Thursday, August 28, 2014

ஏலியன்ஸ் 05 - ஆட்களைக்கடத்தும் வேற்றுக்கிரக வாசிகள்!

ஏலியன்ஸ் 05 - ஆட்களைக்கடத்தும் வேற்றுக்கிரக வாசிகள்!

பார்ட்-1
பார்ட்-2

பார்ட் -3

பார்ட்-4
ஏலின்ஸ்  நான்காம்   பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ..


போன பதிவில் ஏலியன்ஸால் பரிசோதிக்கப்பட்ட சிலரின் சம்பவங்களைப்பார்த்திருந்தோம்…

இன்று அதன் தொடர்ச்சியாக மேலும் சில சம்பவங்களைப்பார்ப்போம். ரஷ்ய மலைப்பகுதியில்.. யுத்தம் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியில் நடந்த சம்பவம் இது…...

வழமையாக போரின் போது தனித்தனி பெரும் குழுக்களாக இருப்பது வழக்கம்… அந்த மாதிரித்தான் 3 குழுக்களைச்சேர்ந்த 1000 சிப்பாய்கள் தமது ஆயுதங்கள் சகிதம் ஒரு மலையடிவாரத்தில் தங்கியிருந்தார்கள்… அங்கு அவர்கள் தங்கியிருப்பது ஒன்றும் புதிதல்ல… 2,3 வாரமாகவே அங்குதான் நிலைகொண்டிருந்தார்கள்… ஒரு நாள் அந்த குழுவை சேர்ந்த சிப்பாய்கள் இருவர் மட்டும்… அடுத்த குழுவுடன் தமது உணவு சம்பந்தமான விடையங்களை கதைப்பதற்காக ( இன்னொரு நூளில் வாசித்ததன் படி… காலை கடன்களை முடிப்பதற்காக…) தனியாக சென்றிருந்தார்கள்… தமது வேலைகள் முடிந்ததும்… 1 மணி நேரத்தின் பின்னர் அவர்கள் தமது குழுவுடன் இணைவதற்கு திரும்பினார்கள்… என்ன ஆச்சரியம்… அங்கு இவர்களின் குழுவைச்சேர்ந்த ஒருவரைத்தானும் காணமுடியவில்லை… ஆனால்… அங்கே இருந்த ஆயுதங்கள், தங்கியிருந்த ரென்ட்கள், வாகனங்கள் அவர்களால் பயண்படுத்தப்பட்ட அனைத்துப்பொருட்களும் அப்படியே இருந்தன… இவர்கள் பீதியுடன் அத்தகவலை… தமது மேலிடத்துக்கு அறிவித்தார்கள்… அவர்கள் பெரும் தேடுதலை மேற்கொண்டும் ஒரு பலனுமில்லை… ( கூகுள்…)...

இந்த சந்தர்ப்பத்தில் வேற்று படையினர் இவர்களை கைது செய்திருக்க சந்தர்ப்பமில்லை… 1000 பேரி இருந்தவர்கள் ஒரு எதிர்ப்பை காட்டியிருப்பார்கள்… மற்றத்கு 1 மணி நேரத்துக்குள் இவளவும் நடக்க சந்தர்பமில்லை… தேடுதலின் போதும் அவர்கள் அகப்பட வில்லை… அந்த பனி மலைப்பிரதேசத்தில் கூட்டமாக தப்பி போவது என்பது சாத்திய பட வாய்ப்பில்லை… மேலும் பனிச்சரிவில் சிக்கி இருப்பார்கள் என்று நினைப்பதும் முற்றாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை… ( எங்கு என்ன நடந்து இருக்கும்… என்பதை இரண்டு கண்ணோட்டத்தில் பார்க்க முடியும்… அதுக்கு முன்னாடி இதே போன்று பதிவுசெய்யப்பட்ட இன்னொரு சம்பவத்தை பார்ப்போம்….) ———————————————————————————–...
http://rahmanfayed.blogspot.in/2012/08/blog-post_10.html
இது கொஞ்சம் பழசு… 1881… பேர்முடா!!!! பிரதேசம்… (பேர்முடா முக்கோன வலையமே ஒரு மர்மம்தானே… அது தொடர்பாக க பார்க்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் )...

பேர்முடா பகுதிவில் றோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது வழமை… ஒரு நாள் அப்படித்தான் றோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் காரர்களின் கண்களுக்கு… தூரத்தி ஒரு பாய்மரக்கப்பல்… ஒன்று தனியாக மிதந்து கொண்டிருந்தது தெரிந்தது… உடனே அருகில் சென்று பார்த்தார்கள்… என்ன துரதிஷ்டம் கப்பலில் ஒருத்தரையும் காணவில்லை…. ஒரு நாய் மட்டும் பசியால் வாடிப்போயிருந்தது…. கடல் கொள்ளையர்களின் வேலையாக இருக்கும் என்றால் அதுக்கும் சந்தர்ப்பமில்லை… ஏனெனின்… பயணிகளால் கொண்டு வரப்பட்ட நகைகள் மற்றும் தளபாடங்கள் அனைத்தும் அப்படிஅப்படியே இருந்தன… ( மேகதூதன் பதிப்பகம்…) அப்படி என்றால் என்னதான் நடந்திருக்கும்… ———————————————————————————–
இன்னொன்று… மேலுள்ள சம்பவங்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமானது… இதுவும் ஊர் பேர் தெரியாதது… ஆனால், பல விஞ்ஞானிகளாளும் ஆய்வாலர்களாளும் நேரடியாக உணரப்பட்ட ஃபேமஸான சம்பவம்…...

ஒரு விவசாயி… தனது தோட்டத்தில் அதிக படியான விளைச்சலை காட்டி இருந்தமையால் அவரை கெளரவிக்கும் நோக்கத்துடன் விவசாயத்துக்கு பொறுப்பான அதிகாரி… ஒரு நாள் மாலைஅவரின் வீட்டுக்கு வந்திருந்தார்… இருவரும் தமது தோட்டத்தில் கதைத்துக்கொண்டு உலாவினார்கள்… அப்படியே உலாவிக்கொண்டுருக்கையில்… அதிகாரி திரும்பி பார்த்த போது… விவசாயியை காணவில்லை… அந்த வெட்ட வெளி பிரதேசத்தில் அவர் ஓடி ஒழிந்திருக்க சந்தர்ப்பமே இல்லை…. சுற்று முற்றும் தேடினார்கள்… ம்ஹீம்… ஒரு அறிகுறியுமில்லை… உடனே ஆய்வாளர்களுகுக்கு ந்த புத்திசாலி அதிகாரி அறிவித்தார்…. அவர்களும் வந்தார்கள்…விவ‌சாயியை கண்டு பிடிக்க முடியவில்லை… ஆனால் இருவரும் நடந்து வந்துகொண்டிருந்த ஒரு இடத்தில் ஒரு பகுதியில் மாத்திரம்… வட்ட வடிவாக தரை புள்வெளியில் மஞ்சள் படிவு காணப்பட்டது…. அது ஏன் வந்தது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை…. அதைவிட ஆச்சரியம் என்னவென்றால்… அம்மனிதர் காணாமல் போன நாளிலிருந்து 3 நாட்களுக்கு அடிக்கடி தன்னை காப்பாற்றுங்கள் என பொருள் பட சத்தம் கேட்டதாக சில ஆய்வாளர்களும்… பல ஊர்மக்களும் தெரிவித்தார்கள்…. 3நாட்களின் பின்னர் அந்த குரல் ஓய்ந்துவிட்டது….
————————————————————————————

சரி… இனி என்ன நடந்திருக்கும் என்பதை பார்ப்போம்… இந்த சம்பவங்களை நான் சொன்ன மாரி இரண்டு வகையாக பார்க்கலாம்… ஒன்று… ஏலியன்ஸ் தமது தொழில் நுட்ப அறிவை பயன்படுத்தி தமது பறக்குந்தட்டுகளில் இருந்தவாறே கதிர்களின் துணையுடன் இவர்களை உள்ளெடுத்திருக்கலாம்… (அது எதற்காக என்பது தெரியாது…)

ஆனால்… அது எப்படி மனிதர்களை மட்டும் அந்த கதிர்கள் உள்ளெடுத்தது என்பது விளங்கவில்லை… நாம் காந்தத்தை பயன்படுத்தி உலோகங்களை மட்டும் கவர்வது மாதிரி… அவர்களின் தொழில்னுட்ப அறிவில் இது சாத்தியமாகி இருக்கலாம்… ( ஹீ…ஹீ… அப்ப எப்படிநாய் மட்டும் கதிர்களில் அகப்படாமல் தப்பியது??? அதுக்கு இன்னும் வாசித்துதான் தேடனும்…) அந்த குரலுக்கான விளக்கத்தை அடுத்த பதிவில் பார்ப்போம்… மற்ற வகைப்படி பார்த்தால்… அணுவில் புரோத்திரனுக்கு எப்படி இலத்திரன் மறையாக இருக்கிறதோ… அதே போன்று இந்த பூமிக்கும் மறையாக பரிமாணங்களில் முற்று முழுதாக மாறுபட்ட இன்னொறு உலகம் தொழிற்படலாம்… அது எப்படி இந்த சம்பவங்களுடன் பொருந்தும் என்பதை இதில் விளக்கினால்… பதிவு ஓவராக நீண்டுவிடும்… அதை அடுத்த பதிவில் விளக்குகிறேன்…

————————————————————————————

ம்ம்ம்… நீண்ட நாட்களாக இந்த பகுதியில் மனிதனின் எதிர்கால பரிமாண மாற்றங்கள் பற்றிய விஞ்ஞானிகளின் எதிர்வு கூறல்களைப்பற்றி எழுதிவந்தேன்… காரணம்…. இந்த ஏலியன்ஸ் என அறியப்பட்டிருப்பவர்கள் நாங்களாகவும் இருக்கலாம்… அதாவது… எதிர்காலத்தில் பரிமாண வளர்ச்சியில் நாம் சந்திக்க கூடுமென எதிர்வு கூறப்படும் உடல் மாற்றங்களுக்கும்… இன்று நாம் ஏலியன்ஸ் என இனங்கண்டிருக்கும் உருவத்துக்கும் ஒற்றுமைகள் இருப்பதைக்காணமுடியும்… ஆகவே… எதிர்காலத்தில் தொழில்நுட்ப ரீதியாக பெரும் வழர்ச்சியடையப்போகும...

இந்த ரைம்ரவலுக்குத்தேவையான வேகத்தையும் அடைந்திருக்க சாத்தியமுள்ளது… ஸோ… இந்த ஏலியன்ஸென அடையாலங்காணப்பட்டவர்கள் எதிர்கால நாங்களாகவும் இருக்கலாம் தானே… இது சம்பந்தமாக கனக்க எழுதவேண்டி இருக்கிறது… எல்லாத்தையும் ஒன்றாக எழுதினால் போராக இருக்கும்… அடுத்த பதிவுகளில்… எதிர்கால நாங்கள் தான் ஏலியன்ஸ் (?) என்பதற்கான சான்றுகளையும்… அப்படி என்றால் ஏன் அவர்கள் எமது நிகழ்காலத்துக்கு வந்த போதும் அந்த தொழில்நுட்ப அறிவுகளை எமக்கு சொல்லித்தரவில்லை…. மாற்று உலக கோட்பாடு… மற்றும் மேலும்சில விசித்திரமான ஏலியன்ஸ் தொடர்பான பதிவு செய்யப்பட்ட தகவல்களையும் பார்ப்போம்….
————————————————————————————
By : Chandran Pirabu .

இதன் ஆறாம்  பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ...

No comments:

Post a Comment

welcome ur comment,