"ராணி கி வாவ்" அரண்மனை..
ஆண் தான் பெண்களுக்காக எல்லாம் செய்கிறான். தனது மனைவிக்காக கல்லறை கூட கட்டினான் என பலர் ஷாஜகானை புகழ்ந்து தள்ளிவிடுவார்கள். ஆனால் ராணி உதயமதி தன் கணவருக்காக கட்டிய கட்டித்தை பற்றி வாங்க பார்க்கலாம்..!
தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னர் ராணி உதயமதி தன் கணவர் பீம்தேவுக்காக தன் மகன் முதலாம் கர்ணதேவன் உதவியுடன் கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான ராணியின் படிகிணறு என்கிற' ராணி கி வாவ்' அரண்மனை..
குஜராத்திலுள்ள சித்பூர் என்ற ஊருக்கு அருகிலுள்ள பதான் கிராமத்தில் உள்ளது..
காலப் போக்கில் இந்த அழகிய கிணறு கற்களாலும் மணலாலும் மூடப்பட்டுவிட்டது. 1958 வரை மண் மூடிக்கிடந்த இந்த பொக்கிஷக் கிணறை, 1972-ல் அகழ்வாராய்ச்சி மூலமாக வெளிக்கொண்டு வந்தனர். 1984-ல் இருந்து அது பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது.
1980 இல் இப்படிக் கிணற்றை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அகழ்வாய்வு செய்து நல்ல நிலையில் மீட்டது
ஏழு அடுக்குகளாக கட்டப்பட்ட இக்கோட்டையின் கடைசி படிக்கட்டில்30 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு சுரங்கவழியும் உள்ளது. கல்லால் ஆன குழாய்கள் போடப்பட்டு, படான் பகுதிக்கு அருகே உள்ள சித்பூர் என்ற நகர் வரை அந்த சுரங்கவழி பாதை நீள்கிறது. இது தண்ணீர் செல்லும் வழியா? அல்லது யுத்த காலத்தில் தப்பிச்செல்லும் வழியா? என்று அறியப்படவில்லை.
இக்கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களில் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், காளி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், கல்கி, மகிசாசூரன் வென்ற மகிசாசூரமர்தினி, வாமனர், வராகி, நாககன்னிகள், யோகினி, 16 வகையான கலைநயத்துடன் கூடிய அழகிய தேவலோக அப்சரசுகளின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் கௌதம புத்தர், சாதுக்கள், திருபாற்கடலில் ஆதிசேசன் மீது பள்ளி கொண்டுள்ள விஷ்ணுவின் சிற்பங்கள் கொண்டுள்ளன.
மேலும் இந்த இராணியின் கிணறு மழை நீர் சேமிக்கும் இடமாக இருந்தது. இக்கிணற்றைச் சுற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு விஷக்காய்ச்சல் நீக்கும் ஆயுர்வேத மருத்துவக் குணம் கொண்ட செடி, கொடிகள் வளர்க்கப்பட்டு இருந்தது.
இந்த இராணியின் கிணறு நீர் சேமிக்கும் இடமாக மட்டும் இல்லாது குஜராத் மக்களின் ஆன்மிகத் தலமாக விளங்கியது. இக்குளத்தின் பக்கவாட்டுச் சுவர்களில் 800 இக்கும் மேற்பட்ட அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இத்தகவல் எத்தனை பேருக்குத் தெரியும்..!?
"எவளாச்சும் ஒரு செங்கல்நட்டுவச்சாளா" இனி பாடுவா????
No comments:
Post a Comment
welcome ur comment,