Tuesday, July 2, 2013

ஜிஸ்யா வரியும் மன்னர் ஔரங்கஜேப்பும்..


 ஜிஸ்யா வரியும் மன்னர் ஔரங்கஜேப்பும்..

rahmanfayed : இந்தியாவை ஆண்ட மன்னர்களில், கூறிப்பாக ஆங்கிலேயர்களுக்கு முன் ஆண்ட இந்திய மன்னர்களில் அவதூறாக விமர்சிக்கபட்ட ஒரே மன்னர், ஔரங்கஜேப் மட்டும் தான்.,

நமது பள்ளி காலங்களில், ஔரங்கஜேப்பை இந்துகளின் விரோதியாக தான் பள்ளி ஆசிரியர்கள் விமர்சித்தனர், கூறிப்பாக கோயிலை இடித்தார்,ஜிஸ்யா வரி வித்தார் என்பது கூறிப்பிடடக்கது..

ஔரங்கஜேப் கோயிலை இடித்து உண்மை அல்ல என்பதை முந்தைய பதிவில் பார்த்து அறிந்து கொள்ள <<இங்கே>>  கிளிக் செய்யுங்கள்..

என் இந்துகளுக்கு ஔரங்கஜேப்பை ஜிஸ்யா வரி விதித்தார், என்பதை காண்பதற்கு முன்...
சில விஷயங்களை அறிந்து கொள்வோம்..
 
ஒரு அரசாங்கத்திற்கு வரி என்பது மிக முக்கியம், அதை கொண்டு நாட்டு மக்களுக்கு பல நல்ல திட்டங்களுக்கு செயல் படுத்த முடியும். அண்டை நாட்டிம் இருந்து பாதுகாக்க முடியும். நாட்டை முன்னேற்ற, அரசு சரியாக செயல் பட வரி அவசியம்..

நம் நாட்டை ஆண்ட பல மன்னர்கள், அதிகமான வரி விதித்தை, நடுநலையானவர்கள் மறந்துவிடுவார்கள்.

சில மன்னர் விதித்த அதிகமான வரியை துற்றாமல், பாராட்டியவர்கள். ஆனால் ஔரங்கஜேப்பை துற்றுவார்கள், காரணம் அவர் ஒரு முஸ்லிம் என்பதால்.
நம் தமிழகத்தை ஆண்ட தச்சை பெரிய கோயிலை கட்டிய சோழ மன்னன் உடையர் ஸ்ரீ ராஜ ராஜ சோழன் அருள் மொழி வர்மர் விதித்த கடுமையான வரியை நீங்கள் அறிவிர்களா?

விளையும் நிலத்துக்கு ஒரு வரி, தரிசு நிலத்துக்கு ஒரு வரி, வசிக்கும் வீடுக்கு ஒரு வரி, வியபாரத்துக்கு ஒரு வரி, என்று தனி தனி சுங்க வரி விதித்து. இன்றைய அரசாங்கம் போல, அன்றே தன் மதி நுட்பத்தால் மக்களுக்கு கடுமையான வரி விதித்து, தனது அரசு கஜனாவை நிரப்பியவரை, நடுநலையார்கள் பாரட்ட தான் செய்வார்கள். அவுரங்கஜேப் ஏதிர்கக தான் செய்வார்கள்..

அப்படி ராஜராஜ சோழன் வரி விதித்தால் தான் தனது கனவு அலயமான, பிரம்பாண்டமான தஞ்சை பெரிய கோயிலை கட்ட முடிந்து. சரித்திரத்தில் இடம் பிடிக்க முடிந்தது.


அவரது நிரப்பிய கஜானவின் செல்வங்களை கொண்டு தான். ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் படைகளை திரத்தி, கடல் கடந்து பல தேசங்களை பிலப்பைன்ஸ் வரை வெல்ல முடிந்தது. என்பதை யாராலும் மறக்க முடியாது.

இராசேந்திர சோழன் பற்றி அறிந்து கொள்ள <<இங்கே>>  கிளிக் செய்யுங்கள்..

ராஜராஜ சோழனுக்கு பிறகு 200 வருடங்களுக்கு மேலாக, இந்த சுங்க வரி இருந்தது.
அதை இரண்டாம் குலேந்துங்க சோழன் சுங்க வரியை நிக்கியதால் தான். அவரை மக்கள்
"சுங்கம் தவிர்த்த சோழன்" என்று அன்பாக அழைத்தனர், என்பது வரலாறு.
வரி நிக்கிய பின் சோழ சாம்ராஜ்ஜியமே அழிந்து என்பது நிதிர்சன உண்மை....
வரி எவ்வளவு முக்கியம், என்பதை இதில் முலம் அறிந்து கொள்ளலாம்.

ஏதே இந்துகளுக்கு மட்டும் தான். ஜிஸ்யா வரி விதத்து மாதிரி ஒரு மாயை, சில வரலாற்று ஆசிரியர்கள் உருவாக்கிறார்கள்.
இந்துகளை விட முஸ்லிமகளுக்கே ஜக்காத், என்ற அதிக வரி தான் இருந்தது.
அக்பர் முதல் ஷாஜகான், வரை ஜக்காத் என்ற வரியும், குறுநில மன்னர்கள் தரும் வரியை கொண்டு தான் முகலாய அரசு செய்லபட்டது..

இஸ்லாமிய ஆட்சியில் வரி எவ்வாறு வசூலிக்கப் படுகிறது?

முஸ்லிம்கள் மீது ஜகாத் எனும் வரியை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள்தங்களிடமுள்ள் தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம்ஆகிய அனைத்திலிருந்தும் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைபட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி, மற்றும் பணத்தில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப் படும்பொருட்களில் அய்ந்து சதவீதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்துசதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவுகணிசமான வரி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொருமுஸ்லிம்களிடத்திலும் இந்த தொகையை கட்டாயமாக வசூலிக்க இஸ்லாமிய அரசுக்குகுர்ஆன் கட்டளை இடுகிறது.

இப்படி வசூலிக்கும் தொகையை யாருக்கு கொடுக்க வேண்டும்?

ஏழைகள், பரம ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கன், போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டராணுவ வீரர்கள், மற்றும் நாடோடிகள் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவுசெய்யும். ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப் பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்துவரும் போது, அந்த நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் எந்த வரியும்செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. முஸ்லிம் அல்லாதவர்கள் மீதும்ஜகாத் வரியை கடமையாக்கினால் இஸ்லாமிய சட்டத்தை இந்துக்கள் மீது திணிப்பதாகஆகும். எனவே தான் இது போன்ற நிலையில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்றவரியை (ஜகாத் என்ற வரிக்கு பகரமாக) விதிக்க குர்ஆன் கட்டளையிடுகிறது. இதைத்தான்ஒளரங்கஜேப்பும் செய்தார். இதைத்தான் நமது வரலாற்று ஆசிரியர்கள் குறை கண்டு எழுதிவைத்திருக்கிறார்கள்.

அப்படி வரி விதித்தால் தான். அரசை நல்ல முறையில் செயல்படுத்தினார். ஏன்? முழு இந்தியாவையும், பாக்ஸ்தான், அப்கான், பங்களாதேசு, மற்றும் பர்மா. வரை தனது ராஜ்ஜியத்தை விரிவு படுத்த முடிந்தது. சரித்திரத்தில் இடம் பிடிக்க முடிந்தது...

 வரியை நிக்கினார் 
*முகலாயர்கள் ஆட்சியில் தீபாவளிக்கு ஹிந்துக்கள் விளக்கு வைக்கவும்,
முகரம் பண்டிகைக்கு ஃபார்சிகள் விளக்கு வைக்கவும் வரி செலுத்த வேண்டிய வழக்கம் இருந்தது,
இதை அவுரங்கசீப் முற்றிலும் தடை செய்தார்.
*அதேபோல் கங்கை நதியில் நீராட வரிசெலுத்தும் முறை இருந்தது,
அந்த வரியை நீக்கி உத்தரவிட்டார் மாமன்னர் அவுரங்சீப்.
*இறந்தவர்களின் அஸ்தியை கங்கையில் கரைக்கவும் வரி பெறப்பட்டது.
அதையும் மன்னர் அவுரங்கசீப் தடைசெய்தார்.
*நதிகளில் மீன்பிடிக்க வரி,
பால் கறக்க வரி,
பாத்திரங்கள் செய்து விற்ப்பதற்க்கு வரி,
காய்கறிகள் விற்ப்பதற்க்கு வரி,
வறட்டியை உபயோகிக்க வரி என
வழக்கத்தில் இருந்த அனைத்தையும் தடை செய்து ஏழைகளின் அன்பை பெற்றார்.
*மேலும் ஒடுக்கப்பட்ட ஹிந்துப்பெண்கள் மறுமணம் செய்யவும்
வரி செலுத்தும் முறை இருந்தது,
அதையும் மன்னர் அவுரங்கசீப் தடை செய்தார்!

மேலும் ஓளரங்கஜேப் பற்றி சில கட்டுரைகளின் லிங்க கீழே..

ஒளரங்கசீப்... மறைக்கபடும் வரலாற்று உண்மைகள்...  http://rahmanfayed.blogspot.in/2013/06/blog-post.html

ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப் பற்றி சில தகவல் - I. http://www.rahmanfayed.blogspot.in/2012/07/blog-post.html

ஹிந்து ராணியின் பேரன் ஒளரங்கஜேப் பற்றி சில தகவல் - II. http://rahmanfayed.blogspot.in/2012/09/ii_4520.html

முகலாயர்கள் நல்லவரா? கெட்டவரா?  http://www.rahmanfayed.blogspot.in/2012/09/blog-post_21.html

முகலாயர்கள் நல்லவரா? கெட்டவரா?- II http://www.rahmanfayed.blogspot.in/2012/09/ii_24.html

No comments:

Post a Comment

welcome ur comment,