Tuesday, January 7, 2014

ஒலிம்பிக்கில் குண்டுவெடிக்கும் இல்லுமினாட்டி எச்சரிக்கை



ஒலிம்பிக்கில் குண்டுவெடிக்கும் இல்லுமினாட்டி எச்சரிக்கை 


இல்லுமினாட்டி..இந்தப்பெயரை எங்கேயோ கேட்டமாதிரி இருக்கிறதா? ஏஞ்சல்ஸ் அண்ட் டெமோன்ஸ் திரைப்படத்தில் அறிந்திருப்பீர்கள்.இது டான்பிரவுனின் கதைதான் இவர்தான் டாவின்சிகோட்டின் எழுத்தாளருமாவார்.ஏஞ்சல்ஸ் அண்ட் டெமோன்ஸ் திரைப்படத்தில் இல்லுமினாட்டி என்றரகசிய சமூகம் வத்திக்கானின் அடுத்த போப்பாக தேர்வு செய்யப்படுவதற்கு அதிக சாத்தியமுள்ள 4 வரை இலுமினாட்டி கடத்துகின்றது கொலை செய்ய முயற்சிக்கின்றது.இவற்றை முறையடிக்க டொம் ஹாங்க்ஸ் இல்லுமினாட்டியை பின் தொடர்வதாக கதை செல்லும்.

(இதை வாசிக்கும்போது இது நிஜத்தில் நடைபெறமுடியாத சயன்ஸ்ஃபிக்ஸன் கதை மாதிரியோ,முற்றிலும் முட்டாள் தனமாக சித்திகரிக்கப்பட்ட ஒன்றாகவோ தோன்றலாம்.ஆனால் இல்லுமினாட்டி என்ற சமூகத்தைப் பற்றி இணையத்தளத்தில் அவ்வளாவுக்கு கருத்து மோதல்கள்,விடயங்கள் பரிமாறப்படுகின்றன சில நாடுகள் இல்லுமினட்டியை தடையும் செய்துள்ளன. இது ஒலிம்பிக்கில் பாரிய உய்ர்சேதங்களை விளைவிக்க இல்லுமினாட்டிகள் திட்டமிட்டிருக்கின்றார்கள் எனவும் அவற்றை அன்டி இல்லுமினாட்டியினர் கண்டறிந்து மக்களை எச்சரிக்கின்றார்கள்.இல்லுமினாட்டிகள் நாம் பயன்படுத்தும் சாதாரண கருத்துப்பரிமாறல் சாதனங்கள் எதையும் பயன்படுத்துவதில்லை. உலகெங்கிலும் உள்ள இல்லுமினாட்டிகளுக்கு சகலரும் பயன்படுத்தக்கூடிய சாதனங்களில் எமக்கே தெரியாமல் செய்தி அனுப்புகின்றார்கள்.ஒலிம்பிக்கில் அசம்பாவிதத்தை நிகழ்த்த கருத்துப்பரிமாறப்படுகின்றது என்பதற்கு இணையத்தில் காணப்பட்ட ஆதாரங்களின் தொகுப்புத்தான் இது.இதை வாசித்தால் நிச்சயம் ஒலிம்பிக்கில் ஏதோ பயங்கரம் நடக்க இருப்பாதாக தெரியும்.ஆனால் இவ்வாறு நடைபெறகூடாதென்று இறைவனைப்பிரார்த்திபோம்)

இல்லுமினாட்டி என அழைக்கப்படும் இந்த ரகசிய சமூகம்தான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.முதலில் இலுமினாட்டியை பற்றி சுருக்கமாக  தெரிந்திருக்கவேண்டியது அவசியம்.தம்மை உலகுக்கு வெளிப்படுத்திக்கொள்ளாத ரகசிய சமூகம்.உலகில் நடக்கும் அனைத்து முக்கிய விடயங்களுக்குமான கிங்க்மேக்கேர்ஸ் இவர்கள்தான்.மைக்கல் ஜாக்ஸனின் பாடல்களுக்கு நீங்கள் அடிமையா? ராக் பாடல்களுக்கு அடிமையா? ஹாலிவூட்டின் பிரபலங்களுக்கு நீங்கள் அடிமையா? ஃபேஸ் பூக்கிற்கு அடிமையா? உங்களாய் அடிமையாக்கியவை இவைகளல்ல உண்மையைல் உங்களை அடிமையாக்கியது இல்லுமினாட்டி.இல்லுமினாட்டி இவர்களைக்கொண்டு உங்களை தமக்கு அடிமையாக்கியுள்ளது.ஃபேஸ் புக்கின் உரிமையாளர் சக்கர்பேர்க் இவர்களது சமூகத்தவர்,ஒபாமா,புஸ் மற்றும் நீங்கள் எதில் எதிலெல்லாம் அடிமையாக இருக்கிறீர்களோ அந்தப்பிரபலங்கள் இவர்களில் பெரும்பாலானோர் இவர்களது சமூகத்தவர்கள்.
இல்லுமினாட்டி என்ற அந்த சமூகம் இவர்களை வைத்து உலகில் அடுத்து என்னென்ன நடைபெறவேண்டும் என்பதை தீர்மன்னிக்கின்றது.இதனை இல்லுமினாட்டியின் சமூகத்தவர்கள் நடைமுறைப்படுத்துகின்றார்கள்.பிரபலங்களுக்கு அடிமையாக இருப்பவர்கள் தமது நாயகன் எது செய்தாலும் அதற்கு ஏற்றாற் போல் நடந்துகொள்வார்கள்.ஒபாமா இவர்களது திட்டத்திற்கு துணைனிற்பார் அமெரிக்காவின் டுவின் டவர் உடைந்தது கூட இவர்களால்தான்.இவர்கள் யார் யார் என்பதை அடையாளம் காண முடியாது.ஆனால் இவர்களுக்கிடையில் எல்லாருக்கும் வெளிப்படையாக தெரியக்கூடிய ஆனால் அவர்களுக்கு மட்டும்புரியக்கூடிய ரகசியதொடர்பாடல்கள் உண்டு இதன் மூலம் இவர்கள் தம் அங்கத்தவர்களுடன் அடுத்த திட்டத்தை பற்றி அறிவிக்கின்றார்கள்.சுருக்கமாக கூறினால் நாம் இல்லுமினாட்டியால் சூழப்பட்டிருக்கின்றோம்.இல்லுமினாட்டியால் ஆளப்பட்டிருக்கின்றோம்.எமது நடவடிக்கைகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டவை அல்ல அவை இல்லுமினாட்டியால் திசைதிருப்பப்பட்டு செய்யப்பட்டவை.கேட்டால் தலை சுற்றலாம் என்ன பைத்தியக்காரத்தனம் என்றும் நினைக்கலாம்.ஆனால் தொடர்ந்து வாசியுங்கள் புரியும்.
(உண்மையில் இல்லுமினாட்டி என்பதைப்பற்றி தனிப்பதிவாகத்தால் எழுதவேண்டும் அவ்வளவிற்கு அவர்களைப்பற்றிய விடயம் இணையத்தில்  கொட்டிக்கிடக்கின்றது.ஆனால் ஒலிம்பிக்கில் நிகழப்போகும் விபரீதத்தை விளக்க இல்லுமினாட்டியைப்பற்றி சிறிது தெரிந்திருத்தல் அவசியம் அதனால்தான் இல்லுமினாட்டியைப்பற்றிய சிறிய அறிமுகப்படுத்தலுடன் பதிவு தொடர்கிறது.)
இதுவரை உலகில் நடந்த முக்கிய சம்பவங்கள் அதற்கு இல்லுமினாட்டி எவ்வாறு தமது அங்கத்தவர்களுக்கு செய்திவழங்கியது?முதலில் டுவின் ரவர் உடைவதை முன்கூட்டியே இவர்கள் அறிந்திருந்தார்கள்.தமது சமூகத்திற்கு தெரிவித்திருந்தார்கள்.நான் இவற்றை கோய்ன்ஸிடன்ஸ் என்ற தலைப்பில் இட்டிருந்தேன்.இதை கிளிக் செய்யவும்.ஆனால் இவற்றை இல்லுமினாட்டியின் செய்திகளாகவும் கொள்ளலாம்.இது கோய்ன்ஸிடன்ஸா அல்லது செய்திகளா என்பது இல்லுமினாட்டி பற்றிய ஆராய்சிக்கு பின் எடுக்கப்படவேண்டிய முடிவு.அப்படி ஒரு சமூகமே இல்லை எனவும் கருத்துகள் உண்டு.இச்சமூகத்தை நம்புபவர்களால் இது இல்லுமினாட்டியின் செய்திகள் எனவும்.நம்பாதவர்களால் கோய்ன்ஸிடன்ஸ் எனவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றது.ஆனால் இல்லுமினாட்டி சமூகம் இருக்கின்றது என்பதற்கான ஆதாரங்கள் பல இருக்கின்றன இவை எல்லாவற்றையும் கோ இன்ஸிடன்ஸ் என எடுத்துக்கொள்வதா? என்பதுதான் சற்றுக்கிறக்கமாக இருக்கின்றது.

இல்லுமினாட்டிகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்புடப்பா முதல் கொண்டு அனைத்துப்பொருட்களினூடகவும் நாம் பார்க்கும் திரைப்படங்கள்,கேட்கும் பாடல்களின் நாயகர்கள்,உலகின் பிரபலமானவர்கள் போன்றவர்களினூடக தமது செய்திகளை தமக்காக பணிபுரியும் இல்லுமினாட்டிகளுக்கு வழங்குகின்றார்கள்.எமக்கு இவை வெறும் அடையாளங்களாகவோ அல்லது நாம் மேலோட்டமாக காணும் செய்திகளாகவோதான் பார்ப்போம்.ஆனால் இல்லுமினாட்டிகள் இவற்றை புரிந்து கொள்வார்கள்.இல்லுமினாட்டிகள்பலர் உலகின் பவர்புல்லான பதவிகளில் இருப்பதால் அவர்களை நெருங்கவும் முடியாது.மைக்கல் ஜாக்ஸன் புஸ்,ஒபாமா,எலிசபத்தின் குடும்பம் பிரபல பாடகி ரிகானா,ஜேம்ஸ் கம்மரோன் போன்ற பலர் இதில் அடக்கம்.

கீழே கொடுக்கப்பட்ட தகவல்கள் ஒலிம்பிக்கில் அசம்பாவிதங்களை விளைவிப்பதற்கு இல்லுமினாட்டிகளால் செய்திகள் எவ்வாறு வழங்கப்பட்டு வருகின்றது?என்பதை ஆதார பூர்வாமக கொடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் செய்திவழங்கப்பட்டு விட்டது இதனால் ஒலிம்பிக்கில் அசம்பாவிதம் நடக்கலாம் என அன்டி இல்லுமினாட்டிகளால் மக்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வருகின்றது.
இல்லுமினாட்டியினரின் குறியீடு All Seeing Eye எனப்படும் ஒரு கண்ணைக்கொண்ட பிரமிட்.இந்தக்குறியீடு அமெரிக்காவின் டாலரின் பின்புறத்தில் இருந்து பல ஹொலிவூட் திரைப்படங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்கள் என அனைத்திலும் இது பொறிக்கப்பட்டிருக்கிறது.

இல்லுமினாட்டியின் கார்ட்கேம்  ஒன்று இருக்கின்றது.அதில் 330 கார்ட்கள் இருக்கின்றன விடயன் என்னவெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு கார்ட்டிலும் நடக்கவேண்டிய ஒவ்வொரு விடயங்கள் இருக்கின்றன.1980 இல் இருந்து 1995 ற்குள் உருவாக்கப்பட்டவை.


இதில் காணப்படும் 5வரும் ஒலிம்பிக்கின் 5 வளையங்களின் நிறத்தை ஆடையாக அணிந்திருக்கின்றார்கள்.இவர்களின் பின்னனியில் லண்டனின் Big Ben Tower உடைந்துவிழும் காட்சியும் இருப்பதை அவதானியுங்கள்.
ஒலிம்பிக்கிற்காக உருவாக்கப்பட்ட மஸ்கொர்ஸ் பொம்மைகளும் ஒரு கண்ணுடன் இருக்கின்றன.ஒரு கண் என்பது இல்லுமினாட்டியின் சின்னம்.இதுதான் பிரமிட்டிலும் இருக்கின்றது.
ஒலிம்பிக் நடைபெறும் ஸ்ரேடியத்தின் விளக்குகளை அவதானித்திருக்கிறீர்களா?

2008 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் லோகோவில் zion என்றவார்த்தை இருந்தது.
2012 லோகோவில் 2012 என்ற ஆண்டும் ஓளிந்திருக்கின்றது.
2012 லோகோவில்  zion என்றவார்த்தை  இருக்கின்றது.
 zion  என்பது இஸ்ரேலின் தலைனகரான ஜெருசலத்தின் மறுபெயராகும்.இதனால் இத்திட்டத்தின் பின்னால் இஸ்ரேலின் இயக்கங்கள் இருக்கும் என நம்பப்படுகின்றது.

2010 இல் டொம் கேய்ன் என்பவர் ஒரு சிறுகதைஒன்றை எழுதினார்.அக்கதை ப்ரிட்டிஸ் செய்தித்தாளில் வெளிவந்தது.அதில் ஒலிம்பிக் ஸ்ரேடியத்தில்  நியூக்கிளியர் பாம் ஒன்று வெடிப்பதாக எழுதியிருந்தார்.


இக்கதையை எழுதியவரின் புனை பெயர்தான் ரொம் கேய்ன்.அவரது நிஜப்பெயர்  டேவிட் தோமஸ்.இவர் எதற்காக கேய்ன் என்ற பெயரை தெரிவு செய்தார்?காரணம் இதுவாக இருக்கலாம் இல்லுமனாட்டியின் ரகசிய உறுப்பினர்கள் தங்களை son of CAIN என்று அழைப்பதுண்டு.

இது ஒரு தற்செயலான விடயமா? அல்லது இவர்தான் ஏனைய இல்லுமினாட்டிகளுக்கு இலக்குகளை மறைமுகமாக வழங்குகின்றாரா?

பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது ஒருமுறை கேய்ன் தனது தந்தைக்கு   ரகசிய உளவுப்பிரிவுகளுடன் சகஜமான பலமான தொடர்புகள் உண்டு எனக்கூறியிருந்தார்.
இதனால் இவரது பெயர்,இவர் தனது தந்தையைப்பற்றிக்கூறிய விடயங்கள் இவர் தந்தையைத்தொடர்ந்து இல்லுமினாட்டிக்காக பணியை தொடர்கின்றாரோ என எண்ணத்தோன்றுகின்றது.

அத்துடன் ஒலிம்பிக் நடைபெறப்போகும் ஸ்ரேடியம் நெயூக்கிளியர் ஏரியாவில்தான் அமைந்துள்ளது என்பது அடுத்த அதிர்ச்சிகரமான செய்தி.
தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான எதிர்காலத்திற்கான காட்சிகள் என்ற தலைப்பில் 2010 இல் Rockefeller Foundation ஒரு எதிர்வு கூறலை வெளியிட்டிருந்தது.அதில் 2010 இல் இருந்து 2020 வரை The Doom Decade என குறிப்பிடப்பட்டிருந்ததுடன் அடிக்கடி அழிவுகள் நடக்கும் ஒரு உலகத்தில் வாழ்வதற்கு
யாருமே முன்னாயத்தமாயிருக்கவில்லை. 2010 லிருந்து 2020 வரையான தசாப்தம் doom decade எனப்படுவதற்கு காரணங்கள் உள்ளன. 13000 பேர் செத்த 2012 ஒலிம்பிக் குண்டுவெடிப்பு...என அந்தா தகவல் செல்கின்றது.

ஆனால் 13,000 என்ற தொகை ஏன் தெரிவுசெய்யப்பட்டது?
இல்லுமினாட்டிக்கான சிம்பலான கண்ணைக்கொண்ட பிரமிட்டில் 13 அடுக்குகள் இருக்கின்றன.இவற்றை அவர்கள் 13 bloodlines என அழைக்கின்றார்கள்.13 இவர்கள் தம்மை குறிக்கப்பயன்படுத்தும் பிரபலமான எண்ணாகும்.

2011 ஆகஸ்டில்  private eye என்ற பத்திரைகை  ஆப்பொழுது நடைபெற்ற கலவரத்தைப்பற்றி தகவல்களை ஆராய்வுசெய்து செய்தி வெளியிட்டது. இதில் ஒலிம்பிக்கைப்பற்றிய எந்த செய்திகளும் இல்லை.ஆனால் அந்தப்பத்திரிகையின் முகப்புப்பக்கம்தான் வேறொருசெய்தியைக்கூறியது.ஒலிம்பிக்கின் ஒத்திகை ஆனால் ஏன் இதற்கு ஒலிம்பிக்கின் ஒத்திகை என பெயர் வைக்கவேண்டும்?
அத்துடன் இதுதான் மிகமோசமான ஒலிம்பிக்கின் ஆரம்பவிழா என ஏன் கூறவேண்டும்?
ஏனெனில் இதனூடாக இலுமினாட்டிகளுக்கு அடுத்த செய்தி வழங்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக லண்டன் செரிமனியில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கலாம்.

2012 என்ற உலக அழிவைக்காட்டும் படத்தை பார்த்திருப்பீர்கள்.அதில் டொம் ஹான்ஸ் எரிமலை வெடிக்கும்போது வானில் மப் ஒன்றை தேடுவார்.சம்பந்தமே இல்லாமல் இவருக்கு தேவையற்ற ஒரு மப்பை எடுத்து முழுவதுமாக விரித்து பார்ப்பார்.அது அவர் தேடிய மப் அல்ல.அவர் கையில் வைத்திருந்த அந்த தேவையில்லாத மப் எதனுடையது தெரியுமா?
லண்டன் அண்டர்கிரவுண்டின் மப்.



இல்லுமினாட்டிகள் திரைப்படங்களினூடாகவும் தமது தகவல்களைப்பயன்படுத்திக்கொள்கின்றார்கள் என்பதற்கு ஒரு சான்றுதான் இது.

v for vendatta என்ற திரைப்படம் அதே பெயரைக்கொண்ட காமிக்ஸில் இருந்து எடுக்கப்பட்டது.அந்த காமிக்ஸின் அட்டைப்படத்தில் இல்லுமினாட்டிகளின்  கண் சிம்பல் இருக்கின்றது.ஆனால் உள்ளே எந்த பயோலொகஜிக்கல் கெமிக்கல் அட்டாக்குகள் எதைப்பற்றியும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் இதைவைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தில் காமிக்ஸுக்கு சம்பந்தமில்லாது ஒரு காட்சி வருகின்றது.தீவிரவாதிகள் பயோலொஜிக்கல் ஆயுதங்களால் புகையிரதத்தை தாக்கினார்கள் என்ற செய்திவரும் காட்சிதான் அது.எனவே இதன் மூலம் மேலும் இல்லுமினாட்டிகளுக்குசெய்தி வழங்கப்படுகின்றது.

2003 இல் லண்டனில் உண்டர்க்ரவுண்டில் நடைபெறும் பயோலொஜிக்கல்,கெமிக்கல் ஆயுதங்களுக்கு எப்படி முகம் கொடுப்பது என்பதர்கான பயிற்சி அளிக்கபட்டது.அதற்கு அவர்கள் வைத்த பெயர் "operation  osris" இவர்கள் இதற்கு வைத்த பெயர்தான் சந்தேகத்தை கிளப்புகின்றது.osris எகிப்தியக்கடவுள்.இவர் மரணத்தின் பின்னான வாழ்க்கைக்கும்,பாதாள உலகத்திற்குமான கடவுள்.இல்லுமினாட்டிக்கும் எகிப்திய நம்பிக்கைகளுக்கிடையில் நெருங்கிய தொடர்புகள் உண்டு.இதை நீங்கள் பிரமிட்டில் இருக்கும் கண்ணை வைத்தே அவதானிக்க முடியும்.இதன் காரணமாக் இதுவும் இவர்களது திட்டத்தின் வெளிப்பாடாக இருக்கலாம்.

ஒலிம்பிக்கில் அசம்பாவிதத்தை நிகழ்த்த கருத்துப்பரிமாறப்படுகின்றது என்பதற்கு இணையத்தில் காணப்பட்ட ஆதாரங்களின் தொகுப்புத்தான் இது.இதை வாசித்தால் நிச்சயம் ஒலிம்பிக்கில் ஏதோ பயங்கரம் நடக்க இருப்பாதாக தெரியும்.ஆனால் இவ்வாறு நடைபெறகூடாதென்று இறைவனைப்பிரார்த்திபோம்..


thanks to
 

 

Sunday, December 22, 2013

'அரிக்கமேடு '


'அரிக்கமேடு '


பெயரைப் படித்தால் மிகச் சாதாரணமாக தோன்றும் .
ஆனால் ,எத்தனை தேசம் போனாலும் கிடைக்காத பெருமை , பாரம்பரியம் இம்மண்ணுக்கு உள்ளதென்பதை உரக்கக் கூறும் ஒரு வரலாற்று பொக்கிஷம் .

தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரம் பண்டைக்காலத்தில் பல வணிகத்தளங்கள் இருந்தன. அவற்றுள் மாமல்லபுரம், எயில்பட்டினம் (மரக்காணம்), அரிக்கமேடு (Arikkamedu), காவிரிப்பூம்பட்டினம், கொற்கை முதலியன குறிப்பிடத்தக்கன. மேற்கண்ட ஊர்களுள் அரிக்கமேடு என்பது புதுவை மாநிலத்தின் புகழ் சேர்க்கும் முகவரிப் பகுதியாக விளங்குகிறது.

( ஆங்கிலத்தில் ARIKAMEDU ) அரிக்கமேடு என்னுமிடம், தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்து. இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபம் நடைபெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது .








புதுச்சேரிக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. அந்த இடத்தில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியோடிய ஆறு வளைந்து வடக்கு நோக்கிச் சென்று பின்னர் கடலில் கலக்கிறது

அரிக்கமேடு அழகான அமைதியான இடம் என்பது மட்டுமின்றி அங்கு வெளிநாட்டு வாணிபம் மிகச் செழிப்புற்று வளர்ந்திருந்திருக்கிறது என்பதும் கவனத்திற்குரியது ஆகும். இந்த இடம் எவ்வளவு வளத்துடனும் வனப்புடனும் விளங்கியது என்பதை அங்குள்ள திருமிகு "பிஞ்ஞோ தெ பெகெய்ன்" (MGR PIGNAY DE BEHAINE) என்ற கிறித்துவ மதகுருவின் அழகிய வீடு நமக்கு நன்கு புலப்படுத்துகிறது. இந்த வீட்டை மக்கள் "அத்ரான் சாமியார் வீடு" என்று அழைத்து வந்தனர். இந்த வீடு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, புதுச்சேரியில் இருந்த "கிருத்து சபைக்கு" (MISSIONS ETRANGERES) சொந்தமாக இருந்தது. அங்கு பாடசாலைகளும், ஓய்வு இல்லங்களும் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இச்சாமியாரின் வீட்டின் முகப்பின் ஒரு சிறு பகுதியும், பிற்பகுதி முபுவதும் இடிந்து கிடப்பதைக் காணலாம். இவை அடர்ந்த மாந்தோப்பின் நடுவில் காணப்படுகின்றன. மரங்கள் அடர்ந்து காணப்பட்டாலும், முறைப்படி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் அமைப்பு காணப்படுகிறது. இந்த வீட்டிற்கு மேற்கே 150 மீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் ஆறு ஓடுகிறது.

1937-ஆம் ஆண்டு "திரு.ழுவோ துய்ப்ரேய்" என்றழைக்கப்படும் பேராசிரியர், புதுச்சேரி பிரெஞ்ச்சுக்கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். இவர் ஒரு பிரஞ்சுக்காரர். இவர் ஒருமுறை அரிக்கமேடு பகுதிக்கு உலாவச் சென்றார். அங்குச் சிதறிக்கிடந்த சிறு சிறு பொருட்களும் கண்ணாடித் துண்டுகளும்,சில அரியகற்களும். பளபளக்கும் பல்வகைக் கற்களும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. இக்கற்களை அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அவரிடம் கொண்டு வந்து கொடுத்தனர். திரு. துய்ப்ரேய் அவர்களுக்கு மிட்டாய், பணம் அல்லது வேறு ஏதாவது பரிசுப் பொருட்கள் கொடுப்பார். இப்பரிசுப் பொருட்களால் கவரப்பட்ட சிறுவர்கள் மேலும் மேலும் பொருட்களை சேமித்து அவரிடம் கொண்டுவந்து கொடுப்பதில் ஆர்வம் காட்டினர்.

அரிக்கமேடு அழகான அமைதியான இடம் என்பது மட்டுமின்றி அங்கு வெளிநாட்டு வாணிபம் மிகச்செழிப்புற்று வளர்ந்திருந்திருக்கிறது என்பதும் கவனத்திற்குரியது ஆகும். இந்த இடம் எவ்வாளவு வளத்துடனும் வனப்புடனும் விளங்கியது என்பதை அங்குள்ள திருமிகு "பிஞ்ஞோ தெ பெகெய்ன்" (MGR PIGNAY DE BEHAINE) என்ற கிருத்துவ மதகுருவின் அழகிய வீடு நமக்கு நன்கு புலப்படுத்துகிறது. இந்த வீட்டை மக்கள் "அத்ரான் சாமியர் வீடு" என்று அழைத்து வந்தனர். இந்த வீடு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, புதுச்சேரியில் இருந்த "கிருத்து சபைக்கு" (MISSIONS ETRANGERES)சொந்தமாக இருந்தது. அங்கு பாடசாலைகளும், ஓய்வு இல்லங்களும் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இச்சாமியாரின் வீட்டின் முகப்பின் ஒரு சிறு பகுதியும், பிற்பகுதி முபுவதும் இடிந்து கிடப்பதைக் காணலாம். இவை அடர்ந்த மாந்தோப்பின் நடுவில் காணப்படுகின்றன. மரங்கள் அடர்ந்து காணப்பட்டாலும், முறைப்படி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் அமைப்பு காணப்படுகிறது. இந்த வீட்டிற்கு மேற்கே 150 மீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் ஆறு ஓடுகிறது.

ரியாங்குப்பம் ஆற்றை ஒட்டிய பகுதியில் பழங்கால அரிக்கமேட்டுப் பகுதியை அகழாய்வு வழி அடையாளம் கண்டுள்ளனர். மிகப்பரந்து விளங்கிய அரிக்கமேடு கடல் அரிப்பாலும் இயற்கை மாற்றங்களாலும் மிகச்சிறிய தீவுப்பகுதியாக இன்று விளங்குகிறது.

அரிக்கமேடு கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை புகழ்பெற்ற வணிகத்தளமாக விளங்கியது. வரலாற்றியல், தொல்லியல் அறிஞர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர். அயல்நாட்டுப் பயணிகளான பெரிப்புளுஸ், தாலமி முதலானவர்கள் காவிரிப் பூம்பட்டினத்திற்கும் மரக்காணத்திற்கும் இடையே "பொதுகே' என்னும் வணிகத்தலம் (எம்போரியம்) இருந்துள்ளது எனக் குறித்துள்ளனர். பொதுகே என்பது இன்றைய புதுவை சார்ந்த அரிக்கமேடு பகுதியாகும் என மார்ட்டின் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் முதலானவர்கள் கருதுகின்றனர்.

அரிக்கமேட்டுப் பகுதியை இன்று பார்வையிடச் சென்றால் இன்று நமக்குப் பழந்தமிழக அகழாய்வுக் காட்சிகள் எதுவும் காண முடியாத படி மேட்டுப்பகுதியாக மாமரத்தோப்புகளாக மட்டும் காட்சியளிக்கும். ஏனெனில் இங்கு ஆய்வு செய்த அறிஞர்கள் தங்கள் ஆய்வினை நிறைவு செய்த பிறகு அவற்றைப் பாதுக்காப்பாக மூடி விட்டனர். ஆனால் அரியாங்குப்பம் ஆற்றின் கரையோரம் மண்ணரிப்புகளுக்கு இடையே பழைய பானை ஓடுகள், செங்கல், கட்டடச் சுவர் அமைப்புகளின் எச்சம், சிறு சிறு மணிகள் இவற்றை இன்றும் கீழே கிடக்கக் காணலாம்.

தொல்பொருள் ஆய்வுத்துறை ஏறத்தாழ 21 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றி வைத்துள்ளது. இப்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டு அளவில் கட்டப்பட்டதாக நம்பப்படும் கட்டிடச் சுவர்களின் மேல் பகுதியைக் காணலாம். அழகிய செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடச் சுவரின் இடையே மிக அகலாமான, நீளமான கற்கள் இடம்பெற்றுள்ளன. இவை பழைய அரிக்கமேட்டுக் கல் என நம்புவோரும் உண்டு.

அரிக்கமேடு பண்டைக்காலத்தில் பெருமைமிக்க ஊராகப் புகழுடன் இருந்தது. கடற்கோளோ, இயற்கைச் சீற்றமோ, சமய மதப் பூசல்களோ, அயல் நாட்டினரின் படையயடுப்போ இவ்வூரின் பெருமையை அறிய முடியாமல் செய்துவிட்டது. ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் தமிழகத்தின் பகுதிகளைக் கைப்பற்றியபோது பிரெஞ்சுக்காரர்களின் ஆளுகைக்குப் புதுச்சேரி வந்தது.

1940 அளவில் அரிக்கமேட்டுப் பகுதியில் பூமியில் தென்னம்பிள்ளைநட குழிதோண்டிய பொழுது மண்சாடி, மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன. இதன் விளைவாக 1944இல் மார்ட்டின் வீலர் அரிக்கமேடு பகுதியில் பல்வேறு உண்மைகள் மறைந்து இருக்குமென நினைத்து அகழாய்வில் ஈடுபட்டார். இதில் பல்வேறு உண்மைகள் வெளியுலகிற்கு தெரியவந்தன.

அரிக்கமேட்டுப் பகுதியில் கிடைத்த பொருட்கள் :

அரிக்கமேட்டுப் பகுதியில் அகழாய்வு செய்துப் பார்த்த அறிஞர்கள் அழகிய செங்கல் சுவர், ஈமத்தாழிகள், பலவண்ண மணிகள், பலவகை ஓடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இங்குக் கிடைக்கும் பல்வேறு மணிகளை ஒத்துக் கிழக்குக் கடற்கரையின் பழந்தமிழக நகரங்களிலும் மணிகள் கிடைக்கின்றன. கழிமுகப்பகுதிகளில், கிடைத்த ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.

பதினொரு அடி ஆழத்தில் ஒரு மண்டை ஓடும், பூணைக்கண் மணிகளும் கிடைத்துள்ளன. மணி உருக்குச் சட்டங்கள். சாயக்கலவை படிந்த ஓடுகள், கோமேதகக் கல், பச்சைமணிக்கல், படிகமணிகள், அரைத்தான் ஓடுகள், ரோமாணிய காசு, மோதிரம், உறைகிணறுகள் முதலியன குறிப்பிடத்தக்க பொருள்களாகும். இங்குக் காணப்படும் உறைகிணற்றில் சாயம் படிந்து காணப்படுவதால் துணிகளுக்குச் சாயம் ஏற்றும் தொழில் இங்கு நடைபெற்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அரிக்கமேட்டுப் பகுதியில் பல்வேறு வடிவங்களில் மணிகள் கிடைப்பதாலும், அவற்றில் வேலைப்பாடுகள் காணப்படுவதாலும் இங்கு மணி உருக்குத் தொழிற்சாலைகள் இருந்தனவோ என்று எண்ண வேண்டியுள்ளது.

பண்டைக்காலத்தில் மணிகளை உருக்கி, காய்ச்சி, துளையிட்டு, தூய்மை செய்து மணிகளை உருவாக்கியுள்ளனர். இங்கு நீலமணி, பச்சைமணி, ஊதாமணி, கருப்பு மணி மிகுதியாகக் கிடைத்தன. தங்கக் காசுகளும் செப்புக் காசுகளும் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. ஏறத்தாழ 200 வகையான மட்பாண்ட ஓடுகள் இங்குச் சேகரிக்கப்பட்டுள்ளன.பானை ஓடுகளில் "அண்டிய மகர்', அந்தக, ஆவி, ஆமி, ஆதித்தியன் எனும் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

கூர்முனை சாடிகளில் பழச்சாறு தயாரித்து மண்ணில் புதைத்து உண்டுள்ளனர். பழங்காலத்தில் அயல்நாட்டினரை (ரோமானியர்) யவனர் என்றழைத்தனர். இவர்கள் மது அருந்தும் இயல்பு உடையவர்கள். இந்த யவனர்கள் மிகுதியாக இப்பகுதியில் தங்கியிருந்தமைக்குக் கூர்முனைச்சாடிகள் சான்றுகளாக உள்ளன.

எலும்பில் அமைந்த எழுத்தாணி, தங்கத்தில் செய்த கலைப்பொருள், மீன் முள்ளாலான கலைப்பொருள்கள் கிடைத்துள்ளன. சுடுமண் பொம்மைகளில் மனித உருவங்கள் கலைநுட்பத்துடன் காட்டப்பட்டுள்ளன. முடி, முலை, முகம் சிறப்புடன் காட்டப்பட்டுள்ளன. கிளிஞ்சல், சங்கு இவற்றால் செய்த பொருள்களும் கிடைத்துள்ளன.

உரோமானிய விளக்கு, மரச்சாமான்கள், வடகயிறு, மரச்சுத்தி முதலான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் அரிக்கமேட்டு அகழாய்வில் கிடைத்துள்ளன.

ரோமப் பேரரசன் அகஸ்டஸ் தலை பொறித்த காசு அரிக்கமேட்டில் கிடைத்துள்ளது. அவன் வாழ்ந்த காலம் கி,மு. இருபத்து மூன்று முதல் கி.பி. பதிநான்கு வரை. அக்காலத்தில் அரிக்கமேடு சிறந்த வாணிபத்தலமாக விளங்கியது. அரிக்கமேட்டில் கிடைத்த மணிகள், மட்பாண்ட ஓடுகள் ஆகியவற்றைக் கொண்டு அவ்விடம் 2000 ஆண்டுகாலப் பழைமையுடையது எனக் கருதுகின்றனர். அரிக்கமேட்டில் கிரேக்க ரோமானியர்கள் வந்து தங்கி ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர். துணி நெய்தல், மட்பாண்டம் செய்தல், மணிவகைகள் செய்தல், சங்கு வளையல் செய்தல், உருக்கு மணி செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். அங்குப் பெரிய நகரமே புதையுண்டு கிடக்கிறது. இவற்றிற்கு அடையாளமாகப் பல சாயத்தொட்டிகள், உறைக் கிணறுகள் அங்கு கிடைத்து வருகின்றன. அரிக்கமேட்டில் உருக்குமணி (Beads) செய்தல் நடைபெற்றுள்ளது. உருகுந் தன்மையுடைய மணற் பொருட்களைச் சூளையிலிட்டு உருகச்செய்து வண்ணமேற்றி நீண்ட இழைகளாகச் செய்து, அதனுள்ளே காற்றைச் செலுத்தி ஊது குழலாக்கிச் சூடு குறைந்த பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மணிகள் செய்து மெருகூட்டி மணிமாலையாகக் கோர்த்துள்ளனர். கருப்பு, நீலம், ஊதா, மஞ்சள், சிவப்பு, பச்சை முதலிய நிறங்களில் மணிகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு அகழ்வாராய்ச்சி செய்தபோது மணி செய்த சிட்டங்களும், கச்சாப் பொருட்களும் உருக்குக் கிண்ணங்களும் கிடைத்துள்ளன.

ஒளியூடுருவக் கூடிய கண்ணாடிக் கற்களைக் கொண்டு மணிகள் (Semi precious stones), செய்தனர். நீலக்கல், பச்சைக்கல், சிவப்புக்கல், கோமேதகம் முதலிய கற்களைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் பட்டை தீட்டித் துளையிட்டு, மெருகேற்றி மணியாக்கினர். கடினமான கற்களில் மெல்லிய துளையிட்டுள்ளதைக் காணும்போது அவர்களின் கைவினைத்திறம் தெளிவாகப் புரிகிறது. இதனைக் கண்ணாடி மணிகளென்பர் (Glass Beads). கடலில் கிடைக்குஞ் சங்குகளைக் கொண்டுவந்து அறுந்து பட்டை தீட்டி, மெருகேற்றி மணியாகவும், வளையலாகவும், மோதிரமாகவும் செய்துள்ளனர். அரிக்கமேட்டில் பொன்னால் செய்யப்பட்ட கழுத்தணிகள், காதணிகள், மூக்கணிகள் ஆகியவை கிடைத்துள்ளன. அரியாங்குப்பத்து ஆறு, வெள்ளப் பெருக்கெடுத்தோடி மண்ணை அரித்து விடுகிறது. அப்படி அரிக்கப்பட்ட பகுதியே அரிக்கமேடு என்பர் சிலர். அங்கே அருகன் (புத்தன்) சிலையுள்ளது. ஆதலால் அருகன்மேடு - அருக்கன்மேடு - அரிக்கன் மேடு - அரிக்கமேடு என வழங்கப்பட்டதென்பர் சிலர். இங்குள்ள புத்தர் சிலை பர்மாவிலிருந்து கொண்டுவரப் பட்டதென்றும் அதனால் அது பர்மாக் கோயிலென வழங்கப் பட்டதென்றும், பின்னாளில் பிருமன் கோயில் - பிர்மன் கோயில் என்று மருவியது எனவும் கூறுகின்றனர். இப்பகுதியில் பௌத்தம் பரவியதென்பதற்கு இச்சிலையே சான்றாக உள்ளது.

அயல்நாட்டார் குறிப்பிடும் புதுச்சேரி:

புதுச்சேரியை பண்டைய அயல்நாடு வரலாற்று ஆசிரியர்கள் பெரிப்ளூஸ் என்னும் நூலில் (The Periplus of the Erytheraean Sea) பொதுகெ (Podouke) என்றும், தாலமி (Ptolemy) எழுதிய நூலில் பொதுகா (Podouka) என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதே போல், தமிழகக் கடற்கரையை டிரிமிக்கா எனவும், காவிரிப்பூம் பட்டினத்தைக் காமரா எனவும், மரக்காணத்தை சொபட்னா (சோபட்மா) எனவும் அவர்கள் அழைத்தனர். அதற்கேற்றாற்போல் அரிக்கமேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள், அங்கு கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முற்பட்டவொரு வணிகத் துறைமுக நகரம் இருந்ததைக் காட்டுகின்றன.

சங்க இலக்கியமும் புதுச்சேரியும் :

புதுச்சேரியில் வாழ்ந்ததாகக் கூறப்படும் வீரை வெளியனாரும், வீரை வெளியந்தித்தனாரும் பாடிய பாடல்கள் இலக்கிய சான்றுகளாகத் திகழ்கின்றன. தமிழ் இலக்கியங்களில் காலத்தாற் பழைமையானவை சங்க இலக்கியங்கள். அவை கி.மு. 500 ஆண்டுகளை மேல்எல்லையான உடையன. அவற்றில் வீரை வெளியனார், வீரை வெளியந்தித்தனார் என்னும் புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. வீரைவெளி என்னும் ஊர், புதுச்சேரிப் பகுதியிலுள்ள ஒரு சிற்றூராகும். வீரர்வெளி என்பதே வீரைவெளியென மருவியது என்பர். அப்பகுதியில் வாழ்ந்தவர்களாக இவ்விரு புலவர்களையும் கருத இடமுண்டு. வீரைவெளியனார் பாடல் அகநானூற்றில் முன்னூற்று இருபதாம் பாடலாகவும், வீரைவெளியன் தித்தனாரின் பாடல் அந்நூலில் நூற்று எண்பத்தெட்டாம் பாடலாகவும் காணப்படுகின்றன. இவ்விருவரும் ஒருவரே எனக்கருதுவாரும் உண்டு.

அரியாங்குப்பம் ஆற்றால் அரணிட்டுக் காக்கப்படும் அரிக்கமேட்டுப் பகுதியில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தித் தொடர் ஆய்வு செய்வதால் பழந்தமிழகத்தின் பெருமையையும் அயல்நாட்டுடன் கொண்டிருந்த கப்பல் வழி வணிகத்தையும் நிலைநாட்ட முடியும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இடத்தை தொல்பொருள் குறித்து ஆய்வும் , குறிப்புகளை சேகரிக்கும் திட்டப்பணியிலும் செயல்பட்டு வருகிறேன் ....

கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் அளவிற்கு பூமிக்கு நெடுக புதைந்துள்ள ஒரு மாபெரும் நகரம் . அருகிலுள்ள ஆற்றிலும் மறைந்துள்ளது .

ஆச்சரியக்கத்தக்க புகைப்படங்கள் : http://proudtobeatamil.blogspot.in/2012/05/arikamedu-unrevealed-history.html

[ மேலும் தகவல்களுக்கு : http://www.proudtobeatamil.blogspot.in/ ]

( மனமார்ந்த நன்றி : முனைவர் இளங்கோ , திரு.இராச.தியாகராசன் , அறிஞர் சு.வேல்முருகன் அவர்கள் , பொறிஞர்.பாலசுப்ரமணியன் அவர்கள், Mr.SURESH Kumar ( AHS ) ........ )

thanks to

Tuesday, December 3, 2013

ராக்கெட் உருவான வரலாறு (பாகம் - 2)


ராக்கெட் உருவான வரலாறு (பாகம் - 2), 


இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...



வெர்னர் வான் பிரவுன் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த ராக்கெட் விஞ்ஞானி;


அனைவருக்கும் வணக்கம், வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றால் 1799 ஆம் ஆண்டு ஸ்ரீ ரெங்கப்பட்டினத்தில் (Srirangapatna, Karnataka) நடந்த நான்காவது ஆங்கிலோ – மைசூர் யுத்தத்தில் (Forth Anglo – Mysore War, 1798 – 1799) திப்பு சுல்தான் வீழ்த்தப்பட்டதும் அவரது அரண்மனைக்குள் புகுந்த ஆங்கிலேயப்படைகள் அங்கு எரிந்த மற்றும் எரியாத ராக்கெட்டுகள் என்று எதையும் விட்டுவைக்காமல் ஒட்டு மொத்தமாக 9700 - க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை கைப்பற்றியது. திப்புவின் அரண்மனையில் அமைக்கப்பட்டிருந்த ஓரியண்டல் லைப்ரரி (Oriental Library) என்ற நூலகத்தையும் விட்டுவைக்காத ஆங்கிலப்படைகள் அங்கிருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் ராக்கெட் தயாரிப்பு சம்மந்தமான ஆய்வுக்குறிப்புகள் மற்றும் தொழில்சீர்திருத்தம் பற்றிய திப்புவின் பல்வேறு நூல்கள் ஆகியவற்றை ஒன்றுவிடாமல் அள்ளிச் சென்றது.
 
இங்கிலாந்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும் திப்புவின் அரண்மனையிலிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நூல்களின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டவைதான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். என்னைப் பொருத்தவரை ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துச் சென்ற விலைமதிக்க முடியாத பொக்கிஷம் என்னவென்றால் கோகினூர் வைரம் இல்லை. திப்புவின் நூலகங்களில் இருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நூல்கள் தான் என்பேன். திப்புவின் ராக்கெட் தயாரிப்பு சம்பந்தமான ஆய்வுக்குறிப்புகளைக் கொண்டு தனது ராணுவத்திற்கு தேவையான ராக்கெட்டுகளை தயாரிக்க விரும்பிய இங்கிலாந்து அரசு அதற்காக அப்போது இங்கிலாந்தில் புகழ்பெற்று விளங்கிய கண்டுபிடிப்பாளர் (Inventor) மற்றும் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான சர் வில்லியம் காங்கிரிவ் (Sir William Congreve, 1772 – 1828) என்பவரை பணியமர்த்தியது.

தொடர்ச்சியாக சில ஆய்வுகளை மேற்கொண்ட வில்லியம் காங்கிரிவ், திப்பு சுல்தானின் தயாரிப்பு முறைகளில் இருந்த சில அடிப்படை தவறுகளை களைந்து, திப்புவின் ராக்கெட்டை மேம்படுத்தி 1804 ஆம் ஆண்டு காங்கிரிவ் என்ற ராக்கெட்டை (Congreve Rocket) வடிவமைத்தார். பதினாறு அடி நீளம் கொண்ட மூங்கில் கம்புகளின் முனையில் கட்டி ஏவப்பட்ட காங்கிரிவ் ராக்கெட்டுகள் கிட்டத்தட்ட ஒன்பது கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டவையாக இருந்தது. தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே 1800 – களில் தொடர்ச்சியாக நடந்த பல யுத்தங்களில் (War of 1812, battle of Bladensburg – 1814, battle of Baltimore – 1814) இங்கிலாந்து ராணுவத்தினரால் அமெரிக்க படைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.

 


தொடர்ந்து இங்கிலாந்திற்கும் பிரான்ஸுக்கும் இடையே, 1815 ஆம் ஆண்டு நடந்த வரலாற்று சிறப்புமிக்க வாட்டர்லூ (Battle of Waterloo, 1815) என்ற யுத்தத்தில் இங்கிலாந்து ராணுவத்தால் பயன்படுத்தப்பட காங்கிரிவ் ராக்கெட்டுகள், அப்போது பிரான்ஸ்சை ஆட்சி செய்து வந்த நெப்போலியனை (Napoleon, 1769 – 1821) சரணடையச் செய்யும் அளவிற்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகுதான் காங்கிரிவ் ராக்கெட்டுகளின் புகழ் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தது. தொடர்ந்து மற்றுமொறு இங்கிலாந்து கண்டுபிடிப்பாலரான வில்லியம் ஹாலே (William Hale British Inventor, 1797 – 1870) என்பவர் குச்சிகளின்றி இயங்கும் அதாவது தற்போது தாக்குதல் விமானங்களில் (Fighter Aircraft) பயன்படுத்தப்படும் தோற்றத்தை ஒத்த ராக்கெட்டுகளை 1844 ஆம் ஆண்டு வடிவமைத்தார். ஹாலே வடிவமைத்த ராக்கெட்டுகள் அமெரிக்க ராணுவத்தினரால் மெக்ஸிகோ படைகளுக்கு எதிராக அமெரிக்க – மெக்ஸிகோ போரில் (American – Mexican War, 1846 – 1848) பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நாடுகளிடையே புகழ்பெற்று விளங்கிய ராக்கெட் தொழில்நுட்பம் ரஷ்ய விஞ்ஞானிகளை தீவிரமாக சிந்திக்க வைத்தது. அமெரிக்க மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் தாக்குதல் ராக்கெட்டுகளை மேம்படுத்துவதில் தங்களது சிந்தனையை செலுத்திக் கொண்டிருக்க, ரஷ்ய விஞ்ஞானிகள் அவர்களிடமிருந்து வேறுபட்டு விண்வெளிப்பயணம் மேற்கொள்ள தேவையான ராக்கெட்டுகளை வடிவமைப்பதில் தங்களது சிந்தனையை செலுத்திக்கொண்டிருந்தனர். இந்நிலையில் விண்வெளியின் தந்தை என்றழைக்கப்படும் ரஷ்ய விஞ்ஞானியான கோன்ஸ்டன்டின் சியோல்கோவ்ஸ்கி (Konstantin Tsiolkovsky, 1857 – 1935) என்பவர் 1903 ஆம் ஆண்டு “The Exploration of Cosmic Space by Means of Reaction Devices”” என்ற தலைப்பில் விண்வெளி வரலாற்றில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.

 


அந்த கட்டுரையில் சியோல்கோவ்ஸ்கி, திட எரிபொருளை (Solid Fuel) விட திரவ எரிபொருள் (Liquid Fuel) தான் ஒரு ராக்கெட்டுக்கு அதிகப்படியான உந்துசக்தியை தரும் என்றும் அப்படிப்பட ராக்கெட்டுகள் மூலமாகத்தான் நாம் விண்வெளிப்பயணம் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார். மேலும் ராக்கெட்டின் உட்சபச்சவேகம் என்பது ஒரு வினாடியில் ராக்கெட் எரிபொருள் எரிந்து வெளியேற்றும் வாயுக்களின் திசைவேகம் மற்றும் ராக்கெட்டின் எடை ஆகியவற்றை சார்ந்து இருக்கும் என்பதையும் தெரிவித்தார். இதுதான் பிற்காலத்தில் ராக்கெட் சமன்பாடு (Rocket Equation, known as Tsiolkovsky Rocket Equation) என்று அழைக்கப்பட்டது. இதன் பிறகுதான் வளிமண்டலத்தை தாண்டி செல்லும் ராக்கெட் தயாரிப்பு பற்றிய ஆய்வுகள் சுறுசுறுப்படைய ஆரம்பித்தது.

ராக்கெட்டுகளில் 1926 ஆம் ஆண்டு வரை திட எரிபொருள் (Solid Fuel which is oxidation Gunpowder or charcoal, coal, wood pellets, grains) தான் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சியோல்கோவ்ஸ்கியின் ஆய்வுகளை அடிப்படையாகக்கொண்டு ராபர்ட் கோட்டர்ட் (Robert Goddard, 1882 – 1945) என்ற அமெரிக்கர் உலகிலேயே முதன் முதலாக திரவ எரிபொருளில் (Robert used Gasoline as fuel) இயங்கும் வகையிலான ராக்கெட்டுகளை 1926 ஆம் ஆண்டு தயாரித்து பரிசோதித்து வெற்றியும் பெற்றார். கிட்டத்தட்ட 34 நான்கிற்கும் மேற்பட்ட சோதனைகளில் ராபர்ட் கோட்டர்ட்டின் ராக்கெட் அதிகபட்சமாக 2.6 கிலோமீட்டர் உயரம் வரை மணிக்கு 885 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்து உலகெங்கும் இருந்த ராக்கெட் விஞ்ஞானிகளை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

சர்வாதிகாரியாக இருந்தாலும் கூட, முதலாம் உலகப்போரில் வீழ்த்தப்பட்ட ஜெர்மனியின் பொருளாதாரத்தை, ஆட்சி பீடத்தில் அமர்ந்த வெறும் நான்கே ஆண்டுகளில் உலகின் முதன்மையான பொருளாதார சக்தியாக மாற்றிக் காட்டிய மிகச்சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவர் அடால்ப் ஹிட்லர் (Adolf Hitler, 1889 – 1945). ஜெர்மனியின் ஆளுகை எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்ற அவரது கனவுதான் உலகில் இரண்டாம் உலகப்போர் (Second World War, 1939 – 1945) ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது என்றால் மிகையில்லை. மற்ற நாடுகளின் மீது தாக்குதலை துவங்குவதற்கு முன்பு தனது ராணுவத்தை நவீனப்படுத்துவது இன்றியமையாதது என்பதை உணர்ந்த ஹிட்லர் அதற்குரிய பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார், அவற்றில் ஒன்று தான் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைதிட்டம்.

திட்டத்தை செயல்படுத்த விரும்பிய ஹிட்லர் அதற்காக 1927 ஆம் ஆண்டு பெர்லினுக்கு அருகில் ஒரு தனி ஆராய்ச்சி மையத்தை (Verein Fur Raumschiffahrt, founded in 1927 & dissolved in 1933) ஜோஹன்னஸ் வின்க்ளர் (Johannes Winkler, 1897 – 1947) என்பவரது தலைமையில் ஏற்படுத்தினார். ஜோஹன்னஸால் ராக்கெட் தயாரிக்கும் திட்டத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டவர் தான் வெர்னர் வான் பிரவுன் (Wernher Von Braun, 1912 – 1977).  சிறுவயதில் இருந்தே ராக்கெட்டுகளின் மீது தீராத காதல் கொண்டிருந்த வெர்னர், ராபர்ட் கோட்டர்ட்டின் கண்டுபிடிப்பு மற்றும் சியோல்கோவ்ஸ்கியின் ஆய்வுக்கட்டுரைகள் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு 1932 ஆம் ஆண்டு எழுபது கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் “A-4” என்ற ஏவுகணைகளை தயாரிப்பதில் வெற்றிகண்டார். ஆனால் ஹிட்லர் தொலைதூர தாக்குதல் ஏவுகனைகள் மீது அதிக நாட்டம் கொண்டிருந்ததால் A-4 ரக ஏவுகணைகள் சோதனை ஓட்டத்தோடு நிருத்திக்கொள்ளப்பட்டது.

 

வெர்னரின் நேரடிப்பார்வையின் கீழ இயங்கிய வல்லுனர்கள் குழு தொடர்ந்து பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு திரவ எரிபொருளை கொண்டு இயங்கும் (Ethanol + liquid oxygen) விண்ணை பிளந்து செல்லும் உலகின் முதல் பிரம்மாண்டமான ஏவுகணையை தயாரித்து 1942 ஆம் ஆண்டு பால்டிக் கடலுக்கு அருகேயுள்ள பீனேமுண்டே (Peenemunde) என்ற இடத்திலிருந்து ஏவியது. அதுவரையில் விளையாட்டு பொம்மையின் தோற்றத்தை போல் இருந்த ராக்கெட்டுகளின் வடிவம் உருமாறி பிரம்மாண்ட வடிவத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 3.56 மீட்டர் உயரமிருந்த V-2 என்று அழைக்கப்பட்ட இந்த ஏவுகணை 1000 கிலோ வெடிபொருளை சுமந்துகொண்டு மணிக்கு 2880 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து 320 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கி தரைமட்டமாக்கும் திறன் கொண்டதாக இருந்தது.

தொடர்ந்து ஜெர்மனியில் 1943 ஆம் ஆண்டு V-2 ரக ராக்கெட்டுகளின் உற்பத்தி மின்னல் வேகத்தில் துவங்கப்பட்டது. தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தின் மீதும், பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மீது ஏவி தாக்கப்பட்டது, தாக்குதலில் 7250-க்கும் மேற்பட்ட ராணுவவீரர்கள் உயிரிழந்தார்கள், இதில் இங்கிலாந்தில் மட்டும் கிட்டத்தட்ட 3000 ராணுவவீரர்கள் உயிரிழந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. பாய்ந்து வந்து தாக்கி கனவிலும் அப்போது நினைத்து பார்த்திருக்காத பேரழிவுகளை ஏற்படுத்திய ஜெர்மனியின் பிரம்மாண்ட ராக்கெட்டுகளை உலக நாடுகள் மிரட்ச்சியோடு பார்த்தன.

 

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் படைகள் தோற்கடிக்கப்பட்டதும் ஜெர்மனிக்குள் புகுந்த அமெரிக்கப்படை வீரர்களும் ரஷ்யப்படை வீரர்களும் ஹிட்லரை தேடினார்களோ இல்லையோ வெர்னரை ஆளுக்கொரு புறமாக மும்முரமாக தேடினார்கள். அமெரிக்க உளவு நிறுவனமும் அமெரிக்க ராணுவ வீரர்களுடன் இணைந்து கொண்டு வெர்னரை தேடும் பணியில் ஈடுபட்டது. ஆப்பிரேசன் பேப்பர்கிளிப் (Operation Paperclip) என்று பெயரிடப்பட்ட இப்பணி அமெரிக்கர்களுக்கு வெற்றியை தேடித்தந்தது அதாவது வெர்னர் அமெரிக்க வீரர்களிடம் சிக்கினார். உடனிருந்த ரஷ்ய வீரர்களுக்கு கூட தெரியாமல் வெர்னர் மற்றும் சில ராக்கெட் வல்லுனர்களை அப்படியே அலேக்காக அமெரிக்கா கடத்தி வந்தது அமெரிக்க உளவு நிறுவனம். ரஷ்யப்படை வீரர்களிடமும் வெர்னர் குழுவில் பணியாற்றிய சில வல்லுனர்கள் சிக்கினார்கள். அப்படி அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களது நாட்டிற்கு கொண்டுவந்த ஜெர்மானிய ராக்கெட் வல்லுனர்களை கொண்டு தங்களது நாட்டிற்க்கு தேவையான ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இறங்கியது.

 

நாம் தாம் வெர்னரையே கொண்டு வந்துவிட்டோமே பிறகென்ன என்று அசால்டாக அமெரிக்கா இருக்க திடீரென்று ரஷ்யா 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4, உலகே அதிரும்படியாய் “ஸ்புட்னிக் – 1 (Sputnik-1)” என்று பெயரிடப்பட்ட உலகின் முதல் செயற்கைகோளை "ஸ்புட்னிக்" என்ற ராக்கெட்டை கொண்டு விண்வெளிக்கு ஏவி நிலைநிறுத்தியது, என்ன நடக்கிறது என்று அமெரிக்கா உணருவதற்கு முன்பு சரியாக முப்பது நாள் இடைவெளியில் அதாவது நவம்பர் 3 - ல் “ஸ்புட்னிக் – 2 (Sputnik-2)” என்ற மற்றொரு செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்தியது ரஷ்யா, ஸ்புட்னிக் – 2 உலகின் முதல் உயிரினம் பரந்த செயற்கைக்கோள் ஆகும். லைகா (Laika) என்ற நாய் அந்த செயற்கைகோளில் பயணித்தது குறிப்பிடத்தக்கது. அதைதொடர்ந்து வெர்னர் தலைமையிலான அமெரிக்க விஞ்ஞானிகள் குழு அமெரிக்காவின் முதல் செயற்கை கோளான எக்ஸ்ப்ளோரர் (Explorer-1) 1958 ஜனவரி-1 ஆம் தேதி விண்ணுக்கு ஏவி விண்வெளிப்போட்டியை உறுதிசெய்தது.

 
அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஏற்பட்ட விண்வெளி பயண போட்டிகள் உண்மையில் ஜெர்மனியில் இருந்து இரண்டாக பிரிந்த ஜெர்மானிய விஞ்ஞானிகளுக்கு இடையே நடந்த விண்வெளிப்போட்டிதானே அன்றி அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே நடந்த போட்டி அல்ல. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மனிதனின் கனவாக இருந்த வளிமண்டலத்தை தாண்டிப்பறக்கும் விண்வெளிப்பயணத்தை நினைவாக்கிய வெர்னர் வான் பிரவுன் இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானி என்றால் மிகையில்லை.

பதிவை பற்றிய உங்களது கருத்துக்களை தவறாமல் பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பர்களே, உங்களது கருத்துக்கள் என்னை மென்மேலும் வளர்த்துக்கொள்ள உதவும், விரைவில் மீண்டும் ஒரு பயனுள்ள பதிவின் வாயிலாக உங்களை சந்திக்கிறேன், நன்றி, வணக்கம் ..!

Friday, November 15, 2013

சச்சின், சச்சின், பை பை சச்சின்..

சச்சின், சச்சின், பை பை சச்சின்..


சச்சின் என்ற தனி நபரின் மலைக்க வைக்கும் சாதனைகள், தேடித்தந்த வெற்றிகள், அவர் மேல் ரசிகர்களும், மற்ற விளையாட்டு வீரர்களும் கொண்டுள்ள அபிமானம் போன்றவற்றைப் பற்றிய புள்ளிவிவரங்களை மேலோட்டமாக தொகுத்தாலே இந்தப் பக்கம் போதாது. ‘கால்பந்து ஜாம்பவான் பீலேவின் ஆயிரத்து281 சர்வதேச கோல்கள், டென்னிஸ் சூப்பர் ஸ்டார் ரோஜர் பெடரரின் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், சர் ஸ்டீவ் ரெட்கிரேவ்சின் 5 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் ஆகியவற்றுக்கு நிகரானது சச்சினின் சாதனை’ என்று மிரர் இதழில் புகழாரம் சூட்டியிருப்பது ஒரு சோறு பதம்.

  2004 ஆம் ஆண்டு...
ஆஸ்திரேலியாவில் விபி கோப்பைத் தொடர் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது...
ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கின் சாதுர்யமான பந்துவீச்சில் சச்சின் ஆட்டம் இழந்தார். மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார் ஹாக். போட்டி முடிந்ததும் சச்சினிடம் சென்ற ஹாக், அந்தப் பந்தை அவரிடம் நீட்டி, ஆட்டோகிராப் கேட்டார். லேசான புன்முறுவலுடன் பந்தை வாங்கிய சச்சின், தன் கையெழுத்தை அதில் பதித்தார். கூடவே ஒரு வாசகமும். அதைப் படித்துப் பார்த்த ஹாக், பதிலேதும் சொல்லாமல் அர்த்தமுடன் சிரித்துவிட்டு விலகுகிறார். அந்தப் பந்தில் சச்சின் எழுதியிருந்த வாசகம் இதுதான்...
‘இனி இதுபோல் நடக்காது!’ (‘ஐகூ ஙிஐஃஃ Nஉஙஉகீ ஏஅககஉN அஎஅஐN!’)
பந்தில் தான் பதித்ததையே அடுத்த போட்டிகளில் களத்தில் பதிவு செய்தார் சச்சின். அதன் பின் நடந்த 21 போட்டிகளில் ஹாக் பந்தை எதிர்கொண்ட சச்சின், ஒருமுறை கூட அவரது பந்தில் அவுட்டாகவில்லை. இதுதான் சச்சின்.

இதுபோன்ற புள்ளிவிவரங்களும், பட்டியல்களும் கிரிக்கெட்டில் மட்டுமல்ல, வேறு பல விளையாட்டுகளிலும் உள்ள சாதனையாளர்களுக்கும் உண்டுதான். ஆனால், சச்சின் என்ற ஒரு மனிதரின் மேல் மட்டும் ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு, மரியாதை..? எதிர்பார்த்த ஓய்வுதான் என்றாலும் ஏன் அதை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறது..? இப்படியான அத்தனை கேள்விகளுக்கும் இருப்பது ஒரே பதில்தான். சச்சினின் தனி மனித ஒழுக்கம், விடாமுயற்சி, தளராத தன்னம்பிக்கை, உண்மையான தேசப்பற்று, பணத்திற்குப் பணியாத நேர்மை..!

அவரது சாதனைகளை எல்லாம் ஒரு ஓரமாக வைத்துவிட்டுப் பார்த்தால், ஒரு விக்கெட்டை வீழ்த்தினால்கூட கங்கனம் நடனம், அரை சதத்தைக் கடந்ததும் வானத்துக்கும் பூமிக்குமாக துள்ளிக் குதிப்பது, அவுட் கொடுக்கும் நடுவர்களை முறைத்துப் பார்த்தபடி நடப்பது, அரைவேக்காட்டுப் புகழ் வெளிச்சத்தில் சர்ச்சைகளில் சிக்குவது என சுழலும் இன்றைய கிரிக்கெட் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கிறது. புதுத் தலைமுறை வீரர்கள் சச்சின் அளவுக்கு சாதனைகள் படைக்க வேண்டாம். அவர் சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கும் பாடங்களை பின்பற்றினாலே போதும்.

ஆரம்பக் காலத்தில் படிப்பில் மார்க் வாங்குவதை விட, கிரிக்கெட்டில் தான் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார் சச்சின் என்பதை உணர்ந்த அவரது அப்பா, மகனை கிரிக்கெட்டில் முழுமையாக ஈடுபட அனுமதியும்<, ஊக்கமும் அளித்தார். அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல ஆரம்பித்தார் சச்சின். அப்போது அவரின் நண்பர்கள் பலர் பயிற்சி வகுப்பை கட் அடித்துவிட்டு, பக்கத்தில் உள்ள வடாபாவ் கடைக்கு செல்வது வழக்கம். ஆனால், தந்தை தன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பும், சுதந்திரமும் கொடுத்திருப்பதை தவறாக கையாள விரும்பாத சச்சின், ஒரு நாளும் அதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டதில்லை.

இத்தனை சாதனைகள் புரிந்திருந்தாலும், அவை அத்தனைக்கும் அடித்தளமாக சச்சின் சுட்டிக் காட்டுவது தனது ஒழுக்கத்தைத்தான். கிரிக்கெட் மேல்கொண்ட தீராக்காதலின் காரணமாக, தனது உணவு பழக்கங்களில் கூட ஒரு ஒழுக்கத்தை கடைபிடித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா உங்களால். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். காரணம் இதை சொல்லியிருப்பது சாட்சாத் சச்சினேதான்.

“அகமதாபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தின் போது, அங்குள்ள சூடான தட்ப வெப்பத்தை சமாளிக்கவேண்டும் என்பதற்காக போட்டிக்கு முன் ஒரு வார காலத்திற்கு காரமான மற்றும் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து விட்டேன். இதனால் உடல் சூடு அதிகரிக்காது, அந்த இடத்தில் விளையாட மனதோடு, உடலும் பொருந்திப்போகும். சென்னையில் விளையாடும்போது, அப்போது வெயில் காலமாக இருந்தால், நள்ளிரவில் அலாரம் வைத்து எழுந்து நிறைய தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் உறங்கச் செல்வேன். இதனால் போட்டியின் போது உடலில் நீர் வற்றிப்போதல் குறைந்து, சக்தி பாதுகாக்கப்படும். இப்படி ஊருக்கு ஏற்ப என் உணவு வழக்கங்களை மாற்றியமைத்துக் கொள்வேன்” என்கிறார் சச்சின்.

ரசிகர்களிடமும், மீடியாக்களிடமும் பாந்தமாக நடந்துகொள்வதில் சச்சினுக்கு நிகர் எவருமில்லை. “பத்திரிக்கைகளிலும், புத்தகங்களிலும் என் புகைப்படமோ, செய்தியோ வருவது இன்றுவரை தன் குடும்பத்தினருக்கு பெரிய சந்தோஷம் தரும் விஷயமாகவே இருக்கிறது” என்கிறார் டைம் பத்திரிகையின் அட்டையில் கூட இடம் பிடித்து விட்ட சச்சின். இப்படி தன் குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் சச்சின், தன் குருவுக்குக் காட்டும் மரியாதையோ அபரிதமானது.

ரமாகாந்த் அச்ரேகரிடம் கிரிக்கெட் கோச்சிங் எடுத்தபோது, முதல் ஆளாக மைதானத்துக்கு வந்து, கடைசி ஆளாகப் போவார்.
பாராட்டும், புகழும் கிடைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், ஆரம்ப காலத்தில் தன்னை மெருகேற்றிய கோச் அச்ரேக்கரை நன்றியுடன் நினைக்க மறந்ததில்லை. இதை பல மேடைகளில் பதிவும் செய்திருக்கிறார். எந்த நாட்டிற்கு விளையாடச் சென்றாலும், அதற்குமுன் ரமாகாந்த் அச்ரேக்கரை சந்தித்து ஆசி பெற்று விட்டுத்தான் செல்வார்.

ரிச்சர்ட்ஸ், லாரா, அன்வர், ஜெயசூர்யா, கங்குலி என கிரிக்கெட் உலக ஜாம்பவான்களின் கனவாக இருந்து, கடைசி வரை நிறைவேறாமல் போன 200 ரன்களை முதல் வீரராக தொட்டார் சச்சின். அதுவும் மிகச்சிறந்த அணியான தென்னாப்ரிக்காவுக்கு எதிராக என்பது கூடுதல் சாதனை. ஸ்டெயினும், பார்னலும் உசுப்பேற்றியபோதும் மவுனம் காத்து, தனது ரன் மழையை பதிலாகக் கொடுத்தார். காலீசின் பந்துவீச்சில் வலது புறம் சென்று இடப்பக்கமாக அவர் எடுத்த 4 ரன்கள் இன்றுவரை பந்துவீச்சாளர்களுக்கு புரியாத புதிர்.

சச்சின் 194 ரன்களைக் கடந்த அந்த பெருமைக்குரிய நிமிடத்தில் கேலரியில் இருந்த ரசிகர்களும், டிரசிங் ரூமில் இருந்த சக வீரர்களும் ஆர்ப்பரிக்க, முகத்தில் எந்த சலனமும் இல்லாமல், மட்டையை உயர்த்தி ஆரவாரத்தை ஏற்றுக் கொள்ளாமல், அடுத்த பந்தை எதிர் நோக்கி பார்வை குவித்து சச்சின் நின்ற அந்த வினாடி... சாதனை உச்சத்தின் எளிமை. போட்டி முடிந்தபின், ‘இந்த இரட்டை சதத்தை இந்திய மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்று அவர் சொன்னபோது, இந்தியா பெருமிதத்தில் நெகிழ்ந்துதான் போனது.

 
 இவை எல்லாவற்றையும் இன்றைக்கு கிரிக்கெட் உலகில் கால் பதித்திருக்கும் இளம் வீரர்கள், சச்சினைப் பார்த்துக் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் ஒன்று இருக்கிறது. அது விளம்பரப் படங்களில் நடிப்பதற்கான வரையறை அல்லது கொள்கை. கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும், மது மற்றும் புகையிலை சார்ந்த எந்த விளம்பரங்களிலும் நடிப்பதில்லை என்பதில் மிகத் தீர்மானமாக இருந்தார், இருக்கிறார். வீதியில் கிரிக்கெட் விளையாடும் கோடானுகோடி சிறுவர்களின் ரோல்மாடலாக தான் இருப்பதை உணர்ந்திருக்கும் சச்சின் எக்காரணம் கொண்டும், அவர்கள் தடம் புரள தான் காரணியாக இருந்துவிடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறார். இந்த உறுதியே 20கோடி தருகிறோம் என்ற ஒரு பீர் நிறுவனத்தின் விளம்பர அழைப்பை நிராகரிக்கச் செய்தது. “என்னுடைய ரசிகர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். அவர்களை தீயப்பழக்கங்களுக்கு இட்டுச்செல்லும் எந்த விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன்” என்று ஓய்வு அறிவித்தபின்னரும் சொல்லும் இந்த மன திடம் பிற வீரர்களுக்கு வருமா என்பது சந்தேகம்.

வெளியுலக பிம்பத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் போதை வஸ்துக்கள் பக்கம் தலைவைத்து படுக்காதவர். இத்தனை ஆண்டுகால அவரது வாழ்க்கைப் பயணத்தில் இதுவரை அவர் பார்ட்டிகளில் கலந்துகொண்டது போன்றோ, நடிகைகளுடன் குலாவுவது போன்றோ ஒரு துணுக்குக் கூட வந்தது இல்லை என்பது இதற்கான சான்று.

சீசரின் மனைவி மட்டுமல்ல, சச்சினும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டே இருந்து வந்திருக்கிறார். சூதாட்ட சர்ச்சைகள் இந்திய கிரிக்கெட் அணியை சூறையாடியபோது, அந்தப் புயலால் எந்த பாதிப்பிற்கும் உள்ளாகாமல் இருந்த நேர்மை நாயகன். அந்த காலகட்டத்தில் ‘அவர்’, ‘இவர்’ என வீரர்களைப் பற்றிப் பூடகமாக உலா வந்த செய்திகளைப் படித்த மக்கள்கூட, மறந்தும் அந்த அவர், இவரில் சச்சினைப் பொருத்திப் பார்க்கவில்லை. ஆயிரக்கணக்கான ரன்கள், முறியடிக்க முடியாத சாதனைகள் என சச்சின் சுமந்திருக்கும் மணி மகுடத்தில் வைரமாக ஜொலித்துக் கொண்டிருப்பது இந்த நேர்மைதான்.

சக வீரர்கள், எதிரணியினர், ரசிகர்கள் என சகல தரப்பினரையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கும் சச்சின், போட்டி நடுவர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தத் தவறுவதில்லை. ஸ்டெம்புகள் எகிறினாலும், மூன்றாவது நடுவரின் முடிவுக்காக காத்திருக்கும் வீரர்களுக்கு மத்தியில், பந்தை தைத்திருக்கும் நூலின் இழை தன் பேட்டில் உரசிச் சென்றதாக உணர்ந்தாலே கிளவுஸ்களை கழற்றிவிட்டு, மட்டையை கைகளுக்குள் இடுக்கிக் கொண்டு வானம் பார்த்த சோகப் பார்வையுடன் களத்தைவிட்டு வெளியே நடக்கத் தொடங்கிவிட்டார். ‘ஹவுஸ்சாட்...’ என்ற பந்துவீச்சாளரின் குரல் எழும்பும் முன்னே, பந்தின் பாதை நடுவரின் மனக்கண்ணில் மீண்டும் விரியும் முன்னே மைதானத்தைவிட்டு வெளியே போய்விடுவார். கிரிக்கெட் உலகின் கெடுபிடி நடுவர்களைக் கூட வியந்து பார்க்க வைத்த சச்சினின் நன்னடத்தை இது.

சிறுவர்களின் ஆதர்ச நாயகனாக வலம் வரும் சச்சின் பதிலுக்கு அவர்கள் மீது காட்டும் அன்பு அலாதியானது. குழந்தைகள் ஆட்டோகிராப் புத்தகங்களை நீட்டினால் எத்தனை அவசர வேலையாக இருந்தாலும், நின்று அவர்களுக்கு கையெழுத்திட்ட பிறகே நகர்வார். 



அதேபோல் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மன நலம் குன்றிய குழந்தைளை எங்கே பார்த்தாலும், அவர்களின் கன்னங்களைச் செல்லமாக தட்டிக்கொடுத்து கொஞ்சுவார். தனது மாமியார் நடத்திவரும் அப்னாலயா என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆண்டுக்கு 200 ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறார் என்பது சச்சினின் ஈர முகம்.
 
200வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சச்சினை நாம் களத்தில் பார்க்க முடியாது. உடல் முழுக்க பெயிண்ட்டால் சச்சின் என எழுதி தேசியக் கொடியை பறக்கவிட்டுக் கொண்டிருக்கும் அந்த தீவிர ரசிகரையும் பார்க்க முடியாது. 

லிட்டில் மாஸ்டர் என்ற பதாகைகளையும் பார்க்க முடியாது. ஆனால் தன் நடத்தையால், பாடங்களால் இன்னும் பல சச்சின்கள் உருவாவதற்கான விதைகளை ஊன்றிவிட்டு, அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குகிறார் சச்சின்.
பை பை சச்சின்..!
- கர்ணா.



நன்றி- சண்டேஸ்பெஷல், தினமலர்.

Wednesday, November 13, 2013

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டின் 10 முக்கிய தருணங்கள் !!!

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டின் 10 முக்கிய தருணங்கள் !!!


உலக கிரிக்கெட்டிற்கு பல்வேறு மட்டத்தில் பெரிய பங்களிப்பு செய்த மாஸ்டர் பேட்ஸ்மென் மற்றும் உலகின் தலை சிறந்த பேட்ஸெமெனாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டின் 10 முக்கியக் கணங்களை தொகுக்கலாம். இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக் மாறுபடினும், இந்த 10 கணங்களை சச்சினே மறக்கமாட்டார் எனலாம்.

1. ஏப்ரல் 2, 2011 உலகக் கோப்பை 2011:

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் எப்போதுமே சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்துபவர். 2011 உலகக் கோப்பையின் 9 போட்டிகளில் 482 ரன்களை எடுத்தார் சச்சின் 120 ரன்களை இங்கிலாந்துக்கு எதிராக அவர் எடுத்ததுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆனால் அந்தப்போட்டி டிராவானது. உலகக் கோப்பை 2011-இல் சச்சின் 2 அரைசதம், 2 சதம் எடுத்தார். 52பவுண்டரிகள் 8 சிக்சர்கள் மற்றும் 91.98 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட்.

இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக சச்சினே வெற்றி ரன்களை அடிக்க நினைத்திருப்பார் ஆனால் 18 ரன்களில் அவர் வீழ்ந்தார். பிறகு கம்பீர், தோனி இந்திய அணீயை வெற்றிபெறச் செய்தனர். இதனை தன் கிரிக்கெட் வாழ்வின் சிகரமான கணம் என்று சச்சினே பின்பு அறிவித்தார்.

2. சச்சினின் 100வது சதம்!

இது சச்சினுக்கு ஒரு பெரிய தலைவலியாக விடிந்தது. ஆனால் அவர் அத்தனை நெருக்கடிகளையும் விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டு ஆசியக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக இந்த 100வது சதத்தை எடுத்து முடித்தார். 

தோல்வி சச்சினுக்கு பிடிக்காத ஒன்று ஆனால் இந்த போட்டியில் சச்சின் உலக சாதனை புரிந்தும் இந்தியா தோல்வி தழுவியது. சச்சினுக்கு தோல்வி பிடிக்காது என்பது அவர் கேப்டனாக இருந்த காலத்தில் அடைந்த அவரது எரிச்சல் நிறைந்த வாசகங்களே தெரிவிக்கும். ஆனால் சாதனை சதம் என்பது சாதனை சதம்தானே!

3. பிராட்மேனின் கனவு அணியில் சச்சின் இடம்பெற்றது!

ஆஸ்ட்ரேலிய லெஜென்ட் டான் பிராட்மேன் அனைத்து கால சிறந்த அணியை அறிவித்தார். பிரையன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்களுக்கே இந்த அணியில் இடமில்லை. 


ஆனால் பிராட்மேன் சச்சினை தேர்வு செய்திருந்தார். 69 வீரர்களை டான் பிராட்மேன் அலசி 11 பேரைத் தேர்வு செய்தார். இன்டக் 69 பேரில் சுனில் கவாஸ்கர், கபில்தேவ் ஆகியோரும் இருந்தனர்.

4. 2003 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த 98 ரன்களை மறக்க முடியுமா?
2003 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் கடினமான காலக்கட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றேயாகவேண்டிய நெருக்கடியில் இருந்தது. பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 270 ரன்களுக்கு மேல் குவித்தது. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர் ஆகியோர் இருக்கும்போது இந்தியா ஜெயிக்குமா என்று பலரும் பேசினர். ஆனால் நடந்தது என்ன? சச்சின், சேவாக் இருவரும் அடித்த அடியில் முதல் 11 ஓவர்களில் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. சச்சின் ஷோயப் அக்தரை அடித்த அந்த அப்பர் கட் சிக்சரை இன்னும் மறக்க முடியாது. 
சச்சின் ஷோயப் அக்தரை அடித்த அந்த அப்பர் கட் சிக்சர

98 ரன்கள் எடுத்தார் சச்சின் இந்தியா வெற்றி பெற்றது. சச்சினின் மிகச்சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று.

5. உலக சாதனை இரட்டைச் சதம்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் இந்த அபார இன்னிங்ஸை ஆடினார். ஒருவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நினைத்து கூட பார்க்கமுடியாது டேல் ஸ்டெய்ன், மோர்கெல் இருக்கும்போது எங்கிருந்து 50 ரன் வரும் என்றே கூற முடியாது. ஆனால் 147 பந்துகளில் 200 ரன்களை விளாசினார் சச்சின் 25 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடித்தார். இந்தியா உலக சாதனை 401 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்கா 153 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. இதற்கு முன்னர் நியூசீலாந்தில் 167 ரன்களையும் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் 175 ரன்களையும் எடுத்தபோதே சச்சின் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

6. 1999 உலகக் கோப்பையில் உணர்ச்சிகரமான சதம்!

டெண்டுல்கரின் தந்தை இறந்து போன சமயம், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சச்சின் விளையாடவில்லை. 


பிறகு கென்யாவுடன் விளையாட நேரிட்டது. இதற்கு முன்னர் 21 ஒருநாள் சதம் எடுத்திருந்தார் சச்சின், இந்த சதம் தந்தை இறந்தபிறகு உடனடியாக எடுத்த சதம் என்பதால் அவரது வாழ்வின் உணர்ச்சிகரமான சதமாக இது அமைந்தது. டெணுல்கர் இதில் 140 ரன்களை எடுத்தார்.

7. 1998ஆம் ஆண்டு ஷார்ஜாவில் அடித்த மணல் புயலும் சச்சின் புயலும்

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக எடுத்த் 143: இறுதிக்கு செல்ல இந்திய இத்தனி ரன்களை எடுக்கவேண்டும் என்பது நிர்பந்தம். பெவன் சதம் எடுக்க ஆஸி. 284 ரன்களை எடுத்தது. இந்தியா 285 ரன்களை எடுத்தா பிரச்சனையில்லை. அல்லது தோற்றால் குறைந்தது 254 ரன்களை எடுத்திருக்கவேண்டும். ஆனால் திடீரென மைதானத்தில் மணற் சூறைக்காற்று வீச இந்தியா வெற்றி பெற 276 ரன்களும் தகுதி பெற 237 ரன்களும் தேவை. மீண்டும் களமிறங்கிய சச்சின் தகுதி பெறுவதைக் குறிக்கோளாக வைக்காமல் உண்மையான வெற்றிக்காக ஆடினார். 


காச்பரோவிச்சை அடித்த சிகர்களை மறக்க முடியுமா கடசியில் ஆடிய பேயாட்டத்தை மறக்க முடியுமா? 131 பந்துகளில் 143 ரன்களை விளாசினார் சச்சின். கடைசியில் நடுவரின் மோசமான தீர்ப்புக்கு அவுட் ஆனார். இல்லையெனில் உண்மையில் இந்தப்போட்டியில் இந்தியா வெற்றியே கூட பெற்றிருக்கும்.

8. அதே ஷார்ஜா, இறுதிப் போட்டி சதம்!

24 ஏப்ரல் 1998 சச்சினின் பிறந்த தினம். அன்றைய தினம் அடித்த சதம் மறக்க முடியாதது. ஆஸ்ட்ரேலியா முதலில் பேட் செய்து 121/5 என்று திணறி பிறகு ஸ்டீவ் வாஹ், டேரன் லீமேன் இன்னிங்ஸ்கள்லினால் 272 ரன்கள் எடுத்தது. இந்தியா துரத்தக் களமிறங்கியவுடன் சச்சின் போட்டுத் தக்கவாரம்பித்தார். காஸ்பரோவிச்சை இரண்டு சிகர்கள் விளாசி அடிதடியைத் தொடங்கிய சச்சின்.


 ஷேன் வார்ன் இதன் பிறகுதான் சச்சின் தனக்கு பயங்கர சொப்பனங்களை கொடுக்கிறார் என்றார். 

சச்சின் 134 ரன்கள் எடுத்தார் அந்தப்போட்டியில் ஒரு அபாரமான ஒருநாள் இன்னிங்ஸ் இதுவாகும்.

9. 2008ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலிய மண்ணில் முதல் ஒருநாள் சதம்

சச்சின் டெண்டுல்கர் அவ்வளவு ஆட்டங்களை ஆடியிருந்தாலும் ஆஸ்ட்ரேலிய மண்ணில் அவரது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த 93 ரன்களாகவே இருந்தது. தோனி தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் நுழைந்தது. இந்தப் போட்டியில் சச்சின் 126 ரன்களை எடுத்து இறுதி வரை ஆடி தனி மனிதனாக ஆஸ்ட்ரேலியா பந்து வீச்சை அடித்து நொறுக்கி வெற்றிபெறச்செய்தார். 


ஆஸ்ட்ரேலியா 239 ரன்களை எடுத்தது. ரோகித் ஷர்மாவுடன் இணைந்து சச்சின் 123 ரன்களை சேர்க்க ரோகித் 66 ரன்களை எடுத்தார். சச்சின் தனது 42வது ஒருநாள் சதத்தை எடுத்தார். இந்தியா வெற்றி பெற்றது.

அதே சிபி தொடர் இரண்டாவது இறுதிப் போட்டி சச்சின் அபாரம்!

முதல் போட்டியில் தோல்வியடைந்த கடுப்பில் ஆஸ்ட்ரேலியா இரண்டாவது இறுதிப்போட்டிக்கு வந்தது. ஆட்டம் அவர்களுக்கு சாதகமான பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தது சச்சின் மற்றொரு சதத்திற்கான அபார இன்னிங்சை ஆடினார். சிறந்த கவர் டிரைவ்கள், அப்பர் கட்கள், புல் ஷாட்கள் என்று தூள் கிளப்பினார். ஆனால் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இது சச்சினின் டாப் ஒருநாள் இன்னிங்ஸ் என்பதில் ஐயமில்லை. இந்தியா 258 ரன்கள் எடுக்க ஆஸ்ட்ரேலியா 249 ரன்களி முடிந்தது. 



முதன் முறையாக சிபி தொடர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா சாம்பியன் ஆனது.

10. சச்சின் முதன் முதலாக ஒருநாள் போட்டியில் துவக்கத்தில் களமிறங்கிய போட்டி!

27 மார்ச் 1994- சச்சின் ஆக்லாந்தில் நியூசீலாந்துக்கு எதிராக அவராகவே கேட்டு வாங்கி துவக்கத்தில் களமிறங்கினார். சச்சின் என்றால் யார் என்றும் அவர் மீது ஒரு பயமும் ஏற்படுத்திய இன்னிங்ஸ் ஆகும் இது; பந்து வீச்சுக்கு சாதகமான கரடு முரடு பிட்சில் நியூசீலாந்து அணி 142 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா களமிறங்கும்போது இந்தப் பிட்சில் இந்தியா கஷ்டம் திக்குமுக்காட வேண்டும் என்றெல்லாம் வர்ணனையாளர்கள் தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் சச்சின் துவக்கத்தில் களமிறங்குவார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதுதான் நடந்தது.

 
டேனி மாரிசன், பிரிங்கிள், அடாது மழை பெய்தாலும் விடாது டைட்டாக வீசும் கெவின் லார்சன் என்று நியூசீ தன்னம்பிக்கைய்டந்தான் இருந்தது. ஆனால் என்னாவாயிற்று? சச்சின் புயல் போல் ஒரு இன்னிங்சை ஆடினார். 49 பந்துகளில் 82 ரன்களை விளாசினார் அதில் 15 பவுண்டரி 2 சிக்சர்கள். 13 ஓவர்களில் ஸ்கோர் 100-ஐ கடைந்தது. இந்தியா 23 ஓவர்களில் 143 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அப்போது துவங்கிய துவக்க வீரர் பயணம் பல அதிரடி இன்னிங்ஸ்களை கண்டபிறகே ஓய்ந்தது.

அதேபோல் என்றைக்கும் மறக்க முடியாத சச்சினின் முதல் ஒருநாள் சதம்!

சுமார் 78 போட்டிகளில் சதம் எடுக்க முடியாமல் 80களில் ஆட்டமிழந்த சச்சின் துவக்க வீரராக களமிறங்கி சில போட்டிகளேயாகிருந்தன. அப்போது இலங்கையில் சிங்க டிராபி கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 9 செப்டெம்பர் 1994ஆம் ஆண்டு சச்சின் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக தன் முதல் ஒருநாள் சததை எடுத்தார். டாஸ் வென்று இந்தியா முதலில் பேட் செய்ய சச்சின், பிரபாகர் களமிறங்கினர். கிளென் மெக்ராவை சச்சின் புரட்டி எடுத்தார். அவர் 6 ஓவர்களில் 41 ரன்களை கொடுக்க கட் செய்யப்பட்டார். மெக்டர்மட் பந்தை பிளிக்கில் சச்சின் சிக்ஸ் அடித்ததை மறக்க முடியாது. 



8பவுன்டரி 2 சிகர்களுடன் அவர் 110 ரன்களை எடுத்த இன்னிங்ஸில் ஷேன் வார்னும் சாத்து வாங்கினார். இந்தியா 246 ரன்களை எடுக்க ஆஸ்ரேலியா 215 ரன்களுக்குச் சுருண்டு காலியானது. 

தேங்க்ஸ் டு 
கூகுளே இமேஜ்'.
அண்ட் 
வெப்துனியா ..

ரஹ்மான்பாஎத்...

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் சாதனைகள்

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் சாதனைகள்....


ஒருநாள் கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த, இதுவரை இல்லாத இனிமேலும் அவரது சாதனைகளை முறியடிக்கக் கடினமாகும் ஒரு வீரர் சச்சின் டெண்டுல்கர் இவர் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை எனலாம். அந்த வகையில் அவரது ஒருநாள் கிரிக்கெட் சாதனைகளைப் பற்றிப் பார்ப்போம்:

463 ஒருநாள் போட்டிகளில் 44.83 என்ற மிகச்சிறந்த சராசரியுடன் 18,426 ரன்களை குவித்துள்ளார் ரன் மெஷின், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.

அதிக போட்டிகள் : 463

அதிக ஆட்ட நாயகன் விருதுகள் : 62

ஒருநாள் தொடர் நாயகன் விருதுகள் : 15

அதிக நாள் கிரிக்கெட்டில் இருந்தது : 22 ஆண்டுகள் 91 நாட்கள்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்களுக்கும் மேல், 154 விக்கெட்டுகள், 140 கேட்ச்கள் என்று அரிய டிரிபிள் சாதனை சச்சினுக்கேயிரியது.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் : 18,426 ரன்கள்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்: 49



ஒரே அணிக்கு எதிராக அதிக சதங்கள் : ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 9 சதங்கள்!

இரண்டு அணிகளுக்கு எதிரகா அதிக ஒருநாள் சதங்கள்: ஆஸி.க்கு எதிராக 9, இலங்கைக்கு எதிராக 8;.

 

50க்கும் மேலான ரன்கள் அதிக முறை: 145; 49 சதங்கள், 96 அரை சதங்கள்.

ஒரே ஆண்டில் அதிக ஒருநாள் போட்டி ரன்கள்: 1894 ரன்கள் (சராசரி 65.31), 34 போட்டிகள் இது நடந்தது 1998ஆம் ஆண்டு.

ஒரே ஆண்டில் 1000 ரன்கள் : சாதனையான 7 முறை.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக 90-கள் - 18 முறை; இது சதமாகியிருந்தால் இன்று சச்சின் சாதனைப் பட்டியல் மேலும் உக்கிரமாகக் காட்சியளிக்கும்.

அதிக பவுண்டரிகள் - 2016 பவுண்டரிகள்

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள்: 3077 ரன்கள், 71 போட்டிகள், சராசரி 44.59.

இலங்கைக்கு எதிராக அதிகபட்ச ரன்கள் : 3113, (43.84 சராசரி) - 57 போட்டிகள்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சதங்கள்: 5

பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் : 2,556.

 
பாகிஸ்தானுக்கு எதிராக அதிக சதங்கள்- 5 (லாராவுடன் பகிருந்து கொள்ளும் ஒரே சாதனை)

ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2010ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி 200 ரன்களை குவித்து சாதனை படைத்தார் சச்சின்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள்: 2,278 சராசரி 56.95, 45 போட்டிகள்.

உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதம் - 6 (44 இன்னிங்ஸ்)

ஒரே உலகக் கோப்பையில் அதிகபட்ச ரன்கள்: 673 ரன்கள் 2003 உலகக் கோப்பை, சராசரி 61.18 - 11 ஆட்டங்கள்.

இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தம் 500 ரன்களுக்கும் அதிகமாக ஸ்கோர் செய்த ஒரே பேட்ஸ்மென் 2003-இல் 673 ரன்கள் 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் 523 சராசரி 87.16.




bye bye sachin..