Tuesday, September 24, 2019

மெடிட்டேரியன் கடல்கொள்ளப் பட்ட புராதன எகிப்திய நகரம்


மெடிட்டேரியன் கடல்கொள்ளப் பட்ட புராதன எகிப்திய நகரின் இடிபாடுகள் அகழ்வாறாய்ச்சியாளர்களால் கிளரப்பட்டன.  மண்மூடி போயிருந்த ஹெரசெலியன் (Heracleion) புராதன எகிப்திய துறைமுகப் பகுதியில் சிலைகளும்தங்க 
தகடுகளும் கண்டுபிடிக்கபபட்டன.

பிரெஞ்சு கடலடி ஆராய்சியாளரான டாக்டர்ப்ரெங் கோடியோ(Dr.Franck Goddio, European Institute) மற்றும் அவரது குழுவினர் 2000 ல்  நடத்திய ஆய்வில்  கடலின் அடி மட்டத்தின் கீழாக 30 அடியில் அபெளகிர் குடா (அலெக்ஸாண்டிரியாபகுதியில் சிலைகள் புதைந்திருப்பது கண்டறியப் பட்டது.

அதை தொடர்ந்து கடந்த 13 ஆண்டுகளாக நடத்தப் பட்ட ஆய்வின் பின் கிடைத்த தகவல்கள்இந்த இடமானது (Thonis-Heracleion)  உலக அளவிய துறைமுகம் மட்டுமல்லமத சம்பந்தமான முக்கிய பகுதியாகவும் 
இது இருந்திருக்க வேண்டும் என்பது உறுதி படுத்தப் பட்டது.
                                                              tks to Huffworldpost
கண்டெடுக்கப் பட்ட பொருட்கள் : 
64 உடைந்த  கப்பல் களின் பகுதிகள், 700 நங்கூரங்கள்தங்க காசுகள்பிரம்மாண்ட கல்வெட்டுகள்(எகிப்திய மற்றும் கிரேக்கஇவை  உலக வணிக மையம் என்பதற்கான ஆதாரங்கள்.

இவை தவிர 16 அடி உயர சிலைகள் கோவில் இருந்திருக்கும் என கருதப் படும் பகுதியில் இருந்துசுண்ணாம்பு படிமமாக மாறிப் போன பதப்படுத்தப் பட்ட (மம்மிகளை  போலவிலங்குகள் .
அலாவுதினுடைய அற்புத விளக்கோ ?



எழுத்துக்கள் பொறிப்பட்ட தங்க தகடு



இதேபோல தமிழக கரைப் பகுதிகளிலும் கடல் கொள்ளப்பட்ட சங்ககால நகரமும் சிலைகளும் ,பொற்காசுகளும்இந்திய கடல் ஆராய்சியாளர்களால் கைப் பற்றப் படும் என நம்புகிறேன் (ஹையோ..சே.. பகல் கனவு !)


No comments:

Post a Comment

welcome ur comment,