இந்திய + இத்தாலிய இரும்பு மனுஷி!!
இந்திய + இத்தாலிய இரும்பு மனுஷி!!
உண்மையில் நாம் பாராட்டத்தான் வேண்டும். எத்தனை இழப்புகள்! எத்தனை சோகங்கள்! அத்தனையையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் வீறு கொண்டு எழுந்து இன்று வரை பலருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் சோனியா அம்மையாரை என்ன பாராட்டினாலும் தகும். பொதுவாக அரசியல்வாதிகளையே எனக்கு பிடிக்காது. ஆனால் இந்த இத்தாலிய பெண்மணியின் அறிவும் சமயோஜிதமும் என்னை மிகவும் கவர்ந்து விட்டது..
இத்தாலியில் உள்ள லூசியானாவில் பிறந்தார். 'எட்விகி அண்டோணியா அல்பினா மையினோ' (யப்பா... எவ்வளவு கஷ்டம் உச்சரிப்பில் :-)) என்பது இவரது இயற் பெயர். 1946 ல் பிறந்தார். ராஜீவ் காந்தியை மணந்ததற்கு பிறகு தனது பெயரை 'சோனியா காந்தியாக' மாற்றிக் கொண்டார்.
மேல் நாட்டு மருமகளாக வந்து இன்று உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகளில் ஒருவராக எல்லோராலும் பார்க்கப்படுகிறார். இந்திய அரசியலில் ஒரு செல்வாக்கு மிக்க நபராக 2004ல் போர்பஸ் பத்திரிக்கையால் தேர்வு செய்யப்பட்டார். உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் மூன்றாவது இடம் வகிக்கிறார். 'டைம்' பத்திரிக்கை இவரை 2007,2008 ஆண்டுகளில் 100 அதிக செல்வாக்கு மிக்க மக்களில் ஒருவராக தேர்ந்தெடுத்தது. எவ்வளவு சக்தி இருந்தாலும் நம் அம்மையார் ஜெயலலிதா போல் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடாமல் வெகு எளிமையாக எந்நேரமும் புன் சிரிப்போடு வலம் வருவது எல்லலோராலும் செயல்படுத்த முடியாத ஒன்று.
தனது கணவன் இறந்த சோகம்: சில ஆண்டுகளுக்கு முன்னால் மாமியார் சுடப்பட்டு இறந்த சோகம். அதற்கும் முன்னால் சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்த சோகம்: என்று அடுக்கடுக்காக வந்த சோகங்களை எல்லாம் புறந் தள்ளி அதனையே தனது முன்னேற்றத்துக்கு படிக்கற்க்களாக்கி இன்று புகழின் உச்சியில் இருக்கிறார் சோனியா! பிரதமர் பதவி சில காரணங்களால் கிடைக்காமல் போனாலும் அந்த எண்ணத்தையே தூரமாக்கி அந்த பிரதமரையே ஆட்டி வைக்கும் பொறுப்பை சுமந்து இன்று வரை எந்த குறையும் இல்லாமல் செய்து வருகிறார்..
(இத்தாலியில் சோனியா காந்தி அவர்கள் பிறந்த வீடு)
இவருடைய இடத்தில் நம்ம ஜெயலலிதா அம்மாவை உட்கார வைத்திருந்தால் மன்மோகன் சிங்கின் கதி என்ன ஆகியிருக்கும் என்பதையும் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். ஜெயலலிதாவுக்கு இருந்த பவரால் வாஜ்பாயை எப்படி எல்லாம் ஆட்டி வைத்தார் என்பதை நாம் கண்கூடாக பார்த்தோம்.
தனது கணவனை கொன்றவர்களை இன்னார்தான் என்று தெளிவாக தெரிந்தும் தனக்கு அதீத பவர் இருந்தும் அதனை உபயோகிக்காமல் அவர்களை பழி வாங்காமல் பொறுமை காத்தாரே அதை எண்ணியும் நான் வியந்ததுண்டு. தான் பொறுமையாக இருந்ததோடு அல்லாமல் தனது குழந்தைகளையும் அதே பொறுமைசாலிகளாக வளர்த்திய விதமும் அருமை. சிறைச் சாலையில் உள்ள நளினியை சந்தித்து 'என் அப்பாவை ஏன் கொன்றீர்கள்?' என்று வருத்தத்தோடு கேட்டாரே அந்த நேரம் மிக உயர்ந்து விட்டார் பிரியங்கா காந்தி. இவ்வளவு பக்குவமாக தனது குழந்தைகளை வளர்த்த திருமதி சோனியா காந்தியை இங்கு நாம் நினைத்துப் பார்க்கிறோம்.
ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக செயல்படத்தான் இந்தியா முதலில் முடிவெடுத்தது. ஆனால் தமிழகத்தின் ஒட்டு மொத்த எம்பிக்களும் கடைசி போர்க்களக் காட்சிகளை காணொளியாக போட்டுக் காண்பித்ததும் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் பல இடங்களில் சுடப்பட்டு இறந்து கிடந்த காட்சியும் சோனியா காந்தியின் மனதை ரொம்பவுமே உலுக்கி விட்டது. இதன் பிறகு தான் மன்மோகன் சிங்குக்கு போன் போட்டு இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முயற்ச்சித்தார் என்று நெருங்கிய காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளது. ராஜபக்ஷே நேரிடையாக கேட்டு கொண்டும் அதற்கு செவி சாய்க்காமல் அதற்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் நிலை பாட்டினை எடுத்தது பலராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. இதனால் பெரும் மாற்றம் வந்து விடாது என்றாலும் இலங்கை அரசாங்கத்தை மிரட்ட இது ஒரு வாய்ப்பாக அனைவருக்கும் அமைந்தது.
The Congress president heard out her partymen. It seems she was particularly chilled by the photo of Prabhakaran's young son, shot in the chest, but looking like he was peacefully sleeping.
Sonia assured the Tamil Nadu MPs that she would take action. Soon enough, she had told the PM that India could not be seen to be voting in favour of the Rajapaksa government.
The truth is that this time, the India-Sri Lanka relationship has turned on the death of a child. The irony is that he is Prabhakaran's son- "Times of India " reports. 30-march-2012
எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களின் புனர் வாழ்வுக்காக பல திட்டங்களை சோனியா காந்தி செயல்படுத்தியுள்ளார். இது சம்பந்தமாக இலங்கையில் சுஷ்மா ஸ்வராஜ் பேசும் போது
“உண்மையாக கூறுவதாயின் எல்லோருக்கும் அரசாங்கமே வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பதும் தவறான வாதமாகும். அவ்வாறு நோக்கும் போது தொழிற் பயிற்சி வழங்கும் மையங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்குகின்றன. இந்தியாவை பொறுத்தவரையில் நாம் பல்வேறு தொழில்சார் பயிற்சிகளில் தேர்ச்சிபெற்றுள்ளோம். அதன் மூலம் கிடைத்த நிபுணத்துவத்தையே நாம் இன்று இலங்கைக்கு வழங்கியுள்ளோம்.
ஏற்கனவே இது தொடர்பான பயிற்சிகளை நாம் இலங்கை போதனாசிரியர்களுக்கு அளித்துள்ளமையினால் இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள இந்நவீன உபகரணங்களை கையாளவும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கவும் முடியுமாகவிருக்கும். இதனை இங்குள்ள மக்கள் நன்றாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அத்துடன் இரு நாடுகளுக்குமிடையிலான பிணைப்பை இது மேலும் பலப்படுத்துமெனவும் நான் நம்புகின்றேன்.
இந்தியா இலங்கையில் 52 திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இவற்றுக்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகிறது. இந்த ஒத்துழைப்பு காரணமாக இத்திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறி வருகிறது. போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், தொழில்துறை என பல வகையான திட்டங்களும் இவற்றில் அடங்குகின்றன.
நட்புறவுமிக்க நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கு இந்தியா உட்கட்டமைப்பு வசதிகள் விடயத்தில் உதவிகளை வழங்கியுள்ளது. இதேநேரம் இலங்கை புதிய உதவிகளுக்கான கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது. இவையனைத்தையும் இயலுமான சகலவழிகளிலும் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டும்” என்றார். இந்தியா ஏற்கெனவே பல குடியிருப்புகளை கட்டி அதில் தமிழர்களை குடியமர்த்தியுள்ளது.
நம்ம தாத்தா கலைஞர் இப்பொழுதுதான் தனி ஈழம் பற்றி பேச ஆரம்பித்துள்ளார். தேர்தல் நெருங்குகிறதல்லவா அதுதான் முக்கிய காரணம். ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் நம்புவதை விடுத்து இலங்கைத் தமிழர்கள் சோனியா காந்தியை நம்பலாம். வாக்கு கொடுத்தாலும் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். நெடுமாறன், வைகோ, சீமான் போன்ற காமெடி பீசுகளை எல்லாம் தூரமாக்கி விட்டு சோனியா காந்தியிடம் நட்புறவை வளர்த்தால் நிரந்தர தீர்வாக இலங்கை தமிழர்களுக்கு அமையும்.
'புலம் பெயர்ந்த தமிழ் ஈழம்' 'தனி ஈழம்' என்பதெல்லாம் கேட்க நன்றாக இருக்கும். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் சில ஓட்டுக்களை இந்த கோசங்கள் பெற்றுத் தரும். ஒன்று பட்ட இலங்கையில் மத்திய அரசின் சோனியா காந்தியின் தலையீட்டில் அமையும் ஒரு தீர்வுதான் நிரந்தர தீர்வாக அமையும். காலம் கடத்தாமல் இலங்கைத் தமிழர்கள் சோனியாவை சந்தித்து நிரந்தர தீர்வுக்கு முயற்ச்சிக்கலாம்.
சில லட்சத்துக்கு அதிபதிகளானவர்களின் வாரிசுகள் எல்லாம் தனது வயதொத்த இளைஞர்களோடு பார்களில் வலம் வரும் போது ராகுல் காந்தியோ தலித்களின் குடிசையில் படுத்து கூழ் கஞ்சியை சாப்பிடுவதை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம். இவை எல்லாம் அரசியல் ஸ்டண்ட் என்று ஒதுக்கி விடவும் முடியாது. ஏனெனில் இவை எல்லாம் செய்து காண்பிக்காமலேயே இன்று வரை ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது காங்கிரஸ். 40 வயதுக்கு மேலாகியும் இன்று வரை தனது திருமணத்தைப் பற்றியே எண்ணாமல் நாட்டின் இளைஞர்களின் முன்னேற்றத்தில் அதீத கவனம் செலுத்தி வரும் ராகுல் அரசியல்வாதிகளுக்கெல்லாம் ஒரு ரோல் மாடல் என்றால் மிகையாகாது.
நம் ஊரிலும் பதவியில் இருந்தபோது வளர்ப்பு மகனுக்காக நம்ம 'அம்மா' :-) நடத்திய திருமணமும் நகைகளோடு கொலு பொம்மைபோல் போஸ் கொடுத்த இரண்டு பேரையும் நினைத்து பார்க்கிறேன். அங்கு டெல்லியில் கதர் துணிகளோடும் எந்த நகைகளும் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் பிரியங்கா காந்தியையும் நினைத்து பார்க்கிறேன்.
சோனியா காந்தி தனது பிள்ளைகளை பிற காங்கிரஸ் எம்.பிகளுக்கு எளிமையான பழக்க வழக்கங்கள் மேற்கொள்ள வலியுறுத்தினார், அதற்கு முன்னுதாரணமாக அவர் 2009 செப்டம்பர் மாதம் 14 ஆம்நாள் புதுடெல்லியில் இருந்து மும்பைக்கு சிக்கன வகுப்பில் விமானப்பயணம் செய்தார். அதனால் அவர் ரூ 10,000 மிச்சப்படுத்தினார். எம்பிக்களின் ஊதியத்திலிருந்து (ஒரு எம்.பியின் மாத ஊதியம் ரூ 16000)20% இந்தியாவில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டோர்களுக்கென நிதியளிக்க வலியுறுத்தினார். இது போன்ற செயல்களெல்லாம் அவரது எளிமையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
கருணாநிதியிடம் 'ஃபாதர்...ஃபாதர்' என்று அன்பொழுக பழகினாலும் கனிமொழி விஷயத்திலும் ராஜா விஷயத்திலும் தான் தலையிட முடியாது என்று திட்டவட்டமாக கூறிய அந்த நேர்மையையும் இங்கு நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அத்வானி, நரேந்திர மோடி, வாஜ்பாய், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களோடு ஒப்பிடும் போது மிக உயர்ந்த இடத்தில் உயர்ந்து நினைக்கிறார் சோனியா காந்தி. அவரது சேவையால் நம் நாடு மேலும் மேலும் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்து வல்லரசாக மாற வாழ்த்துவோம்.
டிஸ்கி: இந்த பதிவை அமைச்சர்கள் சிதம்பரமோ, வாசனோ பார்த்து விட்டு சோனியா அம்மையாரிடம் சொல்லி எம்பி சீட்டோ, எம்எல்ஏ சீட்டோ ரஹ்மான்க்கு வாங்கி கொடுத்தால் புண்ணியமாக போகும். பின்னே...நானும் கோடிகளில் புரண்டு பணம் பண்ண வேண்டாமா? எத்தனை காலத்துக்குத்துததான் ஒரு கம்பெனியில் மாத சம்பளத்துக்கு பொட்டி(கணிணி) தட்டிக் கொண்டு இருப்பது? :-)

நன்றி
சுவனப் பிரியன் அண்ணா......
சோனியா நினைத்திருந்தால் பிரதமர் ஆகி இருக்க முடியும். ஆனால், எதிர்க்கட்சிகள் மூலமாக பல விசித்திரமான வழக்குகளை தம கட்சியும் ஆட்சியையும் சந்திக்க வேண்டி வருமே... அதனால் நிம்மதியாக ஆட்சி அமையாதே என்றுதான் பிரதமர் பதவியை அவர் துறந்தார் அல்லது தியாகம் செய்தார்.
ReplyDeleteஇங்கே இன்னொரு அதிரடி திருப்பம். காங்கிரசின் பிரதமர் வேட்பாளர்கள் அவர் அத்தனை பேரையும் ஓரங்கட்டிவிட்டு மன்மோகன் சிங்கை நியமித்தாரே..! இந்த சாகச செயலுக்கும் அருமையான புத்திசாலித்தனமான பின்னணி ஒன்று உண்டு.
அதாவது, இந்திரா காந்தி ஒரு சீக்கிய காவலாளியால் கொலையுண்டபோது டெல்லியில் சீக்கியர்கள் கொல்லப்பட ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பது போல "ஒரு பெரிய மரம சாயும்போது நிலம் அதிரத்தான் செய்யும்" என்று குஜராத் இனப்படுகொலையில் நரேந்திர மோடி பேசியது போல போல பேசியுள்ளார். இது காங்கிரஸ் கொலையாளிகளுக்கு லைசன்ஸ் தந்தது போல ஆகி இன்னும் நிறைய அப்பாவி சீக்கிய மக்களை டில்லி, ஹிமாச்சல், உ.பி, பஞ்சாப் முழுக்க கொன்று குவித்தனர். சில ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக செய்தியில் படித்திருக்கிறேன்.
அந்த அழியாத கரை, பழிக்குப்பழி கொலைவெறி... இப்போது அமைச்சர் ப.சிதம்பரம் மீது செருப்பு வீசும் அளவுக்கு தணிந்து குளிர்ந்து உள்ளது என்றால்... அதற்கு காரணம் சோனியாவின் சமயோசித முடிவான ஒரு சீக்கியரை பிரதமர் ஆக்கியது..! பின்னே... இந்தியாவில் ஒரு சிறுபான்மை மதத்திலிருந்து பிரதமர் ஆக முடியுமா..? இதை செய்து காட்ட எண்ணம் வந்தது சோனியாவுக்கு என்றால் அவரம் வேறு ஒரு சிறுபான்மை மதத்தை சேர்ந்தவராக இருந்ததே காரணம்.
by
முஹம்மத் ஆஷிக் citizen of world