Saturday, October 25, 2014

செத்த பிணத்தை மீண்டும் எழுப்பலாம் : அதிர்ச்சி தகவல்!!

செத்த பிணத்தை மீண்டும் எழுப்பலாம் : அதிர்ச்சி தகவல்!!


ஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி “இப்ப நான் எங்கிருக்கேன்ப? என்று பேச ஆரம்பித்து வாக்கிங் கிளம்பி விடும். அதன் பிறகு மீண்டும் 60 வயசுக்கு ஆயுட் காலம் இது புதிய ஹாலிவுட் படக்கதை அல்ல! உலகம் முழுக்க சோடாப்புட்டி கண்ணாடியை மாட்டிக் கொண்டு 100க்கணக்கான விஞ்ஞானிகள் இரவு, பகலாக பிணங்களுடன் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிற சர்வமகா நிஜம்!


மனித உடலில் எது ஊன மடைந்தாலும் செயற்கை கருவி, பைபாஸ் சர்ஜரி வரை சரி செய்து விட முடிகிறது. விலங்குகளின் குளோனிங், டெஸ்ட் டிïப் பேபி என பிறப்பின் ரகசியத்தைக் கூட நம்மவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால், ஆதாம்-ஏவாள் காலம் முதல், உயிர் பிரிவதை மட்டும் ஒருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு வேளை, அப்படி கண்டு பிடித்து விட்டால்…ப வெரி சிம்பிள்! “இப்பத்தான் உங்களை நினைச்சேன். ஆயுசு ஆயிரம் சார் என்று சொல்ல வேண்டியதிருக்கும்

உலக விஞ்ஞானிகள் நடத்தி வரும் பகீர் ஆராய்ச்சி களை ஹார்ட் அட்டாக் வராத வகையில் சர்வ ஜாக்கிரதையாக மேலும் படிக்க ஆரம்பியுங்கள். அமெரிக்காவைச் சேர்ந்த பிலிக்கர் என்பவரது புகைப் படங்கள் தாம் உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகளை மரணத்தை வெல்ல முடியும் என்று உஷார் படுத்தியது. ஏராளமான விலங்குகளின் ஆவி பிரிவதை கடைசி நொடிகளில் கிளிக் செய்து வைத்திருக்கிறார் பிலிக்கர்,

 இவரது கூட்டாளியான விஞ்ஞானி பி.டபுள்ï போத்தா “கண்ணுக்குத் தெரியும் இந்த ஆவியை ஒரு டெஸ்ட் டிïப்பில் பிடித்து விட்டால் போதும். அக்குவேறு, ஆணி வேறாக ஆராய்ச்சி செய்து மரண ரகசியத்தை கண்டு பிடித்து விடுவோம் என்கிறார்.

வாஷிங்டன், டகோமாவில் உள்ள ஐ.ஏ.என்.டி.எஸ் எனப்படும் இன்டர்நேஷனல் “அசோசியேகன் பார் நியர் டெத் ஸ்டடீஸ் என்ற அமைப்பு மரணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறது. டாக்டர் ஜெப் தலைமையில் பலர் இதன் உறுப்பினர்களாக இருக்கி றார்கள்.
 டாக்டர் ஜெப்

இவர்களுக்கு வேலைப யாராவது சாகப் போவதாக கேள்விப்பட்டால் அவருடன் கடைசி வரை இருந்து, கண்காணித்து, ஆராய்ச்சி செய்வது தான்!வயிற்றுவலி முதல் ஹார்ட் அட்டாக் வரை மருந்து கண்டுபிடித்த நாம் மூளைச்சாவுக்கும் மருந்து கண்டுபிடிப்பது அவசியம் என்கிறார்கள் இவர்கள்.
சாவுபஎன்பது ஒருசாதா ரண நிகழ்வு. தேவையில்லா மல் இதன் மீது நமக்கு பீதி ஏற்பட்டு விட்டதுபமரணத் திற்கு முன்னதாக முது மைக்கு மருந்து கண்டு பிடிக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து. இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் மிக்கேல் சபோம் நான் மரணத்துக்கு மருந்து கண்டு புடிச்சுட்டேன் என்று கத்துகிறார்! ஒருவரது மரணம் எப்போது தள்ளிப் போனதோ, அப்போதே மரணத்தை வென்று விட்டதாகத்தான் அர்த்தம். வேண்டுமானால் இது தொடக்கமாக இருக் கலாம் என்கிற அவர் பாம் ரெனால்ட்ஸ் என்கிற சாகக் கிடக்கிற பெண்மணிக்கு உயிர் பாலித்தவர்.

இருதயமும், மூளையும் முற்றிலும் செயலிழந்து பெரிய, பெரிய டாக்டர்களால் கைவிடப்பட்டு, உடல் டெம்ப ரேச்சர் 60 டிகிரிக்கும் குறை வான பாம் ரெனால்ட்சை தனது நவீன அறுவைசிகிச்சை மூலம் உயிர் பிழைக்க வைத்தி ருக்கிறார் மிக்கேல். முழுவதுமாக மரணித்துப் போன எனது மூளையில் முதன் முதலாக ஒரு சின்ன சத்தத்தைக் கேட்டேன். புர்ர்ர்ர்… என்ற அந்த சத்தம் தான் மெல்ல எனக்கு உயிர் கொடுத்தது. சர்வ நிச்சயமாக நான் மரணத்தை உணர்ந்து திரும்பியிருக்கிறேன் என்கிறார் பாம் ரெனால்ட்ஸ்.

இவர்களைப் போலவே கெவின் வில்லியம்ஸ், பெத்தார்ட்ஸ் பெட்டி, ஆன்டர்சன் ஜார்ஜ், சிட்டிசன் ஹெரால்டு, டர்ட் சார்லஸ், என உலகம் முழுவதும் ஏகப் பட்ட விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். உயிர் பிரியும் போது வலிக்குமாப வலிக்காது என்கிறார்கள் இவர்கள் ஒட்டு மொத்தமாக! உடல் உபாதை களால் ஏற்படுவது தான் வலியே தவிர, மரணத்துக்கு வலி கிடையாது என்கிறார் கள். செத்துப்போன உடலை ரோபோ போல் நவீனபபஎந் திரங்கள் மூலம் இயங்க வைக்க முடியுமாபபஎன்ற நம்பிக்கையில்பகடந்தப18 ஆண்டுகளாகபபநூதன தயாரிப்புகள் மூலம் போராடிக் கொண்டிருக்கி றார் டாக்டர் பி.எம்.எச். அத்வதார் என்பவர்.

இதெல்லாம் நடக்கிற விஷயமா டாக்டர் என்றால், “எதையும் கண்டுபிடிக்கப்படு வதற்கு முன்னால் நம்புவது கஷ்டம் தான் ரெயில், விமானம், செல்போன்களை எல்லாம் நீங்கள் நம்பவா செய்தீர்கள் என்கிறார். இந்த அதிர்ச்சி விஞ்ஞானி கள் உடற்பயிற்சி, உணவு முறை, ஆரோக்ய வாழ்க்கை மூலம் மனித வாழ்வை நீட்டிக்க முடியுமா என்பது பற்றியும் இயற்கை ரீதியிலான ஆராய்ச்சி செய்யவும் தவற வில்லை. ஒரு சிலரால் மட்டும் எப்படி 110 வயது வரை வாழ முடிகிறது என்கிற கேள்விக் குறிக்கும் இவர்கள் ஒருபுறம் விடை தேடிக் கொண்டிருக் கிறார்கள். “கடைசி மூச்சு வரை மருத்துவ கருவிகளை கண்டு பிடித்து விட்ட விஞ்ஞானி களின் அருமை பற்றி உங்க ளுக்குத் தெரியவில்லை. நிச்சயம் ஒரு நாள் மரணத்தின் சூட்சுமம் வெளியே தெரிய வரும் என்கிற ரஷ்ய
விஞ்ஞானி ஆன்ஸ்டின்பெராக் வெளி உலகுக்கு தெரியாமல் வேறொரு ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.

இறந்து போன பிணங் களுக்கு ஊசி போட்டு, உடலைப் பிரித்து உள்ளுக்குள் மருந்து, மாத்திரைகளை வைத்து தைத்து, நவீன கருவி கள் மூலம் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து, என்றாவது ஒரு நாள் இது எழுந்து நடமாடும் என்கிற ரீதியில் கடந்த 20 ஆண்டுகளாக இருட்டுக் கூடத்திலேயே தனது பகல் வாழ்க்கையையும் கழித்து வருகிறார். இவர்கள் சொல்வதைப் போல் ஒரு வேளை உயிர் ரகசியம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டால்… பூமி பிதுங்கி வழியும் ஜனத்தொகை, அத்தனை பேருக்கும் உணவு, இருப்பிடம் குடிதண்ணீர் வசதி என மேலும் எழும் ஆயிரக்கணக்கான பூலோக பிரளயங்களுக்கு மேலும் நாம் விடை தேடவேண்டிய திருக்கும்.

“அடேங்கப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!






அப்து  ரஹ்மான் :அனாலும் இது நடக்கவ முடியாது, உயிர் பிரியும் ரகசிய இறைவனை தவிர வேறு  யாரும் அறிய முடியாது.






நன்றி 
HSDO 

Friday, October 24, 2014

உப்பு நல்லது, ஆனாலும் உப்பு ரொம்ப தப்பு அளவுக்கு மிஞ்சினால் . அயோடின் உப்பு, ரொம்ப ரொம்ப தப்பு!

 உப்பு நல்லது, ஆனாலும் உப்பு ரொம்ப தப்பு அளவுக்கு மிஞ்சினால் . அயோடின் உப்பு, ரொம்ப ரொம்ப தப்பு! 


உங்கள் தட்டில் உணவா... விஷமா? 

மனித உடலின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இன்னொரு உணவுப் பொருள், சோடியம் எனப்படும் உப்பு.

ஆதிமனிதன் வேட்டையாடி விலங்குகளின் மாமிசத்தையும் ரத்தத்தையும் உணவாக உண்டான். உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமான சோடியம், விலங்குகளின் ரத்தத்தின் மூலமாகவே அவனுக்குக் கிடைத்தது. பிறகு, விவசாயம் செய்து உணவு உண்ண ஆரம்பித்தபோதுதான் உப்பைத் தேடி, சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தான்! இன்றைக்கு, இந்த உப்பே, அவனுக்கு எமனாகும் அளவுக்கு வளர்த்தெடுக்கப்பட்டுவிட்டது... சோகம்தான்!

உப்பின் உற்பத்தி ஸ்தானம் கடல் நீர்தான். கடலில் மூழ்கி, பின்னர் உயிர்பெற்று எழுந்த மலைகளிலும், மலையடிவாரங்களிலும் உப்பு கிடைக்கும். பல யுத்தங்கள் உப்புக்காகவே நடந்திருக்கின்றன இந்த உலகில்! சாம்ராஜ்யங்கள் பல, உப்புக்காகவே சரிந்திருக்கின்றன! உலகப் புகழ்வாய்ந்த ஃபிரெஞ்சுப் புரட்சிக்கு, அந்த நாட்டு அரசன் விதித்த உப்புவரி, முக்கியக் காரணம்.

1930-ல் இந்தியாவில் நடந்தது என்ன? உப்பு, விலைமதிக்க முடியாத செல்வம் என்று உணர்ந்த ஆங்கிலேயர்கள், உப்பு வணிகத்தை தாங்களே மேற்கொண்டதோடு, உப்புக்கு வரியும் விதித்தனர். 'மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட நம் மக்களின் வாழ்வாதாரம் உப்புதான். அதில் கைவைக்க யாருக்கும் உரிமையில்லை’ என்று கொதித்தெழுந்த மகாத்மா காந்தி, சரித்திர முக்கியத்துவம் பெற்ற தண்டி யாத்திரையை மேற்கொண்டார்.

இந்த உப்பு சத்தியாகிரகம்தான், அன்றைய ஆங்கிலப் பேரரசின் ஆணிவேரை ஆட்டி வைத்தது என்பது சரித்திரம்.

இவ்வளவு அருமை பெருமையுடைய உப்பு, மனித ஆரோக்கியத்துக்குப் பெரிய வில்லனாக மாறியது மிக சமீபத்தில்தான். வேட்டையாடிய ஆதிமனிதன், விவசாயத்துக்கு மாறியபோது உணவில் சேர்த்தது... வெறும் 2 கிராம் உப்புதான். இப்போது சராசரி அமெரிக்கன் 10 கிராம், சராசரி இந்தியன் 12 கிராம் என உப்பை உட்கொள்கிறான். மாரடைப்பு, ரத்தக்கொதிப்பு, சிறுநீரக நோய்கள் தற்போது அதிகரித்ததன் காரணங்களில் இது மிகவும் முக்கியமானது. நாம் உட்கொள்ளும் உப்பை, சிறுநீரகங்கள்தான் வெளியேற்ற வேண்டும். சிறுநீரகங்கள் 5 கிராம் உப்பை மட்டுமே வெளியேற்ற முடியும். அப்படியானால் மீதம் உள்ள 7 கிராம்?

ஒரு பங்கு உப்பை வெளியேற்ற, 23 பங்கு தண்ணீர் தேவை. செல்களின் உள்ளே உள்ள நீர் வெளியேறி, உப்பைக் கரைக்கிறது. ஆகவே, உடலில் நீரின் அளவு மிகுதியாகி வீக்கம், ரத்தக் கொதிப்பு, இதயம் செயல் இழப்பு போன்றவை விளைகின்றன. சோடியம், தன்னோடு கால்சியத்தையும் தக்க வைத்துக்கொள்ளும் - ஆகவே ரத்தக் குழாய் அடைப்புகள், சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் போன்றவை உருவாகும். சில புற்றுநோய்களும் வரலாம்.
உடலுக்குத் தேவையான உப்பு, உணவில் இயற்கையாகவே இருக்கிறது. கனிமங்கள், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் போன்ற சுமார் 84 வகை ஊட்டச்சத்துக்கள் தினமும் நமக்குத் தேவை. இவற்றை 84 ஜாடிகளில் அடைத்து, சமையலறையில் வைத்திருக்கிறோமா..? நம் அன்றாட உணவில் இந்த 84 ஊட்டச்சத்துக்களையும் கலந்து வைத்த கடவுள், சோடியத்தை மட்டும் மறந்துவிட்டார் என்று நினைத்து, எப்போது சமையலறையிலும், இன்னும் போதாது என்று சாப்பாட்டு மேஜையிலும் வைத்து உப்பை நாம் உண்ண ஆரம்பித்தோமோ, அன்றுதான் மனிதனின் கெட்ட காலம் ஆரம்பித்தது! 'ரீஃபைனிங்’ என்கிற பெயரில் அரிசி, சர்க்கரை, பால் இதையெல்லாம் எப்படிக் கெடுத்தோமோ... அதேபோலதான் உப்பையும் கெடுக்க ஆரம்பித்தோம்.
கடல் நீரைத் தேங்க வைத்து, காயவைத்துக் கிடைக்கும் உப்பையே பெரும்பாலும் உபயோகித்தோம். இதைச் சுத்தம் பண்ணுகிறேன் பேர்வழி என்று, மனிதன் செய்த வேலைகள் பற்பல. நமக்கு இப்போது கிடைக்கும் உப்பு (Table salt), கெடுதல் விளைவிப்பதில் சர்க்கரைக்குக் கொஞ்சமும் சளைத்த தல்ல. முதலில் உப்புக் கரைசலை 1200oF-க்குக் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உப்பில் கலந்துள்ள 84 வகை தாதுப்பொருட்கள் அறவே வெளியேறி, வெறும் சோடியம் குளோரைடு மட்டுமே மிஞ்சுகிறது. அது வெள்ளையாக ஜொலிக்க வேண்டும் என்றும், கரடுமுரடாக இல்லாமல் சர்க்கரையைப்போல் இருக்க வேண்டும் என்றும், வெகுகாலம் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்றும் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் - டால்க், சிலிகான், அலுமினியம், ஃபுளோரைடு, கொஞ்சம் சர்க்கரைகூட - இவை அனைத்தும் உடலுக்குக் கேடுதான். 84 கனிம தாதுக்களுடன் உள்ள சோடியம் குளோரைடு கெடுதல் அல்ல - உடலுக்கு நல்லதுதான். ஆனால், அந்த 84 சத்துக்களும் நீக்கப்பட்ட சோடியம் குளோரைடு... மிகமிகக் கெடுதலானது (எல்லா சுத்திகரிப்புகளும் இப்படித்தானே..?!)

எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது வந்துள்ள புதிய ஆபத்து... அயோடின் கலந்த உப்பு. உப்பில் இயற்கையாகவே அயோடின் உண்டு. அதைக் காய்ச்சி உறிஞ்சி எடுத்துவிட்டு, இப்போது அயோடின் சேர்க்கிறோம் என்று செயற்கையாகச் சேர்த்து, விலையைப் பத்து மடங்கு உயர்த்தி, கோடீஸ்வரர்களை... மேலும் கோடீஸ்வரர்களாக ஆக்கியதுதான் மிச்சம்.


தைராய்டு சுரப்பியிலிருந்து... தைராக்ஸின் ஹார்மோன் உற்பத்தியாவதற்கு அயோடின் தேவை. அது குறைவாக இருந்தால், உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி குறைவதுடன், கழுத்தில் தைராய்டு சுரப்பியில் வீக்கம் (Goitre) முதலிய குறைபாடுகள் தோன்றும்.

ஆகவே, அயோடின் மிக மிக அவசியம் - ஆனால், வெறும் 0.15 மி.கி. மட்டுமே. இந்த அளவு அயோடின் எல்லா காய்கறிகளிலும், பால், முட்டை அசைவ உணவிலும் இயற்கையாகக் கிடைக்கிறது. போதாக்குறைக்கு இயற்கையாகக் கிடைக்கும் உப்பிலும் கிடைக்கிறது. இதை மெனக்கெட்டு நீக்கிவிட்டு, நீக்குவதற்கும் காசு, மறுபடியும் சேர்ப்பதற்கும் காசு என்று உயர்த்தியது தேவையா?

இதுதவிர, அயோடின் கலக்கும்போது, கூடவே பொட்டாசியம் குளோரைடு, சல்ஃபர், மெக்னிஷியம், ஃபுளோரைடு, பேரியம், ஸ்ட்ரோன்ஷியம் போன்ற வேதிப்பொருட்களும் கலந்துவிடுகின்றன. இவை தேவையே இல்லை. இயற்கையான அயோடின் நல்லது. செயற்கையான அயோடின்... உடலில் பல அழற்சிகளை உண்டாக்கும்.

நம் நாட்டில் 125 கோடி ஜனத்தொகையில் சுமார் 6 கோடி பேருக்கு மட்டுமே அயோடின் குறைபாடு உள்ளது. இதற்காக மீதமுள்ள 119 கோடி மக்களையும் அயோடின் உப்பு உண்ண வைத்து, பலருக்கு 'தைராய்டு மிகுதி' (Hyper thyroid) எனும் நோயை உண்டாக்கி வருவது உண்மை. இதன் விளைவாக, ரத்தக் கொதிப்பு மற்றும் இதயப் பிரச்னைகள் வருவதும் உண்மை.
மகாத்மா காந்தி இப்போது இருந்திருந்தால், உப்பில் அயோடின் கலந்து, அதை விஷமாக்கி, அதன் மூலமாக கோடீஸ்வரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் நம் அரசாங்கத்தை எதிர்த்து இன்னொரு உப்பு சத்தியாகிரகம் செய்து கொண்டிருப்பார்!
நலம் வரும்...

ஒரு உறுதியேற்போம்...!

அமெரிக்க இதய நோய்க் கழகம் தற்போது பரிந்துரைப்பது... 'யாரும் 6 கிராமுக்கு மேல் உப்புச் சேர்க்க வேண்டாம்' என்பது. அப்படியானால் நாம் எல்லோரும் அரை உப்புதான் சாப்பிட வேண்டும். இனி, சமையலில் அரை உப்பு மட்டுமே சேர்ப்போம் - அதுவும் அயோடின் கலப்பில்லாத இயற்கையான உப்பு (கல் உப்பு). சாப்பாட்டு மேஜையில் உப்புக் குப்பி வைக்காதீர்கள். உப்பில் மூழ்க வைத்துத் தயாரிக்கும் துரித உணவுகளை அறவே தவிருங்கள் - ஊறுகாய், சிப்ஸ் உட்பட!

உப்பு நல்லது


பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்படும் ஓர் விடயம் ஜலதோஷத்தின் போது ஏற்படும் மூக்கடைப்பு.

இதனால் பேசவும் முடியாத நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் இதை சரிசெய்ய உப்பு மருந்தாக விளங்குகிறது.

~~ வெண்ணீர் கலந்த உப்பு

தண்ணீரை நன்கு வேக வைத்து வெதுவெதுப்பாக இருக்கும் நிலையில் சிறிது உப்பை போட்டு, அதை நன்கு கலக்கி கொள்ளவும்.

பின்பு அதனை மூக்கின் அருகில் வைத்து ஆழமாக உறிஞ்ச வேண்டும். அந்த நீரவி மூக்கினுள் பரவி வேண்டும்.

இதன் மூலம் மூக்கடைப்பு எளிதாக நீங்குவதுடன், ஜலதோஷத்தை கட்டுப்படுத்த முடியும்.

~~உப்பின் பயன்கள்

* நெய்யில் ஒரு தேக்கரண்டி உப்பைப் போட்டு சுடவைத்தால் நெய் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

* மண்ணெண்ணெயில் சிறிது உப்பு கலந்து விளக்கேற்றினால் மண்ணெண்ணெய் சீக்கிரம் தீராது.

* அரிசியை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கும்போது சிறிது உப்புத் தூளையும் கலந்துவிட்டால் புழு, பூச்சி வராமல் பாதுகாப்பாக இருக்கும்.

* துருப்பிடித்த சாமான்கள் மீது உப்பு தேய்ப்பின் துரு நீங்கி பளபளக்கும்.

* வீட்டில் தரை கழுவும்போது, சிறிது உப்பையும் நீரில் கலந்து கழுவினால், காய்ந்த பிறகு தரையில் ஈக்கள் மொய்க்கும் தொல்லையிராது...

Thursday, October 23, 2014

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி




தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது, இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல்  எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்

தேவையான பொருள்கள் :


1.நல்லெண்ணெய்


2.பூண்டு


3.மிளகு



செய்முறை:


நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத  பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்)  பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும்,  2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள். இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.

அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம். ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.

நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.

some related article

வியர்வை நாற்றம் போக்க சில எளிய வழிகள்!!!


Thursday, October 16, 2014

உலகின் முதன் முதலில் எழுதப்பட்ட குர்ஆன்(பிரதி)

உலகின் முதன்  முதலில்  எழுதப்பட்ட குர்ஆன் (பிரதி)


முஹம்மது நபி(ஸல்) அவர்களின்

மருமகனாரும், இஸ்லாமியர்களின்



மூன்றாம் கலிஃபாவுமான

உதுமான்(ரலி) அவர்கள் பயன்படுத்திய

ஆறாம் நூற்றாண்டு காலத்து திருக்குர்ஆன்.


இஸ்தான்புல் நாட்டின்..


டோப்கபி அரண்மனையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


 some related article
ஜம் ஜம் கிணறு..[உலகில் இது ஒன்று தான் மெய்யான அற்புதமாகும்]

அரபியன் பிளவு மற்றும் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் சேரமான் பெருமாள்


வாருங்கள் மக்காவில் இருக்கும் காபா ஆலயம் நோக்கி பயணிப்போம் {புகைப்படங்கள்..}


அரிய புகைப் படங்கள் குர்ஆனின் அத்தாட்சிகள்-1



ஆபிரகாம் மதங்கள்


Monday, October 13, 2014

அரபியன் பிளவு மற்றும் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் சேரமான் பெருமாள் பற்றிய பல தகவல்.


அரபியன் பிளவு   


 நிலவில் முதலில் காலடியெடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், அங்கு இறங்கிய போது அவர் பயணித்த விண்கலம் நிலவைப் பல கோணங்களில் ஏராளமான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது.

துணைக் கோளாகிய நிலவில் இறங்கிய விண்கலம் படம் எடுத்து அனுப்பிய படங்களில் ஒர் ஆப்பிளை நேர் இரண்டு துண்டுகளாக வெட்டி அதை மீண்டும் ஒடடியது போல் ஒரு நேர்கோடு தெரிகின்றது. அதனால் இதற்கு அரபியன் பிளவு என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

இறைமறை வசனங்கள் அரபு மொழியில் இறங்கின. சுந்திரன் பிளந்துவிட்டது என்ற வசனத்தின் மீது அரபியரே முதன் முதலில் நம்பிக்கை கொண்டனர். இதன் அடிப்படையில் நிலாவில் இறங்கிய விண்கலம் எடுத்து அனுப்பிய நிலவுப் படங்களில் தெரியும் வெட்டி ஒட்டிய ஆப்பிளைப் போன்று இருக்கும் நிலாக் கோட்டிற்கு அரபியன் பிளவு என்று சொல்லப்படுகிறது.

திருக்குர்ஆன் இவ்வுலகைப் படைத்தவனின் வார்த்தைகள் என்பதை நம்புபவர்கள் இந்த சம்பவம் உறுதியாக நடந்த ஒன்று என்பதை நம்புகிறார்கள். இதுபோல திருக்குர்ஆனில் இறைவன் வேறு பல அற்புதங்களையும் குறிப்பிடுகிறான். உதாரணமாக தந்தையின்றி ஏசு பிறந்தது,  மூஸா நபியையும் அவரைச் சேர்ந்தோரையும் காப்பாற்ற செங்கடல் பிளந்து வழிவிட்டது, மூஸா நபி பிர்அவ்னின் அரசவையில் கைத்தடியை எறிந்து அது பாம்பாகியது,  இப்ராஹீம் இறைத்தூதரை நெருப்புக் குண்டத்தில் எறிந்த பின் அவருக்காக நெருப்பு குளிர்ந்தது…. போன்ற பல சம்பவங்களையும் திருக்குர்ஆனில் நாம் காணலாம்.

பகுத்தறிவை சற்று முறைப்படி உபயோகித்தால் இவை உண்மை என்பதை ஒப்புக்கொள்வதில் சிரமமிருக்காது. பகுத்தறிவைத் தாண்டி உண்மைகளை உணரும் வண்ணம் திருக்குர்ஆன் தன் வாதங்களையும் முன்வைக்கிறது.

சந்திரன் பிளந்ததைக் கண்ட தமிழ் மன்னன் :


சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேரவம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரளமாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அரபியர்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது. பல்வேற கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர்.

நிலவை பிரிக்கும் அதிசயம்


மக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள்.

சில காலம்  சென்றபின் அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அரபியர் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்தள். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முஹம்மது (ஸல்) எனவும் அவரே இறைமறுப்பாளர்களை நம்பவைப்பதற்காக இந்த “நிலவை பிரிக்கும் அதிசயத்தை” நடத்தியதாகவும் கூறக்கேட்டனர்.

இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியர்களிடம்,  தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும்,  அதனால் தன்னையும் மக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள். ஆனால் அப்போது ஈழத்துக்கு பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அரபியர் கூட்டம் தாங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.

இஸ்லாத்தை ஏற்றல் :


தனது ராஜ்ஜியத்தை பல்வேறு பிரிவுகளாகப் பிரித்த சேரமான் பெருமாள் அவர்கள், அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் “கொச்சின் ராயல் பேமிலி” என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வசித்து வருகின்றனர்).

அதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மக்கா கிளம்பி சென்றனர். அங்கு முகம்மது நபி(ஸல்) அவர்களை நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே இஸ்லாம் மதத்தை ஏற்றார்கள். மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜூதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்கள். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார்கள்.

இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார.; இந்தியாவிலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடி நிறைய ஊறுகாய்களை கொண்டு வந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது.”

இறப்பு :


சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தா தேசத்து மன்னரின் தங்கையை மணம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபித்தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் ( Salalah port, oman ) நோய் வாய்ப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

மாலிக் பின் தீனார் அவர்களின் இந்தியா வருகை :


மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். ஆதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளை காட்டுமாறும் பணித்திருந்தார். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசூதிகளை கட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் கட்டினார்.

சில தகவல்கள் :


•       சேரமான் பெருமாள் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் மற்றும் தமிழர் ஆவார்.

•       சேரமான் பெருமாள் ஜூம்மா மசூதிதான் இந்தியாவின் முதல் மசூதி மற்றும் உலகின் இரண்டாவது ஜூம்மா மசூதி ஆகும். (உலகின் முதல் ஜூம்மா மசூதி மதினாவில் உள்ளது).

220px-Cheraman_Juma_Masjid220px-Cheraman_Juma_Masjid

•       சேரமான் பெருமாள் அவர்களது சமாதி இன்றும் ஒமன் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (இன்றைய சலாலா) இந்திய மன்னர் சமாதி என்ற பெயரில் உள்ளது.   நன்றி: இணையம் மற்றும் விக்கிபீடியா. 

Friday, October 10, 2014

ஆரியர்களின் பூர்வீக நாடு எது?

பொறியாளர் பி.கோவிந்தராசன் ""ஆரியர்களின் பூர்வீக நாடு எது?""


முன்னுரை:


யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றார் கணியன் பூங்குன்றனார். இது தமிழர்களின் பரந்த மனப்பான்மையைக் குறிக்கின்றது. தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! இது தென்னிந்தியரின் / திரா விடரின் / சிவனடியாரின் பரந்த மனப் போக்கினைத் தெரிவிக்கின்றது. இத் தகைய தென்னிந்தியரின் நாகரிகத்திற்கு மாறானது.

 ஆரிய நாகரிகம். ஆரியர் உரு வாக்கியது வேதமதம். இந்த மதத்தின் வேதங்களை ஆரியர் தவிர மற்றவர்கள் படித்தால் கொடுந் தண்டனை. வேதமதத் தில் ஆரியர்களே முதல் வருணத்தினர். ஆரியர்கள் உருவாக்கிய கடவுள்களுக்கு ஆரியர்களே அர்ச்சனை செய்யவேண்டும். ஆரியர்களின் ஆரிய மொழியான சமஸ் கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும். சமஸ்கிருதம் தவிர இதர மொழிகள் மிலேச்ச மொழிகள் என்று கூறப்பட்டது. ஆரியர்கள் அல்லாதார் மிலேச்சர்கள், தஸ்யூக்கள், தாசர்கள் என்று அழைக்கப் பட்டார்கள். இவ்வாறு பல சிறப்புகளை உடைய ஆரியர்களால் இந்தி யர்களுக்குக் கிடைத்த பயன்கள் என்ன? இந்த ஆரியர்கள் இந்திய நாட்டை முன் னேற்ற எந்த நாட்டிலிருந்து வந்தவர்கள்? இது குறித்த பல செய்திகளைக் கீழே காணலாம்.

அய்ரோப்பிய வரலாற்று ஆசிரியரின் நூல்:

ஜேம்ஸ் ஹார்ட் டேவிஸ் என்ற வர லாற்றாளர்   “ History” என்ற நூலை எழுதியுள்ளார். சமீபத்தில் இவரும் இவரது நண்பர் டாக்டர் சூசன்பிளாக்மோர் அவர்களும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களை பெரியார் திடலில் சந்திதது உரையாடினர் (விடுதலை நாளிதழ் 04.02.2012). இவர்கள் இருவரும் பகுத்தறிவாளர்கள்.
ஜேம்ஸ் ஹார்ட் டேவிஸ் தனது நூலில் எவ்வாறு ஆப்பிரிக்கர்கள், ஆஸ்திரேலியர் கள், இந்தியர்கள், அமெரிக்கர்கள் அடி மைப்படுத்தப்பட்டார்கள் என்பதை விரி வாகக் கூறியுள்ளார். அடிமைப்படுத்தப்பட்ட வர்கள் எவ்வாறு விடுதலை பெற்றார்கள் என்பதையும் விவரிக்கிறார். அந்த நூலில் ஆரியர்கள் எவ்வாறு இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்பதைக் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“The origin of  (Hindu) religion can be traced to about 1500 BCE when it is believed that Aryan horseman invaded from central Asia, the indus valley, in Northern India accompanied by creator god Indra and a pantheon of lesser deities. These were the vedic gods who feature in Vedas, the 3000 years old sacred textss, that are central to the development of Hinduism. The religion evolved to focus on senior deity called Brahma Vishna creator and Shiva the destroyer along with their consorts or sakthis from 6th century BCE Brahminism become the dominant form of Hinduism and triggered the composition of Brahminic epic, and puranic literature including the great texts of Mahabharata and Ramayana   (கலைஞர் தொலைக்காட்சியில் எனது 02.09.2011  நாள் நேர்காணலில் சொல் லியவை)

மேலே கண்ட வரிகளில் தெரிவிப்பது கீழ்வருமாறு;

ஆரியர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இந்திரன் என்ற முதன்மைக் கடவுளையும் பிரும்மா, விஷ்ணு, ருத்திரன் (சிவன்) போன்ற உப கடவுள் களையும், அவர்களின் மனைவிகளையும் உள்ளடக்கிய பல்வேறு கடவுள்களையும் இந்தியாவிற்குள் கொண்டு வந்தார்கள். இந்த கடவுள்களின் உதவியால், பின்னர் பிராமணீயம் இந்தியாவில் மேலோங்கி இருந்தது.
பாரசீக மொழியில் இருந்து மதக் கடவுள்கள்:
சிரியா நாட்டைச் சேர்ந்த மித்தனி (Mittani) யிலிருந்து புறப்பட்ட ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையும் முன் சில காலம் ஈரானைச் சேர்ந்த ஈஸ்பராயன் (Esfarayen) என்ற மாநிலத்தில் தங்கிவிட்டு வந்தார்கள். அப்போது பாரசீக நூல்களைக் கற்றார்கள். அதன்பின் இந்தியாவிற்குள் வந்த பின் பாரசீக மதம் நம்பிக்கையின் அடிப்படையில் ரிக்வேதத்தை உருவாக்கினார்கள். எனவே பாரசீக மொழியில் உள்ள கடவுள் பெயர்கள் ஒரு பாரசீக அகராதியில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த பாரசீக அகராதியின் பெயர்  இதை எழுதியவர்கள் திருமதி மேனகா காந்தி மற்றும் பேராசிரியர் ஓசைர் ஹூசைன். இந்த நூலில் ஒவ்வொரு சொல்லிற்கும், சொல் பெறப்பட்ட மொழிகள் - Arabic, Avestan, Hindustani, Hebrew, Persian, Pazand, Phalavi Syria, Turkish (அரபி, அவெஸ்தன் ஹிந்துஸ்தானி, ஹிப்ரு, பாரசீகம், பாலவி, பசந்த், துருக்கி, சிரிய) விவரங்கள் தரப்பட்டுள்ளன. இதிலிருந்து பெறப்பட்ட மதம், அரசியல் குறித்த பாரசீக சொற்களைத் தொகுத்து கீழே உள்ளவாறு விவரிக்கப்படுகிறது.
பாரசீக மொழியும் ஆரியரும்:
sunday%20%284%29.jpg

வில்லியம் ஜோன்ஸ் கல்கத்தா நீதிமன் றத்தில் நீதிபதியாகப் பணிபுரிந்தவர். இவர் அய்ரோப்பிய மொழிகள், ஈரானிய மொழி கள், இந்திய மொழிகள் ஆகியவற்றை ஒப்பிட்டு அவைகளை வகைப்படுத்தினார். அதன்படி பாரசீக மொழியும் சமஸ்கிருதமும் அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை எனக் கண்டறிந்தார். மற்றும் அதன் உட்பிரிவான இந்தோ -இரானிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்றும் கண்டறிந்தார்.
ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழியான பாரசீக மொழி ஆரியரின் நாகரிகத்தினைப் பற்றியும் பூர்வீகத்தைப் பற்றியும் பல சுவையான வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது. அவை கீழே தரப்பட்டுள்ளன. (பாரசீக சொற்கள் தொகுப்பு பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.)

1. ஆரியர்கள் இந்தியாவிற்கு வரும் முன் சில காலம் பாரசீகத்தில் தங்கி இருந்துவிட்டு பின்னர்தான் இந்தியாவிற் குள் நுழைந்தார்கள். இது சுமார் கி.மு. 1500ல் நடந்தது. இதன் பின் இஸ்லாமிய மதம் தோன்றி இந்தியாவுக்கு கி.பி. 800ல் பரவியது. பாரசீக நாட்டிலிருந்து கஜினி முகம்மது (1012) படையெடுத்து வந்தார். இறுதியாக தில்லியில் சுல்தான்கள் ஆட்சி (கி.பி. 1206- 1526) நடைபெற்றது. பின்னர் முகலாயர் ஆட்சி 1857 வரை நடந்தது. முகல் என்ற சொல்லே பாரசீக சொல் ஆகும். இது மங்கோலியரைக் குறிக்கும். பாரசீக மொழியின் தொடர்பு இந்திய வர லாற்றுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகும்.

2. பாரசீகரின் மத நம்பிக்கைகளும், ஆரியரின் மத நம்பிக்கைகளும் பெருமள வில் ஒற்றுமை உடையவை. உதாரணம், ஈரானியரின் தொன்மையான மொழியான அவெஸ்தாவிற்கும் ரிக் வேதத்திற்கும் மிகவும் ஒற்றுமை உள்ளது.

3. வேத கால  கடவுள்களாக இந்திரன், வருணன், வாயு, மித்திரன் போன்றவர் களும், ரிஷிகளான வசிஷ்டர், அகஸ்தியர், மரூத் போன்றவர்களும் பாரசீக மொழியில் இடம் பெற்றுள்ளனர்.

4. ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு. 1600 அய்ச் சேர்ந்த கல்வெட்டுகளிலும் கி.மு. 1400 அய்ச் சேர்ந்த  மித்தாணி கல் வெட்டுகளிலும் காணப்படும் பெயர்களும், வேதகால கடவுள்களின் பெயர்களும் ஒத்துப் போகின்றன.

5. ஆரியர்கள் யாகங்கள் செய்தனர், தீயை வணங்கினர், பசுவை வணங்கினர், குதிரையை வணங்கினர். காமதேனு போன்ற மனித உருவம் + மிருகம்  + இறக்கை உடைய பறவை உருவம் ஒன்றாக அமைந்த உருவங்களைப் பற்றிய சொல் தீயைப் பற்றி பல சொற்கள், யாகங்களைப் பற்றி பல சொற்கள் பாரசீக மொழியில் காணப்படுகின்றன.

6. இராமன், ஆரியன், ராணா, ராணி, இந்திரன், வருணன், இரான், சாமி (கடவுள்) ரங்கா ராகவன், ரகு, பீஹார்  தேவா (Daeva), மணி (கடவுள்), கந்தர்வா, கயா, லஷ்கரி, ஜலம், மன்னன், மந்த்ரம், மாரி (கடவுள்), கௌ போன்ற சொற்கள் பாரசீக மொழியில் இடம் பெற்று, அதற்குரிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

7. பஞ்சாங்கம் என்ற ஆண்டுகாட்டி யில் உள்ள அங்கம் பாரசீக சொல்லாகும். இதன் பொருள் காலம், பருவம் (Time - Season) ஆகும். பஞ்ச என்ற சொல் அய்ந்து வகை ஆண்டு கணக்கீட்டு முறையைக் குறிக்கிறது. பாரசீகத்தின் அன்பளிப்பு பஞ்சாங்கமாகும். இந்த பஞ்சாங்கத்தை வைத்து நாள் குறிப்பது, பூணூல் அணிந்த ஆரியர்களின் வேலை ஆகும்.

8. Gowpathi Sha = (கௌபதி +ஷா)= கௌபதி+ஷா = பசுபதி+மன்னன் (அ) அரசன்). இந்த  Pathi  என்ற சொல்  நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் என்ற பெயர் போன்றது.

9.  Hom (ஓம்) என்ற சொல்லுக்கு, பாரசீக மொழியில் - யாக சடங்குகளில் பயன்படுததும் சாறு என்பதனைக் குறிக் கின்றது. இது சோமபானம் போன்றது.
10. Jal (ஜலம்) என்ற பாரசீக சொல்லுக்கு தண்ணீர் என்று பொருள். இன்று கூட ஆரியர்கள், தமிழர் திருமணங்களில் ஜலம் விடுங்கள் என்கிறார்கள்.

11. பாரசீக மொழியில் ஈரான் நாட்டினைக் குறிக்கும் சொல்  Airan இந்த பாரசீக சொல்லுக்குப் பொருள் ஈரான் நகரம் ஆகும். இந்த நாட்டை ஆரியர்கள் தாயகமாகக் கொண்டிருந்தனர் என்று இந்த பாரசீக அகராதியில் கூறப் பட்டிருக் கிறது. இது ஆரியர்கள் பாரசீகம் வழியாக இந்தியாவிற்கு வந்தார்கள் என்பதனை உறுதிப் படுத்துகின்றது.

12. பாரசீக மொழி அகராதியில் ஆரியர்களின் மூதாதையர் பிறந்த நாடாக துர்கிஸ்தானைக் (Turkistan)  குறிப்பிடு கின்றது. ஆரிய இனம் தோன்றிய பகுதியின் பெயர் Airyana Vaeja.. இது துர்கிஸ்தான் நாட்டில் புல்வெளிகள் நிறைந்த வடக்குப் பகுதியில் அமைந் துள்ளது. இங்குதான் மேய்ச்சல் நாகரிகம் (Stepi Culture) என்று அழைக்கப்படுகின்ற - வரலாறு கூறுகின்ற நாகரிகம் தொடங் கியது. இந்த  Airyana Vaeja என்ற இடம் பாரசீக மொழியில்  (Gaya) கயா என்று வழங்கப்படுகின்றது. இந்த கயா என்ற சொல் அவெஸ்தான் மொழியில் முதலில் தோன்றியது.

13. துர்கிஸ்தானில் உள்ள கயா என்ற ஊரைப் போல பீகார் மாநிலத்தில், கங்கைக் கரையில் புத்தகயா உள்ளது. இது தென்னிந்திய ஆரியர்களுக்கு புனித தலமாகும். இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் சிறந்தது என்று ஆரிய சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது ஆரியர் கள் துர்கிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றது.

14. உருது என்ற பாரசீக சொல்லுக்கு படை, முகாம் (Camp),, படைவீடு, சந்தை (மார்க்ட்) என்று பொருள். இதன் அடிப்படையில் ஹூமாயுன் / முகலாயர் காலத்தில் படை வீரர்கள் சந்தையில் பேசிய மொழியே பிற்காலத்தில் இந்தி என்றும் உருது என்றும் அழைக்கப்பட்டன. இந்த மொழிகள் ஆரம்பத்தில்  Campu Language என்று அழைக்கப்பட்டன. (Camp = உருது);(Camp)   = பாசறை,

15. பாரசீக மொழியில் இந்தியாவில் வாசிக்கப்படும் தம்புரா, வீண்(ணா) வாத்ய (வாத்யம்) என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. வாத்யம் என்ற சொல் அவஸ்தன் நூலில் உள்ளது.

16. வீர் (Vir) என்ற சொல் பாரசீக மொழியில் உள்ளது. இந்த சொல்லே வடமொழியில் வீர்பூமி, பரம் வீர் சக்ரா போன்ற சொற்களாக உருப்பெற்றுள்ளது.

முடிவுரை:

1. துருக்கிஸ்தான் என்று அறியப்பட்ட பகுதியில் (துர்க்மேனிஸ்தான் அருகில்) இருந்து முதல் ஆரியர் தோன்றியதை இந்த அகராதி தெரிவிக்கின்றது. இந்த நூல் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் அமைந்த NDA அரசில் அமைச்சரர்க இருந்த திருமதி மேனகா காந்தி அவர்களால் எழுதப்பட்டுள்ளதால், இந்த நூலில் ஆரியர் பற்றி சொல்லப் படும் செய்திகள் மற்றும் விளக்கங்கள் சிறப்புப் பெறுகின்றன.

2. பாரசீகத்திலிருந்து வந்த  இந்திரன், பிரம்மா, விஷ்ணு போன்ற வேதகால கடவுள்கள் இந்தியாவில் பார்ப்பனீயத்தை வளர்க்க உதவியதான வரலாற்று ஆசிரியர் ஜேம்ஸ் ஹார்ட் டேவிஸ் தனது நூல்  History -- யில் தெரிவிக்கிறார்.

3. கனிஷ்கர் காலத்தில் கல்வெட்டுகள் 1993 இல் ஆப்கானிஸ்தானில் கண்டெடுக் கப்பட்டன. இதில் இரானிய மொழியை ஆரிய மொழியாகக் குறிக்கப்பட்டுள்ளது.

4.  Helena Petroun Blavatsky jdJ  ‘Secret Doctrine 888’ இல் கீழ்க் கண்டவாறு தெரிவித்துள்ளார். யூதர்கள் ஆரியன் அல்லாதவர்கள். ஆபிரஹாமைச் சார்ந்த வர்கள்.    A- brham x-brham
(பிரம்மன் = பிராமணர்) Abrham   பிராமணனின் எதிர்ச்சொல்.

5. பிராமணர் அல்லாத யூதர்களை அறவே அழிக்கும் கொள்கைளை நாசி (NAZI) கொள்கை என்று கூறுவர். இந்த கொள்கை ஆரியமயமாக்குதல் என்று பெயர். இதனால் இரண்டாம் உலகப்போர் ஹிட்லரால் நடத்தப்பட்டது. இந்த ஆரிய மயமாக்கும் கொள்கைகளை (NAZI) அமெரிக்கா, இங்கிலாந்து, இரசியா போன்ற நாடுகள் போரிட்டுத் தோற் கடித்தன.

6. ஆரியமயமாக்கும் கொள்கையை ஜெர்மனி கடைப்பிடித்ததால்  “The American Heritage Dictionary of English Language  என்ற அகராதியில் ஆரியர் என்ப வருக்கு கீழ்க் கண்ட விளக்கம் தரப்பட் டுள்ளது. “It is one of the ironies of History that Aryan, a word nowadays referred to the blond haired, blue eyed, physical, ideal of NAZI Germany was originally referred to people looked different. Its history starts with Ancient Indo Iranian People, who inhabited parts of Iran, Pakistan, Afghanistan, India, Bangladesh.”
7. ஆரியர்கள் துர்கிஸ்தான் (துர்க் மேனிஸ்தான்) இல் இருந்து வந்தார்கள்  என்று அகராதி உருவாக்கிய மேனகா காந்தியும், ஆரியர்கள் நாசிகள் (NAZI) நாசகாரர்கள் என்று அகராதி எழுதிய அமெரிக்கப் பண்பாட்டுக் கழகமும் போற்றுதலுக்கு உரியவர்கள்.

பாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் !

பாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் !

தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் )
1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை .. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக உபயோகிக்கிறோம்.. அதை வினிகரில் கழுவி உபயோகிக்கும் போது அந்த கேட்டு போன வாடையை வாடிக்கையாளர்கள் அறிவதில்லை …

2)சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை உபயோகிக்கிறோம்.. பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் .. அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால் ???

3) சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே உபயோகிப்பதில்லை .. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் உபயோகித்த .. என்னையோ கலந்து செய்றோம் ..

4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை உபயோகிப்பதில்லை .. .. பாமாயில் தான் உபயோகிக்கிறோம்.

5) ரைஸ் கடாயில் உபயோகிக்கும் பொது சோரு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம் ..

6)இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க … அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயீலை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம் .. காரணம் அதில் உள்ள என்னை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும் ..

7)அஜினமோட்டோ .. இதை அதிகமாக உபயோகிக்கிறோம் .. அது உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும் .. சோதித்து பாருங்கள் ..

8)வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது .. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம் ..


9)தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த , காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை உபயோகிக்கிறோம்..

10)சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கெட்ட வாடை அடிக்கும் ..
இது தான் .. நாங்கள் பாஸ்ட் பபுட் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate போடுவோம் .. ஒன்னு 50 ருபாயினு வித்தா 400 ருபாய் சம்பாரிப்போம் .. அத நானும் சாப்பிட்டு என் உடலும் கெட்டு விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குரோமேனு என என் மனசாட்சி உறுத்தியது .. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன் …

நன்றி – தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் )

Wednesday, October 8, 2014

இதுதான் அமுக்குவான் பேய்.

இதுதான் அமுக்குவான் பேய்.



இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது,
யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல்
இருக்கும்.
உங்களால் கண்ணைத் திறக்க முடியாது.
கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி,
திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும்
திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம்
கழித்துத்தான் உங்களால் எதுவும்
செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும்
அருகில் இருக்கமாட்டார்கள்.

என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான்
அமுக்குவான் பேய். உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமானபேய் இல்லை என்றாலும், இதுவும்
ஒரு முக்கியமான பேயாக புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய்
அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல்
புளியமரத்திலோ வேப்பமரத்தின்
உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின்
இராஜாவான......... என்றெல்லாம்
சுவாரஸ்யமாக த்ரில்லாக கதை எழுத ஆசைதான்
ஆனால் அது உண்மை இல்லையே,

என்ன செய்வது?
நம்மூரில் அமுக்குவான் பேய்
என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்க
பக்கவாதம் என்கிற கோளாறு.

சில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட
பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும்.
அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத்
திறக்கவோ முடியாது. இந்தக்
கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால்
இது வருகிறது.
துயில் மயக்க நோய், ஒற்றைத்
தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில்
மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும்
இதற்கும் தொடர்புகள் உண்டு.

இதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.
இதில் தனிமைத் தூக்க பக்கவாதம்
என்பது ஒரு நபரின் வாழ்க்கையில்
எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த
நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும்
பிரச்னைக்குரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க
பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும்.

மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட
இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட
தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம்
(மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும்.
துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம்
பேருக்கு இப்பிரச்னை ஏற்படும்
என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள்
இது ஏதோ பில்லி சூனியத்தின்
வேலை என்று நினைத்துக்
கொண்டு மந்திரவாதிகளைத்
தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த
மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள்
விடுபடும் காலம் என்றுதான் வருமோ?

நன்றி ஆனந்த் தமிழீழம் மலரும்..

SOME RELATED ARTICLE..

பேய் இருக்கா?... இல்லையா?... – டாப் வரிசை புகைப்படங்கள்! - அமானுஷ்யம் - ஓர் அலசல்!