Thursday, February 27, 2020

சந்திர சேகர் 'ஆசாத்'

பகத்சிங்கிற்கு பயிற்சி கொடுத்த ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனமாக வாழ்ந்த அந்த மாவீரன் யார் தெரியுமா? 

           ந்திர சேகர் 'ஆசாத்' 

இந்தியாவின் சுதந்திர போராட்டம் என்பது நீண்ட வரலாற்றைக் கொண்டது. பல்லாயிர கணக்கானோர் தங்கள் உயிரைக் கொடுத்து பல இலட்ச மக்கள் போராட்டத்தின் மூலம் பெறப்பட்டதுதான் நம் சுதந்திரம். நம் சுதந்திரத்திற்கு போராடிய பலர் நம் நினைவில் இல்லை என்பதே உண்மை. அந்த வகையில் சந்திர சேகர் ஆசாத் என்ற மாபெரும் போராளியைப் பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நம்மில் பலரும் இந்த பெயரையே இப்போதுதான் முதல் முறை கேள்விப்பட்டிருப்போம் என்பதே கசப்பான உண்மையாகும். 

சுதந்திர போராட்டத்தின் வீரமான போராளிகளில் இவருக்கென்று ஒரு தனி இடமும், வரலாறும் உள்ளது. இந்திய சுதந்திர புரட்சியின் முகம் என்றே இவரைக் கூறலாம். பயமறியா இந்த புரட்சி வீரனின் நினைவு நாளான இன்று அவரின் வீர வரலாற்றை தெரிந்து கொள்வோம். 

ந்திரசேகர் ஆசாத் 
இந்திய சுதந்திர புரட்சியின் ஆரம்ப புள்ளியாக இருந்த சந்திரசேகர் ஆசாத் 1906 ஜூலை 23 அன்று மத்திய பிரதேசத்தின் பவ்ராவில் பிறந்தார். லாலா லஜ்பத் ராய் கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக ககோரி ரயில் கொள்ளை, சட்டசபை வெடிகுண்டு சம்பவம் மற்றும் லாகூரில் சாண்டர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் போன்றவற்றில் ஈடுபட்ட அவர் துணிச்சலான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அச்சமற்ற புரட்சியாளராக இருந்தார். 

முதல் தண்டனை 
புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் போலீஸாரால் முதலில் பிடிபட்டபோது அவருக்கு வயது 15 தான். ஆசாத்தின் முதல் தண்டனையாக 15 சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் சந்திர சேகர் 'ஆசாத்' என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டு சந்திர சேகர் ஆசாத் என்று அழைக்கப்பட்டார். 

சாத்தின் இறப்பு 
அவர் உயிருடன் இருந்தவரை அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். பிப்ரவரி 27, 1931 அன்று, கூட்டாளிகளில் ஒருவரால் காட்டிக் கொடுக்கப்பட்ட அவர், அலகாபாத்தின் ஆல்பிரட் பூங்காவில் பிரிட்டிஷ் போலீசாரால் முற்றுகையிடப்பட்டார். அவர் வீரத்துடன் போராடினார், ஆனால் தப்பிக்க முடியாது என்று உணர்ந்த அவர் போலீஸில் பிடிபடுவதை விட உயிரை விடுவதே மேல் என்று தன்னிடம் இருந்த ஒரு தோட்டாவின் மூலம் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தார். 

தன் மரணம் கூட தன் கையால்தான் நேர வேண்டும் என்ற உறுதியுடன் இறந்தார் சந்திரசேகர் ஆசாத்

ம்மாவின் ஆசை 
சந்திரசேகர் என்பது மட்டுமே அவரின் பெயர் ஆகும். ஆசாத் என்பது அவரின் மீதிருந்த மரியாதையால் மக்கள் அளித்த பெயர். ஆசாத் என்பதற்கு சுதந்திரம் என்று பொருள். சந்திர சேகரின் தாயார் தனது மகனை ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞராக்க விரும்பினார், எனவே சமஸ்கிருதம் படிப்பதற்காக வாரணாசியில் உள்ள காஷி வித்யாபீத்துக்கு அனுப்பும்படி தனது தந்தையை வற்புறுத்தினார். 

த்துழையாமை இயக்கம் 
டிசம்பர் 1921 இல், மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தபோது, அவர் ஒரு மாணவராக இருந்தபோதிலும் இணைந்தார். அதேசமயம் முன்னாள் ஜாபுவா மாவட்டத்தின் பழங்குடி பில்ஸிடமிருந்து வில்வித்தை கற்றுக் கொண்டார், இது பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தின் போது அவருக்கு உதவியது. 

சிறப்பான சம்பவங்கள் 
சந்திரசேகர் ஆசாத் 1925 ஆம் ஆண்டில் ககோரி ரெயில் கொள்ளை மற்றும் 1928 இல் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜான் போயன்ட்ஸ் சாண்டர்ஸின் படுகொலை ஆகியவற்றால் மிகவும் பிரபலமானவராக மாறினார். லாலா லஜபதி ராயின் கொலைக்காக பழிவாங்கும் விதத்தில் இவர் இதனை செய்தார். 

சாத்தின் சபதம் 
ஒரு புரட்சியாளராக, அவர் ஆசாத் என்ற கடைசி பெயரை ஏற்றுக்கொண்டார், அதாவது உருது மொழியில் "சுதந்திரம்" என்று பொருள். இவர் தனது வாழ்க்கையில் ஒருபோதும் போலீஸால் தன்னால் உயிருடன் பிடிக்க முடியாது என்ற சபதம் ஏற்றிருந்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலை போராட்டத்தில் வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஆசாத் உணரவில்லை, குறிப்பாக 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கருத்தில் கொண்டு, இராணுவப் பிரிவுகள் நூற்றுக்கணக்கான நிராயுதபாணியான பொதுமக்களைக் கொன்றது மற்றும் ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது. இந்த சம்பவம் இளம் ஆசாத்தை சோகத்தால் ஆழமாகவும் உணர்ச்சிகரமாகவும் பாதித்தது. 

கத்சிங் 
இந்தியாவின் முக்கியமான இளம் போராளிகளில் ஒருவர் பகத்சிங் ஆவார். லாலா லஜ்பத் ராய் இறந்ததைத் தொடர்ந்து பகத் சிங் ஆசாத்துடன் சேர்ந்தார், அதற்குப்பின் இருவரும் இணைந்து பிரிட்டிஷாருக்கு எதிராக போராடினர். பகத்சிங்கிற்கு ஆசாத் ஆயுத பயிற்சியும், ரகசியமாக செயல்படுவது எப்படி என்றும் பயற்சி அளித்தார். 

சாத் பூங்கா 

ஆசாத் இறந்த அலகாபாத்தில் உள்ள ஆல்ஃபிரட் பார்க், சந்திரசேகர் ஆசாத் பார்க் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பல பள்ளிகள், கல்லூரிகள், சாலைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களுக்கும் அவர் பெயரிடப்பட்டுள்ளன.

நாம் மறந்த இந்திய விடுதலைக்கா பாடுபட்ட போராளிகள் பற்றிய தகவல்!!!

றிந்துகொள்ள இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்..

1 comment:

  1. As claimed by Stanford Medical, It's indeed the one and ONLY reason women in this country get to live 10 years longer and weigh on average 19 KG lighter than us.

    (And actually, it is not about genetics or some secret-exercise and absolutely EVERYTHING to do with "HOW" they eat.)

    P.S, I said "HOW", not "WHAT"...

    Click on this link to reveal if this easy questionnaire can help you unlock your real weight loss potential

    ReplyDelete

welcome ur comment,