முஹம்மது ஆஷிக் உதவிய டாக்டர்.அப்பாராவ்.பாகம்-2.
நைட் ஷிப்டா..? அஸிடிட்டியா..? தீர்வு இதோ..!
பகல் நேரப்பணியில் கடும் கோடையில் உண்டான பிரச்சினையும் அதற்கு கண்ட தீர்வையும் சொல்லி இருந்தேன் அல்லவா..? இப்போது... இரவுப்பணியில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினையையும் அதற்கு கண்ட தீர்வையும் எழுதப்போகிறேன்..! யாருக்கேனும் எனது அனுபவம் பயன் தந்தால் மிக்க மகிழ்ச்சி..! வழக்கம்போல சகோஸ்... நீங்களும் பின்னூட்டத்தில் மேலும் சில ஐடியாக்களை தாருங்கள்..! :-))
படிக்கும் காலங்களில் என்னதான் முழுவாண்டு தேர்வே ஆயினும்... ராத்திரி 12 மணிக்குமேலே விழித்து படிக்கும் வழக்கம் எல்லாம் பொதுவாக கிடையாது..! காரணம்... தூக்கம்..! அது என்னமோ தெரியவில்லை..! படிக்கும் பள்ளி- கல்லூரி காலங்களில் மட்டும் தான் அப்படி ஒரு தூக்கம் கண்ணை செருகி சொக்கும்..! இரவு 1,2,3,4..... ஆகிய மணிகளை எல்லாம் நேரலை லைவ் ஆக பார்த்து பழக்கம் இல்லை..! நோன்பு காலங்களில் கூட சஹருக்கு கடைசியாக வீட்டில் எழுபவன் நான்தான்..!
tuticorin spic industry |
அப்பேற்பட்ட நான்... தூத்துக்குடி உரத்தொழிற்சாலையில் போய் வேலைக்கு சேர்ந்தால்... முதல் நாள் டூட்டியே இரவுப்பணி..! அதாவது... 10 pm - 6 am. 8 மணிநேர டூட்டி..! அது மட்டுமல்ல... இதேபோல தொடர்ச்சியாக 6 நாள் இரவுப்பணி பார்க்க வேண்டும்..! பிறகு, 7-ம் நாள் ஒரே ஒரு நாள் வார விடுமுறை..! பின்னர் தொடர்ச்சியாக 6 நாள் மாலை நேரப்பணி (2 pm - 10 pm)..! 7-ம் நாள் விடுமுறை..! அடுத்து 6 நாள் தொடர்ச்சியாக காலை நேரப்பணி (6 am - 2 pm)..! 7-ம் நாள் விடுமுறை..! மீண்டும் 6 நாள் இரவுப்பணி..! இப்படி சுற்றி சுற்றி வரும் ஷிஃப்ட்டில் பணியாற்றும் ஒரு வேலை எனக்கு..! விடுமுறை கிழமை அடிப்படையில் 7 பிரிவாக ஊழியர்கள் பிரிந்து... ஒரு பிரிவு ஓய்வில் இருக்க மீதி ஆறு பிரிவு 3 ஷிப்டுகளில் வேலை செய்ய... 24 மணி நேரமும் தொழிற்சாலை முழுத்திறணில் இயங்கிக்கொண்டிருக்கும்..!
உள்ளே ஒரு கேண்டீன் சர்வீஸ் உண்டு. எல்லா ஷிப்டிலும் இயங்கும். நாம் இருக்கும் இடத்துக்கு சாப்பாடு தேடி வரும். காலை 7am டிஃபன், மதியம் 12pm லஞ்ச், மாலை 7pm டின்னர், இரவுப்பணியில் அதிகாலை 3am ப்ரேக்-க்பாஸ்ட் என்று எல்லாம் உண்டு. All Subsidized - கிட்டத்தட்ட எல்லாமே ஃப்ரீ போன்றது - சாப்பிடாமல் பசியோடு இருக்க வாய்ப்பே இல்லை..!
.
இதுபோல.. இரவு விழித்து தூங்(கி)காமல் விழித்து தூங்(கி)காமல் ஆறுநாள் இரவில் வேலைபார்த்ததால்... அத்தனை வருடம் இரவில் தூங்கியே பழக்கப்பட்ட உடம்பு... இந்த திடீர் மாற்றத்தை உடனே ஏற்றுக்கொள்ளவில்லை..! அதனால் உடல் சூடு அதிகரித்து... அதன் விளைவு... வந்தது அஸிடிட்டி..! (Acidity-நெஞ்சு எரிச்சல்) அஸிடிட்டிக்கு ஏகப்பட்ட காரணிகள் பிறருக்கு உண்டு என்றாலும், அவை எல்லாம் எனக்கு காரணிகளாக இல்லை..! நைட் ஷிப்ட் தான் - அதனால் ஏற்பட்ட உடல் சூடுதான் எனக்கு காரணி..!
இது என்ன செய்தது என்றால்... முதல் நாள் இரவு டூட்டி முடிந்து காலை ஆறரை மணிக்கு வந்து படுத்தால்... பகல் 11... 12 மணிக்கெல்லாம்... வயிற்றுக்கு மேலே நெஞ்சுக்கு கீழே diaphragm region இல் பரவலாக எரிச்சல் தந்து வலிக்க ஆரம்பித்துவிடும்..! தூக்கம் கலைந்து விடும்..! அவ்ளோதான்..! கொஞ்சம் கொஞ்சமாக கூடி... மதியம் சாப்பிடவும் பிடிக்காமல்.. சாப்பிட்டால் இன்னும் எரிச்சலும் வலியும் கூடி... பின்னர் மாலை ஆனதும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்..! ஆனால்... இரவு எல்லாம் சரியாகிவிடும்..! பிறகு, அடுத்த நாள் பகல் 10... 11 மணிக்கெல்லாம் வலியும் எரிச்சலும் என்னை எழுப்பி விட்டுவிடும்..!
.
இப்படியே... போய்... 5-வது... 6-வது நாளின் இரவு டூட்டி முடியும் சமயமான காலை 6 மணிக்கெல்லாம் வலியும் எரிச்சலும் ஆரம்பித்து தூங்கவே முடியாது போய்விடும்..! இப்படி ஒவ்வொரு தடவையும் இரவுப்பணி என்றால் மட்டும் இந்த பிரச்சினை வந்து விடும்..! இதற்கு என்ன தீர்வு..? இரவுப்பணியே செய்யாமல் இருக்க வேண்டுமோ..!?
முதல் இரண்டு வருடம் ட்ரைனிங் பீரியட் என்பதால்... என்னால் ஷிப்ட் டூட்டியில் இருந்து தப்பிக்க முடியவில்லை..! எனவே, இதற்கு தக்க மருத்துவ தீர்வு மட்டுமே வழி..! முயற்சித்தேன்..! ஒவ்வொரு டாக்டராக பார்த்தேன்..! எல்லோருமே... ஜெலுசில்... ரோஸ் கலர் சிரப்... டைஜின்... தயிர்... மோர்... இப்படியே ப்ரிஸ்கிரிப்ஷன் & ஐடியா கொடுக்க... ஒரு சிலர்... 'இது நாளைடைவில் தீவிர அல்சரில் கொண்டு போய் விட்டுவிடும்' என்று பயமுறுத்த ஆரம்பித்துவிட்டனர்..!
பகல் நேர டூட்டியில் என்னடாவென்றால்... fungal attack பிரச்சினை... ராத்திரி டூட்டியில் இந்த அஸிடிட்டி பிரச்சினை... மனம் வெறுத்து, 'பேசாமல் வேலையையே விட்டு விடலாமா' என்று சிந்திக்க ஆரம்பித்த போதுதான்... fungal attack பிரச்சினை... ஒரு சிறந்த மருத்துவரின் (ஆனாலும் யாரும் தன்னிடம் வராததால் 'ஈ ஓட்டுபவர்'..) வித்தியாசமான முயற்சியில் தீர்வுக்கு வந்தது..! இது பற்றி சுவாரசியமாக அறிய... முஹம்மது ஆஷிக் உதவிய டாக்டர்.அப்பாராவ்.பாகம்-1 ...அந்த டாக்டர்தான் மேற்படி அஸிடிட்டி பிரச்சினைக்கும் நான் இதுவரை சென்று பார்க்காத ஒரே டாக்டர்..! எனவே... இப்போது அவரிடம் இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டி சென்றேன்..! இம்முறை... என்னை பார்த்ததும் புன்முறுவலிட்டவர்... பேனாவை எடுத்து.. 'எங்கே கையெழுத்து போட வேண்டும்?' என்று என்னிடம் கேட்கவில்லை..! :-))
நேரடியாக... என்ன பிரச்சினை என்றார்...!
சகோ..! இதுவரை நான் உங்களிடம் சொன்னதை ஒன்று விடாமல் அப்படியே விபரமாக சொன்னேன்..!
அவர்... ஓகே.. ஓகே.. என்று... தலையாட்டிவிட்டு...
உங்களுக்கு தூக்கம் இல்லாததால்... உடல் சூடாகி அசிடிட்டி வந்துள்ளது. ஏற்கனவே உங்க பாடி ஹீட்டில் உள்ளபோது... அசிடிட்டி உள்ள நேரம் அல்லோபதி கெமிகல் மெடிசின் தந்தால்... அதிலும் ரியாக்ஷன் ஹீட் வெளி வந்து... அசிடிட்டியில் எதிர்பார்த்த ரெமடி இருக்காது..! எனவே..... இதுக்கு வேறு ஒரு மெடிசின் உள்ளது..! ஹீட்டையும் குறைத்து அசிடிட்டியையும் குறைக்கிறா மாதிரி...! ---என்று சொல்லிவிட்டு.....
இதோ ட்ரீட்மென்ட்... பரிஸ்கிரிப்ஷன்... என்று... அவர் வழக்கப்படி சொல்லிக்கொண்டே... எழுதிக்கொண்டே... சொல்ல ஆரம்பித்து விட்டார்...!
அடுத்து... ப்ளீஸ்.... கொஞ்சம் சிரிக்காமல் சீரியசாக படிக்கவும் சகோ..! :-)))
முதல் நாள் நைட் ஷிப்ட் முடிஞ்சதும் எங்கே போவீங்க..?
வீட்டுக்குத்தான்...! ஏன் கேக்குறீங்க டாக்டர்..?
இல்லை... வீட்டுக்கு போவாதீங்க...!
அப்புறம்...?
நேரா பஸ் ஸ்டாப்புக்கு அருகே உள்ள வாழைப்பழக்கடை போங்க...!
போயி...?
ஒரு வாழைப்பழம் மட்டும் சாப்பிடுங்க...!
என்னா வாழைப்பழம் சாப்பிடனும்...?
ஏதாவது ஒன்னு... ம்ம்ம்... ரஸ்தாளி... பச்சைநாடா... செவ்வாழை இப்படி...! பூவன் வேண்டாம்..! அப்புறமா வீட்டுக்கு போயி நல்ல்லா தூங்குங்க...!
ஓகே டாக்டர்..! :-)
.
ரெண்டாவது நாள் நைட் ஷிப்ட் முடிஞ்சதும் எங்கே போவீங்க..?
ஹி..ஹி... அன்னிக்கும் வீட்டுக்குத்தான்...!
இல்லை...நேரா வாழைப்பழக்கடை போங்க...
ஒகே..!
ரெண்டு வாழைப்பழம் சாப்பிடுங்க...!
ஓ...ஓகே..!
அப்புறமா வீட்டுக்கு போயி தூங்குங்க...!
ஓகே டாக்டர்.
மூணாவது நாள் நைட் ஷிப்ட் முடிஞ்சதும்....
வீட்டுக்கு போகமாட்டேன்.... நேரா வாழைப்பழக்கடை போவேன்...
எக்ஸாக்ட்லி... யூ ஆர் வெரி இண்டல்லிஜென்ட்...
:-)) ம்ம்ம்... தேங்க்ஸ்.... போயி...?
மூணு வாழைப்பழம் சாப்பிடுறீங்க....
தெளிவா புரியுது டாக்டர்... ஒகே. டன்..!
அப்புறமா வீட்டுக்கு...
போயி தூங்கிருவேன்... கிளியர்..!
(இவர்... டாக்டர்தானா.... இல்லே... வாழைப்பழவியாபாரியா...)
நாளாவது நாள் நைட் ஷிப்ட் முடிஞ்சதும்....
நேரா வாழைப்பழக்கடை போயி நாலு வாழைப்பழம் சாப்பிடனுமா... டாக்டர் இது கொஞ்சம் கஷ்டம்.... சின்ன பழமா.... இருந்தாகூட பரவ்வ்....
ஹலோ... ஹலோ... வெயிட்... வெயிட்... டோன்ட் பி சில்லி... எதுக்கு இந்த அவசரம்...? நான்தான் சொல்லிட்டு இருக்கேன்ல...? சொல்றதை பொறுமையா கேளுங்க...! இங்கே யாரு டாக்டர்...?
ஓ.... ஸாரி டாக்டர்... நீங்களே சொல்லுங்க...!
ம்ம்ம்..... அது...! இப்போ நாலாவது நாள்தானே....?
ம்ம்ம்... வெயிட்... ஒன்னு, ரெண்டு, மூணு வாழைப்பழம்...., ஆமா நாலாவது நாள்தான் டாக்டர்...!
இப்போ அந்த வாழைப்பழக்கடைக்கு எதிர்த்த கடையில் இளநீர் விப்பாங்க... அதிலே ஒரு இளநீர்குடிச்சிட்டு வீட்டுக்கு போயி தூங்குங்க...!
வாவ்.... ஓகே டாக்டர்..!
.
அஞ்சாவது நாள் நைட் ஷிப்ட் முடிஞ்சதும் எங்கே போவீங்க...?
தெரியலை டாக்டர்... நீங்களே சொல்லிடுங்க..!
வாழைப்பழ கடைக்கு முதல்லே போங்க... அங்கே ஒரு வாழைப்பழம் மட்டும் சாப்பிடுங்க... அப்புறமா இளநீர் கடைக்கு போயி ஒரு இளநீர் சாப்பிடுங்க... பின்னர் வீட்டுக்கு தூங்க போங்க.... டூ யு அண்டர்ஸ்டேன்ட்...?
அண்டர்ஸ்டுட் டாக்டர்...!
தட்ஸ் நைஸ்...!
ஆறாவது நாள் நைட் ஷிப்ட் முடிஞ்சதும் என்ன பண்ணுவீங்க...?
பொதுவா வலி தாங்காம ஆறாவது நாள் நேரா கிளினிக்தான் போயிட்டு இருந்தேன்... இப்போ... இளநீர்... இல்லை... இல்லை... வாழைப்பழக்கடை... போகணும்... ஆம் ஐ ரைட்..?
டோன்ட் கெட் கன்ஃபியுஸ்ட்... லிசன்.... முதலில் ரெண்டு வாழைப்பழம்... சாப்பிடுங்க... அப்புறம் ஒரு இளநீர்... குடிங்க...! தட்ஸ் ஆள்.... அவர் ப்ரிஸ்க்ரிப்ஷன் ஈஸ் ஓவர்..!
எப்பா..... வித்தியாசமா இருக்கே டாக்டர்..!
ம்ம்ம்.... எங்கே... ஒருவாட்டி கேட்டதை அப்படியே சொல்லுங்க...! பார்ப்போம்...!
சொன்னேன்... சரியாகவே சொன்னேன்...! என் நினைவாற்றலை பாராட்டினார்..! :-)))
அடுத்த ஓரிரு வாரம் கழித்து வந்த... "இந்த வா.......ரம்ம் ஆஷிக்கின் அஸிடிட்டி வா.......ரம்ம்.."(நன்றி... சன் டிவி..1997-98) ....என்று நண்பர்கள் மத்தியில் பிரபலமான எனது "நைட் ஷிப்ட் வாரம்"வந்தவுடன்.... மேற்கண்ட ட்ரீட்மெண்டை கச்சிதமாக அப்படியே பின்பற்றினேன்...! என்னவொரு ஆச்சரியம்...! சகோ...நம்புங்கள்..! மெய்யாலுமே... "அந்த வா.....ரம்ம்... அஸிடிட்டி காணாமல் போன வா......ரம்ம்...!" புகழனைத்தும் முயற்சிக்கு பலனளித்த இறைவனுக்கே..!
ஆஹா..! என்னவொரு டாக்டர் இவர்..! இவ்வளவுக்கும் இவர் அல்லோபதி டாக்டர்தான்..! எப்படி ஓர் இயற்கையான அருமருந்தை எனக்கு தந்திருக்கிறார்...! அவருக்கு இறைவன் அருள்புரியட்டுமாக..!
மற்றுமோர் சவூதி அனுபவ டிப்ஸ்..!
உடற்சூடு அல்லாமல்... பழைய எண்ணெய் அல்லது கலப்பட நெய் அல்லது கொழுப்புக்கட்டி கலந்த ஹோட்டல் உணவை சாப்பிட்டுவிட்டு அதன்மூலம் அஸிடிட்டி வந்தால்... உடனடி நிவாரணத்துக்கு இங்கே ஒரு நல்ல மெடிஸின்... Cold 7-up..! ஒரு 355 ml டின் கடகடவென குடித்தால் போதும்..!
thanks to brother mohamed ashik..
ur brother
rahmanfayed./...
யார் அந்த அஷிக், உங்கள் நண்பர்ரா அவர்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete