திருச்சிராப்பள்ளி
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது ; இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் தலைநகர் ஆகும்; மேலும் இது உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி எனும் தகுதி பெற்றது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி தமிழகத்தில் உள்ள நான்கு முக்கியமான நகரங்களில் ஒன்றாகும்.
இதைப் பொதுவாக திருச்சி(Trichy) என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்து உள்ளது.
திருச்சி மலைக் கோட்டை
திருச்சி மலைக் கோட்டை , திருச்சிராப்பள்ளியின் அடையாளமாகவே விளங்குகிறது. இது காவிரி ஆற்றின் தென்கரையோரம் அழகிய தோற்றத்துடன் கம்பீரமாய் காட்சியளிக்கிறது.
இந்த மலை மொத்தம் 83 மீ உயரம் கொண்டது, மிகவும் பழமை வாய்ந்தது. ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளின் படி இந்த மலை 3.8 மில்லியன் வருடங்கள் பழமையானது என்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இந்தியாவின் வடக்கே இருக்கும் இமாலய மலையைவிட அதிக பழமையானது. குவார்ட்ஸ், பெல்ஸ்பார் போன்ற அரிய வகை தாதுக்கள் இந்த மலையில் கிடைக்கின்றன. உலகத்திலேயே சுற்றுலா இடமாக கருதப்படும்,
மலைகளில் இதுவே மிக உயரமானதாகவும், பெரிதாகவும் கருதப்படுகிறது.
இந்த மலையின் உச்சியில் இருக்கும் உச்சிப் பிள்ளையாரைச் சந்திக்க மொத்தம் 437 படிகளைக் கடக்க வேண்டும். மூச்சிறைக்க ஏறிய பின் உச்சிப் பிள்ளையார் கோவிலில் இருந்து திருச்சியின் அழகையும், காவிரி ஆற்றையும் கண்டு களிக்கலாம்.
மலைக்கோட்டையின் மேலிருந்து திருச்சி மாநகரின் வான்வழித் தோற்றம்..rahman.k.o |
மிகப் பிரபலமான இந்தப் பிள்ளையார் கோவிலில், விநாயகர் சதுர்த்தி அன்று மிகப் பெரிய கொலுக்கட்டை படைக்கப்படுவதுண்டு. மேலும் இங்கு உள்ள மிகப் பெரிய தாயுமானசுவாமி கோவிலில் இருக்கும் கடவுளுக்கு மாத்ருபூதேஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கு இருக்கும் சிவலிங்கம், இந்த மலையினாலேயே ஆனது. இந்தக் கோவிலுக்கு கீழே அமைந்துள்ள இரண்டு பல்லவர் கால குடவரைக் கோவில்களில் 6ஆம் , 7ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் காணப்படுகின்றன. மலை அடிவாரத்தில் குளமும் அமைந்துள்ளது.
17ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் கட்டப்பட்ட அரண்மனை ஒன்றும் மலை அடிவாரத்தில் காணப்படுகிறது. இப்போது அந்த அரண்மனை ராணி மங்கம்மாள் மஹால் என்று அழைக்கப்டுகிறது. இந்த அரண்மனை சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது. சில காலம் மதுரையை ஆண்ட நாயக்கர்களால் அரசவையாகவும் பயன்படுத்தப்பட்டது. இப்போது இந்த அரண்மனை அரசு அருங்காட்சியமாக செயல்படுகிறது.
மலை, கோட்டை, குளம், அரண்மனை, கோவில்கள் என இவை அனைத்தையும் ஒருங்கினைக்கும் வகையில் மேற்குப் பகுதியில் ஒரு பெரிய கதவு ஒன்றும் உள்ளது.
இந்தக் கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளைச் சந்தித்திருக்கிறது. இந்தக் கோட்டை நாயக்கர்கள், பிஜப்பூர், கர்னாடக மற்றும் மராட்டிய படைகளின் போரை கண்டு களித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயருக்கும் உதவியாக இருந்துள்ளது. இது போன்று நாயக்கர்கள் காலத்திலும், நவாப்கள் காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சியிலும் பல போர்களில் இந்தக் கோட்டையும் பங்கெடுத்துள்ளது.
ஸ்ரீரங்கம்
காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது 1987 ஆம் ஆண்டிலேயே ஆகும்.
இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் இதுவே மிகவும் பழமையானது என்று கருதப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது.
கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளிற் பாய்ச்சிச் செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக் கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன.
மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழினுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது.
கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். 1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
கங்கைகொண்ட சோழபுரம்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார்.
இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது.
அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.
இந்நகரம் இராசேந்திர சோழனால் கங்கையை வெற்றி கொண்டதைக் கொண்டாடுவதற்காகக் கட்டப்பட்டது. 1022-ல் இராசேந்திர சோழன் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் வென்று கங்கையையும் வென்றான். அந்த வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழன் என்ற பட்டப்பெயர் கொண்டான். மேலும் கங்கைகொண்ட சோழேஸ்வரம் என்ற சிவன் கோவிலையும் கட்டினர்.
இவனுக்குப் பிறகு வந்த சோழர்கள் இந்நகரத்தையே தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர்.
கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழப் பேரேரி அமைக்கப்பட்டது. இதற்கு சோழகங்கம் என்றும் பெயர் உண்டு.
போக்குவரத்து
திருச்சிராப்பள்ளி சாலை, தொடருந்து, வான்வழியாக இந்தியாவின் பல நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.RAILWAYSTATION
திருச்சிராப்பள்ளி தொடருந்து நிலைய சந்திப்பு..
TIRUCHY AIRPORT
திருச்சி வானூர்தி நிலையம்
பேருந்து நிலையங்கள்
TIRUCHY BUS STANDTHANKS TO
GOOGLE IMAGES,
TAMIL WIKPEDIA,
UR BROTHER
No comments:
Post a Comment
welcome ur comment,