சர்ச்சைக்குரிய வரலாறு : புரியாத 'ஓபார்ட்' புதிர்கள்..!!
அறிவியலுக்கு அப்பாற்ப்பட்ட, நமது தற்போதைய அறிவுக்கு சவால் விடும் சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் மற்றும் கோட்பாடுகள் பல உண்டு. அனுதினமும் புதிய கற்பனைகளையும், கருத்துப்படிவங்களையும் 'கிளப்பி விடும்' விடயங்கள், சில நேரம் சர்ச்சைக்குரிய வரலாறாகி விடுகிறது என்பது தான் நிதர்சனம்..!
அப்படியான மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் குழப்பமான 16 'ஓபார்ட்' (Oopart) பற்றிய தொகுப்பே இது..!
சுருக்கம் : ஓபார்ட் என்பது அவுட்-ஆப்-ப்ளேஸ்-ஆர்ட்டிகிராப்ட் (Oopart : out-of-place artifact) என்பதின் சுருக்கமாகும்.
பொருத்தமற்ற வரலாறு : உலகம் முழுவதும் கண்டுப்பிடிக்கப்பட்ட, மிகவும் பொருத்தமற்ற, சாத்தியமில்லாத கால கட்டங்களில் உருவாக்கம் பெறப்பட்ட அதிநவீன வரலாற்றுக்கு முந்தைய பொருட்களை தான் ஓபார்ட் என்று குறிப்பிடுகிறார்கள்.
200,000 ஆண்டுகளுக்கு முன்பு : வரலாற்றின் வழக்கமான கருத்தின்படி, சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து தான் (தற்போதைய உருவ அமைப்பில் இருக்கும்) மனிதர்கள் பூமி கிரகத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
விளக்கம் : ஆனால், அதற்கு முன்பே சில நவீனத்துவமான பொருட்கள் உருவாக்கம் பெற்றது எப்படி..? என்ற கேள்விக்கு பல விஞ்ஞானிகள் இயற்கை நிகழ்வுகளை பயன்படுத்தி விளக்கம் பெற முயற்சித்துக்கொண்டே தான் இருக்கின்றனர், ஆனால் பெரிய அளவிலான பலனில்லை.
உயர் தொழில்நுட்ப நாகரிகங்கள் : அப்படியாக, வரலாற்றுக்கு முந்தைய உயர் தொழில்நுட்ப நாகரிகங்கள் இருந்துள்ளன என்பதை பரிந்துரைக்கும் 16 நம்ப முடியாத ஓபார்ட்களை தான் பின் வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!
ஓபார்ட் #16 :
பண்டைய எகிப்தியன் லைட் பல்ப் - ஒளி விளக்கை போன்ற பொருள் எகிப்தில் உள்ள ஹாதோர் கோயிலின் கீழே ஒரு மறைவிடத்தில் பொறிக்கப்பட்டது.
சக்தியூட்ட்படும் விளக்கின் மாதிரி : ஒளி விளக்கை சுற்றி பழங்கால எகிப்தியர்கள் நிறப்து போல் இருக்கும் அதில் உள்ள விளக்கு வடிவம் ஆனது, ரத்த நிறத்தில் ஒழி உமிழும் சக்தியூட்டப்படும் விளக்கின் மாதிரி என்கின்றன சில கோட்பாடுகள்.
ஓபார்ட் #15 :
பாக்தாத் பேட்டரி - களிமண் ஜாடிகள் மற்றும் இரும்பு கம்பிகள் ஆகியவைகளை பயன்படுத்தி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கம் பெற்ற பேட்டரிகள் பாக்தாத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
வோல்ட் : அவைகள் ஒரு வோல்ட் அளவிலான சக்தியை வழங்க வல்லமை கொண்டவைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓபார்ட் #14 :
டெக்சாஸ் பெருஞ்சுவர் - இயற்கையாக உருவாகியிருக்க சாத்தியமே இல்லாத சுமார் 200,000 முதல் 400,000 ஆண்டுகள் வரையிலாக பழமை வாய்ந்த, டெக்சாஸின் ராக்வால் பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட சுவர் வடிவமைப்பு.
கட்டடக்கலை : சுவரில் காணப்படும் ஆர்சுகள், நுழைவு வாயில்கள், ஜன்னல்கள் மாதிரியான சதுர திறப்புகள் போன்றவைகள் அதனை வடிவமைத்த நாகரீகத்தின் கட்டடக்கலை நுணுக்கத்தை விவரிக்கிறது.
ஓபார்ட் #13 :
1.8 பில்லியன் வருட பழைய அணு உலை - ஆப்பிரிக்காவில் உள்ள ஓக்லோ என்ற பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட யூரேனியம் ஏற்கனவே பிரித்தெடுக்கப்பட்டுள்ளதை (already been extracted) வைத்து அங்கு பெரிய அளவிலான அணு உலை இருந்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது.
500,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை : அந்த உலையானது சுமார் 1.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கம் பெற்று கடந்த 500,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இயங்கி கொண்டு இருந்துள்ளது.
ஓபார்ட் #12 :
பிரீ ரீஸ் மேப் - ஒரு துருக்கிய கடற்படை அதிகாரி பிரீ ரீஸ் என்பவர் மூலம் 1513 ஆம் ஆண்டில் வரையப்பட்ட மேப், அண்டார்டிக்கா பனியால் சூழ்வதற்கு முன்பே வரையப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓபார்ட் #11 :
2,000 வருட பழைய நிலநடுக்கம் கண்டறியும் இயந்திரம் - 132 கிபி-யில் வாழ்ந்த ஷாங் ஹெங் தான் உலகின் முதல் சீஸ்மோஸ்கோப்தனை (நிலநடுக்கத்தை கண்டறியும் இயந்திரம்) உருவாக்கியுள்ளார்.
ஓபார்ட் #10 :
150,000 ஆண்டுகள் பழைமையான பைப்புகள் - சீனாவில் உள்ள மவுண்ட் பாய்கொங் குகையில் ஏரியை நோக்கிய குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
8% : ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட அந்த குழாயின் 8% ஆனது, எந்த பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுப்பிடிக்கவே முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓபார்ட் #09 :
ஆண்டிகைதேரா மெக்கானிசம் - 150 பிசி காலக்கட்டத்தில் கிரேக்கர்களால் உருவாக்கப்பட்ட பண்டைய கம்ப்யூட்டர் வடிவமைப்பு தான் இந்த ஆண்டிகைதேரா மெக்கானிசம்..!
வானியல் மாற்றம் : மிகவும் துல்லியமான முறையில் வானியல் மாற்றங்களை கணக்கிடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஓபார்ட் #08 :
நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் : நிலக்கரி உருவாக நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில் அதனுள் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஸ்க்ரூ பிட்டும் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஓபார்ட் #07 :
2.8 பில்லியன் வருட பழைமையான கோளங்கள் - அழகான முறையில் சுற்றி வட்டமாக பள்ளம் வெட்டப்பட்ட கோளங்கள் தென் ஆப்ரிக்க சுரங்கங்களில் கண்டுபிடிக்கப்பட்டன.
2.8 பில்லியன் ஆண்டுகள் : செயற்கையான முறையில் உருவாக்கப்பட்டுள்ள அந்த கோளங்கள் சுமார் 2.8 பில்லியன் ஆண்டுகள் பழைமையானது என்று பின்னர் கண்டுப்பிடிக்கப்பட்டது.
ஓபார்ட் #06 :
டெல்லியில் உள்ள இரும்பு தூண் - சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இந்த சந்திர குப்தரின் தூண் ஆனது இன்றுவரையிலாக துரு பிடிக்கமல் உள்ளது மற்றும் அதிர்ச்சியூட்டும் வகையில் மிகவும் தூய்மையாக உள்ளது.
99.72% சுத்தமான இரும்பு : அதாவது 99.72% சுத்தமான இரும்பு மூலம் உருவாக்கம் பெற்றுள்ளது. ஆனால், தற்போது நம்மால் 99.78% தான் தூய்மையான இரும்பை உருவாக்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓபார்ட் #05 :
உல்ப்ர்ட் வாள் - ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வாளின் காலம் கிபி 800 முதல் 1000 வரையிலாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
3,000 டிகிரி பாரன்ஹீட் : இதை உருவாக்க இதன் இரும்பு தாது குறைந்தபட்சம் 3,000 டிகிரி பாரன்ஹீட் அளவில் வெப்பம் பாய்ச்சப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அந்த அளவிலான வெப்பம் பெறும் தொழில்நுட்பம் அந்த காலக் கட்டத்தில் எப்படி சாத்தியம் என்பது புதிர்தான்.
ஓபார்ட் #04 :
1934-இல் டெக்சாஸில் சுற்றி கற்களால் அமைக்கப்பட்ட, சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் பழைமையான சுத்தியல் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டது.
ஓபார்ட் #03 :
மில்லியன் வருட பழைமையான பாலம் - இந்திய புராணங்களில் ராம பக்தர்களால் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் இது எப்படி உருவானது என்ற இயற்கையான விளக்கம் இன்றுவரை புவியியலாளர்கள் மத்தியில் கிடையாது.
ஓபார்ட் #02 :
500,000 வருட பழைமையான ஸ்பார்க் பிளக் - 1961-ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்பார்க் ப்ளக் ஆனது சுமார் 500,000 ஆண்டுகள் பழைமையானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஓபார்ட் #01 :
பஹாமாஸ் அருகேயுள்ள வரலாற்றுக்கு முந்தைய சுவர் - 1968-இல் பஹாமஸின் கடற்கரைக்குள் அடர்த்தியான தொகுதி வடிவ பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
12,000 முதல் 19,000 ஆண்டு : மனித வடிவமைப்பான இது சுமார் 12,000 முதல் 19,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டுள்ளது.
Read more at: http://tamil.gizbot.com/miscellaneous/16-of-place-artifacts-suggest-hightech-prehistoric-civilizations-exist-011276.html#slide94199
No comments:
Post a Comment
welcome ur comment,