Monday, October 13, 2014

அரபியன் பிளவு மற்றும் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் சேரமான் பெருமாள் பற்றிய பல தகவல்.


அரபியன் பிளவு   


 நிலவில் முதலில் காலடியெடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், அங்கு இறங்கிய போது அவர் பயணித்த விண்கலம் நிலவைப் பல கோணங்களில் ஏராளமான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது.

துணைக் கோளாகிய நிலவில் இறங்கிய விண்கலம் படம் எடுத்து அனுப்பிய படங்களில் ஒர் ஆப்பிளை நேர் இரண்டு துண்டுகளாக வெட்டி அதை மீண்டும் ஒடடியது போல் ஒரு நேர்கோடு தெரிகின்றது. அதனால் இதற்கு அரபியன் பிளவு என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

இறைமறை வசனங்கள் அரபு மொழியில் இறங்கின. சுந்திரன் பிளந்துவிட்டது என்ற வசனத்தின் மீது அரபியரே முதன் முதலில் நம்பிக்கை கொண்டனர். இதன் அடிப்படையில் நிலாவில் இறங்கிய விண்கலம் எடுத்து அனுப்பிய நிலவுப் படங்களில் தெரியும் வெட்டி ஒட்டிய ஆப்பிளைப் போன்று இருக்கும் நிலாக் கோட்டிற்கு அரபியன் பிளவு என்று சொல்லப்படுகிறது.

திருக்குர்ஆன் இவ்வுலகைப் படைத்தவனின் வார்த்தைகள் என்பதை நம்புபவர்கள் இந்த சம்பவம் உறுதியாக நடந்த ஒன்று என்பதை நம்புகிறார்கள். இதுபோல திருக்குர்ஆனில் இறைவன் வேறு பல அற்புதங்களையும் குறிப்பிடுகிறான். உதாரணமாக தந்தையின்றி ஏசு பிறந்தது,  மூஸா நபியையும் அவரைச் சேர்ந்தோரையும் காப்பாற்ற செங்கடல் பிளந்து வழிவிட்டது, மூஸா நபி பிர்அவ்னின் அரசவையில் கைத்தடியை எறிந்து அது பாம்பாகியது,  இப்ராஹீம் இறைத்தூதரை நெருப்புக் குண்டத்தில் எறிந்த பின் அவருக்காக நெருப்பு குளிர்ந்தது…. போன்ற பல சம்பவங்களையும் திருக்குர்ஆனில் நாம் காணலாம்.

பகுத்தறிவை சற்று முறைப்படி உபயோகித்தால் இவை உண்மை என்பதை ஒப்புக்கொள்வதில் சிரமமிருக்காது. பகுத்தறிவைத் தாண்டி உண்மைகளை உணரும் வண்ணம் திருக்குர்ஆன் தன் வாதங்களையும் முன்வைக்கிறது.

சந்திரன் பிளந்ததைக் கண்ட தமிழ் மன்னன் :


சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேரவம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரளமாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அரபியர்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது. பல்வேற கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர்.

நிலவை பிரிக்கும் அதிசயம்


மக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள்.

சில காலம்  சென்றபின் அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அரபியர் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்தள். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முஹம்மது (ஸல்) எனவும் அவரே இறைமறுப்பாளர்களை நம்பவைப்பதற்காக இந்த “நிலவை பிரிக்கும் அதிசயத்தை” நடத்தியதாகவும் கூறக்கேட்டனர்.

இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியர்களிடம்,  தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும்,  அதனால் தன்னையும் மக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள். ஆனால் அப்போது ஈழத்துக்கு பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அரபியர் கூட்டம் தாங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.

இஸ்லாத்தை ஏற்றல் :


தனது ராஜ்ஜியத்தை பல்வேறு பிரிவுகளாகப் பிரித்த சேரமான் பெருமாள் அவர்கள், அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் “கொச்சின் ராயல் பேமிலி” என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வசித்து வருகின்றனர்).

அதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மக்கா கிளம்பி சென்றனர். அங்கு முகம்மது நபி(ஸல்) அவர்களை நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே இஸ்லாம் மதத்தை ஏற்றார்கள். மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜூதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்கள். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார்கள்.

இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார.; இந்தியாவிலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடி நிறைய ஊறுகாய்களை கொண்டு வந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது.”

இறப்பு :


சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தா தேசத்து மன்னரின் தங்கையை மணம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபித்தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் ( Salalah port, oman ) நோய் வாய்ப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

மாலிக் பின் தீனார் அவர்களின் இந்தியா வருகை :


மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். ஆதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளை காட்டுமாறும் பணித்திருந்தார். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசூதிகளை கட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் கட்டினார்.

சில தகவல்கள் :


•       சேரமான் பெருமாள் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் மற்றும் தமிழர் ஆவார்.

•       சேரமான் பெருமாள் ஜூம்மா மசூதிதான் இந்தியாவின் முதல் மசூதி மற்றும் உலகின் இரண்டாவது ஜூம்மா மசூதி ஆகும். (உலகின் முதல் ஜூம்மா மசூதி மதினாவில் உள்ளது).

220px-Cheraman_Juma_Masjid220px-Cheraman_Juma_Masjid

•       சேரமான் பெருமாள் அவர்களது சமாதி இன்றும் ஒமன் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (இன்றைய சலாலா) இந்திய மன்னர் சமாதி என்ற பெயரில் உள்ளது.   நன்றி: இணையம் மற்றும் விக்கிபீடியா. 

No comments:

Post a Comment

welcome ur comment,