நாம் ஒன்றாவோம்; எல்லாம் மாறும்..!
இந்து - முஸ்லிம் ( பாய் பாயோ ) என்று ஹிந்தியில் சொல்வதுபோல இரு தரப்பினர்களும் என்றும் அண்ணன் தம்பிகள்தான் மும்பை கொலாபா எனும் பகுதியில் கடந்த 24/09/2015 அன்று பெருநாள் தொழுகைக்கு இடம் போதாதால் கணபதி பந்தல் இடத்தில் தொழுதுக் கொள்ளும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் அனுமதித்துள்ளனர் வாழ்க மனிதநேயம்.பீட்டர்ஸ் சர்ச் நிர்வாகஸ்த்தார் சார்பாகவும் பெருநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.
அதே போன்று கடந்த வருடங்களில் ரமலான் மாதங்களில் அவர்கள் சார்பாக வாழ்த்தியதை இந்த வீடியோ மூலம் காணலாம்.
இங்க ரெண்டு படங்கள் இருக்கு...
முதலில் உள்ளது மன்னர் சுல்தான் சலாகுதீன் அய்யூபி அவர்கள் ஜெருசலத்தை கிருத்துவ மன்னர்கள் பிடியில் இருந்து மீட்ட பிறகு, முதன்முதலாக அங்கிருக்கும் பள்ளிவாசலின் வளாகத்துக்குள் அவர் நடக்கையில், அங்கு கிருத்துவர்களால் அந்த தரையில் பதிக்கப்பட்டு இருந்த சிலுவை பொரித்த கல்லை மிதிக்காமல் சற்று விலகி நடந்து சென்றார்கள்..!
இரண்டாவது அமெரிக்காவில் ஹாலிவூட், ஹால் ஆப் பேம் என்னும் இடத்தில் பிரபலமானவர்கள் பெயர்கள் தரையில் பதிக்கப்படும், அங்கு குத்துச்சண்டை வீரர் முகமது அலி அவர்கள் பெயரை மட்டும் தரையில் பொரிக்காமல் அந்த கல்லாய் மட்டும் சுவற்றில் பதித்துள்ளனர். ஏனெனில் அவரது பெயரில் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பெயர் வருவதால்..!
இரண்டும் வேறு வேறு காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள். ஆனால் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. அரபியும் வெள்ளைக்காரனும் இத்தனை சகிப்புத் தன்மையோடு வாழ்கையில், உலகத்துக்கே கலாசாரத்தை போதிக்கும் நம்மால் சகோதரத்துவத்துடன் வாழ முடியாதா என்ன..? பொய்யை பரப்பி நமக்குள் சண்டை மூட்டும் ஒவ்வொருவனையும் ஒதுக்கிவிட்டு...
...நாம் ஒன்றாவோம்; எல்லாம் மாறும்..!
நன்றி.
சுல்தான் சலாகுதீன்
No comments:
Post a Comment
welcome ur comment,