Tuesday, December 25, 2012

rahmanfayed :டெல்லியில் நடந்தால், அது பயங்கரம்,. நெல்லை நடந்தால், அது சம்பவமா?.

rahmanfayed: டெல்லியில் நடந்தால், அது பயங்கரம்,. நெல்லை நடந்தால், அது சம்பவமா?.

நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.


சென்ற வாரம் இந்தியாவின் தலை நகரம் டெல்லியில், நடந்த சம்பவம் நாட்டைய உலக்கியது..
http://rahmanfayed.blogspot.in
இளம் பெண்ணும், அவரது நண்பரும் கிடந்த இடம்

 ஞாயிற்றுக்கிழமை இரவு 23 வயதே நிரம்பிய ஒரு இளம் பெண்ணையும், அவரது நண்பரையும் கொடூரமான முறையில் தாக்கி, இளம்பெண்ணை கற்பழித்து இருவரையும் நிர்வாணமாக குற்றுயிரும், குலைஉயிருமாக தெருவோரத்தில் ஓடும் வாகனத்திலிருந்து தள்ளிவிட்டு ஒரு கும்பல் தப்பியோடுகிறது. இரவு  10.24 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வருகிறது. போலீசார் அடுத்த ஆறு நிமிடங்களில் இருவரும் நிர்வாணமாக கிடந்த இடத்தை அடைந்தனர். அவர்கள் அந்த இடத்தை அடைந்தபோது அங்கே கிட்டத்தட்ட 50 மக்கள் குழுமி இருந்தனர். ஆனால் அந்த இளம் பெண்ணும், அவரது ஆண் நண்பரும் இன்னும் நிர்வாண நிலையிலேயே கிடந்தனர். அங்கிருந்த ஒருவரும் அவர்களது உடலை மறைக்க சிறிதும் முயலவில்லை, அந்த வழியாக வந்த கார்கள் ஒரு நிமிடம் நின்று கவனித்துவிட்டு அதன்பின் நிற்காமல் சென்றுவிட்டன. ஆண்கள் காரின் கண்ணாடி கதவுகளை ஏற்றிவிட்டுக்கொண்டனர். அங்கிருந்த பெண்களுக்கு கூட இன்னொரு பெண்ணின் மானத்தை மறைக்கவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. உயிருக்கு போராடிய அவர்கள் இருவரையும் முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வளவு பெரிய மனித நேயத்தை நாம் இக்காலக்கட்டத்தில் எதிர்பார்ப்பது சாத்தியமில்லைதான்.. எனவே அந்த காரணத்திற்காக நாம் பொதுஜனத்தை குற்றம் கூறவேண்டியதில்லை. ஆனால் தான் அணிந்திருந்த துணியினை எடுத்து அந்த இளம் பெண்ணின் உடலை மறைக்கக வேண்டும் என்ற எண்ணம் கூட அங்குள்ள ஒருவருக்கும் தோணவில்லையே ஏன்?. அந்த அளவுக்கு மனிதர்களின் மனம் மரத்துவிட்டது போல் தோன்றுகிறது. அதைவிட அசிங்கம் போலீஸ் வரும்வரை சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்களின் இரக்கமற்ற குணம்தான். 
http://rahmanfayed.blogspot.in
http://rahmanfayed.blogspot.in.


ஆகவே நம் நாட்டில் தவறு என்பது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் மட்டுமல்ல, அனைத்து மட்டத்திலும் இருப்பது நன்கு புரிகிறது, சமூகப் பொறுப்பில்  அலட்சியம் என்பது இந்திய நாட்டின் கடைக்குடிமகன் தொடங்கி  முதல் குடிமகன் வரை ரத்தத்தில் கலந்துவிட்டது போலவே தோன்றுகிறது

http://rahmanfayed.blogspot.in

ஆனால் டெல்லியில் மட்டும் நடக்கிறது இந்தியாவில் ஒவ்வொறு நாளும் நடக்கிறது ஆனால் பல கற்பழிப்பு சம்பவங்கள் வெளியே வருவதில்லை 
http://rahmanfayed.blogspot.in/2012/12/rahmanfayed.html
டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மாணவியை சீரழித்த நாய்கள் ...


"பாதிக்கப்பட்ட மாணவியை, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, நேரில் சென்று நலம் விசாரித்தர்,"
சோனியா மேடம் கிட்ட ஒரு கேள்வி?, பசுமை புரச்சி என்று, பல அப்பாவி மலைவாழ் மக்களின், கற்பை சூறையாடிய பொழுது, என்ன செய்திர்கள்,. இந்தியாவையே ஆளுவது உங்கள் கட்சி தான், காஸ்மிரில் பல அப்பாவி மக்களை, விசாரனை என்ற பெயரில் அழைத்து சென்ற ராணுவம், அவர்களின் கற்பை சூறையாடிய பொழுது, அதுவும் (வேலியே பயிரை மேயந்த கதை) அதுக்கு தங்கள் கண்டன குரல் கூட தெரிவிக்கவில்லை.. உங்கள் கட்சி ஆளும் பல மாநிலங்களில், இது போல பல சம்பவங்கள் நடக்கிறது, அதற்கு அறுதல் கூட கூற வில்லை, நல்லா இருக்கு உங்கள் அரசியல் நாடகம்,..


டெல்லியில் நடந்தால், அது பயங்கரம்,. நெல்லை நடந்தால், அது சம்பவமா?

"பாஜக தொண்டர்களோ பாதிக்கபட்ட பெண் சிக்ச்சை பெறும் மருத்துவமனையில் சென்று போராடிகிறார்கள்". ஒரு சந்தேகம்,
நீங்கள் செய்யும் செயலால், மருத்துவர்களை ஊழியர்களை, நோயாளிகளையும், என் அந்த பெண் சிகிச்சை நடப்பதையும் பாதிக்கும், என்பது தெரியாதா?.


http://rahmanfayed.blogspot.in
இந்த சம்பவத்தைப் பற்றி லோக் சபாவில் விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசியதாகவும், இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கில் தொங்க விட வேண்டும். அவர்கள் யாருமே உயிருடன் இருக்கக் கூடாது. மறுபடியும் வாழ அவர்களுக்கு வாய்ப்பே தரக்கூடாது  
காம கொடுரர்களை, மரண தண்டனை தான, சரியான முடிவு. ஆனால் அதை சொல்வதற்கு முன், உங்கள் கட்சி(பாஜக) செய்யும் செயலை, மறந்துவிட்டிர்களா கற்பழிப்பு செய்யுதவர்களுக்கு M.L.Aவாக பதிவு உயர்வு கொடுப்பவர்கள், 

அறு மாதங்களுக்கு முன் தான் தங்கள் கட்சி ஆளும் கர்நாடக மாநில சட்டசபையில், அதுவும் உங்கள் கட்சி M.L.A மற்றும் பெண்கள் நல துறை அமைச்சர், இருவரும் இனைந்து ஆபாச வீடியோ பார்த்வர்களை, அதுவும் சட்டசபையில் நடக்கும் பொழுது, நடந்த இந்த சம்பவத்தை பின், அவர்களை உங்கள் கட்சியில் இருந்து நீக்கி இருந்தால், அதற்கு தங்கள் குரல் கொடுத்து இருந்தால், உங்களை பாராட்டி இருப்பேன்.

டெல்லியில் நடந்தால், அது பயங்கரம்,. நெல்லை நடந்தால், அது சம்பவமா?

 மத்திய பரதேசத்தில் காவிகள், சிலர் இரண்டு கண்ணியஸ்திரிகளை, கொடுரமான முறை கற்பழித்தர்களே அதுக்கு தங்கள் குரல் கொடுத்திர்களா? அப்பொழுதும் உங்கள் கட்சி தான், ஆட்சியில் இருந்தது, அடுத்த குஜராத்தில் தங்கள் ஆட்சியில், அதுவும் தங்கள் கட்சிகாரர்கள் நடத்திய கலவரத்தில், பல ஆயிரம் முஸ்லிமகளை, கொன்றர்கள், பல பெண்களின் கற்புகளை சூறையாடினர்கள், இதைவிட பெரிய கொடுமை, 8மாத கர்பணி பெண்னை வயற்றை கிழித்து 8மாத சிசுவை பெட்ரோல், உற்றி எரித்தர்களே, காவி பயங்கரவாதிகள் (இந்து மக்கள் பெண்களை, கடவுளாக பாவிப்பவர்கள், அதுவும் கர்பணிபெண்னை, தாயாக கருதுபவர்கள், அவர்களுக்கு சிறிய கொடுதல் செய்வதே பெரிய பாவம், என்று கருதுபவர்கள்.) அப்படிபட்ட சில காவி பயங்கர வாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்திர்களா, நீங்கள் என் உங்கள் பதவி போய்விடும், என்ற பயமா, சகோதரி சுஷ்மா சுவராஜ் அவர்களே,..


உங்கள் கட்சி, இந்தியாவை ஆளவேண்டும், என்றால். உங்கள் விட்டை (பாஜக கட்சியை) சுத்தம் செய்யுங்கள், பிறகு நாட்டை (இந்தியாவை அளுங்கள்) சுத்தம் செய்யுங்கள், பிகார் முதல்வர் நித்ஸ், போலவது மாறுங்கள், எடுத்து காட்டாக, உங்கள் கட்சி மாநில முதல்வரை தான் கூறிப்பிடுகிறேன்..
 
டெல்லியில் நடந்த பயங்கர சம்பவத்திற்கு நாடு தழுவிய போராட்டம் வெடித்தது, பல மாணவர், இளைஞர்கள், டெல்லியில் போராட்டம் நடத்தினர், முடிவில் கலவரமாக வெடித்தது, கடைசியில் ஒரு காவலாளி பலியானது, தான் மிச்சம்." 

எனது கேள்வி? போராட்டத்தில் ஈடுப்பட்ட, இளைஞர்களுக்கு நீங்கள் செய்த போராட்டத்தில், ஒரு அப்பாவி உயிர் தான் போச்சி, இனி அந்த காவலாளி குடும்பம் ஏற்பட்ட இழப்பை, சரி செய்ய முடியுமா?, உணர்ச்சி வசபடும் நீங்கள், சிந்திக்க மாட்டரிக்களா? தங்கள் தான், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைய காரணமே, தங்களை போல, இளைஞர்கள் தான், என் எனின், பல இளைஞர்கள் காதல் என்ற போர்வையில், பல பெண்கள் கற்பை சூறையாடி, அதை பல இளைஞர்களுக்கு பகர்வது, தங்களின் நண்பேனா அல்லது வகுப்பு தோழன் கூட, அந்த செயல்களை செய்து இருக்கலாம், அதை நீங்கள் அறிந்தால், அவர்களை சரி செய்யுங்கள், நீங்களும் திருந்துங்கள், அந்த ஆறு பாவிகள், காம கொடுர செயல் செய்வதற்கு காரணம், அவர் கள் மது போதை தான்.. இளைஞர்களே முதல் மது குடிப்பதை, தவிருர்கள் பின், உங்கள் நண்பர்களையும், குடி பழக்கத்தில் இருந்து விடுபட வைங்கள், பின் அந்த பெண்னுக்கா போராடிங்கள்....
http://rahmanfayed.blogspot.in
நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் கண்ணீர் விட்டு அழுததாகவும், அடிப்படையில் நான் ஒரு கலைத் துறையைச் சேர்ந்தவள். இந்த சம்பவத்தால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். அந்தப் பெண்ணின் நிலையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன் என்றும் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியது கேட்பவர் நெஞ்சை உருக்கியது.
சகோதரி ஜெயா பச்சன்M.P அவர்களே உங்கள் துறை (சினிமா) தான், இதற்கு முதல் காரணம். [வன்முறை, ஆபாச. காதல், கொலை,] போன்ற காட்சிகளை காட்டிம் சினிமாவை பார்த்து தான், பல செயல்கள் நடை பெறுகிறது, 

இதே போல் கடந்த பிப்ரவரி மாதம், ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தனது ஆசிரியரை பள்ளியிலேயே கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்தான். அந்த வழக்கின் விசாரணையில் அம்மாணவன் தெரிவித்தது:- சமீபத்தில் பார்த்த “அக்னிபாத்” திரைப்படம் தான் தன்னை இப்படி செய்ய தூண்டியதாக தெரிவித்தார். பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் இது போன்ற காரியங்களில் இருந்து எவ்வாறு மீள்வது, நம் சமுதாயத்தை, நம் தலைமுறையை எவ்வாறு மீட்டெடுப்பது.

இப்ப தொடர் நாடகம் எனற பெயரில் விட்டுக்குள்ளே விட்டை கலகம்(மாமியார் மருமகள் பிரச்சனை என்று பல பிரச்சனை) உண்டாக்குவது உங்கள் கலைதுறை தான்.. நல்லா இருக்கு கலை துறையின் முதலை கண்ணிர்..

டெல்லியில் நடந்தால், அது பயங்கரம்,. நெல்லை நடந்தால், அது சம்பவமா?


கடந்த வருடத்தில்  மட்டுமே டெல்லியில் 572 பெண்கள் பலத்காரத்திற்குட்படுத்தப்பட்டார்கள் என  அதிகாரப்பூர்வ அறிக்கையை  வெளியிட்டிருக்கிறது தேசிய  குற்றப் புலனாய்வு அமைப்பு!   இந்திய சட்டம் போன்ற  குற்றவாளிகளை தப்பிக்க விடும் சட்டத்தால் இக்கயவர்களை ஒன்றும் அசைக்க முடியாது என்பது மட்டும் உறுதி!  நிச்சயமாக இன்று  ஆவேசக்குரல் எழுப்புபவர்கள் அடுத்த சூடான செய்தி வரும் சமயம் இதில் இருந்து ஒதுங்கிவிடுவார்கள்... இதான் இன்றைய நிலை!




மற்றவர்களுக்கு பிரச்சனை என்றால், போராடிவது தமிழர்கள் குணம், அடுத்த மாநிலம் இல்ல, பக்கத்து நாடான இலங்கையில், தமிழர்கள் குரல் கொடுப்பதில் இருந்து, டெல்லியில் நடந்த, பயங்கர சம்பவம் வரை, குரல் கொடுக்கும் தமிழர்களே, முன்று நாட்களுக்கு முன், தூத்துக்குடியில் 13வயது சிறுமியை, கற்பழித்து கொலை செய்பட்ட சம்பவம், டெல்லியில் நடந்த சம்பவத்தை, விட மிக பயங்கரமானது, 
http://rahmanfayed.blogspot.in
ஆனால் சில அரசியல் கட்சி தங்கள் அரசியல் லாபத்திற்காக தான், குரல் கொடுத்தர்கள், மற்றவர்கள் மவுனம் அதுக்கா, போராட்ட நடத்த வேண்டும் என்று சொல்லவில்லை, அந்த பயங்கர சம்பவத்திற்கு காரணம் மது, அதை குடிப்பதை நிறுத்துங்கள், அந்த மன போராட்டத்தில் இருந்து வெற்றி பெறுங்கள், மற்றவர்களையும் நேர்வழி படுத்துங்கள். ஆனால் தமிழகத்தில் வரும் அதிக நிதியே மது தான், நம்ம முதல்வர் எப்படி அதை தடுப்பர்கள். 




டெல்லியில் நடந்தால், அது பயங்கரம்,. நெல்லை நடந்தால், அது சம்பவமா?

இந்தியாவில் பெரிய பிரச்சனை, சாதி பிரச்சனை, சாதி பிரச்சனையில் முதலில் பலியாவது பெண்கள் தான். {என் எனின் ஒரு ஆணுக்கு, பிரச்சனை என்றால், அவனுக்கு மட்டும் தான் பாதிப்பு, ஆனால் பெண்னுக்கு என்றால், அவளின் குடும்பத்தையே பாதிக்கும்.} அதனால் தான் சாதி பிரச்சனை ஏற்பட்டால் பாலியல் கொடுமை தான் முதலில் நடக்கும், என் நம்ம தர்மபுரியில், நடந்த சம்பவம் அனைவருக்கும் தெரியும், முதலில் சாதி, மதம், இனம், போதங்களை மறப்போம் ஒற்றுமையாக வாழவோம்..


இந்தியா ஒரு விவசாய நாடு விவசாயத்திற்கு உயிரே நதிகள் தான். . அந்த நதிகளுக்கே பெண்கள் பெயர் சூட்டுவது இந்தியாவை பாரத மாதவாக ஒரு பெண்னாக கருதுவது இந்தியர்களின் கலாசாரம் எல்லாம் மதங்களும் பெண்களை அதிகம் போற்றுகின்றன இந்துகளை எடுத்து கொண்டால் பெண்களை கடவுளாக நினைப்பர்கள் கிருஷ்டவர்கள் சிலர் அன்னை மரியத்தை தெய்வமாக வணங்குகின்றன முஸ்லிமகளின் வாதம் படி முதலில் சொர்கம் செல்வது பெண்கள் தான் அதுமட்டும் அல்லாம் முஸ்லிமகள் இறைவனை தவிர யார் காலில் விழவது இல்லை ஏன் இறுதி தூதர் காலில் கூட விழ அனுமதி தரவில்லை இஸ்லாம் கூற்றுபடி தாயரின் காலில் தான் சொர்கம் உண்டு என்று வேதம் கூறுகிறது இப்படி எல்லா மதங்கள் பெண்களை மதிக்கன்றன் அப்படி பட்ட பல சமயம் வாழும் நம் நாட்டில் தான் இந்த சம்பவம் நடக்கிறது என்பது தான் வேதனை..

டெல்லியில் நடந்தால், அது பயங்கரம்,. நெல்லை நடந்தால், அது சம்பவமா?

அப்படி நெல்லை என் சம்பவம் கேட்காதிர்கள், டெல்லி நெல்லைனு ரைமிங்கா இருக்க. இந்த தலைப்பு எனது சொந்த ஊர் நெல்லை என்பதால் அப்படி ஒரு தலைப்பு வைத்தேன் வேற காரணம் இல்லை,
http://rahmanfayed.blogspot.in/2012/06/blog-post_30.html
இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் திருநெல்வேலி !!
உங்கள் வருத்தபட வைக்கும் அளவுக்கு என் எழுத்துகள் இருந்தால் மன்னியுங்கள்..

உங்கள் சகோதரன் 
ரஹ்மான் ./...

No comments:

Post a Comment

welcome ur comment,