ஃபாரஸ்ட் ஃபென்னின் தங்கப் புதையல்
ஃபாரஸ்ட் ஃபென் அமெரிக்க வான்படையில் மேஜர் தகுதியில் இருந்த ஒரு விமானி ஆவார். மேலும் வியட்நாம் போரில் இவரது பணியைப் பாராட்டும் விதமாக அமெரிக்க வான்படையின் மூன்றாவது பெரிய அங்கிகாரமான சில்வர் ஸ்டார் வழங்கப்பட்டது. அச்சமயத்தில் இவர் 328 முறை பறந்தார். அமெரிக்க வான் படையில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தன் நண்பரான ரெக்ஸ் அரோஸ்மித் என்பவரிடம் கலைப்பொருள் வணிகத்தைக் கற்றார். இருவரும் இணந்து நியூமெக்சிகோவில், சாண்டா ஃபே நகரில் அரோஸ்மிக் ஃபென் கேலரி என்ற கடையைத் துவங்கினர். தொழிலில் இருந்து அரோஸ்மித் விலகிய நிலையில் ஃபென்னுடன் இவரது மனைவியான பெக்கி தொழிலில் இணைந்தார்.
கலைப்பொருட்கள் வணிகத்தில் நன்கு பொருளீட்டினார். இறுதியில் கடையானது நிட்ரா மட்டிசிக்கு விற்கப்பட்டதுமிகப் பெரிய கோடீஸ்வராணா இவர், சாகசங்கள் என்றால் இவருக்கு விருப்பம் அதிகம்.
1988-ல் சிறுநீரகத்தில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தன்னுடைய வாழ்நாள் அதிகக் காலம் நீடிக்காது என்று நினைத்த ஃபென், ஒரு பெட்டியில் தங்க நாணயங்கள், தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களைப் போட்டு மூடினார்.
புதையல் வேட்டை என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ள குறிப்புகளை வைத்து, ராக்கி மலையில் தங்கப் புதையலைப் புதைத்துவிட்டார். ஒவ்வோர் ஆண்டும் ’புதையல் வேட்டை’ போட்டியை நடத்துகிறார். சென்ற ஆண்டு 30 ஆயிரம் பேர் போட்டியில் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு 50 ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள்.
ஆனால் ஒருவராலும் புதையலைக் கண்டு பிடிக்க முடியவில்லை. தங்கப் புதையலின் இன்றைய மதிப்பு சுமார் 12.5 கோடி ரூபாய். ’’புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைச் சரியாக வரிசைப்படுத்தினாலே புதையலைக் கண்டுபிடித்துவிடலாம்’’ என்கிறார் ஃபென்.
புதையலைத் தேடிப்போனவர்களில் நான்கு பேர் விபத்துக்களால் இறந்துவிட்டதாக அறியப்படுகிறது. இது போன்ற காரணங்களால் நியூ மெக்சிகோ காவல்துறையானது இந்த புதையல் வேட்டையை முடிவுக்கு கொண்டுவர ஃபென்னிற்கு அழுத்தம் கொடுக்க முயன்றது
இவர் தனது 79 அல்லது 80 வயது காலகட்டத்திலேயே மறைத்து வைத்தார்.
அடுத்த புதையில் பற்றி அடுத்த பதிவில் சந்திப்போம்
No comments:
Post a Comment
welcome ur comment,