Wednesday, February 11, 2015

அர்விந்த் கெஜ்ரிவால் வெற்றியை கொண்டாடும் ஊடகங்கள்

அர்விந்த் கெஜ்ரிவால் வெற்றியை கொண்டாடும் ஊடகங்கள்

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் உலக அரங்கில் அறியப்பட்ட மனிதராகிவிட்டார். அந்த அளவிற்கு வெளிநாட்டு ஊடகங்கள் புகழ்ந்து தள்ளிவிட்டன. அது ஒருபுறம் இருக்க, கெஜ்ரிவால் என்ற சாமானிய மனிதனின் வெற்றிய இந்திய ஊடகங்களும் கொண்டாடி வருகின்றன. 

ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது முதல் அர்விந்த் கெஜ்ரிவால் முன்னெடுத்துச் சென்ற ஒவ்வொரு போராட்டத்தையும் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. கெஜ்ரிவாலின் போராட்டங்களுக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட செய்திகள்தான் மக்கள் முன்பு அவரை ஒரு ஹீரோவாக உயர்த்தியது. 

இந்த இமேஜ்தான் கடந்த 2013ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 28 இடங்களை வெல்ல உதவியது. தொங்கு சட்டசபை அமைந்த காரணத்தால் காங்கிரஸ் தயவில் முதல்வராக ஆட்சியில் அமர்ந்தார்.

கெஜ்ரிவால். ஆனால் அவரால் 49 நாள்களுக்கு மேல் பதவியில் நீடிக்க முடியவில்லை. அப்போதும் ஊடகங்கள் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாகவே இருந்தன. சில நேரம் விமர்சித்தபோது ஊடகங்களின் மீது குறை கூறினார் கெஜ்ரிவால். ஆனால் தற்போது அவர் பெற்றுள்ள வெற்றி 

அதிரடியாக வெற்றி.. 

மோடி என்ற மிகப்பெரிய பிம்பத்தை அடித்து உடைத்து நொறுக்கி 67 இடங்களைப் பிடிப்பது சாதாரண விசயமல்ல. எனவேதான் வெளிநாட்டு ஊடகங்களும், உள்ளூர் ஊடகங்களும் கெஜ்ரிவால் வெற்றியை கொண்டாடுகின்றன. 

மோடிக்கு எதிரான வெற்றி 

மோடி அலை, மோடி சுனாமி என்று பிரதமர் மோடியை வர்ணித்த ஊடகங்கள் அனைத்தும் ஆம் ஆத்மி கட்சியின் மிகப்பெரிய வெற்றியை மோடிக்கு எதிரான வெற்றியாகவே வெளியிட்டுள்ளன. 

துடைப்பம் ஜாக்கிரதை 

ப்ரூம்... உரூம்... உரூம் (Broom Vroom Vroom ) என்று தலைப்பிட்டுள்ள ‘மெயில் டுடே', ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான துடைப்பத்தின் விஸ்வரூப வளர்ச்சியை, வெற்றியை பறைசாற்றியுள்ளது. 

கழுத்தை இறுக்கிய மப்ளர் 

அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ‘மப்ளர் மேன்' என்று பட்டப்பெயர் சூட்டியிருந்தனர் பாஜகவினர். எனவேதான் MODI என்ற நான்கு எழுத்துக்கும் தனித்தனியாக விளக்கம் அளித்துள்ளது ‘டெலிகிராப்'. M - (Mufflered) கழுத்தை இறுக்கிய மப்ளர், O (Over confidence back fire) திருப்பி அடித்த ஓவர் காண்பிடன்ஸ், D - (Defeated for the first time) முதல் முறையாக வீழ்ச்சி, I (invisible no more) இனிமேலும் மாயாவி இல்லை என்று எழுதி அசத்தியுள்ளது ‘டெலிகிராப்' இதழ். 

டெல்லி ரொமான்ஸ் 
அர்விந்த் கெஜ்ரிவால் முதல்முறையாக தனது மனைவியை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இதை உணர்த்தும் விதமாக டெல்லி ப்ருமான்ஸ் என்று போட்டுள்ளது ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்'. அது மட்டுமல்லாது டெல்லி மக்களுக்கு துடைப்பத்தின் மீதான ரொமான்ஸ் என்று பொருள் வரும்வகையில் அந்த இதழ் தலைப்பிட்டுள்ளது. 

வால் டூ வால் கெஜ்ரிவால் 
கெஜ்ரிவால் என்ற வார்த்தையை இன்றைக்கு உச்சரிக்காத நபர்களே இல்லை. கடந்த லோக்சபா தேர்தலில் போது தென் தமிழகத்தில் கெஜ்ரிவால் என்றால் யார் என்று கேட்டனர். ஆனால் இன்றைக்கோ மோடியை அர்விந்த் கெஜ்ரிவால் தோற்கடிச்சுட்டாராமே என்று பேசிக்கொள்கின்றனர். அதை உணர்த்தும் வகையில் ‘டைம்ஸ் ஆப் இந்தியா' இதழ் ‘ வால் டூ வால் கெஜ்ரிவால்' என்று தலைப்பிட்டுள்ளது. 

உயரும் சாமானியர்கள் 
கெஜ்ரிவால் வெற்றியை சாமானிய மனிதனின் வெற்றியாகவே அனைவரும் கொண்டாடி வருகின்றனர். ‘அர்விந்த் முழங்குகிறார், சாமானியர்கள் உயருகிறார்கள்' என்று தலைப்பிட்டுள்ள ‘மில்லினியம் போஸ்ட்'. 

ஏகே 67 
அர்விந்த் கெஜ்ரிவாலை ‘ஏகே 49' என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார் பிரதமர் மோடி. ஆனால் அர்விந்த் 67 இடங்களை வென்றுள்ளதை குறிக்கும் வகையில் ‘ஏகே 67' என்று தலைப்பிட்டுள்ளது ‘மின்ட்' இதழ். 

5 ஆண்டுகால ஆட்சி நிச்சயம் 
49 நாள் பிரதமர் என்று எதிர்கட்சிகள் கிண்டல் செய்ததை முறியடிக்கும் வகையிவ் ‘பாஞ்ச் சால் கெஜ்ரிவால்' என்று தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கினர் ஆம் ஆத்மி கட்சியினர். இந்த முழக்கத்தையே தலைப்பாக சூட்டியுள்ளது ‘டைனிக் ஜாக்ரான்' என்ற இதழ். 

தலைநகரை இழந்த மோடி 
நாடுமுழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்று... சென்ற இடமெங்கும் சூறாவளியாக சுருட்டி மிகப்பெரிய சுனாமியாக வர்ணிக்கப்பட்டவர் மோடி. கடந்த 8 மாதகாலமாக தோல்வி என்பதே இல்லாமல் இருந்த பாஜகவிற்கு டெல்லியில் கிடைத்தது மிகப்பெரிய சறுக்கல். எனவேதான் ‘ தலைநகரை இழந்தார் மோடி' என்று தலைப்பிட்டுள்ளது ‘தி எகனாமிக்ஸ் டைம்ஸ்' இதழ். 

‘ஆப்' வென்ற ஆம் ஆத்மி 
இன்றைக்கு அனைத்திற்கும் ‘ஆப்'கள் வந்துவிட்டன. எனவேதான் எல்லா ‘ஆப்'பையும் வென்றார் கெஜ்ரிவால் என்று உணர்த்தும் வகையில் தலைப்பிட்டுள்ளது ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்' 

ஊடகங்களின் விமர்சனம் 
இன்றைக்கு பாராட்டும் ஊடகங்கள்தான், முதல்வராக கெஜ்ரிவால் அமர்ந்த பின்னர் அவருடைய ஆட்சிக்கு எதிராக விமர்சனங்களையும் முன்வைக்கும். அதையும் ஏற்றுக்கொள்வாரா கெஜ்ரிவால்? அல்லது கடந்த காலத்தைப் போல ஊடகங்களை குற்றம் சொல்வாரா?

THANKS TO
ONE INDIA
SOURCES
http://tamil.oneindia.com/news/india/how-indian-newspapers-covered-kejriwal-s-victory-





220844.html

No comments:

Post a Comment

welcome ur comment,