Monday, July 15, 2013

தஜ்ஜால் வருகை

தஜ்ஜால் வருகை [Dajjal Arrivals]




தஜ்ஜால் வருகை


Narrated by Ubadah ibn as-Samit (radiAllahu anhu) that The Prophet (salAllahu alayhi wasalam) said,
“I have told you so much about the Dajjal (Anti-Christ) that I am afraid you may not understand. The Anti-Christ is short, hen-toed, woolly-haired, one-eyed, an eye-sightless, and neither protruding nor deep-seated. If you are confused about him, know that your Lord is not one-eyed.” -[Abu-Dawud :4306]
 
Arrivals
 
Before download the videos, please read the notes which are given at the end of this page.         
Description on respective topics
Download Hereதலைப்புகள் பற்றிய சிறுகுறிப்பு
 IntroductionIntro அறிமுகம்
 Proof From The Holy QuranPart-1 திருக்குர்ஆனின் அத்தாட்சிகள்
 Shocking Evidence Of The PharaohsPart-2 அதிர்ச்சியூட்டும் ஃபிர்அவ்னிய சாட்சிகள்
 Architecture And EnergyPart-3 கட்டிடக் கலையும் சக்தியும்
 The Battle Of Human EnergyPart-4 மனித சக்தியின் போராட்டம்
 Pharaohs Of TodayPart-5 இன்றைய நவீன ஃபிர்அவ்ன்கள்
 Structures Dedicated to AntichristPart-6 தஜ்ஜாலுக்காக அர்பணிக்கப்பட்டவைகள்
 Mind Control Feat. George CarlinPart-7 அறிவை கட்டுப்படுத்துதல்
 Children's Mind ControlPart-8 குழந்தைகளின் அறிவை கட்டுப்படுத்தல்
 Hashem's FilmsPart-9 சகோதரர் ஹிஷாமைப்பற்றி சிறுகுறிப்பு
 The New Worldly OrderPart-10 புதிய உலகிற்கான பிரகடனம்
 Musical SorceryPart-11 மதிமயக்கும் மந்திர இசைகள்
 Light Up The DarknessPart-12 இருளுக்கு ஒளியூட்டல்
 Lady In RedPart-13 சிவப்பு மங்கை
 HollywoodPart-14 ஹாலிவுட்
 Hollywood And The Promised LandPart-15 ஹாலிவுட்டும் வாக்களிக்கப்பட்ட பூமியும்
 The Media And IslamPart-16 ஊடகமும் முஸ்லிம்களும்
 The War On TerrorPart-17 தீவிரவாதத்திற்கெதிரான போர்
 Hypocrisy And DemocracyPart-18 நயவஞ்சகத்தனமும் ஜனநாயகமும்
 The UFO PhenomenaPart-19 யுஏப்ஓ தோற்றப்பாடு
 The UFO Phenomena (Continued)Part-20 யுஏப்ஓ தோற்றப்பாடு (தொடர்ச்சி)
 What Is Yet To ComePart-21 இனி வெளிவர இருப்பவைகள் என்ன?
 Our Satanic Pop CulturePart-22 சாத்தானிய பாப்இசை கலாச்சாரம்
 Materialism And The Battle WithinPart-23 பொருள்முதல்வாதமும் அத்தோடு நம்   போராட்டமும்
 Freedom UnpluggedPart-24 பறிக்கப்பட்ட சுதந்திரம்
 The Antichrist Dajjal Is HerePart-25 தஜ்ஜால் இங்கே இருக்கிறான்
 The Antichrist Dajjal Is here (Continued)Part-26 தஜ்ஜால் இங்கே இருக்கிறான் (தொடர்ச்சி)
 Why Leaders Practice SatanismPart-27 தலைவர்கள் ஷைத்தானிய கோட்பாட்டை  பின்பற்றுவதேன்?
 Why Leaders Practice Satanism (Continued)Part-28 தலைவர்கள் ஷைத்தானிய கோட்பாட்டை  பின்பற்றுவதேன்? (தொடர்ச்சி)
 The Truth About GodsPart-29 கடவுள்கள் பற்றிய உண்மைகள்
 The Checkered Floor And The GodsPart-30 சதுரங்க தளமும் கடவுள்களும்
 The Great DeceptionPart-31 மாபெரும் பித்தலாட்டம்
 The Most Valuabe TruthPart-32 விலை மதிப்பற்ற உண்மை
 The Choice Is YoursPart-33 இனி தேர்ந்தெடுப்பது உங்கள் கையில்
 The Infiltration Of ReligionPart-34 மதக்கோட்பாட்டில் ஊடுருவல்
 The Temple Of SolomonPart-35 சாலமோன் கோயில்
 The Story Of JesusPart-36 நபி ஈஸா (அலை) அவர்களின் சரிதை
 The Sun GodPart-37 சூரியக் கடவுள்
 The Story Of IslamPart-38 இஸ்லாத்தின் சரித்திரம்
 The Prophet's LineagePart-39 நபி(ஸல்) வழியைத் தொடர்ந்தோர்
 The Common GroundPart-40 பொதுவான அடிப்படைகள்
 The BloodlinesPart-41 இரத்த பந்தங்கள்
 The GatekeepersPart-42 வாயிற் காப்போன்
 The Symbolism Of 9-11Part-43 செப்டம்பர் 11 குறியீடுகள்
 The Significance Of The KaabaPart-44 இறையில்லம் கஃபாவின் முக்கியத்துவம்
 The Kaaba And The 9-11 RitualPart-45 புனித கஃபாவும் செப் 11 சடங்குகளும்
 The Complete HumanPart-46 முழுமையான மனிதன்
 The Free HumanPart-47 விடுவிக்கப்பட்ட மனிதன்
 The Arrival Of MahdiPart-48 மஹ்தி (அலை) வருகை
 The Arrival Of AntichristPart-49 தஜ்ஜாலின் வருகை
 The Arrival Of Jesus The MessiahPart-50 நபி ஈஸா (அலை) வருகை
 EndPart-51 முற்றும்
Important Notes:
  1. We have published these Arrival videos in our website due to its mammoth information which can wakeup our society against the satanic luciferian cults and their evil plans against the humanity, where most of our people unaware of it. 
  2. As per the current scenario of  Muslim Ummah, The global Muslim community has divided into 2 major sects i.e. Sunni and Shia. This satanic split has been done by the JEWS and the Luciferians; we strictly against those satanic concepts of Shiaism. Moreover, we have strongly believe that the foundation/basisfor Islam is the Teachings of Glorious Qur’an and authentic Ahadhees of our beloved Prophet Muhammed (SAL).
  3. In addition with the given background music in the video clips, if you find anything contradicting to Quran and Sunnah then – PLEASE   IGNORE ITCOMPLETELY.
  4. We are sincerely requesting to our respected viewers, Please take only optimistic things from these videos. For Example videos like #39, #48 , #49 are giving some baseless information while showing Imam's names and showing the imaginary depictions for both Prophet Esa (AL) and Imam Mahdhi (AL).
  5. We sincerely express our gratitude and deep sense of appreciation to Noreagaaa & Achernahr production team, for providing such eye opening episodes with brainstorming efforts.  May Allah bless them and guide them into right path.


this article is taken from
thanks to  ஜாஸிம் ஷரீஃப்,

Tuesday, July 2, 2013

ஜிஸ்யா வரியும் மன்னர் ஔரங்கஜேப்பும்..


 ஜிஸ்யா வரியும் மன்னர் ஔரங்கஜேப்பும்..

rahmanfayed : இந்தியாவை ஆண்ட மன்னர்களில், கூறிப்பாக ஆங்கிலேயர்களுக்கு முன் ஆண்ட இந்திய மன்னர்களில் அவதூறாக விமர்சிக்கபட்ட ஒரே மன்னர், ஔரங்கஜேப் மட்டும் தான்.,

நமது பள்ளி காலங்களில், ஔரங்கஜேப்பை இந்துகளின் விரோதியாக தான் பள்ளி ஆசிரியர்கள் விமர்சித்தனர், கூறிப்பாக கோயிலை இடித்தார்,ஜிஸ்யா வரி வித்தார் என்பது கூறிப்பிடடக்கது..

ஔரங்கஜேப் கோயிலை இடித்து உண்மை அல்ல என்பதை முந்தைய பதிவில் பார்த்து அறிந்து கொள்ள <<இங்கே>>  கிளிக் செய்யுங்கள்..

என் இந்துகளுக்கு ஔரங்கஜேப்பை ஜிஸ்யா வரி விதித்தார், என்பதை காண்பதற்கு முன்...
சில விஷயங்களை அறிந்து கொள்வோம்..
 
ஒரு அரசாங்கத்திற்கு வரி என்பது மிக முக்கியம், அதை கொண்டு நாட்டு மக்களுக்கு பல நல்ல திட்டங்களுக்கு செயல் படுத்த முடியும். அண்டை நாட்டிம் இருந்து பாதுகாக்க முடியும். நாட்டை முன்னேற்ற, அரசு சரியாக செயல் பட வரி அவசியம்..

நம் நாட்டை ஆண்ட பல மன்னர்கள், அதிகமான வரி விதித்தை, நடுநலையானவர்கள் மறந்துவிடுவார்கள்.

சில மன்னர் விதித்த அதிகமான வரியை துற்றாமல், பாராட்டியவர்கள். ஆனால் ஔரங்கஜேப்பை துற்றுவார்கள், காரணம் அவர் ஒரு முஸ்லிம் என்பதால்.
நம் தமிழகத்தை ஆண்ட தச்சை பெரிய கோயிலை கட்டிய சோழ மன்னன் உடையர் ஸ்ரீ ராஜ ராஜ சோழன் அருள் மொழி வர்மர் விதித்த கடுமையான வரியை நீங்கள் அறிவிர்களா?

விளையும் நிலத்துக்கு ஒரு வரி, தரிசு நிலத்துக்கு ஒரு வரி, வசிக்கும் வீடுக்கு ஒரு வரி, வியபாரத்துக்கு ஒரு வரி, என்று தனி தனி சுங்க வரி விதித்து. இன்றைய அரசாங்கம் போல, அன்றே தன் மதி நுட்பத்தால் மக்களுக்கு கடுமையான வரி விதித்து, தனது அரசு கஜனாவை நிரப்பியவரை, நடுநலையார்கள் பாரட்ட தான் செய்வார்கள். அவுரங்கஜேப் ஏதிர்கக தான் செய்வார்கள்..

அப்படி ராஜராஜ சோழன் வரி விதித்தால் தான் தனது கனவு அலயமான, பிரம்பாண்டமான தஞ்சை பெரிய கோயிலை கட்ட முடிந்து. சரித்திரத்தில் இடம் பிடிக்க முடிந்தது.


அவரது நிரப்பிய கஜானவின் செல்வங்களை கொண்டு தான். ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் படைகளை திரத்தி, கடல் கடந்து பல தேசங்களை பிலப்பைன்ஸ் வரை வெல்ல முடிந்தது. என்பதை யாராலும் மறக்க முடியாது.

இராசேந்திர சோழன் பற்றி அறிந்து கொள்ள <<இங்கே>>  கிளிக் செய்யுங்கள்..

ராஜராஜ சோழனுக்கு பிறகு 200 வருடங்களுக்கு மேலாக, இந்த சுங்க வரி இருந்தது.
அதை இரண்டாம் குலேந்துங்க சோழன் சுங்க வரியை நிக்கியதால் தான். அவரை மக்கள்
"சுங்கம் தவிர்த்த சோழன்" என்று அன்பாக அழைத்தனர், என்பது வரலாறு.
வரி நிக்கிய பின் சோழ சாம்ராஜ்ஜியமே அழிந்து என்பது நிதிர்சன உண்மை....
வரி எவ்வளவு முக்கியம், என்பதை இதில் முலம் அறிந்து கொள்ளலாம்.

ஏதே இந்துகளுக்கு மட்டும் தான். ஜிஸ்யா வரி விதத்து மாதிரி ஒரு மாயை, சில வரலாற்று ஆசிரியர்கள் உருவாக்கிறார்கள்.
இந்துகளை விட முஸ்லிமகளுக்கே ஜக்காத், என்ற அதிக வரி தான் இருந்தது.
அக்பர் முதல் ஷாஜகான், வரை ஜக்காத் என்ற வரியும், குறுநில மன்னர்கள் தரும் வரியை கொண்டு தான் முகலாய அரசு செய்லபட்டது..

இஸ்லாமிய ஆட்சியில் வரி எவ்வாறு வசூலிக்கப் படுகிறது?

முஸ்லிம்கள் மீது ஜகாத் எனும் வரியை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள்தங்களிடமுள்ள் தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம்ஆகிய அனைத்திலிருந்தும் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைபட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி, மற்றும் பணத்தில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப் படும்பொருட்களில் அய்ந்து சதவீதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்துசதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவுகணிசமான வரி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொருமுஸ்லிம்களிடத்திலும் இந்த தொகையை கட்டாயமாக வசூலிக்க இஸ்லாமிய அரசுக்குகுர்ஆன் கட்டளை இடுகிறது.

இப்படி வசூலிக்கும் தொகையை யாருக்கு கொடுக்க வேண்டும்?

ஏழைகள், பரம ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கன், போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டராணுவ வீரர்கள், மற்றும் நாடோடிகள் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவுசெய்யும். ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப் பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்துவரும் போது, அந்த நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் எந்த வரியும்செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. முஸ்லிம் அல்லாதவர்கள் மீதும்ஜகாத் வரியை கடமையாக்கினால் இஸ்லாமிய சட்டத்தை இந்துக்கள் மீது திணிப்பதாகஆகும். எனவே தான் இது போன்ற நிலையில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்றவரியை (ஜகாத் என்ற வரிக்கு பகரமாக) விதிக்க குர்ஆன் கட்டளையிடுகிறது. இதைத்தான்ஒளரங்கஜேப்பும் செய்தார். இதைத்தான் நமது வரலாற்று ஆசிரியர்கள் குறை கண்டு எழுதிவைத்திருக்கிறார்கள்.

அப்படி வரி விதித்தால் தான். அரசை நல்ல முறையில் செயல்படுத்தினார். ஏன்? முழு இந்தியாவையும், பாக்ஸ்தான், அப்கான், பங்களாதேசு, மற்றும் பர்மா. வரை தனது ராஜ்ஜியத்தை விரிவு படுத்த முடிந்தது. சரித்திரத்தில் இடம் பிடிக்க முடிந்தது...

 வரியை நிக்கினார் 
*முகலாயர்கள் ஆட்சியில் தீபாவளிக்கு ஹிந்துக்கள் விளக்கு வைக்கவும்,
முகரம் பண்டிகைக்கு ஃபார்சிகள் விளக்கு வைக்கவும் வரி செலுத்த வேண்டிய வழக்கம் இருந்தது,
இதை அவுரங்கசீப் முற்றிலும் தடை செய்தார்.
*அதேபோல் கங்கை நதியில் நீராட வரிசெலுத்தும் முறை இருந்தது,
அந்த வரியை நீக்கி உத்தரவிட்டார் மாமன்னர் அவுரங்சீப்.
*இறந்தவர்களின் அஸ்தியை கங்கையில் கரைக்கவும் வரி பெறப்பட்டது.
அதையும் மன்னர் அவுரங்கசீப் தடைசெய்தார்.
*நதிகளில் மீன்பிடிக்க வரி,
பால் கறக்க வரி,
பாத்திரங்கள் செய்து விற்ப்பதற்க்கு வரி,
காய்கறிகள் விற்ப்பதற்க்கு வரி,
வறட்டியை உபயோகிக்க வரி என
வழக்கத்தில் இருந்த அனைத்தையும் தடை செய்து ஏழைகளின் அன்பை பெற்றார்.
*மேலும் ஒடுக்கப்பட்ட ஹிந்துப்பெண்கள் மறுமணம் செய்யவும்
வரி செலுத்தும் முறை இருந்தது,
அதையும் மன்னர் அவுரங்கசீப் தடை செய்தார்!

மேலும் ஓளரங்கஜேப் பற்றி சில கட்டுரைகளின் லிங்க கீழே..

ஒளரங்கசீப்... மறைக்கபடும் வரலாற்று உண்மைகள்...  http://rahmanfayed.blogspot.in/2013/06/blog-post.html

ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப் பற்றி சில தகவல் - I. http://www.rahmanfayed.blogspot.in/2012/07/blog-post.html

ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப் பற்றி சில தகவல் - II. http://rahmanfayed.blogspot.in/2012/09/ii_4520.html

முகலாயர்கள் நல்லவரா? கெட்டவரா?  http://www.rahmanfayed.blogspot.in/2012/09/blog-post_21.html

முகலாயர்கள் நல்லவரா? கெட்டவரா?- II http://www.rahmanfayed.blogspot.in/2012/09/ii_24.html

Friday, June 28, 2013

ஒளரங்கசீப்... மறைக்கபடும் வரலாற்று உண்மைகள்...

மாற்று மத சகோதரர், கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர் எழுதிய இக்கட்டுரை சமர்பிக்கிறேன்.


ஒளரங்கசீப்... மறைக்கபடும் வரலாற்று உண்மைகள்...

அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான். இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும்..., புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு. வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து, சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜர் சிலையை கடலில் எரிந்ததால்தான் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் 'கிருமி கண்ட சோழன்' என்றழைக்கப்பட்டான் என்பது வரலாறு.

இது இங்ஙனமிருக்க ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர முஸ்லிம், அவர் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பது மட்டும் பிரபலப்படுத்தப்படுகிறது. உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.

இதைத்தவிர அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.

அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?

இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.


ஒளரங்கஜேப்..

ஒளரங்கசீப் ஒரு வைதீக முஸ்லிம். இதனால் உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு என்னும் கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் மத மாற்றத்தை இவர் ஊக்குவிக்கவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும். அதேபோல் இராஜபுத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினாள். அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன் என்று சொன்னபோது அதனை ஏற்றுக் கொள்ளாதவர் ஒளரங்கசீப். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும்.

தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட்படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் Islam and Indian Culture(1578 - 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது. ''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன்மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.

பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட
ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.

தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.

இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.

மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு. நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா? 



ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.

thank u  
stella..

மேலும் ஓளரங்கஜேப் பற்றி சில கட்டுரைகளின் லிங்க கீழே.

 ஜிஸ்யா வரியும் மன்னர் ஔரங்கஜேப்பும்..

ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப் பற்றி சில தகவல் - I.

ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப் பற்றி சில தகவல் - II.

முகலாயர்கள் நல்லவரா? கெட்டவரா? 

முகலாயர்கள் நல்லவரா? கெட்டவரா?- II

Wednesday, May 15, 2013


நபி ஸல் அவர்களுக்கு முதன் முதலில் வஹி வந்த இடம்.



~~~ அருளப்பட்ட முதல் வசனம் ~~~

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
´அலக்´ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

((குர் ஆன் : 96:1))

::: ::: ::: ::: ::: ::: "ஹீரா குகை" ::: ::: ::: ::: ::: :::

ஷைத்தானை கல் எறியும் இடம் - 1953

::: ::: ::: ::: ::: ::: "ஷைத்தானை கல் எறியும் இடம்" ::: ::: ::: ::: ::: :::

அன்றைய காலகட்டத்தில் உலகமக்களின் பொதுவான இறைபள்ளி அழகிய தோற்றும்..
1953 ஆண்டு ஹஜ் புகை படங்கள்.

::: ::: ::: ::: ::: ::: "Old Picture of Kaaba" ::: ::: ::: ::: ::: :::

காபா வின் சாவி.

::: ::: ::: ::: ::: ::: "Kaaba Key" ::: ::: ::: ::: ::: :::

உலகின் மிகப்பெரிய குர் ஆன் ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்ட இந்த குர் ஆனின் எடை 500 KG, 218 பக்கங்கள் கொண்டது.



::: ::: ::: ::: ::: ::: "உலகின் மிகப்பெரிய குர் ஆன்" ::: ::: ::: ::: ::: :::

Tuesday, May 14, 2013

ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!

ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!



ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் ‘பாலைவனக்கப்பல்’.

ஏனென்றால், " 'சஃபீனத்-அஸ்-ஸஹாரா ' என்று எந்த பண்டைய அரபி இலக்கியங்களிலாவது எழுதப்பட்டு இருக்கிறதா?" என்றால்... அரபிகள் முழிக்கிறார்கள். ஏதோ சில ஆங்கில அறிவு பெற்றவர்களுக்கு மட்டும் ‘தெ ஷிப் ஆப் தெ டெசெர்ட்’ என்றால் தெரிந்திருக்கிறது. அநேகமாய், தங்கள் மகத்தான கண்டுபிடிப்பான ‘கப்பலில்’, மத்தியதரைக்கடலை கடந்து வடக்கு ஆப்பிரிக்காவில் கால்வைத்த ஐரோப்பியர்கள், ஒட்டகத்தையும் பாலைவனத்தையும் முதன்முதலாக  பார்த்துவிட்டு.. ‘கடலுக்கு கப்பல்பிரயாணம் - பாலைக்கு ஒட்டகபிரயாணம்’ என்று மட்டுமே உணர்ந்து சொன்ன வாக்கியமாக இருக்கலாம்.
மழை, புயல், காட்டாற்று வெள்ளம், சூறாவளி, பனிப்பாறை, மணல்திட்டு, அடித்தள ஓட்டை, சுனாமி போன்ற எந்த ஒரு இயற்கைச்சீற்றத்துக்கும் திடீர் ஆபத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல் இரண்டாக உடைந்து தலை குப்புறக்கவிழ்ந்து மூழ்கும் கப்பல் என்ற மனிதனால் கட்டப்பட்ட ஓர் உயிரற்ற வஸ்து என்பது...., கடும் குளிர், கடும் வெப்பம், கொதிக்கும் மணல், புழுதிக்காற்று, புல்பூண்டு & தண்ணீர் அற்ற வறட்சியில் மாதக்கணக்கில் பிரயாணம் என்று அனைத்து இயற்கை தாக்குதல்களையும் சளைக்காமல் வெற்றிகரமாய் எதிர்கொண்டு பீடுநடைபோடும் இறைவனின் நுண்ணிய படைப்பான  ஒட்டகத்துக்கு.... எப்படி ஒப்பாகும்?
(ஓர் அன்பு வேண்டுகோள் : பதிவு நீ.....ளமாகிவிட்ட காரணத்தினால், ஒவ்வொரு முறையும் ‘ ..! ’ போட்ட இடங்களுக்கு அடுத்து ‘சுபஹானல்லாஹ்’ சொல்லிக்கொள்ளுங்கள்.)
நிச்சயமாக பாலைவனத்தில், தனிச்சிறப்பு வாய்ந்த தனக்கு ஒப்புமை அற்ற ஒட்டகமானது, பொதுவாக தாவர உண்ணி வகையைச்சேர்ந்த பாலூட்டி பிரிவைச்சார்ந்த ஒரு வீட்டுவிலங்கு. 250 லிருந்து  680 கிலோ எடை வரை வளரும் இவை, பொதுவாக 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன..! ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல்... உணவில்லாமல்... பாலைவனத்தில் பலநாள் வாழக்கூடியது, அதுவும் மாமூலாக செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே..!
எப்படியென்றால், சூரியனின் வெப்பம் கொளுத்தும் கோடையில், கொதிக்கும் மணலில் 50° செல்சியஸ் வெப்பத்தில் உணவின்றி நீரின்றி 8 நாட்கள் வரை... தன் எடையில் 22% இழந்தபின்னும் உயிர் வாழும்..! இதை ஒரு மனிதன் முயற்சித்தால், அவன் தன் உடலில் 8% எடையை எட்டாவது நாள் இழக்க வேண்டிவரும். ஆனால், அதற்கு முன்னரே… 36-வது மணிநேரத்திலேயே அவன் இறந்திருப்பான். காரணத்தை போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லும் :- ‘அவன் உடம்பில் 88% நீர்ச்சத்துதான் இருந்தது’ என்று..! ஏனென்றால், அநேக பாலூட்டிகள் தன் உடம்பில் 12% நீர்ச்சத்தை இழந்தாலே இறந்துவிடும். ஆனால், ஒட்டகமா, அப்போது தன் உடலில் உள்ள நீர்ச்சத்தில் 40%-ஐ இழந்தும் உயிர்வாழ்கும்..! இதல்லாம் கோடை காலத்திற்கு சொன்னதுதான். கடும் குளிர் காலத்திலோ ஆறுமாதம் வரை கூட ஒட்டகம் இப்படி நீரின்றி உணவின்றி உயிர்வாழும்..! அதேநேரம், அப்போது, மேய்வதற்குப் புல் போன்ற சிறிது உணவு கிடைத்தால் கூட போதும், அடுத்த 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது..! இடையில் சிறிது தண்ணீர் கிடைத்து விட்டால்... கேட்கவே வேண்டாம்... அந்த கால அளவு இன்னும் பலமடங்கு எகிறும்..!
சிலமாதம் நீர் அருந்தாமல் இருந்த உலர் நிலையில்  இருந்து மீண்டு நீர் அருந்தும்பொழுது தன் உடலில் மூன்றில் ஒரு பங்கு எடை அளவிற்கு நீரை 10 நிமிடத்தில் குடித்துவிடும்..! (அதாவது 450 கிலோ எடைகொண்ட ஓர் ஒட்டகம் 150 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடத்தில் குடித்துவிடும்..!) அப்படி நீர் அருந்தியவுடன் 10 நிமிடங்களில் உடலில் நீர்ச்சத்து ஏறிவிடும்..! அதன் இரப்பையில் உள்ள நீர் அறைகளில் நீரை தற்காலிகமாக ஏற்றிக் கொள்கிறது..! அங்கிருந்து உறிஞ்சப்பட்டு இரத்தத்தின் சிகப்பு அனுக்களில் ஏற்றி சேமித்துக் கொள்கிறது..!  அப்போது அச்சிவப்பணுக்கள் அதன் உண்மையான அளவை விட 240% விரிந்து இடமளிக்கிறது..! பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து இவ்வளவு விரைவாக நீரை இரத்தத்தால் உறிஞ்சிக்கொள்ள முடியாது. ஏனெனில் இரத்தத்தில் திடீர் என்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் சிவப்பணுக்கள், வெடித்துவிடும். ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் 240% அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால், இவ்வாறு நிகழ்வதில்லை..!
                                                                                      
மனிதன் உட்பட எந்த ஒரு விலங்கும் அப்போதையை நிலையில் தேவைக்கு அதிகமாக இவ்வளவு தண்ணீர் குடித்தபின் தேவையற்ற அனைத்தையும் சிறுநீராகவே வெளியேற்றிக்கொண்டு இருக்கும். ஆனால், ஒட்டகமோ... தன்னுடைய சிறுநீரையும் குறைத்துக்கொள்ளும்..! ஒட்டகத்திற்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது..! நம்முடைய சிறுநீரில் அதிகபட்சமாக தாது கழிவுகள் 8 சதமும் 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறு நீரில் 40 சதத்திற்கும் அதிகமான கழிவுகளும், குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது அதன் சிறுநீரகம்..! நம்முடை கிட்னியாக இருந்தால் எப்போதோ செயலிழந்திருக்கும். அதுமட்டுமில்லை, இரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்து இறந்து விடுவோம். ஆனால், ஒட்டகம் மட்டும் எப்படி அதிக யூரியாவினால் பாதிப்படையவில்லை என்றால், அதன் ‘விசேஷ லிவர்’ ஆனது யூரியாவை மட்டும் இரத்தத்தில் இருந்து தனியே பிரித்து எடுத்து அதை புரோட்டீனாகவும் தண்ணீராகவும் மாற்றி விடுகிறது..!
ஒட்டகத்தின் சாணத்தை அது போட்ட ஒரு சில மணி நேரத்தில் எரிபொருளாக பயன்படுத்தி விடலாம், என்ற அளவிற்கு உலர்ந்த நிலையில் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது..! பசு... சிறுநீர்/சாணம் வழியாக 20 லிட்டர் நீரை ஒரு நாளைக்கு வெளியேற்றுகிறது. ஆனால் ஒட்டகம் 1 லிட்டர் நீரை கூட இழப்பதில்லை..! அவை அனைத்தையும் ஒட்டக பாலாக மனிதன் கறந்து கொள்ளலாம். கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு பத்து பசுமாடு கொடுக்கும் பாலை ஒரு ஒட்டகம் கொடுக்கிறது..! பசுவின் உடல் சூடு ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டி விட்டால் பால் சுரப்பு  நின்று விடும். ஆகவே அதை கொட்டகையில் நிழலில் வைத்து அதன் மேல் நீரை ஊற்றியோ, அல்லது ஏ/சி செய்யப்பட்ட ‘குளுகுளு’ இடத்தில் வைத்தோ பராமரிக்க வேண்டும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. பலநாட்கள் வெயிலிலேயே நின்றாலும் கூட பால் கொடுக்கும்..! பசுவிற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒன்று பால் நின்றுவிடும் அல்லது பாலில் கொழுப்பு 30% அதிகரித்து, பால் குடிக்க முடியாத நிலைமைக்கு மாறிவிடும். ஆனால் ஒட்டகம் அப்படி அல்ல. கடுமையான கோடையில் கூட குறைந்த அளவு நீரை குடித்துவிட்டு தன் குட்டிக்கும் பாலை கொடுத்துவிட்டு 15லிருந்து 20 லிட்டர்வரை நமக்கும் பால் கொடுக்கும்..! மேலும் பத்து நாட்கள் வரை நீர் கிடைக்காவிட்டால் கூட அதே தரத்தில் அதே அளவு பாலை கொடுக்கும்..! ஒட்டகப் பாலில் பசும்பாலை விட மூன்று மடங்கு வைட்டமின் ‘C’ அதிகம் உள்ளது..! இது காய்கறிகள், பழங்கள் போன்றவை அரிதாக கிடைக்கும் பாலைவன மக்களுக்கு மிக்க அவசியமான உணவு..!
சரி... பாலைவனத்தின் கடும் குளிரையும் கடும் கோடை வெப்பத்தையும் ஒட்டகம் எப்படி தாங்குகிறது?.
ஒட்டகத்தின் ரோமமும், தோலும் அப்படி ஒரு தடிமனானது மட்டுமின்றி அதற்கு சிறந்த வெப்ப தடுப்பானாக பயன்படுகிறது..! அது மட்டுமல்ல. கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை 34°C  லிருந்து  41.7°C வரை (93°F-107°F.) சுயமாக மாற்றிக்கொள்ளும்..! இப்படி தன் உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34° செல்சியஸ் வரை குறைத்துக்கொள்வதால், வெளியில் உறைபனி நிலையில் கடுங்குளிர் காற்று அடித்தாலும் தாக்குப்பிடிக்கிறது..! அதேநேரம், கடும் கோடை வெப்பக்காலங்களில் வெளியில் 55° செல்சியஸ் என்று கொளுத்தும்போது, வெப்பம்கடத்தா தன் தடிமனான தோலினாலும், தன் உடல்வெப்பநிலையை 41° செல்சியஸ் வரை கூட்டிக்கொண்டும், தன் உடல் வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப்பிடிக்கிறது..! இதனால் உடல்நீர் வியர்வை மூலம் விரயமாவதும் தடுக்கப்படுகின்றது..! இந்நிலையிலேயே, ஒட்டகம் ஒன்று ஏறத்தாழ 200 கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்கவும் செய்யும்..! சிறுதொலைவு ஓட்டப்பந்தயம் வைத்தால் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடவும் செய்யும்..!
நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியின் மேல் விட்டுவிட்டு கண்ணாடியை நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். நாம் 1-லிட்டர் காற்றை சுவாசித்து வெளியேற்றினோம் என்றால் 16 மில்லி கிராம் நீரை இழந்திருப்போம். கடும் வெப்பக்காற்றை சுவாசிக்கும் ஒட்டகம் அக்காற்றை ஈரப்படுத்துகிறது..! ஆனால், அதேநேரம், ஒட்டகத்தின் வெளிவிடும் மூச்சில் ஈரம் மனிதனைவிட பல மடங்கு குறைவாக இருக்கும்..! ஏனென்றால் மற்ற எதற்குமில்லாத விசேட மூக்கமைப்பு தான் இதன் காரணம்..! அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தில், மூன்றில் இரண்டு பகுதியை வெளியேறி விடாமல் தடுத்து விடுகிறது..! மேலும், பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட மோப்ப சத்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு..!
ஒட்டகத்தின்  பாத அமைப்பு வித்தியாசமானது..! வெடித்த இரு குளம்புகளையும் சேர்த்து மிக அகன்ற வட்ட வடிவினாலான தட்டையான பாதத்தை கொண்டது. முன்புறம் அதன் இரு குளம்புகளும் விரிந்து கொள்ளும் காரணத்தால் 500 கிலோ வரை எடையுள்ள ஒட்டகம் 450 கிலோ வரை சுமையை சுமந்து கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் நிலைதடுமாறி கீழே விழுந்துவிடாமல் கொதிக்கும் மணலிலும் ஓட முடிகிறது..! அப்போது, அதன் பாத குளம்புத்தோல் மிகத்தடிமனானதால் கடும் வெப்பத்தினாலும் பாதிக்கப்படாது..!

மனிதர்கள் விலங்குகள் ஆகிய அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகளை மட்டுமே பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று மடக்கும் இணைப்புகள் இருக்கும்..! அதனால் தான் ஒட்டகத்தால் எளிதாக பாலைவன மணலின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்க முடிகிறது..! மனிதர்கள் அதன்மீது ஏறி இறங்க விரும்பினால், உடன் எவ்வளவு சூடாக கொதிக்கும் மணலிலும் உடனே முட்டிபோட்டு மண்டி இடும்..! அப்படி மண்டி இடும்போது அதன் முட்டுக்காலிலும், கால் குளம்புத்தொளைப்போன்றே தடிமனான வெப்பத்தினால் பாதிக்கபடாத தோல் அங்கும் அமைந்துள்ளது..!

ஒட்டகத்தின் கால்கள் நல்ல உயரமானதாக இருப்பது ஏனென்றால், கடும் கோடையில் பாலைவனத்தில் ஒட்டகம் நடக்கும்போது கொதிக்கும் மணலின் அனல் உக்கிரம் அதன் வயிற்றுப்பகுதி உடம்பில் தாக்காமல் இருக்கத்தான்..! மேலும் உயரமான கால்கள் அதிக எடை சுமக்கவும் அவசியமாகிறது..!
அடுத்து பாலைவனம் என்றாலே புழுதிக்காற்று... மணற்புயல்... பிரசித்தம். அப்படி, மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது ஒட்டகம் (நாம் நம் வீட்டு ஜன்னலை மூடுவது போல்) மூக்கை மூடிக்கொள்ளும்..! தன் ‘கை’யால் இல்லைங்க.. அதன் மூக்காலேயே..! அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள் மணலோ தூசியோ காதுகளுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது..! அதன் இரண்டடுக்கு  கண் இமையில் உள்ள நீண்ட சீப்பு போன்ற தடித்த நெருக்கமான முடிகள் ஒன்றன் உள் ஒன்றாக கோர்த்துக்கொண்டு மணற்புயலிலிருந்து  கண்ணிற்கு முழுப்பாதுகாப்பு அளிக்கிறது..! கண்களுக்கு கீழே உள்ள இமை போன்ற திரை அமைப்பு வாகனத்தின் வைப்பர் போல செயல்பட்டு கண் பரப்பை சுத்தப்படுத்தி கூடுதலாய் கண்களுக்கு பாதுக்காப்பை அளிக்கிறது..!  கண்ணிலும் அதன் கண்ணிற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பும், புருவமும் பாலைவனத்து சூரியனின் பிரகாசமான  வெளிச்சம் கண்களைதாக்கி விடாமல் வெளிச்சத்தை பாதியாக தடுத்து விடுகிறது..! அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்து இருப்பதால் தலையை திருப்பாமல் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்..! பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருப்பதாற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்..!
பாலைவனம் என்றாலே சப்பாத்திக்கள்ளி, கற்றாழை போன்ற முட்செடிகள் தான் அதிகமாக கிடைக்கும. அதை மேய்வதற்காக அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம்..! அதன் உதட்டில் குத்தும் முட்களே உடைந்து விடும் அளவுக்கு தடிமனானது அதன் உதடு..! அந்த விசேஷ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது..! புழுதிக்காற்றில் கண்ணைமூடிக்கொண்டு சகட்டுமேனிக்கு பிளாஸ்டிக், தகரம், ஒயர், மண்ணாங்கட்டி என்று கண்டதையும்  திண்ணும்..! அதையெல்லாம் தனித்தனியே பிரித்து செரிக்கும் வேலையை அதன் நான்கு அரை கொண்ட விசேஷ இரைப்பை பார்த்துக்கொள்கிறது..! அவசரமாக சாப்பிட்டதை ஆரஅமர நிதானமாய் மீண்டும் வாய்க்கு கொண்டுவந்து அசைபோட்டு உள்ளே தள்ளும்..!

மேலும், இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அவை தேவைக்கதிகமாக உண்ணப்பட்டு கொழுப்பாக மாற்றப்பட்டு அதன் முதுகில் திமில் அல்லது திமில்களாக சேமித்துக்கொள்கிறது..! சுமார் 45 கிலோ எடை இருக்கும் அந்த திமிலில் அதிகமாக கொழுப்பு இருக்கும்..!

உணவோ, நீரோ கிடைக்காத காலத்தில் அதன் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும், உணவாகவும் அவ்வப்போது தேவைக்கேற்ப ஆக்சிகரணம் செய்து மாற்றிக் கொள்கிறது..! ஒரு திமில் அல்லது இரு திமில் கொண்ட இருவகையான  ஒட்டகங்கள் உள்ளன..! அவற்றில் இரு திமில் ஒட்டகங்கள் அதிக சக்தி பெற்றவை என்று தனியாகவேறு சொல்ல வேண்டுமா?
“அதிலிருந்து இது தோன்றியது, இதிலிருந்து அது தோன்றியது” என்று மற்ற மிருகங்களைப் பற்றியெல்லாம் ஏதாவது ஒரு காமடி விளக்கமாவது கொடுக்கும் 'பரிணாம உலகம்', 'ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்து பரிணாமம் பெற்றது' என்று கதை புனையவோ அல்லது புனைவை கதைக்கவோ இல்லையே, ஏன்?
இறைவனின் படைப்பாற்றலை புரிந்துகொள்ள இந்த ஒட்டகம் ஒன்று போதவில்லையா?


மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 50 கீ.மீ பயணம் செய்யும் ஒட்டகம்..., நீரும், உணவும், நல்ல சீதொஷ்ணமும் தாரளமாக கிடைக்கும் ஐரோப்பாவை நோக்கியோ,  தெற்கு ஆப்ரிக்காவை நோக்கியோ முறையே, அரேபிய பாலைவனத்திலும், சஹாரா பாலைவனத்திலும் முட்டாள் ஒட்டகம் எப்போதோ ஓடிபோயிருக்கலாமே..! இப்படி பாலைவனத்தில் கஷ்டப்பட வேண்டிய அவசியம் என்ன?  இதை சிந்தித்தாலாவது, 'இது பாலைவாழ் மக்களுக்கு என்றே பிரத்தியேகமாய் இறைவன் படைத்து அளித்த அருட்கொடை' என்று உணரமுடியும்..!
அதனால்தான் இப்படி ஓர் அதிசய மிருகத்தை மானிடருக்கு படைத்தளித்த அல்லாஹ், முஹம்மத் நபி(ஸல்...) அவர்களிடம் இறை நிராகரிப்பாளர்களை சுட்டிகாட்டி தன் திருமறை குர்ஆனில்...
“(நபியே) ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் பார்க்கவேண்டாமா?" (88:17) என்று கேட்கிறான்.
சகோதரர்களே...! எது அறிவுப்பூர்வமானது என்று உங்கள் பகுத்தறிவை கேட்டுப்பாருங்கள். இறை மறுப்பாளர்களின் போலி வார்த்தைகள் பொலபொலத்து உதிர்ந்து விழுவதை எளிதில் உணராலாம்.

thanks to
mohamed ashiq (citizen of the world)