Thursday, April 7, 2016

இந்த 14 இந்தியர்களில், 3 பேரையாவது உங்களுக்கு தெரியுமா...!?

இந்த 14 இந்தியர்களில், 3 பேரையாவது உங்களுக்கு தெரியுமா...!? 

"ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை தெரியுமா..?", "தாமஸ் எடிசனை தெரியுமா..?" என்றெல்லாம் கேட்டால், பெரும்பாலும் தெரியும் என்ற பதில் தான் கிடைக்கும். அதுவே "ப்ரஃபுல்லா சந்திர ராய் தெரியுமா..?", "சலீம் அலி தெரியுமா" என்று கேட்டால் திருட்டு முழி முழிப்போம்.. அப்படித்தானே.?? முழிக்காமல் என்ன செய்வோம். அது நம் தவறு மட்டுமில்லை, இந்திய வரலாற்றின் தவறு..! 

இந்திய பாடப்புத்தகங்களில் அமெரிக்க விஞ்ஞானத்திற்கும் விஞ்ஞானிகளுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தில் பாதி அளவு நம் இந்திய விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் கொடுத்திருந்தால் கூட ப்ரஃபுல்லா சந்திர ராய், சலீம் அலி போன்றவர்களை நமக்கு நன்றாகத் தெரிந்திருக்க கூடும்..! 

சரி , இந்த 14 'சாதனை' இந்தியர்களில் 3 பேரையாவது உங்களுக்கு தெரிகிறதா என்று பாருங்கள், தெரிந்தால் சூப்பர், இல்லையெனில் இன்றே தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்..!








'சாதனை' இந்தியர் #01 : ப்ரஃபுல்லா சந்திர ராய் (Prafulla Chandra Ray)

முதல் மருந்து நிறுவனம் : இந்தியாவின் முதல் மருந்து நிறுவனத்தின் நிறுவனர் ஆவர், பிரபல கல்வியாளர் மற்றும் வேதியியலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'சாதனை' இந்தியர் #02 : சலீம் அலி (Salim Ali)

பறவையியல் : 'பேர்ட்மேன் ஆப் இந்தியா' (Birdman of India) என்று அழைக்கப்படும் இவர் பறவையியல் எனப்படும் 'ஆர்னிதோலஜி'தனை உருவாக்க உதவியவர் ஆவார்..!

'சாதனை' இந்தியர் #03 : ஸ்ரீனிவாச ராமானுஜம் (Srinivasa Ramanujan)

பெரும் பங்களிப்பு : கணித மேதை என்று அழைக்கப்படும் இவர் கணித துறையின் பகுப்பாய்வு, எண் கோட்பாடு, எல்லையற்ற தொடர் மற்றும் தொடர் பின்னம் (mathematical analysis, number theory, infinite series and continued fractions) ஆகியவைகளில் பெரும் பங்களிப்பு கொண்டவர்.

'சாதனை' இந்தியர் #4 : #04 சர் சி வி ராமன் (C. V. Raman)

நோபல் பரிசு : ராமன் விளைவிற்காக (Raman Effect), 1930-ஆம் ஆண்டு பெற்ற இயற்பியலாளர்..!

'சாதனை' இந்தியர் #05 : ஹோமி ஜேஹாங்கிர் பாபா (Homi Jehangir Bhabha)

கருத்தியல் இயற்பியலாளர் : இந்திய அணுசக்தித் திட்டத்தின் சிறந்த தலைமை சிற்பி என அழைக்கப்படும், கருத்தியல் இயற்பியலாளர் ஆவார்..!

'சாதனை' இந்தியர் #06 : ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose)

நுண்ணலை ஒளியியல் விசாரணை : வானொலி மற்றும் நுண்ணலை ஒளியியல் விசாரணையில் ( investigation of radio and microwave optics) முன்னோடியான இவர் ஒரு இயற்பியல் , உயிரியல் மற்றும் தொல்பொருள் (Physicist, biologist and archaeologis) ஆய்வாளர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.!

'சாதனை' இந்தியர் #07 : சத்யேந்திர நாத் போஸ் (Satyendra Nath Bose)

மின்காந்த கதிர்வீச்சின் குணங்கள் : வாயுபோன்ற மின்காந்த கதிர்வீச்சின் குணங்கள் (gaslike qualities of electromagnetic radiation) தொடர்பான ஒரு கோட்பாடு உருவாக்குவதில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உடன் இணைந்து பணியாற்றியவர்.


'சாதனை' இந்தியர் #08 : ஹர் கோவிந்த் கொரானா (Har Gobind Khorana)

நோபல் பரிசு : நியூக்ளிக் அமிலங்கள் உள்ள நியூக்ளியோடைட்கள் புரதங்கள் தொகுப்பைக் எப்படி கட்டுப்படுத்துவது என்ற ஆய்விற்காக 1969 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற உயிர்வேதியியலாளர் ஆவார்.

'சாதனை' இந்தியர் #09 : எஸ் எஸ் அப்யன்கர் (S.S. Abhyankar)

இயற்கணித வடிவவியல் : கணித மேதையான இவர் இயற்கணித வடிவவியலில் (algebraic geometry) பெரும் பங்கு வகிக்கிறார்.

'சாதனை' இந்தியர் #10 : மேக்நாத் சாஹா (Meghnad Saha)





சஹா சமன்பாடு : இவர் நட்சத்திரங்களில் உள்ள இரசாயன மற்றும் உடல் நிலைமைகளை விளக்கும் சஹா சமன்பாட்டை (Saha equation) உருவாக்கிய ஆஸ்டிரோபிசிஸ்ட் (Astrophysicist) ஆவார்..!

'சாதனை' இந்தியர் #11 : சுப்ரமண்யன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar)

நோபல் பரிசு : பெரிய அளவிலான நட்சத்திரங்களின் வளர்ச்சி நிலை சார்ந்த ஆய்விற்காக 1983 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஆஸ்டிரோபிசிஸ்ட் (Astrophysicist) ஆவார்..!



'சாதனை' இந்தியர் #12 : ராஜ் ரெட்டி (Raj Reddy)

செயற்கை நுண்ணறிவு : ஏ.எம் டூரிங் விருது வென்ற கணினி விஞ்ஞானியான இவர், செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் (artificial intelligence systems) தொடர்பான ஆய்வில் சிறந்து விளங்குபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது..!


'சாதனை' இந்தியர் #13 : பிர்பல் சஹாணி (Birbal Sahni)


படிமங்கள் : பலியோபொடனி (Paleobotany) எனப்படும் தாவரங்கள் சார்ந்த ஆய்வு பிரிவில் இந்திய துணைக்கண்டத்தின் படிமங்கள் சார்ந்த இவரது ஆராய்ச்சி மிக முக்கியவமானவைகள் ஆகும்..!

'சாதனை' இந்தியர் #14 : பிரசந்த சந்திர மஹாலோனோபிஸ் (Prasanta Chandra Mahalanobis)

புள்ளியியல் : இந்திய புள்ளியியல் நிறுவனத்தை (Indian Statistical Institute) நிறுவிய புள்ளியியல் மற்றும் இயற்பியலாளர்.

No comments:

Post a Comment

welcome ur comment,