Tuesday, February 10, 2015

ஆம் ஆத்மிக்கு இனி சிக்கல் அரம்பம்.

ஆம் ஆத்மிக்கு  இனி சிக்கல் அரம்பம்.


நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் முடிவுகள், அனைத்து கருத்து
கணிப்புகளை தகர்த்து புதிய சாதனையை ஆம் ஆத்மி கட்சி பதிவு செய்துள்ளது.

எதிர்கட்சியே இல்லாமல் இந்திய தலைநகர் டெல்லியில் உருவாக்கிவிட்டது, கற்பணையால் கூட காண முடியாத வெற்றியை அரவிந்த கெஜ்ரிவாலுக்கு கிடைத்துள்ளது. 


70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி பெற்றது மட்டும் அல்லாமல், 54.28% சதவித வாக்குகளை பெற்றது மிகப்பெரிய சாதனை, ஏழைமக்கள் முதல் நடுத்தர மற்றும் பணக்காரர்கள் வரை அனைவரின் வாக்குகளை ஒருசேர பெற்றது மிகப்பெரிய அதிசயம்.


ஷங்கரின் முதல்வன் படத்தில் சாமானியன் முதல்வராவான், அந்த திரைபடம் ஹிந்தியில் ரிமெக்ல் பிளாப் ஆனது, கரணம். 


 திரைபடத்தில்  மட்டும் தான் அது  சார்த்தியம், நிஜ உலகில் அது சார்த்தியம்  இல்லை என்றார்கள் ஹிந்திக்காரன்கள், ஆனால் அதே வட நாட்டில் டெல்லியில் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வராக்கி சாத்திவிட்டார்.

மோடி அலை, பேடி வலை, அராஜகத்தால் அழிந்த பாஜக மற்றும் ஊழல் காங்கிரஸ் என எல்லாவற்றையும் காணாமல் போகவைத்த  டெல்லி மக்களை இந்த நேரத்தில் பாராட்டாமல் இருக்கமுடியாது.
delhi people really rocking


ஆம் ஆத்மிக்கு இனி தான் சிக்கல் அரம்பம். கூறிப்பாக  டெல்லி மக்களின்
எதிர்பாப்பை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும், அது எளிதான காரியம் அல்ல,
எதிர்  கட்சிகள் கண்டிப்பாக அதை செய்யவிடாது.
சட்டம் ஒழுங்கை பாழ்படுத்த அவர்கள் எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்யலாம், அதில் மிகவும் கவணமாக இருக்கவேண்டும்.

ஜான் லோக்பால் மசோதாவில் இருந்து ஆரம்பித்து  , டெல்லியின் வளர்ச்சியின் பாதையில் நோக்கி முன்னேற கவணம் செலுத்துக்கள்.

நீங்கள் டெல்லியில் செய்ய போகும் சாதணையை வைத்து தான், மற்ற மாநிலங்களில் தானாகவே ஆம் அத்மிக்கு  செல்வாக்கு அதிகாரிக்கும்.

மக்கள் மனதில் நாயகனாக வலம் வர அரவிந்த கெஜ்ரிவாலுக்கு எனது வாழ்த்துக்கள்.

இனி ஊழல்வாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஆப்பு தான் ஆம் அத்மி மூலமாக

ஆப் வைத்தார் பார் ஊழல் இல்லாத சர்க்கர்.

ஆம் ஆத்மி ரசிகனாக இருந்து அரவிந்த கெஜரிவால் செய்யும்  சாதனையை காண உங்களை போன்றே நானும் அவலாக இருக்கிறேன்.

உங்கள் சகோதரனாய்
அப்துல் ரஹ்மான் ஃபாயட்.

2 comments:

  1. ஆம் ஆத்மியின் வெற்றி நரேந்திர மோடியின் தோல்வி: அன்னா ஹசாரே

    டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றியைப் பெற்று வருவதை அடுத்து ஆம் ஆத்மியின் வெற்றி நரேந்திர மோடியின் தோல்வி என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

    “இது நரேந்திர மோடியின் தோல்வி. பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்ததற்கு கிரண் பேடியை மட்டும் குறைகூறக்கூடாது. பிரதமர் மோடியின் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

    அர்விந்த் (கேஜ்ரிவால்) அரசை எப்படி நடத்த வேண்டும் என்பதை அறிவார். காரக்பூர் ஐஐடி பட்டம் வென்றவர். மிகவும் திறமைசாலி, மற்றும் புத்திசாலி. நான் யார் அவருக்கு அறிவுரை வழங்க?” என்று கூறிய அன்னா ஹசாரே, கேஜ்ரிவாலுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    நில அபகரிப்பு தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் குறித்து அன்னா ஹசாரே பாஜக-வை சாடும் போது, “என்ன அவசரச்சட்டம் அது? வளமான வேளாண் நிலங்களை அபகரித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுப்பது என்ன மாதிரியான அவசரச் சட்டம்? பாஜக-வின் அனைத்து வாக்குறுதிகளும் ஒன்றுமில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

    கேஜ்ரிவால் ஊழலுக்கு எதிராக இந்தியா என்ற எதிர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்ட பிறகே புகழடைந்தார். அதனால்தான் அவருக்கு இப்போது இவ்வளவு ஆதரவு கிடைத்துள்ளது. ஆகவே, முன்பு செய்த தவறுகளை கேஜ்ரிவால் செய்யக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.” என்றார் அன்னா ஹசாரே.
    source the hindu

    ReplyDelete
  2. பாஜகவை விளக்குமாற்றால் அடித்து விரட்டி குப்பையில் போட்ட டெல்லி மக்கள்: வைகோ.

    டெல்லி: டெல்லி மாநில வாக்காளர்கள் பாசிச இந்துத்துவ வெறிபிடித்த நரேந்திர மோடி அரசுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில், பாரதிய ஜனதா கட்சியை விளக்குமாற்றால் விரட்டி, படுதோல்வி எனும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

    டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு இந்தியா என்பது 1977 க்குப் பின்னர் மீண்டும் இப்போது டெல்லி மாநில வாக்காளர்களால் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இமாலய வெற்றி பெற்றுள்ளது.

    பாஜகவை விளக்குமாற்றால் அடித்து விரட்டி குப்பையில் போட்ட டெல்லி மக்கள்:

    வைகோ டெல்லி மாநில வாக்காளர்கள் பாசிச இந்துத்துவ வெறிபிடித்த நரேந்திர மோடி அரசுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில், பாரதிய ஜனதா கட்சியை விளக்குமாற்றால் விரட்டி, படுதோல்வி எனும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள்.

    கோட்சேவுக்கு சிலை உலக உத்தமர் காந்தியாரை பிரார்த்தனைக் கூட்டத்தில் சுட்டுக் கொன்ற கொலைகாரப் பாவி நாதுராம் விநாயக் கோட்சே எனும் நச்சுப்பாம்பைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி, சிலையும் எழுப்ப முற்பட்ட இந்துத்துவ சக்திகளுக்கும், அதற்கு வெண்சாமரம் வீசிய நரேந்திர மோடி அரசுக்கும் வாக்காளர்கள் மிகச்சரியான பாடம் கற்பித்துள்ளார்கள்.

    எட்டே மாதத்தில் சாமானியனுக்கும், சாதாரண மனிதனுக்கும் ஜனநாயகம் ஆட்சி மகுடத்தைச் சூட்டும் என்பதுதான் ஆம் ஆத்மி கட்சியின் விண்முட்டப் புகழ் படைக்கும் வெற்றியாகும். பன்னாட்டுப் பகாசூரக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டுக் கொள்ளைக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஏஜெண்ட் வேலை பார்த்த நரேந்திர மோடி அரசை, எண்ணி எட்டே மாதங்களில் மக்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள்.

    மவுனப்புரட்சி நடந்து இருப்பது ஜனநாயகப் புரட்சி. மக்களின் மவுனப்புரட்சி.

    டெல்லி மாநிலத்தில் மட்டும் அல்ல, காஷ்மீரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை மதச்சார்பற்ற தன்மைக்கு உலைவைக்க முற்பட்டுவிட்ட நரேந்திர மோடி அரசுக்கு எதிரான மவுனப்புரட்சி அலை மக்கள் மனங்களில் எழுந்து விட்டது.

    நொறுங்கிய பாஜக

    இந்தியாவிலேயே பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி மிகுந்த பலம் பெற்று இருந்த டெல்லி மாநிலத்திலேயே அந்தக் கட்சியின் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டது; நாடெங்கும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மக்கள் மனதிலே எழுந்துள்ள கொந்தளிப்பை டெல்லித் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி இருக்கின்றன.

    பதவி விலகுவாரா மோடி

    மக்கள் ஆதரவை இழந்துவிட்ட நரேந்திர மோடியின் மத்திய அரசு பதவி விலக வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் பெருமையை மேலும் உயர்த்த, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்த வேண்டும்.

    அசாதாரணமான நிலை

    5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்த ஜனநாயகம் அனுமதிக்கிறதே என சிலர் கேட்கலாம். ஆனால் சுதந்திர இந்திய வரலாற்றில் நெருக்கடி நிலை காலத்திற்கு பிறகு ஒரு அசாதாரணமான நிலை இன்று ஏற்பட்டுள்ளது. பாசிச அடக்குமுறை இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையைத் தகர்த்து, ஆணிவேரை அறுக்கும் வேலையில் மோடி அரசின் முழு ஆதரவுடன் இந்துத்துவ சக்திகள் பாசிசத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.

    இந்தியாவின் ஜனநாயகத்தையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து வரும் அனைத்து அரண்களையும், குறிப்பாக மதச்சார்பற்ற தன்மையையும் நிர்மூலமாக்க பாரதிய ஜனதா கட்சியின் சங் பரிவாரங்கள் மூர்க்கத்தனமாகக் கொக்கரிக்கின்றன.

    இதற்கு மேல் மத்திய அரசாக நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா அரசு நீடிப்பது ஜனநாயகத்தை நசுக்கும் பாசிச அடக்குமுறை நாட்களாகவே ஒவ்வொரு நாளும் கடக்கும்.

    அறவழி போராட்டங்கள் எனவே நரேந்திர மோடி அரசு தானாக விலகாவிட்டால் அந்த அரசுக்கு எதிராக மக்களின் மவுனப்புரட்சியை முன்னெடுக்க ஜனநாயக முற்போக்கு சக்திகள் அறவழியில் போராட்டங்களை விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், வணிகர்கள் என அனைத்துக் களங்களிலும் தொடர வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

    Read more at: http://tamil.oneindia.com/news/india/vaiko-expresses-happy-over-the-defeat-bjp-delhi-polls-220692.html

    ReplyDelete

welcome ur comment,