அது ஒரு கனாகாலம்.
75 வருடங்களுக்கு முன் பேட்டை நகரில் 160 அடி நிளம் கொண்ட மனையை ஆசாரிமார்களிடம் இருந்து வாங்கிய எனது பூட்டி ராபியா பீவி, முன் பகுதி 30 அடியில் சிறிய வீடும், பின் பகுதி காடாக இருந்தது.
தற்போதைய காலம் மாதரி அக்காலத்தில் காஸ் கிடையாதால், எங்கு விட்டு அருகில் வசிக்கும் பெரும்பாலானவர் விறகுக்காக பின்புறம் உள்ள மனையில் இருந்த வேப்பமரம் விறகாகவும்,
சிறியவர்களுக்கு கொடுக்காப்பளி மரமும் தீண்பண்டமாக இருந்தாது, அதில் உள்ள கனிகள் சுவையாகவும், விக்கல் எடுக்காததாக இருப்பதால். பெரும்பாலான சிறுசு முதல் பெரிசு வரை கவர்ததாக இருந்துச்சாம்.
27 வருடங்களுக்கு முன், எங்கள் வீட்டில் மணமகளாக அடி எடுத்து வைத்த எனது மாமி உம்முல் சாலிஹா வந்த பின், பின்புறம் உள்ள மனை அழகான பூங்காவனமாக மாற அரம்பித்துவிட்டது.
சுவை முகுந்த கனியான திராச்சை கொடிகள் எங்கள் வீட்டு முற்றத்தில் பந்தலாக மாறிவிட்டது, அதன் கனியை சுவைக்க பக்கத்தில உள்ள சிவா நர்சரி பள்ளி ஆசிரியர்கள் பள்ளி ஆபிஸ் ரும் கொடுக்கும் சாக்கில் வந்து சுவைத்துவிட்டு போவார்கள்.
எங்கள் விட்டில் இருந்த இரண்டு மாதுளம் மரத்தின் கனிகள், அணில்களுக்கு தினமும் விருந்தாக அமைந்தது.
தானாக வளரும் பப்பாளி மரத்தின் கனிகள் தித்திப்பாக அமைந்தது.
எங்கள் விட்டு தோட்டத்தில் பூக்கும் மல்லிகை பூக்களை தினமும் பிறித்து பூசூடி மாலை நேரத்தில் தேவாரம் படிக்க செல்வார்கள் எங்கள் பக்கத்து வீட்டு ஆச்சி சண்முசுந்தரி.
மாலை நேரத்தில் பள்ளி விட்டு வந்த உடனே கணக்காமரம் மரத்துக்கு தண்ணீர் ஊற்றுவது எனக்கு பிடித்த செயல், அப்படி தண்ணீர் உற்றும் போது டப் டப் என்று வெடிக்கும் சப்த்தை கேட்டு ரசித்த அது ஒரு கனாகாலம்.
8 அடி உயரம் அளவு வளர்ந்து இருக்கும் ரோஜா செடி மரம் போல வளர்ந்து, எங்கள் வீட்டுக்கு வரும் பலரை கவர்வதில் ரோஜா ராஜாவாக இருந்தது எங்கள் வீட்டு பிருந்தாவனத்தில். எனது ரோஜா செடியை பதியவைத்து தர, அந்த செடிகளை என் தாயார் பலருக்கு அன்பளிப்பாக தருவது வாடிக்கையாக இருந்தது.
எங்கள் வீட்டு பின்புற மனை பூக்கள் பூத்து குலுங்கும் அழகான நந்தவனமாக மாறிவிட்டது.
ஈழ தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட எங்கள் வீட்டில் நட்டபட்ட முருங்கை மரம் காயக்களும், இலைகளும் சுவையும் அடிமையாகி விட்டார்கள் ஆண்டை வீட்டார்கள். அவர்களின் சமையல் கட்டுகளை அது மட்டும் அலங்கரிக்கவில்லை, எங்கள் விட்டில் வளர்ந்த மிகப்பெரிய கருவேப்பலை மரத்தின் இலைகளும் அலங்கரிக்கதான் செய்தது.
கோடைகாலங்களில் எலும்பச்சை மரத்தின் கனிகள் தாகம் தனிக்கும் சுவை மிகுந்த பானமாக இருந்தது.
முக்கனியில் ஒன்றான வாழையும் அலங்கரித்தது எங்கள் விட்டு தோட்டத்தில்.
இந்து, முஸ்லிம், என எல்லா பண்டிகை காலங்களிலும், எங்கள் வீட்டில் இருக்கும் பல மருதோனி செடிகளின் இலைகள், பெண்களின் கைகளை அலங்காரித்து வந்தது.
எங்கள் வீட்டு பின்புற மனை பூத்துக் குலுங்கும் நந்தவனமாகவும், கனிகள் நிறைந்த சோலையாகவும் எங்கள் மாமியும், அம்மாவும் பராமரிப்பலில் ஜொலித்த அந்த காலம், ஒரு கனாகாலம்.
நந்தவனத்துக்கு முடிவு காலம்.
என் மாமன் மகன் ரகூப்பால் திராச்சை மரத்திற்கும். பாம்புகளால், மல்லிகை, வாழைகளுக்கும்.
கட்டிடங்களால் |
கட்டிடங்களால் மாதுளம், கருவேப்பலை மரங்களுக்கும். ரோஜா செடிகளுக்கும். இப்படி சில காரணங்களால் நந்தவனம் அழிவை நோக்கி பயணிக்க அரம்பித்துவிட்டது.
தற்போது இருக்கும் சிறிய இடத்தில், என் தங்கை விரும்பி சுவைக்கும் சப்போட்டா செடியும், முருங்கை மரமும் , மருதோனி செடியும் தான் மீச்சம்,
கருவேப்பலையும், லெம்மனும் தற்போது செடிகளாக வளர்ந்து வருகிறது.
அந்த சிறிய மனையும் எப்போது கட்டிடங்களாக மாறுமோ என்ற அச்சத்தில்?
பழைய நினைவுகள் ஒரு கனாகாலம் என்றுமே.
No comments:
Post a Comment
welcome ur comment,