அப்பன்டிக்ஸ் {APPENDIX}
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்
குடல்வால் கண்டறிய ஏற்படும் அறிகுறிகள் !!!(APPENDICITIS) !!!
சிறுகுடலானது
உடம்பின் இரைப்பையிலிருந்து தொடர்கின்றது. இக்குடலுக்குள் நுழையும்
உணவானது, மெல்ல மெல்ல தள்ளப்படுகின்றது. அதாவது கடல் அலையைப் போல்,
காற்றின் குவிதல், விரிதலால், உணவு தள்ளப்பட்டுச் சென்று, சீரணமாகிச் சத்து
உறிஞ்சப்பட்ட பின்னர் சக்கை அல்லது மலம் பெருங்குடலின் மூலமாய் வெளியே
கொண்டு போய்ச் சேர்க்கப் படுகின்றது.
அன்றாடம் உட்கொள்ளும் உணவில், நாம் அறியாமல் சேரும், சிறு கற்களும், குடலுக்குள் நுழைந்து, பின் மலத்துடன் வெளிப்பட்டுவிடும்.
Appendicitis
(அப்பன்டிசைடிஸ்) - என்பது பொதுவாக கல்டைசல் வலி என எல்லோராலும்
அழைக்கப்படுகின்றது. உண்மையில் இவ்வருத்தமானது குடல் வளரி தாக்கப்படுவதால்
ஏற்படுகின்றது.
குடல் வளரி அல்லது குடல்வால் என்பது எமது உணவுக்
கால்வாயின் பெருங்குடலும், சிறுகுடலும் பிரியுமிடத்தில் புறப்பக்கமாக
நீட்டப்பட்ட விரல் மாதிரி அமைந்த நீளவடிவான ஒரு சிறு பை போன்ற உறுப்பு
ஆகும். இது எமது வயிற்றின் கீழ்ப் பகுதியில் வலது பக்கமாக அமைந்துள்ளது.
இவ் உறுப்பானது சுமார் 4 அங்குல நீளமும் அரை அங்குல விட்டமும் கொண்ட ஒரு
புழு மாதிரியான தோற்றமுடையது.
அப்பன்டிசைடிஸ் என்ற பெயரைக் கேள்விப்
படாதவர்கள் இருக்க முடியாது. இருந்தபோதும் நோய் பற்றிய தெளிவு பலருக்கும்
இல்லை. நாம் உண்ணும் உணவில் உள்ள கல் குடலில் போய் அடைப்பதால்தான்
ஏற்படுகிறது எனத் தவறாக எண்ணுபவர்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள்.
மனிதனின்
உடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. இவற்றில் நன்மை செய்யும்
பாக்டிரியாக்களும் உண்டு. தீமை செய்யும் பாக்டிரியாக்களும் உண்டு.
நன்மைசெய்யும் பாக்டீரியாக்கள் உணவை செரிக்கவைப்பதோடு மட்டுமல்லாமல், மனித
உடலுக்குத் தீமை செய்யும் பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கிறது.
இவ்வாறு
செழிப்படைந்த நன்மைசெய்யும் பாக்டிரியாக்கள் உயிர் படலங்களாகக் குடல்வாலை
ஆக்கிரமித்து கொண்டு வாழ்கின்றன. குடல்வாலே, தீமைசெய்யும்
பாக்டீரியாக்களைத் தடுக்கும் அரணாக செயல்படுகிறது. எனவே குடல்வால் நன்மை
செய்யும் பாக்டீரியாக்களின் கிடங்கு என அழைக்கப் படுகிறது.
பெருங்குடலில்
வசிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கழிசல்,பேதி போன்றநோய்களின்போது
வெளியேறிவிடுகின்றன. ஒரு-மண்டலம் ஆண்டிபயாட்டிக் மருந்து சாப்பிட்டபிறகும்
இதேநிலை ஏற்படுகிறது. அதன் பிறகு குடலுக்குத் தேவையான நன்மை தரும்
பாக்டிரியாக்களை சப்ளைசெய்வது அப்பென்டிக்ஸ் எனப்படும் குடல் வாலாகும்.
அப்பன்டிக்ஸ் எவ்வாறு ஏற்படுகிறது?
அப்பென்டிக்ஸ் குழாயில் அடைப்பு
ஏற்படுவதால்தான் இது ஏற்படுகிறது. ஆனால் கல்லினால் அல்ல. மலத்துகள்கள்,
குடற் புழுக்கள், அல்லது கட்டிகள் பொதுவாகத் தடையை ஏற்படுத்தும். இதனால்
அதில் சுரக்கும் திரவம் வெளியேற முடியாது தடைப்பட்டு வீங்கும். அத்துடன்
அதில் கிருமித் தொற்று ஏற்பட்டு அழற்சியடையும்.
உடனடியாகச்
சத்திரசிகிச்சை செய்து அதனை அகற்ற வேண்டும். இல்லையேல் வயிற்றறையில் அது
வெடித்துவிடும். வெடித்தால் கிருமிகள் வயிற்றறை முழுவதும் பரவி ஆபத்தாக
மாறிவிடும். வயிற்றறையில் அவ்வாறு கிருமி பரவுவதை பெரிடனைடிஸ்
(Peritanaitis)என்பார்கள். எந்த வயதிலும் இந்நோய் ஏற்படலாம் என்ற போதும் 10
முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
அறிகுறிகள்
இதன் முக்கிய அறிகுறி வயிற்றில் ஏற்படும் வலிதான். இதன் வலியை எவ்வாறு ஏனைய வயிற்று வலிகளிலிருந்து வேறுபடுத்தி அறிவது?
திடீரென ஏற்படும் வலியாகும். தூக்கதிலிருந்தால் திடீரென விழத்தெழச் செய்யும்
ஆரம்பத்தில் முழு வயிறும் வலிப்பது போலிருக்கும். ஆனால் படிப்படியாக அவ்வலி வலது பக்க அடிவயிற்றில் நிலைகொள்ளும்.
முன்னெப்பொழுதும் அனுபவித்து இருக்காததாகத் தோன்றும் இவ்வலி சிலமணி நேரத்தில் மோசமாகும்.
படுத்தல்,
தலையணையை அணைத்தல், கால்களை மடக்கிப் படுத்தல் போன்ற எந்த நிலையிலும்
குறையாது. ஆனால் எழுந்து நடக்கும் போதும், இருமும் போதும், தும்மும்
போதும், ஆழ்ந்த மூச்செடுக்கும்போதும் தாங்க முடியாதளவு கடுமையாக இருக்கும்.
வலியைத் தொடர்ந்து வேறு சில அறிகுறிகளும் தோன்றலாம்
பசியின்மை
வாந்தி அல்லது வயிற்றுப் புரட்டு
மலங் கழித்தால் வலி குறையும் என்பது போன்ற உணர்வு. ஆனால் மலம் கழித்தாலும் வலி தணியாது.
கடுமையாக ஏறிக் காயாத குறைந்தளவு காய்ச்சல்
வயிற்றுப் பொருமல், வாய்வு வெளியேறுவதில் சிரமம்.
ஒரு சிலரில் மலச்சிக்கல் அல்லது மலம் இளக்கமாகக் கழிதல்
பொதுவாக
எக்ஸ்ரே ஸ்கான் போன்ற எந்தப் ஆய்வு கூடப் பரிசோதனைகளும் இன்றி நோயாளியை
சோதித்துப் பார்ப்பதன் மூலம் மருத்துவரால் நோயை நிச்சயிக்க முடியும்.
சிகிச்சை
அப்பென்டிசைடிஸ்
என மருத்துவர் தீர்மானித்தால் சத்திர சிகிச்சை மூலம் அதனை அகற்றுவார்கள்.
இப்பொழுது பாரிய வெட்டுக் காயம் இன்றி சிறுதுளைகள் வழியான லப்ரஸ்கோபி
சத்திரசிகிச்சையே பெரும்பாலும் செய்யப்படகிறது. உடனடியாகச் செய்வதன் மூலம்
உன்ளே வெடிக்கும் ஆபத்தைத் தவிர்க்கலாம்.
சிலசமயம் குடலுக்குள்
சேரும் கற்களானவை, குடலின் ஓரத்தில் பதிந்து விடுவதும் உண்டு. அப்படிப்
படியுமானால், அந்த இடம் புண்ணாகும். பின் உணவைத் தள்ளும் காற்றின் மூலம்
அக்கற்கள் குடலின் உட்புறம் படிந்துபோய் நின்றுவிடும். பின்னர் அது சிறிய
வால் போல் வளர ஆரம்பிக்கும் இதைத்தான் குடல்வால்(APPENDICITIS) என்கிறோம்.
இதன்மேல் மேல் நாம் உண்ணும் உணவு தாக்கும் போதெல்லாம் ஈட்டியால் குத்தியது
போன்ற வலி ஏற்படும்.
சிலருக்கு குடல் ஓரங்களில் உப்பு உறைந்து கல்லைப் போல் காரை கட்டிவிடும் இதனாலும் குடல்வால்(APPENDICITIS) ஏற்படும்.
இது
நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்தது நாம் இப்போது இதை எல்லாம் மறந்து
விட்டோம் . சுத்தமான விளக்கெண்ணெய் 30 மில்லியும் வாழைக்கிழங்கு சாறு
அல்லது வாழைத்தண்டு சாறு 30 மில்லியும் கலந்து காலை நேரத்தில் உணவிற்கு
முன் கொடுக்க வேண்டும். இப்படி 3 நாட்கள் தரவேண்டும். பலன் குடல் வாலிலுள்ள
கற்கள் வெளியேறிவிடும். இது ஒரு புறம் இருந்தாலும் இதை உபயோக படுத்திய
பிறகு உங்களுடைய குடும்ப மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை பெறுவதும் நல்லது
தான் . உங்களுடைய மனதிருப்ப்திக்காக .
உங்கள் உயிரை காப்பாற்றலாம் APPENDIX..
APPENDIX - இந்த உடல் உறுப்பு
குறித்து ஏதோ ஒரு வகையில் நாம் நன்கு அறிந்திருக்கவே செய்வோம். இந்த
பகுதியில் வரக்கூடிய வீக்கம் (Appendicitis) கொடுக்கக்கூடிய வலியை நாம்
உணர்ந்தோ/கேள்விப்பட்டோ இருப்போம். இந்த பதிவானது, இந்த உறுப்பு குறித்த
நவீன அறிவியல் தகவல்களை அலசுகின்றது. அதுமட்டுமல்லாமல், இந்த உறுப்பை
அகற்றினால் நம்முடைய வாழ்க்கையில் எம்மாதிரியான பாதிப்புகளை அது
ஏற்படுத்தலாம் என்பதையும் விளக்க முயற்சிக்கின்றது.
சென்ற மாதம் "Scientific American" ஆய்விதழின் தளத்தில், அப்பென்டிக்ஸ்
குறித்து வெளிவந்த ஒரு கட்டுரை என்னை வெகுவாக கவர்ந்தது. "அப்பென்டிக்ஸ்
உங்கள் உயிரை காப்பாற்றலாம் (Your Appendix Could Save Your Life)" என்று
தலைப்பிடப்பட்டிருந்த அந்த கட்டுரை, என்னுடைய கவனத்தை ஈர்த்ததற்கு பல
காரணங்கள் உண்டு. அதில் முக்கிய காரணம் என்றால், இந்த உடல் உறுப்பு நீண்ட
காலமாகவே உபயோகமற்ற அல்லது மிக குறைவான பயன்பாட்டை கொண்ட உறுப்பு என்பதாக
கருதப்பட்டு வந்தது.
உடலின் எந்தவொரு பாகத்தையும் உபயோகமற்றதாக நான் கருதியதில்லை. பரிணாம கோட்பாட்டின் பல யூகங்கள் காலப்போக்கில் நிலைத்ததில்லை. அது போல, இந்த அப்பென்டிக்ஸ் குறித்த புரிதல்களும் ஒரு நாள் மாறும் என்பதாகவே என்னுடைய எண்ணம் இருந்தது.
இம்மாதிரியான நேரத்தில், இந்த கட்டுரையை பார்க்க நேர்ந்ததால் ஒருவிதமான
ஈர்ப்பு இயல்பாகவே வந்துவிட்டது (இதுப்போன்ற மேலும் சில கட்டுரைகளை வேறு
சில அறிவியல் தளங்களிலும் பார்த்திருக்கின்றேன்).
தலைப்பை பார்த்தவுடன் நான் கேட்டுக்கொண்ட கேள்வி இது தான், உயிரையே இந்த உறுப்பு காப்பாற்றும் என்றால் இது எப்படி பயனற்ற ஒரு உறுப்பாக இருக்க முடியும்?
தலைப்பை பார்த்தவுடன் நான் கேட்டுக்கொண்ட கேள்வி இது தான், உயிரையே இந்த உறுப்பு காப்பாற்றும் என்றால் இது எப்படி பயனற்ற ஒரு உறுப்பாக இருக்க முடியும்?
டியுக் பல்கலைகழக மருத்துவ கழகத்தை (Duke University Medical Center)
சேர்ந்த ஆய்வாளரான பில் பார்க்கர், அப்பென்டிக்ஸ் ஒரு உபயோகமற்ற உறுப்பு
என்ற கருத்தை நிராகரித்தார். மேலும் இதுக்குறித்த ஒரு சுவாரசியமான யூகத்தை
முன்வைத்தார். ஆதாயமுள்ள பாக்டீரியாக்களை (Beneficial bacteria) சேமித்து
வைக்கும் ஒரு பெட்டகமாக அப்பென்டிக்ஸ் செயல்படுகின்றது என்ற யூகம் தான்
அது.
சற்றே தெளிவாக கூற வேண்டுமென்றால் இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். காலரா போன்ற நோய்கள் தாக்கும் போது, அவை குடல் பகுதியில் உள்ள ஆதாயமுள்ள பாக்டீரியாக்களை அழித்து/செயலிழக்க செய்து விடுகின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில், தான் சேமித்து வைத்துள்ள நல்ல பாக்டீரியாக்களை கொடுப்பதின் மூலம் குடல் பகுதி மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப அப்பென்டிக்ஸ் உதவுகின்றது.
இன்னும் சுருக்கமாக சொல்லுவேன்றால், நல்ல பாக்டீரியாக்களின் சரணாலயமாக
அப்பென்டிக்ஸ் திகழ்கின்றது. அப்பென்டிக்ஸ் இருப்பவர்கள், அது இல்லாதவர்களை
காட்டிலும், குடல் ரீதியான பாதிப்புகளில் இருந்து எளிதாக மீண்டு
விடுகின்றனர்.
பார்க்கரின் இந்த ஐடியா நிச்சயம் புரட்சிகரமானது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக, அரிசோனா பல்கலைகழகம் மற்றும் அரிசோனா மாநில பல்கலைகழக ஆய்வாளர்களுடன் சேர்ந்து இதுக்குறித்த ஆய்வை முன்னெடுத்து சென்றார்கள் டியுக் பல்கலைகழக ஆய்வாளர்கள். ஆய்வு கட்டுரைகளை சமர்பிக்கவும் செய்தார்கள். அப்பென்டிக்ஸ் குறித்த டார்வினின் எண்ணம் தவறு என்றும், இந்த உடல் உறுப்பு பயனற்றது இல்லை என்றும் தெரிவித்தார்கள்.
ஆனால் ஒரு தீர்மானமான முடிவிற்கு அனைத்து ஆய்வாளர்களாலும் வர முடியவில்லை. காரணம், இந்த ஐடியா இன்னும் தெளிவாக சோதிக்கப்பட வேண்டும்.
எப்படி சோதிப்பது?
யார் முன்வருவார்கள், காலரா போன்ற நோய் கிருமிகளை தங்கள் உடலில்
செலுத்திக்கொண்டு ஆய்வுக்கு உட்பட யார் தான் முன்வருவார்கள்? எலி போன்ற
உயிரினங்களில் சோதிக்கலாம் என்றால் அவற்றிற்கு அப்பென்டிக்ஸ் கிடையாது.
வேறு வழி?....
ஒரே ஒரு வழி தான் இருக்கின்றது. மனிதர்களில் தான் சோதனை மேற்கொள்ளப்பட
வேண்டும். குடல் ரீதியான நோய்களால் பாதிக்கப்பட்டோரை கணக்கிட வேண்டும்.
பின்னர் அவர்களை அப்பென்டிக்ஸ் உள்ளவர்கள், அப்பென்டிக்ஸ்
அகற்றப்பட்டவர்கள் என்று இரண்டாக பிரிக்க வேண்டும். பின்னர் இவர்களை
கண்காணிக்க வேண்டும். கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் இதுவும் செயல்முறை
ரீதியாக கடினமான ஒன்றே.
இம்மாதிரியான சூழ்நிலையில் தான், Clinical Gastroenterology and Hepatology
என்ற ஆய்விதழில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பரவசமூட்டும் ஆய்வு
முடிவுகள் வெளிவந்தன. பார்க்கரின் ஐடியா செயல்முறை ரீதியாக சோதிக்கப்பட்டு
விட்டதாக தெரிய வந்தது.
எப்படி?
C.difficile எனப்படும் படுஆபத்தான நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்ட சுமார் 254
நோயாளிகளை கண்டெடுத்தனர். இவர்கள் அனைவரும் பதினெட்டு வயதுக்கு
மேற்பட்டவர்கள். இவர்களை அப்பென்டிக்ஸ் உள்ளவர்கள், அகற்றப்பட்டவர்கள்
என்று பிரித்துக்கொண்டார்கள். பிறகு கண்காணிக்க ஆரம்பித்தார்கள்.
இந்த நுண்ணுயிரிகள் இயல்பான நிலையில் குடல்களில் உள்ள நல்ல
பாக்டீரியாக்களுடன் போட்டியிடாது. குடல்களில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள்
அழிய ஆரம்பித்துவிட்டால் இவை வேகமாக வளர/திரும்ப (recurrence)
ஆரம்பித்துவிடும். பயிர்களுக்கு நடுவே இருக்கும் களை போன்றவை இவை.
பார்க்கரின் யூகம் சரியென்றால், அப்பென்டிக்ஸ் இருப்பவர்களின் உடலில் இந்த
நோய் கிருமிகள் திரும்பக்கூடாது. ஏனென்றால், குடலில் உள்ள நல்ல
பாக்டீரியாக்கள் குறைந்தால், தான் சேமித்து வைத்துள்ள பாக்டீரியாக்களை
அப்பென்டிக்ஸ் தரும். இந்த பாக்டீரியாக்கள் அந்த நுண்ணுயிரிகளை
திரும்பவிடாமல் தடுக்கும். அதே நேரம், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டவர்களின்
குடல்களில் இந்த நுண்ணுயிரிகள் திரும்ப வேண்டும்.
கண்காணிக்கப்பட்டு முடிவுகள் வெளிவந்தன.
ஆஹா...
பார்க்கர் எதனை கணித்தாரோ அது தான் முடிவாக இருந்தது. ஆம், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்ட 48% நோயாளிகளில் C.difficile நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன. அதேநேரம், அப்பென்டிக்ஸ் உள்ளவர்களில் 11% பேரில் மட்டுமே இந்த நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன.
பார்க்கர் எதனை கணித்தாரோ அது தான் முடிவாக இருந்தது. ஆம், அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்ட 48% நோயாளிகளில் C.difficile நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன. அதேநேரம், அப்பென்டிக்ஸ் உள்ளவர்களில் 11% பேரில் மட்டுமே இந்த நுண்ணுயிரிகள் திரும்பியிருந்தன.
ஆக, அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டவர்கள் இந்த நோய் கிருமியால் நான்கு மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த முடிவுகள் நிச்சயம் பார்க்கரையும், அவரது சக ஆய்வாளர்களையும் ஊக்கப்படுத்தியிருக்கும்.
ஆனால், இங்கு கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விசயங்களும் இருக்கின்றன.
அதாவது, இந்த சோதனை முடிவுகள் அப்பென்டிக்ஸ் குறித்த தெளிவை தருகின்றனவா
என்ற கேள்விக்கு இன்னும் இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும். காரணம்,
அறிவியல் இப்படியாக வேலை செய்வதில்லை. ஒரு ஆய்வு முடிவை வைத்துக்கொண்டு
நாம் எதையும் சொல்ல முடியாது. இன்னும் நிறைய ஆய்வுகள் இதில் செய்யப்பட்டாலே
தெளிவான பார்வை கிடைக்கும்.
அதே நேரம், அப்பென்டிக்ஸ் நம் உடலில் மிகவும் பயனுள்ள உறுப்பு என்ற யூகத்தை
இந்த ஆய்வு முடிவுகள் ஊக்கப்படுத்தியிருக்கின்றன. மேற்கொண்டு இந்த
திசையில் பயணிக்க இந்த ஆய்வுகள் வழிவகை செய்திருக்கின்றன.
சரி, அப்பென்டிக்ஸ் வீக்கத்தால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது? இந்த
வீக்கம் உண்டாக்கும் வலியை அதனை அனுபவித்தவர்களை கேட்டால் தெரியும்.
துடிதுடித்து போய் விடுவார்கள். காலங்காலமாக இதனை உபயோகமில்லாத உறுப்பு
என்று அகற்றிக்கொண்டிருந்தார்கள் மருத்துவர்கள். இப்போது என்ன செய்வது?
Fine...நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ அப்பென்டிக்ஸ் வீக்கத்தால்
பாதிக்கப்பட்டால், உங்கள் மருத்துவரை தீவிரமாக கன்சல்ட்
செய்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை அதனை அகற்றாமல் மாற்று வழியில் தீர்வு காண
முயற்சி செய்யுங்கள். சில ஆய்வுகள், ஆண்டிபயாடிக் மூலமாக வீக்கத்தை
குறைக்கலாம் என்று தெரிவிக்கின்றன. இருப்பினும் இத்தகைய ஆய்வுகள் ஆரம்ப
நிலையிலேயே இருக்கின்றன.
பல முயற்சிகள் எடுத்தும் பலனில்லையா? வீக்கத்தை குறைக்கும் வேறு வழிகள்
கண்டுபிடிக்கப்படும் வரை அதனை அகற்றுவதை தவிர மருத்துவர்களுக்கு வேறு
வழியில்லை.
இறைவா, கூடிய விரைவில் இதற்கான நிரந்தர தீர்வை கண்டெடுக்கும் வழிமுறைகளை காட்டித் தருவாயாக...ஆமீன்.
இறைவனே எல்லாம் அறிந்தவன்.
thanks to
my brother aashiq ahamed.
ur brother
rahmanfayed./...
குடல்வால் கண்டறிய ஏற்படும் அறிகுறிகள் !!!(APPENDICITIS) !!!
ReplyDeleteசிறுகுடலானது உடம்பின் இரைப்பையிலிருந்து தொடர்கின்றது. இக்குடலுக்குள் நுழையும் உணவானது, மெல்ல மெல்ல தள்ளப்படுகின்றது. அதாவது கடல் அலையைப் போல், காற்றின் குவிதல், விரிதலால், உணவு தள்ளப்பட்டுச் சென்று, சீரணமாகிச் சத்து உறிஞ்சப்பட்ட பின்னர் சக்கை அல்லது மலம் பெருங்குடலின் மூலமாய் வெளியே கொண்டு போய்ச் சேர்க்கப் படுகின்றது.
அன்றாடம் உட்கொள்ளும் உணவில், நாம் அறியாமல் சேரும், சிறு கற்களும், குடலுக்குள் நுழைந்து, பின் மலத்துடன் வெளிப்பட்டுவிடும்.
Appendicitis (அப்பன்டிசைடிஸ்) - என்பது பொதுவாக கல்டைசல் வலி என எல்லோராலும் அழைக்கப்படுகின்றது. உண்மையில் இவ்வருத்தமானது குடல் வளரி தாக்கப்படுவதால் ஏற்படுகின்றது.
குடல் வளரி அல்லது குடல்வால் என்பது எமது உணவுக் கால்வாயின் பெருங்குடலும், சிறுகுடலும் பிரியுமிடத்தில் புறப்பக்கமாக நீட்டப்பட்ட விரல் மாதிரி அமைந்த நீளவடிவான ஒரு சிறு பை போன்ற உறுப்பு ஆகும். இது எமது வயிற்றின் கீழ்ப் பகுதியில் வலது பக்கமாக அமைந்துள்ளது. இவ் உறுப்பானது சுமார் 4 அங்குல நீளமும் அரை அங்குல விட்டமும் கொண்ட ஒரு புழு மாதிரியான தோற்றமுடையது.
அப்பன்டிசைடிஸ் என்ற பெயரைக் கேள்விப் படாதவர்கள் இருக்க முடியாது. இருந்தபோதும் நோய் பற்றிய தெளிவு பலருக்கும் இல்லை. நாம் உண்ணும் உணவில் உள்ள கல் குடலில் போய் அடைப்பதால்தான் ஏற்படுகிறது எனத் தவறாக எண்ணுபவர்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள்.
மனிதனின் உடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. இவற்றில் நன்மை செய்யும் பாக்டிரியாக்களும் உண்டு. தீமை செய்யும் பாக்டிரியாக்களும் உண்டு. நன்மைசெய்யும் பாக்டீரியாக்கள் உணவை செரிக்கவைப்பதோடு மட்டுமல்லாமல், மனித உடலுக்குத் தீமை செய்யும் பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கிறது.
இவ்வாறு செழிப்படைந்த நன்மைசெய்யும் பாக்டிரியாக்கள் உயிர் படலங்களாகக் குடல்வாலை ஆக்கிரமித்து கொண்டு வாழ்கின்றன. குடல்வாலே, தீமைசெய்யும் பாக்டீரியாக்களைத் தடுக்கும் அரணாக செயல்படுகிறது. எனவே குடல்வால் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் கிடங்கு என அழைக்கப் படுகிறது.
பெருங்குடலில் வசிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கழிசல்,பேதி போன்றநோய்களின்போது வெளியேறிவிடுகின்றன. ஒரு-மண்டலம் ஆண்டிபயாட்டிக் மருந்து சாப்பிட்டபிறகும் இதேநிலை ஏற்படுகிறது. அதன் பிறகு குடலுக்குத் தேவையான நன்மை தரும் பாக்டிரியாக்களை சப்ளைசெய்வது அப்பென்டிக்ஸ் எனப்படும் குடல் வாலாகும்.
அப்பன்டிக்ஸ் எவ்வாறு ஏற்படுகிறது?
ReplyDeleteஅப்பென்டிக்ஸ் குழாயில் அடைப்பு ஏற்படுவதால்தான் இது ஏற்படுகிறது. ஆனால் கல்லினால் அல்ல. மலத்துகள்கள், குடற் புழுக்கள், அல்லது கட்டிகள் பொதுவாகத் தடையை ஏற்படுத்தும். இதனால் அதில் சுரக்கும் திரவம் வெளியேற முடியாது தடைப்பட்டு வீங்கும். அத்துடன் அதில் கிருமித் தொற்று ஏற்பட்டு அழற்சியடையும்.
உடனடியாகச் சத்திரசிகிச்சை செய்து அதனை அகற்ற வேண்டும். இல்லையேல் வயிற்றறையில் அது வெடித்துவிடும். வெடித்தால் கிருமிகள் வயிற்றறை முழுவதும் பரவி ஆபத்தாக மாறிவிடும். வயிற்றறையில் அவ்வாறு கிருமி பரவுவதை பெரிடனைடிஸ் (Peritanaitis)என்பார்கள். எந்த வயதிலும் இந்நோய் ஏற்படலாம் என்ற போதும் 10 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
அறிகுறிகள்
இதன் முக்கிய அறிகுறி வயிற்றில் ஏற்படும் வலிதான். இதன் வலியை எவ்வாறு ஏனைய வயிற்று வலிகளிலிருந்து வேறுபடுத்தி அறிவது?
திடீரென ஏற்படும் வலியாகும். தூக்கதிலிருந்தால் திடீரென விழத்தெழச் செய்யும்
ஆரம்பத்தில் முழு வயிறும் வலிப்பது போலிருக்கும். ஆனால் படிப்படியாக அவ்வலி வலது பக்க அடிவயிற்றில் நிலைகொள்ளும்.
முன்னெப்பொழுதும் அனுபவித்து இருக்காததாகத் தோன்றும் இவ்வலி சிலமணி நேரத்தில் மோசமாகும்.
படுத்தல், தலையணையை அணைத்தல், கால்களை மடக்கிப் படுத்தல் போன்ற எந்த நிலையிலும் குறையாது. ஆனால் எழுந்து நடக்கும் போதும், இருமும் போதும், தும்மும் போதும், ஆழ்ந்த மூச்செடுக்கும்போதும் தாங்க முடியாதளவு கடுமையாக இருக்கும்.
வலியைத் தொடர்ந்து வேறு சில அறிகுறிகளும் தோன்றலாம்
பசியின்மை
வாந்தி அல்லது வயிற்றுப் புரட்டு
மலங் கழித்தால் வலி குறையும் என்பது போன்ற உணர்வு. ஆனால் மலம் கழித்தாலும் வலி தணியாது.
கடுமையாக ஏறிக் காயாத குறைந்தளவு காய்ச்சல்
வயிற்றுப் பொருமல், வாய்வு வெளியேறுவதில் சிரமம்.
ஒரு சிலரில் மலச்சிக்கல் அல்லது மலம் இளக்கமாகக் கழிதல்
பொதுவாக எக்ஸ்ரே ஸ்கான் போன்ற எந்தப் ஆய்வு கூடப் பரிசோதனைகளும் இன்றி நோயாளியை சோதித்துப் பார்ப்பதன் மூலம் மருத்துவரால் நோயை நிச்சயிக்க முடியும்.
சிகிச்சை
அப்பென்டிசைடிஸ் என மருத்துவர் தீர்மானித்தால் சத்திர சிகிச்சை மூலம் அதனை அகற்றுவார்கள். இப்பொழுது பாரிய வெட்டுக் காயம் இன்றி சிறுதுளைகள் வழியான லப்ரஸ்கோபி சத்திரசிகிச்சையே பெரும்பாலும் செய்யப்படகிறது. உடனடியாகச் செய்வதன் மூலம் உன்ளே வெடிக்கும் ஆபத்தைத் தவிர்க்கலாம்.
சிலசமயம் குடலுக்குள் சேரும் கற்களானவை, குடலின் ஓரத்தில் பதிந்து விடுவதும் உண்டு. அப்படிப் படியுமானால், அந்த இடம் புண்ணாகும். பின் உணவைத் தள்ளும் காற்றின் மூலம் அக்கற்கள் குடலின் உட்புறம் படிந்துபோய் நின்றுவிடும். பின்னர் அது சிறிய வால் போல் வளர ஆரம்பிக்கும் இதைத்தான் குடல்வால்(APPENDICITIS) என்கிறோம். இதன்மேல் மேல் நாம் உண்ணும் உணவு தாக்கும் போதெல்லாம் ஈட்டியால் குத்தியது போன்ற வலி ஏற்படும்.
சிலருக்கு குடல் ஓரங்களில் உப்பு உறைந்து கல்லைப் போல் காரை கட்டிவிடும் இதனாலும் குடல்வால்(APPENDICITIS) ஏற்படும்.
இது நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்தது நாம் இப்போது இதை எல்லாம் மறந்து விட்டோம் . சுத்தமான விளக்கெண்ணெய் 30 மில்லியும் வாழைக்கிழங்கு சாறு அல்லது வாழைத்தண்டு சாறு 30 மில்லியும் கலந்து காலை நேரத்தில் உணவிற்கு முன் கொடுக்க வேண்டும். இப்படி 3 நாட்கள் தரவேண்டும். பலன் குடல் வாலிலுள்ள கற்கள் வெளியேறிவிடும். இது ஒரு புறம் இருந்தாலும் இதை உபயோக படுத்திய பிறகு உங்களுடைய குடும்ப மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை பெறுவதும் நல்லது தான் . உங்களுடைய மனதிருப்ப்திக்காக .