Friday, June 5, 2015

செல்போன்கள் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்


செல்போன்கள் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்



மொபைல் போன்களின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக இருக்கும் கால கட்டத்தில் அவைகளின் மூலம் ஏற்படும் ஆபத்துகளும் அதிகமாகவே இருக்கின்றது. சமீபத்தில் ஸ்மார்ட்போன்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிகளவு நடைபெறுகின்றன. 

ஸ்மார்ட்போன்கள் ஏன் திடீரென வெடிக்கின்றன, அவை வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பனவற்றை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

மொபைல் போன் 


புதிதாக மொபைல் வாங்கும் போது முடிந்த வரை பிரான்டெட் கருவியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

வெடித்தல் 


சில சமயங்களில் வெளிநாட்டு நம்பர்களில் இருந்து வரும் மிஸ்டு கால்களுக்கு மீண்டும் அழைக்கும் போது போன்கள் வெடிப்பதாக கூறப்படுகின்றது. மேலும் போனினை சார்ஜரில் இருக்கும் போது அழைப்புகளை மேற்கொள்வதும் அவைகளை வெடிக்க செய்கின்றன.

என்ன செய்யலாம் 


முடிந்த வரை போன் சார்ஜரில் இருக்கும் போது பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் பேட்டரி பழுதாகி இருந்தால் அதனை உடனே மாற்றி விட வேண்டும்.

விலை 


முடிந்த வரை விலை குறைவான போன்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பெரும்பாலும் விலை குறைந்த போன்களில் சீன ஹார்டுவேர்களே பயன்படுத்தப்படுகின்றன, இவை பிரான்டெட் இல்லாத காரணத்தினால் அவை எப்பவும் ஆபத்தை விளைவிக்கும்.

இண்டர்நெட் 

போன்களில் இண்டர்நெட் பயன்படுத்தும் போது உங்களுக்கு அறிமுகம் இல்லாத தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பொது இடங்களில் கிடைக்கும் வை-பை பயன்படுத்துவதும் ஆபத்தில் முடியலாம்.

முன் எச்சரிக்கை 

போன்களை உங்களது உடலில் இருந்து சற்று தள்ளி வைத்து பயன்படுத்தலாம். முடிந்த வரை ஸ்பீக்கர் அல்லது ப்ளூடூத் ஹெட்போன்களை பயன்படுத்தலாம்.
ஈரம் போனில் 
தண்ணீரில் விழுந்தால் உடனடியாக அதனினை தனித்தனியாக பிரித்து காய வைக்க வேண்டும். அதிகபட்சம் 12 - 24 மணி நேரத்திற்கு போனினை நன்கு காய வைத்து அதன் பின் ஆன் செய்ய முயற்சிக்கலாம்.

பயன்பாடு போனினை 

சிலர் முகங்களோடு நெருக்கமாக வைத்து பயன்படுத்துவர், இவ்வாறு செய்வது வாய் புற்று நோய் மற்றும் தூக்கமின்மைக்கு வழி வகுக்கும்.

No comments:

Post a Comment

welcome ur comment,