பல சுவாரசிய மற்றும் இதுவரையிலும் அறியாத புதுப்புது அற்புத ஜீவராசிகளின்
பற்றி காணலாம் வாருங்கள்....
கடல்...
மனித சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கையில் முக்கிய இடம் வகிக்கும் விஷயம் இந்த கடல். இதுவரையிலும் மனிதர்களால் கண்டறியப்பட்டிருக்கும் கடல் சார்ந்த அற்புதங்கள் வெறும் ஐந்து சதவிகிதம்கூட இருக்காது என்றாலும், இந்த ஐந்து சதவிகிதத்தைக்கூட நாம் முழுதாக தெரிந்து கொள்வது அவ்வளவு சுலபமில்லை என்பது கொட்டிக்கிடக்கும் தகவல்கள் மற்றும் இதுவரையிலான கடல் சார்ந்த கண்டுபிடிப்புக்கள் நமக்கு உணர்த்தும் செய்தி...!
இதில் நாம் பார்க்கப்போகும் விஷயம் இதுவரையிலும் நம்மில் பெரும்பாலானோர் அறிந்திராத கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் சில நன்னீர் வாழ் உயிரினங்கள்...!
வாருங்கள்... பயணத்தைத் துவங்கலாம்...
பயாரா...
இது நாம் ஏற்கனவே பார்த்த நரக மீன் போல இருந்தாலும், 6இன்ச் நீளம்வளரக்கூடிய இதன் கீழ்த்தாடை பற்களாலேயே இந்தப்பெயர் பெற்றிருக்கிறது.இவை பொதுவாக நான்கு அடி நீளம் வளரக்கூடியவை என்பதுவும், இதன் முக்கியஉணவு பிரான்கா மீன்கள்தான் என்பதுவும் அச்சுறுத்தும் தகவல்.
இதன் கீழ்த்தாடை பற்கள் இதன் வாயிலேயே குத்தாமல் இருக்க வாயின்மேற்புறத்தில் சிறப்பு ஓட்டைகளுடன் அமைந்திருப்பது இயற்கையின் அற்புதப்படைப்புதான்...!
இதன் கீழ்த்தாடை பற்கள் இதன் வாயிலேயே குத்தாமல் இருக்க வாயின்மேற்புறத்தில் சிறப்பு ஓட்டைகளுடன் அமைந்திருப்பது இயற்கையின் அற்புதப்படைப்புதான்...!
லேம்ப்ரே...
லேம்ப்ரே எனப்படும் இந்த மீன்கள் பிற மீன்களிடமிருந்து ரத்தத்தை உறிஞ்சிஅதையே முக்கிய உணவாகக்கொண்டு வாழ்வதால் இதுவும் வம்பயர் மீன் என்றபெயரை பெற்றிருக்கிறது.
கிட்டத்தட்ட அட்டைப்பூச்சியைப் போன்ற குணநலன்கள் எனலாம் என்றாலும்இதன் உடற்பகுதி சாதாரண மீன்கள் போல இருந்தாலும் இதன் ரத்தம் உறிஞ்சும்வாய்ப்பகுதி பார்க்கும்போதே மனிதர்களை அச்சுறுத்தும் ரகமாகத்தான் இருக்கிறது.
மற்றொரு மீனிடமிருந்து இரத்தத்தை உறிஞ்சும் இரண்டு லேம்ப்ரேக்கள்...
பாக்கூ...
பாக்கூ என்பது சிலவகை மீன்களுக்கான பொதுப்பெயர் என்றாலும் இதுபெரும்பாலும் பிரான்கா வகையிலேயே சைவம் சாப்பிடும் வகையான இந்த வகைமீன்களுக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது.
சதர்ன் ரைட் வேல் டால்பின்...
மனிதர்கள் போன்றே பற்களைக்கொண்ட இந்த மீன்களின் முக்கிய உணவு பழங்கள்மற்றும் மரங்களிலிருந்து உதிரும் கொட்டைகள்தான் என்றாலும் சில நேரங்களில்நீந்திக்கொண்டிருக்கும் மனிதர்களிடம் பழங்களிலிருந்து உதிர்ந்தது என்று நினைத்துஇவை கடித்துச்சென்ற விஷயம் மனிதர்களால் பீதியான சமாச்சாரமாகவேபார்க்கப்படுகிறது. இதனுடைய இந்த செய்கையால் அதை சிலர் "Ball Cutter Fish" என்றும் அழைக்கிறார்கள்...!
ரைட் வேல் டால்பின் என்ற பாலூட்டி இனத்தில் சதர்ன் மற்றும் நார்த் ரைட் வேல்டால்பின் என்று இரு வகைகள் இருந்தாலும், இதில் வெள்ளையும் கருப்பும் கலந்தசதர்ன் ரைட் வேல் டால்பின்தான் கண்கவர் அம்சமாகும்.
லூஸியானா பேன் கேக் வவ்வால் மீன்...
வவ்வால் மீன் குடும்ப வகையைச்சேர்ந்த இந்த மீன் மெக்ஸிகோ வளைகுடாவில்2010ஆம் ஆண்டு கண்டறியப்பட்டிருக்கிறது. பிரபலமான பேன் கேக் வடிவில் இந்தமீன் இருந்ததால் இதற்கு இந்தப்பெயரிடப்பட்டிருக்கிறது.
அரபைமா மீன்...
பிரேசிலின் அமேசான் ஆற்றில் வாழும் இந்த வகை மீன்கள்தான் நன்னீர் வாழ்மீன்களில் பெரிய வகையாகும். மிகப்பெரிய அச்சுறுத்தும்உருவத்தைக்கொண்டிருந்தாலும் இவை மனிதர்களை தாக்கும் வகையில்லைஎன்பதுவும், மனிதர்களுக்கு சுவையான உணவாகவே பயன்படுகிறது என்பதுவும்கூடுதல் தகவல்தான்...!
வோர் மீன்... (Oar Fish)
கடல்வாழ் உயிரினமான இந்த மீன் கிட்டத்தட்ட 50அடி நீளம் வரையிலும்வளரக்கூடியது என்றாலும், இது பெரும்பாலும் 3000அடி ஆழத்தில் வாழக்கூடியதுஎன்பதால் மனிதனுடன் குறுக்கிடும் நிகழ்வு மிக அபூர்வம்தான். இதன் உடலமைப்பின் அடிப்படையில் இதற்கு ரிப்பன் மீன் என்றும் ஒரு பெயர் இருக்கிறது...!
யெட்டி நண்டு...
பழங்காலக்கதையிலிருக்கும் யெட்டி போன்ற உறுப்பைக்கொண்டிருப்பதால் யெட்டிநண்டு என்று பெயரிடப்பட்ட இது பசிபிக் கடலில் நடந்த ஒரு ஆராய்ச்சியின்போது2005ம் ஆண்டுதான் கண்டறியப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைட்ரோ தெர்மல் ஓட்டைகளில் வாழும் இவைகளின் முக்கிய உணவுகூட அந்தஓட்டைகளில் இருக்கும் ஒருவகை கெமிக்கல்தான் என்றும், அல்பினோ நோய்கண்கள் போல இருக்கும் இதன் கண்களுக்கு பார்வை கிடையாது என்றும்கண்டறியப்பட்டிருந்தாலும் இதன் மீதான ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது.
ஜியான்ட் ஐசோபாட்...
ஒட்டுண்ணி ரகத்தைச் சேர்ந்த இந்தக் கடல்வாழ் உயிரினம் பெரும்பாலும்இறந்துபோன திமிங்கலங்கள், மீன்கள் போன்றவற்றை உண்டு உயிர் வாழ்வனஎன்றாலும் கிட்டத்தட்ட எட்டு வாரங்கள் வரையிலும் எவ்வித உணவும் இன்றிஇவைகளால் உயிர் வாழ முடியும் என்பதுவும், 130 மில்லியன் வருடங்களுக்கும்மேலாக இதன் உடலமைப்பில் எவ்வித பரிணாம மாற்றமுமின்றி இவைகள்அப்படியே தொடர்ந்து வாழ்வதுவும் குறிப்பிடத்தக்க விஷயங்கள்தான்.
சாதாரண ஐசோபாட்களின் அளவையும், இந்த ஜியாண்ட் ஜசோபாடின் அளவையும்காட்டும் இந்தப் படங்களைப் பார்க்கும்போது இதை ஏன் நான் இந்த அறிவியல்அற்புதத்தில் பகிர்ந்தேன் என்பது உங்களுக்கே புரியும்...!
கிரினேடியர் மீன்...
வடக்கு பசிபிக் பகுதியிலிருந்து அலாஸ்கா வளைகுடாவின் கிழக்குப்பகுதிவரையிலும் கிட்டத்தட்ட 140மீட்டர் முதல் 3500 மீட்டர் வரை ஆழத்தில்வாழக்கூடியனதான் ஏழு அடி நீளம் வரையிலும் வளரக்கூடிய இந்த மீன்வகையாகும். இதன் வம்பயர் பற்களும் நீண்ட இதன் வால் பகுதியும் இதையும்ஒரு விநோதமான படைப்பாக மனிதர்களிடையே பிரபலப்படுத்தியிருக்கிறது.
ஜப்பானீஸ் ஸ்பைடர் நண்டு...
ஜப்பானியக்கடல் பகுதியில் வாழும் இவை, கடல் நண்டுகள் வகையைச் சேர்ந்ததுஎன்றாலும் இதன் நீளமான ஸ்பைடர் போன்ற கால்கள்தான் இதற்கு ஸ்பைடர்நண்டு என்ற பெயரை பெற்றுத்தந்திருக்கிறது. இதன் கால்கள் கிட்டத்தட்ட 12 அடிநீளம் வரையிலும், உடல் ஒன்றரை அடி வரையிலும், எடை 19 கிலோ வரையிலும்வளரக்கூடியவை என்றாலும், பெரும்பாலும் ஜப்பானிய மீனவர்களிடம் மாட்டுவதுநான்கு அடி நீளம் வரையிலும் கால்களை உடைய ஸ்பைடர் நண்டுகள்தான்...
90 வகையான மீன்களைக்கொண்ட கிளி மீன்களின் வகையைச் சேர்ந்ததுதான்இந்த நீல கிளி மீனும்...
கிளி போன்ற வாயமைப்பை உடைய இதன் தோற்றம்தான் இதற்கு இந்தப்பெயரைபெற்றுத்தந்திருந்தாலும் இதன் முழுவதுமான நீல நிறம் அற்புதமான விஷயம்தான்.சராசரியாக 30 முதல் 75 செ.மீ வரை வளரும் இந்த மீன்களில் சில ஆண் மீன்கள்120செ.மீ வரையிலும்கூட வளருமாம். அட்லாண்டிக் பெருங்கடல், பிரேசில், பகாமா,பெர்முடா மற்றும் மேற்கிந்தியத்தீவு பகுதிகளில் காணப்படும் இந்த வகை மீன்கள்பெரும்பாலும் தங்களது நேரத்தில் 80 சதவீதத்தை உணவைத்தேடுவதிலேயேசெலவழிக்கின்றதாம்...!
கடல் ஸ்லக்ஸ்... (Sea Slugs)
நத்தை குடும்பத்தைச்சேர்ந்த இந்த உப்புத்தண்ணி ஜீவராசிகளில் இதுவரையிலும்கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்ட வகைகள் கண்டறியப்பட்டிருக்கிறது.நியூடிபிரான்ச் என்பதன் கீழ் அடங்கும் வகைகளும்கூட கடல் ஸ்லக்தான் என்றுவரையறுக்கப்பட்டிருந்தாலும் இரண்டுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உண்டு என்றும்அறிவியல் கூறுகிறது.
இதில் சில கடல் ஸ்லக்குகள் தன்னுள்ளே ஆண், பெண் இரண்டு இனப்பெருக்க உறுப்புகளையும் கொண்டது என்பதுவும், கலவியில் ஈடுபடும் இரண்டு கடல் ஸ்லக்குகள் ஒன்றையொன்று கர்ப்பமாக்கும் என்பதுவும் சுவாரசியமான கூடுதல் தகவல்...!
மற்றபடி இதன் அறிவியல் பெயர்களையும், ஒவ்வொன்றின் குணாதிசயங்களையும் அலசி ஆராய்வதைவிடவும் வெறுமனே இவைகளில் சிலவற்றின் அழகை மட்டும் ரசித்து இயற்கையை வியக்கலாம் என்பது என் எண்ணம்...!
சிவப்பு உதடு வவ்வால் மீன்...
இதன் படத்தை பார்த்ததுமே இதன் பெயர்க்காரணம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்... கிட்டத்தட்ட 30மீட்டர் ஆழத்தில் கடலில் வாழும் இந்த ஜீவராசிகள் நீந்த முடியாததால் பெரும்பாலும் கடலின் ஆழத்தின் தரைப்பரப்பில் நடப்பதுதான் வாடிக்கை...
ஸ்டார்ரி ஈல்...
ஈல் என்றாலே ஹை வோல்டேஜ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மீன் என்று நம்மில் பலருக்கு தெரிந்திருந்தாலும் வெறும் 2அடி நீளம் மட்டுமே வளரக்கூடிய இந்த ஸ்டார்ரி ஈல்கள் அவ்வளவு ஆபத்தானவை இல்லை என்பதால் பெரும்பாலான அகுவேரியம்களில்கூட இவைகள் வளர்க்கப்படுகின்றன. கடலில் 7முதல் 100 அடி ஆழத்தில் வாழக்கூடிய இந்திய பசிபிக் பெருங்கடலில் கண்டறியப்பட்ட இந்த வகை ஈல்கள் பெரும்பாலும் குகை போன்ற பொந்துகளில் பதுங்கியிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டியபடி இரைக்காக காத்திருந்து வேட்டையாடுமாம்...!
No comments:
Post a Comment
welcome ur comment,