நேபாள கல் தட்டு...
வேற்றுகிரக வாசிகள்,பறக்கும் தட்டுக்கள் உலகின் பல பகுதிகளுக்கும் வந்து போனதாக பல செய்திகளை படிக்கிறோம். (ஏலியன்ஸ் இருக்குதா? இல்லையா? சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமே நடத்தலாம்… அது வேறு)
மாயன்கள் காலத்தில்(இன்கா), முற்கால எகிப்து, பெரு, இங்கெல்லாம் ஆதாரங்கள் (கற் சிலை) இருப்பதாக அறிகிறோம். நேபாளத்தில் எனும் போது இன்னும் ஆச்சர்யம் மிகுதியாகிறது. 12000 வருடங்கள் பழமையான கல் தட்டு (The Lolladoff plate) மர்மங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. பார்பதற்கு பறக்கும் தட்டு (UFO) போலவே இருக்கிறது. இருக்கிறது. இவ் வட்ட தட்டில் சுருள் வடிவ உடுமண்டலம் (spiral galaxy) வடிவம் (நம் பால்வெளியா?)
சுற்றுப்பதையில் ஒரு பறக்கும் தட்டு, சூரியன், இரு கைகளை நீட்டிய வேற்றுகிரக வாசி (நம்மை முறைப்பது போல் உள்ளது), சித்திர எழுத்துகள்.. விசித்திர விலங்கு, ஓணான், சிலந்தி..இப்படி பல வடிவங்கள் உள்ளன..
அக்கால விண்வெளி அறிவாற்றல், வேற்றுகிரகவாசி, பறக்கும் தட்டு, என்பதெல்லாம் உண்மையா? மேலே சொன்ன நாடுகளோடு அக்காலத்திய தொடர்புகள்.. இப்படி பல்வேறு வினாக்களை எழுப்பி விடை தெரியா மர்மமாக உள்ளது....
No comments:
Post a Comment
welcome ur comment,