திரம். யாரையோ வரவேற்பது போலவோ அல்லது யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போலவோ. அந்தச் சித்திரம் கீறப்பட்டிருக்கிறது அல்லது அவர்கள் மேலே இருக்கிறார்கள் என்று காட்டுவதாகவும் இருக்கலாம்.


 இந்தச் சித்திரத்துக்கு  'தஅஸ்ட்ரோநாட்' (The Astronaut) என்று பெயர் கூட வைத்திருக்கிறார்கள்.





இந்த மனிதன் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் அல்லது இந்த மனிதனே ஒரு ஏலியன்தானோ?




நாஸ்காவின் சித்திரங்களில் சில இந்த அமைப்பில்தான் வரையப்பட்டிருக்கின்றன.


இந்தச் சித்திரங்களில் சில வினோதங்களும் உண்டு. குரங்கு போன்ற சித்திரத்திலும்,வேறு சில சித்திரங்களிலும், ஒரு கையில் நான்கு விரல்களும், அடுத்த கையில் ஐந்து விரல்களும் காணப்படுகின்றன.


ஏன் இப்படி வரைந்திருக்கிறார்கள்? இவ்வளவு நேர்த்தியாக வரைந்தவர்கள் அப்படி ஒருபிழையை விடுவார்களா? இவற்றிற்கெல்லாம் காரணங்களே தெரியவில்லை அல்லது இவையெல்லாம் நமக்கு ஏதாவது செய்திகளைச் சொல்கின்றனவா?




இந்தச் சித்திரங்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் சொல்வது இதுதான்! இந்தச் சித்திரங்கள் மூலமாக, நாஸ்கா மக்கள் வானத்தில் பறந்து வந்த யாருக்கோ எதையோ அறிவித்திருக்கிறார்கள் அல்லது நாஸ்கா மக்களுக்கு, விண்ணில் இருந்து வந்தவர்கள் யாரோ இப்படி வரையும் தகவல்களைச் சொல்லிச் சென்றுள்ளார்கள் என்பதுதான் அது.நாஸ்கா அமைந்திருக்கும் 'பெரு' (Peru) நாடும் மாயா இனத்தவர்கள் வாழ்ந்த பிரதேசங்களுக்கு அண்மையிலேயே இருக்கின்றது என்பது மேலும் ஒரு விசேசமாகின்றது.


உலகில் அவிழ்க்கப்படாத மூன்று மிஸ்டரிகள் (Mystery) இருந்தாலும், அறிவியல் வியக்கும் முன்று முக்கிய மிஸ்டரிகள் உண்டு.  அவை 1. கிறிஸ்டல் மண்டையோடுகள் (Crystal sculls), 2. நாஸ்கா கோடுகள் (Nazca lines), 3. சோளச் சித்திரங்கள் (Crop circles) என்பன. இந்த மூன்றும் வேற்றுக் கிரக மனிதர்கள் சம்பந்தமானவை என்று கருதப்படுகின்றன.  



 இது போன்ற வரலாற்றுத் தலங்கள்  சில காண்போம்...


பார்த்தவுடனே பிரமிப்பை ஏற்படுத்தும் "மச்சு பிச்சு"!!



'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-1,

'ஈஸ்டர் தீவு' (Easter Island)





திகைக்க வைக்கும் திவனாகு ஒரு வரலாற்று சின்னம் !!



நன்றி 
ஆசிரியர் ச. செந்தில்வேலன்.

No comments:

Post a Comment

welcome ur comment,