Tuesday, August 26, 2014

மாயமாக மறைந்த ஒரு கிராமம்

மாயமாக மறைந்த ஒரு கிராமம் 


ஒரு மர்ம கிராமம் பற்றி இன்று பார்க்கப்போகின்றோம். இது சுமார் 8 வருடங்களுக்கு முன்னர் ஏதோ ஒரு பத்திரிகையில் “கென்னியா” வைச்சேர்ந்த கிராமம் என்ற தகவலுடன் வாசித்த நினைவு. இப்போது தேடிய தகவல்களை பகிர்ந்துகொள்கிறேன். இதன் தொடர்ச்சியை “ஏலியன்ஸ் -2 தொடரில்  பார்க்கலாம்..

அஞ்ஜிகுனி, கனடாவில் ஒதுக்குப்புறமாக மலையைச்சார்ந்து அமைந்திருந்த கிராமம். சுமார் 2000 மக்கள் சாதாரணமாக வாந்துவந்தார்கள். ஏரியில் மீன் பிடித்து விற்பதை முக்கிய தொழிலாக கொண்டிருந்தார்கள் அவர்கள். 

1930 ஆம் ஆண்டு கார்த்திகை ( நவம்பர்) மாதம் ஒரு நாள்…... 
பொறிவைத்து விலங்குகளை பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட ஜோ லபல் என்பவர் அந்த ஊருக்கு சென்றார். அது முதல் தடவையல்ல… பல தடவைகள் அவர் அந்த ஊருக்கு சென்றுள்ளார். ஆனால் அன்று சற்று வித்தியாசமாக இருந்தது ஊர். ஊருக்குள் கால் வைத்தது முதல் யாரையும் அவர் காணவில்லை. ஊரின் மையப்பகுதிக்கு சென்றும் அவர் கண்களில் யாரும் அகப்படவில்லை. வீட்டுக்கதவுகள் திறந்து கிடந்தன. வீட்டிற்குள் சென்று பார்த்தால் சமைத்த உணவுகள் அப்படியே கிடந்தன. பாதி தைத்த உடைகளில் ஊசி கூட வெளியில் எடுக்கப்படாமல் இருந்தது.... 

இறுதியாக இரு வாரங்களுக்கு முதல் கூட அங்கே வந்திருந்தார் ஜோ. கிராமத்தவர்கள் அனைவருமே கலகலப்பானவர்கள். சுமூகமான சமூகம். 

ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்த ஜோ, பகுதி காவலர்களுக்கு அறிவித்தார். அவர்கள் தேடியும் அந்த கிராமத்திற்கு என்ன நடந்தது? அங்கிருந்தவர்கள் எங்கே? போன்ற கேள்விகள் தேங்கித்தான் நின்றன.... 

சுற்று முற்றும் தேடி விசாரித்ததில்…...

ஊரின் மறு முனையில் “வண்டில்களை இழுத்து செல்லும்” நாய்கள் இறந்து கிடந்தன. ( 7 நாய்கள் என்று சில தகவல்களும் சிலது 3 எனவும் மாறுபட்டு இணையத்தில் உள்ளது.) அந்த நாய்கள் எவ்வாறு இறந்தன என்பதை அப்போது பெரிதாக யாரும் சோதனையிடவில்லை.... 

அருகில் உள்ள ஊரைச்சேர்ந்த பலர் அந்த ஊரின் மலைப்பகுதியில் வெளிச்சத்தத்தை பார்த்ததாக கூறினார்கள்....

கூறப்படும் காரணங்கள் : 

வேறு இடம் பெயர்ந்திருப்பார்கள் : 
சகல வசதிகளும் இருக்கும் அந்த மக்கள் பொருட்களை அப்படி அப்படியே விட்டு விட்டு கிளம்பிப்போக வாய்ப்பில்லை. அப்படி போய் இருந்தாலும் எங்கே?

படையெடுப்பு : 

ஏதோ ஒரு ஊரைச்சேர்ந்தவர்கள் படையெடுத்து சிறைப்பிடித்திருப்பார்கள். ஊரில் படையெடுப்பு நடந்தமைக்கான எந்த அறிகுறிகளும் இருந்ததில்லை. படையெடுப்பு அமைதியாக நடைபெற வாய்ப்பும் இல்லை.

வெம்பயர், காட்டேர்களின் தாக்குதல் : 
குறிப்பிட்ட காலத்தில் வெம்பயர்கள் தொடர்பான அதீத நம்பிக்களைகள் இருந்தமையால் இந்த கருத்து வெளியிடப்பட்டிருக்கலாம். மனித இறப்புக்களுக்கான சான்றுகளோ இரத்த அடையாளங்களோ கிராமத்தில் கண்டு பிடிக்கப்படவில்லை..

பக்கத்து ஊரைச்சேர்ந்தவர்கள் மலையில் வெளிச்சத்தை பார்த்ததாக கூறியதன் படி, ஏலியன்ஸ் ஒரே தடவையில் அந்த ஊர் மக்களை/ உயிரினங்களை மட்டும் கடத்தி இருக்க கூடும். இது தொடர்பாக விரிவாக “எலியன்ஸ் -1 தொடரில் பார்ப்போம்.)...

பதில் “எலியன்ஸ் -1 பக்கத்தை  <<கிளிக்>> செய்து  பார்க்கவும் ... 

பரிமாணம் : 
அந்த ஊர் மக்கள் பரிமாண மாற்றத்தில் மறைந்திருக்கலாம்! இதுவும் சற்று குழப்பமானது. விரிவாக பின்னர் பார்க்கலாம்.

எமது கருத்துப்படி, மறை உலகம்! 
கிட்டத்தட்ட இது பரிமாணத்தை ஒத்துப்போகும். ஏற்கனவே இது தொடர்பாக பார்த்துள்ளோம். மீண்டும் இன்னோர் சந்தர்ப்பத்தில் விரிவாக பார்க்கலாம். 

இவ்வாறு பல கருத்துக்கள் கூறப்பட்டாலும், இந்த கிராம மக்கள் காணாமல் போய் 83 வருடங்களைத்தாண்டியும் இன்னமும் இதற்கான விடையை கனேடிய பொலிஸாரும் ஆய்வாளர்களும் கண்டறிய முடியாதுள்ளனர்!...

எலியன்ஸ் -1 தொடர இங்கே  <<கிளிக்>> செய்து  பார்க்கவும் ..

வாவ்- ஏலியன்ஸ் பூமியை தொடர்பு கொண்டனவா?...

வாவ்- ஏலியன்ஸ் பூமியை தொடர்பு கொண்டனவா?... 


வருடம் 1977, ஒரு கோடைகால இரவு, வழக்கம் போல தான் ஆய்வகதில் விண்வெளியை பற்றியும், வேற்றுலாக வாசிகளை பற்றியும் ஆராய்சி செய்துகொண்டு இருந்தார்  ஜெர்ரி எஹ்மான்,(Jerry Ehman). அன்று இரவு வழக்காதிற்கு மாறாக அவரது கணினி ஏதோ ஒரு ரேடியோ சிக்னலை பதிவு செய்தது.அந்த சிக்னல்(தகவல்/ சாமிக்ஞை) ஒரு 72 நொடிகளுக்கு தொடர்ந்து கிடைத்தது.எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த நிகழ்ல்வு ஜெர்ரியை திகைப்படைய வைத்தது. உடனேயே அந்த சிக்னலை, செய்தியாக கணினியின் உதவியுடன் பரிமாற்றப்பட்டது. இதற்கு மட்டும் மூன்று நாட்கள் எடுதுக் கொண்டதாக தெரிகிறது.அவ்வாறு பரிமாற்றப்பட்ட வார்த்தை தான் “வாவ்”....


அதாவது நாம் பூமியில் வாழும் உயிரினகளால் அனுப்ப படாத, நம் சூரிய குடும்பத்திற்கு வெளியிலிருந்து பெறப்பட்ட ஒரே தகவல். இந்த தகவல் டௌ சகிட்டரீ  (Tau Sagittarii), என்ற நட்சதிரனின் சுற்றுப்புரதத்திலிருந்து வததாக பின்னர் கண்டறியப் பட்டது.

இந்த நட்சதிரம் பூமியிலிருந்து 120 ஒளி ஆண்டுகள் (1 light-year= 9.4605284 × 10^12 kilometers) தொலைவிலிருந்து வந்தது.ஆனால் அது தான் சூரிய குடும்பத்திற்கு வெளியிலிருந்து நாம் பெற்ற முதல் மற்றும் கடைசி தகவல்....

அந்த தகவல் அனுப்பப்பட்ட அலைவரிசை 1420MHz . இந்த ரேடியோ அலைவரிசை வீண்வலி ஆய்விற்கு உகந்ததாக உள்ளதால் இந்த அலைவரிசை மற்ற வானொலி, தொலைக்கச்சியின்  பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த அலைவரிசைக்கு ஹைட்ரஜன் லைன்  என்று பெயர்....

1977ல் பெறப்பட்ட பிறகு இன்று வரை வேறு எந்த சிக்னலும் பெறப்படவில்லை.ஒரு வேலை வேறு எந்த சிக்னலும் அனுப்ப படாவிளய, அல்லது அந்த தகவ்ல் அனுப்பப்பட்டு நம்மால் பெற முடியாமல் போனதா என்று இன்றுவரை விடை இல்லை....

35 வருடங்களாக பூமியிலிருது பல சிக்னல்கள் அந்த சிக்னல் வந்த திசை நோக்கி அனுப்பப் பட்டு வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒரு நாள் அந்த சிக்னலை பற்றிய ஆய்விற்கு சரியான விடை கிடைக்கும். அப்போது எளியன்கள் பற்றிய மர்மங்கள் விலகும்.அவர்கள் இருப்பது உன்மயானால், அது நம் பூமியின் வரலாற்றை வேறு ஒரு புதிய பாதை நோக்கி அழைத்து செல்லும். இந்த வாவ் பற்றியும், எளியன்கள் பற்றிய உங்கள் கருதுக்களை பகிருங்கள். (2839).

வேற்றுகிரகவாசிகள் பற்றிய சில கட்டுரைகள் 





Monday, August 25, 2014

மூட நம்பிக்கைகளின் மலைத்தொடர் – அமெரிக்காவில் ஒரு மர்ம தேசம்!...

மூட நம்பிக்கைகளின் மலைத்தொடர்..

( அமெரிக்காவில் ஒரு மர்ம தேசம்!)

உலகில் இனங்காணப்படாத பல மர்ம சம்பவங்கள் இருக்கின்றன, அதே போல் இன்னும் பல சம்பவங்கள் மூட நம்பிக்கள் முலமாக ” நடப்பதாக ” கருதப்படும் மாயைகளாக உள்ளன!

இவை இரண்டிற்கும் பொதுவாக இன்றுவரை தனது மர்மத்தையும் மூட நம்பிக்கையையும் தக்கவைத்துக்கொண்டிருக்கும்; “மூட நம்பிக்கைகளின் மலைத்தொடர்” என பொருள் பட அழைக்கப்படும் “Superstition Mountains” மலைத்தொடர் பற்றி சுருக்கமாக பார்ப்போம். அமெரிக்காவின், அரிசோனா பகுதியில் இருக்கும் ஒரு மலைத்தொடர்தான் இது. அதை சுற்றி நிகழும் சம்பவங்களையும் நம்பிக்கைகளையும் பார்ப்போம்...
 Jacob Waltz

1800 ஆம் ஆண்டளவில் Jacob Waltz எனும் மனிதர் இந்த மலைத்தொடரை அடையாளங்கண்டார், அங்கு மிகப்பெரிய ஒரு தங்கப்புதையல் இருந்ததால் அவர் அதுபற்றி யாருக்கும் தெரிவிக்கவில்லை. வயது ஆகி இறுதியில் நோயின் தாக்கத்தால் மரணப்படுக்கையில் இருந்த அவர், தனக்கு நெருங்கிய ஒருவரிடம் மட்டும் அந்த தங்கப்புதையல் பற்றி கூறினார். அவர் அதை சிலரிடம் கூறினார்… பின்னர், அந்த சிலரில் ஒருவரால் அந்த நபர் கொல்லப்பட்டார்.

இதனால், அந்த புதையல் எங்கே இருக்கிறது என்ற சரியான இடம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் புதையல் இருக்கும் கதை அதைஅதை சுற்றி இருந்த ஏரியாவிற்கு பரவியது. பலர் புதையலை தேடிச்சென்றார்கள். சென்றவர்களில் பாதிக்கு மேல் திரும்பிவரவில்லை. மர்மமான முறையில் இறந்து போனார்கள்! வந்தவர்களும் தங்கத்தை காணவில்லை, முன்னையவர்களின் எலும்புக்கூடுகளை ஆங்காங்கே கண்டு, அதை சொல்லி திகிலை உண்டுபண்ணினார்கள்!

நம்பிக்கை 2
தப்பி வந்தவர்கள் பலர், அங்கே “Tuar-Tums” என அடையாளப்படுத்தப்படும் சிறிய மனிதர்கள் வாழ்வதாகவும். அவர்களே அந்த புதையலை ஆழ்வதாகவும் கூறினார்கள். அதனால், அங்கு குள்ள மனிதர்கள் வாழ்வதாகவும், ஏலியன்ஸ் வந்து செல்லும் இடம் எனவும் கதைகள் பரவின.

நம்பிக்கை 3…

அந்த மலைத்தொடர்களின் இடுக்கில் தான், நரகத்திற்கான நுழைவாசல் இருக்கிறது. என அந்த வளாக மத குருக்கள் ஒரு கதையை கட்டவிழ்துவிட்டார்கள்… நம்பிக்கைகள் இவ்வாறிருக்க,
அவர்கள் எப்படி இறந்திருப்பார்கள்? என ஆராய்ந்தால்…

குறிப்பிட்ட மலைத்தொடர் இருக்கும் பிரதேசம் சுமார் 115-125F (ஃப்ரனைட்) வரை வெப்பம் வீசும் ஒரு பிரதேசமாகும். அதாவது பாலைவனம்! நீர் நிலைகள் இல்லை. அவ்வப்போது மழை பெய்தாலும் மழை பெய்த குறுகிய நேரத்தில் நீர் வற்றிவிடும்! அத்தோடு மலைத்தொடர் பல ஏற்ற இறக்கங்களைக்கொண்டது என்பதுடன், பல குறுகிய குகைகளையும் கொண்டது. இவற்றைக்கொண்டு பார்க்கும் போது, குறுகிய மலைஇடுக்குகளில் மாட்டுப்பட்டும், நீர் இன்றியும் பலர் இறந்திருப்பார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது.

எனினும், இன்றுவரை பலர் அந்த தங்கப்புதையலை குறிவைத்து அந்த பகுதியில் தேடல் வேட்டை நடத்தத்தான் செய்கிறார்கள். அதில் பலர் இன்னமும் திரும்பவில்லை!
இணைந்திருங்கள்… உலகில் உள்ள ஒவ்வொரு மர்மபகுதியையும் ஆராயலாம்…

Ref : wilderness, Listverse (1653)...

மர்ம தேசம்.(ரகசிய தொடர்).


விடைதெரியா மர்மங்கள் (கல்தட்டு)...

நேபாள கல் தட்டு... 




வேற்றுகிரக வாசிகள்,பறக்கும் தட்டுக்கள் உலகின் பல பகுதிகளுக்கும் வந்து போனதாக பல செய்திகளை படிக்கிறோம். (ஏலியன்ஸ் இருக்குதா? இல்லையா? சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமே நடத்தலாம்… அது வேறு)

மாயன்கள் காலத்தில்(இன்கா), முற்கால எகிப்து, பெரு, இங்கெல்லாம் ஆதாரங்கள் (கற் சிலை) இருப்பதாக அறிகிறோம். நேபாளத்தில் எனும் போது இன்னும் ஆச்சர்யம் மிகுதியாகிறது. 12000 வருடங்கள் பழமையான கல் தட்டு (The Lolladoff plate) மர்மங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. பார்பதற்கு பறக்கும் தட்டு (UFO) போலவே இருக்கிறது. இருக்கிறது. இவ் வட்ட தட்டில் சுருள் வடிவ உடுமண்டலம் (spiral galaxy) வடிவம் (நம் பால்வெளியா?)

சுற்றுப்பதையில் ஒரு பறக்கும் தட்டு, சூரியன், இரு கைகளை நீட்டிய வேற்றுகிரக வாசி (நம்மை முறைப்பது போல் உள்ளது), சித்திர எழுத்துகள்.. விசித்திர விலங்கு, ஓணான், சிலந்தி..இப்படி பல வடிவங்கள் உள்ளன..

அக்கால விண்வெளி அறிவாற்றல், வேற்றுகிரகவாசி, பறக்கும் தட்டு, என்பதெல்லாம் உண்மையா?  மேலே சொன்ன நாடுகளோடு அக்காலத்திய தொடர்புகள்..  இப்படி பல்வேறு வினாக்களை எழுப்பி விடை தெரியா மர்மமாக உள்ளது....

வேற்றுகிரகவாசிகள் பற்றிய சில கட்டுரைகள் 





Saturday, August 23, 2014

அம்பலமாகியுள்ள ஏரியா 51 இரகசியங்கள் –2

அம்பலமாகியுள்ள  ஏரியா 51 இரகசியங்கள்  – 2

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...

அமெரிக்காவின் இரகசிய உளவு விமானமொன்றின் தயாரிப்பு தொடர்பிலும் அதன் பரிசோதனை தொடர்பிலுமே குறித்த Area 51 பகுதியானது அமெரிக்க அரசினால் 1955 ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டிருந்தது. இதன்பின் CIA, விமானப்படை அதிஉயர் தொழில்நுட்பம் கொண்ட வேவுபார்க்கும் விமானம் ஒன்றை உருவாக்க Lockheed என்கின்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து Area 51 பகுதியில் விமான கட்டுமான பணிகளை ஆரம்பித்தது.
U – 2 
U-2 programme என இத்திட்டம் அழைக்கப்பட்டிருந்ததுடன் தனித்துவமிக்க வகையில்உளவு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய U-2 என்கின்ற உளவு விமானத்தினைத்தயாரித்து பரிசோதிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். குறித்தவிமானமானது பனிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சோவியத் யூனியன்மீதான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படத்து.


U-2 உளவு விமானத்தினைப் பொறுத்த வரையில் குறித்த விமானமானது அதிக உயரத்தில் பறக்கக் கூடியதாக இருப்பதுவே அதன் தனித்துவமிக்க சிறப்பம்சமாகும். குறித்த விமானமானது கிட்டத்தட்ட 60,000 அடிகளுக்கும் மேல் பறக்கக் கூடியது என்பதுடன் இவ்விமானத்தின் பறப்புக்களே பறக்கும் தட்டு குறித்த சந்தேகங்களைத் தோற்றுவித்தன என தற்போது தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது, 1957 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த விமானம் பரிசோதிக்கப்பட்டபோது U-2 விமானத்தின் தொழிநுட்பமானது அக்காலகட்டத்தில் கற்பனையிலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு ஒரு பாரிய தொழிநுட்பமாகக் காணப்பட்டது. இதனால் இவ்வாறான தொழிநுட்பத்தினைக் கொண்டமைந்த விடயங்கள் அக்காலகட்டத்தில் உலகத்தில் இருந்திருக்கவே முடியாது என்கின்ற எண்ணம் மக்கள் மத்தியில் காணப்பட்டிருந்தது.

அத்துடன், குறித்த விமானமானது மிகவும் உயரத்தில் பறக்கும் போது அதுசாதாரண கண்களுக்குப் பெரும்பாலும் புலப்படமாட்டாது ஆயினும், குறிப்பிட்டஒரு உயரத்தில் பொதுமக்கள் U-2 வினைக் காணும் போது அது இனங்காணப்படமுடியாத ஒரு பொருள் (Unidentified Flying Object – UFO) பறப்பது போன்றதோற்றத்தினை அக்காலத்தில் ஏற்படுத்தியிருந்தது. மேலும், குறித்த விமானத்தின்பரிசோதனையானது பெரும்பாலும் மாலை நேரத்திலேயேமேற்கொள்ளப்படுவதனால், குறித்த நேரத்தில் விமானத்தின் மீது சூரியனின் ஒளிபட்டுத் தெறிக்கின்ற பிரகாசத்தினை அப்போதைய மக்கள் பறக்கும் தட்டு எனநம்பியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு பிற்பட்டகாலப்பகுதிகளில் OXCART, D-21 & F-117 எனும் உளவு விமானங்களும் Area 51 பகுதியில் பரிசோதிக்கப்பட்டமை பறக்கும் தட்டு தொடர்பான சந்தேகங்களுக்குதீனி போடுவதாக அமைந்தது.
OXCART





D 21




F – 117

இவ்வாறு வெளிவந்த வதந்திகளை அமெரிக்க அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது காரணம் இவ் அதி நவீன உளவு விமானங்கள் சோவியத் உடனான பனிப் போரில் அமெரிக்காவிற்கு தலை சிறந்த ஆயுதமாக விளங்கியது.இப்படி ஓரு ஆயுதம் இருப்பதையே வெளி உலகிற்கு குறிப்பாக சோவியத்திஇற்குகாட்டி கொள்ள விரும்பவில்லை. அகவே பறக்கும் தட்டுக்கள் சம்பந்தமானவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அதை ஒரு திசை திருப்பும் கருவியாகபாவித்து Area 51 பகுதியில் உண்மையான இரகசிய நடவடிக்கைகளை தொடர்ந்துமுன்னெடுத்தது CIA. மேலும் பறக்கும் தட்டுக்கள் மற்றும் வேற்றுக்கிரகவாசிகள்தொடர்பிலான சில பொய்யான தகவல்களை அவ்வப்போது திட்டமிட்டுவெளியிட்டு பொதுமக்களை ஒரு குழப்பமான நிலையில்  வைத்திருப்பதற்கானமுயற்சிகளையும் மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில், இவ்வளவு காலத்தின் பின்னர் இவ்வாறான ஒரு ஆவணத்தினை வெளியிட்டு இதுதான் Area 51இல் நடந்தது என்று சொல்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் எதனை உலகத்திற்கு வெளிப்படுத்த விரும்புகின்றது என்று தெரியவில்லை. அத்துடன் அண்மையில் பறக்கும் தட்டு தொடர்பில் விசாரணை செய்யும் பிரித்தானிய பிரிவு மூடபட்டது CIA இன் பிந்திய அறிகைய உறுதி செய்வதாகவே உள்ளது. ஆக மொத்தத்தில் பறக்கும் தட்டு என்று வதந்தியை உருவாக்கி முழு உலகையும் முட்டாளாக்கி உள்ளது CIA.

Area 51 இன் பல ஆராய்ச்சி நடவடிக்கைகள் பெரும்பாலும் நிலத்திற்கு அடியிலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதனால், உண்மையில் அங்கு என்ன நடந்தது?, மற்றும் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கின்றது? என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் வெளியுலகத்தினருக்குத் தெரியவாய்ப்பில்லை. அத்துடன், உலகின் ஏனைய நாடுகளைப் பொறுத்தவரையில்  1950 காலப்பகுதிகளில் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத பரிசோதனைகளை வெற்றிகரமாக அமெரிக்கா முன்னெடுத்திருக்கின்றது என்பது தற்போது உறுதியாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதால், தற்போதைய காலகட்டத்தில் எம் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட எவ்வளவோ விடயங்கள் அமெரிக்காவினால் வெற்றிகரமாகப் கண்டு பிடிக்கப்பட்டு பின் மறைக்கப்பட்டு இருக்கும் என்பதும் மறுக்க முடியாத ஒரு விடயமாகும், காலதத்தின் கைகளிலேயே இதற்கான விடை மறைந்துள்ளது.

வேற்றுகிரகவாசிகள் பற்றிய சில கட்டுரைகள் 




அம்பலமாகியுள்ள ஏரியா 51 இரகசியங்கள் –1

அம்பலமாகியுள்ள  ஏரியா 51 இரகசியங்கள் –1


பறக்கும் தட்டுக்கள் வானில் தென்படுவது தொடர்பிலும், அவற்றினைப் பயன்படுத்தி வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்கின்றார்கள் எனவும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலதரப்பட்ட கதைகள் பரவி வந்துள்ளதுடன், இது தொடர்பில் பல புகைப்படங்களும் வெளிவந்திருந்தன. இவை தொடர்பிலான ஆதாரங்கள் எதுவும் இன்று வரையிலும் சரிவர நிரூபிக்கப்படாத காரணத்தினால், பறக்கும் தட்டுக்கள் தொடர்பிலான மர்மங்கள் முடிச்சவிழ்க்கப்பட முடியாமல் இன்று வரையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.


இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் ஆர்வம் உடையவர்கள் எவரும் நிச்சயமாக Area 51 பற்றி அறிந்திருக்காமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு, பறக்கும் தட்டுக்களுடனும் வேற்றுக்கிரகவாசிகளுடனும் நெருங்கிய தொடர்புடைய ஒன்றாக Area 51 காணப்படுகின்றது.

Area 51 மேற்கு அமெரிக்காவின் Nevada பிராந்தியத்திலுள்ள மலைசார்ந்த வறண்ட நிலப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. Area 51 என்பது அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஒரு பயிற்சி பட்டறையும் பரிசோதனை கூடமும் ஆகும். மிக நீண்டகாலமாகவே குறித்த பகுதிக்கு சாதாரண மக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேசத்தின் மீதான பொதுவான விமானப்பறப்புக்களும் தடை செய்யப்பட்டுள்ளன. குறித்த பிரதேசம் தொடர்பிலான தகவல்கள் ஆரம்பத்தில் பலருக்கும் தெரியாமல் மிகவும் இரகசியமாகப் பேணப்பட்டு வந்த போதிலும், நாளடைவில் Area 51 தொடர்பிலான விடயங்கள் வெளியுலகத்திற்குக் கசியத் தொடங்கியதையடுத்து அமெரிக்க மக்கள் உள்ளிட்ட உலகத்தில் உள்ள அனைத்து மக்களினதும் கவனமானது Area 51 இன் மீதும், அங்கு என்ன நடக்கின்றது என்பது தொடர்பிலும் திரும்பத்தொடங்கியது.




1955 களில் நிர்மாணிக்கப்பட்டு செயற்படுத்தப்படத் தொடங்கிய குறித்தகட்டமைப்பானது மிகவும் இரகசியமான இராணுவ பரிசோதனைநவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது என்று ஆரம்பத்தில் கருதப்பட்டபோதிலும், குறித்த பகுதியில் காணப்படுகின்ற Groom Lake எனப்படுகின்றபனிக்கட்டிகள் போன்ற தரைத்தோற்றத்தினைக் (Salt Lake) கொண்ட பாரியநிலப்பரப்பு மற்றும் அதனைச்சுற்றி ஏற்படுத்தப்பட்டிருந்த விமான ஓடுபாதைமேலும் குறித்த பகுதியில் வழமைக்கு மாறான விதத்தில்வடிவமைக்கப்பட்டிருந்த கட்டட அமைப்புகள், சந்தேகத்தினை ஏற்படுத்தும்வகையில் இடம்பெறத் தொடங்கிய பல இராணுவ பரிசோதனைகள் என்பன Area 51மீதான கவனத்தினை வேறு விதமாக திசை மாற்றியிருந்தது.

அத்துடன் Groom Lake என அழைக்கப்பட்ட பகுதியில் நிலத்தின் அடியில் பாரிய புகையிரதப்பாதை ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது என்கின்ற தகவல்களும் வெளிவந்திருந்தன.

இதற்கேற்றாற்போல், 1947 ஆம் ஆண்டு ஜுலை 7 ஆம் திகதியளவில்மெக்சிக்கோவின் Roswell எனும் பகுதியில் விபத்துக்குள்ளாகியிருந்த பறக்கும்தட்டு ஒன்றும்,

அதிலிருந்து மீட்கப்பட்ட உயிரிழந்த வேற்றுக்கிரகவாசிகளின்உடலும் Area 51 பகுதியில் வைத்து ஆய்வுக்குட்படுத்தப்படுவதாகத் தகவல்கள்வெளியாகியிருந்தன.

அத்துடன் குறித்த பறக்கும் தட்டானது Area 51  பகுதியில்வைத்து மீள்கட்டமைக்கப்பட்டு வருவதாகவும், அதன் தொழிநுட்பத்தினை அறிந்துகொள்ளும் பொருட்டும் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் மேலதிகதகவல்கள் வெளிவந்திருந்தன.


குறித்த பறக்கும் தட்டின் சிதைவுகள் Area 51 பகுதியில் அமைந்துள்ள Hangar 18என்று அழைக்கப்படும் கட்டடப்பகுதியில் வைத்தே மேற்கொள்ளப்பட்டுவந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,  MJ-12  மற்றும் SECTOR 7என்றுஅழைக்கப்படுகின்ற உயர்மட்ட அதிகாரிகள், மற்றும் இராணுவ அதிகாரிகள்உள்ளடங்கிய குழுவொன்று இது தொடர்பிலான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகநியமிக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து Area 51 என்பது வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் பறக்கும் தட்டுக்கள்தொடர்பிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கென அமெரிக்க அரசினால்அமைக்கப்பட்ட அதியுயர் பாதுகாப்பும், இரகசியமும் மிகுந்த பிரதேசம் என பலதரப்பினரும் கருதத்தொடங்கியிருந்தனர். இவையெல்லாவற்றிற்கும் அப்பால்,வானிலைக் கட்டுப்பாடு, இரகசிய ஆயுதங்களின் உற்பத்தி, மற்றும் முன்னையகாலத்தினை நோக்கிப் பயணிப்பதற்கான தொழிநுட்பம் (Time Travel Technology)என்பவை தொடர்பிலான ஆய்வுகளும் Area 51 பகுதியில்மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் பல்வேறு சர்ச்சைகள்தோற்றுவிக்கப்பட்டிருந்தன.

அத்துடன், Area 51 இனைச் சார்ந்த ஏனைய நிலப்பகுதிகளானது பாரிய அணுவாயுதச் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுமிருந்தன. இதன் காரணமாக Area 51 பகுதியில் பணியாற்றிய ஊழியர்கள் பலர் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்ததுடன், குறித்த பிரதேசத்தினை அண்மித்த பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு நாளடைவில் புற்றுநோய்த் தாக்கங்கள் ஏற்பட்டிருந்தன எனவும் பலத்த விமர்சனங்களும் கிளம்பியிருந்தன.

மேலும், Area 51 மற்றும் அதன் இரகசியங்கள் குறித்து The Independence Day போன்ற திரைப்படங்களும் வெளிவந்திருந்தன. அத்துடன், Indiana Jones திரைப்படமொன்றில் அமெரிக்க அரசினால் கைப்பற்றப்பட்டிருந்த விநோதமான பொருட்களைச் சேமித்து வைக்கும் களஞ்சியம் ஒன்று தொடர்பான காட்சி அமைக்கப்பட்டிருந்ததுடன், குறித்த களஞ்சியசாலைக்கு Hangar 51 எனப் பெயரிடப்பட்டுமிருக்கும்.

இவ்வாறான பல சர்ச்சைகளின் முடிச்சுக்களைத் தன்னகத்தே வைத்திருந்த Area 51தொடர்பிலும், அதன் இரகசியத் தன்மை தொடர்பிலும் தற்போது முதல்முறையாக CIA யினர் உத்தியோகபூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.இவ்விடயம் தொடர்பிலான தகவல்கள் வொஷிங்டனின் George Washingtonபல்கலைக்கழகத்திலுள்ள தேசிய பாதுகாப்பு ஆவணக்காப்பகத்திலிருந்து தற்போதுவெளியிடப்பட்டுள்ளன. 1998 ஆம் ஆண்டளவில் குறித்த விடயம் தொடர்பில் சிலஆவணங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதிலும், அவற்றில் பல முக்கியமானவிடயங்கள் மறைக்கப்பட்டே குறித்த ஆவணங்கள் வெளியிடப்பட்டிருந்தன.இந்நிலையில் தற்போது Area 51 குறித்த முழுமையான ஆவணம்வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆவணங்கள் மூலம் தெரியவருவதாவது;

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...


Friday, August 22, 2014

எவ்பர்ரி பயிர் வட்டத்தில் பறக்கும் தட்டு..

எவ்பர்ரி பயிர் வட்டத்தில் பறக்கும் தட்டு..

ஐக்கிய ராஜ்ஜியத்தில் (United Kingdom) உள்ளது எவ்பர்ரி (Avebury) நகரம். இந்த இடம் Crop Circles எனப்படும் பயிர் வட்டங்களுக்கு புகழ் பெற்றது அடிக்கடி இந்த பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மர்மமான பயிர் வட்டங்கள் தோன்றும். இந்த பயிர்வட்டங்களை இன்று மனிதர்கள் உருவாக்கினாலும் இங்கு தோன்றும் பயிர் வட்டங்கள் மிகவும் சிக்கலான வடிவமுடையவை.இவற்றை செயற்கையாக உருவாக்குவது மிகவும் கடினம் அல்லது உருவாக்க இயலாதது.

இங்கே 2012 ஆகஸ்ட் மாத ஆரம்பத்திலிருந்து பல சிக்கலான் பயிர்வட்டங்கள் தோன்றி வந்தன.

அவை உங்கள் பார்வைக்கு கீழே..



ஆகஸ்ட் 1, 2012



ஆகஸ்ட் 1, 2012



ஆகஸ்ட் 9, 2012



ஆகஸ்ட் 12, 2012



ஆகஸ்ட் 15, 2012




ஆகஸ்ட் 20, 2012




ஆகஸ்ட் 23, 2012



மேலே இறுதியாக உள்ளது சமீபத்திய பயிர்வட்டம் இவை மனிதர்களால் உருவாக்க படுவதாக ஒரு சாரார் சொல்லி வந்தாலும் இந்த பயிர் வட்டத்தை காண கடந்த 19ம் தேதி சென்ற U.F.O ஆய்வாளர் ஒருவர் வானத்தில் கண்ட ஒரு வெளிச்சமான பொருள் ஒன்று பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

திடீரென்று மறையும் இந்த பறக்கும் பொருள் விமானமாகவோ அல்லது நட்சத்திரமாகவோ இருக்க முடியாது.. பிறகு வேறு என்னவாக இருக்க முடியும்..?? மேலும் அந்த ஆய்வாளர் இதனை கண்ட பிறகு இரண்டு முறை இந்த பயிர்வட்டம் உண்டாக்க பட்டுள்ளது.. 
(மேலே தேதியிட்ட புகைபட்ங்களை காணவும்)

இதை உண்டாக்குவது யார்...??
வழக்கம் போல முடிவு உங்களிடமே.. 

இதோ அந்த வீடியோ காட்சி..


Thursday, August 21, 2014

வேற்றுகிரகவாசிகளின் தளம் கண்டுபிடிப்பு..!

வேற்றுகிரகவாசிகளின் தளம் கண்டுபிடிப்பு..!

Xianyang பிரமிட்

சீனாவில் க்ஸியான்ங் ( Xianyang ) எனும் பகுதியிலுள்ள பிரமிடில் வேற்றுகிரகவாசிகளின் தளத்தை சீன அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பிரமிடை வேற்றுகிரகவாசிகள் சுமார்17000 ஆண்டுகளுக்கு முன்னர் (15000 BC) செயல்தளமாக (Base) பயன்படுத்தியுள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
15000 BC அல்லது அதற்கு முன் எந்தவிதமான மனித நாகரீகமும் உலக வரலாற்று ஆதாரங்களில் இல்லை எனவும் இந்த பிரமிடில் பயன்படுத்த பட்டுள்ள தொழில்நுட்பம் நிச்சயமாக மனிதர்களுடையது இல்லை என்பதாலும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறுகின்றனர்.


இந்த பிரமிடில் இருந்து மிக நீளமான குழாய்கள் பூமியின் வெகு ஆழத்திற்கு செல்கின்றன.இந்த குழாய்கள் பல வண்ணங்களில் இருந்தாலும் அவை அந்தந்த பகுதியிலுள்ள மண் மற்றும் பாறைகளின் வண்ணத்தையே கொண்டுள்ளன.

பூமியின் ஆழத்திற்கு செல்லும் குழாய்கள்

மேலும் இந்த குழாய்களில் 8 சதவீதத்துக்கும் மேல் உள்ள உலோகம் இதுவரை கண்டுபிடித்துள்ள எந்த உலோக வகையையும் சேராதது என்பது குறிப்பிட தகுந்தது.


பிரமிடின் தட்டையான மேல் பகுதி








அடையாளம் தெரியாத பொருட்கள்



ரஷ்யாவில் விழுந்து நொறுங்கிய அமானுட விண்கலத்தில் கிடைத்த வேற்று கிரக வாசிகளின் சடலங்கள் இவை என கூறப்படுகிறது ..

( இது முற்றிலும் உண்மையா என்று தெரியவில்லை .. இருந்தாலும் வேற்று கிரகவாசிகள் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு ithu ஒரு அறிய செய்தி ஆகும் )
 

வேற்றுகிரகவாசிகள் பற்றிய சில கட்டுரைகள் 





வேற்றுகிரகவாசிகளும் நாஸ்கா கோடுகள் (Nazca lines),