Wednesday, October 8, 2014

இதுதான் அமுக்குவான் பேய்.

இதுதான் அமுக்குவான் பேய்.



இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது,
யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல்
இருக்கும்.
உங்களால் கண்ணைத் திறக்க முடியாது.
கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி,
திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும்
திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம்
கழித்துத்தான் உங்களால் எதுவும்
செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும்
அருகில் இருக்கமாட்டார்கள்.

என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான்
அமுக்குவான் பேய். உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமானபேய் இல்லை என்றாலும், இதுவும்
ஒரு முக்கியமான பேயாக புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய்
அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல்
புளியமரத்திலோ வேப்பமரத்தின்
உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின்
இராஜாவான......... என்றெல்லாம்
சுவாரஸ்யமாக த்ரில்லாக கதை எழுத ஆசைதான்
ஆனால் அது உண்மை இல்லையே,

என்ன செய்வது?
நம்மூரில் அமுக்குவான் பேய்
என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்க
பக்கவாதம் என்கிற கோளாறு.

சில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட
பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும்.
அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத்
திறக்கவோ முடியாது. இந்தக்
கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால்
இது வருகிறது.
துயில் மயக்க நோய், ஒற்றைத்
தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில்
மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும்
இதற்கும் தொடர்புகள் உண்டு.

இதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.
இதில் தனிமைத் தூக்க பக்கவாதம்
என்பது ஒரு நபரின் வாழ்க்கையில்
எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த
நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும்
பிரச்னைக்குரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க
பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும்.

மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட
இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட
தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம்
(மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும்.
துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம்
பேருக்கு இப்பிரச்னை ஏற்படும்
என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள்
இது ஏதோ பில்லி சூனியத்தின்
வேலை என்று நினைத்துக்
கொண்டு மந்திரவாதிகளைத்
தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த
மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள்
விடுபடும் காலம் என்றுதான் வருமோ?

நன்றி ஆனந்த் தமிழீழம் மலரும்..

SOME RELATED ARTICLE..

பேய் இருக்கா?... இல்லையா?... – டாப் வரிசை புகைப்படங்கள்! - அமானுஷ்யம் - ஓர் அலசல்!


5 comments:

  1. சகேதரா இதை இந்திய மருத்துவத்தில் அமுக்கன் ரோகம் என்று கூறப்படுகிறது இதற்கு இரும்பச் சத்துள்ள உணவுகளையும் இரவில் அமிலத்தன்மை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்க்கவும் மற்றும் உணவு உண்டபின் குறுநடை செய்யவும் அதாவது நடைப்பயர்சி இதன் மூலம் உணவு சீரணத்தின் போது உண்டாகும் வாயுக்கள் ஏப்பமாகவோ அல்லது அபான வாயுவாக பிரிந்து விடும்

    பொதுவாக நமது மூளை மிக ஆச்சரியமான உருப்பு நாம் பிறந்ததில் இருந்து இன்னாள் வரைக்கும் கண்ட கேட்ட உணர்ந்த யாவும் மூளையில் பதியப்படுகிறது சொல்லப்போனால் இன்றய கனனியைப் போல் அதில் என்ன புரோக்கிராம்.செய்து உள்ளிடு.செய்யப் பட்டு நம் தேவைக்கு பெறுவதைப் போல் உதரணமாக நாம் தமிழில் கனனியில் தட்டச்சு செய்யும்போதை ஒரு சொல்லு தட்டச்சு செய்யும் போது அதனுடன் அது சார்ந்த வார்த்தைகள் முன்வந்து நிற்கும் இதில் தங்கள் தேவைக்கு எடுத்துக் கொள்ளலாம் அது போல் நமது மூளையும் தன்னுள் சேமித்த செயதிகளைக் கொண்டு புதிய அல்லது அச்சூழ் நிலைக்கு ஏற்ப முடிவு செய்யும் உதாரனமாக நீங்கள் ஒரு காரியத்தை செய்ய நினைகிறீர்களி அதாவது ரோட்டைக்கடக்க அப்போது மூளை எச்சரிக்குது வண்டிவருது நில் என்று அடே நேரத்தில் இன்னொரு முடிவும் வருகிறது வண்டி தூரத்தில் வருகிறது.கடந்து விடலாம்.என்று.இதில் ஒன்றை தேர்ந்து.எடுக்கிறது அது சில நேரங்களில் கனிப்பு தவறிவிட்டால் விபத்தாகிறது.இவ்வாறு மூளையானது பேய் பூதம் என்றுசிறுவயது முதல் நம் மூளையில் செலுத்திய செய்திகள் நம்மை பயத்தை உண்டாக்கு கிறது சில நேரங்களில் இரவில் நடந்து செல்கிறீர்கள் அப்போது ஒரு செடியில் இருந்த முள் காலில் கீறி விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள் அடே நீங்கள் அடே அசிரத்தையாக விட்டு விட்டிர்கள் பின் மீண்டும் அவ்வழியில் வருகிறீர்கள் இப்போது டார்ச் லைட் கொண்டு வருகிறீர்கள் அந்த வழியாக ஒரு பாம்பு போகிறதை பார்க்கிறீர்கள் அவளவுதான் உங்கள் மூளை முள் குத்திய காயத்தையும் பாம்பையும் இனைத்து முடிவு செய்து விடம் உடனே வியர்த்து வேர்த்து உயிர் பிரியக்கூட ஏற்படும்

    ReplyDelete
  2. படுக்கும்போது வலது அல்லதுஇடது பக்கம் திரும்பிய படி படுத்தால் இந்த ப்ரமை ஏற்பட வாய்ப்பில்லை. காரணம், நாம் நேரடியாக வானத்தை பார்த்தால் போல் தூங்கினால் நமது மூக்கின் இரு துவாரங்களின் வழியாக மூச்சுக்காற்று ஒரே நேரத்தில் உள் சென்று ஓரே நேரத்தில் வெளியேறும். அப்போது ப்ராணவாயு தடைபடும்போது இதயத்தில் அழுத்தம் ஏற்படுகிறது. அப்போதுதான் நீங்கள் பேய் அழுத்துகிறது என்று நினைக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் அந்த நேரத்தில் ஒரு பக்கமாக வலது அல்லது இடது சுவர் பார்த்தபடி திரும்பி படுத்தால் இதயத்துக்கு செல்லும் காற்று சீராகும்.

    ReplyDelete
  3. Allhamdulillah,a thoughtful post Anna


    Do visit my blog munawarfathima.blogspot.in

    ReplyDelete
  4. jazakallah khair ma,
    sure i visit ur blog, i will follow your blog insha allaah........

    ReplyDelete

welcome ur comment,